முதல் திருவந்தாதி-பாசுரம் -3- -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

இவ்வோவபதாநங்கள் எல்லாம் வேணுமோ -இதுக்கு அவனே நிர்வாஹகன் என்கைக்கு
அதி மானுஷமான இது ஒரு செயலும் அமையாதோ -என்கிறார்

பாரளவும் ஓரடி வைத்து ஓரடியும் பாருடுத்த
நீரளவும் செல்ல நிமிர்ந்ததே –சூருருவின்
பேயளவு கண்ட பெருமான் அறிகிலேன்
நீயளவு கண்ட நெறி ———3–

வியாக்யானம் –

பாரளவும் ஓரடி வைத்து-
பூமி உள்ள அளவும் ஒரு திருவடியை வைத்து

ஓரடியும் பாருடுத்த  நீரளவும் செல்ல நிமிர்ந்ததே –
அந்த ஓர் அடியும்
பவ்வ நீர் உடை ஆடையாகச் சுற்றி -பெரிய திரு மொழி -10-6-3-என்கிறபடி
நீரை உடையாக உடைய பூமி அளவும் சென்று பரம்பிற்று ஆயிற்று
அங்கன் அன்றிக்கே
ப்ராதான்யத்தாலே பூமி அடங்கச் சொல்லி
அத்தை ஒரு திருவடியால் அளந்தானாய்
மற்றை ஒரு திருவடியும் நீர் அளவும் செல்ல நிமிர்ந்தது -என்கையாலே ஆவரண ஜலத்தை உடைத்தான
அண்டத்து அளவும் செல்ல நிமிர்ந்தது என்கையினாலே
ஆவரண ஜலத்தை உடைத்தான் அண்டத்து அளவும் செல்ல வளர்ந்தது -என்னவுமாம்
அண்டம் மோழை எழ -திருவாய் மொழி -7-4-1-என்னக் கடவது இ றே –
-சூருருவின் பேயளவு கண்ட பெருமான் அறிகிலேன் –
நீ நின்ற நிலைக்கு மேலே மாறி ஓர் அடி இடுகைக்கு இடம் காணாமையாலே
நீயும் இவற்றை அளந்து கொண் டாய் என்று சொல்லுகிற இது நான் அறிகிறிலேன்-
என் தான் உமக்கு அறியப் போகாது ஒழிவான் என் என்னில்  –
சூருருவின் பேயளவு கண்ட பெருமான்-
இது வன்றோ உன்னை அளவுபடுத்தி அறியப் புகுவார் படும்பாடு -என்கிறார்
ஒருவராலே அளவிட்டு அறியலாயோ நீ இருக்கிறது –
சூர் உருவில்
சூரும் அணங்கும் தெய்வப் பெண் -நிகண்டு -என்னக் கடவது இ றே
அதாகிறது யசோதைப் பிராட்டி உடைய வடிவைக் கொடு வந்து தோற்றின படி
தெய்வ நங்கை யசோதை -பெருமாள் திருமொழி -7-5-என்னக் கடவது இ றே
வி லஷணமான வடிவை உடைய பேய்-என்னவுமாம்
அதுவாமோ என்னில்
பிசாசா தேவயோ நய -என்று -பிசாசங்களையும் தேவ யோனியில் கூட்டுகையாலே ஆம்
பேய் அளவு கண்ட –
பேயாகப் பரிச்சேதித்த -அதாவது முடிக்கை –
அவன் தன்னை பரிச்சேதித்து முடிப்பதாக வந்த அது தன்னைப் பரிச்சேதித்து முடித்து விட்டான் ஆயிற்று
நீ சிலரைப் பரிச்சேதிக்கும் போது வருத்தம் இல்லை
உன்னைப் பரிச்சேதிப்பார் முடிந்தே போம் இத்தனை –

பெருமான் –
வந்த விரோதத்தை மாற்றி ஜகத்துக்கு ஒரு சேஷியை யுண்டாக்கினவனே
ஸ்தநயம் தத் விஷ சம்மிச்ரம்  ரச்யமாசீத் ஜகத் குரோ -ஹரி வம்சம் -65

அறிகிலேன் -நீயளவு கண்ட நெறி –
நீ நினைத்து இருக்கிற பிரகாரம் ஏதோ ஓன்று நான் அறிகிறிலேன்
உணராது ஒழியப் பண்ணுகிறாயோ -உணரப் பண்ணு கிறாயோ-
நீ செய்த ஒரோ செயலை என்னால் பரிச்சேதிக்கப் போகிறது இல்லை -என்னவுமாம்
மகாபலியாலே பூமியை அளந்து
உன் திருவடிகளிலே இட்டுக் கொண்டால் போலே
என்னையும் உன் திருவடிகளிலே இட்டுக் கொண்டு –
பூதனையைப் போக்கினால் போலே என்னுடைய விரோதியைப் போக்கி என்னை விஷயீ கரித்த படி அறிகிறிலேன் -என்னவுமாம் –

—————————————————————————————————–

பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: