முதல் திருவந்தாதி-பாசுரம் -22 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை —

நம்மை ஆஸ்ரித சம்ச்லேஷ ஏக ஸ்வ பாவனாகச் சொன்னீர்
அது நாம் அறிகிறிலோம்
நீர் அறிந்த படி என் -என்ன
நீ என் வாயைப் புதைத்தாலும் -நாட்டார் வாயைப் புதைக்கலாமோ –
என்கிறார் –

——————————————————————-

அறியும் உலகு எல்லாம் யானேயும் அல்லேன்
பொறி கொள் சிறை யவண  மூர்த்தாயை வெறி கமழும்
காம்பேய் மென் தோளி கடை வெண்ணெய் யுண்டாயைத்
தாம்பே கொண்டு ஆர்த்த தழும்பு   ———22-

———————————————————————-

அறியும் உலகு எல்லாம் யானேயும் அல்லேன் –
இது ஜகத் பிரசித்தம் அன்றோ
நான் சொல்லுகிறேன் என்று இருக்க வேண்டா
சிஸூ பாலனும் கூட அறியானோ –

பொறி கொள் சிறை யவண  மூர்த்தாயை –
நாநா வர்ணமான சிறகை யுடையனான பெரிய திருவடியை நடத்தும்
ஸ்வ பாவனான யுன்னை –
நிரபேஷரை நியமிக்கப் பிறந்தவன் நீ யன்றோ –

வெறி கமழும் –
பிள்ளை சோம்பாமைக்காக எப்போதும் கந்த த்ரவ்யங்களாலே அலங்கரித்து   இருக்கும் ஆய்த்து  –
ஸ்வ பாவிகம் -என்னவுமாம் –

காம்பேய் மென் தோளி –
மூங்கில் போலே இருப்பதுமாய் அவ்வளவும் அன்றிக்கே ம்ருது ஸ்வ பாவமான தோளை யுடைய
யசோதை பிராட்டி யானவள்
பசுமையும்
நீட்ச்சியும்
செவ்வியும்
மூங்கிலுக்கும் தோளுக்கும் ஒத்து இருக்கை –
சொல்லுகிறது –

கடை வெண்ணெய் யுண்டாயைத்-
தன்னுடைய சௌகுமார்யம் பாராதே
ஆயச்சி கடைந்து திரட்டின வெண்ணெயை
அமுது செய்த உன்னை –
இருவருக்கும் தாரகம் -இ றே-

தாம்பே கொண்டு ஆர்த்த தழும்பு   –
பெரிய திருவடி முதுகிலே இருக்கும்படியான சௌகுமார்யத்தை உடைய உன்னை –
தாம்பே கொண்டு ஆர்த்தாள் ஆயிற்று  –
அதாகிறது
இவன் எட்டுப் பட்ட  போதாக -கையிலே அகப்படுவது ஒரு அறு தாம்பாலே –
நல்லதொரு தாம்பு தேடும் காட்டில் இவன் தப்புமே –
அதுக்காக அதனைக் கொண்டு பந்தித்தாள் ஆயிற்று –
கயிற்றை நீட்ட ஒண்ணாது
உரலைச் சிறுக்க ஒண்ணாது
இவன் உடம்பிலே இடம் காணும் இத்தனை இ றே –
கண்ணியார் குறும் கையிற்றால் -என்றும்
கண்ணி நுண் சிறுத் தாம்பினால் -என்றும்
ஆழ்வார்கள் அடைய அவனைக் கட்டின கயிற்றிலே ஈடுபட்டுக் கிடப்பது –
தாம் நா சைவ  உதரே பத்வா பிரத்யபத் நாத் உலூகலே கிருஷ்ண மக்லிஷ்ட கர்மாண மாஹசெத மாமார்ஷிதா -ஸ்ரீ விஷ்ணு புரா -5-6-14-
என்னும் படி இ றே இருப்பது
தறியார்ந்த கரும் களிறே போலே நின்று -பெரிய திருமொழி -2-10-6-
ஒரு மத்த கஜமானத்தை கம்பத்தோடு கொடு வந்து சேர்த்தாப் போலே யாய்த்து
கட்டின கட்டிலே தடம் கண்கள் பனி மல்கும் தன்மையானை –
அது தன மிடுக்கு அறியாதே
கட்டுண்டு நிற்குமா போலே யாய்த்து
இவனும் தன பலம் அறியாதே கண்ணநீர் விழ விட்டுக் கொண்டு நின்றபடி –

———————————————————————————

பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: