முதல் திருவந்தாதி-பாசுரம் -17 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

திருப் பாற் கடலிலே போய்க்கிட்ட வேண்டும்படி தூரமாய்
நான் இழந்தேனோ
அவன் தானே வந்து சந்நிஹிதனாகச் செய்தே கிடீர்
நான் இழந்தது –
என்கிறார் –

———————————————————————
அடியும் படிகடப்பத் தோள் திசை மேல் செல்ல
முடியும் விசும்பும் அளந்தது என்பர் வடியுகிரா
லீர்ந்தான் ஈராணியன தாகம் இருஞ்சிறைப் புள்
ளூர்ந்தான் உலகளந்த நான்று ——–17-

————————————————————————-

வியாக்யானம் –

சம்சாரத்தில் நினைத்த படி எல்லாம் அநுபவிக்கப் போமோ –
பரம பதத்தில் போனால் அன்றோ அனுபவிக்கலாவது -என்ன
இங்கே வெள்ளம் இட்ட வன்று பெற்றேனோ -என்கிறார் –
அடியும் படிகடப்பத்-
கோலமாம் என் சென்னிக்கு உன் கமலமன்ன குரை கழலே -திருவாய் மொழி -4-3-6-என்கிறபடியே
என் தலையிலே நோக்கான திருவடிகள் கிடீர்
பூமியை அளந்து கொண்டது –
அன்றிக்கே அமரர் சென்னிப் பூவான திருவடிகள் கிடீர் காடும் ஓடையும் அளக்கின்றன –

படி கடப்ப –
சென்று காண வேண்டும் திருவடிகள் தானே வந்து பூமியை அகப்படுத்திக் கொண்டன –

தோள் திசை மேல் செல்ல –
திருத் தோள்கள் ஆனவை திக்குகளின் மேல் செல்ல
பிராட்டியைத் தழுவக் கடவ தோள் கிடீர்
திக்குகளை தழுவுகின்றன

முடியும் விசும்பும் அளந்தது –
திரு வபிஷேகமும் அண்ட பித்தியின் அளவும் நிமிர்ந்தது
அபரிச்சேத்யமான ஆகாசத்தை அளவு படுத்திற்று
நின்றார் நின்றபடியே வென்றி கொள்ளுமா போலே

என்பர் –
இன்று நான் கேட்டார் வாய்க் கேட்பதே -என்கிறார்
திருவடிகள் தானே வந்து என் தலை மேல் இருக்க
நான் எங்கே புக்குக் கிடந்தேனோ –

வடியுகிரா லீர்ந்தான் ஈராணியன தாகம் –
கூரிய உகிராலே ஹிரண்யன் உடைய முருட்டு உடலைக் கிழித்துப் பொகட்டான் ஆயிற்று

இருஞ்சிறைப் புள் ளூர்ந்தான் உலகளந்த நான்று –
பெரிய திருவடி முதுகிலே இருக்கும்படியான
சௌகுமார்யத்தை யுடையவன் –
பூமியை அளந்து கொள்ளுகிற வன்று ஓர் இடத்திலே விரோதி நிரசனம் பண்ணி
ஓர் இடத்திலே முகம் காட்டும் அளவன்றியே
ஜகத்துக்கு எல்லாம் ஒரு காலத்திலே உதவின அன்று –

இருஞ்சிறைப் புள்ளூர்ந்தான் உலகளந்த நான்று
அடியும்படி கடப்ப
தோள் திசை மேல் செல்ல
முடியும் விசும்பு அளந்தது என்பர் –
என்று அந்வயம் –

—————————————————————————-

பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: