முதல் திருவந்தாதி-பாசுரம் -2- -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

என் சொன்னோம் ஆனோம் –
ஒரு கார்யாத் காரண அநு மானம் கொண்டு நிச்சயிக்க வேண்டும்படியாய்
இருந்ததோ -அவனுடைய அதி மானுஷ  சேஷ்டிதங்கள் கிடக்கச் செய்தே -என்கிறார்  –

என்று கடல் கடைந்தது எவ்வுலகம் நீர் ஏற்றது
ஒன்றும் அதனை யுணரேன்  நான் -அன்று  அது
அடைத்து உடைத்துக் கண் படுத்த வாழி இது நீ
படைத்து இடந்து உண்டு உமிழ்ந்த பார் ——-2

என்று கடல் கடைந்தது-
அவன் கடைந்த கடல் இன்னமும் கிளர்த்தியும் திரையும் மாறிற்றோ
கால த்ரயத்தில் உள்ளதும் சம காலத்தில் போலே தோற்றும்படியாய்க் காணும் இவர்க்குக் காட்டிக் கொடுத்தது –
எல்லாமாகத்தான் -என்று இவன் கடல் கடைகை யாகிற ஆனைத் தொழில் செய்தது –

எவ்வுலகம் நீர் ஏற்றது-
நாம் இருக்கிற பூமியை ஒழியவோ அவன் நீரேற்று அளந்து கொண்டது
அவன் தன்னை அழிய மாறியும் நோக்கின பூமி இது அன்றோ
இன்னமும் அடிச் சுவடு அழிந்தது இல்லையே -என்கிறார்
இன்னம் மகா பலியாலே நோவு படா நின்றதோ –
வாமனன் மண் இது -என்னும்படி தோற்றுகிறது இல்லையோ –

ஒன்றும் அதனை யுணரேன்  நான் –
அக்காலமே தொடங்கி இப்படி அனுசந்திக்க இ றே அடுப்பது
அது ஒழிய -உண்டு உடுத்து வேறே சிலவற்றைக் கொண்டு வ்யர்த்தமே காலத்தைப் போக்குவோமோ -என்கிறார்
அன்றிக்கே
இவற்றில் ஒன்றை அறியாதே ஒரு அநுமானம் கொண்டு நிச்சயிக்க இருப்போமோ -என்கிறார் ஆகவுமாம்-
எத்திறம் -என்று மோஹிக்கிறார் -ஆகவுமாம் –
வாமனன் மண் இது -திருவாய் மொழி-4-4-1- என்னும்படி தோற்றுகிறது இல்லையோ –

அன்று  அது-
எல்லாம் செய்தாலும் இன்று அன்று இ றே கடல் கடைந்தது தொடக்கமான வியாபாரங்கள்   பண்ணிற்று –
அன்றே தொடங்கி இன்று அளவும் அவன் பண்ணிற்றாய் தோற்றுகிறது ஆயிற்று இவர்க்கு –
காலம் அடைவே செல்லா நிற்கச்  செய்தேயும் ஜ்ஞான ப்ரத்யா சத்தியாலே சம காலத்தில் போலே தோற்றுகிறது
ஜ்ஞானமாவது தேச கால சம்பந்திதயா யாதொரு அர்த்தம் தோற்றிற்று
தத் தேச கால சம்பந்திதயா அர்த்தத்தைக் காட்டுகை  இ றே –
தாம் இருக்கிற இடத்துக்கு திருப் பாற் கடல் அல்ப தூரமாய் இருக்கையாலே அது என்கிறார் –

அடைத்து உடைத்துக் கண் படுத்த வாழி –
ஒருத்திக்காக அடைத்து
அநந்தரம்
அது தன்னை வில்லாலே உடைத்து
அதிலே கண் வளர்ந்து அருளினான் ஆய்த்து-
உடைத்து -என்று சம்ஹரித்து -என்னவுமாம் –
ஆழியது -என்று அந்வயிப்பது-

இது நீ படைத்து இடந்து உண்டு உமிழ்ந்த பார் –
இது என்கிறார் ஆய்த்து -தாம் இருக்கையால் வந்த அண்ணிமையைக் கொண்டு .
இல்லாத வன்று சிருஷ்டித்து
பிரளயம் கொள்ள அண்ட பித்தியிலே நின்றும் ஓட்டுவித்து
பிரளயம் வருகிறது என்று ஏற்கவே திரு வயிற்றிலே வைத்து
வெளிநாடு காணப் புறப்பட விட்ட -பார்
அவன் கையிலே பருத்தி பட்ட பன்னிரண்டும் பட்ட பூமி யாய்த்து இது
அல்லாதார்க்கும் ஈஸ்வரத்வ பிரசங்கம் உண்டாகில் இதிலே ஒரு தொழில் அவர்களுக்கும் உண்டாகாதோ
தன்னது அல்லாததை இப்படி கிருஷி பண்ணப் போமோ
கண்டவாற்றால் தனதே உலகென நின்றான் -திருவாய் மொழி-4-6-10-

—————————————————————————————————————————————————————-

பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s


%d bloggers like this: