திரு விருத்தம் -எட்டாவது பாசுரம் –ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –

அவதாரிகை –

இப்படி தோழி இவளை தர்ப்பித்த   அளவிலே
நாயகன் வந்து இவளோட்டை அதிமாத்ரமாக சம்ச்லேஷம் பண்ணின படியைக் கண்டு
யதா பூர்வமான பரிமாற்றம் அன்றியே
கலவியிலே குவால் வகைகள் உண்டாய் இருந்தது
இப்படி செய்கைக்கு அடி
பிரிய நினைத்தானாக வேணும் என்று
அதி சங்கை பண்ணுகிறாள் –

காண்கின்றனகளும் கேட்கின்றகளும் காணில் இந்நாள்
பாண் குன்ற நாடர் பயில்கின்றன இதெல்லாம் அறிந்தோம்
மாண் குன்றம் ஏந்தி   தண் மா மலை வேங்கடத்தும்பர் நம்பும்
சேண் குன்றம் சென்று பொருள் படைப்பான் கற்ற திண்ணனவே —8

பாசுரம் -8-காண்கின்றனகளும் கேட்கின்றனகளும் -தலைவன் பொருள் வயிற் பிரிதல் குறிப்பால் அறிந்த தலைவி தோழிக்கு கூறல் –கையார் சக்கரம் -5-1-

வியாக்யானம் –காண்கின்றனகளும் –
நின்றால் போலே நில்லா காலை எடுத்து தலையிலே வைப்பது
கும்பிடுவது -ஆகிறபடி –

கேட்கின்றகளும் –
அடியேன் -எனபது
வாயது விரல் மார்பத்து எழுத்து என்று சொல்லுகிற சாடு சதங்கள்-

காணில் –
நிரூபிக்கில்
நெஞ்சு என்னும் உட் கண்ணால்   காணும் உணர்ந்து –

இந்நாள் –
இன்று –

பாண் குன்ற நாடர் –
பாண் -புலமையை இரா நின்றது
வண்டுகள் பாடா நின்றுள்ள திருமலையைத் தேசமாக உடையவர்
குறிஞ்சி நிலத்து தலைமகன் -என்றபடி

பயில்கின்றன இதெல்லாம் அறிந்தோம் –
தன உடைமைக்கு  தான் செய்யும் அளவன்றிக்கே
பெறாப் பேறு பெற்றால் போலே செய்கிற
இவற்றின் ஹேது அறிந்தோம் –
பயில்கின்றன
சம்ச்லேஷம் உச்சிவீடு விடாதே இருக்கிறபடி
மகா ராஜர் பெருமாளை மின்னுக்கும் இடிக்கும் இரையாக விட்டுப் போய்
உதித்ததும் அஸ்தமித்ததும் அறியாதா போலே   –

மாண் குன்றம் ஏந்தி –
ஒன்றை ஆதாரமாக கொண்டும்
ஒன்றை ஆதேயமாகக் கொண்டும் ரஷித்த படி
மாட்சி -அழகு
ஏந்தி -அநாயாசேன-இருந்தபடி –

தண் மா மலை வேங்கடத்து –
குளிரருவி வேங்கடம் -என்னும்படி ஸ்ரமஹரமான மலை

உம்பர் நம்பும் –
மந்தி பாய் வட வேங்கட மா மலை வானவர்கள் சந்தி செய்ய நின்றான் -என்னும்படியே
நித்ய சூரிகள் சமாராதானம் பண்ணுகிற இடம்
ஒக்கச் சந்திப்பர் வேங்கடத் தத்தனை -என்னும்படி நித்ய சூரிகள் விரும்பும் படி
தாங்கள் அனுசந்தித்த மேன்மை அன்றிக்கே
நீர்மை மிக்க இடமானவாறே விரும்புவார்கள் –

சேண் குன்றம்-
உயர்த்தியான சிகரங்கள் -என்றுமாம் –

சென்று பொருள் –
நீயே பொருள் என்று இருந்த படி கண்டோம் –

படைப்பான் –
சாத்தியங்கள் இல்லை
எல்லாம் சித்தம் என்றபடி கண்டோம் –

கற்ற –
இவை பண்டு இல்லை
இப்போது எங்கே குருகுல வாசம் பண்ணினீர் –

திண்ணனவே –
அம்மென்மை எல்லாம் போய்
திண்மை எங்கே உண்டாயிற்று-

—————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: