திரு விருத்தம் – பாசுரம் -12—ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –

அவதாரிகை –

கீழ் எல்லாம் வைஷ்ணவர்களை தலைமகனாகப் பேசிற்று
இதில்
எம்பெருமானைத் தலை மகனாகப் பேசுகிறது –
பகவத் சம்ச்லேஷம் பாகவத சம்ச்லேஷ பர்யந்தமாய் நிற்கக்   கடவதாகையாலும்
இவர்க்குக் கீழ் உண்டான பாகவத சம்ச்லேஷம்
பகவத் சம்ச்லேஷம் பர்யந்தம் ஆக்கின படி –

பேர்கின்றது மணியாமை  பிறங்கி யள்ளல் பயலை
ஊர்கின்றது கங்குலூழிகளே இதெல்லா மினவே
ஈர்க்கின்ற சக்கரத் தெம்பெருமான் கண்ணன் தண்ணம் துழாய்
சார்கின்ற நன்னெஞ்சினார் தந்து போன தனி வளமே—12-

பாசுரம் -12-பேர்கின்றது மணி மாமை -தலைவன் பிரியப் பெற்ற தலைவி தன் ஆற்றாமை கூறி நெஞ்சொடு கலாய்த்தல் –மாசறு சோதி -5-3

வியாக்யானம் –பேர்கின்றது மணியாமை –விலஷணமான நிறம் போகிறபடி
மாமைத் திறத்துகொலாம் -திரு விருத்தம் -5- என்று ஆசைப் பட்ட நிறம் போகிறபடி
காண காணச் சரக்கு வாங்குகிற படி
இவ்வளவிலே வரிலும் மீட்கலாமாய் இருக்கிறபடி –
மணி மாமை என்று தன் நிறத்தைத் தானே கொண்டாடுவான் என் என்னில்
ஒரு நிறமே
ஒரு எழிலே
என்று அவன் கொண்டாடும் படிகளை கேட்டிருந்த படியாலே
தனக்குத் தான் அன்றியிலே
அவனுக்குக்காகத் தான் இருக்கையாலும் –

பிறங்கி யள்ளல் பயலை
நிறம் போன பாழ் கிடவாமை பயலை பரக்கிற படி
பிறங்கி -கிண்ணகம் போலே பெருகி –
அள்ளல் -இட்ட இடத்திலே கால் செருகும் படி வண்டல் இட்ட படி
தானே வந்தாலும் தூர்வை எடுக்க ஒண்ணாது

ஊர்கின்றது-
விஷம் பரந்தால் போலே –
சார்வ பௌமரான ராஜாக்கள் போகப் பள்ளிகள் வந்து புகுருமா போலேயும்
ஸ்ரீ பர்ண சாலையில் நின்றும் இளைய பெருமாள் போக
ராவணன் புகுந்தால் போலேயும் –

கங்குலூழிகளே –
கலப்பதற்கு முன்பு முப்பது நாழிகையாய் இரா நின்றால்
கலந்தவாறே ஒரு ஷணமாய் இரா நின்றது
பிரிந்தவாறே கல்பங்களாய் இரா நின்றது –

இதெல்லா மினவே-
நெஞ்சில் பட்டவற்றைக் கொண்டு அல்லாதவற்றையும் சொல்லுகிறது
மற்றும் உண்டான அன்றில் தென்றல் இவை எல்லாம் இப்படியே
பிராட்டியும் பெருமாளுமாக கலந்த போது எடுத்துக் கை நீட்டின பதார்த்தங்கள்
அவள் போய் நிற்கும் காட்டில் நின்றால் போலே -பகையானால் -போலே –

ஈர்க்கின்ற சக்கரம் –
அனுகூல பிரதிகூல விபாகம் இன்றியே ஈர்கின்றபடி
சேதன சமாதியாலே ஈர்கின்றது என்கிறார்
பிரதிகூல ரைப் போய் ஈரும்
அனுகூலரை கையில் சேர்த்தியாலே ஈரும்
பிரதிகூலரை ஆண்மையாலே கொல்லும்
அனுகூலரை அழகாலே கொல்லும் –

சக்கரத்து  தெம்பெருமான்-
கையும் திரு வாழியுமான சேர்த்தியைக் காட்டி
இவளை எழுதிக் கொண்ட படி
ராஜ புத்ரர்கள் கையில் கடைச் செறிக்குத் தோற்ப்பாரைப் போலே –

கண்ணன் –
கிருஷ்ணன்
அவன் தவி புஜனாய்  அன்றோ இருப்பது
உப சம்ஹர சர்வாத்மன் ரூப மேதச் சதுர்ப்புஜம்  –

தண்ணம் துழாய் சார்கின்ற-
கிருஷ்ணன் பக்கல் உண்டான
அழகிய குளிர்ந்த திருத் துழாயிலே விழுகிற நெஞ்சு –
முதல் அடியில் அன்று கிடீர் தோற்றது
எல்லை நிலத்தைக் கண்டு –
உன் பழைமையை காக்காய்க்கு   இடு என்றுபோன படி –

நன்னெஞ்சினார் –
தம்முடைய நெஞ்சை நல் நெஞ்சினார் என்பான் என் என்னில்
பிரஜைகளே யாகிலும் பகவத் விஷயத்தில் முற்பாடானார் ஆனாரை
இங்கன் அல்லது சொல்லல் ஆகாது  –
அலைந்த பரியட்டமும் தாமுமாய்த் திரிகிறார் இ றே
பூசும் சாந்து என் நெஞ்சமே -என்கிறபடியே
அத்தலைக்கு எல்லா போக்யமும் தாம் ஆகையாலே
பலகால் அருளப் பாடிட அருகே நிற்கவே வேண்டுகையாலே –

தந்து போன தனி வளமே –
இவர் தந்து போன சம்பத்து –

ஸ்வா பதேசம் –
மன ஏவ மனுஷ்யாணாம் -என்னும்படியாலே
இவர் நெஞ்சம் அங்கே பிரவணம் ஆனபடி –

————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s


%d bloggers like this: