முதல் திருவந்தாதி-பாசுரம் -15 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

நீர் அவனையே பிரதானனாகச் சொல்லா நின்றீர் –
நாட்டிலே சிலரைச் சிலர் ஆஸ்ரயிக்கையும்
அவர்கள் அவர்களுக்குப் பல பிரதானம் பண்ணுகையுமாய் அன்றோ
இருக்கிறது -என்ன
அவர்கள் அங்கனே செய்தார்களே யாகிலும்
அவை யடங்க வ்யர்த்தம் –
என்கிறார் –

—————————————————————–
முதலாவார் மூவரே அம்மூவருள்ளும்
முதலாவான் மூரி நீர் வண்ணன் -முதலாய
நல்லான் அருள் அல்லால் நாம நீர் வையகத்துப்
பல்லார் அருளும் பழுது ——–15-

—————————————————————–

வியாக்யானம் –

முதலாவார் மூவரே –
இவர் இவர் எம்பெருமான் என்று இருந்ததே குடியாக
ஆஸ்ரயணீயராகை தவிர்ந்து முன்னம்
மூவரோடு சேரப் பெற்றோம் இ றே
இனி இருவரைக் கழிக்க அமையும் இ றே -என்று கருத்து –

அம்மூவருள்ளும் முதலாவான் மூரி நீர் வண்ணன் –
இவர்கள் மூவருக்கும் அவ்வருகே ஒருவன் பிரதானன் ஆகிறானும் அன்று
அன்றிக்கே
மூவரும் கூட பிரதானர் ஆகிராரும் அன்று
இனித் தான் மூவரும் கூட ஓன்று ஆகிராரும் அன்று –
அந்த மூவரிலும் வைத்து கொண்டு பிரதானனவன்
சஞ்சரியா நின்றுள்ள கடல் போலே இருந்துள்ள வடிவை உடையவன்
ப்ரஹ்ம ருத்ரர்களுக்கு ஜீவவ்யதா நேன அந்தர்யாமியாயும்
தன் பக்கலிலே ஸ்வேன ரூபேணவும் நின்று ரஷிக்கிறான்-
முரி நீர் வண்ணன் –
ஓருருவம் பொன்னுருவம் ஓன்று செந்தீ  -திரு நெடும் தண்டகம் -2-என்கிற அவற்றைக் கழித்து
மா கடல் உருவம் -என்கிற அத்தையே பிடிக்கிறார் –
முதலாய நல்லான் அருள் அல்லால் -நாம நீர் வையகத்துப் –
இதுக்கு அடங்க காரண பூதனுமாய்
இவற்றை உடையானும் ஆகையாலே
இவற்றின் பக்கல் வத்சலனுமாய் இருந்துள்ள
அவனுடைய அருள் அல்லது
பிரசித்தியை யுடைத்தான நீர் சூழ்ந்த பூமியில் உள்ள –

பல்லார் அருளும் பழுது –
பலருடைய பிரசாதமும் பழுது -வ்யர்த்தம்
இவனை ஒழிந்த மற்றை இருவருடைய அருளோடு கீழ்ச் சொன்னவர்கள் அருளோடு
வாசி யடைய வ்யர்த்தம்
அன்றிக்கே
நீர்சூழ்ந்த பூமியில் நாம மாத்ரமான பல்லார் அருளும் பழுது -என்றதாகவுமாம் –
பழுது தான் பலியாமையே அல்ல
பகவத் பிரசாதத்தையும் இழப்பிக்கும்
அத்தேவதைகள் உடைய உபேஷையும் இவ்வாத்மாவுக்கு பகவத் பிரசாதத்தோடு ஒக்கும்
திருவடி நாமம் மறந்தும் புறம்  தொழா மாந்தர்  -நான்முகன் திரு -68-
மார்க்கண்டேயனை ருத்ரன் கை விட
ராவணன் தம்பியைக் கைவிடக் க்ருதார்த்தனானாப் போலே க்ருதார்த்தனாய்த்து இலனோ
தேவ தாந்தரங்களுக்கும்
உபாயாந்தரங்களுக்கும்
தானே உள்ளீடாய் நிற்கையால் தான் காண வேண்டாதவரை
அவற்றிலே ருசியை வர்த்திப்பித்துத் தன்னை யகற்றும்
தான் உகந்தாரை அவற்றில் ருசிகளை விட்டுத் தன்னை உகக்கும் படி பண்ணும்-

—————————————————————————————–

பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: