திரு விருத்தம் -நான்காம் பாசுரம் –ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –

அவதாரிகை
இமையோர் தலைவா -என்னும்படியே
நித்ய விபூதியைக் காட்டிக் கொடுக்கையாலே
அங்குள்ள பதார்த்தங்கள் ஸ்மாரகமாய் நலிகிற படியைச் சொல்லுகிறது –

தனி நெஞ்சம் முன்னவர் புள்ளே கவர்ந்தது தண்ணம் துழாய்க்
கினி நெஞ்சம் இங்குக் கவர்வது யாமிலம் நீ நடுவே
முனி வஞ்சப் பேய்ச்சி முலை சுவைத்தான் முடி சூடு துழாய்ப்
பனி நஞ்ச மாருதமே எம்மதாவி பனிப்பியல்வே  —-4-

பாசுரம் -4-தனி நெஞ்சம் முன் அவர் -தலைவனைப் பிரிந்த தலைவி வாடைக்கு ஆற்றாது வருந்தி கூறல் –ஓடும் புள்ளேறி -1-8-

வியாக்யானம் –

தனி நெஞ்சம் –
பாத்யத்தின் அளவன்றிக்கே பாதகம் இருக்கிற படி –

முன்னவர் புள்ளே கவர்ந்தது-
திருவடி மேலே இருக்கிற  இருப்பிலே
தோளின் மாலையோடு அணைக்கக் காணும் ஆசைப் படுகிறது –
அவ்வளவும் கிட்டுவதற்கு முன்பே
ஒரு திருவடி வழி பறித்துக் கொண்ட படி
அவர் புள் –
அங்குத்தைக்கு அசாதாராணம் என்று -தான் ஈடுபட்ட படி
புள்ளே –
சஜாதீயருக்கும் வையாது ஒழிந்த படி
கவர்ந்தது
தனக்கு அரை வயிறாய் இருந்த படி
முன்
திருத் துழாய்க்கு முன்னே திருவடி முற்பட்ட படி –

தண்ணம் துழாய்க்
குளிர்ந்த திருத் துழாய் க்கு

கினி நெஞ்சம்-
மரம் போலே திமிர்த்து இருந்தாலும் ஆவது உண்டோ
ஓரடி முற்பட பெற்றது இல்லை
ஒப்பூணாக உண்ணலாயிற்று
உங்கள் அபேஷிதம் இல்லை

இங்குக் –
விளக்கு ஏற்றிக் காட்டுகிறாள்

கவர்வது யாமிலம் –
திருவடி பாடே போம் இத்தனை
பாவியேன் பல நெஞ்சு படைக்கப் பெற்றிலேன்
தண்ணம் துழாய் க்கு கவர்வதான நெஞ்சுக்கு யாம்  இனி இங்கே உடையோம் அல்லோம்

நீ நடுவே –
திருத் துழாய் ஆழ்வார் மரம் போலே திமிர்த்து இருந்தார் என்று பார்த்து
அவ்வளவிலே கால் கடுகி  வந்து
அசாதாரணர் பட்டினி விடா நிற்க -உனக்கு என் -என்கிறாள் –
அங்கு சம்பந்தம் உண்டாதல்
இங்கு விஷயம் உண்டாதல்
அன்றியே நடுவே –

முனி வஞ்சப் பேய்ச்சி-
முனியையும்
க்ரித்ரிமத்தையும் உடைய பூதனை –

முலை சுவைத்தான் –
தன் நாவில் பசை கொடுத்துச் சுவைத்தான்
பெற்ற தாய் போல் வந்த பேய்ச்சி பெரு முலை யூடு உயிரை வற்ற வாங்கு உண்ட வாயான்

முடி சூடு துழாய்ப் –
அத்தலையில் உள்ளத்தைக் கொண்டு வந்து
வாயு பிரேரிக்கிற படி
சஹ்யத்திலே நீரை ஆகாசத்திலே முகந்து நின்று இறைக்குமா போலே
திருத் துழாயை முடித்து வந்து போலே காணும்
பூதனையை முடித்தது –

திரு அபிஷேகத்திலே திருத் துழாய் என்று அறிந்த படி என் தான்
பனி நஞ்ச மாருதமே-
குளிர்ந்த காற்று அகவாய் நஞ்சாய் இருக்கிற படி

எம்மதாவி-
சென்று அற்று இருக்கிறபடி
பாதகங்களின் கையிலே அகப்பட்டு அவசேஷித்த பிராணன் –
பனிப்பியல்வே  –
நடுங்குகை ஸ்வ பாவமே
விசஜாதியர் செய்யுமத்தை
சஜாதீயமான நீ செய்யக் கடவையோ-

———————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: