திரு விருத்தம் -ஒன்பதாவது பாசுரம் –ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –

அவதாரிகை –

திரு மலைக்குப் போக நினைத்தான் என்று பழி இட்டாள்
நீ காண் நினைத்தாய் -என்கிறான்
அவன் அதாவது
பகவத் சம்ச்லேஷம் பிறந்த பின்பு பகவத் சம்ச்லேஷம் மட்டுமேயாய் இருந்த படி
ஸ்வரூப ஜ்ஞானம் கண்டிலோம் –
என்னை அறியச் செய்யாது ஒழிந்தால் உன்னை அறிய வேண்டாமோ -ஸ்வரூபம் -விக்ரஹம் -உன்னுடைய விக்ரக வைலஷண்யம் நீ அறியாய் –

எம்பெருமானார் திரு மலைக்குப் போவதாய் பிறந்த படி கேட்டு
பிள்ளை உறங்கா வல்லி தாசர் தம் அகத்தே போய் மூடிக் கொண்டு கிடந்து
காண்கின்றனகளும்   -என்கிற பாட்டை அனுசந்தியா நிற்க
அங்குச் செய்கின்றஅளவு  என்ன என்று ஒரு வைஷ்ணவரை போக விட
இப்பாட்டை அனுசந்தித்து சோகித்து கிடந்தார் -என்ன
வண்  பூ மணி வல்லி யாரே பிரிபவர் தாம் -என்று சொல்லி
போர மாட்டிற்று இல்லையோ என்று அருளிச் செய்தார்

திண் பூஞ்சுடர்  நுதி நேமி யஞ்செல்வர் விண்ணாடனைய
வண்  பூ மணி வல்லி யாரே பிரிபவர் இவையோ
கண் பூங்கமலம் கருஞ்சுடராடி வெண் முத்தரும்பி
வண் பூங்குவளை மடமான் விழிக்கின்ற மாயிதழே–9-

பாசுரம் -9-திண் பூஞ் சுடர் நுதி நேமி -தலைவன் தலைவியின் நீங்கல்  அருமை கூறுதல் -பொலிக பொலிக –5-2-

வியாக்யானம் –திண் பூஞ்  –ஆஸ்ரிதர்  உடைய விரோதியைப் போக்கும் இடத்து பிற்காலியாதே பணைத்து   இருக்கிற படி –
ஆயுத கோடியிலும் ஆபரண கோடியிலும் அன்வயம் உண்டாகையாலே –

சுடர் நுதி -நேமி –
தேஜஸ்
கூர்மை
உடைய திரு ஆழி –

யஞ்செல்வர்-
திரு ஆழியை உடையார் ஆகையாலே வந்த அழகும்
ஐஸ்வர்யமும் –

விண்ணாடனைய வண்  பூ மணி வல்லி யாரே பிரிபவர்
நச புன ஆவர்த்ததே -என்கிற தேசத்தை பிரியில் அன்றோ -உன்னை பிரிவது –
வண்மை -ஔதார்யம்
தமக்கு மானஸ அனுசந்தானமாக  அனுபவித்து இருக்க அமைந்து இருக்கச் செய்தே
ஜகத்துக்கு உபகாரமாக பிரபந்தத்தை அருளிச் செய்தபடி –
எம்பெருமான் தம் ஒருவருக்குமே மயர்வற மதி நலம் அருள
தாம் ஜகத்துக்கு மயர்வற மதி நலம் அருளின படி –
தாமே சொல்லினும் -வண்  சடகோபன் -என்று இறே  சொல்லுவது
பூ -போக்யதை –
மணி வல்லி -தனக்குத் தான் ஆபரணமாய் இருக்கிற படி
நாயகன் கழுத்தைக் கட்டிக் கொண்டு இருக்க வேண்டிய கொடி –
கழுத்தைக் கட்டிக் கொண்டு கண்ணும் கண்ண நீருமாய் இருக்கிறபடி –
ஒரு கொம்பிலே சேர்க்க வேண்டி இருக்க நிலக்கிடை கிடக்கிற படி –

ஆரே பிரிபவர் தாம்-
பிரணயித்வம் இல்லாமை யாகிலும்
சைதன்யம் இல்லையோ –

-இவையோ கண்-
வெறும் புலத்திலே ஆலத்தி வழிக்க வேண்டும் -காண்

பூங்கமலம் –
அழகிய கமலம் –

கருஞ்சுடராடி-
மதமதப்பு இருந்தபடி –

வெண் முத்தரும்பி-
சிப்பியிலே முத்து அரும்பினால் போலே
சோக பிந்துவேயாய் தோற்றின படி –

வண் பூங்குவளை-
உதாரமாய்
அழகியதான குவளை –

மடமான் விழிக்கின்ற –
சர்வதா சாம்யம் –

மாயிதழே–
அதரம் இருக்கிறபடி –

ஸ்வாபதேசம் –
ஆழ்வார் வைஷ்ணவர்களோடே கூட இருக்கச் செய்தே
பிரிவு வரில் செய்வது என்-என்று அதி சங்கை பண்ண –
அத்தைக் கண்ட வைஷ்ணவர்களே பரிஹரிக்க
வேண்டி இருக்கிறபடி –

——————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: