அவதாரிகை –
அறிவானாம் என்றும்
சரீரதயா சேஷ பூதன் -என்றும்
ருத்ரனைச் சிரிக்கிற நீர் தாம் சேஷ பூதர் அன்றோ –
நீர் பின்னை அவனை எங்கனே அறிந்த படியும் உபதேசிக்கிற படியும் என்ன
அவன் தனக்கு சத்வம் தலை எடுத்த போது அவனை உள்ளபடி அறியும்
அல்லாத போது ரஜஸ் தமஸ் ஸூ க்களாலே அபி பூதனாய்
தான் அதிகரித்த கார்யத்தை புத்தி பண்ணி
ஈச்வரோஹம் -என்று இருக்கும்
எனக்கு அங்கன் அன்றிக்கே அவன் தான் காட்டக் கண்டேன் ஒருவன் ஆகையாலே எனக்கு ஒரு காலும் விச்ம்ருதி இல்லை
என்கிறார் –
———————————————————————————
ஓன்று மறந்து அறியேன் ஓதம் நீர் வண்ணனை நான்
இன்று மறப்பனோ வேழைகாள் -அன்று
கருவரங்கத் துட்கிடந்து கை தொழுதேன் கண்டேன்
திருவரங்க மேயான் திசை ———–6-
————————————————————————————
வியாக்யானம் –
ஓன்று மறந்து அறியேன்-
அவன் படிகளில் எனக்கு அஞ்ஞாதமாய் இருப்பது ஒன்றும் இல்லை
என்கிறார்-
ஓதம் நீர் வண்ணனை நான் –
மறுப்பு என் கையதாயோ இருக்கிறது –
ஒருக்கால் மறக்கும் படியோ வடிவழகு இருக்கிறது
ஸ்ரமஹரமான வடிவழகு உடையவனை –
இன்று மறப்பனோ –
அவன் தான் தன்னைக் கொடு வந்தது எனக்குக் காட்டி
இவ்வளவான தசையை விளைவித்த பின்பு
மறக்க சம்பாவனை உண்டோ –
வேழைகாள் –
அவ விஷயத்தை ஒழியவும் நினைக்கைக்கு வேறே சில விஷயங்கள் உண்டு என்று இருக்கிற
உங்கள் ஸ்வ பாவத்தைக் கொண்டு சொல்லாதே கொள்ளி கோள் –
அன்று கருவரங்கத் துட்கிடந்து கை தொழுதேன் கண்டேன் –
கர்ப்ப ஸ்தானத்திலே நான் கிடக்கிற அன்று
அவன் தானே தன்னைக் கொடு வந்து காட்டக் கண்டேன்
இவனுக்கு அப்ரதி ஷேதம் உள்ளதொரு சமயம் என்று பார்த்து தன்னைக் கொடு வந்து காட்டினான் ஆயிற்று –
அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து -திருவாய் மொழி -2-3-3-
ஜாயமானம் ஹிபுருஷம் யாம் பச்யேத் மது ஸூ தன
சாத்த்விகஸ் ச து விஜ்ஞ்ஞேய ச வை மோஷார்த்த சிந்தக
மறைக்கைக்கு ஹேது யுள்ள விடத்தில் -கர்ப்பத்தில் -மறந்திலேன்
நினைக்கைக்கு ஹேது யுள்ள விடத்தில் -இன்று -மறப்பேனோ
கண்டு கை தொழுதேன் –
காணவும் பெற்றேன்
காட்சிக்கு அனந்தரமான
வ்ருத்தியிலும் அந்வயிக்கப் பெற்றேன் –
திருவரங்க மேயான் திசை –
தான் வந்து சந்நிஹிதன் ஆனவனுடைய இடையாட்டத்தே –
பெரிய பெருமாள் ஸ்வரூப ரூப குண விபூதிகளில் ஒன்றும் மறந்து அறியேன்
பர தசையிலேயோ –
எல்லை நிலத்திலே –
திருவரங்க மேயான் திசை அன்று கருவரங்கத்துள்
கிடந்து கை தொழுதேன் –
கண்டேன்
ஒன்றும் மறந்தறியேன்
ஓத நீர் வண்ணனை நான் இன்று மறப்பனோ ஏழைகாள்
என்று அந்வயம் –
——————————————————————————————-
பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply