முதல் திருவந்தாதி-பாசுரம் -34 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

இவ்விஷயத்தில் தலையான பக்தி உடையளாய்க் கொண்டு
பெற்றாள் யசோதைப் பிராட்டி ஒருத்தியும் இ றே
என்கிறார்
புந்தியால் சிந்தியாது பெற்றாள் அவள் போலே காணும் –
என்
இதுவும் ஒரு எத்திறம் போலே இருக்கிறது
அன்றிக்கே
இத்தை ஒருவர் மெய் என்னும்படி எங்கனே –
என்னவுமாம் –

——————————————————————————

என்னொருவர் மெய்யென்பர் ஏழு உலகு உண்டு ஆலிலையில்
முன்னோருவனாய முகில் வண்ணா நின்னுருகிப்
பேய்த்தாய் முலை தந்தாள் பேரிந்திலளால் பேரமர்க்கண்
ஆய்த்தாய் முலை தந்தவாறே ——-34–

———————————————————————————

வியாக்யானம் –

என்னொருவர் மெய்யென்பர் –
ப்ரதானர் ஆனவர்கள் இத்தை சத்யம் என்று சொல்லா நின்றார்கள்
அறிந்த ரிஷிகளிலே சிலவர் இத்தை அர்த்த வாத சங்கை இல்லை மெய் என்னா நின்றார்கள் –

ஏழு உலகு உண்டு ஆலிலையில் முன்னோருவனாய முகில் வண்ணா நின்னுருகிப்   –
சப்த லோகங்களையும் வயிற்றிலே வைத்து
ஒரு பவனான ஆலந்தளிரிலே
பரிவரான யசோதாதிகளும் இல்லாத சமயத்திலே
ஸ்ரமஹரமான வடிவை யுடையனாய்க் கொண்டு
கண் வளர்ந்து அருளினவனே
நீ செய்யும் செயலுக்கு அடைவு உண்டாகில் இ றே உன்னை ஆஸ்ரயித்தார் உடைய  செயலுக்கு அடைவு உள்ளது –
நின் உருகி –
அற்றை இழவு தீர உனக்கு ச்நேஹித்து –
பேய்த்தாய் முலை தந்தாள் பேரிந்திலளால்-
பூதனை யானவள் உனக்கு முலை தந்து
அவ்வருகில் போகப் பெற்றிலள்
அப்பிணம் கிடக்கச் செய்தே –

பேரமர்க்கண் –
பெரிய பூசலிலே
பேர் ஆரவாரம் இ றே
ஜகத்தில் பிரளயம் தீர்த்தவனுக்குப் பிரளயம் விளைக்க வந்து முடிந்தாள்-

அவ்வளவிலே ஆய்த்தாய் உண்டு -யசோதைப் பிரட்டி
ஆய்த்தாய் முலை தந்தவாறே –
அவள் முலை தந்த பிரகாரம் என்
இத்தை அடி அறிவார் மெய் என்னா நின்றார்கள்
ஔபாதிகம் இன்றிக்கே
ஸ்வா பாவிகமாக ச்நேஹித்தவளை நினைக்கிறார்
சர்வேஸ்வரனாய் அகடிதங்களைக் கடிப்பிக்க வல்லவனுக்கு அஞ்சுகிற   யசோதைப் பிராட்டி ச்நேஹமும்
ஒரு ச்நேஹமே -என்கிறார் –

—————————————————————————————

பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: