முதல் திருவந்தாதி-பாசுரம் -13 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

வாய் அவனை அல்லாது வாழ்த்தாது -என்னும் படியாய் இருந்தது உம்மது
அல்லாதார்க்கு அவனை ஆஸ்ரயிக்கும் போது அவதானம் வேணும்
எங்கனே கூடுமோ என்னில்
ப்ரக்ருத்யா ஆஸ்ரயித்து  இருக்கிறவர்கள் நித்ய சூரிகள்
அல்லாதாரும் யதா சக்தி ஆஸ்ரயிக்கும் படிக்கு ஈடாகத்
தானே பிரதமபாவியாம் –
என்கிறது –

————————————————————-

இயல்வாக யீன் துழாயான் அடிக்கே செல்ல
முயல்வார் இயல் அமரர் முன்னம் -இயல்வாக
நீதியால் ஓதி நியமங்களால் பரவ
ஆதியாய் நின்றார் அவர் ——-13–

——————————————————————

வியாக்யானம் –

இயல்வாக-
அவனுக்கு சத்ருசமாகப் பரிமாற வல்லார்
நித்யர்கள் அன்றோ என்கிறார் –
இயல்வாக -சத்ருசமாக -என்னுதல்
ஸ்வ பாவம் ஆக்கி இதுவே யாத்ரையாக -என்னுதல்
கர்மம் அடியாக ஒரு சரீர பரிக்ரஹம் பண்ணி
சில நாள் வேறே சில விஷயங்களிலே பிரவணனாய்ப்
பின்பு ஒரு ஸூ க்ருதம் அடியாக பகவத் விஷயத்திலே கை வைத்தவர்கள் அன்றிக்கே
இவ் விஷயத்தில் பரிமாற்றம் சத்தா பிரயுக்தம் –
என்றபடி –

யீன் துழாயான் –
ஐஸ்வர்ய ஸூ சகமாய் இருக்கை-
ஆக -முதலியாய்த் தோள் மாலை இட்டு  இருக்கிறவனுக்கு –
அடிக்கே செல்ல –
திருவடிகளிலே கிட்ட
பாவஜ்ஞ்ஞே -என்னும்படி அவன் திரு உள்ளத்திலே படும் படி –

முயல்வார் இயல் அமரர் முன்னம் –
முந்துற முன்னம் அவன் திரு வடிகளுக்கு ஈடாகப் பரிமாறுவார் இயற்றியை உடைய நித்ய சூரிகள்
அஹம் சர்வம் கரிஷ்யாமி -அயோத்யா -31-25-பண்ணுகை-
விஷய ப்ரவணராய்  அவனை அறியாதவர்களும்
இயல்வாக –
ஆகில் அவர்களே ஆஸ்ரயித்துப் போம் இத்தனையோ வென்னில்
நமக்கு எல்லாம் ஆஸ்ரயித்தோம் ஆகலாம் படி அவன் தானே பண்ணித் தரும் -என்கிறார் –

இயல்வாக -நீதியால் ஓதி-
சத்ருசமாக -அழகிதாக -சாஸ்த்ரோக்தமான
படியே திரு நாமங்களைச் சொல்லி
வ்ரத நியமாதி கர்மங்களோடே அத்ய யனத்தைப் பண்ணி –

நியமங்களால் பரவ –
சாஸ்த்ரங்களில் சொல்லுகிற ஸ்ரவணாதி களாலே
பரவசராய்ப் போரும்படிக்கு ஈடாக

ஆதியாய் நின்றார் அவர் –
முற்பாடனுமாய்-
ருசி ஜனகனுமாய் –
உபகரணங்களையும் கொடுத்து பிரவ்ருத்தனுமாய் –
போக்தாவுமாய் –
பல பிரதனுமாய்  –
பிராப்யனுமாய்
நின்ற பின்பு நமக்கு எல்லாம் ஒரு குறை இல்லை -என்கிறார்
அஹம் ஹி சர்வாய ஜ்ஞா நாம் போக்தா ச பிரபு ரேவா ச -கீதை -9-24-
அஹம் சர்வச்ய ப்ரபவோ மத்தஸ்சர்வம் ப்ரவர்ததே -கீதை -10-8-
சூரிகளோடு இவர்களோடு வாசி இல்லை
குடல் துடக்கு –

——————————————————————————————–

பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: