முதல் திருவந்தாதி-பாசுரம் -25 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

அவன் ஓவாதே அழுகிற படியைக் கண்டு
இவரும் அவ்விருப்பிலே ஈடுபடுகிறார்
ஓவாதே ஏத்தவும் தொடங்கினார்
அவனுக்கு நினைவும் பேச்சும்
வெண்ணெயிலே ஆனாப் போலே ஆழ்வார்க்கும் நினைவும் பேச்சும் இவன் பக்கலிலே யான படி –

———————————————————————————

உரை மேல் கொண்டு என்னுள்ளம் ஓவாது எப்போதும்
வரை மேல் மரகதமே போலே திரை மேல்
கிடந்தானைக் கீண்டானைக் கேழலாய்ப் பூமி
இடந்தானை யேத்தி எழும்  ———-25-

————————————————————————————-

வியாக்யானம் –

உரை மேல் கொண்டு –
மேலான உரையைக் கொண்டு
அதாவது வாக்குக்கு விஷயமானத்தைக் கொண்டு –
அன்றிக்கே
உரைக்கையிலே மேல் கொண்டு
அதாவது
சொல்லுகையிலே கிளர்ந்து –

என்னுள்ளம் ஓவாது எப்போதும் –
என்னுடைய ஹிருதயமானது உச்சி வீடு விடக் கடவது அன்றிக்கே –
ஸ்வரூபம் ஒரு காலாக அழியுமோ –

வரை மேல் மரகதமே போலே திரை மேல் –
ஒரு மலையிலே ஒரு மரகத கிரியானது பரப்பு மாறப் படிந்தால் போலே யாய்த்து
திருப் பாற் கடலில் கண் வளர்ந்து அருளின போது இருக்கும் படி –
கிடந்தானைக் கீண்டானைக் –
ஆர்த்தரைக் கண்டவாறே
படுக்கை அடிக் கொதித்த படி –

கீண்டானை –
ஹிரண்யனைக் கிழித்துப் பொகட்ட படியைச் சொல்லுதல்
அன்றிக்கே –

கேழலாய்ப் -கீண்டானை –பூமி இடந்தானை –
என்று இவ்விரண்டையும் இங்கே யாக்கிச் சொல்ல வுமாம்
அதாகிறது
மகா வராஹமாய் புக்கு அண்ட பித்தியில் ஒட்டின இத்தைக் கீண்டு
பின்னை இடந்து எடுத்துக் கொண்டு ஏறின படியைச் சொன்ன படி –

யேத்தி எழும்  –
இவ் வபதாநத்தை ஸ்தோத்ரம் பண்ணி உஜ்ஜீவியா நிற்கும் –

———————————————————————————————-

பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: