முதல் திருவந்தாதி-பாசுரம் -20 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

கடல் அவனைப் பெற்று களித்த படி சொல்லிற்று கீழ்
அவன் படுக்கையை விட்டுப் போந்த இடத்திலும்
சில பாக்யாதிகர் கிட்டி அனுபவிக்கப் பெற்றார்கள் கிடீர் -என்கிறார்
படுக்கையாய்க் கிடந்த கடலுக்குத் தன்னைக் கொடுக்கச் சொல்ல வேணுமோ
துர் மாநிகளான தேவர்களுக்குத் தன்னைக் கொடா நிற்க  -என்னவுமாம்  –

—————————————————————————-

பெற்றார் தளை கழலப் பேர்ந்தோர் குறளுருவாய்ச்
செற்றார் படி கடந்த செங்கண் மால்  நற்றா
மரை மலர்ச் சேவடியை வானவர் கை கூப்பி
நிரை மலர் கொண்டேத்துவரால் நின்று——-20–

————————————————————————–

வியாக்யானம் –

இது ஒன்றையும் ஸ்ரீ கிருஷ்ணாவதாரமாக்கி சீயர் ஒருருவிலே அருளிச் செய்தார் –
பெற்றார் உண்டு
தன்னைப் பிள்ளையாகப் பெற்ற ஸ்ரீ வசுதேவரும் தேவகியாரும்
அவர்கள் உடைய காலில் இட்ட விலங்கு கழலும்படியாகப் பேர்த்து –
ஸ்ரீ வைகுண்டத்தின் நின்றும் வந்து அவதரித்தான் -என்னவுமாம்
சிறைக் கூடத்தின் நின்றும் பேர்ந்து போனார்கள் என்னவுமாம்
அன்றிக்கே தன்னைத் தான் பேர்த்து கள்ள -என்றுமாம்
அவதரிப்பதாக உத்யோகித்த சமயத்திலே இவர்கள் உடைய சகல துரிதங்களும் நிரச்தம் ஆயிற்று
அன்றிக்கே
பெற்றார் தளை கழலப் பேர்ந்து -என்று பெற்றார் ஆனவர்களும் உண்டு
ஆரேனுமாக ஸ்பர்சித்தவர்கள் தளை கழலும் படிக்கு ஈடாக வைத்துப் பெற்றது
அப்போது பேர்ந்து என்கிறத்தை அதுக்கு மேலே இங்கேயும் செய்தான்  என்னக் கடவது –

பெற்றார் –
நிதி எடுக்கப் பெற்றார் -என்னுமா போலே –

தளை கழலப் -பேர்ந்து
என் பிள்ளை என்று அபிமாநித்தார் தளை கழன்றால்
அடியோம் என்றார் தளை கழலச் சொல்ல வேணுமோ
இத்தால் சொல்லிற்று ஆய்த்து -அவனோட்டை சம்பந்தம் பிரதி பந்தகங்களைப்  போக்கும் என்றபடி
யாதொன்றை இவர்கள் சிறையாக நினைத்து இருந்தார்கள்
அத்தைப் போக்க கடவனாய் இருக்கும் ஆய்த்து
பூம் தண் துழாய் என் தனி நாயகன் புணர்ப்பு வீடு முதலாம் -திருவாய் மொழி-2-8-2-
அவனோட்டை சம்பந்தம் மோஷ ஹேதுவாய் இருக்கும் –
ஒர் குறளுருவாய்ச்-
தான் கிட்டி வந்து தளை கழல பண்ணும்படி சொல்லிற்று கீழ் –
இனித் தன்னுடைய யத்னத்தாலே  தளை கழல பண்ணும்படி சொல்லுகிறது
தன்னை அழிய மாறிக் கொண்ட வடிவு தான் தர்ச நீயமாய் இருந்தபடி
நாட்டில் வாமனர்கள் வளர்ந்து அருளின இடத்தோடு ஓக்கை
இந்தரனுக்கு ஆகாத சத்ரு -தனக்கும் ஆகாதே
த்விஷ தன்னம் ந போக்தவ்யம்
யஸ்த்வாம் த்வேஷ்டி சமாம் த்வேஷ்டி
மம ப்ராணா ஹி பாண்டவா
ஏதேனுமாக ஆஸ்ரிதர்க்கு செற்றார் ஆனவர்கள் தனக்கு செற்றாராம் இத்தனை
சாமான்ய மதி தைவம் -என்று இருக்கிற தனக்கு தனி செற்றார் இல்லை இ றே
ஆஸ்ரித விரோதிகளுமாய் அதுக்கு மேலே ஆசூர பிரக்ருதிகளுமானவர்கள் தனக்கு செற்றாராம் இத்தனை –
சமோஹம் சர்வ பூதேஷு என்று இருக்குமவன் இ றே
இத்தால் ஆஸ்ரித விஷயமாக
ஒரு தர தம விபாகம் பண்ணுமவன் ஒருவன் அல்லன் என்கிறது-
ஈடும் எடுப்புமில் ஈசன் -திருவாய்மொழி -1-6-2-என்றும்
கொள்கை  கொளாமை இலாதான்  எள்கல் இராகம் இலாதான் -திருவாய்மொழி-1-6-5-என்னக் கடவது இ றே –
ஆஸ்ரயித்தவர்களில் இன்னார் ஆவார்கள் இன்னார் ஆகார் என்று ஒரு நியதி யாதல்
இனி அவர்கள் தங்களில் இன்னாரைக் கொண்டு இன்ன கார்யம் கொள்ளக் கடவோம்
இன்ன கார்யம் தவிரக் கடவோம் என்று ஒரு நியதி ஆதல்
சிலர் பக்கல் த்வேஷம் பண்ணக் கடவோம் என்று இருக்குமவை ஒன்றும் இல்லை -என்கிறது
வசிஷ்டனோடு வேடுவச்சியோடு வாசியற நினைத்து இருப்பான் ஒருவன் -என்கிறது-

செற்றார் இத்யாதி –
சத்ருக்களான மகா பலி போல்வார் -எங்களது என்று அபிமானித்து
இருக்கிற பூமியை அளந்து கொண்டான் ஆய்த்து –

படி கடந்த –
காடும் ஓடையும் அளந்து
பெறாதது பெற்றால் போலே இருப்பதே –

செங்கண் மால் –
தன்னது பெறச் செய்தேயும் தன்னது அல்லாதது ஓன்று பெற்றால் போலே
திருக் கண்களிலே செவ்வி பிறந்தபடி
பூமியை அடங்க தன் கால் கீழே அகப்படுதுகையாலே மேன்மை தோற்ற நின்ற நிலை

நல் தாமரை -இத்யாதி –
அவனான நன்றான
தாமரை போலே இருந்துள்ள சிவந்த திருவடிகளை
அவதார நீர்மை வந்தேராத படி பரண் இட்டுக் கொண்டு இருக்கிற தேவர்கள் ஆனவர்கள்
இவன் பூமியிலே அவதரிக்கச் செய்தேயும்
தாங்கள் அங்கே கை தொழப் பெற்று தொடை வாய்த்து இருந்துள்ள
செவ்விப் பூக்களைக் கொண்டு ஸ்தோத்ரம் பண்ணா நிற்பார்களாம்
புஷ்பாத் யுபகரணங்களை கொண்டு அவனை ஆஸ்ரயித்து இருக்கிற பெற்றார்களாம்
பாவியேன் நாமே அத்தை இழந்தோம் –

நின்று நிறை மலர் கொண்டு ஏத்து வரால் –
கிண்ணகத்தை தரித்து நின்று –
திரள நின்று -என்றுமாம்
ஏத்து வரால் என்ற போதைக்குக்  கீழ்ச் சொன்னதுவே பொருள் –

——————————————————————————————-

பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: