முதல் திருவந்தாதி-பாசுரம் -8 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

ஆக இப்படி மதி மயங்கி
எல்லாரும் தன்னை அறியாதே போம் இத்தனையோ -என்னில்
அது செய்வது சாதாரண விஷயத்தில்
ஆஸ்ரித விஷயத்தில் அசத்திய பிரதிஜ்ஞ்ஞனாய்க் கொண்டு
அவர்கள் பக்கல் தன் பஷபாதம் தோற்றக் கார்யம் செய்யும்
என்கிறார் –

————————————————————

மயங்க வலம்புரி வாய் வைத்து வானத்
தியங்கு மெரி கதிரோன் தன்னை முயங்க மருள்
தோராழி யால் மறைத்த தென் நீ திரு மாலே
போராழிக் கையால் பொருது ——–8-

—————————————————————–
வியாக்யானம் –

மயங்க வலம்புரி வாய் வைத்து –
அர்ஜுனனை நிமித்த  மாத்ரமாக நிறுத்தி
யுத்தம் பண்ணப் புக்கால்
அவன் க்ரமத்தாலே  தொடுத்து விட்ட அம்புக்கு எதிரிகள் எட்டுப் படும் அளவன்றிக்கே
ஒழிந்தால் தன் திருப் பவளத்திலே ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை வைக்கும் இத்தனை
அனுகூல பிரதிகூல விபாகம் அற மோ ஹிக்கும் படிக்கு ஈடாக
ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை வைத்து வாயிலே வைத்து ஊதினான் –
பிரதிகூல பயத்தாலே அனுகூலர் ஒக்க  இது என்னை விளையக் கடவதோ என்று மோஹிக்க
ச கோஷோ தார்த்த்ராஷ்ட்ராணாம் ஹ்ருதயானி வ்யதாரயத் -கீதை -1-19–
தேவானாம் வவ்ருதே தேச பிரசாதாஸ் சைவ யோகி நாம் -என்னும் படியே -ஸ்ரீ விஷ்ணு புர-5-21-29–

வானத் தியங்கு மெரி கதிரோன் தன்னை –
தனக்கு ஸ்தானமான ஆகாசத்திலே சஞ்சரியா நின்றுள்ள ஆதித்யனை –
மறைக்க ஒண்ணாத படியான ஸ்தானத்திலே வர்த்திப்பானுமாய்
குறிக்க ஒண்ணாத படி இதஸ்தத சஞ்சரிப்பானுமாய்
தன் கிரணங்களாலே எல்லாரையும் அபி பாவிக்கும் அத்தனை போக்கித் தன்னை
ஒருவரால் கண் கொண்டு பார்க்க ஒண்ணாத படி பிரதாபத்தை யுடையவனை –

முயங்க மருள் –
ஆளோடு ஆள் மிடைந்து பொறுக்கிற யுத்தத்திலே –
சர்வ லோக சாஷிகம் -என்றபடி
தேசம் அறிய -திருவாய் மொழி -7-5-9-என்னக் கடவது இ றே

தோராழி யால் மறைத்த தென் நீ –
ரதாங்கம் என்னக் கடவது இ றே திரு வாழியை –
திரு வாழியைக் கொண்டு மறைத்தது என்
சர்வ சாதாரணனான உனக்கு இது போருமோ
சத்ய சங்கல்ப -என்கிற ஸ்ருதிக்கு சேருமோ
ந மேமோகம் வசோ பவேத் -என்று அருளிச் செய்த வார்த்தைக்குச் சேருமோ –
ஈச்வரத்துக்குச் சேருமோ
மனிச்சுக்குச் சேருமோ –

திரு மாலே-
பிரச்னம் பண்ணினவர் தாமே
பரிஹாரம் முன்னாக இழிகிறார்
இவ்வோரத்துக்கு அடி அவளோட்டை சம்பந்தம் ஆகாதே
ஆஸ்ரித விஷயத்தில் பஷபாதம் ஸ்ரீ யபதித்வ நிபந்தனமாக வந்தது அன்றோ

போராழிக் கையால் பொருது —–
போரை -யுத்தத்தை
திரு வாழியை உடைய கையாலே பொருவதும் செய்து
தோர் ஆழியால் மறைத்தது என் நீ
முயங்கமருள்-என்று
கீழே யுத்தம் ப்ரஸ்துதம் ஆகையாலே  இங்குப் பொருகையில் ஒருப்பட்டு இருக்கிற திரு ஆழியைக் கொண்டு
ஸ்ரீ பீஷ்மாதிகளைத் தொடர்ந்து ஆதித்யனை மறைத்து -என்றுமாம் –
பெரிய மேன்மையை உடைய நீ அத்தை அடங்கப் பொகட்டு இப்படிச் செய்ததுக்கு அடி என் –
என்கிறார்-

——————————————————————————————–

பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: