திரு விருத்தம் – பத்தாவது பாசுரம் –ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –

அவதாரிகை –
துறை -மதியுடன் படுத்தல் –
தலைமகள் தோழி மாரும்  தானுமாய் புனத்திலே இருக்க
தலைமகன் சென்று
இரண்டாம் காட்சி யாகையாலே -தன் ஆசையை ஆவிஷ்கரிக்கிறான் –
மதியுடன் படுத்தல் தோழிக்கு உரித்து -என்னும் பஷத்தில்
அவள் முகத்தை நோக்கிச் சொன்னான் -ஆகவுமாம் –

மாயோன் வட திருவேங்கட நாட வல்லிக் கொடிகாள்
நோயோ யுரைக்கிலும் கேட்கின்றிலீர் உரையீர்  நுமது
வாயோ அதுவன்றி வல்வினையேனும் கிளியும் எள்கும்
ஆயோ ஆடும் தொண்டையோ அறையோ விதறிவரிதே—10-

பாசுரம் -10-மாயோன் வட திருவேம்கட நாட -தலைவன் தோழியிடம் குறை கூறல் -மதி உடன்படுதல் –நெடுமாற்கு அடிமை -8-10-

வியாக்யானம் –மாயோன் –
இந்த ஆச்சர்ய மான பதார்த்தங்களை உடையான் ஆவதே –
பரமபதத்தை இருப்பிடமாக உடையவன் –
கானமும் வானரமும் வேடுமுடை வேங்கடம் -நான் முகன் திருவந்தாதி -47-என்னும்படி
இங்கே வந்து நின்ற நீர்மையில் ஏற்றம் என்றபடி

வட திருவேங்கட நாட –
திருமலைக்கு அவ்வருகு நாடு இல்லை -என்று இருக்கிறார் –

வல்லிக் கொடிகாள் –
வல்லி -என்றது -ஆணறுத்து –ஆண் நாறிற்று -என்றபடி ஸ்த்ரீத்வத்தின் அதிசயத்தை சொல்லுகிறது
கொடிகாள் -என்றது உபக்நத்திலே அணைந்து நிற்க வேண்டி இருக்கிறபடி
பதி சம்யோக ஸூலபம் -இத்யாதி
கொள் கொம்பு ஒன்றாய்
கொடி பலவாய் இருக்கிறபடி

நோயோ யுரைக்கிலும் கேட்கின்றிலீர்-
நோயோ -முடியவும் ஒட்டாதே -ஜீவிக்கவும் ஒட்டாதே இருக்கிறபடி –
நோயோ யுரைக்கிலும்  ஒ கேட்கின்றிலீர்-என்றும்
நோய் கொள்வேனும் நானேயாய்
வருவானும் நானேயாய்
சொல்லுவேனும் நானேயாய் யானாலும்
கேட்கை அரிதாக வேணுமோ  –
அனுஷ்டானம் வேண்டா -கேட்கவே  அமையும்

உரையீர்  –
கேளாதவர்களைச் சொல்லீர் என்றது -ஆசையின் மிகுதி இருந்தபடி –
நோய் அறிந்தீர் ஆகில் நாங்கள் இனிச் சொல்லுவது என் என்ன
நோய் கொண்டமை அறிந்தேன் அத்தனை
நோய்க்கு நிதானம் அறிந்திலேன் –

நுமது வாயோ –
உம்முடைய முக விகாசமோ –

அதுவன்றி வல்வினையேனும் கிளியும் எள்கும் ஆயோ –
அதில் ஏக தேசமான ஆயோ என்கிற சொல்லோ –
கிளியும் எள்கும் –
இவள் சொல்லைக் கேட்டு சப்த க்ரஹணத்தாலே புறம்புள்ளத்தை விட்டுக் கிடக்கிறபடி –
எள்குதல் -ஈடுபடுதல் -என்ற போது-இச் சொல்லைக் கேட்டு துவண்டு கிடக்கிற படி –

வல் வினையேனும் –
அவற்றைப் போல் அன்றியே
சப்த க்ரஹணத்தாலும்
ரூப கிரஹணத்தாலும்
ஈடுபட்ட படி –
ஆடும் தொண்டையோ –
அதரமோ
அடும்-முடிக்கிறபடி உண்டாய் இருந்தது –

அறையோ விதறிவரிதே  –
இன்ன வ்யக்தி என்று அறிகிலேன்
அறிய ஒண்ணாமைக்கு அறையோ அறையோ  –
நாவலோ நாவல் -என்றால் போலே –
இத்தால் –
ஆழ்வார் உடைய  ஆத்மா குணங்களோடு
தேக குணங்களோடு
அவற்றில் ஏக தேசத்தோடு
வாசி அற
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு உத்தேச்யமாய் இருக்கிறபடி –

வேங்கட வல்லிக் கொடிகாள் -என்கையாலே
திவ்ய தேச வாசமும்
சம்ச்லேஷத்தில் தரிக்கையும்
விச்லேஷத்தில் தரியாமையும் -ஆகிற இவை –

————————————————————————–ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: