திரு விருத்தம் – பாசுரம் -11—ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –

அவதாரிகை –
தலைமகனோடு கலந்து விச்லேஷம் அறியாத படி அதி மாத்ரமாய்ச் சொல்லா நிற்க
பொருள் அதிகாரத்தை ஒருவன் வந்து வாசிக்க
அதைக் கேட்டு இருந்ததைக்   கொண்டு –
அப்ரதிஷித்த மநுமதம் பவதி -என்று பிரதிஷேதியாமையாலே
அநு மதமாய் இருந்தது என்று கொண்டு
இவனோடு கூட ஒரு படுக்கையிலே இருக்கச் செய்தே
பிரிந்தான் என்று நினைத்து
பிரிந்தால் பிறக்கும் காரியமும் பிறந்து –
செல்லுகிறது –

அரியன   யாமின்று காண்கின்றன கண்ணன் விண்ணனையாய்
பெரியன காதம் பொருட்கோ பிரிவென ஞாலம் எய்தற்
குரியன வொண் முத்தும் பைம் பொன்னுமேந்தி   ஒரோ குடங்கைப்
பெரியன கெண்டைக்  குலம் இவையோ வந்து பேர்கின்றவே   —11-

பாசுரம் -11-அறியான யாம் இன்று காண்கின்றன -பிரிவாற்றாத தலைவியின் வேறுபாடு கண்டு தலைவன் உரைத்தல் –மாலுக்கு வையம் -6-6-

வியாக்யானம் –
அரியன –
ஒக்க இருக்கச் செய்தே
கண்ணும் கண்ண நீருமாய் இருந்தபடி என் -என்று கொண்டாடுகிறான் –
கலந்த காலத்திலும் பிரிந்த காலத்திலும் கண்டு அறியோம்-

யாமின்று –
கடலில் குளப்படியும்
ஆயிரத்தில் ஒன்றும் உண்டானால் போலே
இவள் சம்ச்லேஷத்துக்கு உள்ளே எல்லாம் உண்டு என்று இருக்க –
சில பெறுதற்கு அரியன இருந்த படி என் -என்கிறாள்

காண்கின்றன-
ஓதல் -காவல் -பூசல் -பரத்தை -மாட்டு -என்று சொல்லப் படுகிற
நாலு வகை யில் பிரிவிலும் -இது கண்டு அறியோம் -என்கிறான் –

இது ஐந்தாவது வகை பிரிவு கூடி இருக்கச் செய்தே பிரியுமோ என்று அதிசங்கை

கண்ணன் விண்ணனையாய்-
நச புன ஆவர்த்ததே -என்னும்படியே அத்தேசத்தில் புக்கார் புறப்படில் அன்றோ
உன்னைக் கிட்டினார் பிரிவது –
அவிகாராய -என்ற தேசத்தை ஒத்து இருக்கிற எனக்கு
இவ் விகாரங்கள் எல்லாம் என் –

பெரியன காதம் பொருட்கோ பிரிவென –
பிரிவு என ஒ பெரியன காதம் –
பிரிவு என்ற மாத்ரத்திலே பிரிந்தாய்
நெடும் தூரமுமாய் நடுவே மலைகளும் கடல்களுமாய்
ஆளிஇயக்கம் அற்று
தூத ப்ரேஷணத்துக்கும் யோக்கியம் இன்றிக்கே இருந்தபடி –
பொருட்கு –
சம்ச்லேஷத்துக்கு உறுப்பாக பொருள்களுக்கு பிரியத் தேடினீர் ஆகில்
அவை இங்கே உண்டு -என்கிறது –

ஞாலம் எய்தற்குரியன –
உலகம் எனபது உயர்ந்தோர் மாட்டு -என்கிறபடியே
விசேஞ்ஞர் ஆனவருக்கு அனுபவிக்கலாய் இருந்தபடி -உபய விபூதி யும் விலை என்னலாம் படி இருந்தது -என்கை-
ஒரு முகத்தாலே -நீர் தேடித் போகிறவை -இங்கே உண்டு -என்கிறாள் -முகத்திலே என்று த்வனி

வொண் முத்தும் –
ஆகாரத்தே பட்ட முத்தும் –
பைம் பொன்னுமேந்தி  –
பசும் பொன்னாய் இருந்த படி
இவை உண்டாய் இருக்கப் போகையாவது என் என்று
இவற்றைக் கைக் கொள்ளும் -என்று ஏந்தின படி –

ஒரோ குடங்கைப் –
போக்தாவுக்குக் கண்களை சிறாங்கித்துப் பருகலாய் இருந்த படி –

பெரியன-
போக்தாவுக்கு பரிச்சேதிக்கலாம் அத்தனை தான் அவ்வருகாய் இருந்தபடி –

கெண்டைக்  குலம் –
கெண்டை-மௌக்த்யமும் மதமதப்பும் இருந்தபடி –
குலம் -ஜாதியாகக் கூடினால்  ஒப்புப் போரும் இத்தனை –

இவையோ வந்து பேர்கின்றவே   –
அசலமான பதார்த்தம் சலித்த படி
இக் கண்களைக்   கண்டார் படும்பாட்டை
கண் தான் பட்ட படி
வந்து பேர்கின்றவே -சேதன சமாதியாலே சொன்ன படி –

ஸ்வா பதேசம்
இத்தால்
ஆழ்வாருக்கு வைஷ்ணவர்களோடே கூடி இருக்கச் செய்தே
பிரிவை அதிசங்கை பண்ணி
நோவு படும்படி
பிரிவு பொறாமை -இருந்தபடி –

————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: