முதல் திருவந்தாதி-பாசுரம் -7 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

ஆக  நீர் அவனையே ஆஸ்ரயணீயன் என்னா நின்றீர்
பார்த்த பார்த்த இடம் எங்கும் ஆஸ்ரயிப்பாரும் ஆஸ்ரயணீயாருமாய் அன்றோ கிடக்கிறது  -என்ன
அவை எல்லாம் அவன் தானே காட்ட நான் கண்டாப் போலே காண்கை அன்றிக்கே
தாம் தாமே காண நினைப்பார் -தன்னை வந்து கிட்டாமைக்கு அவன் பண்ணின மயக்கு -என்கிறார்
தேபி மாமேவ கௌந்தேய யஜந்தி அவிதி பூர்வகம் -கீதை -9-23
மம மாயா துரத்த்யயா -கீதை -7-14

——————————————————————————–
திசையும் திசையுறு தெய்வமும் தெய்வத்
திசையும் கருமங்கள் எல்லாம் அசைவில் சீர்க்
கண்ணன் நெடுமால் கடல் கடைந்த காரோத
வண்ணன் படைத்த மயக்கு ——-7

———————————————————————————-

வியாக்யானம் –

திசையும்-
திக்குகளோடு கூடின பூமியும்

திசையுறு தெய்வமும் –
திக்குகளிலே வர்த்திக்கிற தேவதைகளும் –

தெய்வத் திசையும் கருமங்கள் எல்லாம் –
அவ்வோ தேவதைகளுக்குப் பொருந்தின வியாபாரங்களும்
எல்லாம்
அவையாவன
இன்னான் சிருஷ்டிக்கு கடவன்
இன்னான் சம்ஹாரத்துக்குக்   கடவன்
இன்னான் அவாந்தர சம்ஹாரத்துக்குக் கடவன் –
என்றால் போலே சொல்லக் கடவதுஇ றே

அசைவில் சீர்க் –
ஒரு நாள் குறைந்து
ஒரு நாள் நிறைந்து வரக் கடவது அன்றிக்கே
நித்தியமான கல்யாண குணங்களை யுடையவன்
அல்லாதார் உடைய சீருக்கு அசைவுண்டு போலே –

கண்ணன்-
அந்த கல்யாண குணங்களாலே போந்து அவதரித்து கொண்டு
ஸூ லபன் ஆனவன்
தன்னை இதர சஜாதீயன் ஆக்குவதும் தன்னுடைய இச்சையாலே -என்றபடி –
அன்றிக்கே
அசைவில் சீர்க் கண்ணன் –
தன்னை இதர சஜாதீயன் ஆக்கின இடத்திலும் அவனது அசைவில் சீர் -என்றுமாம்
இவன் தானே உயா வைத்துத் தரம் கொடுத்தாலும் அவர்களது அசையும் சீர் –

நெடுமால்-
இப்படி ஸூலபன் ஆன இடத்திலும்
தன்னை அளவிட ஒண்ணாத படி யான பெருமையை உடையவன்
யதோ வாசோ நிவர்த்தந்தே -என்று ஒதப் படுமவன்
அன்றிக்கே
ஆஸ்ரிதரை விட மாட்டாத பெரும் பிச்சன் -என்றுமாம் –

கடல் கடைந்த-
இப்படி பெரியனாய் இருந்து வைத்தேயும் அரியன செய்தும்
ஆஸ்ரிதரை நோக்கும் ஸ்வ பாவத்தை யுடையவன்
அபேஷிப்பாரே வேண்டுவது –
நெடுமால் –
உபாயாந்தரங்களுக்கும் அவனே வேண்டினவோபாதி
தேவதாந்தரங்களுக்கும் அவனே வேணும்
அவனையே பற்றினார்க்கு இரண்டும் த்யாஜ்யம் –

காரோத வண்ணன்-
இவை ஒன்றுமே செய்திலன் ஆகிலும் அழியச்செய்யிலும்
விட ஒண்ணாத வடிவழகை யுடையவன்

படைத்த மயக்கு –
அவன் பண்ணி  வைத்த மதி விப்ரமம் -என்கிறார்
பல பிரதான சக்திகளையும்
பிரவ்ருத்தி நிவ்ருத்தி சக்திகளையும் கொடுத்தால்
தன் வழி வராதவர்களை அறிவு கெடுக்கும் படி
மம மாயா துரத்யயா-என்னக் கடவது இ றே –

—————————————————————————————-

பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: