முதல் திருவந்தாதி-பாசுரம் -32 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

சாஸ்த்ரங்களில் சொல்லுகிற சாதனா அனுஷ்டானத்தில்
அந்வயம் இல்லையே யாகிலும்
அவன் சேஷீ நாம் சேஷம் -என்கிற இந்த ஜ்ஞானம் உடையவர்களுக்கு
அந்த சாஸ்த்ரங்களில் சொல்லுகிற தேசத்தை சென்று ப்ராபிக்கலாம் கிடீர் -என்னுதல்
அன்றிக்கே
அந்த சாதனா அனுஷ்டானம் பண்ணாதார்க்கு அவனைச் சென்று கிட்டப் போமோ  -என்றாதல் –

——————————————————————–

இமையாத கண்ணால் இருள் அகல நோக்கி
அமையாப் பொறி புலன்கள் ஐந்தும் நமையாமல்
ஆகத் தணைப்பார் அணைவரே ஆயிர வாய்
நாகத் தணையான் நகர் ——-32–

———————————————————————–

வியாக்யானம் –

இமையாத கண்ணால்-
இப்போது இத்தால் மனஸ் சைச் சொல்லுகிறது
மற்ற கண்கள் பாஹ்யமான தமஸ் சை இ றே போக்க வல்லது
ஆந்தரமான அஜஞாநாதிகளைப் போக்கும் போது மனசே வேண்டும் இ றே
மனசா து விசூத்தேன-ஸ்ரீ விஷ்ணு தர்மம் -275-2-என்னும்படியே –
கட் கண்ணால் காணாத வவ்வுருவை நெஞ்சு என்னும் உட் கண்ணால்  காணும்  உணர்ந்து -பெரிய திருவந்தாதி -28
என்னக் கடவது இ றே –
இருள் அகல நோக்கி –
அவித்யாதிகள் போம்படி அனுசந்தித்து
அஜ்ஞ்ஞான அந்தகாரங்கள் போய்
அவனையும் தன்னையும் உள்ள படி அறிகை-

அமையாப் பொறி புலன்கள் ஐந்தும்-
அமையக் கடவது அன்றிக்கே ஒருக்காலும் பர்யாப்தம் ஆகக்
கடவது அன்றிக்கே இருந்துள்ள பொறி ஐந்தையும்
புலன் ஐந்தையும்
அமையாப் பொறி என்று திரிய விடுவிக்க ஒண்ணாத -என்றுமாம் –

நமையாமல் –
நியமியாமல்
அதாகிறதும் ஸ்ரோத்ராதிகள் விஷயங்களைச் சென்று க்ரஹித்தல்
அன்றிக்கே
அந்த விஷயங்கள் தான் இவற்றுக்கு இலக்காதல் செய்யாத படி பண்ணாதே –
ஆகத் தணைப்பார் அணைவரே –
கீழ்ச் சொன்ன படியே இந்த்ரிய ஜெயம் பண்ணிற்று இலர்களே யாகிலும்
சேஷத்வ ஜ்ஞானத்தை யுடையராய்க் கொண்டு
அவனை ஹ்ருதயத்தில் வைத்து அனுசந்திக்குமவர்கள்
அன்றிக்கே
அப்படி இந்த்ரிய ஜெயத்தை பண்ணாதே
ஈஸ்வரன் ஒருவன் உளன் என்று மாத்ரம் உடையார்க்கு
என்றதாகவுமாம்-
அத் தேசத்தைச் சென்று ப்ராபிக்கலாமோ  –
அவன் மேல் விழா நின்றால் இறாயாதார்-என்றுமாம் –

ஆயிர வாய் நாகத் தணையான் நகர் –
முக்த ப்ராப்ய வஸ்து இருக்கிறபடி
பர்யங்க வித்யையில் சொல்லுகிறபடியே யாய் இருக்கிறது –
அங்கு உள்ளார் எல்லார் அடிமைக்கும் உப லஷணம்
நகர்
நலமந்தம் இல்லாதோர் நாடு -என்கிறபடியே
நாடு என்னாதே நகர் என்கிறார்
ஒரு தேச விசேஷம் பிராப்யம் என்னும் இடம் எல்லார்க்கும் ஒத்து இருக்கிறபடி –

————————————————————————————————————————————————————

பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: