திரு விருத்தம் -இரண்டாம் பாசுரம் –ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை -வியாக்யானம் –

அவதாரிகை –
இமையோர் தலைவா -என்று அவனுடைய பரம பும்ஸ்வத்தை முதலிலே அனுசந்தித்து
அப்படி அவனைக் கிட்டப் பெறாமையாலே
ஆண் -பெண்ணாம் படி யாயிற்று –
இங்கனே செய்யக் கூடுமோ -என்னில்
பும்ஸாம் திருஷ்டி சித்த அபஹாரிணாம் -என்றும் உண்டாகையாலே இதுவும் கூடும்
அங்கனம் ஆகில் கேவலம் ஸ்திரீ மாதரம் அன்றியிலே
ஒரு பிராட்டி தசையாம்படி எங்கனே என்னில்
சம்ச்லேஷத்தில் இனிமையும்
விச்லேஷத்தில் தரியாமையும்
ச்வத சித்தமான சம்பந்தமும் –அனந்யார்ஹ சேஷத்வம் -உண்டாகையாலே –

அநந்ய சரணத்வம் அநந்ய போக்யத்வம் ததேக நிர்வாஹ்யத்வம் மூன்றும் உண்டே –
தோழி தசையும் திருத் தாயார் படியும் உண்டாகிற படி எங்கனே என்னில்
கிண்ணகம் பெருகா நின்றால்-ஆறுகளும் கால்வாய்களும் -குளங்களும் நிறைந்து
சமுத்ரத்திலும் குறைவற்றுப் புகுமோபாதி
விஷயம் அபரிச்சின்னம் ஆகையாலே இதுவும் கூடும்
இவருக்கு இங்கு உண்டான விரோதிகளையும் காட்டி
அவற்றில் உண்டான  ருசிகளையும் தவிர்ந்து
தன்னுடைய நித்ய விபூதி யோகத்தையும் காட்டிக் கொடுக்க
அநந்தரம்
அங்கு உள்ளாரின் ஜ்ஞானத்தையும் -அங்குத்தை பரிமாற்றத்தையும் – தேச விசேஷத்தையும் கண்டு
அவ்விடத்தை பிராபித்து அல்லது நிற்க மாட்டாத த்வரையும் பிறந்தது –
ஆகில் -இவர் அபேஷிதம் செய்து கொடாது ஒழிவான் என் என்னில்
சம்சாரிகளில் காட்டில் வ்யாவ்ருத்தராக்கி
நம்மை அல்லாது அறியாத படியும் பண்ணி
அலாப தசையில் கூப்பிடும்படி பண்ணி
இவருக்கு ஸ்வரூபமான அடிமையையும் வாசிகமாக கொள்ளா நின்றோம் ஆகில்
அவ்வருகில் பிராப்தியும் செய்வோம் நாம் ஆனபின்பு
செய்து கொடுக்கிறோம் என்று ஆறி இருந்தான் –
இவருக்கு கீழ்ச் செய்தது ஜ்ஞான லாபம் ஆகையாலே
அநந்தரம்
பிராப்தி பண்ணித் தர வேண்டும் என்று த்வரிக்கிறார்
ஈஸ்வரனுக்கு இங்கனே இருப்பதொரு புடை உண்டு
பிரஜைகள் பசித்திருக்க விருந்தினரைப் பேணுமா போலே
அசாதாராண பரிகரத்துக்கு தாழ்த்தும்
அல்லாதார் கார்யம் தலைக் கட்டும் -எங்கனே என்னில்
கைகேயி கார்யம் தலைக் கட்டின அநந்தரம் ஸ்ரீ பரத ஆழ்வான் கார்யம் செய்கையாலும்
மகா ராஜர் கார்யம் செய்து பின்னை பிராட்டி கார்யம் செய்கையாலும் –
இவர்களுக்கு முற்பட செய்கிறது என் என்னில்
கார்யத்து அளவே இ றே அவர்களுக்கு உள்ளது
அசாதாராணருக்கு அபேஷிதம்  செய்தானோ என்னில்
ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு முடியைத் தவிர்த்து கொடுக்கையாலே இவர்கள் அபேஷிதமும் செய்யும் -ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு நித்ய கைங்கர்யமும் அருளினானே –

நாயகியும் தோழியுமாக உத்தியான வனத்திலே பூ கொய்ய என்று புறப்பட்டு
ஒரு வ்யாஜ்யத்தாலே நாயகனும் அங்கே வரவும்
ஒருவ்யாஜ்யத்தாலே பிரிய
தைவ யோகத்தாலே கூடி கூடின வழியே பிரியவும்
பிரிவு தானும் கலவியில் ஒரு வகையோ -என்று இருந்தாள் –
பிரிவின் மெய்ப்பாட்டாலே புளகித காத்ரையாய்க் கொண்டு
நோவுபடுகிற படியைக் கண்டு
இவளுக்கு சம்ச்லேஷம் வ்ருத்தமாக கழிந்தது என்று அறிந்து
இனி நாம் உடன்பட்டு இவள் சத்தையை உண்டாக்கிக் கொள்வோம் என்று
இது ஓர் வடிவு இருந்த படி என்
இவ்விருப்பு நித்யமாக வேணும் –
என்று மங்களா சாசனம் பண்ணுகிறாள்  –

செழு நீர்த் தடத்துக் கயல் மிளிர்ந்தால் ஒப்ப சேயரிக் கண்
அழுநீர் துளும்ப அலமருகின்றன வாழியரோ
முழுநீர்   முகில் வண்ணன் கண்ணன் விண்ணாட்டவர் மூதுவராம்
தொழுநீர் இணையடிக்கே அன்பு சூட்டிய சூழ் குழற்கே —-2-
சேயரிக் கண் -சிவந்த -ரேகைகளை -உடைய நேத்ரங்கள்

பாசுரம் -2- செழு நீர்த் தடத்துக் கயல் -தலைவியின் வேறுபாடு கண்ட தோழி வியந்து உரைத்தல் -கோவை வாயாள் -4-3-

 

வியாக்யானம் –
செழு  நீர்த் தடத்துக் கயல் மிளிர்ந்தால் ஒப்ப -சேயரிக் கண்
அழுநீர் துளும்ப அலமருகின்றன வாழியரோ –
ஸூ த்த ஜலமாய் இருக்கிற தடாகத்திலே-ஒரு கயல் இடம் வலம் கொண்டால் போலே இருக்கை –
உபமானமே பிடித்து திருத்திக் கொண்டு சொல்ல வேண்டி இருக்கிறது -உபமேயத்தின் உடைய வைலஷண்யம்
ஒப்ப -என்றது சர்வதா சாம்யம் அன்று -ஒருவகைக்கு ஒப்பாம் இத்தனை

சேயரிக் கண் அழுநீர் துளும்ப
அஸி தேஷணை-கண் கிடீர்
சேய் -அழகாய் -அரி -வண்டாய்
அன்றிக்கே சிவந்த அரியை உடைத்தான
அன்றிக்கே சிவந்து மநோ ஹரிக்கும் கண்கள்
விச்லேஷத்தால் கரும் கண்ணி மாறி சிவந்து இருக்கை
அசூ பிரவஹிக்கிறது
என் கார்யம் தலைக் கட்டிற்று
இவள் கார்யம் தலைக் கட்டும் அத்தனை
பகவத் வ்யதிரேகத்தில் கண்ணும் கண்ணீருமாய் இருக்கும் இது இ றே ஆத்மாவுக்கு ஸ்வரூபம்
இத்தைக் காணும் அது இ றே இவர்களுக்கு உத்தேச்யம்
இவ்விருப்பை இவனும் காணப் பெற்றதில்லை –
அசலிட்டுக் கேட்கும்-தோழி சொல்ல – இத்தனை இ றே  –

கிமர்த்தம் -இத்யாதி
ஆர் குடி வேர் பறிய இக்கண்ணும் கண்ண நீருமாய் இருக்கிறது
ஆரைச் சேதனராகக் கொண்டு -என்றுமாம் -அவன் கண்டு உகக்கும் –
அலமருகின்றன -தடுமாறா நின்றன

வாழியரோ –
இவ்வசதாம் நீண்டு ஜீவித்திடுக

முழுநீர்   முகில் வண்ணன் கண்ணன்-
இக்கடலைத் தரையாக பருகின மேகம் இருந்தபடி
தூமஜ்யோதீஷ் சலில மாருதாம் சந்நிபாத   -என்று
அன்னலும் துன்னலுமாய் -கண்டதும் கடியதும்-ஆன தூமாதிகள்  போலே -இருக்கை அன்றிக்கே
ஆதார ஆதேயம் இரண்டும் தானேயாய் இருக்கை
கடலைப் பருகிற்று என்றால் புஷ்கலா வர்த்தகம் என்று இருக்க வேண்டாவோ
கடலைக் கலக்கிற்று என்றால் மந்தரம் என்று அறியுமா போலே
இந்நிறம் உடையவன் இ றே
இவடிவு அழகைக் கொண்டு சர்ப்ப யாகத்தில் சர்ப்பங்கள் வர இருக்குமா போலே
எல்லாரும் வர இருக்கும் இத்தனையோ என்னில்
இவ்வடிவு உடையானும் தானேயாய்
வருவானும் தானேயாய் இருக்கிறபடி -மேகம் ஜலம் இரண்டாய்  இன்றிக்கே ஜலமாகவே இருக்கை –

விண்ணாட்டவர் மூதுவராம்
யத்ர பூர்வே சாத்யாஸ் சந்தி தேவா -என்றும்
யத்ர ருஷய பிரதம ஜாயே புராணா -என்றும்
பழையராய் இருக்கிறவர்கள்
இவர்கள் சத்தாகாரமாக  தொழா நின்றார்கள்

தொழுநீர் –
நம இத்யே வவாதின -என்கிறபடியே
தொழுகையே ஸ்வ பாவமாக இருக்கும் –

இணையடிக்கே –
ஒன்றுக்கு ஓன்று ஒப்பான அடிகள்
ஓர் அவயவம் நன்றாய் இருக்குமவன்  நமக்கு அவ்வருகு இல்லை என்று இருக்கும்
ஒருவனுக்கு பவ்யமாய் இருக்குமவன் நமக்கு அவ்வருகு நீர்மை உடையார் இல்லை என்று இருக்கும்
ஒருவனுக்கு நிர்வாஹகனாய் இருக்குமவன் நமக்கு அவ்வருகு நிர்வாஹகர் இல்லை என்று இருக்கும்
இம்மூன்றும் கண் அழிவு அற உண்டான பசும் கூட்டு இ றே பரதத்வம் ஆகிறது-சந்தன கர்ப்பூர கும்கும கூட்டு போலே-இதுக்கு இ றே இவள் ஈடுபட்டது
நீர் முகில் வண்ணன் கண்ணன் விண்ணாட்டவர் மூதுவாரம் தொழும் -பத த்ரயத்துக்கும் வியாக்யானம் –

அடிக்கே அன்பு சூட்டிய-
குண ஜிதரால் விழுவது காலில் இ றே
சூட்டிய -என்பான் என் என்னில்
வாசகம் செய் மாலையே – என்னுமா போலே

சூழ் குழற்கே –
சூழ்ச்சியை உடைய குழல்
கண்டாரைச் சூழ்த்துக் கொள்ளும் குழல்
சுருண்ட குழல் -என்றுமாம்

சூழ் குழற்கு வாழியரோ -என்று  அந்வயம்

இப்பாட்டுக்கு ஸ்வாபதேசம் –

பிரதம தர்சனத்திலே
பிரகிருதி பிராக்ருதங்களிலே உபேஷை பிறக்கும்படி தமக்கு
பகவத் விஷயத்தில் பிறந்த ப்ராவண்யத்தைக்-கண்டார் உகந்து பேசும்படியை
தாம் அனுசந்தித்து இனியர் ஆகிறார் –

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: