முதல் திருவந்தாதி-பாசுரம் -16 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

நான் இவ் விஷயத்தை நெடுங்காலம்
உபாயாந்தரங்களிலும் தேவதாந்த்ரங்களிலும்
பிரவணனாய் இழந்தேன் கிடீர்
என்று சோகிக்கிறார்-

——————————————————————-

பழுதே பலபகலும் போயினவென்று அஞ்சி
அழுதேன் அரவணை மேல் கண்டு தொழுதேன்
கடலோதம் காலலைப்பக் கண் வளரும் செங்கண்
அடலோத வண்ணரடி———16–

———————————————————————–

வியாக்யானம் –

பழுதே –
பழுதானது சிறிதும் பழுது அல்லாதது சிறிதுமாய்
போகப் பெற்றது இல்லை கிடீர் –
என்கிறார் –
அது உண்டாவது பகவத் விஷயம் ஒரு போதும்
மற்றொரு போது இதர விஷயங்களுமாய்ச் செல்லில் இ றே –

பலபகலும் –
இழந்த காலம் அநாதி இ றே

போயினவென்று –
போன நீருக்கு அணை கோலவோ-

அஞ்சி அழுதேன் –
போன காலம் அநாதி
வரும் காலம் அநந்தம்
அடிக் கழஞ்சு பெறுகிற  இத்தோடு ஒத்த காலம் கிடீர் வ்யர்த்தமே போயிற்று என்று அழுகிறார் –
இழவுக்கு அழுதீரேல் அச்சம் என் என்னில்
மேல் வரக் கடவதொரு ஹேதுவைக் குறித்து இ றே அச்சம் உள்ளது
அதாவது
சர்வேஸ்வரனோட்டை சம்பந்தம் நித்யமாய்ச் செல்லா நிற்கச் செய்தே
முன்பு இது நெடும் காலம் இழந்தது நானாகை அன்றோ –
இன்னமும் நான் இருந்திலேனோ மேல் உள்ள காலத்துக்கும் -என்று அஞ்சுகிறார்
அங்கன் அன்றிக்கே
அஞ்சி அழுதேன் –
என்றாக்கி மேல்; வரக்கடவ காலமும் இப்படியே யாகில் செய்வது என் -என்று
அதுக்கு ஒரு கால் அழுகிறார் ஆய்த்து-
யஸ்ய ராமம் ந பச்யேத்து-அயோத் -17-14-என்று ஒரு ஷணம் காணப் பெறாதார் படும் பாடு அன்றோ இது-
அரவணை மேல் கண்டு தொழுதேன் –
தகட்டில் அழுத்தின மாணிக்கம் போலே
திரு வநந்த வாழ்வான்  மேலே கண்ட காட்சிக்கு
அனந்தரமான வ்ருத்தியிலேயும் அன்வயித்தேன்
அரவணை மேல்
பர்யங்க வித்தையில் படியே
கண்டு
ஜ்ஞான சாஷாத் காரம்
கண்ணிட்டுக் கண்டால் போலே இருக்கை –
பெருமாளும் பிராட்டியும் கடலுக்கு அக்கரையிலும் இக்கரையிலுமாய் இருந்தாப் போலே –

கடலோதம் காலலைப்பக் கண் வளரும் செங்கண் அடலோத வண்ணரடி-
கடலில் ஓதமானது திருவடிகளிலே வந்து ஸ்பர்சிக்கும் படிக்கு ஈடாகக்
கண் வளர்ந்து அருளுவானுமாய்
ஐஸ்வர்ய ப்ரகாசகமான திருக் கண்களை யுடையனுமாய்
ஒரு கடல் ஒரு கடலை அபிபவித்துக் கிடந்தாப் போலே
சௌந்தர்ய தரங்கங்கள் மிகைத்து
இருந்துள்ள வடிவை யுடையனுமான அவனுடைய திருவடிகளை –
கால் அழைப்ப –
சிறு திவலை தொடை குத்த
செங்கண் –
வாத்சல்யம் தோற்றுகை-

அடல் ஓத வண்ணர் அடி அரவணை மேல் கண்டு தொழுதேன்
பழுதே பல பகலும் போயின வென்று அஞ்சி அழுதேன் –
என்று அந்வயம் –

————————————————————————————–

பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: