முதல் திருவந்தாதி-பாசுரம் -4 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

அவன் தான் தந்த  வெளிச் சிறப்பு உடைய நான்
இன்னும் நீச்சு நீரிலே புக்கப் போலே அலமரா நிற்க
நாலு நாள் மூக்குப் புதைத்த வேற்றம் கொண்டு
ஒருவன் இவ்வஸ்துவை ஸ்வ யத்னத்தாலே காண ஒருப்படுவதே -என்ன அறியானைதான் -என்கிறார்
தாம் இப்படி படுகிறது என்-தமக்கு அறியத்  தட்டு உண்டோ என்னில்
சங்கோ சங்களும்   போய் சாமக்ரியும் குறைவற்றாலும்
அபரிச்சின்ன வஸ்துவை பரிச்சேதிக்க ஒண்ணாதே இ றே-
பரிச்சேதிக்கப் போம் என்று  ஒருப்பட்டவையும் -மஹாந்தம் -என்று கொண்டு மீண்ட வித்தனை இ றே
கண்ட இடம் காணும் இத்தனை யன்றியே
எல்லை கண்டாய் மீள ஒண்ணாது இ றே
கடல் அருகே இருந்தான் என்னாக் கடலை முட்டக் கண்டான் ஆகானே –

நெறி வாசல் தானேயாய் நின்றானை யைந்து
பொறி வாசல் போர்க்கதவம் சாத்தி அறிவானாம்
ஆலமர நீழல் அறம் நால்வர்க்கு அன்றுரைத்த
ஆலமர் கண்டத் தரன் ———–4-

வியாக்யானம் –

நெறி வாசல் தானேயாய் நின்றானை –
நெறி என்று கொண்டு உபாயமாய்
வாசல் என்று கொண்டு பிராப்ய வஸ்து தன்னைச் சொல்லிற்றாய்
ஆக இவ்விரண்டாலும்  பிராப்ய பிராபகங்கள் இரண்டும் தானேயாய் நின்றவனை –
இப்போது இது சொல்லுகிறது என் என்னில் -பிராப்தி அவனை ஒழிய உண்டாகில் அன்றோ
அறிவு அவனை ஒழிய உண்டாவது என்கைக்காக –
அன்றிக்கே
தாம்தாம் தலையிலே சில கிடக்கப் பண்ணும் சாதனங்களும் அவன் அனுக்ரஹம் ஒழிய பல சித்தி இல்லாமையானாலே
நெறியான உபாயம் அவன் என்றது ஆகவுமாம்-
அதாகிறது -ஸ்வரூப அநு ரூபமான உபாயம் -என்றபடி  –

ஆய் நின்றானை -சித்தம்

யைந்து பொறி வாசல் போர்க்கதவம் சாத்தி –
இப்படிப் பட்ட சர்வேஸ்வரனை
இந்த்ரிய நியமனத்தைப் பண்ணி ஒருவன் அறிவானாம் –
ஐந்து பொறி வாசல் –
ஸ்ரோத்ராதிகளை நினைக்கிறது
இவற்றிலே ஒன்றையும் கிடீர் இவனால் அனுஷ்டிக்க ஒண்ணாமை க்கு
பொறி -என்கிறது ஏதேனும் ஒரு வஞ்சனத்தாலே தன் பக்கலிலே இழுத்துக் கொள்ள வற்றாகை
போர்க்கதவம் -என்கிறது
இவனோடு எதிர்த்து வருகிற படியைச் சொல்லுகிறது
அதாகிறது இவன் நியமிக்கத் தேட
அது தான் கண்டபடி கை கழியத் தேட
இப்படிப் பட்ட அருமையைச் சொல்லுகிறது
சாத்தி –
தள்ளிக் கொடு போந்தும் பந்திக்கையில் உண்டான அருமை யடையத் தோற்றுகிறது-
ஒற்றை அடைக்கில் ஓன்று திறக்கும் -என்கை-
நீரை அடையப் புக்கால் ஓர் இடம் அடைக்க ஓர் இடத்தை மோழை போமாப் போலே
சஞ்சலம் ஹி மன -என்னும்படியே
நல்ல விஷயங்களைக் காட்டாவிடில் குதறு கொட்டும்
பரம் த்ருஷ்ட்வா நிவர்த்தே -கீதை -2-59-மேலான ஆத்மா ஸ்வரூபத்தை கண்ட உடன் ஆசை நீங்குகிறது –
பண்ணா விடில் உபாயம் உண்டோ –
சில செய்தாம் இத்தனை போக்கி இந்த்ரியங்களை விஷயாதிகளில் போகாத படி முட்ட நியமிக்க ஒருவருக்கும் முடியாது –
அறிவானாம் –
ஓம் இந்த ஜிதேந்த்ரியன் அறியானோ என்று கொண்டு
ஷேபோக்தி இருக்கிறபடி

ஆலமர நீழல் –
தான் தபஸ் ஸூ பண்ணுகிற ஆலமரத்தின் நிழலின் கீழே

அறம் நால்வர்க்கு அன்றுரைத்த –
அறம் -சமாஸ்ரயண பிரகாரம் –
நால்வர்க்கு-அகஸ்த்ய புலஸ்திய தஷ மார்க்கண்டே யர்கள் நால்வரையும்
வைத்துக் கொண்டு இருந்து பகவத் ஜ்ஞானத்தை உபதேசித்தான் –
அன்று உரைத்த –
தான் எம்பெருமானைக் கேட்பதற்கு முன்னே
சிஷ்ய பரிக்ரஹம் பண்ணுவாரைப் போலே
சர்வஞ்ஞனான அஜாத சத்ருவுக்கு ப்ரஹ்ம ஜ்ஞானம் இன்றிக்கே பாலாகி என்பான் உபதேசித்தால் போலே
சாதனத்துக்கு முன்பே பலம்  கொள்ள ஆசைப் படுவதே
தமஸ கார்யத்தைக் கொண்டு சத்வாத் சஜ்ஞ்ஞாயதே ஜ்ஞானம் -கீதை -14-17-சத்வ குணத்தால் அறிவு உண்டாகிறது
என்கிற சாத்விக பலத்தை ஆசைப் படுவதே –

ஆலமர் கண்டத் தரன் –
சர்வேஸ்வரன் கடல் கடைந்த போது அவன் சொல்ல அந்த விஷத்தைக் கண்டத்திலே தரித்தான் ஆயிற்று
இவை கிடீர் இவனுடைய அபிமானத்துக்கு ஹேது
தன்னில் காட்டில் அறிவிலே சிறிது குறைய நின்றார்க்கு அல்பம் ஞான பிரதானம் பண்ணினான் என்றும்
பகவத் ப்ரபாவத்தாலே விஷத்தை தன்னுடைய கண்டத்திலே தரித்தான் என்றும் சொல்லும் காட்டில்
பகவத் பிரபாவம் இவனாலே பரிச்சேதித்து அறியலாய் இருந்ததோ –
பாலாகி அஜாத சத்ரு சம்வாதம் போலே
தான் அறியாது இருக்கச் செய்தேயும் கண்டது எல்லாவற்றையும் காட்டி
இது காண் ப்ரஹ்மம் இது காண் ப்ரஹ்மம்
இத்தைப் பற்று இத்தைப்பற்று என்றாப் போலே
விஷ ஹரண சக்தியையும்
சம்ஹார சக்தியையும் கொண்டு
இத் துறையிலே இழியப் போமோ
சீராமப் பிள்ளைக்கு
இதுவே தாரகமாய் இருக்கிற சாதுவை நலியாதே -என்று
பட்டர் வார்த்தை –
ஆலமமர் கண்டத் தரன் அறிவானாம் -என்று அந்வயம் –

—————————————————————————————-

பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: