திரு விருத்தம் -ஆறாவது பாசுரம் –ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –

அவதாரிகை –

நாயகி உடைய முழு நோக்கிலே அகப்பட்ட நாயகன்
தாம்தாம் சத்தைக் கொண்டு தரித்து இருக்க வேண்டுவார்
இச் சந்நிவேசத்திலே செல்லாதே கிடிகோள்-என்கிறான் –

தடாவிய வம்பும் முரிந்த சிலைகளும் போக விட்டு
கடாயின கொண்டொல்கும் வல்லி ஈதேனும் அசுரர் மங்கக்
கடாவிய வேகப் பறவையின் பாகன் மதன செங்கோல்
நடாவிய கூற்றம் கண்டீர் உயிர் காமின்கள் ஞாலத்துள்ளே–6-

பாசுரம் -6-தடாவிய அம்பும் முறிந்த சிலைகளும் -தலைவியின் அழகை
தலைவன் வியந்து பேசுதல் –உண்ணும் சோறு -6-7-

வியாக்யானம்-தடாவிய வம்பும் –
பரந்த வாயம்பும்-காணாக் கோலாய் இருக்கை –
வில்லோடு கூட அடுத்துப் பிடித்த அம்பு-புடை பெறுத்து இருக்கை
தடாவிய -வளைவாயாம்பு
கோடி வருகிறது மர்மத்திலே படுகை
பிடித்த பிடியிலே பயங்கரமாய் இருக்கை –

முரிந்த சிலைகளும் –
அகர்மகமாய்-அகர்த்ருகமாய் இருக்கை –
அம்பும் சிலைகளும் -என்பான் என் என்னில்
அம்பு -என்கிறது ஜாதி பன்மையாலே
சிலைகளும் -என்கிறது இரண்டாகையாலே
அம்பும் சிலைகளும் உபமானமாக சொல்லாதே தானேயாக சொல்லுவான் என் என்னில் -சர்வதா சாத்ருசம் உண்டாகையாலே –

போக விட்டு கடாயின கொண்டு-
ஆர் எதிராக இவற்றை விடுவது என்று தன் பக்கலிலே இட்டு வைத்தது
தன்னுடைய ஸ்த்ரீத்வத்தோடே பாவம் –
போக விட்டுக் கடாயின தடாவிய அம்பையும் முதிர்ந்த  சிலைகளையும்
தன பக்கலிலே ப்ரத்யா ஹரித்து  –
ஒல்கும் வல்லி ஈதேனும் –
ஒடுங்குகிற வல்லியே யாகிலும்
தனக்கு என்ன ஒரு கொள் கொம்பைப் பற்றி அல்லது நிற்க ஒண்ணாத அளவிலும்
செயல்கள் இப்படியாய் இருக்கை –

அசுரர் மங்கக் கடாவிய வேகப் பறவையின் பாகன் –
பிரதிபஷம் முடியும்படிக்கு ஈடான மிடுக்கை உடைய பெரிய திருவடியை நடத்துக்கிற நிர்வாஹகன் –
சர்வேஸ்வரன் காண வந்த சோழரோபாதி
எதிரிகளை முடிக்கைக்கு தானே அமையும் –
பறவையின் பாகன் -சர்வேஸ்வரத்வ ஸூ சகம் –

மதன செங்கோல் நடாவிய –
இவளைப் பிராட்டியாக உடையவன்
காமனுடைய ஆஞ்ஞையை நிர்வஹிக்கிற –

கூற்றம் –
அவனைப் போலே பாணங்களாலே மோஹிக்கப் பண்ணுகை அன்றிக்கே
தானே முடிக்கை என்கிறது –

கண்டீர் உயிர் காமின்கள் ஞாலத்துள்ளே–
ஜீவிக்க நினைத்து இருப்பார் தம்தாமை நோக்கிக் கொள்ளுங்கோள்-

ஸ்வா பதேசம் –
சம்சாரத்திலே குடியும் தடியுமாய் இருக்க நினைத்தார்
ஆழ்வார் திருப்புளிக்கு கீழே இருக்கும் இருப்பு காணச் செல்லாதே
கொள்ளுங்கோள்-என்கிறது –

அம்பு -கண் வில் புருவம்
அகர்கமாய் -தனக்கு விஷயம் இன்றிக்கே இருக்க
அகர்த்ருகமாய் -தன்னை வளைக்கக் கர்த்தாவும் இன்றிகே இருக்க
பெரிய திருவடி பாகன் -பக்தியை நடத்துகிற
குடி -க்ருஹம் தடி ஷேத்ரம் –போகட்டு போக விட்டு –
ஆழ்வாரை சேவிக்க சம்சாரம் அடி அறும் –

————————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: