திரு விருத்தம் -ஏழாவது பாசுரம் –ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –

அவதாரிகை –

கால மயக்கு துறை –

வர்ஷாவில் வரக் கடவதாக காலம் குறித்துப் போன தலைமகன்
வர்ஷாவாகச் செய்தே வராது ஒழிய
இவ்வளவிலே தலைமகள் மோஹிக்கிற படியைக் கண்ட தோழி
அவன் வரும் அளவும் இவள் சத்தையை தரிப்பிக்கைக்காக
வர்ஷா வந்தது அன்று
கறுத்தன இரண்டு ரிஷபம் அன்யோன்யம் விரோதத்தாலே
பூமியிலே இடம் போராமையாலே
ஆகாசத்திலே பிணங்குகிறது காண் -என்று
பிரபஞ்சாபலாபம் பண்ணுவாரைப் போலே –காலத்தை ஷேபிக்கிறாள் –
பிரபஞ்சாபலாபம்  பண்ணி -ஈஸ்வரனும் ஜகத்தும் இல்லை என்பார்கள் -பாஹ்யர்கள்
இவள் ஜகத்தும் ஈஸ்வரனும் உண்டாகைக்காக செய்கிறாள்
இப்படி கால ஷேபம் பண்ணாது ஒழியில்
நாயகி ஆற்றாளாய் முடியும்  -இவள் இல்லையாகில் அவன் இல்லையாம் -பின்னை விபூதியாக இல்லையாம் –

ஞாலம் பனிப்பச் செறித்து நன்னீரிட்டுக் கால் சிதைந்து
நீல வல்லேறு பொரா நின்ற வானமிது திருமால்
கோலம் சுமந்து பிரிந்தார் கொடுமை குழறு தண் பூம்
காலம் கொலோ வறியேன் வினையாட்டியேன் காண்கின்றவே –7-

பாசுரம் -7ஞாலம் பனிப்பச் செறித்து -கால மயக்கு –இன்னுயிர்ச் சேவல் -9-5–

வியாக்யானம் –ஞாலம் பனிப்பச் செறித்து-
லோகம் அடங்க இவ்வதி வ்ருஷ்டியாலே குளிர்ந்து நடுங்கும் படி பாராய் -என்று நாயகி சொல்ல-அங்கன் அல்ல காண்
இவை அந்யோந்யம் பிணங்குகிற படியைக் கண்டு பீதியாலே நடுங்குகிற படி காண்
செறுத்து -அந்யோந்யம் சீற்றம் இருந்த படி

நன்னீரிட்டுக் –
நெடும் போது வர்ஷித்த படியாலே
தரையிலே அழுக்கு கழிந்து
அள்ளிப் பருகலாம் படி பெருகுகிற  நீரை கண்டு
இந்த சுத்தமான ஜல சம்ருத்திக்கு அடி என் -என்ன
விலஷணமான ருஷபங்கள் சீற்றத்தாலே எப்போதும் நீரிடுகிற படி காண் –

கால் சிதைந்து –
வர்ஷத்தின் உடைய பூர்வ அவஸ்தையிலே
கால் விழவு -என்று சொல்லும் அளவு தவிர்ந்து
வர்ஷத்தின் இடை மத்யமாய் ஆயிற்று –
பூர்வ அவஸ்தையில் காற்றுத் தவிர்ந்து நிலை நின்ற வர்ஷ்மே ஆயிற்று -என்று சொல்ல
அங்கன் அல்ல காண்
கோபத்தாலே கால் சிதை கொள்ளுகிறபடி -காண்
பிராட்டியும் ஈஸ்வரனுமான சேர்த்தியை-மின்னும் மேகமும் – திருஷ்டாந்தமாக சொல்ல –

நீல வல்லேறு பொரா நின்ற வானமிது –
இச் சொல்லால் இவற்றை சொல்லுவான் என் என்னில்
இவை விலஷண சப்தத்தாலே சொல்லக் கடவது காண் –
முடிய பொய் சொல்லும் அது அன்றிக்கே
தன்னை விச்வசிப்பைக்காக தானும் காலத்தை சம்சயிக்கிறாள்
இத்தசை வந்தால் நாயகன் வரவு சம்பவிக்கும் என்னும் அத்தாலே

திருமால்  கோலம் சுமந்து பிரிந்தார் கொடுமை குழறு –
அவனுக்குப் போலியான வடிவோடு  கூடி நின்று
நான் வந்த போது அவன் வந்திலன் கண்டாயே -என்று
அவனுடைய குற்றத்தை இவளுக்கு முன்னிடுகிறாள் போலே இரா நின்றது
குழறுகிறபடி  –

தண் பூம் காலம் கொலோ வறியேன் –
குளிர்ந்து அழகிதான காலமோ -அறிகிலேன்
சம்போக யோக்யமான காலம் தானோ -என்றபடி –

வினையாட்டியேன் காண்கின்றவே –
அவன் உகப்பாரை கை விடுமவன் அன்றே
இவளுக்கு ஆசை இல்லாமை அன்று
வர வேண்டும் தசை இல்லாமை அன்று
பிராப்தி இல்லாமை அன்று -திருமால் -என்றதால் பிராப்தியும் சித்தம்-
காண்கின்ற என் பாபம் இத்தனை இ றே
மத்பாபம் ஏவா துர் நிமித்தம்  –

ஸ்வா பதேசம் –
ஆழ்வார் உடைய விஸ்லேஷ தசையைக் கண்ட வைஷ்ணவர்களுக்கு
பிரபஞ்ச அலாபம் பண்ணி யாகிலும்-தரிப்பிக்க வேண்டு இருக்கிற படி –

————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: