முதல் திருவந்தாதி-பாசுரம் -18 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

திருப் பாற் கடல் ஏறப் போக வேண்டுதல் –
திரு வுலகு அளந்து அருளின இடத்து ஏறப் போதல்
செய்து நான் இழந்தேனோ –
அதுக்கும் இவ்வருகே போந்து
கிருஷ்ணனாய் வந்து வவதரிக்கச் செய்தே கிடீர் நான் இழந்தது
என்கிறார் –
வரையாதே தீண்டிப் பரிமாறுகையும்
அழகும்
ஐஸ்வர்யமும்
பஷபாதமும்
உள்ளிட்டவை திரு உலகு அளந்து அருளின் இடத்துக்கும்
கிருஷ்ணாவதாரத்துக்கும் ஒத்து இருக்கும் –

——————————————————————————-

நான்ற முலைத்தலை நஞ்சுண்டு உறி வெண்ணெய்
தோன்ற வுண்டான் வென்றி சூழ் களிற்றை ஊன்றிப்
பொருதுடைவு கண்டானும் புள்ளின் வாய் கீண்டானும்
மருதிடை போய் மண்ணளந்த மால் ———18-

————————————————————————————-

வியாக்யானம் –

நான்ற முலைத்தலை நஞ்சுண்டு –
யசோதைப் பிராட்டி வடிவு கொண்டு வருகிறாள் ஆகையாலே
பாலாலே நிறைந்த முலைக் கண்ணும் தானுமாய் வந்து
தோற்றினாள்  ஆய்த்து –
இவன் முலைகளைச் சென்று  பற்றி அமுது செய்தவாறே
பழைய வடிவாய்
நான்ற முலையோடு விழுந்தாள்-
ஆறேனுமாக இவனை ஸ்பர்சித்தார்க்கும் ஸ்வ ஸ்வரூபா பத்தி தப்பாது
எல்லார்க்கும் வந்தேறி போம் –

உறி வெண்ணெய் தோன்ற வுண்டான் –
உறிகளிலே சேமித்து வைத்த வெண்ணெய் உண்கிற இடத்தில் எட்டி உண்டபடி
சிசூபாலாதிகளும் ஏசும்படி களவு பிரசித்தமாம் படி உண்டான்
இத்தால்
அனுகூலர் உடைய கர ஸ்பர்சம் உள்ள த்ரவ்யத்தால் அல்லது தனக்கு செல்லாத படியாய் இருக்கிறபடி
நஞ்சு உண்டு –
வெண்ணெய்  உண்டு –
என்று ஒக்கச் சொல்லுகையாலே
அனுகூலர் உடைய த்ரவ்யத்தோடு
பிரதிகூலர் உடைய பிராணனோடு வாசியற
இவனுக்குத் தாரகமாய் இருக்கிறபடி –

வென்றி சூழ் களிற்றை-
வெற்றியை உடைத்தாய்
எதிரிகளுக்கு தான் சாய்ந்து காட்டுகை அன்றிக்கே
அவர்களையும் தன் பக்கலிலே சூழ்த்துக் கொள்ள வற்றான குவலயா பீடத்தை –
அங்கன் அன்றிக்கே
மிக்க வெற்றியை யுடைத்தான களிறு -என்றதாகவுமாம்

ஊன்றிப்பொருதுடைவு கண்டானும் –
அதுக்கு தேசிகர் ஆனவர்களைப் போலே
நெருங்க நின்று பொருது
கருவிப்பை   போலே உளுக்காக்கக் பண்ணின படி
அன்றிக்கே இடைவு கண்டான் என்றாக்கி
இளைப்பித்து அதின் விழுக்காடு கண்டவன் என்றுமாம் –

புள்ளின் வாய் கீண்டானும் –
பகாசூர் நிரசனம் பண்ணினவனும்

மருதிடை போய் மண்ணளந்த மால் -கிடீர் என்கிறார்
யமளார்ஜூ னங்களின் நடுவே போய் அவற்றைப் பொடி படுத்தினவன்
பூமி அடங்கலும் தன் கால் கீழே இட்டுக் கொண்ட சர்வேஸ்வரன் கிடீர் -என்கிறார்
திரு உலகு அளந்து அருளின நீர்மை பின்னாட்டுகிற படி
ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தோடு
ஸ்ரீ வாமனாவதாரத்ததோடு வாசியற
இவருக்கு ஒரு போகியாகத்
தோற்றுகிறபடி –

—————————————————————————————–

பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: