முதல் திருவந்தாதி-பாசுரம் -5 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

ஆகக் கீழ் –
எல்லாம் கூட அவனே சர்வேஸ்வரன் என்று சொல்லிற்றாய் நின்றது
இனி –
அல்லாதாருடைய அநீஸ்வரத்வம்   சொல்ல வேண்டி வருமே
அதுக்கு உறுப்பாக அல்லாதார் உடைய அநீஸ்வரத்வம்  சொல்லுகிறார் மேல்
அறிவானாம் -என்று நீர் ருத்ரனை ஷேபியா நின்றீர்
நாட்டார் அவனையும் ஈஸ்வரனாக அன்றோ பிரதிபத்தி பண்ணிப் போருகிறது -என்ன
இன்னான் ஈஸ்வரன் -இன்னான் ஈஸ்வரன் அல்லன் -என்னும் இடம் அவர்கள் உடைய ஸ்வ பாவங்கள் கொண்டே அறியலாம் –
என்கிறார் –

அரன் நாரணன் நாமம் ஆன் விடை புள்ளூர்தி
உரை நூல் மறையுறையும் கோயில் வரை நீர்
கருமம் அழிப்பு அளிப்புக் கையது வேல் நேமி
உருவம் எரி கார் மேனி  யொன்று ——–5-

வியாக்யானம் –

அரன் நாரணன் நாமம் –
ஒருவன் தான் அதிகரித்த கார்யத்துக்கு அநு ரூபமாக அழித்துக் கொண்டு திரியும் ஆயிற்று
ஹரதீதி ஹர -என்னக் கடவது இ றே-
அதாவது -ஸ்ருஷ்டமான ஜகத்து தீம்பிலே கை  வளர்ந்து   தன்னை முடித்துக் கொள்ளப் புக்கால்
இவற்றை சம்ஹரிக்கைக்காக அவன் கொண்ட வடிவுக்கு பிரகார பூதனாகை-
ஈஸ்வரன் கை யடைப்பாய்க் கார்யம் செய்யிலும் அழியும் லீலா விபூதியிலே இவனுக்கு அந்வயம்-
மானாவிக்கு நிர்வாஹகர் ஆவாரைப் போலே  -மகா நவமி விழாவுக்கு தோரண வாயில்களை அரசன் ஆணையால் கட்டுவாரைப் போலே
மற்றையவன் ஸ்வ வ்யதிரிக்தத்தை அடங்கலும் சரீரிதயா சேஷமாகக் உடையனாய்
தான் இவற்றுக்கு அடங்கலும் சரீரியாகக் கொண்டு  சேஷியாய்
ஒருவன் காலிலே முள் பாய்ந்தால் அதுக்கு அபிமானியான ஜீவனுக்கு சுக  துக்கங்கள் ஆகிறாப் போலே
இவற்றுக்கு ஒரு வ்யசன அப்யுதயங்கள் வந்தவன்றும் தனக்கு வந்ததாக அபிமானித்து இருப்பானுமாய்
இவற்றை ஒழிய தான் உளன் அல்லாதவன் ஆகையாலே
நாராயணன் என்னும் திரு நாமத்தை யுடையவன் ஆனான் –

ஆன் விடை புள்ளூர்தி-
வாகனங்களையும் ஆராய்ந்தால் அப்படியேயாய் இருக்கும் –
அவன் தன க்ரௌர்யத்துக்கு ஈடாக தமஸ் பிரசுரராய் இருப்பார் பரிக்ரஹித்து
போரும் ருஷபத்தின் மேலேயாய் இருக்கும்    –
சிம்ஹத்தின் பக்கல் போகாமைக்காக ஆன்விடை என்கிறது –
வெறும் விடை என்றால் சிம்ஹத்தையும் குறிக்கும் இ றே
மற்றையவனுக்கு வேதாத்மாவான பெரிய திருவடி வாகனமாய் இருக்கும் -ஐஸ்வர்ய ஸூ சகம் இ றே –

உரை நூல் மறை-
பிரமாணங்களும் அப்படியேயாய் இருக்கும்
உரை உண்டு -பிரமாணம்
அது நூலும் மறையுமாய் இருக்கும்
அதாவது ஒருவனுக்குத் தான் தமஸ் தலை எடுத்த போது சொன்ன ஆகமம் பிரமாணமாய் இருக்கும் –
மற்றையவனுக்கு அபௌருஷெய நிபந்தனம் ஆகையால் குண வஸ்யம் அல்லாத
நன்மையை யுடை த்தான வேதம் பிரமாணமாய் இருக்கும்  –

யுறையும் கோயில் வரை நீர்-
வாஸஸ் ஸ்தானங்களும் அப்படியேயாய் இருக்கும் –
ஒருவன் தன காடின்யத்துக்குச் சேர மலையிலே இருக்கும்
மற்றையவன் தன தண்ணளி க்குச்   சேரும்படி நீரிலே சாய்ந்து அருளும் –

கருமம் அழிப்பு அளிப்புக் –
வியாபாரங்களும் அப்படியேயாய் இருக்கும்
ஒருவன் சகல ஜகத்துக்களையும் சம்ஹரித்துக் கொண்டு திரியும்
ஒருவன் அவற்றை ஈரக் கையாலே தடவி நோக்கக் கடவனாய் இருக்கும் –

கையது வேல் நேமி-
கையில் ஆயுதங்களும் அப்படியேயாய் இருக்கும்
ஒருவனுக்கு ஆயுதம் வேலாய இருக்கும்
மற்றையவனுக்கு ஆயுதம் ரஷணத்துக்கு ஏகாந்தமான திரு ஆழியாய் இருக்கும் –
கொன்னவிலும் மூவிலை வேல் -பெரிய திரு மடல் -என்றும்-
அற முயல் ஆழி  -திருவாய் மொழி-2-10-6-என்றும் சொல்லக் கடவது இ றே
நிலாத்துக்குறி பகவான் பட்டரை-பரம பதத்திலும் ஈஸ்வரன் சதுர் புஜனாய் இருக்கும் இடத்துக்கு பிரமாணம்
உண்டோ -என்று கேட்க –
தமஸ  பரமோதாதா சங்க சக்ர கதாதர -யுத்த -114-115–என்று அருளிச் செய்ய -அவன் கோபிக்க
பிரமாணம் இருந்த படி இது-

உருவம் எரி கார் மேனி  யொன்று —
உருவம் உண்டு வடிவு
அவையும் அப்படியேயாய் இருக்கும்
ஓன்று எரி மேனி –
தாபத் த்ரயத்தினாலே தப்தனாய்ச் சென்றவனுக்கு வடிவைக் கண்டால் நெருப்பிலே இழிந்தால் போலே
பழைய சம்சாரமே அமையும் என்னும்படி இருக்கும் ஒருவன் –
ஒரு நீர்ச் சாவியான பயிரிலே வர்ஷித்தால் போலே ஸ்ரமஹரமாய்   இருக்கும் –
நீல தோயாத மதயஸ்தா
உருவம் எரி கார் என்றாக்கி மேனி ஓன்று என்கிறது
ஓன்று சரீரம்
ஒருவன் சரீரி -என்கிறது
அந்த ப்ரவிஷ்டஸ் சாஸ்தா ஜ நாநாம் சர்வாத்மா -என்றால்
சர்வஞ்  சாஸ்ய சரீரம் -என்று தோற்றுமா போலே
ஒருத்தன் சரீரம் என்றால் மற்றையவன் சரீரி -என்னும் இடம் தோற்றும் இ றே –

——————————————————————————-

பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: