முதல் திருவந்தாதி-பாசுரம் -26 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

அவ்வோ அவதாரங்களில் உதாவாதார் உடைய
இழவும் தீர்க்கைக்காக
திருமலையிலே புகுந்து நின்றான் கிடீர்
என்கிறார் –

———————————————————————————

எழுவார் விடை கொள்வார் ஈன் துழாயானை
வழுவா வகை நினைந்து  வைகல் தொழுவார்
வினைச் சுடரை நந்துவிக்கும் வேங்கடமே வானோர்
மனச் சுடரைத் தூண்டும் மலை ——26-

———————————————————————————-

வியாக்யானம் –

இம்மூன்றையும் மூன்று அதிகாரிகள் பக்கலிலே ஆக்கி
ஆழ்வான் ஒருருவிலே பணித்தானாய்ப்
பின்பு அத்தையே சொல்லிப் போருவதோம்
என்று அருளிச் செய்வர் –
அவர்கள் ஆகிறார் -ஆர்த்தோ ஜிஞாஸூ-கீதை -7-16-இத்யாதிப் படியே
ஐஸ்வர் யார்த்திகள்
ஆத்மப்ராப்தி காமர்
பகவத் பிராப்தி காமர் -என்கிற இவர்கள் –

எழுவார் –
தம் தாமுடையத்ருஷ்ட பலங்களுக்கு ஈடாக
மேலே சென்று ஆஸ்ரயிப்பார்-
பிரயோஜனம் கை புகுந்த வாறே போவார் ஐஸ்வர் யார்த்திகள் இ றே
பொருள் கை உண்டாய் செல்லக் காணில் போற்றி என்று ஏற்று எழுவர் -திருவாய்மொழி -9-1-3-
என்கிறபடியே –

விடை  கொள்வார் –
உன்னை அனுபவித்து இருக்கப் பண்ணுமதும் வேண்டா –
எங்களை  நாங்களே அனுபவித்து இருக்க அமையும் என்று
ஆத்மா அனுபவத்தைக் கொண்டு போவார்
தலை யரிந்து கொள்ளுகைக்கு வெற்றிலை இடுவித்துக் கொள்ளுவாரைப் போலே
பலம் நித்யம் ஆகையாலே மீட்சி இல்லை இ றே கைவல்யத்துக்கு –
ஈன் துழாயானை வழுவா வகை நினைந்து  வைகல் தொழுவார் –
நித்ய யோக காங்ஷ மாணராய் உள்ளார் –
ஐஸ்வர்ய  ஸூ சகமான திருத் துழாய் மாலையாலே அலங்க்ருதனான
சர்வேஸ்வரனை ஒரு காலும் பிரியக் கடவர் அன்றிக்கே
எப்போதும் அனுபவிக்கக் கடவர்களாய் இருக்குமவர்கள்
யேன யேன தாத்தா கச்சதி -என்கிறபடியே
இளைய பெருமாளைப் போலே சர்வ அவச்தைகளிலும்  கிட்டி நின்று
அனுபவிக்கப் பெறுவார்கள் ஆய்த்து
எல்லார்க்கும் நினைவும் சொலவும் ஒக்கப் பரிமாறலாவது
பரம பதத்திலே அன்றோ என்னில்
நித்ய சூரிகளும் கூட அவனுடைய சௌலப்யம் காண வருகிறதும்
திரு மலையில் அன்றோ -என்கிறார்  –

வினைச் சுடரை நந்துவிக்கும் வேங்கடமே –
இவர்கள் மூவருடைய வினைச் சுடர் உண்டு
பாபம் ஆகிற தேஜஸ் தத்வம்
அத்தை அவிக்குமாய்த்து திருமலையானது
ஐஸ்வர்ய விரோதி
ஆத்மபிராப்தி விரோதி
பகவத்ப்ராப்தி விரோதி
இவை யாகிற வினைச் சுடரை நெருப்பை அவித்தால் போலே சமிப்பிக்கும்
மூவர்க்கும் உத்தேசய விரோதி களைப் போக்கும் -என்றபடி –
சிலருக்கு சத்ரு பீடாதிகள்
சிலருக்கு இந்த்ரிய ஜெயம்
சிலருக்கு விச்லேஷம் –

வானோர் மனச் சுடரைத் தூண்டும் மலை –
விரோதி  உள்ளார்க்கு அத்தைப் போக்கக் கடவதாய்
அது இல்லாத நித்ய சூரிகள் உடைய ஹ்ருதயத்தை
அவனுடைய சீலாதி குணா அனுபவம் பண்ணுகையாலே
போக வேணும் என்னும் படி கிளைப்பிக் கொடா நிற்கம் திருமலையானது –
இங்கே வர வேணும் -என்னும் ஆசையை வர்த்திப்பியா நிற்கும்
இங்கு உள்ளார் ஒழிவில் காலம் எல்லாம் -என்ன
அங்கு உள்ளார் -அகலகில்லேன் -என்னச் சொல்லும் –
—————————————————————————————

பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: