முதல் திருவந்தாதி-பாசுரம் -21 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

ஐஸ்வர் யத்தைக் கொண்டு பிற்காலியாதே நெஞ்சே
அவன் ஆஸ்ரித சம்ச்லேஷைக ஸ்வபாவன் கிடீர் –
என்கிறார் –
அங்கன் அன்றிக்கே
பெரிய மேன்மையை யுடையனாய் இருந்து வைத்து
அவை ஒன்றும் பாராதே ஆஸ்ரிதர்க்காகத் தன்னை
அழிய மாறியும் கார்யம் செய்யுமவன் கிடீர்
என்கிறார்  –

———————————————————————-

நின்று நிலமங்கை நீரேற்று மூவடியால்
சென்று திசை யளந்த செங்கண் மாற்கு என்றும்
படையாழி புள்ளூர்தி பாம்பணையான் பாதம்
அடையாழி நெஞ்சே அறி ———-21-

————————————————————————

வியாக்யானம் –

சென்று -நின்று –
மகா பலி யஞ்ஞ வாடத்து அளவும் செல்ல நடந்து
பின்னை அவன் முன்னே அர்த்தித்வம் தோற்ற நின்ற நிலையம்
எல்லாம் இவர்க்கு ஆகர்ஷகமாய் இருக்கிறபடி –

நின்று-
மலையாளர் வளைப்பு போலே பெற்று அன்றிப் பேரேன் என்று –

நிலமங்கை நீரேற்று –
பூமியை அழகிய கையால் நீரேற்று –
உபய விபூதிக்கும் படி இடும் கை –
கொடுத்து வளர்ந்த கையாலே பெற்றான் ஆயத்து –
பிராட்டியை ஸ்ரீ ஜனக ராஜன் நீர் வார்த்ததைப் போலே

மூவடியால் திசை யளந்த-
மூன்று திருவடிகளாலே திக்குகளை அடைய அளந்து கொண்ட படி
திக்குகள் தோறும் சென்று அளந்தது -என்னுமாம் –

செங்கண் மாற்கு –
அந்த கார்யம் வாய்ந்த வாறே சிவந்த கண்களை உடைய சர்வேஸ்வரனுக்கு –
அத்தாலே அலாப்ய லாபம் பெற்றானாய் இருக்கை-
தம்தாமது பெற்றாலும் இனியராக வேணுமோ
கீழே திரு வுலகு அளந்து அருளின இடம் பிரஸ்துதமாய்
அத்தை அது பின்னாட்டின படி சொல்லுகிறது –
என்றும் படையாழி –
எல்லாத்தையும் உடையவன் கிடீர் இரந்தான்-
எப்பொழுதும் கை கழலா நேமியான்  -பெரிய திருவந்தாதி -87-
படையாழி  -புள்ளூர்தி பாம்பணையான்-
எப்பொழுதும் பரிகரம் ஆயத்து திருவாழி –
பெரிய திருவடி வாஹனம்
திரு வநந்த ஆழ்வான் படுக்கை –
கையிலே திருவாழி யைப் பேராதே பிடிக்க வல்லனுமாய்
திரு வடி முதுகிலே ஏந்தித் தரிக்க வல்லவனும்
திரு வநந்த வாழ்வான் ஆகிற படுக்கையிலே சாய வல்லவனும்
சர்வேஸ்வரன் -ஆகிறான்

பாதம் அடையாழி நெஞ்சே அறி –
இப்படிப் பட்டவன் திருவடிகளைக் கிட்டி
மகா பலியைப் போலே கழஞ்சு மண்ணைக் கொடுத்து விடாதே
உன்னைக் கொடு

ஆழி  நெஞ்சே –
கம்பீர ஸ்வ பாவமாய் அளவுடைய நெஞ்சே –
என்னை ஓதுவிக்க வல்லை நீ யன்றோ

அறி –
இத்தை ஒலக்க வார்த்தை என்று இராதே
அழகிதாக புத்தி பண்ணு-

——————————————————————————————–

பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: