முதல் திருவந்தாதி-பாசுரம் -14 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

அவன் முற்பாடனுமாய்
ருசி ஜனகனுமாய் இருக்கச் செய்தே
சம்சாரிகள் புறம்பே சிலரை ஆஸ்ரயணீயராகக் கொண்டு
போரா நின்றார்களே என்னில்
அவர்கள் அப்படிச் செய்தார்களே யாகிலும்
அந்த ஆஸ்ரயணீயர் தங்களுக்கும் ஆஸ்ரயணீயர் சர்வேஸ்வரனே –
என்கிறார் –

————————————————————————-

அவரவர் தாம் தாம் அறிந்தவாறு ஏத்தி
இவர் இவர் எம்பெருமான் என்று சுவர் மிசைச்
சார்த்தியும் வைத்தும் தொழுவர் உலகளந்த
மூர்த்தி யுருவே முதல் ———-14-

—————————————————————————–

வியாக்யானம் –

அவரவர் –
ரஜஸ் தமஸ்ஸூக்களால் அபிபூதராய்
பின்ன ருசிகள் ஆகையாலே –
அவர் அவர் -என்று அநாதரித்துச் சொல்லுகிறார் –

தாம் தாம் அறிந்தவாறு ஏத்தி –
கர்மம் அடியாக வந்த ருசியும்
அதுக்கீடான ஜ்ஞானமுமாய் இ றே இருப்பது –
சாஸ்திரத்தின் பின் செல்லார்களே
ஆகையாலே தாம் தாம் அறிந்த பிரகாரங்களாலே ஸ்தோத்ரம் பண்ணி –

இவர் இவர் எம்பெருமான் என்று –
அவரை இவரை வந்தாரைப் பிடித்து
இவர்கள் நமக்கு ஸ்வாமிகள் -என்று –
சகரர்கள் கண்டாரை -நீ என் குதிரை பிடித்தாய் நீ என் குதிரை பிடித்தாய் -என்று பிடிக்குமா போலே
நல்ல வஸ்துக்கள் எல்லாம் கிடக்க
வேம்பும் உள்ளியும் உகப்பாரைப் போலே
தாங்கள் உகந்த குணங்களை உடைய தேவதைகளை உகப்பர்கள் –
சத்வ நிஷ்டாஹி புருஷா
ஹரி ரேகஸ் சதாத்யேய-ஹரி வம்சம் -138-8-என்று ருத்ரன் தானே சொன்னான் –

சுவர் மிசைச் சார்த்தியும் வைத்தும் தொழுவர்-
ஒரோ பித்திகளிலே லிகுத்து ஒரோ விடங்கலளிலே பிரதிஷ்டிப்பித்தும்  தொழா நிற்பர்கள்   –
சர்வேஸ்வரன் ஆஸ்ரித அனுக்ரஹார்த்தமாக ஒரோ வடிவுகளை கொடு வந்தால்
அங்கே செய்யக் கடவ செயல்களை இங்கே செய்யா நிற்பர்கள்
இவர்கள் அப்படிச் செய்தார்களே யாகிலும் –

உலகளந்த மூர்த்தி யுருவே முதல் –
ஜகத்தை அடையத் தன் திருவடிகளின் கீழே இட்டுக் கொண்ட சர்வேஸ்வரன் உடைய திரு மேனியே பிரதானம் –
சமஸ்ரயிப்பார் தலையிலும்
சமாஸ்ரயணீயர் தலையிலும்
ஒக்கத் துகைத்தவன் –

——————————————————————————

பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: