முதல் திருவந்தாதி-பாசுரம் -31 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

இப்படிப் பட்ட விஷயத்தில் அநவரத பக்தியைப் பண்ணுமது ஒழிய
வ்யதிரிக்த விஷயங்களை ஷண  காலமும் ஸ்மரிக்கல்  ஆகாது  கிடீர்–என்கிறார்
அவனுடைய ஆஸ்ரித பார தந்த்ர்யத்தை அனுசந்தித்தால் வேறே யொன்றை நினைக்கப் போமோ
என்கிறார் –

—————————————————————————-

புரியொருகை பற்றியோர் பொன்னாழி ஏந்தி
அரியுருவும் ஆளுறுவுமாகி எரியுருவ
வண்ணத்தான் மார்பிடந்த மாலடியை யல்லால் மற்று
எண்ணத்தான் ஆமோ இமை —————31-

———————————————————————————

வியாக்யானம் –

புரியொருகை பற்றியோர் பொன்னாழி ஏந்தி –
வலம்புரியை குறைத்துப் புரி என்று கிடக்கிறது
ஒரு திருக் கையிலே ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தைத் தரித்து
மற்றைத் திருக் கையிலே ஸ்ப்ருஹணீயமான திரு வாழி ஆழ்வானைத் தரித்து –
புரி யொரு கை என்கையாலே –
ஹிரண்யன் மேலே விழுகிறவனை விலக்கினால் போலே –
பொன்னாழி ஏந்தி என்கையாலே ஹிரண்யன் திரு ஆழியில் படாமையால்
அழகுக்குக் கட்டின பத்திரம் ஆய் விட்டது –

அரியுருவும் ஆளுறுவுமாகி –
அவ் வாழ்வார்களைக் கொண்டு கார்யம் கொள்ள ஒண்ணாத   படி யானவாறே
அதுக்கே ஈடான வடிவைக் கொண்டான்
இவன் கொண்ட வற்றில் அகப்படாதது ஒன்றைக் கொண்டு இவனை அழியச் செய்ய வேணும்
அதுக்கீடாக நரத்வ சிம்ஹங்களை சேர்த்துக் கொண்டு தோற்றினான் –
எரியுருவ  வண்ணத்தான் மார்பிடந்த –
எரியினுடைய ரூபம் போலே இருந்துள்ள வடிவை யுடைய
ஹிரண்யன் யுடைய மார்பைப் பிளந்து பொகட்டவனுடைய-
க்ரௌர்யத்தால் வந்த அநபிபவ நீயதை   தோற்றுகிறது-
அன்றிக்கே
பொன்னன் -என்னக் கடவது இ றே-

மாலடியை யல்லால் –
சிறுக்கன் உடைய விரோதியைப் போக்கி
அவன் பக்கல் வ்யாமுக்தனாய் இருந்துள்ள வனுடைய
திருவடிகளை -என்னுதல்
உகரம் வீரம் மகா விஷ்ணும் -என்கிறபடியே சொல்லுதல் –

மற்று எண்ணத்தான் ஆமோ இமை –
இப்படிப் பட்டவனுடைய திருவடிகளை ஒழிய ஷண காலம்
வேறு ஒன்றை என்னலாமோ  -என்னுதல்
தமப்பன் பகையாக சிறுக்கனுக்கு உதவின குணம்
புறம்பு ஒன்றை எண்ண ஒட்டுமோ
அன்றிக்கே
நெஞ்சை சம்பாதித்துக் கொண்டு வருகிற பிரகரணம் ஆகையாலே
கண்டாயே இருந்தபடி
இத்தைப் பார் -என்றதாகவுமாம் –

—————————————————————————————-

பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: