முதல் திருவந்தாதி-பாசுரம் -12 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

கீழே
சர்வ சமாஸ்ரயணீயன் அவனே என்றார் –
இங்கு
ஆஸ்ரயணீயத்துக்கு அநுரூபமான சாதனம்
இன்னது என்று பக்தியை
விதிக்கிறார் –

—————————————————————————

செவி வாய் கண் மூக்கு உடல் என்று ஐம்புலனும் செந்தீ
புவி கால் நீர் விண் பூதம் ஐந்தும் அவியாத்
ஞானமும் வேள்வியும் நல்லறமும் என்பரே
ஏனமாய் நின்றார்க்கு இயல்வு ——-12-

——————————————————————————-

வியாக்யானம் –

பக்தி யோகத்தை அனுஷ்டிக்கும் அவர்களுக்கு
ஹேயதயா ஜ்ஞயமானவற்றைச் சொல்லுகிறது –
பிரகிருதி ஹேயதயா ஜ்ஞேயம்
ஆத்மா உபாதேயதயா ஜ்ஞேயன்
ஈஸ்வரன் உபாதேய தமனாய்க் கொண்டு ஜ்ஞேயன்-

செவி வாய் கண் மூக்கு உடல் என்று ஐம்புலனும் –
இத்தால்
ச்ரோத்ராதி ஜ்ஞான இந்த்ரியங்கள் ஐந்தையும் சொல்லுகிறது
இது தான் கர்ம இந்த்ரியங்கள் ஐந்துக்கும் உப லஷணம்-

செந்தீ புவி கால் நீர் விண் பூதம் ஐந்தும் –
இத்தால்
மகா பூதங்கள் ஐந்தையும் இவற்றை ஆஸ்ரயித்து இருக்கும்
சப்தாதிகள் ஐந்தையும் சொல்லுகிறது –

அவியாத் ஞானமும்
தைல தாராவத்
அவிச்சின்ன ஸ்ம்ருதி சந்தான ரூபையான பக்தியை நினைக்கிறது
பக்திஸ்ஸ ஜ்ஞான விசேஷ -என்னக் கடவது இ றே-

வேள்வியும் –
பக்தி விவ்ருத்யர்த்தமாகவும்
பாப ஷயத்துக்காகவும்
அனுஷ்டிக்கிற கர்மம் ஆகிறது
பல சங்க நிவ்ருத்தி பூர்வகமாகப் பண்ணும் யாகாதி கர்மங்கள்
அக்னி ஹோத்ராதி து தத்கார்யைவ தத் தர்சநாத் -ப்ரஹ்ம சூத்ரம் -4-1-16-
அக்னி ஹோத்த்ரம் முதலிய கர்மங்கள் பக்தியும் உத்பத்தி ஆகிற கார்யத்தின் பொருட்டே செய்யப்பட வேண்டும் -அப்படியே வேதத்தில் காணப் படுவதால்
ஆ ப்ரயாணாத் தத் ராபி ஹி த்ருஷ்டும் -ப்ரஹ்ம சூத்ரம் -4-1-12-
வித்தையானது சாகும் வரையில் அனுஷ்டிக்கப் பட வேண்டியதே
அந்த எல்ல்லாக்காலங்களிலும் உபாசன விதி காணப் படுகிறதன்றோ –
தமேதம் வேதா அநு வாச நேத ப்ராஹ்மணா  விவிதி ஷந்தி யாஞ்ஞென தா நேன அநாசகேன -ப்ருஹதாரண்யம் -6-4-22-
ப்ரஹ்ம ஞானிகள் இந்த பரமாத்மாவை வேத அத்யயனைனாலும்
யஞ்ஞத்தினாலும் தானத்தினாலும்
பலத்தில் ஆசை அற்ற தவத்தினாலும்
அறிய விரும்புகிறார்கள் –
என்று சொல்லுகிறபடியே –
நல்லறமும் –
விவேகாதி ஆன்ரு சம்சயம் தாநாதிகள்-இவை எல்லாம் நினைக்கிறது –

என்பரே-
வேத சாஸ்த்ரங்களில் பிரசித்தி –

ஏனமாய் நின்றார்க்கு இயல்வு-
சர்வ ஸூ லபனாய் -ஆபத் சகனான சர்வேஸ்வரனுக்கு
இவற்றை சாதனமாகாச் சொல்லா நிற்பர்கள்-
இது சாதனம் ஆனபோதும் எம்பெருமானே வேணும் என்று தோற்றுகைக்காக
ஏனமாய் நின்றார் -என்கிறார் –
அனந்யே நைவ யோகே நமாம் த்யாயந்த உபாசதே தேஷாம் அஹம் சமுத்தர்த்தா ம்ருத்யு சம்சார சாகரான் -கீதை -12-6-12-7–என்கிறபடியே    –
அங்கன் அன்றிக்கே
தமக்கு தேக யாத்ரைக்கு உடலான பக்தியைச் சொல்லுகிறார் ஆகவுமாம் –
சம்சாரிகளுக்கு உபாயமாய் இருக்கிற பக்தியை ஷேபித்து
பிரபத்தியை அருளிச் செய்கிறார் -என்றுமாம் –
அறிவானாம் -என்னுமா போலே
செவி -இத்யாதி –
சர்வேஸ்வரனை ஒழிய இதர விஷயங்களிலே போகக் கடவதான ஜ்ஞானத்துக்குப்
பிரசரண த்வாரமான இந்த்ரியங்களையும்
இவை தனக்கும் அடியான மகா பூதங்களையும்
அவை அஞ்சாலும் – ஆரப்த சரீரத்தையும் நினைத்து
இத்தையும் விஷயாதிகளைப் பற்றி விடக் கடவது அன்றிக்கே இருக்கிற ஜ்ஞானத்தையும்
யாகாதிகளையும்
தானத்தையும்
இவை எல்லா வற்றையும் சொல்லி
இவையோ தானே வந்து சந்நிஹிதனாமவனைப் பெறுகைக்கு சாதனம் -என்று ஷேபிக்கிறார் –
ஞானப் பிரானை யல்லால் இல்லை –திரு விருத்தம் -99-என்கிறார்
பிரளய ஆபத்தில் சாதன அனுஷ்டானம் பண்ணி வந்து கிட்டினார் ஆர் –

————————————————————————————————–

பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: