முதல் திருவந்தாதி-பாசுரம் -29 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

இப்படி சர்வேஸ்வரனாய் இருந்தான்
என்று பிற்காலியாதே
நெஞ்சே அவன் ஆஸ்ரித பரதந்த்ரன் கிடாய்
இத்தை அழகிதாக புத்தி பண்ணு
என்கிறார்  –

———————————————————————-

இறையும் நிலனும் இரு விசும்பும் காற்றும்
அறை புனலும் செந்தீயும் ஆவான் பிறை மருப்பின்
பைங்கண் மால் யானை படு துயரம் காத்தளித்த
செங்கண் மால் கண்டாய் தெளி ——–29-

————————————————————————-

வியாக்யானம் –

இறையும் –
கரை கட்டாக் காவேரியைப் போலே இருக்கிற
ஸ்வரூபத்தை யுடையானாய்க் கொண்டு
ஸ்ரீ வைகுண்ட நாதனாய் இருக்கிறவனும் –

நிலனும் இரு விசும்பும் காற்றும் அறை புனலும் செந்தீயும் ஆவான் –
இத்தால்
பஞ்ச பூதங்களாலும் ஆரப்தமான அண்டத் தளவும் நினைக்கிறது –
அது தன்னாலே லீலா விபூதியைச் சொல்லிற்றாய்-
அவ்விரண்டாலும் ஜகதா காரனாய்
உபய விபூதி உக்தனாய் இருக்கும் இருப்பைச் சொல்லுகிறது –
இதுக்கு மேற்படதில்லை இ றே ஐஸ்வர் யத்துக்கு  –

பிறை மருப்பின் பைங்கண் மால் யானை –
பிறை போலே இருந்துள்ள கொம்புகளை யுடைத்தாய்
ஜாத்யுசிதமான கண்ணில் பசுமையையும் யுடைத்தாய்
மதமுதிதமான யானையானது விழுக்காடு அறியாமையாலே
பொய்கையிலே போய்ப் புக்கு
முதலையின் கையிலே யகப்பட்ட அத்தை அதின்
வாயினின்றும் மீட்டுப் பின்னைத்
தன திருவடிகளிலே பூவை இடுவித்துக் கொண்டு நோக்கின –

படு துயரம் –
ஆனைக்குப் போரும்படியான துயர் –

காத்தளித்த –

செங்கண் மால் கண்டாய் தெளி –
வாத்சல்ய அம்ருதத்தை வர்ஷியா நின்ற கண்
மால் –
அரை குலையத் தலை குலைய வந்து தோற்றின படி
ஆஸ்ரித சுலபனுமாய்
அவர்கள் ஆபத்தைப் போக்குவான் ஒருவனுமாய் கிடாய் இருப்பது
இத்தை புத்தி பண்ணு –

தெளி –
அவன் தம்மை மா ஸூ ச  -என்னத் தாம் தம் திரு உள்ளத்தை
மா ஸூ ச
-என்கிறார்
வாசலைத் திறந்து வைப்பாரைப் போலே பெறுகைக்கு அங்குப் போக வேண்டா
இசைவே வேண்டுவது
அவனே வராவிடில் சமாதிக தரித்ரானவனைப் பெற உபாயம் உண்டா
வாசனையாலே அம்மே என்பாரைப் போலே அழைத்தது  இத்தனை  –

——————————————————————————–

பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: