முதல் திருவந்தாதி-பாசுரம் -28 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

அந்நிலை தன்னிலே ஐஸ்வர்யம் தோற்றும்படி  இரா நின்றது
என்னுதல்-
அன்றிக்கே –
பெரிய அழகு அடங்கலும் தோற்றும்படியாய் இரா நின்றது
என்னுதல் –
அன்றிக்கே
நீர்மையைச் சொல்லிற்று ஆதல் –

——————————————————————————-
கைய  வலம் புரியும் நேமியும் கார் வண்ணத்
தைய மலர்மகள் நின்னாகத் தாள் செய்ய
மறையான் நின்னுந்தியான் மா மதிள் மூன்று எய்த
இறையான் நின்னாகத் திறை ——–28-

———————————————————————————–

வியாக்யானம் –

கைய  வலம் புரியும் நேமியும் –
கையிலே உண்டானது ஸ்ரீ பாஞ்ச ஜன்யமும்
திருவாழி யாழ்வானும் யாய்த்து –
இதுக்கு மேற்பட்ட தில்லை இ றே ஐஸ்வர்யத்துக்கு –

கார் வண்ணத்தைய –
மேகம் போலே ஸ்ரமஹரமான வடிவை யுடையையான நிருபாதிக
பந்து வானவனே
இவை யடைய என்னது என்னலாம் படி இருக்கை –

மலர்மகள் நின்னாகத் தாள் –
பெரிய பிராட்டி யானவள் உன் திரு மார்விலள்-
அலர் மேல் மங்கை உறை மார்வன்
ஸ்ரீ யபதி என்கைக்கு அவ்வருகு இல்லை இ றே ஐஸ்வர் யத்துக்கு எல்லை

செய்ய மறையான் நின்னுந்தியான் –
அந்ய பரரோடே வாசி இல்லை என்கிறது –
இவ்வருகில் உள்ளார் அடங்கலும் உன்னை நேரே காட்ட வற்றான வேத பிரதானம் பண்ண வல்ல சக்தியை
யுடையனான ப்ரஹ்மா உன்னுடைய திரு நாபியைப் பற்றி லப்த ஸ்வரூபனாகா நின்றான் –

மா மதிள் மூன்று எய்த இறையான் நின்னாகத் திறை –
ஈஸ்வர சப்தவாச் யனாக பிரசித்தனாய்
மதிள் மூன்று எரித்தானாய் இருக்கிற
ருத்ரனானவன்  உன் திரு மேனியிலே
ஏக தேசத்தைப் பற்றி லப்த ஸ்வரூபன் ஆகா நின்றான் –
இரண்டூரைச் சுட்டுப் பேர் படைத்தவன் –
கோட் சொல்லிப் பிரசித்தராமா போலே –
அன்றிக்கே
மா மதிள் மூன்று எய்த இறையானவன்
உன் திரு மேனியைப் பற்றி
ஈச்வரனாய் திரியா நின்றான் –
என்றதாகவுமாம் –

—————————————————————————————-

பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: