திரு விருத்தம் -ஐந்தாம் பாசுரம் –ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –

அவதாரகை –

விபூதி ஆகாரத்தாலே -இங்குள்ள பதார்த்தங்கள் ஸ்மாகரமாய் நலிகிற படி –
ஜ்ஞான சங்கோசம் அற்று -ந ச புன  ஆவர்த்ததே -என்கிற தேசத்திலே போனால் ஸ்மாகரமாவை-இங்கே ஸ்மாகரகமாம் படி  எங்கனே என்னில்
ஸ்வ எத்தன சாத்தியமான ஜ்ஞானம் அன்றிக்கே
மயர்வற மதிநலம் அருளப் பெறுகையாலே
பரபக்தி பர ஜ்ஞான பரம பக்திகள் ஏக ஷணத்திலே இவர்க்கு உண்டாகையாலே
இங்கே இருக்கச் செய்தே-ஸ்மாரகமாய் நலியும்படி
இவருக்குப் பிறந்த ஜ்ஞான வைசத்யம் இருந்த படி –

பனிப்பியல்வாக உடைய தண் வாடை இக்காலம் இவ் ஊர்ப்
பனிப்பியல்வெல்லாம் தவிர்ந்து எரி வீசும் அம்தண் அம் துழாய்
பனிப்புயல் சோரும் தடங்கண்ணி மாமைத் திறத்துக் கொலாம்
பனிப்புயல் வண்ணன் செங்கோல் ஒருநான்று தடாவியதே —-5-

பாசுரம் -5-பனிப்பு இயல்வாக உடைய -வாடைக்கு வருந்தி மாமை இழந்த தலை மகளைக் கண்டு தோழி இரங்குதல் –மாயா வாமனனே -7-8-

வியாக்யானம் –

பனிப்பியல்வாக உடைய தண் வாடை –
குளிர்த்தியை ஸ்வ பாவகமாக உடைத்தான மந்த மாருதமும்

இக்காலம் இவ் ஊர்ப் பனிப்பியல்வெல்லாம் தவிர்ந்து எரி வீசும் –
இக்காலத்திலே
இத்தேசத்திலே
இதுக்கு ஸ்வபாவ பேதம் பண்ணுகின்றவன் ஆகையாலே
அவனுக்காக நின்றபடி
பதார்த்தங்கள் ஸ்வ பாவ பேதமும்
ஸ்வரூப பேதமும் பண்ணிக் கொண்டே யாகிலும்
இவளை அழிக்க நினைத்த படி-

அவன் தனக்கு ஸ்வரூப ஸ்வ பாவங்கள் வேறு பட்டால்
அவனைப் பின் செல்லுகிறவற்றைச் சொல்ல வேணுமோ
அம்தண் அம் துழாய்-பனிப்புயல் சோரும் தடங்கண்ணி
சர்வேஸ்வரன் உடைய குளிர்ந்து அழகிதான திருத் துழாயை
ஆசைப் பட்டு கண்ண நீர் சோரா நின்றாள் –
இக்குற்றம் செய்தாருக்கு பட வேண்டுவது இவ்வளவேயோ
இப்பரப்பு மாற ஏகார்ணவம் பெற்றாலும் போராது –

மாமைத் திறத்துக் கொலாம் –
இந்நிறத்தை அழிக்கைக்கு கிடீர் -இப்பாடு பட்டது

பனிப்புயல் வண்ணன் செங்கோல் ஒருநான்று தடாவியதே –
தாபத் த்ரயங்களும் போம்படி இருந்த படி –
பனிப்புயல் வண்ணன் –
நிர்ஹேதுக ஸ்வ பாவன்
செங்கோல்-
நாம் பட்ட படி படுகிறோம்
அத்தலையில் ஆஞ்ஞைக்கு ஒரு ஹானி வாராது ஒழிய வேணும்
ஒரு நான்று
இன்று தொடங்கி
தடாவியது –
விலங்கிற்று-
இது தாயார் வார்த்தை –
காமம் சாரா வெறிய தினிளமை   காட்சி மகிழ தனலம் பாராட்டு -துறை –

அதாவது சம்ச்லேஷ்சம் ஆகிற காமம் ஆனது
சாரா -கிட்டாமையால் உண்டான
வெறி உண்டு -பிச்சு
அதனுடிய இளமையாவது
காட்சி திருஷ்டி பந்தத்தை சொல்லுகையும்
மகிழ்தல் அநந்தரம் உண்டான ஹர்ஷ வசனமான மந்த ஸ்மிதத்தை நினைக்கையும்
நலம் பாராட்டு -சௌந்தர்யாதிகளை கொண்டாடுகை
கிளவித் துறை –

—————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: