ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு ..

ஸ்ரீ திரு விருத்தம் –ஸ்ரீ திருவாய் மொழி தொடர்பு —

ருக்கு சாமத்தாலே சரசமாய் ஸ்தோபத்தாலே பரம்புமா போலே தொல்லார் தொடையல் இசை கூட்ட
அமர் சுவை ஆயிரம் ஆயிற்று -ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் -சூர்ணிகை -51

இதற்கு ஸ்ரீ மா முனிகள் வியாக்யானம் –
சாம சங்க்ரஹமான ருக்கானது – ஸ்வ விவரணமாய் -ருசஸ் சாம ரஸா -என்கிறபடியே
தனக்கு ரசமாய் இருந்துள்ள கான ரூபமான சாமத்தாலே ரஸ ஸஹிதமாய்-ஹாவு ஹாவு ஹாவு -இத்யாதியான
ஸ்தோபத்தாலே விஸ்திருதமாம் போலே

ருக் வேத ஸ்தானமாய் இருக்கிற -சொல்லார் தொடையலான திரு விருத்தம் நூறு பாட்டும் -இசை கூட்டி என்றவாறே
இசையில் கூட்டினவாறே சாம வேத ஸ்தானேயாய்-அமரசுவை ஆயிரம் என்கிற படியே –
சரஸமாய் இருந்துள்ள ஆயிரம் பாட்டாக பரம்பிற்று -என்கை –

————–

பாசுரம் -1-பொய் நின்ற ஞானமும் –
துறையடைவு-தாமான நிலையில் அருளியது –
ஒழிவில் காலம் -3-3-

பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும்
இந் நின்ற நீர்மை இனி யாம் உறாமை உயிர் அளிப்பான்
எந் நின்ற யோனியுமாய்ப்ப் பிறந்தாய் இமையோர் தலைவா
மெய்ந் நின்று கேட்டருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே –1–

ஒழிவு இல் காலம் எல்லாம் உடனாய் மன்னி
வழு இலா அடிமை செய்ய வேண்டும் நாம்
தெழி குரல் அருவித் திருவேங் கடத்து
எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே.–3-3-1-

ஸர்வ தேச ஸர்வ கால ஸர்வ அவஸ்தா ஸர்வ கைங்கர்யங்களும்
காலம் எல்லாம் உடனாய் மன்னி
வழு விலா அடிமை செய்ய வேண்டும் -அடியேன் செய்யும் விண்ணப்பம்
இமையோர் தலைவா -எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே.–

—————-

பாசுரம் -2- செழு நீர்த் தடத்துக் கயல் –
துறையடைவு-தலைவியின் வேறுபாடு கண்ட தோழி வியந்து உரைத்தல் –
கோவை வாயாள் -4-3-

செழு நீர்த் தடத்துக் கயல் மிளிர்ந்தால் ஒப்ப சேயரிக் கண்
அழுநீர் துளும்ப அலமருகின்றன வாழியரோ
முழுநீர்  முகில் வண்ணன் கண்ணன் விண்ணாட்டவர் மூதுவராம்
தொழுநீர் இணையடிக்கே அன்பு சூட்டிய சூழ் குழற்கே —-2-

கோவை வாயாள் பொருட்டு ஏற்றின் எருத்தம் இறுத்தாய்! மதிள் இலங்கைக்
கோவை வீயச் சிலை குனித்தாய்! குல நல் யானை மருப்பு ஒசித்தாய்!
பூவை வீயா நீர்தூவிப் போதால் வணங்கேனேலும், நின்
பூவை வீயாம் மேனிக்குப் பூசும் சாந்து என் நெஞ்சமே.–4-3-1-

பூசும் சாந்து என் நெஞ்சமே; புனையும் கண்ணி எனதுடைய
வாசகம் செய் மாலையே; வான் பட்டாடையும் அஃதே;
தேசமான அணிகலனும் என்கை கூப்புச் செய்கையே;
ஈசன், ஞாலம் உண்டு உமிழ்ந்த எந்தை ஏக மூர்த்திக்கே.–4-3-2-)

—————-

பாசுரம் -3-குழல் கோவலர் மடப்பாவையும் –
துறையடைவு-பிரிவாற்றாத தலைவி நெஞ்சு அழிந்து உரைத்தல் –
வெள்ளைச் சுரி சங்கு -7-3-

குழற் கோவலர் மடப் பாவையும் மண் மகளும் திருவும்
நிழற் போல்வனர் கண்டு நிற்கும் கொல் மீளும் கொல் தண்ணம் துழாய்
அழற்போல் அடும் சக்கரத் தண்ணல் விண்ணோர் தொழக் கடவும்
தழற் போல் சினத்த அப்புள்ளின் பின் போன தனி நெஞ்சமே—3-

வெள்ளைச் சுரிசங்கொடு ஆழி ஏந்தித் தாமரைக் கண்ணன் என் நெஞ்சினூடே
புள்ளைக் கடாகின்ற ஆற்றைக் காணீர்! என் சொல்லிச் சொல்லுகேன் அன்னைமீர்காள்!
வெள்ளச் சுகமவன் வீற்றிருந்த வேத ஒலியும் விழாவொலியும்
பிள்ளைக் குழா விளையாட்டொலியும் அறாத்’திருப் பேரெயிற் சேர்வன் நானே- .–7-3-1-கருட சேவை இங்கு பிரஸித்தம்

இழந்த எம்மாமைத் திறத்துப் போன என் நெஞ்சினாரு மங்கே ஒழிந்தார்
உழந் தினி யாரைக் கொண் டென் உசாகோ! ஓதக் கடல் ஓலி போல எங்கும்
எழுந்த நல் வேதத்து ஒலி நின்று ஓங்கு தென் திருப் பேரெயில் வீற்றிருந்த
முழங்கு சங்கக் கையன் மாயத்து ஆழ்ந்தேன் அன்னையர்காள்! என்னை என் முனிந்தே.–7-3-4-

————-

பாசுரம் -4-தனி நெஞ்சம் முன் அவர் –
தலைவனைப் பிரிந்த தலைவி வாடைக்கு ஆற்றாது வருந்தி கூறல் –
ஓடும் புள்ளேறி -1-8-

தனி நெஞ்சம் முன்னவர் புள்ளே கவர்ந்தது தண்ணம் துழாய்க்கு
இனி நெஞ்சம் இங்குக் கவர்வது யாமிலம் நீ நடுவே
முனி வஞ்சப் பேய்ச்சி முலை சுவைத்தான் முடி சூடு துழாய்ப்
பனி நஞ்ச மாருதமே எம்மதாவி பனிப்பியல்வே  —-4-

ஓடும் புள்ளேறி சூடும் தண் துழாய்
நீடு நின்றவை ஆடும் அம்மானே –1-8-1-

வைகலும் வெண்ணெய் கை கலந்து உண்டான்
பொய் கலவாது என் மெய் கலந்தானே –1-8-5-)

————

பாசுரம் -5-பனிப்பு இயல்வாக உடைய-
துறையடைவு -வாடைக்கு வருந்தி மாமை இழந்த தலை மகளைக் கண்டு தோழி இரங்குதல் –
மாயா வாமனனே -7-8-

பனிப்பியல்வாக உடைய தண் வாடை இக்காலம் இவ் ஊர்ப்
பனிப்பியல்வெல்லாம் தவிர்ந்து எரி வீசும் அம்தண் அம் துழாய்
பனிப்புயல் சோரும் தடங்கண்ணி மாமைத் திறத்துக் கொலாம்
பனிப்புயல் வண்ணன் செங்கோல் ஒரு நான்று தடாவியதே —-5-

மாயா! வாமனனே!மது சூதா! நீ அருளாய்
தீயாய் நீராய் நிலனாய் விசும்பாய்க் காலாய்த்
தாயாய்த் தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய்
நீயாய் நீ நின்றவாறு இவை என்ன நியாயங்களே!–7-8-1-இந்த தன்மைகளை என்னிடம் காட்டாமல் கிருத்ரிமமான வாமனன்

என்ன இயற்கைகளால் எங்ஙனே நின்றிட்டாய் என் கண்ணா
துன்னு கர சரணம் முதலாக எல்லா உறுப்பும்
உன்னு சுவை ஒளி ஊறு ஒலி நாற்றம் முற்றும் நீயே
உன்னை உணர உறில் உலப்பில்லை நுணுக்கங்களே.–7-8-9-)

————–

பாசுரம் -6-தடாவிய அம்பும் முறிந்த சிலைகளும்-
துறையடைவு-தலைவியின் அழகை தலைவன் வியந்து பேசுதல் –
உண்ணும் சோறு -6-7-

தடாவிய வம்பும் முரிந்த சிலைகளும் போக விட்டு
கடாயின கொண்டொல்கும் வல்லி ஈதேனும் அசுரர் மங்கக்
கடாவிய வேகப் பறவையின் பாகன் மதன செங்கோல்
நடாவிய கூற்றம் கண்டீர் உயிர் காமின்கள் ஞாலத்துள்ளே–6-

உண்ணுஞ் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையு மெல்லாம்
கண்ணன் எம் பெருமான் என்றென்றே கண்கள் நீர்மல்கி
மண்ணினுள் அவன் சீர் வளம் மிக்கவன் ஊர் வினவித்
திண்ணம் என் இளமான் புகுமுர் திருக் கோளூரே.–6-7-1-திருத் தாயார் இவள் ஸ்வ பாவம் பேசும் பதிகம்

ஒசிந்த நுண்ணிடை மேல் கையை வைத்து நொந்து நொந்து
கசிந்த நெஞ்சினளாய்க் கண்ண நீர் துளும்பச் செல்லுங்கொல்?
ஒசிந்த ஒண் மலராள் கொழுநன் திருக்கோளூர்க்கே
கசிந்த நெஞ்சினளாய் எம்மை நீத்த எம் காரிகையே.–6-7-8-

—————–

பாசுரம் -7-ஞாலம் பனிப்பச் செறித்து-
துறையடைவு-கால மயக்கு –
இன்னுயிர்ச் சேவல் -9-5-

ஞாலம் பனிப்பச் செறித்து நன்னீரிட்டுக் கால் சிதைந்து
நீல வல்லேறு பொரா நின்ற வானமிது திருமால்
கோலம் சுமந்து பிரிந்தார் கொடுமை குழறு தண் பூம்
காலம் கொலோ வறியேன் வினையாட்டியேன் காண்கின்றவே –7-

இன்னுயிர்ச் சேவலும் நீரும் கூவிக் கொண்டு இங்கு எத்தனை
என்னுயிர் நோவ மிழற்றேன்மின் குயில் பேடைகாள்
என்னுயிர்க் கண்ணபிரானை நீர் வரக் கூவகிலீர்
என்னுயிர் கூவிக் கொடுப்பார்க்கும் இத்தனை வேண்டுமோ–9-5-1-

கூட்டுண்டு நீங்கிய கோலத் தாமரைக் கண் செவ்வாய்
வாட்டமில் என் கரு மாணிக்கம் கண்ணன் மாயன் போல்
கோட்டிய வில்லோடு மின்னும் மேகக் குழாங்கள் காள்
காட்டேன்மின் நும் உரு என் உயிர்க்கு அது காலனே–9-5-7-

எம்பெருமானார் உகந்த பாசுரம்
திருவெள்ளறை இருந்து அரையர் திருவரங்கம் கூட்டி வந்த பதிகம்
ஸ்மாரக பதார்த்தம் -கிளி மேகம் -)

—————–

பாசுரம் -8-காண்கின்றனகளும் கேட்கின்றனகளும்-
துறையடைவு -தலைவன் பொருள் வயிற் பிரிதல் குறிப்பால் அறிந்த தலைவி தோழிக்கு கூறல் –
கையார் சக்கரம் -5-1-

காண்கின்றனகளும் கேட்கின்றகளும் காணில் இந்நாள்
பாண் குன்ற நாடர் பயில்கின்றன இதெல்லாம் அறிந்தோம்
மாண் குன்றம் ஏந்தி   தண் மா மலை வேங்கடத்தும்பர் நம்பும்
சேண் குன்றம் சென்று பொருள் படைப்பான் கற்ற திண்ணனவே —8-

கையார் சக்கரத்து என் கரு மாணிக்கமே! என்றென்று
பொய்யே கைம்மை சொல்லிப் புறமே புறமே ஆடி
மெய்யே பெற்றொழிந்தேன் விதி வாய்க்கின்று காப்பார் ஆர்?
ஐயோ! கண்ண பிரான்! அறையோ! இனிப் போனாலே.–5-1-1-

அதுவும் இவளுக்கு உத்தேச்யம் -அது இது உது எல்லாம் அவனது என்றால்

போனாய் மாமருதின் நடுவே! என் பொல்லா மணியே!
தேனே! இன்னமுதே! என்றேன்றே சில கூத்துச் சொல்லத்
தானேல் எம்பெருமான் அவன் என்னாகி ஒழிந்தான்
வானே மாநிலமே மற்றும் முற்றும் என்னுள்ளனவே.–5-1-2-)

————

பாசுரம் -9-திண் பூஞ் சுடர் நுதி நேமி-
துறையடைவு -தலைவன் தலைவியின் நீங்கல்  அருமை கூறுதல் –
பொலிக பொலிக –5-2-

திண் பூஞ்சுடர்  நுதி நேமி யஞ்செல்வர் விண்ணாடனைய
வண்  பூ மணி வல்லி யாரே பிரிபவர் தாம் இவையோ
கண் பூங்கமலம் கருஞ்சுடராடி வெண் முத்தரும்பி
வண் பூங்குவளை மடமான் விழிக்கின்ற மாயிதழே–9-

பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்
நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்று மில்லை
கலியுங் கெடும் கண்டு கொண்மின் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்
மலியப் புகுந்து இசை பாடி ஆடி உழி தரக் கண்டோம்.–5-2-1-

கண்டோம் கண்டோம் கண்டோம் கண்ணுக்கு இனியன கண்டோம்
தொண்டீர் எல்லீரும் வாரீர் தொழுது தொழுது நின்று ஆர்த்தும்
வண்டார் தண்ணம் துழாயான் மாதவன் பூதங்கள் மண் மேல்
பண் தாம் பாடி நின்று ஆடிப் பரந்து திரிகின்றனவே.–5-2-2-

கொன்று உயிர் உண்ணும் விசாதி பகை பசி தீயன எல்லாம்
நின்று இவ் வுலகில் கடிவான் நேமிப் பிரான் தமர் போந்தார்
நன்று இசை பாடியும் துள்ளி ஆடியும் ஞாலம் பரந்தார்
சென்று தொழுதுய்ம்மின் தொண்டீர்! சிந்தையைச் செந்நிறுத்தியே.–5-2-6-

ஆழ்வார் கடாக்ஷத்தால் உலகே வாழும்
வரிசை மாறாமல் இரண்டு பாசுரங்களும் இரண்டு பதிகங்களும் )

————-

பாசுரம் -10-மாயோன் வட திருவேம்கட நாட-
துறையடைவு -தலைவன் தோழியிடம் குறை கூறல் -மதி உடன்படுதல் –
நெடுமாற்கு அடிமை -8-10-

மாயோன் வட திருவேங்கட நாட வல்லிக் கொடிகாள்
நோயோ யுரைக்கிலும் கேட்கின்றிலீர் உரையீர்  நுமது
வாயோ அதுவன்றி வல்வினையேனும் கிளியும் எள்கும்
ஆயோ அடும் தொண்டையோ அறையோ விதறிவரிதே—10-

நெடுமாற்கு அடிமை செய்வன் போல் அவனைக் கருத வஞ்சித்து
தடுமாற்றற்ற தீக் கதிகள் முற்றும் தவிர்ந்த சதிர் நினைந்தால்
கொடுமா வினையேன் அவன் அடியார் அடியே கூடும் இது வல்லால்
விடுமாறு எனபது என்னந்தோ வியன் மூ வுலகு பெறினுமே-8-10-1-

பாகவத பிரபாவம் இரண்டுக்கும் ஸாம்யம்

சயமே அடிமை தலை நின்றார்
கோதில் அடியார் தம்)

———————-

பாசுரம் -11-அறியான யாம் இன்று காண்கின்றன-
துறையடைவு -பிரிவாற்றாத தலைவியின் வேறுபாடு கண்டு தலைவன் உரைத்தல் –
மாலுக்கு வையம் -6-6-

அரியன யாமின்று காண்கின்றன கண்ணன் விண்ணனையாய்
பெரியன காதம் பொருட்கோ பிரிவென ஞாலம் எய்தற்
குரியன வொண் முத்தும் பைம் பொன்னுமேந்தி ஒரோ குடங்கைப்
பெரியன கெண்டைக் குலம் இவையோ வந்து பேர்கின்றவே —11-

மாலுக்கு வையம் அளந்த மணாளற்கு
நீலக் கருநிற மேக நியாயற்கு
கோலச் செந் தாமரைக் கண்ணற்கு என் கொங்கலர்
ஏலக் குழலி இழந்தது சங்கே.–6-6-1-

மங்கை இழந்தது மாமை நிறமே.–6-6-2-

பிறங்கிருங் கூந்தல் இழந்தது பீடே.–6-6-3-

பாடுடை அல்குல் இழந்தது பண்பே.–6-6-4-

கண் புனை கோதை இழந்தது கற்பே.–6-6-5-

விற் புரு வக்கொடி தோற்றது மெய்யே.–6-6-6-

தையல் இழந்தது தன்னுடைச் சாயே.–6-6-7-

வாசக் குழலி இழந்தது மாண்பே.–6-6-8-

பூண்புனை மென்முலை தோற்றது பொற்பே.–6-6-9-

கற்புடை யாட்டி இழந்தது கட்டே.–6-6-10-)

———–

பாசுரம் -12-பேர்கின்றது மணி மாமை –
துறையடைவு-தலைவன் பிரியப் பெற்ற தலைவி தன் ஆற்றாமை கூறி நெஞ்சொடு கலாய்த்தல் –
மாசறு சோதி -5-3-

பேர்கின்றது மணியாமை  பிறங்கி யள்ளல் பயலை
ஊர்கின்றது கங்குலூழிகளே இதெல்லா மினவே
ஈர்க்கின்ற சக்கரத் தெம்பெருமான் கண்ணன் தண்ணம் துழாய்
சார்கின்ற நன்னெஞ்சினார் தந்து போன தனி வளமே—12-

மாசறு சோதி என் செய்ய வாய் மணிக் குன்றத்தை
ஆசறு சீலனை ஆதி மூர்த்தியை நாடியே
பாசற வெய்தி அறிவிழந்து எனை நாளையம்
ஏசறும் ஊரவர் கவ்வை தோழி! என்செய்யுமே?–5-3-1-

என் செய்யும் ஊரவர் கவ்வை? தோழீ! இனி நம்மை
என் செய்யத் தாமரைக் கண்ணன் என்னை நிறை கொண்டான்
முன் செய்ய மாமை இழந்து மேனி மெலி வெய்தி
என் செய்ய வாயும் கருங்கண்ணும் பயப் பூர்ந்தவே.–5-3-2-)

——————–

பாசுரம் -13-தனி வளர் செங்கோல் நடாவு –
துறையடைவு-தலைவி பிரிவு மேலிட இருளுக்கும் வாடைக்கும் இரங்கல் –
மல்லிகை கமழ் தென்றல் -9-9-

தனி வளர் செங்கோல்  நடாவு தழல் வாயரசவிய
பனிவளர் செங்கோல்  இருள் வீற்று இருந்தது பார் முழுதும்
துனி வளர் காதல் துழாயை துழாவு தண் வாடை தடிந்து
இனி வளை காப்பவர் ஆர் எனை வூழிகள் ஈர்வனனே-13-

மல்லிகை கமழ் தென்றல் ஈருமாலோ
வண் குறிஞ்சி இசை தவரும் ஆலோ
செல்கதிர் மாலையும் மயக்கும் ஆலோ
செக்கர் நன் மேகங்கள் சிதைக்கும் ஆலோ
அல்லி அம் தாமரைக் கண்ணன் எம்மான்
ஆயர்கள் ஏறு அரி ஏறு எம் மாயோன்
புல்லிய முலைகளும் தோளும் கொண்டு
புகலிடம் அறிகிலம் தமியம் ஆலோ –9-9-1-மாலைப் பூசல் பதிகம்

புகலிடம் அறிகிலம் தமியம் ஆலோ
புலம்புறு மணி தென்ற லாம்ப லாலோ
பகலடு மாலை வண் சாந்த மாலோ
பஞ்சமம் முல்லை தண் வாடை யாலோ
அகலிடம் படைத்து இடந்து உண்டு உழிந்து அளந்து
எங்கும் அளிக்கின்ற வாயன் மாயோன்
இகலிடத் தசுரர்கள் கூற்றம் வாரான்
இனி இருந்து என்னுயிர் காக்குமாறு என்–9-9-2-

யாமுடை நெஞ்சமும் துணையன்றாலோ
ஆ புகு மாலையும் ஆகின்றாலோ
யாமுடை ஆயன் தன் மனம் கல்லாலோ
அவுனுடைத் தீங்குழல் ஈருமாலோ
யாமுடைத் துணை என்னும் தோழி மாரும்
எம்மின் முன்னவனுக்குமாய் வராலோ
யாமுடை யார் உயிர் காக்குமாறு என்
அவனுடை யருள் பெறும் போதரிதே–9-9-5-)

——————-

பாசுரம் -14-ஈர்வன வேலும் அம் சேலும்-
துறையடைவு -தலைவன் தலைவியின் அழகைப் பாராட்டுதல் -நலம் பாராட்டு –
துவளில் மா மணி மாடம் -6-5-

ஈர்வன வேலும் அஞ்சேலும் உயிர் மேல் மிளிர்ந்து இவையோ
பேர்வனவோ அல்ல தைவ நல்ல வேள் கணை பேரொளியே
சோர்வன நீல சுடர் விடு மேனி அம்மான் விசும்பூர்
தேர்வன தைவம் அந் நீர கண்ணோ இச் செழும் கயலே -14-

துவளில் மா மணி மாடமோங்கு தொலை வில்லி மங்கலம் தொழும்
இவளை நீர் இனி அன்னைமீர்! உமக்காசை இல்லை விடுமினோ;
தவள ஒண் சங்கு சக்கரமென்றும் தாமரைத் தடங்கண் என்றும்
குவளை ஒண் மலர்க் கண்கள் நீர் மல்க நின்று நின்று குமுறுமே.–6-5-1-

குழையும் வாண் முகத் தேழையைத் தொலை வில்லி மங்கலம் கொண்டு புக்கு
இழை கொள் சோதிச் செந்தாமரைக் கண் பிரான் இருந்தமை காட்டினீர்
மழை பெய்தால் ஒக்கும் கண்ண நீரினொடன்று தொட்டுமை யாந்திவள்
நுழையுஞ் சிந்தையள் அன்னைமீர்தொழும் அத்திசை உற்று நோக்கியே.–6-5-5-

திருந்து வேதமும் வேள்வியும் திரு மா மகளிரும் தாம் மலிந்து
இருந்து வாழ் பொருநல் வடகரை வண் தொலை வில்லி மங்கலம்
கருந்தடங் கண்ணி கை தொழுத அந்நாள் தொடங்கி இந்நாள் தொறும்
இருந்திருந்து அரவிந்தலோசந! என்றென்றே நைந்திரங்குமே.–6-5-8-

சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் தேவ பிரானையே
தந்தை தாய் என்றடைந்த வண் குரு கூரவர் சடகோபன்
முந்தை ஆயிரத்துள் இவை தொலை வில்லி மங்கலத்தைச் சொன்ன
செந்தமிழ் பத்தும் வல்லார் அடிமை செய்வார் திருமாலுக்கே.–6-5-11-)

————–

பாசுரம் -15-கயலோ நும் கண்கள் என்று-
துறையடைவு -தோழி தலைவன் எண்ணம் தெரிந்து அவனை நோக்கி உரைத்தல் –
கண்ணன் கழலினை -10-5-

கயலோ நும் கண்கள் என்று களிறு வினவி நிற்றீர்
அயலோர் அறியிலும் ஈது என்ன வார்த்தை கடல் கவர்ந்த
புயலோடு உலாம் கொண்டல் வண்ணன் புன வேங்கடதெம்மாடும்
பயலோ இலீர் கொல்லை காக்கின்ற நாளும் பல பலவே–15-

கண்ணன் கழலிணை-நண்ணும் மனம் உடையீர்
எண்ணும் திருநாமம்-திண்ணம் நாரணமே–10-5-1-

நாரணன் எம்மான் பாரணங்கு ஆளன்
வாரணம் தொலைத்த காரணன் தானே–10-5-2-களிறு இங்கும் உண்டே

எண்ணும் மனமுடையீர் -பெண்ணின் அழகைச் சொல்ல வந்து களிறு வினவி வந்தார் இங்கும் )

————-

பாசுரம் -16-பல பல ஊழிகள் ஆயிடும்-
துறையடைவு -தலைவனைப் பிரிந்த தலைவி தோழியை நோக்கி இருள் வியந்து உரைத்தல் –
பயிலும் சுடர் ஒளி -3-7-

பல பல ஊழி கள் ஆயிடும் அன்றியோர் நாழிகையை
பல பல கூறு இட்ட கூறாயிடும் கண்ணன் விண் அனையாய்
பல பல நாள் அன்பர் கூடிலும் நீங்கிலும் யாம் மெலிதும்
பல பல சூழல் உடைத்து அம்ம வாழி இப்பாய் இருளே–16-

பயிலும் சுடரொளி மூர்த்தியைப் பங்கயக் கண்ணனைப்
பயில இனிய நம் பாற்கடற் சேர்ந்த பரமனைப்
பயிலும் திருவுடையார் எவரேலும் அவர்கண்டீர்
பயிலும் பிறப்பிடை தோறு எம்மைஆளும் பரமரே.–3-7-1-

நாளும் பிறப்பிடை தோறு எம்மை ஆளுடை நாதரே.–3-7-2-

ஓதும் பிறப்பிடைதோறு எம்மை ஆளுடை யார்களே.–3-7-3-

அடி ஆர்ந்த வையம் உண்டு ஆலிலை அன்ன வசஞ்செயும்
படியாதும் இல் குழவிப்படி எந்தை பிரான் தனக்கு
அடியார் அடியார் தம்மடியார் அடியார் தமக்கு
அடியார் அடியார் தம்மடியார் அடியோங்களே.–3-8-10-)

————

பாசுரம் -17-இருள் விரிந்தால் அன்ன –
துறையடைவு-தலைவி கடலை நோக்கித் தேர்க்கால் சுவடுகளை அழிக்காதே என்றல் –
அணைவது அரவணை மேல் -2-8-

இருள் விரிந்தால் அன்ன மா நீர் திரை கொண்டு வாழியரோ
இருள் பிரிந்தார் அன்பர் தேர் வழி தூறல் ,அரவணை மேல்
இருள் விரி நீல கரு நாயிறு சுடர்  கால்வது  போல்
இருள் விரி சோதி பெருமாள் உறையும் எறி கடலே–17-

அணைவது அரவணை மேல் பூம்பாவை யாகம்
புணர்வது இருவரவர் முதலும் தானே
இணைவனாம் எப்பொருட்கும் வீடு முதலாம்
புணைவன் பிறவிக்கடல் நீந்துவார்க்கே –2-8-1-)

————

பாசுரம் -18-கடல் கொண்டு எழுந்தது வானம்-
துறையடைவு -கார் காலம் கண்டு வருந்திய தலைவியைப் பார்த்துத் தோழி இரங்கல் –
சூழ் விசும்பணி முகில் -10-9-

கடல் கொண்டு எழுந்தது வானம் அவ் வானத்தை அன்றி சென்று
கடல் கொண்டு ஒழிந்த அதனால் இது கண்ணன் மண்ணும் விண்ணும்
கடல் கொண்டு எழுத்த அக் காலம் கொலோ புயல் காலம் கொலோ
கடல் கொண்ட கண்ணீர் அருவி செய்யா நிற்கும் காரிகையே –18-

சூழ் விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின
ஆழ்கடல் அலைதிரைக் கை எடுத்து ஆடின
ஏழ் பொழிலும் வளம் ஏந்திய என் அப்பன்
வாழ் புகழ் நாரணன் தமரைக் கண்டு உகந்தே –10-9-1-

————–

பாசுரம் -19-காரிகையார் நிறை காப்பவர் யார் என்று –
துறையடைவு-செவிலி பழிக்கு இரங்குதல் –
பாலனாய் ஏழு உலகு -4-2-

காரிகையார் நிறை காப்பவர் யார் என்று கார் கொண்டு இன்னே
மாரிகை ஏறி  அறை இடும் காலத்தும் வாழியரோ
சாரிகை புள்  ஆர்ந்து அம் தண் துழாய் இறை கூய் அருளார்
சேரிகை ஏறும் பழியாய் விளைந்தது என் சின் மொழிக்கே –19-

(பாலனாய் ஏழு உலகு -4-2-இதன் விவரணம் -பாசுரம் தோறும் திருத்துழாய் பிரஸ்தாபம் உண்டே

பாலன் ஆய், ஏழ் உலகு உண்டு, பரிவு இன்றி
ஆலிலை அன்ன வசம் செயும் அண்ணலார்
தாளிணை மேல் அணி தண் அம் துழாய் என்றே
மாலுமால் வல் வினையேன் மட வல்லியே.–4-2-1-

நல்லடி மேல் அணி நாறு துழாய் என்றே சொல்லுமால் சூழ்வினை யாட்டியேன் பாவையே.–4-2-2-

சேவடி மேல் அணி செம் பொன் துழாய் என்றே கூவுமால் கோள்வினை யாட்டியேன் கோதையே.–4-2-3-

பாதங்கள் மேல் அணி பைம் பொன் துழாய் என்றே ஓதுமால்; ஊழ் வினையேன் தடந் தோளியே.–4-2-4-

தாள் இணை மேல் அணி தண் அம் துழாய் என்றே நாளும் நாள் நைகின்றதால் என்றன் மாதரே.–4-2-5—

பாதங்கள் மேல் அணி பைம்பொன் துழாய் என்றே ஓதுமால் எய்தினள் என்றன் மடந்தையே.–4-2-6-

வடங்கொள் பூந் தண் அம் துழாய் மலர்க்கே இவள் மடங்குமால்; வாணுதலீர்!என் மடக்கொம்பே.–4-2-7-

வம்பு அவிழ் தண் அம் துழாய் மலர்க்கே இவள் நம்புமால்; நான் இதற்கு என் செய்கேன் நங்கைமீர்?–4-2-8-

சங்கு என்னும்; சக்கரம் என்னும்; துழாய் என்னும்; இங்ஙனே சொல்லும் இராப்பகல் என் செய்கேன்?–4-2-9-

என் செய்கேன்? என்னுடைப் பேதை,என் கோமளம்,
என் சொல்லும் என் வசமும் அல்லள்; நங்கைமீர்!
மின்செய் பூண் மார்பினன் கண்ணன் கழல் துழாய்
பொன்செய் பூண் மென்முலைக்கு என்று மெலியுமே.–4-2-10-இங்கு சின்மொழி)

———–

பாசுரம் -20-சின்மொழி நோயோ கழி பெரும் தெய்வம்-
துறையடைவு -வெறி விலக்கு –
தீர்ப்பாரை யாமினி -4-6-

தீர்ப்பாரை யாம் இனி எங்ஙனம் நாடுதும் அன்னைமீர்!
ஓர்ப்பால் இவ் வொண்ணுதல் உற்ற நல் நோய் இது தேறினோம்;
போர்ப்பாகு தான் செய்து அன்று ஐவரை வெல்வித்த மாயப்போர்த்
தேர்ப் பாகனார்க்கு இவள் சிந்தை துழாஅய்த் திசைக்கின்றதே.–4-6-1-

மா முனிகள் சமர்ப்பித்த பாசுரம்
ஸஹி வெறி விளக்கும் துறை
தோழிப்பாசுரம்
வேல நில் என்கிறாள்
சொல்லி ஏத்துமின் என்றதுமே உணர்ந்து
அடுத்த பாசுரம் சூட்டு நன் மாலைகள் -தானான தன்மையில் தனது பாழியான
கிருஷ்ண அவதார சார அனுபவம் )

—————

பாசுரம் -21-சூட்டு நல் மாலைகள் தூயன ஏந்தி –
துறையடைவு-எருதுகளை அடக்கித் திருமணம் செய்யக் கூறுதல் –
வீற்று இருந்து ஏழு உலகம் -4-5-

(த்வராவதி மன்னனை ஏத்துமின் -சொன்னதும் உணர்ந்தாள் அங்கு –
அதே போல் -மாலையைச் சூட்டுமின் என்ற சொல் கேட்டதுமே உணர்ந்தாள் )

சூட்டு நன் மாலைகள் தூயன ஏந்தி வானோர்கள் நன்னீர்
ஆட்டி அம் தூபம் தரா நிற்கவே அங்கு ஓர் மாயையினால்
ஈட்டிய வெண்ணெய் தொடு உண்ண போந்தி மிலேற்றுவன் கூன்
கூட்டிடை ஆடின கூத்து அடல் ஆயர் தம் கொம்பினுக்கே –21-

வீற்றிருந்து ஏழுலகும் தனிக்கோல் செல்ல, வீவு இல் சீர்
ஆற்றல் மிக்கு ஆளும் அம்மானை வெம்மா பிளந்தான்றனைப்
போற்றி என்றே கைகள் ஆரத் தொழுது,சொல் மாலைகள்
ஏற்ற நோற்றேற்கு இனி என்ன குறை எழுமையுமே?–4-5-1-

———–

பாசுரம் -22-கொம்பு ஆர் தழை கை ,சிறு நாண் எறிவிலம் –
துறையடைவு-தோழி தலைவனைக் கேலி செய்தல் –
நல் குரவும் செல்வமும் -6-3-

கொம்பார் தழை கை சிறு நாண் எறிவிலம் வேட்டை கொண்டாடு
அம்பார் களிறு வினவுவது ஐயர் ,புள் ளூரும் கள்வர்
தம் பார் அகத்து என்றும் ஆடாதன தம்மிற் கூடாதன
வம்பார் வினாச் சொல்லவோ எம்மை வைத்தது இவ் வான் புனத்தே –22-

சேராச் சேர்க்கை -வெல்லும் வ்ருத்த விபூதிமான் -பதிகம் இதன் விரிவு )

நல் குரவும் செல்வும் நரகும் சுவர்க்கமுமாய்
வெல் பகையும் நட்பும் விடமும் அமுதமுமாய்ப்
பல் வகையும் பரந்த பெருமான் என்னை ஆள்வானைச்
செல்வம் மல்கு குடித் திரு விண்ணகர்க் கண்டேனே.–6-3-1-

————

பாசுரம் -23-புனமோ புனத்து அயலே –
தலைவன் குறை யுற உரைத்தல்-துறையடைவு –
கடல் ஞாலம் செய்தேனும் -5-6-

புனமோ புனத் தயலே வழி போகும் அரு வினையேன்
மனமோ மகளிர் நும் காவல் சொல்லீர் புண்டரீகத்து அம் கேழ்
வனமோர் அனைய கண்ணான் கண்ணன் வானாடு அமரும் தெய்வத்
தினம் ஓர் அனையீர் களாய், இவையோ நும் இயல்வுகளே –23-

கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும்
கடல் ஞாலம் ஆவேனும் யானே என்னும்
கடல் ஞாலம் கொண்டேனும் யானே என்னும்
கடல் ஞாலம் கீண்டேனும் யானே என்னும்
கடல் ஞாலம் உண்டேனும் யானே என்னும்
கடல் ஞாலத் தீசன் வந்து ஏறக் கொலோ?
கடல் ஞாலத் தீர்க்கிவை என் சொல்லுகேன்?
கடல் ஞாலத்து என்மகள் கற்கின்றவே.–5-6-1-

————

பாசுரம் -24-இயல்வாயின வஞ்ச நோய் கொண்டு -உலாவும்-
துறையடைவு -பிரிவாற்றாத தலைவிக்காகச் செவிலித் தாய் இரங்குதல் –
கரு மாணிக்க மலை -8-9-

இவள் உடைய அதிமாத்ர பிராவண்யத்தை கண்ட திருத் தாயார்
இது என்னைவாய் முடிகிறதோ என்கிறாள்
(கரு மாணிக்க மாலையிலும் அப்படியே தாய் இருந்தாள் அன்றோ )

இயல்வாயின வஞ்சநோய் கொண்டுலாவும் ஒரோ குடங்கைக்
கயல் பாய்வன பெருநீர் கண்கள் தம்மொடும் ,குன்றம் ஒன்றால்
புயல் வாயின நிரை காத்த புள்ளூர்தி கள்ளூரும் துழாய்
கொயல் வாய் மலர் மேல் மனத்தொடு என்னான்கொல் எம் கோல வளைக்கே  –24–

கருமாணிக்க மலை மேல்
மணித் தடந்தாமரைக் காடுகள் போல்
திரு மார்பு வாய் கண் கை
உந்தி காலுடை யாடைகள் செய்ய பிரான்
திருமால் எம்மான் செழு நீர் வயல்
குட்ட நாட்டுத் திருப் புலியூர்
அருமாயன் பேரன்றிப் பேச்சிலள்
அன்னைமீர் இதற்கு என் செய்கேனோ–8-9-1-

————

பாசுரம் -25-எம் கோல் வளை முதலா –
துறையடைவு-தலைவன் மாலைக்குத் தலைவி ஆசைப்படுதல் –
மாயக் கூத்தா வாமனா -8-5-

எம்கோல் வளை முதலா கண்ணன் மண்ணும் விண்ணும் அளிக்கும்
செம்கோல் வளைவு விளைவிக்குமால் திறல் சேர் அமரர்
தம் கோன் உடைய தம் கோன் உம்பர் எல்லா யவர்க்கும் தம் கோன்
நம் கோன் உகக்கும் துழாய் என் செய்யாது இனி நால் நிலத்தே –25-

எங்கே காண்கேன் ஈன் துழாய் அம்மான் தன்னை -மாயக்கூத்தா திருவாய் மொழியிலும் இதே போல் உண்டே )

மாயக் கூத்தா வாமனா
வினையேன் கண்ணா கண் கை கால்
தூய செய்ய மலர்களா
சோதித் செவ்வாய் முகிழதா
சாயல் சாமத் திருமேனி
தண் பாசடையா தாமரை நீள்
வாசத்தடம் போல் வருவானே
ஒரு நாள் காண வாராயே-8-5-1-

————

பாசுரம் -26-நானிலம் வாய்க் கொண்டு நல் நீர்-
துறையடைவு -நகர் காட்டல் –
மாலை நண்ணி -9-10-

நானிலம் வாய் கொண்டு நன்னீர் அற மென்று கோது கொண்ட
வேனிலம் செல்வன் சுவைத் துமிழ் பாலை கடந்த பொன்னே
கானிலம் தோய்ந்து விண்ணோர் தொழும் கண்ணன் வெக்காவுதம்
பூம்தேன் அலம் சோலை  அப்பாலது எப்பாலைக்கும் சேமத்ததே  —-26-

மாலை நண்ணி -திருக்கண்ண புரம் -கண்ணன் வெக்கா -பஞ்ச கிருஷ்ண க்ஷேத்ரம்
காட்டில் வேங்கடம் கண்ணபுர நகர்-நகரம் காட்டுகிறான் -ஏழு மதில்கள் சூழ்ந்த நகரம்
வந்து பாடும் பொழில்-கழனி -அதிலும் உண்டே -)

(கோயில் திருமலை பெருமாள் கோயில் மூன்றுமே திருவிருத்தத்தில் உள்ள திவ்ய தேசங்கள்
திரு வெக்கா -பெருமாள் கோயில் )

மாலை நண்ணித் தொழுது எழுமினோ வினை கெடக்
காலை மாலை கமல மலர் இட்டு நீர்
வேலை மோதும் மதிள் சூழ் திருக் கண்ணபுரத்து
ஆலின்மேல் ஆல் அமர்ந்தான் அடி இணைகளே–9-10-1-

——————

பாசுரம் -27-சேமம் செங்கோன் அருளே-
துறையடைவு -தலைவி மாலை பெற்று மகிழ்தல் –
எல்லியும் காலையும்-8-6-

எல்லியும் காலையும் தன்னை நினைத்து எழ
திருக்கடித்தானமும் என்னுடைச் சிந்தையும் -நாயகி துன்பம் நீங்கிய திருவாய் மொழி அதுவும்
பெரியாருக்கு ஆட் பட்டால் பெறாத பயன் என்ன

எல்லியும் காலையும் தன்னை நினைத்து எழ
நல்ல வருள்கள் நமக்கே தந்தருள் செய்வான்
அல்லி யந்தண்ணந்துழாய் முடி அப்பனூர்
செல்வர்கள் வாழும் திருக்கடித் தானமே–8-6-1-

அற்புதன் நாரணன் அரி வாமனன்
நிற்பது மேவியிருப்பது என்னெஞ்சகம்
நற்புகழ் வேதியர் நான்மறை நின்றதிர்
கற்பகச் சோலைத் திருக் கடித்தானமே-8-6-10-

————-

பாசுரம் -28-தண்  அம் துழாய் வளை கொள்வது-
துறையடைவு -தலைவனைப் பிரிந்த தலைவி வாடைக்கு வருந்துதல் –
கங்குலும் பகலும் -7-2-

தண் அம் துழாய் வளை கொள்வது நாம் இழப்போம் நடுவே
வண்ணம் துழாவி ஓர் வாடை உலாவும் வள் வாய் அலகால்
புள் நந்து உழாமே பொரு நீர் திரு அரங்கா அருளாய்
எண்ணம் துழாவும் இடத்து உளவோ பண்டும் இன்னன்னவே –28-

செங்கயல் பாய் வயல் திருவரங்கா
நாரங்கள் வாழ -அது தாயார் பாசுரம்

கங்குலும் பகலும் கண்துயில் அறியாள்
கண்ண நீர் கைகளால் இறைக்கும்;
‘சங்கு சக்கரங்கள்’ என்று கை கூப்பும்;
‘தாமரைக் கண்’ என்றே தளரும்;
‘எங்ஙனே தரிக்கேன் உன்னை விட்டு!’ என்னும்;
இரு நிலம் கைதுழா இருக்கும்;
செங்கயல்பாய் நீர்த் திருவரங்கத்தாய்!
இவள் திறந்து என் செய்கின்றாயே?–7-2-1-

இங்கும் பொரு நீர் திருவரங்கா –
சங்குகளை ரஷிக்கும் காவேரி இருக்க -நீர் ரஷியாது இருக்கலாமோ
இது போல் முன்பு யாருக்குமே துன்பம் கொடுக்காமல்
கஜேந்திரன் திரௌபதி ப்ரஹ்லாதனன் போல்வார் அளவிலே விரைந்து வந்து ரஷித்தாய்
திருத்துழாய் நலிய நாம் இழப்போம்
நடுவு பிராப்தியே இல்லாத வாடையும் வந்து நலிய வேண்டுமோ
7-1-இந்திரியங்கள் நலிய -பெண் துன்பப்பட பட -தாயார் கேட்டது 7-2
இங்கு 27 -மகிழ்ந்து -இப்பொழுது 28-வியசனம்
நடுவிலே நடந்ததை-ஆச்சார்யர் வியாக்யானம் கொண்டு அறிய வேண்டும்
கீழ் உண்டான மானச அனுசந்தானம் இத்யாதிகள் )

———-

பாசுரம் -29-இன்னன்ன தூது எம்மை ஆள் அற்றப்பட்டு-
துறையடைவு -தலைமகள் அன்னப் பறைவையை வெறுத்து உரைத்தல் –
பொன்னுலகு ஆளீரோ -6-8-

இன்னன்ன தூதெம்மை ஆள் அற்ற பட்டு இரந்தாள் இவள் என்று
அன்னன்ன சொல்லாப் பெடையொடும் போய் வரும் நீலம் உண்ட
மின்னன்ன மேனி பெருமான் உலகில் பெண் தூது செல்லா
அன்னன்ன நீர்மை கொலோ? குடிச் சீர்மையில் அன்னங்களே –29-

முதல் நான்கு தூது பாசுரங்கள்
அன்னமோடு அழுதல் துறை
தூது போகாத அன்னம்
பரத்வ அந்தர்யாமி வ்யூஹ விபவ அர்ச்சை -இவையே தூது நாலுக்கும் விஷயம்
இது பரத்வ த்வயம் பொன்னுலகு ஆளீரோ
இதிலும் ஸ்ரீ வைகுந்தத்துக்கு தூது

பொன்னுல காளீரோ? புவனி முழு தாளீரோ?
நன்னலப் புள்ளினங்காள்! வினையாட்டியேன் நான் இரந்தேன்
முன்னுலகங்களெல்லாம் படைத்த முகில் வண்ணன் கண்ணன்
என்னலங் கொண்ட பிரான் தனக்கு என் நிலைமை உரைத்தே.-6-8-1-

————–

பாசுரம் -30-அன்னம் செல்வீரும் வண்டானம் செல்வீரும் –
துறையடைவு-பிரிந்த தலைவி அண்ணன்களையும் குருகுகளையும் தூது விடுதல் –
அஞ்சிறைய மட நாராய் -1-4-

அஞ்சிறைய மட நாராய்
வண்டானம் -நாரை வகை ஓன்று
தலைவி தூது துறை
தொழுது காயிகம்
இரந்தேன் -வாஸா
மானஸா -உப லக்ஷணம் கொள்ள வேண்டும்
நெஞ்சுக்குத் தூது -அவன் இடம் ஒன்றி உள்ளதே இது –
கண்ணன் வைகுந்தனோடு -ஸுலப்யம் காட்டி அங்கே கூட்டிப் போனானே
நெஞ்சினார் -ஷேப யுக்தி -அவன் கொண்டாடியதாகவுமாம்
அவர் இடம் நீர் செல்லீரோ -இதுவோ தகவு
கூட்டி வந்தால் மறந்து முடியலாம் அன்றோ
இசைமின்கள் பாட்டுப்பாடுமா போல் சொல்லுங்கோள் )

அன்னம் செல்வீரும் வண்டானம் செல்வீரும் தொழுது இரந்தேன்
முன்னம் செல்வீர்கள் மறவேல்மினோ,கண்ணன் வைகுந்தனோடு
என் நெஞ்சினாரைக் கண்டால் என்னைச் சொல்லி அவர் இடை நீர்
இன்னும் செல்லீரோ இதுவோ தகவு என்று இசைமின்களே –30-

அஞ்சிறைய மட நாராய் அளியத்தாய் நீயும் நின்
அஞ்சிறைய சேவலுமாய் யாவா என்று எனக்கு அருளி
வெஞ்சிறைப்புள் உயர்த்தார்க்கு என் விடுதூதாய்ச் சென்றக்கால்
வன் சிறையில் அவன் வைக்கில் வைப்புண்டால் என் செய்யுமோ –1-4-1-

———

பாசுரம் -31-இசைமின்கள் தூது என்று இசைத்தால் இசையிலம் –
துறையடைவு-தூது செல்லாத மேகங்களைக் குறித்துத் தலைவி இரங்குதல் –
எம் கானல் அகம் கழிவாய் -9-7-

இசைமின்கள் தூது தென்று இசைத்தால் இசையிலம் என் தலை மேல்
அசைமின்கள் என்றால் அசையும் கொலாம் அம் பொன் மா மணிகள்
திசைமின் மிளிரும் திரு வேம்கடத்து வன் தாட்சி மயம்
மிசைமின் மிளிரிய போவான் வழிக் கொண்ட மேகங்களே-31-

எம் கானல் அகம் கழிவாய் இரை தேர்ந்து இங்கு இனிது அமரும்
செங்கால மட நாராய் திரு மூழிக் களத்து உறையும்
கொங்கார் பூம் துழாய் முடி எம் குடக் கூத்தர்க்கு என் தூதாய்
நும் கால்கள் என் தலை மேல் கெழுமீரோ நுமரோடே—9-7-1-

—————-

பாசுரம் -32-மேகங்களோ உரையீர் திருமால் திருமேனி –
துறையடைவு-தலைவி போலி கண்டு பேசுதல் –
வைகல் பூம் கழிவாய் -6-1-

திரு வண் வண்டூர் -அங்கு குருகு தூது
மேகம் கண்டால் கண்ணன் என்றே ஏறப் பறக்கும்-பராங்குச நாயகி
ஓ மேகங்களே -தாமரைக் கண்ணாவோ போல் துன்பம் மிகுதியால் கூப்பிடுகிறாள் )

மேகங்களோ உரையீர் திருமால் திருமேனி யொக்கும்
யோகங்கள் உங்களுக்கு எவ்வாறு பெற்றீர் உயிர் அளிப்பான்
மாகங்கள் எல்லாம் திரிந்து நன்னீர்கள் சுமந்து நுந்தம்
ஆகங்கள் நோவ வருத்தும் தவமா மருள் பெற்றதே –32-

வைகல் பூங்கழிவாய் வந்து மேயும் குருகினங்காள்!
செய் கொள் செந்நெல் உயர் திரு வண்வண்டூ ருறையும்
கை கொள் சக்கரத் தென் கனி வாய்ப் பெருமானைக் கண்டு
கைகள் கூப்பிச் சொல்லீர் வினையாட்டியேன் காதன்மையே.–6-1-1-

————

பாசுரம் -33-அருள ஆர் திருச் சக்கரத்தால் அகல் விசும்பும்-
துறையடைவு -தலைவி ஆற்றாமை கண்ட தோழி தலைவனை வெறுத்தல்-
ஏறாளும் இறையோனும் -4-8-

அருளார் திருச் சக்கரத்தால் அகல் விசும்பும் நிலனும்
இருளார் வினை கெடச் செங்கோல் நடாவுதிர் ஈங்கு ஓர் பெண் பால்
பொருளோ எனும் இகழ்வோ? இவற்றின் புறத்தாள் என்று எண்ணோ
தெருளோம் அரவணையீர் ! இவள் மாமை சிதைக்கின்றதே –33

ஏறு ஆளும் இறையோனும், திசை முகனும், திருமகளும்,
கூறு ஆளும் தனி உடம்பன், குலம் குல மா அசுரர்களை
நீறு ஆகும் படியாக நிருமித்து, படை தொட்ட
மாறாளன் கவராத மணிமாமை குறை இலமே.–4-8-1-

மணி மாயன் கவராத மட நெஞ்சால் குறை இலமே.–4-8-2-

நெடு மாயன் கவராத நிறையினால் குறை யிலமே.–4-8-3-

சறையினார் கவராத தளிர் நிறத்தால் குறைவிலமே –4-8-4-

அளி மிக்கான் கவராத அறிவினால் குறையிலமே.–4-8-5-

கிறி அம்மான் கவராத கிளர் ஒளியால் குறையிலமே.–4-8-6-

வளர் ஒளியான் கவராத வரிவளையால் குறையிலமே.–4-8-7-

விரி புகழான் கவராத மேகலையால் குறையிலமே.–4-8-8-

யோகு அணைவான் கவராத உடம்பினாற் குறையிலமே.–4-8-9-

உடம்புடையான் கவராத உயிரினால் குறையிலமே.–4-8-10-

—————-

பாசுரம் 34-சிதைக்கின்றது ஆழி என்று ஆழியைச் சீறி –
துறையடைவு-கூடல் இழைத்து  வருந்தும் தலைவி நிலையை தோழி தலைவனுக்கு உரைத்தல் –
மின்னிடை மடவார்கள் -6-2-

சிதைக்கின்ற தாழி என்று ஆழியை சீறி தன் சீர் அடியால்
உதைக்கின்ற நாயகம் தன்னொடு மாலே உனது தண்டார்
ததைக்கின்ற தண் அம் துழாய் அணிவான் அதுவே மனமாய்
பதைக்கின்ற மாதின் திறத்து அறியேன் செயற் பால் அதுவே -34-

மின்னிடை மடவார்கள் நின்னருள் சூடுவார் முன்பு நான தஞ்சுவன்
மன்னுடை இலங்கை அரண்காய்ந்த மாயவனே!
உன்னுடைய சுண்டாயம் நானறிவன் இனியது கொண்டு செய்வதென்?
என்னுடைய பந்தும் கழலும் தந்து போகு நம்பீ!–6-2-1-

இப்பெண்ணும் கூடலை காலால் உதைத்து -ஆழியைச் சீறி
ஆழி -மண்டல ஆகாரம் -கூடல் என்றபடி –
அங்கு கண்ணன் அருகில் வர போ என்றாள்
பரிகாரம் தேடும் பிராப்தியும் சக்தியும் இல்லையே –
உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் என்னுமவள் தானே
நம்பிள்ளை நிர்வாகத்தில் இரண்டாவது ஆழி கடல் -என்று கொண்டு
கடல் இடத்து கோபித்தாள் என்பர் –

————–

பாசுரம் -35-பால் வாய் பிறைப் பிள்ளை-
துறையடைவு -மாலைக்கு ஆற்றாமையின் மேல் தலைவி வாடைக்கு இரங்குதல் –
வாயும் திரையுகளும் -2-1-

பால் வாய் பிறைப் பிள்ளை ஒக்கலை கொண்டு பகல் இழந்த
மேல் பால் திசை பெண் புலம்புறு மாலை உலகு அளந்த
மால் பால் துழாய்க்கு மனம் உடையார்க்கு  நல்கிற்றை எல்லாம்
சோல்வான் புகுந்து இது வோர் பனி வாடை துழா கின்றதே  –35-

இப்பாசுரத்தில் மட்டும் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவாய் மொழி விவரணம் காட்டி அருளுகிறார்

நானும் புலம்புகிறேன்
நீட்டும் திருமாலால் நெஞ்சம் கோட்பட்டாயே –

வாயும் திரை யுகளில் பிராட்டியைப் போலே வழிப் பகையாய் இருக்கிறது
தன் மகள் துன்பத்தில் ஈடு பட்டு மேற்கு திசை பெண் தன் கணவன் பகல் போனதைக் கண்டு
வருந்துவதைக் கண்டு வருந்துகிறாள் –
இத் தலை-மேற்கு திசைப் பெண்  –வழிப் பகை -காணும் இடம் எங்கும் பகையாக இருகிறதே  –

வாயும் திரையுகளும் கானல் மடநாராய்
ஆயும் அமருலகும் துஞ்சிலும் நீ துஞ்சாயால்
நோயும் பயலைமையும் மீதூர எம்மே போல்
நீயும் திருமாலால் நெஞ்சம் கோட்பட்டாயே –2-1-1-

ஆட்பட்ட வெம்மே போல் நீயும் அரவணையான்
தாட்பட்ட தண் துழாய்த் தாமம் காமுற்றாயே –2-1-2-

தீ முற்றத் தென்னிலங்கை ஊட்டினான் தாள் நயந்த
யாமுற்ற துற்றாயோ வாழி கனை கடலே –2-1-3-

அடல் கொள் படை யாழி அம்மானைக் காண்பான் நீ
உடலம் நோய் உற்றாயோ ஊழி தோர் ஊழியே –2-1-4-

வாழிய வானமே நீயும் மதுசூதன்
பாழிமையில் பட்டவன் கண் பாசத்தாலே நைவாயே –2-1-5-

ஐ வாயரவணை மேல் ஆழிப் பெருமானார்
மெய் வாசகம் கேட்டு உன் மெய்ந்நீர்மை தோற்றாயே –-2-1-6-

வேற்றோர் வகையில் கொடியதாய் எனையூழி
மாற்றாண்மை நிற்றியே வாழி கனையிருளே –2-1-7-

உருளும் சகடம் உதைத்த பெருமானார்
அருளின் பெரு நசையால் ஆழாந்து நொந்தாயே –2-1-8-

செந்தாமரைத் தடங்கண் செங்கனிவாய் எம்பெருமான்
அந்தாமத் தண் துழாய் ஆசையால் வேவாயே –2-1-9-

———–

பாசுரம் -36-துழா நெடும் சூழ் இருள் என்று தம் தண் தார் –
துறையடைவு-தோழி தலைவனின் கொடுமையைக் கூறல் –
ஆடி ஆடி அகம் கரைந்து -2-4-

துழா நெடும் சூழ் இருள் என்று தம் தண் தராது பெயரா
எழா நெடு வூழி எழுந்த விக்காலத்தும் ஈங்கு இவளோ
வழா நெடும் துன்பத்தள் என்று இரங்கார் அம்மனோ இலங்கைக்
குழா நெடு மாடம் இடித்த பிரானார் கொடுமைகளே –36–

ஆடியாடி யகம் கரைந்து இசை
பாடிப்பாடி கண்ணீர் மல்கி எங்கும்
நாடி நாடி நரசிங்கா வென்று
வாடிவாடும் இவ்வாணுதலே –2-4-1-

இரக்க மனத்தோடு எரியணை
அரக்கும் மெழுகும் ஒக்கும் இவள்
இரக்கம் எழீர் இதற்கு என் செய்கேன்
அரக்கன் இலங்கை செற்றீருக்கே –2-4-3–

அரக்கர் இலங்கை செற்றீர் அங்கும் உண்டே

————–

பாசுரம் -37-கொடும் கால் சிலையார் நிறை கோள் உழவர்-
துறையடைவு -நற்றாய் தன் மகள் சென்ற பாலை நிலக் கொடுமையை கூறி இரங்கல் –
மண்ணை யிருந்து  துழாவி -4-4-

கொடும் காற் சிலையர் நிரை  கோள் உழவர்  கொலையில் வெய்ய
கடுங்கா விளைஞர் துடி படுங்கவ் வைத்து அருவினையேன்
நெடும்காலமும் கண்ணன் நீண் மலர் பாதம் பரவிப் பெற்ற
தொடுங்கால்  ஓசியும்   இடை இள மான் சென்ற சூழ் கடமே –37-

மண்ணை இருந்து துழாவி, ‘வாமனன் மண் இது’ என்னும்;
விண்ணைத் தொழுது, அவன் மேவு வைகுந்தம்’ என்று கை காட்டும்;
கண்ணை உண்ணீர் மல்க நின்று, ‘கடல்வண்ணன்’ என்னும்;அன்னே!என்
பெண்ணைப் பெருமயல் செய்தாற்கு என் செய்கேன், பெய் வளையீரே!–4-4-1-

பெய் வளைக் கைகளைக் கூப்பி, ‘பிரான் கிடக்கும் கடல்’ என்னும்;
செய்யது ஓர் ஞாயிற்றைக் காட்டி, ‘சிரீதரன் மூர்த்தி ஈது’ என்னும்;
நையும் கண்ணீர் மல்க நின்று, ‘நாரணன்’ என்னும்; அன்னே!என்
தெய்வ உருவிற் சிறுமான் செய்கின்றது ஒன்று அறியேனே.–4-4-2-

என் இள மான் என்று அங்கும் திருத்தாயார் பாசுரம் )

—————-

பாசுரம்-38-கடம் ஆயினகள் கழித்து தன கால் வன்மையால் –
துறையடைவு-தலைவனைப் பிரிந்த தலைவி போலி கண்டு மகிழ்தல் –
சொன்னால் விரோதம் இது -3-9–

கடமாயினகள் கழித்து தன் கால் வன்மையால் பல நாள்
தடமாயின புக்கு நீர் நிலை நின்ற தவமிது கொல்
குடமாடி யிம் மண்ணும்  விண்ணும் குலுங்க வுலகளந்த
நடமாடிய  பெருமான் உரு ஒத்தன நீலங்களே -38-

சொன்னால் விரோதம் இது, ஆகிலும் சொல்லுவன் கேண்மினோ!
என் நாவில் இன்கவி யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன்
தென்னா தெனா என்று வண்டு முரல் திரு வேங்கடத்து
என் ஆனை என் அப்பன், எம்பெருமான் உளனாகவே.–3-9-1-

கழிய மிக நல்ல வான்கவி கொண்டு புலவீர்காள்!
இழியக் கருதி ஓர் மானிடம் பாடல் என்னாவதே?–3-9-3-

ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் கண்ணன் றனக்கு
ஏற்கும் பெரும் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
ஏற்கும் பெரும் புகழ் ஆயிரத்துள் இவையும் ஓர்பத்து
ஏற்கும் பெரும்புகழ் சொல்ல வல்லார்க்கு இல்லை சன்மமே.–3-9-11-

சொன்னால் விரோதம் -அஸேவ்ய சேவை கூடாது -என்று உபதேசம் –
ஏற்கும் பெரும் புகழ் வானவர் யீசனைப் பாடும் ஏற்கும் புகழ் யுடைய ஆழ்வார் –
நான் வேறே ஒருவருக்கும் என்னாவின் இன் கவி கொடுக்கிலேன்
நா கொடுத்த பயன்
வம்மின் புலவீர் உம் மெய் வருத்தி கை செய்து உய்ம்மினோ –
தேவ பித்ரு ரிஷி -மூன்று ருணங்கள் -கடன் தீர -பாடுங்கோள் )

—————-

பாசுரம்-39-நீலத் தட வரை மேல் பண்டரீக நெடும் –
துறையடைவு-தலைவனின் உருவம் பற்றித் தலைவி கூறுதல் –
ஏழை யாராவி -7-7-

நீல தட வரை மேல் புண்டரீக நெடும் தடங்கள்
போல பொலிந்து எமக்கு எல்லா இடத்தவும் பொங்கு முந்நீர்
ஞாலப் பிரான் விசும்புக்கும் பிரான் மற்றும் நல்லோர் பிரான்
கோலம் கரிய பிரான் எம்பிரான் கண்ணின் கோலங்களே -39-

ஏழையர் ஆவி உண்ணும் இணைக் கூற்றங் கொலோ அறியேன்
ஆழியங் கண்ண பிரான் திருக்கண்கள் கொலோ அறியேன்
சூழவும் தாமரை நாண் மலர் போல் வந்து தோன்றுங் கண்டீர்
தோழியர் காள்!அன்னைமீர்!என் செய்கேன் துயராட்டியேனே.–7-7-1-

எங்கனேயோ அன்னைமீர்காள் -செல்கின்றது என் நெஞ்சமே -அங்கும் உரு வெளிப்பாடு
நெஞ்சம் நிறைந்தன
ஏழையர் ஆவி வுண்ணும் இணைக் குற்றங்களோ அறியேன் ஆழி அம் கண்ணபிரான் திருக் கண்களோ அறியேன்
சூழவும் நாண் மலர் போல் வந்து தோன்றும் -திருமேனி முழுவதுமே திருக்கண்கள் ஆகவே –
தலைமகள் பாசுரம்
உருவ வெளிப்பட்டால் தலைவிக்கு தோழிக்கு கூறுவது

—————-

பாசுரம் -40-கோலப் பகல் களிறு ஓன்று கல் புய்ய குழாம் –
துறையடைவு-இருள் கண்ட தலைவி தோழியிடம் திருமண விருப்பம் கூறுதல் –
மானேய் நோக்கு -5-9-

கோல பகல் களிறு ஓன்று கற்புய்ய குழாம் விரிந்த
நீல கங்குல் களிறு எல்லாம்  நிறைந்தன நேரிழையீர்
ஞால பொன் மாதின் மணாளன் துழாய் நாங்கள் குழல் சூழற்க்கே
ஏலப் புனைந்து என்னைமார் எம்மை நோக்குவது என்று கொலோ -40-

காண்பது எஞ்ஞான்று கொலோ ? வினையேன் கனி வாய் மடவீர் !
பாண் குரல் வண்டினொடு பசும் தென்றலும் ஆகி எங்கும்
சேன் சினை யோங்கு அமரச் செலும் கானல் திரு வல்ல வாழ்
மாண் குரல் கோல பிரான் மலர் தாமரை பாதங்களே –5-9-6

பாதங்கள் மேல் அணி பூத் தொழக் கூடும் கொல் ? பாவை நல்லீர் !
ஓத நெடும் தடத்துள் உயர் தாமரை செம் கழுநீர்
மாதர்கள் வாண் முகமும் கண்ணும் ஏந்தும் திரு வல்ல வாழ்
நாதன் இன் ஞாலம் உண்ட நம்பிரான் தன்னை நாள் தொறுமே–5-9-7

சரணாகதி கூடச் சேர்ந்து அதில்
பாசுரம் தோறும் திருவடி பிரஸ்தாபம் உண்டே அதில்

———–

பாசுரம் -41-என்றும் புன் வாடை இது கண்டு அறிதும் –
துறையடைவு-வாடைக்கு வருந்திய தலைவி வார்த்தை –
நீராய் நிலனாய் -6-9-

என்றும் புன் வாடை இது கண்டு அறிதும் இவ்வாறு வெம்மை
ஒன்றும் உருவும் சுவடும் தெரியிலம் ஓங்கு அசுரர்
பொன்றும் வகை புள்ளை ஊர்வான் அருள் அருளாத இந் நாள்
மன்றில் நிறை பழி தூற்றி நின்று எம்மை வன் காற்று அடுமே–41-

நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடு வானாய்
சீரார் சுடர்கள் இரண்டாய்ச் சிவனாய் அயனானாய்
கூரார் ஆழி வெண் சங் கேந்திக் கொடியேன் பால்
வாராய்! ஒரு நாள் மண்ணும் விண்ணும் மகிழவே.–6-9-1-

நீராகிக் கேட்டவர்கள் நெஞ்சு அழிய மாலுக்கும்
ஏரார் விசும்பில் இருப்பு அரிதா -ஆராத
காதலுடன் கூப்பிட்ட காரி மாறன் சொல்லை
ஒதிடவே யுய்யும் யுலகு—59-

நீராகி கேட்டவர்கள் நெஞ்சு அழிய மாலுக்கும் ஏரார் விசும்பில்
இருப்பு அரிதாம் படி கதறுகிறார் இதில் – )

—————–

பாசுரம் -42-வன் காற்று அறைய ஒருங்கே மறிந்து –
துறையடைவு-தலைவி தலைவன் கண் அழகில் ஈடுபட்டு உரைத்தல் –
பொரு மா நீள் படை -1-10-

வன் காற்றறைய வொருங்கே மறிந்து கிடந்தலர்ந்த
மென் கால் கமலத் தடம் போல் பொலிந்தன மண்ணும் விண்ணும்
என் கால்க்கு அளவின்மை காண்மின் என்பான் ஒத்து வான் நிமிர்ந்த
தன் பால் பணிந்த என் பால் எம்பிரான் தடக் கண்களே -42-

( எம்பிரானை -தந்தை –தண் தாமரைக் கண்ணன் –
அந்த திருவாய் மொழியில் உண்டே

பொருமா நீள் படை ஆழி சங்கத்தொடு
திருமா நீள் கழல் ஏழ் உலகும் தொழ
ஒரு மாணிக் குறளாகி நிமிர்ந்த அக்
கரு மாணிக்கம் என் கண் உளதாகுமே –1-10-1-

எம்பிரானை எந்தை தந்தை தந்தைக்கும்
தம்பிரானைத் தண் தாமரைக் கண்ணனை
கொம்பராவு நுண்ணேரிடை மார்பனை
எம்பிரானைத் தொழாய் மட நெஞ்சமே –1-10-3-

தடம் -தளம் -ளகார டகார பேதம்
பரியனாகி வந்த அவுணன் உடல் கீண்ட அமரர்க்கு
அரிய வாதிப்பிரான் அரங்கத்து அமலன் முகத்துக்
கரிய வாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரி யோடி நீண்ட வப்
பெரிய வாய கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே —-8–

——————

பாசுரம் -43-கண்ணும் செந்தாமரை கையும் அவை அடியோ அவையே-
துறையடைவு -தலைவனின் வடிவ அழகு பற்றித் தலைவி கூறல் –
உயர்வற உயர் நலம் -1-1-

கண்ணும் செம் தாமரை கையும் அவை அடியோ அவையே
வண்ணம் கரியதோர் மால் வரை போன்று மதி விகற்பால்
விண்ணும் கடந்து உம்பர் அப்பால் மிக்கு மற்று எப்பால் யவர்க்கும்
எண்ணும்  இடத்ததுவோ எம்பிரானது எழில் நிறமே -43-

உயர்வற உயர் நலம் உடையவன் எவன் அவன்
மயர்வற மதி நலம் அருளினன் எவன் அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே –1-1-1-

அவனாலே மயர்வற மதி நலம் அருளப் பெற்ற
துயர் அறு சுடர் அடி -விளக்கும் பாசுரம் இது
கீழே கண் அழகை அனுபவித்து
அதுவே அவயாந்தரங்களில் சென்று மூட்ட
காட்டவே கண்ட பாதம் போல்
கண்ணையும் சேர்த்து அனுபவிக்கிறார் இதில் –
மற்ற அவயங்கள் யுடன் சேர்த்து கண்ணை அனுபவிக்கிறார்

————

பாசுரம் -44-நிறம் உயர் கோலமும் பெரும் உருவும்-
துறையடைவு -தலைவி தலைவன் பெருமை கூறுதல் –
பத்துடை அடியவர் -1-3-

நிறமுயர் கோலமும் பேருமுருவமும் இவை இவை என்று
அறமுயல் ஞானச் சமயிகள் பேசிலும் அங்கு  அங்கு எல்லாம்
உறவுயர் ஞானச் சுடர் விளக்காய் நின்றதன்றி யொன்றும்
பெற முயன்றார் இல்லையால் எம்பிரான் பெருமையே -44-

கீழே திரு நிறம்
இதில் அவன் வைபவம் பெருமை
பத்துடை அடியவர்க்கு எளியவன் -மற்றவர்க்கு அறிய வித்தகன் அன்றோ
அத்வேஷம் ஆரம்ப நிலையே போதும்
முயற்சியால் அடைய முடியாது இதில் -இதுவே அறிய வித்தகன்
எழில் உரு பேசும் பாசுரம் கீழ் -ரூபம்
இது ஸ்வரூபம் -வைபவம் பேசும் –
குண உப ஸம்ஹார பாதம்
32-ப்ரஹ்ம வித்யை
இன்ன குணம் இனைய குணம் த்யானம்
எல்லா குணங்களும் இருந்தாலும் ஓன்றைப்பிடித்து தியானிக்க -அத்தையும் முழுக்க அறிய முடியாதே –
தஹர வித்யை உபாசகர்
ஸத் வித்யை உபாசகர்
இவர்கள் ஞானச் சமயிகள் -முனி பேர் -குணம் -இவை இவை என்று பேசினாலும்
அற -முழுவதுமாக அனுபவிக்க முடியாதே
ஞானத்துக்கு மட்டும் விஷயம்
அனுபவம் அவன் கொடுத்தால் தானே உண்டு )

பத்துடை யடியவர்க்கு எளியவன் பிறர்களுக்கு அரிய
வித்தகன் மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள்
மத்துறு கடை வெண்ணெய் களவினில் உரவிடை யாப்புண்டு
எத்திறம் உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவே –1-3-1-

———————-

பாசுரம் -45-பெரும் கேழலார் தம் பெரும் கண் மலர்ப்–
துறையடைவு-தலைவி தலைவன் நீரில் உதவியதை நினைந்து உரைத்தல் –
ஊனில் வாழ் உயிரே -2-3-

பெரும் கேழலார்  தம் பெரும் கண் மலர் புண்டரீகம் நம் மேல்
ஒருங்கே பிறழவைத்தார் இவ்வகாலம் ஒருவர் நம் போல்
வரும் கேழ்பவருளரே தொல்லை யாழி யஞ்சூழ் பிறப்பும்
மறுங்கே வரப் பெறுமே சொல்லு வாழி மட நெஞ்சமே -45-

ஊனில் வாழ் உயிரே நல்லை போ உன்னைப் பெற்று
வானுளார் பெருமான் மதுசூதன் என்னம்மான்
தானும் யானும் எல்லாம் தன்னுள்ளே கலந்து ஒழிந்தோம்
தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஒத்தே –1-3-1-

ஒத்தார் மிக்காரை இலையாய மா மாயா
ஒத்தாய் எப்பொருட்கும் உயிராய் -என்னைப் பெற்ற
அத்தாயாய் தந்தையாய் அறியாதன அறிவித்த
அத்தா நீ செய்தன அடியேன் அறியேனே —2-3-2-

அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து
அறியா மா மாயத்து அடியேனை வைத்தாயேல்
அறியாமைக் குறளாய் நிலம் மாவலி மூவடி என்று
அறியாமை வஞ்சித்தாய் எனதாவி உள் கலந்தே –2-3-3-

குறிக்கோள் ஞானங்களால் எனை யூழி செய் தவமும்
கிறிக் கொண்டு இப்பிறப்பே சில நாளில் எய்தினன் யான்
உறிக் கொண்ட வெண்ணெய் பால் ஒளித்து உண்ணும் அம்மான் பின்
நெறிக் கொண்ட நெஞ்சனாய்ப் பிறவித் துயர் கடிந்தே –2-3-8-

களிப்பும் கவர்வும் அற்றுப் பிறப்புப் பிணி மூப்பு இறப்பு அற்று
ஒளிக்கொண்ட சோதியமாய் உடன் கூடுவது என்று கொலோ
துளிக்கின்ற வான் இந்நிலம் சுடராழி சங்கேந்தி
அளிக்கின்ற மாயப்பிரான் அடியார்கள் குழாங்களையே 2-3-10-

எல்லாம் தன்னுள்ளே கலந்து ஒழிந்தோம்
நான் என்ற தத்வம் இல்லாதது போல்
ஐக்யா பத்தி அல்லவே –
கூடிற்றாகில் நல் உறைப்பு –
எல்லாம் தன்னுள்ளே -அப்ருதக் ஸித்த விசேஷணம் )

————–

பாசுரம் -46-மட நெஞ்சம் என்றும் தமது என்றும் –
துறையடைவு-நெஞ்சைத் தூது விட்ட தலைவி இரங்குதல் –
அருள் பெறுவார் அடியார் -10-6-

மட நெஞ்சம் என்றும் தமது என்றும் ஓர் கருமம்  கருதி
விட நெஞ்சை உற்றார் விடவோ அமையும் அப் பொன் பெயரோன்
தட நெஞ்சம் கீண்ட பிரானார் தமது அடிக் கீழ் விடப் போய்
திட நெஞ்சமாய் எம்மை நீத்து இன்று தாறும் திரிகின்றதே -46-

அருள் பெறுவார் அடியார் தன் அடியனேற்கு ஆழியான்
அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே
இருள் தரும் மா ஞாலத்துள் இனிப் பிறவி யான் வேண்டேன்
மருள் ஒழி நீ மட நெஞ்சே வாட்டாற்றான் அடி வணங்கே–10-6-1-

நெஞ்சே மருள் ஒழி என்பார் அதிலே
திருவாறன் விளைக்காக்கவோ பரமபதத்துக்கோ –
உடையவன் கூப்பிட திவ்ய தேச ப்ராவண்யத்தில் மயங்கி போகாமல் இருக்காதே -அங்கு )

—————

பாசுரம் -47-திரிகின்றது வட மாருதம் திங்கள் வெம் தீ-
துறையடைவு -பிரிவாற்றாது வருந்தும் தலைவி நிலை கண்டு செவிலி இரங்குதல் –
நாங்கள் வரி வளை -8-2-

திரிகின்றது வடமாருதம் திங்கள் வெந்தீ முகத்து
சொரிகின்றது அதுவுமது ,கண்ணன் விண்ணூர் தொழவே
சரிகின்றது சங்கம் தண்ணம் துழாய்க்கு  வண்ணம் பயலை
விரிகின்றது முழு மெய்யும் என்னாம் கொல் என் மெல்லியற்கே –47–

நங்கள் வரிவளை யாயங் காளோ. நம்முடை ஏதலர் முன்பு நாணி,
நுங்கட் கியானொன்று ரைக்கும் மாற்றம் நோக்குகின் றேனெங்கும் காண மாட்டேன்,
சங்கம் சரிந்தன சாயி ழந்தேன் தடமுலை பொன்னிற மாய்த்த ளர்ந்தேன்,
வெங்கண் பறவையின் பாக னெங்கோன் வேங்கட வாணணை வேண்டிச் சென்றே-8-2-1-

வளையல் களைந்து போல்
சங்கம் சரிந்தன சாய் இழந்தேன் தடமுலை பொன்னிற மாய்த் தளர்ந்தேன்,
வேங்கட வாணனை வேண்டிச் சென்று
அதே போல் இங்கும் உள்ளதே-

————

பாசுரம் -48-மெல்லியல் ஆக்கிக் கிருமி -நன்னிமித்தம் கண்டு –
துறையடைவு-பல்லிக்குரல் கேட்டதை -தான் ஆறி இருத்தலை தலைவி தோழிக்கு கூறுதல் –
என்றைக்கும் என்னை -7-9-

மெல்லியல் ஆக்கைக் கிரிமி குருவில் மிளிர் தந்தாங்கே
செல்லியசெல் கைத்துலகை என் காணும் என்னாலும் தன்னைச்
சொல்லிய சூழல் திருமாலவன் கவியாது கற்றேன்
பல்லியின் சொல்லும் சொல்லாக் கொள்வதோ வுண்டு பண்டு பண்டே-48 –

என்றைக்கும் என்னையுய் யக்கொண்டு போகிய,
அன்றைக்கன் றென்னைத்தன் னாக்கியென் னால்தன்னை,
இன்றமிழ் பாடிய ஈசனை யாதியாய்
நின்றவென் சோதியை, எஞ்சொல்லி நிற்பனோ? -7-9-1-

தன்னைச் சொல்லிய-வேதமே மீண்ட விஷயத்தை -ப்ரதிபாதித்துக் கொண்டானே -திருமாலவன் கவி-
கிருமி போல் பிறந்து பல்லிக்குட்டிப் போல் பேசினாலும் உலகமே கொண்டாடும் படி ஆக்கி அருளினான்
அங்கே போயும் ஏதத் சாம கானம் பாடுவது போல் அன்றோ இங்கும் திவ்ய பிரபந்தம் பாடவே வைக்குதும்
கர்ம சம்பந்தம் இல்லையே உமக்கு
பிரபந்தம் தலைக்கட்ட -நச்சு பொய்கை ஆகாமைக்காக -ஆர்த்தி பெருக்க அன்றோ வைத்தான்
மகிழ்ச்சியில் பாடும் பாசுரம் இது )

—————-

பாசுரம் -49-பண்டும் பல பல வீங்கு இருள் காண்டும் –
துறையடைவு-தலைவி இருளுக்கு ஆற்றாது தோழியிடம் பேசல் –
ஊரெல்லாம் துஞ்சி -5-4-

பண்டும் பல பல வீங்கிருள் காண்டும் இப்பாயிருள் போல்
கண்டும் அறிவதும் கேட்பதும் யாமிலம் காள வண்ண
வண்டுந்துழாய் பெருமான் மதுசூதனன் தாமோதரன்
உண்டும் உமிழ்ந்தும் கடாய  மண்ணேர் அன்ன  ஒண்ணுதலே -49 –

ஊரெல்லாம் துஞ்சி-5-4- -ஆவி காப்பார் இனி யார் -இரவு வியசனம் இதுக்கு
மடலூர்த ஒருமிக்க இரவு வந்ததால் -ஓர் நீள் இரவு போல் இங்கு பாய் இருள் –
சங்கீதம் கூட்டி அங்கு இதே
இருளுக்கு ஆற்றாமைக்கு சொல்லிக் கொள்ளும் துறை )

ஊரெல்லாம் துஞ்சி உல கெல்லாம் நள்ளிருளாய்
நீரெல்லாம் தேறி ஓர் நீளிரவாய் நீண்டதால்
பாரெல்லாம் உண்ட நம் பாம்பணையான் வாரானால்
ஆர்?எல்லே! வல் வினையேன் ஆவி காப்பார் இனியே.–5-4-1-

—————

பாசுரம் -50-ஒள் நுதல் மாமை ஒளி பயவாமை –
துறையடைவு-தலைவன் மீண்டு வருகையில் தேர்பாகனிடம் கூறல் –
கிளரொளி இளைமை -2-10-

ஒண்ணுதல் மாமை ஒளி பயவாமை விரைந்து நன் தேர்
நண்ணுதல் வேண்டும் வலவ  கடா கின்று தேன் நவின்ற
விண் முதல் நாயகன் நீண் முடி வெண் முத்த வாசிகைத்தாய்
மண் முதல் சேர்வுற்று அருவி செய்யா நிற்கும் மா மலைக்கே – 50-

கிளர் ஒளி இளமை கெடுவதன் முன்னம் செல்ல அங்கே உபதேசம் -இதன் விவரணம் அது
அங்கு செல்வதே கர்தவ்யம் -மலையே புகுவது பொருளே –

கிளர் ஒளி இளமை கெடுவதன் முன்னம்
வளர் ஒளி மாயோன் மருவிய கோயில்
வளர் இளம் பொழில் சூழ் மாலிரும் சோலை
தளர்விலராகில் சார்வது சதிரே –-2-10-1-

——————

பாசுரம் -51-மலை கொண்டு மத்தா அரவால் சுழற்றிய-
துறையடைவு -கடலோசைக்கு ஆற்றாத தலைவி இரங்கல் –
நண்ணாதார் முறுவலிப்ப -4-9-

மலை கொண்டு மத்தா வரவாற் சுழற்றிய மாயப் பிரான்
அலை  கண்டு கொண்ட வமுதம் கொள்ளாது கடல் பரதர்
விலை கொண்டு தந்த சங்கமிவை வேரித் துழாய் துணையாத்
துலை கொண்டு தாயம் கிளர்ந்து கொள்வான் ஒத்து அழைக்கின்றதே -51 –

கண்ணாளா கடல் கடைந்தாய் அதிலும் உண்டே
அங்கும்-நண்ணாதார் முறுவலிப்ப-நல்லஉற்றார் கரைந்து என்க -உலகு இயற்கை- தாய முறை பற்றி –
தலைத்தலைப்பெய்து -வந்து வந்து அழுது -அலைக்கரங்கள் போல் –
ஸம்ஸார சாஹர கோலாஹலம் ஆற்றாமை அதில் -)

நண்ணாதார் முறுவலிப்ப, நல்லுற்றார் கரைந்துஏங்க,
எண்ணாராத் துயர்விளைக்கும் இவைஎன்ன உலகியற்கை?
கண்ணாளா! கடல்கடைந்தாய்! உனகழற்கே வரும்பரிசு,
தண்ணாவாது அடியேனைப் பணிகண்டாய் சாமாறே.–4-9-1-

—————

பாசுரம் -52–அழைக்கும் கரும் கடல் வெண் திரைக்கே –
துறையடைவு-கால மயக்கு –
அந்தாமத் தன்பு -2-5-

அழைக்கும் கரும் கடல் வெண் திரைக்கே கொண்டு போய் அலர்வாய்
மழைக் கண் மடந்தை யரவணை ஏற மண் மாதர் விண் வாய்
அழைத்து புலம்பி முலை மலை மேல் நின்றும் ஆறுகளாய்
மழைக் கண்ண நீர் திருமால் கொடியான் என்று வார்கின்றதே – 52-

அந்தாமத் தன்பு செய்து என்னாவி சேர் அம்மானுக்கு
அந்தாம வாழ் முடி சங்கு ஆழி நூல் ஆரமுள
செந்தாமரைத் தடங்கண் செங்கனி வாய் செங்கமலம்
செந்தாமரை யடிக்கள் செம் பொன் திருவுடம்பே –2-5-1-

அங்கு உள்ளார் இடம் செய்த அன்பை ஆழ்வார் மேல் வைக்க –

இது காறும் இல்லாமல் இருக்க இப்பொழுது சேர்ந்த பின்பே பூர்ணன் ஆனான்

கலந்த பின்பே அனைத்தும் –திவ்ய ஆபரணங்கள் -திவ்ய ஆயுதங்கள் –உள

ஏற்கனவே இருந்தும் இல்லாததும் சமம் முன்பு – -இப்பொழுது தான் உளவானவை ஆனதே

—————-

பாசுரம் 53-வார் ஆயின முலையாள் இவள்-
துறையடைவு-கட்டுவிச்சி கூறுதல்-
வைகுந்தா மணி வண்ணனே -2-6-

வாராயின முலையாள் இவள் வானோர் தலைமகனாம்
சீராயின தெய்வ நல் நல் நோயிது தெய்வத் தண் அம் துழாய்
தாராயினும் தழை யாயினும் தண் கொம்பதாயினும்   கீழ்
வேராயினும் நின்ற மண்ணாயினும் கொண்டு வீசுமினே -53 –

கீழ்ப் பாசுரம் 2-5-
இப்படி அமைவது அத்புதம்
உன்னை நான் பிடித்தேன் கொல் சிக்கனவே
தாமரைக்கண்ணனை –துழாய் கண்ணி -அடிக்கடி திருத்துழாய் பிரசங்கம் அதிலும் உண்டே
செவிலித்தாய் கட்டு விச்சி நோய்க்குக் காரணம் சொல்லும் பாசுரம்
கீழ் தீர்ப்பாரை வெறி விலக்குதல் பார்த்தோம் ஒரு பாசுரத்தில் முன்பே
அர்த்த பஞ்சகம் -பஞ்ச பிரகாரம் போல்
பூம் கொத்து -தொடங்கி ஐந்தும் -இங்கு )

வைகுந்தா மணி வண்ணனே என் பொல்லாத் திருக் குறளா என்னுள் மன்னி
வைகல் வைகல் தோறும் அமுதாய வானேறே
செய்குந்தா வரும் தீமை உன் அடியார்க்குத் தீர்த்து அசுரர்க்குத் தீமைகள்
செய்குந்தா உன்னை நான் பிடித்தேன் கொல் சிக்கனவே –2-6-1-

————-

பாசுரம்-54-வீசும் சிறகால் பறத்தீர் –
துறையடைவு-வண்டு விடு தூது –
கேசவன் தமர் -2-7-

வீசும் சிறகால் பறத்தீர் விண்ணாடு நுங்கட்கு எளிது
பேசும்படி யன்ன பேசியும் போவது நெய் தொடு வுண்
டேசும்படி யன்ன செய்யும் எம்மீசர் விண்ணோர் பிரானார்
மாசின் மலரடிக் கீழ் -எம்மை சேர்விக்கும் வண்டுகளே -54 –

கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழு பிறப்பும்
மாசரிது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்ற வா
ஈசன் என் கரு மாணிக்கம் என் செங்கோலக் கண்ணன் விண்ணோர்
நாயகன் எம்பிரான் எம்மான் நாராயணனாலே–2-7-1-

மூன்றாம் பதிகம் வரிசையாக இங்கும் -2-7-
கேசவன் தமர் இதன் விவரணம்
மா சதிர்
விளிம்பு -சாதனாந்தரம் மூலம் பேறு
சதிர் -அவனே உபாயம் என்று பிரபத்தி மூலம் பேறு
மா சதிர் -ஆச்சார்ய அபிமானம் -பிராட்டியாலே பேறு
ஆழ்வார் ஸம்பந்தத்தால் நம்மளவும் பேறு

தத் ப்ரஹ்ம கிசோர பாவம் -மதுரா பாக்யம் –
விராஜா பெண்கள் கண்ணடி பட அன்றோ அவதாரம்
விண்ணோர் பெருமான் -திருடி உண்ணவே அவதாரம் )

———–

பாசுரம் -55-வண்டுகளோ வம்மின் நீர்ப் பூ நிலப் பூ மரத்தில் ஒண் பூ –
துறையடைவு-நலம் பாராட்டுதல்-
சார்வே தவ நெறி -10-4-

வண்டுகளோ வம்மின் நீர்ப் பூ நிலப் பூ மரத்தில் ஒண் பூ
உண்டு களித் துழல் வீர்க்கு ஓன்று உரைக்கியம் ஏனம் ஒன்றாய்
மண்டுகளாடி வைகுந்த மன்னாள் குழல்வாய் விரை போல்
விண்டுகள் வாரும் மலருளவோ நும்வியலிடத்தே–55-

சார்வே தவ நெறிக்குத் தாமோதரன் தாள்கள்
கார்மேக வண்ணன் கமல நயனத்தன்
நீர் வானம் மண் எரி காலாய் நின்ற நேமியான்
பேர் வானவர்கள் பிதற்றும் பெருமையனே–10-4-1-

———–

பாசுரம் -56-வியலிடம் உண்ட பிரானார் விடுத்த-
துறையடைவு -தலைவன் இரவில் கலந்ததைத் தோழியிடம் தலைவி கூறுதல் –
கண்கள் சிவந்து -8-8-

வியலிடம் உண்ட பிரானார் விடுத்த திரு அருளால்
உயலிடம் பெற்று உய்ந்தும் அஞ்சலம் தோழி ஓர் தண் தென்றல் வந்து
அயலிடை யாரும் அறிந்திலர் அம் பூம் துழாயின் இன் தேன்
புயலுடை நீர்மையினால் தடவிற்று என் புலன் கலனே -56 –

ரஹஸ்யத்தில் உரைக்கும் துறை -இரவிடைக் கலந்தமை
தென் மேற்கு காற்று தென்றல் வந்து -அயல் இடம் யாரும் அறியாமல்
திருத்துழாய் தரித்து -வர -தென்றல் வீச -இனிமை இவள் இடம் விடுத்துப் போனதே
வந்து கலந்தார் நேராகச் சொல்ல வில்லை –
தோழிக்கு மட்டும் தெரியும்படி குறிப்பால் -சொல்கிறாள் சங்கேத மொழி –

அதே போல்
கண்கள் சிவந்து -8-8-இதன் விவரணம்

கண்கள் சிவந்து பெரியவாய் வாயும் சிவந்து கனிந்து -உள்ளே
வெண் பலிலகு சுடரிலகு விலகு மகர குண்டலத்தன்
கொண்டல் வண்ணன் சுடர் முடியன் நான்கு தோளன் குனி சாரங்கன்
ஒண் சங்கதை வாள் ஆழியான் ஒருவன் அடியேன் உள்ளானே–8-8-1-

கலந்தபடியால் கண்கள் சிவந்து
பெரியவாய் வாயும் சிவந்து -கனிந்து உள்ளே வெண் பல் இலகு -சுடர் –மகர குண்டலத்தன் –
மாறுதல் மட்டும் சொல்லி கலந்தமை அங்கும் உண்டே
இதில் அவன் கலந்ததால் ஆழ்வாருக்கு வந்த மாற்றம்

உணர்விலும் உம்பர் ஒருவனை அவனது அருளால் உறல் பொருட்டு என்
உணர்வினுள்ளே யிருத்தினேன் அதுவுமவன தின்னருளே
உணர்வும் உயிரும் உடம்பும் மற்று உலப்பினவும் பழுதேயாம்
உணர்வைப் பெற ஊர்ந்திறவேறி யானும் தானாய் ஒழிந்தானே–8-8-3-

என் உணர்வில் உள்ளே இருத்தினேன் அதுவும் அவனது இன்னருளே
இங்கு விடுத்த திருவருளால் உய்ந்தோம் )

————-

பாசுரம் -57-புலக் குண்டலப் புண்டரீகத்த போர்க் கெண்டை –
துறையடைவு-தலைவன் தோழனிடம் எதிர்வார்த்தை பேசுதல் –
முடியானே மூவுலகும் -3-8-

புலக் குண்டலப் புண்டரீகத்த போர்க் கெண்டை வல்லி யொன்றால்
விலக்குண்டுலாகின்று வேல் விழிக்கின்றன கண்ணன் கையால்
மலக்குண்டமுதம் சுரந்த மறி கடல் போன்றவற்றால்
கலக்குண்ட நான்று கண்டார் எம்மை யாரும் கழறலரே  – -57-

முடியானே- -இதன் விவரணம்
ஆழ் கடலைக் கடைந்தாய் அங்கும் உண்டு
ஒவ்வொன்றின் அவயவமும் தனது வியாபாரத்துடன் நிற்காமல் மற்ற அவயவங்கள் செயலை விரும்பும் -பதிகம்
கட் செவி சஷுஸ் ஸ்ரவ -ஆதி சேஷனுக்கு கொடுத்த வைபவம் தனக்கும் வேண்டும் என்று பிரார்த்தனை

முடியானேஎ! மூவுலகும் தொழுது ஏத்தும்சீர் அடியானேஎ! ஆழ்கடலைக் கடைந்தாய்! புள்ளூர்
கொடியானேஎ! கொண்டல்வண்ணா! அண்டத்து உம்பரில் நெடியானேஎ! என்று கிடக்கும் என் நெஞ்சமே.–3-8-1-

முடியாத வாசை மிக முற்று கரணங்கள்
அடியார் தம்மை விட்டவன் பால் -படியா ஓன்று
ஒன்றின் செயல் விரும்ப உள்ளது எல்லாம் தான் விரும்ப
துன்னியதே மாறன் தன் சொல்—————–28-

—————

பாசுரம் -58-கழல் தலம் ஒன்றே நிலம் முழுது ஆயிற்று –
துறையடைவு-தோழி தலைவன் பெருமையை கூறி தலைவியை ஆற்றுதல் –
திண்ணன் வீடு -2-2-

கழல் தலம் ஒன்றே நில முழு தாயிற்று ஒரு கழல் போய்
நிழல் தர எல்லா விசும்பும் நிறைந்தது நீண்ட வண்டத்து
உழறலர் ஞான சுடர் விளக்காய் உயர்ந்தோரை இல்லா
அழறலர் தாமரைக் கண்ணன் என்னோ விங்களக்கின்றதே – 58-

உயர் திண் அணை ஓன்று -நான்கும் பர ஸ்வரூபம் சொல்லும் பதிகங்கள்
உயர் -பரத்வே பரத்வம்
திண் -விபவ பரத்வம்
ஒன்றும் -அர்ச்சையில் பரத்வம்
இங்கும் அளந்த பெருமையை உரைத்து தோழி ஆற்றாமையை சமிப்பிக்கிறாள்
ஒரு திருவடியே பூமி எங்கும் வியாபித்ததே -கழல் -தலம் –
மற்ற ஓன்று போய் வளர்ந்து நிழலைக் கொடுக்க ஆகாசம் எங்கும் பூர்ணமாக வியாபித்ததே
அண்டம் எங்கும் சஞ்சரிக்கும் ஞானச் சுடர் விளக்கு -பெருமாளுக்கு -நந்தா விளக்கே அளத்தற்கு அரியாய் –
பின்னானார் வணங்கும் சோதி
திருமூழிக் களத்து விளக்கு
தன்னையும் காட்டி மற்ற அனைத்தையும் காட்டும்
மிகுநர் இல்லாத- ஒப்பார் மிக்கார் இலையா மா மாயன்
சம அப் யதிக ராஹித்யம்
தாமரைக் கண்ணன் –
எத்தை அளக்க வந்தான் -பக்தர் திரு உள்ளத்தையா லோகங்களையா )

திண்ணன் வீடு முதல் முழுதுமாய்
எண்ணின் மீதியன் எம்பெருமான்
மண்ணும் விண்ணும் எல்லாம் உடன் உண்ட நம்
கண்ணன் கண் அல்லது இல்லையோர் கண்ணே –2-2-1-

தகும் சீர்த் தனி முதலினுள்ளே
மிகும் தேவும் எப்பொருளும் படைக்க
தகும் கோலத் தாமரைக் கண்ணன் எம்மான்
மிகும் சோதி மேலறிவார் யவரே –2-2-5-

திண்ணிதா மாறன் திருமால் பரத்துவத்தை
நண்ணி யவதாரத்தே நன்குரைத்த -வண்ணம் அறிந்து
அற்றார்கள் யாவரவர் அடிக்கே ஆங்கு அவர் பால்
உற்றாரை மேலிடா தூன் —திருவாய் மொழி நூற்றந்தாதி -பாசுரம் 12-

———–

பாசுரம் -59-அளப்பரும் தன்மை அவ் ஊழி அம் கங்குல்-
துறையடைவு -இரவு நீடுதற்கு ஆற்றாத தலைவியைப் பற்றிச் செவிலி இரங்குதல் –
முந்நீர் ஞாலம் -3-2-

அளப்பரும் தன்மைய ஊழி யங்கங்குல் அந் தண் அம் துழாய்க்கு
உளப் பெரும் காதலின் நீளிய வாயுள ஓங்கு முந்நீர்
வளப் பெரு நாடன்   மது சூதன் என்னும் வல்வினையேன்
தளப் பெரு நீள் முறுவல் செய்ய வாய தட முலையே -59 –

ஓங்கு முந்நீர் வளப்பெறும் நாடன் -மது ஸூதனன் -இங்கும் முந்நீர் பத பிரயோகம்
முந்நீர் ஞாலம் படைத்த என் முகில் வண்ணனே – -திருவாய் மொழி இதன் விவரணம்
எந்நாள் நான் இனி வந்து கூடுவேன்
பாவியேன் அலமருகின்றேன் -இங்கு வல் வினையேன்
அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்கின்றேன் -அதனால் நீண்ட இரவு -இங்கு )

முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணனே
அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்வேன்
வெந்நாள் நோய் வீய வினைகளை வேர் அறப் பாய்ந்து
எந்நாள் யான் உன்னை இனி வந்து கூடுவேன் –3-2-1-

நின் மா தாள் சேர்ந்து நிற்பது எஞ்ஞான்று கொலோ –3-2-2–

முன்னம் அழகர் எழில் மூழ்கும் குருகையர் கோன்
இன்ன வளவென்ன எனக்கு அரிதாய்த் -தென்ன
கரணக் குறையின் கலக்கத்தை கண்ணன்
ஒருமைப் படுத்தான் ஒழித்து——22-

—————

பாசுரம் -60-முலையோ முழு முற்றும் போந்தில –
துறையடைவு-தலைவியின் இளமைக்குச் செவிலி இரங்குதல் –
அறுக்கும் வினையாயின -9-8-

முலையோ முழு முற்றும் போந்தில மொய் பூம் குழல் குறிய
கலையோ அரையில்லை நாவோ குழறும் கடல் மண்ணெல்லாம்
விலையோ வென மிளிரும் கண் இவள் பரமே பெருமான்
மலையோ திருவேம்கடம் என்று கற்கின்ற வாசகமே – 60-

ஆகத்து அவனை நிறுத்தும் மனம் -ஆகத்து வினையை அறுப்பானே
ஓ -என்று கிட்டுமோ -அங்கும் உண்டே
இங்கு திருவேங்கடம் கிட்டுமோ
இங்கு–ஐந்து ஓங்காரங்கள்
முலையோ என்னில்
கலையோ என்னில்
நாவோ என்றால்
தெரிநிலை ஓங்காரம் -இவை மூன்றும் -ஆச்சர்யம்
விலையோ -விலை ஆகாதே -கண்கள் பெருத்து உள்ளனவே
மலையோ -கேட்டால் திருவேங்கடம் என்று இத்தையே சொல்லிக் கொண்டே இருப்பாள்
இத்தையே அப்யஸித்துக் கொண்டே இருப்பாளே
இவை இரண்டும்
ஒரு ஏவகாரம் இவள் பரமே
எதிர்மறை ஏவ காரம் )

அறுக்கும் வினையாயின ஆகத்து அவனை
நிறுத்தும் மனத்து ஒன்றிய சிந்தையினார்க்கு
வெறித் தண் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய்
குறுக்கும் வகை உண்டு கொலோ கொடியேற்கே –9-8-1-

——————

பாசுரம் -61-வாசகம் செய்வது நம் பரமே –
துறையடைவு-தோழி தலைவன் நீர்மையைத் தலைவிக்கு கூறுதல் –
பிறந்தவாறும் -5-10-

வாசகம் செய்வது நம் பரமே தொல்லை வானவர் தம்
நாயகன் நாயகர் எல்லாம் தொழுமவன் ஞால முற்றும்
வேயகமாயினும் சோராவகை இரண்டே யடியால்
தாயவன் ஆய்க்குலமாய் வந்து தோன்றிற்று நம்மிறையே – -61 –

பிறந்தவாறும் -5-10-இதன் விவரணம்
கிருஷ்ண அவதாரத்தில் சரணாகதி
நோற்ற நான்கும் -முதல் மூன்றும் அர்ச்சையில் சரணாகதி
அதி ஸூலபனாக அவதரித்தவன் அன்றோ )

பிறந்த வாறும் வளர்ந்த வாறும் பெரிய பாரதம் கை செய்து ஐவர்க்குத்
திறங்கள் காட்டி யிட்டுச் செய்து போன மாயங்களும்
நிறந்த னூடு புக்கென தாவியை நின்று நின்று ருக்கி உண்கின்ற இச்
சிறந்த வான் சுடரே! உனை என்று கொல் சேர்வதுவே?–5-10-1-

—————-

பாசுரம் -62-இறையோ இரக்கினும் ஈங்கு ஓர் பெண் பால் –
துறையடைவு-தலைவியின் ஆற்றாமையைத் தோழி தலைவனுக்குக் கூறுதல் –
தேவிமார் ஆவார் -8-1-

இறையோ இரக்கினும் ஈங்கோர் பெண்பால் எனவும் இரங்காது
அறையோ என நின்றதிரும் கருங்கடல்  ஈங்கிவள் தன்
நிறையோ வினி யுன் திருவருளால் அன்றிக் காப்பரிதால்
முறையோ அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணனே – 62-

முகில் வண்ணன் அடியை அடைந்து அருள் சூடியவர்
அங்கு அணை மேல் பள்ளி கொண்டமை வியக்தமாக இல்லை
இதில் தான் முகில் வண்ணன் பத பிரயோகமும்
அரவணை மேல் பள்ளி கொண்டவன் வியக்தமாக உள்ளது
ஆனால் இப்பாசுர விவரணம் தேவிமார் ஆவார் –8-1-திருவாய் மொழியே
அங்கும் ஓங்காரம் பல உண்டே

இங்கு முறையோ கேள்வி போல் அங்கும் திருத்தாயார் உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய்
தோழி கடல் ஓசைக்கு ஆற்றாத தலைவியின் தளர்ச்சியைப் பற்றி புலம்பும் -பாசுரம்
தலைவன் மறைந்து இருக்க -முறையோ என்று அவனையே குறித்து சொல்லும் பாசுரம் என்றுமாம்

முறையோ ஓங்காரம் -இரக்கம் குறித்து
அறையோ -சந்தேகம் -அறை கூவுகிறதோ ஐயம் இது
நிறையோ -அடக்கம் -தெரிநிலை ஓங்காரம் -நிறை யானது
உனது திரு அருளாலே காக்கப்பட வேண்டும்
தேவிமார் -தாள்களைத் –பேர் உதவிக்கைம்மாறு –ஆத்மா சமர்ப்பணம் -உயிரை அறவிலை செய்தனன்
அதுவும் அவனது இன்னருள் -எனது ஆவி யார் யான் யார் தந்த நீ உனது இரக்கமே சாதனம் -தடுமாறி சொல்லுவார் அங்கும்
ஆளவந்தார் -மயா சமர்ப்பித்தம் -கின்னு ஸமர்ப்பயாமி போல் உண்டே
இரக்கமே உபாயம் இதில் வியக்தமாக உள்ளதே -)

தேவிமார் ஆவார் திருமகள் பூமி ஏவ மற்ற அமரர் ஆட் செய்வார்
மேவிய வுலகம் மூன்றவை யாட்சி வேண்டு வேண்டுருவம் நின்னுருவம்
பாவியேன் தன்னை யடுகின்ற கமலக் கண்ணது ஓர் பவளவாய் மணியே
ஆவியே அமுதே அலை கடல் கடைந்த அப்பனே காணுமாறு அருளாயே–8-1-1-

தாள்களை எனக்கே தலைத் தலைச் சிறப்பத் தந்த பேருதவிக் கைம்மாறா
தோள்களை யாரைத் தழுவி என்னுயிரை அறவிலை செய்தனன் சோதீ
தோள்கள் ஆயிரத்தாய் !முடிகள் ஆயிரத்தாய் ! துணை மலர்க் கண்கள் ஆயிரத்தாய் !
தாள்கள் ஆயிரத்தாய் !பேர்கள் ஆயிரத்தாய் ! தமியனேன் பெரிய வப்பனே !–8-1-10-

——————

பாசுரம் -63-வண்ணம் சிவந்துள வான் நாடு அமரும் –
துறையடைவு-தலைவி தோழியிடம் தலைவன் இயல்பை எடுத்துக் கூறுதல் –
இவையும் அவையும் -1-9-

வண்ணம் சிவந்துள வானாடமரும் குளிர் விழிய
தண் மென் கமலத்தடம் போல் பொலிந்தன தாமிவையோ
கண்ணன் திருமால் திருமுகம் தன்னோடும் காதல் செய்தேற்கு
எண்ணம் புகுந்து அடியேனோடு இக்காலம் இருக்கின்றதே — 63-

சாத்திமிக்க -சாத்மிக்க போக பிரதாத்ருதம் -புள்ளு பிள்ளைக்கு இரை –
அனுபவம் மெதுவாக கொடுத்து அருளுபவர் தானே
செங்கண் சிறுச் சிறிதே விளிப்பான் –
ஆர்த்தி விளைக்க -இவையும் அவையும் -சூழல் உளானே -இதன் விவரணம்
சுவையன் திருவின் மணாளன் -திருமுடியில் நேராக வராமல்-
சூழலில் -அருகில் -ஒக்கலில் –நாவில் -உச்சியில் -படிப்படியாக -அமலங்களாக விளிக்கும்
வானாடமரும் குளிர் விழிய-நித்ய ஸூரிகள் -ஆர -அமர -தரிக்க கடாக்ஷம் அருளுபவர் –
பொலிந்து நின்ற பிரான் ஆழ்வாருடைய திருமுடி சேவை இன்றும் பிரஸித்தம்
ஒழிவிலன் என்னோடே உடனே -திருவாய் மொழியில் உண்டே –
அடியேனோடு இக்காலம் இருக்கின்றனவே இங்கும் )

இவையும் அவையும் உவவையும் இவரும் அவரும் உவரும்
எவையும் எவரும் தன்னுள்ளே ஆகியும் ஆக்கியும் காக்கும்
அவையுள் தனி முதல் எம்மான் கண்ணபிரான் என்னமுதம்
சுவையன் திருவின் மணாளன் என்னுடைச் சூழல் உளானே –1-9-1-

ஆழ நெடும் கடல் சேர்ந்தான் அவன் என் அருகில் இலானே –1-9-2-

ஒரு கதியின் சுவை தந்திட்டு ஒழிவிலன் என்னோடு உடனே –1-9-3-

கடல் மலி மாயப் பெருமான் கண்ணன் என் ஒக்கலையானே –1-9-4-

ஓக்கவும் தோற்றிய வீசன் மாயன் என் நெஞ்சின் உளானே –1-9-5-

தூயன் துயக்கன் மயக்கன் என்னுடைத் தோளிணை யானே –1-9-6-

நாள் அணைந்து ஒன்றும் அகலான் என்னுடை நாவில் உளானே –1-9-7-

காவி நன் மேனிக் கமலக் கண்ணன் என் கண்ணினுள் உளானே –1-9-8-

அமலத் தெய்வத்தோடு உலகமாக்கி என் நெற்றி உளானே –1-9-9-

மற்றை யமரரும் எல்லாம் வந்து என் உச்சி உளானே –1-9-10-

உச்சியுள்ளே நிற்கும் தேவ தேவற்கு கண்ண பிராற்கு
இச்சையுள் செல்ல யுணர்த்தி வண் குருகூர்ச் சடகோபன்
இச்சொன்ன வாயிரத்துள் இவையுமோர் பத்து எம்பிராற்கு
நிச்சலும் விண்ணப்பம் செய்ய நீள் கழல் சென்னி பொருமே –1-9-11-

இவை யறிந்தோர் தம்மளவில் ஈசன் உவந்து ஆற்ற
அவயவங்கள் தோறும் அணையும் -சுவையதனைப்
பெற்று ஆர்வத்தால் மாறன் பேசின சொல் பேச மால்
பொற்றாள் நம் சென்னி பொரும்–9–

————–

பாசுரம் -64-இருக்கு ஆர் மொழியால் நெறி இழுக்காமை –
துறையடைவு-தலைவன் பேர் கூறி தரித்து இருத்தலைத் தலைவி தோழிக்குக் கூறி இரங்கல் –
பாமுரு மூவுலகும் -7-6-

இருக்கார் மொழியால் நெறி இழுக்காமை உலகளந்த
திருத் தாளிணை நிலத் தேவர் வணங்குவர் யாமுமவா
ஒருக்கா வினையொடும் எம்மோடும் நொந்து கனியின்மையின்
கருக்காய் கடிப்பவர் போல் திருநாமம் சொல் கற்றனமே – -64 –

பாமுரு மூவுலகும் -7-6-இதன் விவரணம்

ஓ ஓ என்று அடையாமல் -ஆழ்வார் ஆர்த்தி நம்மால் சொல்ல முடியாதே என்பர் அம் மங்கி அம்மாள் -அதில் வியாக்யானம்
வினையோடு நொந்து இங்கு -வினை -ஸஹஜ பக்தி -பகவத் ப்ரீதியையே சொன்னவாறு
லௌகிக விஷயத்துக்கு மடைமாற்ற விடமுடியாமல் தடுக்கும்
வினை என்பது கர்மம் அர்த்தம் கொண்டால் லௌகிக விஷய ஆசையை பகவத் விஷயத்தில் மாற்ற முடியாமல் தடுக்கும்
அரன் அயன் பெற்றார்கள் என்று கொல் சார்வது -அங்கு
அதிகாரம் இல்லாத நான் வணங்குகிறேன் இங்கு
ப்ரயோஜனாந்தர பரர்களே அடைந்தார்கள் எனக்கு கிட்டவில்லை அங்கு
ஆர்த்தி மிக்கு உரைத்த பாசுரம்

பாமரு மூவுலகும் படைத்த பற்ப நாபாவோ!
பாமரு மூவுலகும் அளந்த பற்ப பாதாவோ!
தாமரைக் கண்ணாவோ!தனியேன் தனி ஆளாவோ!
தாமரைக் கையாவோ! உன்னை என்று கொல் சேர்வதுவே?–7-6-1-

குன்று எடுத்து ஆநிரை மேய்த்து அவை காத்த எம் கூத்தாவோ!–7-6-2-

ஏத்தருங் கீர்த்தியினாய்!உன்னை எங்குத் தலைப் பெய்வனே?–7-6-3-

என்னுடை ஆர் உயிரார் எங்ஙனே கொல் வந்து எய்துவரே?–7-6-5-

ஆளுயர் குன்றங்கள் செய்து அடர்த்தானையும் காண்டுங்கொலோ?–7-6-8-

பா மருவு வேதம் பகர் மால் குணங்களுடன்
ஆ மழகு வேண்டர்பாடாம் அவற்றை -தூ மனத்தால்
நண்ணியவனைக் காண நன்குருகிக் கூப்பிட்ட
அண்ணலை நண்ணார் ஏழையர்–66-

—————–

பாசுரம் -65-கற்றுப் பிணை மலர்க் கண்ணின் குலம் வென்று –
துறையடைவு-தலைவியின் கண்கள் கவர்ந்ததைத் தலைவன் கூறல் –
நோற்ற நோன்பு -5-7-

கற்றுப் பிணை மலர் கண்ணின் குலம் வென்று ஒரோ கரும
முற்றுப் பயின்று செவியொடு உசாவி உலகமெல்லாம்
முற்றும் விழுங்கி யுமிழ்ந்த பிரானார் திருவடிக் கீழ்
உற்றமுறாதும் மிளிர்ந்த கண்ணா யெம்மை உண்கின்றவே –65 –

ஓரோ கருமம் உற்று -உன்னை விட்டு ஒன்றும் ஆற்றகில்லேன் செய்த வேள்வியர் -அங்கு போல்
காதுடன் உசாவி -போதயந்த பரஸ்பரம் -சாஸ்திரம் கேட்டு ஞானி காதுகள் தானே
பேசித்தான் ஞானம் வளரும் –
செவி அளவு நீண்டு என்றுமாம் –

1-கற்றுப் பிணை மலர் கண்ணின் குலம் வென்று-உள்ள கண்கள்
2-ஒரோ கரும முற்றுப் பயின்று செவியொடு உசாவி -உள்ள கண்கள்
3-உலகமெல்லாம் முற்றும் விழுங்கி யுமிழ்ந்த பிரானார் திருவடிக் கீழ் உள்ள கண்கள்
4-உற்றமுறாதும் மிளிர்ந்து உள்ள கண்கள்
யெம்மை உண்கின்றவே -என்றவாறு –

நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன் ஆகிலும் இனி உன்னை விட்டொன்று
ஆற்ற கிற்கின்றிலேன் அரவின் அணை அம்மானே!
சேற்றுத் தாமரை செந்நெலூடு மலர் சிரீவர மங்கலநகர்
வீற்றிருந்த எந்தாய்! உனக்கு மிகை அல்லேன் அங்கே.—5-7-1-

சங்கு சக்கரத்தாய்! தமியேனுக்கு அருளாயே.–5-7-2-

வான மா மலையே! அடியேன் தொழ வந்தருளே.–5-7-6-

ஆறெனக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் உனக் கோர் கைம்
மாறு நான் ஒன்றிலேன் என தாவியும் உனதே
சேறு கொள் கரும்பும் பெருஞ் செந்நெலும் மலி தண் சிரீவர மங்கை
நாறு பூந்தண் துழாய் முடியாய்! தெய்வ நாயகனே!–5-7-10-

————-

பாசுரம் -66-உண்ணாது உறங்காது உணர்வுறும் எத்தனை –
துறையடைவு-தலைவன் தோழன் பேச்சை மறுத்தல் –
ஆராவமுதே -5-8-

உண்ணாது உறங்காது உணர்வுறு மெத்தனை யோகியர்க்கும்
எண்ணாய் மிளிரும் இயல்வினவாம் எரி நீர் வளி வான்
மண்ணாகிய வெம்பெருமான் தனது வைகுந்த மன்னாள்
கண்ணாய் அருவினையேன் உயிராயின காவிகளே – -66 –

கீழே 57 பாசுரம் ஐந்தே துறை பார்த்தோம்
ஆராவமுதே இதன் விவரணம்
மலர்க்கண் வளர்கின்றான் அங்கும் உண்டே
நீர் பஞ்ச பூதங்கள் நல்லது செய்ய
அந்தர்யாமியான அவன் நம்மைத் துன்புறுத்துவதே -என்று உள்ளுறைப் பொருள்
1-வைகுந்தம் போல் போக்யம்
2-எனக்கு உயிர்
3-யோகிகளால் என்ன அரியன
மூன்று விஷயங்கள் ஆழ்வாரது கண்கள்

ஆரா அமுதே! அடியேன் உடலம் நின்பால் அன்பாயே
நீராய் அலைந்து கரைய உருக்கு கின்ற நெடுமாலே!
சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர்த் திருக்குடந்தை
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே–5-8-1-

அம்மா மலர்க் கண் வளர்கின்றானே! என் நான் செய்கேனே?–5-8-2-

செந்நாள் எந்நாள் அந்நாள் உன தாள் பிடித்தே செலக் காணே.–5-8-3-

களைவாய் துன்பம் களையா தொழிவாய் களை கண் மற்றிலேன்
வளைவாய் நேமிப் படையாய்! குடந்தைக் கிடந்தாய்! மாமாயா!
தளரா உடலம் என தாவி சரிந்து போம் போது
இளையா துன தாள் ஒருங்கப் பிடித்துப் போத இசை நீயே.–5-8-8-

இசைவித் தென்னை உன் தாளிணைக் கீழ் இருத்தும் அம்மானே!
அசைவில் அமரர் தலைவர் தலைவா! ஆதிப் பெரு மூர்த்தி!
திசைவில் வீசும் செழுமா மணிகள் சேரும் திருக்குடந்தை
அசைவில் உலகம் பரவக் கிடந்தாய்! காண வாராயே.–5-8-9-

ஆராவமுதாழ்வார் ஆதரித்த பேறுகளை
தாராமையாலே தளர்ந்து மிக -தீராத
ஆசையுடன் ஆற்றாமை பேசி யலமந்தான்
மாசறு சீர் மாறன் எம்மான் —48-

————–

பாசுரம் -67-காவியும் நீலமும் வேலும் கயலும் பல பல-
துறையடைவு -தலைவன் தன்  வலி யழிவு  உரைத்தல் –
உலகமுண்ட பெரு வாயா -6-10-

காவியும் நீலமும் வேலும் கயலும் பலபல வென்று
ஆவியின் தன்மை யளவல்ல பாரிப்பு அசுரைச் செற்ற
மாவியம்புள் வல்ல மாதவன் கோவிந்தன் வேங்கடம் சேர்
தூவியம் பேடை யன்னாள் கண்களாய துணை மலரே – 67-

வலி அழிவதே சரணாகதி
தூவி அம் பேடை -அலர்மேல் மங்கை உறை மார்பன் -கோவிந்தன் -வேங்கடம் சேர்
அசுரரைச் செற்ற -புள்ளுக்கும் கோவிந்தனுக்கு விசேஷணம் -)

உலகம் உண்ட பெரு வாயா! உலப்பில் கீர்த்தி அம்மானே!
நிலவும் சுடர் சூழ் ஒளி மூர்த்தி! நெடியாய்! அடியேன் ஆருயிரே!
திலதம் உலகுக்காய் நின்ற திரு வேங்கடத் தெம் பெருமானே!
குல தொல் அடியேன் உன பாதம் கூடுமாறு கூறாயே.–6-10-1-

அகல கில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பா!
நிகரில் புகழாய்! உலக மூன்றுடையாய்? என்னை ஆள்வானே!
நிகரில் அமரர் முனிக் கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே!
புகல் ஓன்றில்லா அடியேன் உன்னடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே.–6-10-10-

————–

பாசுரம் -68-மலர்ந்தே ஒழிந்தில மாலையும் –
துறையடைவு-கால மயக்கு காலம் இளையது என்றல் –
கொண்ட பெண்டிர் -9-1-

மலர்ந்தே யொழிந்தில   மாலையும் மாலைப் பொன் வாசிகையும்
புலந்தோய் தழைப் பந்தர் தண்டுற நாற்றி பொரு கடல் சூழ்
நிலந்தாவிய வெம்பெருமான் தனது வைகுந்த மன்னாய்
கலந்தார் வர வெதிர் கொண்டு வன் கொன்றைகள் கார்த்தனவே – 68-

கொண்ட பெண்டிர் -9-1-இதன் விவரணம்
பர உபதேசத்தில் ப்ரவ்ருத்தர் ஆகிறார் -நம்பிள்ளை
சகலவித பந்துவும் அவனே
வீடு சொன்னால் ஒரு கொண்ட -நான்கும் விரோதி ஸ்வரூபம்
அவன் வரவில்லை -விரோதி போக்கி தோழி ஆற்றுகிறாள் இதில்

மற்று ஓன்று இல்லை -சுருங்கச் சொன்னோம்- மானிடத்து எவ்வுயிர்க்கும் சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும்
மலர்ந்தே ஒழிந்தில
கார்த்தனவே -இதுவே சுருக்கமாக இங்கே சொல்லி
ஆழ்வாரைக் கூட்டிப் போகும் காலம் அணித்தாயிற்று

சம்சார வெறுப்புடன் ஆழ்வார் இருக்க
பாட்டுத் தோறும் வடமதுரைப் பிறந்தான்
ஆஹதோ மதுரா புரம்
ஆனானப்பட்ட அவனே பிறக்க நீர் இருந்தால் என்ன
உம்மைக் கூட்டிப் போகவே பிறந்தான் என்றுமாம்
அதே போல் இங்கும் பூக்கவில்லை கார்த்தனவே )

கொண்ட பெண்டிர் மக்கள் உற்றார் சுற்றத்தவர் பிறரும்
கண்டதோடு பட்டது அல்லால் காதல் மற்று யாதும் இல்லை
எண்டிசையும் கீழும் மேலும் முற்றவும் உண்ட பிரான்
தொண்டரோமாய் உய்யல் அல்லால் இல்லை கண்டீர் துணையே–9-1-1-

மருள் கொள் செய்கை யசுரர் மங்க வடமதுரைப் பிறந்தார்க்கு
அருள் கொள் ஆளாய் யுய்யல் அல்லால் இல்லை கண்டீர் அரணே-9-1-3-

வடமதுரைப் பிறந்தவன் வண் புகழே சரண் என்று உய்யப் போகல் அல்லால்
இல்லை கண்டீர் சதிரே–9-1-4-

வடமதுரைப் பிறந்தார்க்கு எதர் கொள் ஆளாய் யுய்யல் அல்லால்
இல்லை கண்டீர் இன்பமே–9-1-5-

மல்லை மூதூர் வடமதுரைப் பிறந்தவன் வண் புகழே
சொல்லி யுப்பப் போக வல்லால் மற்று ஓன்று இல்லை சுருக்கே–9-1-6-

மற்று ஓன்று இல்லை சுருங்கச் சொன்னோம் மா நிலத்து எவ் உயிர் க்கும்
சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும் கண்டீர்கள் அந்தோ
குற்றம் அன்று எங்கள் பெற்றத் தாயன் வடமதுரைப் பிறந்தான்
குற்றமில் சீர் கற்று வைகல் வாழ்தல் கண்டீர் குணமே–9-1-7-

வடமதுரைப் பிறந்தவன் வண் புகழே வீழ் துணையாப் போமிதனில்
யாதுமில்லை மிக்கதே–9-1-8-

வடமதுரைப் பிறந்த தாதுசேர் தோள் கண்ணன் அல்லால்
இல்லை கண்டீர் சரணே–9-1-9-

கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண் அது நிற்க வந்து
மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரைப் பிறந்தான்
திண்ண மா நும் உடைமை உண்டேல் அவன் அடி சேர்த்து உய்ம்மினோ
எண்ண வேண்டா நும்மது ஆதும் அவன் அன்றி மற்று இல்லையே–9-1-10-

————

பாசுரம் -69-கார் ஏற்று இருள் செகில்  ஏற்றின் சுடருக்கு-
துறையடைவு-மாலைப் பொழுது கண்டு மயங்கிய தலைவியைத் தோழி ஆற்றுதல் –
கற்பார் இராம பிரானை -7-5-

காரேற் றிருள் செகிலேற்றின சுடருக்கு உளைந்து வெல்வான்
போரேற்று எதிர்ந்தது புன் தலைமாலை  புவனி எல்லாம்
நீரேற்று அளந்த நெடிய பிரான் அருளாவிடுமே
வாரேற்றி இள முலையாய் வருந்தேல் உன்வளைத் திறமே – -69 –

சராசரம் முற்றும் நற்பாலுக்கு உய்த்தவன் அன்றோ
மோக்ஷ பிரதன்-ரக்ஷகத்துக்கு சீமா பூமி தானே
நாட்டை அளித்து ஷேம கரன்
சிசுபாலனுக்கும் ரக்ஷகன் அன்றோ
நன்மைப்புனல் பண்ணி -நான்முகனைப் பண்ணி -பாட்டுத்தொறும் ரக்ஷகத்வம் உண்டே )

கற்பார் இராம பிரானை அல்லால் மற்றும் கற்பரோ?
புற்பா முதலாப் புல்லெறும்பாதி ஒன்று இன்றியே
நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்
நற்பாலுக்கு உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே.–7-5-1-

வார்த்தை அறிபவர் மாயவற்கு ஆளன்றி ஆவரோ?
போர்த்த பிறப்பொடு நோயொடு மூப்பொடு இறப்பிவை
பேர்த்துப் பெருந்துன்பம் வேரற நீக்கித தன் தாளின் கீழ்ச்
சேர்த்து அவன் செய்யும் சேமத்தை எண்ணித் தெளிவுற்றே.–7-5-10-

————-

பாசுரம் -70-வளை வாய்த் திருச் சக்கரத்து எங்கள்-
துறையடைவு -தலைவி இரவின் நெடுமைக்கு இரங்குதல் –
பிறவித் துயரற -1-7-

வளைவாய்த்  திருச் சக்கரத்து எங்கள் வானவனார் முடிமேல்
தளைவாய் நறுங்கண்ணித் தண் அம் துழாய்க்கு வண்ணம் பயலை
விளைவான் மிக வந்து நாள் திங்கள் ஆண்டு ஊழி நிற்க எம்மை
உளைவான் புகுந்து இதுவோர் கங்குல் ஆயிரம் ஊழிகளே — 70-

நிரதிசய போக்யத்வம்
ஆராதனைக்கு இனியவன்

இதிலும் துழாய் இனியது

பிறவித் துயர் அற ஞானத்துள் நின்ற -துறவிச் சுடர் விளக்கம் தலைப் பெய்வார்
அறவனை ஆழிப் படை அந்தணனை மறவியை இன்றி மனத்து வைப்பாரே –1-7-1-

பிரான் பெரு நிலம் கீண்டவன் பின்னும் விராய் மலர்த்துழாய் வேய்ந்த முடியன்
மராமரம் எய்த மாயவன் என்னுள் இரான் எனில் பின்னை யான் ஒட்டுவேனோ –1-7-6-

குடைந்து வண்டுண்ணும் துழாய் முடியானை -அடைந்து தென்குருகூர்ச் சடகோபன்
மிடைந்த சொல்தொடை ஆயிரத்து இப்பத்து உடைந்து நோய்களை ஒடுவிக்குமே –-1-7-11-

—————-

பாசுரம் -71-ஊழி களாய்  உலகு ஏழும்  உண்டான் –
துறையடைவு -செவிலித் தாயின் கோபத்தைத் தலைவி தோழியிடம் கூறுதல் –
எங்கனேயோ  அன்னைமீர்காள் -5-5-

ஊழிகளாய் உலகு ஏழும் உண்டான் என்றிலம் பழம் கண்டு
ஆழி களாம்  பழ வண்ணம் என்றேற்கு அக்தே கொண்டு அன்னை
நாழி வளோ வென்னும் ஞாலம் உண்டான் வண்ணம் சொல்லிற்று என்னும்
தோழிகளோ உரையீர் எம்மை யம்மனை சூழ் கின்றவே  – – -71-

எங்ஙனேயோ அன்னை மீர்காள்! என்னை முனிவது நீர்!
நங்கள் கோலத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
சங்கி னோடும் நேமி யோடும் தாமரைக் கண்களோடும்
செங்கனி வாய் ஒன்றினோடும் செல்கின்றது என் நெஞ்சமே.–5-5-1-

எங்கனே நீர் முனிவது என்னை யினி நம்பி அழகு
இங்கனே தோன்றுகின்றது என் முன்னே -அங்கன்
உரு வெளிப்பாடா வுரைத்த தமிழ் மாறன்
கருதும் அவர்க்கு இன்பக் கடல்—45-

—————-

பாசுரம் -72-சூழ்கின்ற கங்குல் சுருங்கா இருளின்-
துறையடைவு-இருளுக்கு ஆற்றாத தலைவி இளம்பிறை கண்டு தளர்ந்து உரைத்தல் –
சீலமில்லாச் சிறியன் -4-7-

சூழ்கின்ற கங்குல் சுருங்காவிருளின்  கருந்திணிம்பை
போழ்கின்ற திங்களம் பிள்ளையும் போழ்க துழாய் மலர்க்கே
தாழ்கின்ற நெஞ்சத்தொரு தமியாட்டியேன் மாமைக்கின்று
வாழ்கின்றவாறு இதுவோ வந்து தோன்றிற்று வாலியதே – 72-

சீலம் இல்லாச் சிறியே னேலும், செய்வினையோ பெரிதால்;
ஞாலம் உண்டாய்! ஞான மூர்த்தி! நாராயணா! என்று என்று
காலந் தோறும் யான் இருந்து, கைதலை பூசலிட்டால்,
கோல மேனி காண வாராய்; கூவியும் கொள்ளாயே.–4-7-1-

————

பாசுரம் -73 வால் வெண் நிலவு உலகு ஆரச் சுரக்கும் –
துறையடைவு-தலைவி இளம் பிறை கண்டு தளர்தலைக் கண்டு தோழி இரங்கல் —
வேய் மரு தோள் இணை -10 -3 –

வால் வெண்ணிலா வுலகாரச் சுரக்கும் வெண் திங்கள் என்னும்
பால் விண் சுரவி சுர முதிர்மாலை பரிதி வட்டம்
போலும் சுடர் ஆழிப் பிரான் பொழில் ஏழும் அளிக்கும்
சால்பின் தகைமை கொலாம் தமியாட்டி தளர்ந்ததுவே – 73-

வேய் மரு தோள் இணை -10 -3 -இதன் விவரணம் -காலைப்பூசல் –
ஒரே படுக்கையிலே இருக்க -பசு மேய்க்கப் போந்தானாகவே -தோள் மெலிய
அவனுக்கு இவளை விட ப்ராவண்யம் மிக்கு –
இவள் தோள் மெலிவைக் கண்டு போந்தானாகவே அவனும் நினைத்து –
எம்பெருமான் பசு மேய்க்கப் போகேல் -இந்தப்பாசுரத்திலும் பசு சுரக்கும் பால் –
வர்ணாஸ்ரமம் தாய் சொல்படி -அதுவும் காரணம் இல்லை
உன் தன் திரு உள்ளம் இடர் தோறும் -பெண்மை ஆற்றோம் -அவர்களைக் கூட்டி என் முன்னே –
களை அற்ற கைங்கர்யம் -செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவு -ஸூவ போக்த்ருத்வம் ஒழிக்க வேண்டுமே -)

வேய் மரு தோளிணை மெலியும் ஆலோ
மெலிவும் என் தனிமையும் யாதும் நோக்காக்
காமரு குயில்களும் கூவும் ஆலோ
கண மயில் அவை கலந்து ஆலும் ஆலோ
ஆ மருவு இன நிரை மேய்க்க நீ போக்கு
ஒரு பகல் ஆயிரம் ஊழி ஆலோ
தாமரைக் கண்கள் கொண்டு ஈர்தி ஆலோ
தகவிலை தகவிலையே நீ கண்ணா–10-3-1-

உகக்கும் நல்லவரோடும் உழி தந்து உன் தன்
திரு உள்ளம் இடர் கெடும் தோறும் நாங்கள்
வியக்க இன்புறுதும் எம் பெண்மை ஆற்றோம்
எம்பெருமான் பசு மேய்க்கப் போகேல்
மிகப் பல அசுரர்கள் வேண்டு உருவம் கொண்டு
நின்று உழி தருவர் கஞ்சன் ஏவ
அகப்படில் அவரோடும் நின்னொடு ஆங்கே
அவத்தங்கள் விளையும் என் சொல் கொள் அந்தோ–10-3-9-

—————–

பாசுரம் -74 -தளர்ந்தும் முறிந்தும் வரு திரைப் பாயில்-
துறையடைவு–பார்ச்வச்தார் ஆஸ்வசிப்பிக்கிற படியை சொல்லுகிறது –
குண ஜ்ஞானத்தாலே ஜீவித்த படியை சொல்லுகிறது –
திரு ஐச்வர்யமாகவும் அழகாகவும்
செய்ய தாமரை -3 -6 –

தளர்ந்தும் முறிந்தும் வரு திரைப்பாயில் திரு நெடுங்கண்
வளர்ந்தும் அறிவுற்றும் வையம் விழுங்கியும் மால் வரையைக்
கிளர்ந்து  மறிதரக் கீண்டு எடுத்தான் முடி சூடு துழாய்
அளைந்து உண் சிறு பசுந்தென்றல் அந்தோ வந்து உலாகின்றதே – – -74 -திரைப்பாயல் பாட பேதம்

செய்ய தாமரை -3 -6 -அவன் இவன் என்று கூழேன்மின் அவனாகும் நீள் கடல் வண்ணன் -அர்ச்சாவதார சீர்மை
இவன் அவன் ஆக மாட்டானே -இங்கே தானே சரணாகதியும் அனுபவமும்
தமர் உகந்த இவ்வுருவம் அவ்வுருவம் தானே
கடல் வண்ணன் கண்ணன் -கருமாணிக்கம் -அன்று தேர் தடவிய கண்ணன் கழல் காண்பது என்றோ –
கிருஷ்ண த்ருஷ்ணா தத்வம் -தனது துறையிலே இரங்குகிறார்
அர்ச்சை கிடைத்த சந்தோஷமும் -தேர் கடாவிய கழல் காண்கை இழந்த வருத்தமும் உண்டே
ஹந்த -அந்தோ -சந்தோஷ ஸூ சகம்
பாயில் -திருப்பாற்கடலில் -திரு அனந்தாழ்வான்
திரு -அழகிய நெடும் -அபரிச்சின்ன கண்கள்
வளர்ந்து -உறங்குவான் போல் யோகு செய்யும் – அறிவு -உற்றும் -ஜகத் ரக்ஷண சிந்தை )

செய்ய தாமரைக் கண்ணனாய் உலகு ஏழும் உண்ட அவன் கண்டீர்
வையம் வானம் மனிசர் தெய்வம் மற்று மற்றும் மற்றும் முற்றுமாய்
செய்ய சூழ் சுடர் ஞானமாய் வெளிப் பட்டு இவை படைத்தான் பின்னும்
மொய்கொள் சோதியோடு ஆயினான் ஒரு மூவர் ஆகிய மூர்த்தியே.–3-6-1-

தஞ்சம் ஆகிய தந்தை தாயொடு தானுமாய் அவை அல்லனாய்
எஞ்சல் இல் அமரர் குல முதல் மூவர் தம்முளும் ஆதியை
அஞ்சி நீர் உலகத்துள்ளீர்கள் அவன் இவன் என்று கூழேன்மின்;
நெஞ்சினால் நினைப்பான் எவன்?அவன் ஆகும் நீள்கடல் வண்ணனே.–3-6-9-

———————-

பாசுரம் -75-உலாகின்ற கெண்டை ஒளி யம்பு –
துறையடைவு-தலைவன் தலையின் வூரைப் பற்றி விசாரித்தல் –
சன்மம் பல பல -3 -10 –

உலாகின்ற கெண்டை  யொளி யம்பு எம்மாவியை யூடுருவக்
குலாகின்ற வெஞ்சிலை வாள்   முகத்தீர் குனிசங்கிடறிப்
புலாகின்ற வேலைப் புணரி யம்பள்ளி யம்மான் அடியார்
நிலாகின்ற வைகுந்தமோ வையமோ நும் நிலை இடமே – -75 –

திருமாலின் சீர் பரவி –யானோர் குறை இலனே –பரிவிலனே -ஒன்றும் துயர் இலனே
இன்புறும் இவ்விளையாட்டுடையானைப் பெற்று யாதும் அல்லல் இலனே
குறைவில் தடம் கடல் தன் கோலச் செங்கண் –உறைபவன் போல் -யோகு செய்யும் அவனைப் பற்றி குறைவிலனே
அங்கு
இங்கும் திருப்பாற்கடல் சேஷசாயி -சேவிக்க வந்த நித்ய ஸூரிகள் நித்ய வாஸம் செய்யும் ஸ்ரீ வைகுண்டம் –
உலாவும் அழகிய மீன் -பாயும் அம்பு போல் ஒளிபடைத்த கூர்மையான ஆழ்வார் கண் –
ஞான வைலக்ஷண்யத்துக்கு விசேஷணங்கள்
முகத்தீர் -ஆழ்வார் தமரையும் தம்மைப் போலே ஆளாக்கி அருளியதைக் காட்டுமே )

சன்மம் பலபல செய்து வெளிப்பட்டுச் சங்கொடு சக்கரம் வில்
ஒண்மை யுடைய உலக்கை ஒள் வாள் தண்டு கொண்டு புள் ஊர்ந்து உலகில்
வன்மை உடைய அரக்கர் அசுரரை மாளப் படை பொருத
நன்மை உடையவன் சீர் பரவப் பெற்ற நான் ஓர் குறைவு இலனே.–3-10-1-

நிறை புகழ் ஏத்தியும் பாடியும் ஆடியும் யான் ஒரு முட்டு இலனே.–3-10-2-

பட்டபின்னை இறை யாகிலும் யான் என்மனத்துப் பரிவு இலனே.–3-10-3-

அரியினை அச்சுதனைப் பற்றி யான் இறையேனும் இடர் இலனே.–3-9-4-

உடலொடும் கொண்டு கொடுத்தவனைப் பற்றி ஒன்றும் துயர் இலனே.–3-10-5-

துயரம் இல் சீர்க் கண்ணன் மாயன் புகழ் துற்ற யான் ஓர் துன்பம் இலனே.–3-10-6-

இன்புறும் இவ் விளையாட்டுடையானைப் பெற்று ஏதும் அல்லல் இலனே.–3-10-7-

எல்லை இல் மாயனைக் கண்ணனைத் தாள் பற்றி யான் ஓர் துக்கம் இலனே.–3-10-8-

ஒக்க ஒடுங்க விழுங்க வல்லானைப் பெற்று ஒன்றும் தளர்வு இலனே.–3-10-9-

கிளர் ஒளி மாயனைக் கண்ணனைத் தாள் பற்றி யான் என்றும் கேடு இலனே.–3-10-10-

சன்மம் பல செய்து தான் இவ்வுலகு அளிக்கும்
நன்மை யுடைய மால் குணத்தை நாடொறும் -இம்மையிலே
ஏத்தும் இன்பம் பெற்றேன் எனும் மாறனை யுலகீர்
நாத் தழும்ப வேத்தும் ஒரு நாள்———30-

——————-

பாசுரம் -76 – இடம் போய் விரிந்து இவ்வுலகு அளந்தான் –
துறையடைவு-தலைவனது மாலை பெறாது வருந்தும் தலைவி சந்த்ரனைக் கண்டு வருந்துதல் —
ஓராயிரமாய் -9 -3-

இடம் போய் விரிந்து இவ் உலகளந்தான் எழிலார் தண் துழாய்
வடம் போதினையும் மட நெஞ்சமே நங்கள் வெள் வளைக்கே
விடம் போல் விரிதல் இது வியப்பே வியன் தாமரையின்
தடம் போதொடுங்க மெல் ஆம்பல் அலர்விக்கும் வெண் திங்களே – -76 – வடம் போதில் -பாட பேதம்

மனமே யுன்னை வல்வினையேன் இரந்து
கனமே சொல்லினேன் இது சோரேல் கண்டாய்
புனமேவிய பூம் தண் துழாய் அலங்கல்
இனமேதும் இலானை அடைவதுமே –9-3-5- -அங்கும் உண்டே

சீலம் எல்லையிலான் அடி மேல் அணி
கோல நீள் குருகூர்ச் சடகோபன் சொல்
மாலை யாயிரத்துள் இவை பத்தினின்
பாலர் வைகுந்தம் ஏறுதல் பான்மையே –9-3-11-
நிகம பாசுரத்தில் ஸுசீல்யம் பாடினது உண்டே அங்கும் உண்டே)

————–

பாசுரம் -77–திங்கள் அம் பிள்ளை புலம்ப –
துறையடைவு-மாலைப் பொழுதுக்கு ஆற்றாது தொலைவு இரங்குதல்–
தாள தாமரை -10-1-

(76-77-78-மூன்று பாசுரங்களில் திருத்துழாய்
உலகு அளந்த திரிவிக்ரமன் சாத்திய
இலங்கை அளித்த பெருமாள் சாத்திய
பாணாசூரனை முடித்த கண்ணன் சாத்திய
அன்று இவ்வுலகம் அளந்தான் அடி போற்றி
சென்று அங்கு தென் இலங்கை செற்றான் திறல் போற்றி
பொன்றச் சகடம் உதைத்தான் கழல் போற்றி -அங்கும் இதே வரிசை
துறையடைவு-மாலைப் பொழுதுக்கு ஆற்றாது தொலைவு இரங்குதல்–
தாள தாமரை -10-1-இதன் விவரணம் -திருமோகூர் ஆத்தன்

திங்களம் பிள்ளை புலம்பத் தன் செங்கோலரசு பட்ட
செங்களம் பற்றி நின்று எள்கு    புன்மாலை தென் பாலிலங்கை
வெங்களம் செய்த நம் விண்ணோர் பிரானார் துழாய் துணையா
நங்களை மாமை கொள்வான் வந்து தோன்றி நலிகின்றதே –  -77-

துயர் கெடும் கடிது அடைந்து வந்து அடியவர் தொழுமின்
உயர் கொள் சோலை ஒண் தட மணி யொளி திரு மோகூர்
பெயர்கள் ஆயிரம் உடைய வல்லரக்கர் புக்கு அழுந்த
தயரதன் பெற்ற மரகத மணித் தடத்தினையே–10-1-8-

————-

பாசுரம் –78-நலியும் நரகனை வீட்டிற்றும் –
துறையடைவு-பிரிவாற்றாத தலைவி தலைவன் ஆற்றலை எண்ணி நெஞ்சு அழிந்து இரங்கல் –
இன்பம் பயக்க-7-10-

நலியும் நரகனை வீட்டிற்றும்  வாணனை திண் தோள் துணித்த
வலியும் பெருமையும் யான் சொல்லும் நீர்த்தல்ல  மைவரை போல்
பொலியும் உருவில் பிரானார் புனை பூம் துழாய் மலர்க்கே
மெலியும் மட நெஞ்சினார் தந்து போயின வேதனையே – 78-

கண்ணன் சாத்தி அருளிய திருத்துழாயில் ஆசைப்போட்டு கிடையாமல்
இன்பம் பயக்க-7-10-
திருவாறன் விளை -வலம் செய்து கை கூப்பும் காலம்

நீணக ரமதுவே மலர்ச் சோலைகள் சூழ் திரு வாறன்விளை
நீணகரத் துறைகின்ற பிரான் நெடுமால் கண்ணன் விண்ணவர்கோன்
வாணபுரம் புக்கு முக் கட்பிரானைத் தொலைய வெம் போர்கள் செய்து
வாணனை ஆயிரம் தோள் துணித்தான் சரண் அன்றி மற்றொன்று இலமே.–7-10-7-

—————-

பாசுரம் –79-வேதனை வெண் பூரி நூலனை –
துறையடைவு-தலைவனைப் பிரியாத மகளிரது சிறப்பைக் கூறித் தலைவி இரங்குதல் –
மெய்ம்மாம் பூம் பொழில் –3-5–

வேதனை வெண் புரி நூலனை விண்ணோர் பரவ நின்ற
நாதனை ஞாலம் விழுங்கும்  அநாதனை ஞாலந்தத்தும்
பாதனைப் பாற்கடல் பாம்பணை மேல் பள்ளி கொண்டு அருளும்
சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும்   சீரியரே – – -79-

வார் புனல் அம் தண் அருவி வட திரு வேங்கடத்து எந்தை
பேர் பல சொல்லிப் பிதற்றிப் பித்தர் என்றே பிறர் கூற
ஊர் பல புக்கும் புகாதும் உலோகர் சிரிக்க நின்று ஆடி
ஆர்வம் பெருகிக் குனிப்பார் அமரர் தொழப்படுவாரே.–3-5-8-

சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியரே – இங்கு

மொய்ம்பாரும் மாலுக்கு முன்னடிமை செய்து உவப்பால்
அன்பால் ஆட்செய்பவரை ஆதரித்தும் -அன்பிலா
மூடரை நிந்தித்தும் மொழிந்து அருளும் மாறன் பால்
தேடரிய பத்தி நெஞ்சே செய்————-25-

———–

பாசுரம் –80-சீர் அரசு ஆண்டு தன் செங்கோல் சில நாள் –
துறையடைவு-பிரிவு ஆற்றாத தலைவி மாலைப் பொழுதுக்கு இரங்குதல் –
முடிச் சோதியாய் -3–1-

சீரரசாண்டு  தன் செங்கோல் சில நாள் செலீஇக் கழிந்த
பார் அரசு ஒத்து மறைந்தது நாயிறு பாரளந்த
பேரரசே எம் விசும்பரசே எம்மை நீத்து வஞ்சித்த
ஓரரசே அருளாய் இருளாய் வந்து உறுகின்றதே – -80 –

முடிச் சோதி யாயுனது முகச் சோதி மலர்ந்ததுவோ
அடிச்சோதி நீ நின்ற தாமரையாய் யலர்ந்ததுவோ
படிச்சோதி ஆடையொடும் பல்கலனாய் நின் பைம்பொன்
கடிச்சோதி கலந்ததுவோ திருமாலே கட்டுரையே –3-1-1-

முடியார் திருமலையில் மூண்டு நின்ற மாறன்
அடிவாரம் தன்னில் அழகர் -வடிவழகைப்
பற்றி முடியும் அடியும் படி கலனும்
முற்றும் அனுபவித்தான் முன்———-21-

மூன்று முடிக்கு உரிய அரசு -நாயனார்
வைரமுடி – ராஜ முடி -கிருஷ்ண ராஜ முடி
கிரீடம் மகுடம் சூடாவதம்சம் –மூன்றும் )

——————

பாசுரம் -81–உருகின்ற கன்மங்கள் மேலன-
துறையடைவு-வெறி விலக்குத் தொடங்கிய தோழி இரங்குதல் –
வீடுமின் முற்றவும் -1-2-

உறுகின்ற கன்மங்கள்  மேலன ஒர்ப்பிலராய் இவளைப்
பெறுகின்ற தாயர்  மெய்ந்நொந்து  பெறார் கொல் துழாய் குழல் வாய்த்
துறு கின்றிலர் தொல்லை வேங்கடமாட்ட வுஞ் சூழ் கின்றிலர்
இறுகின்றதால் இவள் ஆகம் மெல்லாவி எரி கொள்ளவே – – -81 –

பற்றிலையாய் அவன் முற்றில் அடங்க வேண்டுமே –

வீடு மின் முற்றவும் வீடு செய்து உம்முயிர்
வீடுடை யானிடை வீடு செய்ம்ம்மினே –1-2-1-

பற்றிலன் ஈசனும் முற்றவும் நின்றனன்
பற்றிலையாய் அவன் முற்றில் அடங்கே –1-2-6-

எண் பெருக்கு அந் நலத்து ஒண் பொருள் ஈறில
வண் புகழ் நாரணன் திண் கழல் சேரே –1-2-10-

வீடு செய்து மற்றெவையும் மிக்க புகழ் நாரணன் தாள்
நாடு நலத்தால் அடைய நன்குரைக்கும் -நீடு புகழ்
வண் குருகூர் மாறன் இந்த மா நிலத்தோர் தாம் வாழப்
பண்புடனே பாடி யருள் பத்து-——-2-

————-

பாசுரம் -82–எரி கொள் செந்நாயிரு இரண்டுடனே-
துறையடைவு–தலைவி தலைவனின் கண் அழகைப் பாராட்டி இரங்குதல் –
உருகுமால் நெஞ்சு -9–6-

எரி கொள் செந் நாயிறு இரண்டுடனே உதய மலை வாய்
விரிகின்ற வண்ணத்த எம்பெருமான் கண்கள் மீண்டவற்றுள்
எரி கொள் செந் தீ வீழ் அசுரரைப் போலே    எம்போலியர்க்கும்
விரிவ சொல்லீர் இதுவோ வையமுற்றும் விளரியதே – – – 82-

உருகுமால் நெஞ்சு -9–6-இதன் விவரணம்

எம் கண்ணன் கள்வம் எனக்குச் செம்மாய் நிற்கும்
அம் கண்ணன் உண்ட என் ஆர் உயிர்க்கோது இது
புன் கண்மை எய்திப் புலம்பி இராப்பகல்
என் கண்ணன் என்று அவன் காட் கரை ஏத்துமே-9-6-6-

காட்கரை ஏத்தும் அதனுள் கண்ணா என்னும்
வேட்கை நோய் கூர நினைந்து கரைந்து உகும்
ஆட் கொள்வான் ஒத்து என் உயிர் உண்ட மாயனால்
கோட் குறை பட்டது என் ஆர் உயிர் கோள் உண்டே–9-6-7-)

—————

பாசுரம் -83-விளரிக் குரல் அன்றில் மென் பெடை-
துறையடைவு-அன்றிலின் குரலுக்கு தலைவி தளர்வதைக் கண்டு தோழி இரங்குதல் –
உண்ணிலாய ஐவரால் -7–1-

விளரிக் குரலன்றில் மென்பெடைமேகின்ற முன்றிற் பெண்ணை
முளரிக் குரம்பையிதுயிதுவாக முகில் வண்ணன் பேர்
கிளறிக் கிளறிப் பிதற்றும் மெல்லாவியும் நைவும் எல்லாம்
தளரிற் கொலோ அறியேன் உய்யலாவது  இத் தையலுக்கே – – -83 –

உண்ணி லாவிய ஐவராற் குமை தீற்றி என்னை உன் பாத பங்கயம்
நண்ணிலா வகையே நலிவான் இன்னம் எண்ணுகின்றாய்
எண்ணிலாப் பெரு மாயனே!இமையோர்கள் ஏத்தும் உலக மூன்றுடை
அண்ணலே! அமுதே! அப்பனே!என்னை ஆள்வானே!–7-1-1-)

————–

பாசுரம் -84-தையல் நல்லோர்கள் குழாங்கள் குழிய-
துறையடைவு-தலைவி தலைவனைக் ககாண விரைதல்–
மையார் கருங்கண்ணி -9–4-

தையல் நல்லார்கள் குழாங்கள் குழிய குழு வினுள்ளும்
ஐய நல்லார்கள் குழிய விழவினும் அங்கங்கெல்லாம்
கைய பொன்னாழி வெண் சங்கோடும் காண்பானவாவுவன் நான்
மைய வண்ணா மணியே முத்தமே என் தன் மாணிக்கமே – -84-

மையார் கருங்கண்ணி கமல மலர்மேல்
செய்யாள் திரு மார்வினில் சேர் திருமாலே
வெய்யார் சுடர் ஆழி சுரி சங்கம் ஏந்தும்
கையா உனைக் காணக் கருதும் என் கண்ணே–9-4-1-

கண்ணே உன்னைக் காணக் கருதி என்நெஞ்சம்
எண்ணே நின்று இயம்பும் கொண்ட சிந்தையதாய்
விண்ணோர் முனிவர்க்கு என்றும் காண்பு அரியாயை
நண்ணாது ஒழியேன் என்று நான் அழைப்பேனே – -9-4-2-

கரு மாணிக்கம் இல் பொருள் உவமை மாணிக்கமே -சிவந்தே தானே இருக்கும்
முத்து போல் குளிர்ந்தும் இருப்பானே
இங்கும் திருவாழி திருக்கையுடன் சேவிக்க ஆசை உண்டே )

——————–

பாசுரம் -85-மாணிக்கம் கொண்டு குரங்கு எறிவு ஒத்து –
துறையடைவு-மழைப் பொழுது கண்டு தலைவி வருந்துதல் –
எம்மா வீடு -2-9-

மாணிக்கம் கொண்டு குரங்கு எறிவு ஒத்து இருளோடு முட்டி
ஆணிப் பொன் அன்ன சுடுர்ப்படுமாலை உலகு அளந்த
மாணிக்கமே என் மரகதமே மற்று ஒப்பாரை இல்லா
ஆணிப் பொன்னே அடியேன் அடி யாவி யடைக்கலமே  – – -85-

எம்மா வீடு -2-9-இதன் விவரணம்

அடியேன் வேண்டுவது ஈதே அங்கே உண்டே

எம்மா வீட்டுத் திறமும் செப்பம் நின்
செம்மா பாத பற்புத் தலை சேர்த்து ஒல்லைக்
கைம்மா துன்பம் கடிந்த பிரானே
அம்மா வடியேன் வேண்டுவது ஈதே –2-9-1-

வாராய் யுன் திருப்பாத மலர்க்கீழ்
பேராதே நான் வந்தடையும் படி
தாராதாய் உன்னை என்னுள் வைப்பில் என்றும்
ஆராதாய் எனக்கு என்றும் எக்காலே –2-9-7-

—————-

பாசுரம் -86-அடைக்கலத்து ஓங்கு கமலத்து அலர் –
துறையடைவு-தலைவனைப் பிரிந்த தலைவி வருந்துதல் –
வள வேழ்வுலகு -1-5-

அடைக்கலத் தோங்கு கமலத்தல ரயன் சென்னி என்னும்
முடைக்கலத்து  ஊண் முன் அரனுக்கு நீக்கியை ஆழி சங்கம்
படைக்கலம் ஏந்தியை வெண்ணெய்க்கு அன்று ஆய்ச்சி வன் தாம்புகளால்
புடைக் கலந்தானை எம்மானை என் சொல்லிப் புலம்புவனே – – 86-

வள வேழ்வுலகு -1-5-இதன் விவரணம் -நினைவு நைந்து பாடும் -திருவாய் மொழி

வள வேழுலகின் முதலாய வானோர் இறையை அரு வினையேன்
களவேழ் வெண்ணெய் தொடுவுண்ட கள்வா என்பன் பின்னையும்
தளவேழ் முறுவல் பின்னைக்காய் வல்லானாயர் தலைவனாய்
இளவேறேழும் தழுவிய எந்தாய் என்பன் நினைந்து நைந்தே –1-5-1-

மாயோனிகளாய் நடை கற்ற வானோர் பலரும் முனிவரும்
நீ யோனிகளைப் படை என்று நிறை நான்முகனைப் படைத்தவன்
சேயோன் எல்லா வறிவுக்கும் திசைகள் எல்லாம் திருவடியால்
தாயோன் எல்லா எவ்வுயிர்க்கு தாயோன் தான் ஓர் உருவனே –1-5-3-

————–

பாசுரம் -87-புலம்பும் கன குரல் போழ் வாய அன்றிலும் –
துறையடைவு–தலை ஆற்றாமைக்கு தோழி இரங்குதல் –
பண்டை நாளாலே -9-2-

புலம்பும் கனகுரல்  போழ்வாய வன்றிலும் பூம் கழி பாய்ந்து
அலம்பும் கனகுரல் சூழ் திரை யாழியும் ஆங்கவை நின்
வலம் புள்ளது நலம்பாடுமிது குற்றமாக வையம்
சிலம்பும்படி செய்வதே திருமால் இத்திருவினையே – — 87-

பண்டை நாளாலே நின் திரு வருளும்
பங்கயத்தாள் திருவருளும்
கொண்டு நின் கோயில் சீய்த்துப் பல்படிகால்
குடி குடி வழி வந்து ஆள் செய்யும்
தொண்டரோர்க்கு அருளிச் சோதி வாய் திறந்து உன்
தாமரைக் கண்களால் நோக்காய்
தெண் திரைப் பொருநல் தண் பணை சூழ்ந்த
திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-1-திருமால் உகப்புக்குக்காகக் கைங்கர்யம்

காய்ச்சினப் பறவை யூர்ந்து
பொன்மலையின் மீமிசைக் கார்முகில் போல்
மாசின மாலி மாலிமான் என்று
அங்கவர் படக் கனன்று முன்னின்ற
காய்சின வேந்தே கதிர் முடியானே
கலி வயல் திருப் புளிங்குடியாய்
காய்சின வாழி சங்கு வாள் வில் தண்டேந்தி
எம்மிடர் கடிவானே–9-2-6-மூலவர் உத்சவர்கள் திருநாமங்கள் இதில் உண்டே

—————

பாசுரம் -88-திருமால் உரு ஒக்கும் மேரு –
துறையடைவு–போலி கண்டு அழிகிற தலைவி ஆற்றாமைக்கு இரங்குதல் –
புகழும் நல் ஒருவன் -3-4-

திருமாலுரு வொக்கும் மேரு அம் மேருவில் செஞ்சுடரோன்
திருமால் திருக் கைத் திருச் சக்கர மொக்கும் அன்ன கண்டும்
திருமாலுருவோடு அவன் சின்னமே பிதற்றா நிற்பது ஓர்
திருமால் தலைக் கொண்ட நங்கட்கு எங்கே வரும் தீ வினையே – – -88-

அந்தாமத்து அன்பு செய்து –
கண்ணுக்கு அடங்கும் படி தன்னை அமைத்து -பிடித்துக் கொள்ளப் பண்ணுவான் -அவனே
நீராய் நிலனாய் –சிவனாய் அயனானாய் -வேதாந்தம் கோஷிக்கும்
கூரார் ஆழி வெண் சங்கு ஏந்தி வாராய் –உலகும் மகிழவே –
அதே போல் இங்கும் மேரு -ஸூர்யன் -போலி கண்டு திருப்தி அடைய மாட்டாரே –அன்ன கண்டும் -ஓக்க கண்டு திருப்தி இல்லாமல்
திருமால் உரு -அவன் ரூபம் –
திருமால் தலைக்கொண்ட -நல்ல அபிநிவேசம் தலைக்கொண்ட –
ஞானாதிகம் அடியாக வந்த பித்து -பக்தியின் உச்சநிலையில் உள்ள எங்களுக்கு எப்படி தீ வினை வரும் –

புகழும் நல் ஒருவன் என்கோ!
பொரு இல் சீர்ப் பூமி என்கோ!
திகழும் தண் பரவை என்கோ
தீ என்கோ! வாயு என்கோ!
நிகழும் ஆகாசம் என்கோ!
நீள் சுடர் இரண்டும் என்கோ!
இகழ்வு இல் இவ் வனைத்தும் என்கோ!
கண்ணனைக் கூவு மாறே.—————–3-4-1—

கூவுமாறு அறிய மாட்டேன்,
குன்றங்கள் அனைத்தும் என்கோ!
மேவு சீர் மாரி என்கோ!
விளங்கு தாரகைகள் என்கோ!
நாவியல் கலைகள் என்கோ!
ஞான நல் ஆவி என்கோ!
பாவு சீர்க் கண்ணன் எம்மான்
பங்கயக் கண்ண னையே.–3-4-2-இங்கும் குன்றமும் தாரகைகளும் உண்டே )

————

பாசுரம் –89–தீ வினைக்கு ஆறு நஞ்சை –
துறையடைவு-தலைவனது கலவிக்கு விரைகிற தலைவி இரங்குதல் –
அங்கும் இங்கும் -8-3-

தீ வினைக்கரு நஞ்சை நல் வினைக்கின்ன முதத்தினை
பூவினை மேவிய தேவி மணாளனை புன்மை எள்காது
ஆவினை மேய்க்கும் வல்லாயனை அன்றுலகீரடியால்
தாவின வேற்றை எம்மானை எஞ்ஜான்று   தலைப் பெய்வனே – – 89-

அங்கும் இங்கும் வானவர் தானவர் யாவரும்
எங்குமினையை யென்றுன்னை அறியகிலாதலற்றி
அங்கம் சேரும் பூ மகள் மண் மகளாய் மகள்
சங்கு சக்கரக் கையவனென்பர் சரணமே-8-3-1-

ஆளுமாளார் ஆழியும் சங்கும் சுமப்பார் தாம்
வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்றில்லை
தாளும் தோளும் கைகளை யாரத் தொழக் காணேன்
நாளும் நாளும் நாடுவன் அடியேன் ஞாலத்தே–8-3-3-)

————

பாசுரம் -90-தலைப் பெய்து யான் உன் திருவடி –
துறையடைவு–தலைவனைப் பிரிந்த தலைவி ஆற்றாது உரைத்தல் –
குரவை ஆய்ச்சியர் -6–4-

தலைப்பெய்து யான் உன் திருவடிச் சூடும் தகைமையினால்
நிலைப்பெய்த வாக்கைக்கு நோற்ற விம்மாயமும் மாயம் செவ்வே
நிலைப் பெய்திலாத நிலைமையும் காண் தோறு அசுரர் குழாம்
தொலைப் பெய்த நேமி எந்தாய் தொல்லை யூழி சுருங்கலதே – – – 90-

குரவை ஆய்ச்சியர் -6–4–விவரணம்
குறைவில்லாமல் அருளிச் செய்து
மாய வினைகளையே அலற்றி இரவும் நன் பகலும் தவிராமல் -அங்கும் உண்டே

குரவை ஆய்ச்சியரோடு கோத்ததும் குன்றம் ஒன்று ஏந்தியதும்
உரவுநீர்ப் பொய்கை நாகங் காய்ந்ததும் உள்பட மற்றும் பல

அரவில் பள்ளிப் பிரான் தன் மாய வினைகளையே அலற்றி

இரவும் நன்பகலும் தவிர்கிலன் என்ன குறைவு எனக்கே.–6-4-1-

நேயத்தோடு கழிந்த போது எனக்கு எவ் வுலகம் நிகரே.–6-4-2-

நுகர வைகல் வைகப் பெற்றேன் எனக்கென் னினி நோவதுவே?–6-4-3-

மேவக் காலங்கள் கூடினேன் எனக்கு என் இனி வேண்டுவதே?–6-4-4-

ஈண்டு நான் அலற்றப் பெற்றேன் எனக்கு என்ன இகல் உளதே?–6-4-5-

பகலிராப் பரவப் பெற்றேன் எனக்கென்ன மனப் பரிப்பே.–6-4-6-

நினைக்கும் நெஞ்சுடையேன் எனக்கினியார் நிகர் நீணிலத்தே.–6-4-7-

காணும் நெஞ்சுடையேன் எனக்கினி என்ன கலக்க முண்டே?–6-4-8-

மலக்கு நாவுடையேற்கு மாறுளதோ இம் மண்ணின் மிசையே?–6-4-9-

நண்ணி நான் வணங்கப் பெற்றேன் எனக்கார் பிறர் நாயகரே-6-4-10-மகிழ்ந்து அருளிச் செய்த திருவாய் மொழி அங்கு )

————–

பாசுரம் -91-சுருங்கு உறி வெண்ணெய் தொடு உண்ட –
துறையடைவு–தலைவி தோழியிடம் தன் கற்பு உணர்த்தி அறத்தோடு நிற்றல் –
வார் கடா அருவி -8–4-

சுருந்குறி வெண்ணெய் தொடு வுண்ட கள்வனை வையமுற்றும்
ஒருங்குற வுண்ட பெரு வயிற்றாளனை  மாவலி மாட்டு
இருங்குறளாகி  இசையவோர் மூவடி வேண்டிச் சென்ற
பெரும் கிறியானை யல்லால் அடியேன் நெஞ்சம் பேணலதே – – -91 –

வார் கடா அருவி -8–4-இதன் விவரணம்

மஹா மதிகள் அச்சம் கெட்டு அமரும் சௌர்யாதிகள் சிற்றாறிலே கொழிக்கும் –(ஆச்சார்ய ஹிருதயம்-175)

இம் மூன்று இடங்களிலும் காணலாம்
சரீரம் தள்ளி ஆத்மாவை
பிரளயம் -வயிற்றில் வைத்து ரஷித்தே தீருவேன்
இரந்தாலும் ரஷித்தே தீருவேன் –

அல்லாதோர் அரணும் அவனில் வேறில்லை அது பொருளாகிலும் அவனை

யல்ல தென்னாவி யமர்ந்தணை கில்லாது ஆதலால் அவனுறைகின்ற

நல்ல நான் மறையோர் வேள்வியுள் மடுத்தநறும் புகை விசும்பொளி மறைக்கும்
நல்ல நீள் மாடத் திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாறு எனக்கு நல் அரணே-8-4-5-)

————-

பாசுரம் -92- பேண் நலம் இல்லா அரக்கர் –
துறையடைவு—தலைவனைக் குறித்து தலைவி இரங்குதல் –
ஆழி எழ -7–4-

பேண லமில்லா வரக்கர் முந்நீர பெரும் பதிவாய்
நீள் நகர் நீளெரி வைத்தருளாய் என்று நின்னை விண்ணோர்
நாள் நிலந்தோய்ந்து தொழுவர் நின் மூர்த்தி பல் கூற்றில் ஓன்று
காண லுமாங்கொல் என்றே வைகல் மாலையும் காலையுமே – – 92-

ஆழ்வார் திரு உள்ளம் அவதாரங்களில் ஈடுபட்டு
இதில் இவர்களுக்காக இப்படிச் செய்வதே-
ஆழி எழ -7–4-இதன் விவரணம்

ஆழி எழச் சங்கும் வில்லும் எழத் திசை
வாழி எழத் தண்டும் வாளும் எழ அண்டம்
மோழை எழ முடி பாதம் எழ அப்பன்
ஊழி எழ உலகங் கொண்ட வாறே.–7-4-1-

ஆறு மலைக்கு எதிர்ந்து ஒடும் ஒலி அர
வூறு சுலாய் மலை தேய்க்கும் ஒலி கடல்
மாறு சுழன்று அழைக்கின்ற ஒலி அப்பன்
சாறு பட அமுதம் கொண்ட நான்றே.–7-4-2-

இதிலும் அவதாரங்கள் ப்ரயோஜனாந்தர்களுக்காக செய்தமை உண்டே

வேந்தற்கு உற்றுழி பிரிதல் -பிரிவாற்றாமை தாங்காமல்
சர்வேஸ்வரன் -தேவேந்திரன் பிரார்த்திக்க -சீதா பிராட்டி பிரிந்து வருந்துவது போல் இங்கும்
ஈஸ்வரன் அவதரித்து செய்த ஆணைத் தொழில்கள் எல்லாம் பாகவத் அபசாரம் பொறாமை அன்றோ -)

—————–

பாசுரம் –93-காலை வெய்யோற்கு முன் ஒட்டுக் கொடுத்த –
துறையடைவு—இருளைக் கண்ட தலைவி -தோழி செவிலி தாயாரை வெறுத்தல் —
ஒரு நாயகமாய் -4–1-

காலை வெய்யோற்கு முன்னோட்டுக் கொடுத்த கங்குல் குறும்பர்
மாலை வெய்யோன் பட வையகம் பரவுவர் அன்ன கண்டும்
காலை நன் ஞானத் துறை படிந்தாடிக் கண் போது செய்து
மாலை நல் நாவில் கொள்ளார் நினையார் அவன் மைப்படியே – – -93 –

ஒரு நாயகமாய் -4–1-இதன் விவரணம்

ஐஸ்வர்யம் கைவல்யம் த்யாஜ்யம் -விரோதி ஸ்வரூபம்

ஒரு நாயகமாய் ஓட உலகு உடன் ஆண்டவர்
கருநாய் கவர்ந்த காலர் சிதைகிய பானையர்
பெரு நாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர்
திரு நாரணன் தாள் காலம் பெறச் சிந்தித் துய்ம்மினோ.–4-1-1-

வாழ்ந்தார்கள் வாழ்ந்தது மாமழை மொக்குளின் மாய்ந்து மாய்ந்து

ஆழ்ந்தார் என்று அல்லால், அன்று முதல் இன்று அறுதியா
வாழ்ந்தார்கள் வாழ்ந்தே நிற்பர் என்பது இல்லை ; நிற்குறில்

ஆழ்ந்தார் கடற் பள்ளி அண்ணல் அடியவர் ஆமினோ.–4-1-6-)

————-

பாசுரம் –94-மைப்படி மேனியும் செந்தாமரைக் கண்ணும் –
துறையடைவு–தலைவியைப் பார்த்த தோழன் தலைவனிடம் வியந்து பேசுதல் –
இருத்தும் வியந்து -8-7-

மைப்படி மேனியும் செந்தாமரைக் கண்ணும் வைதிகரே
மெய்ப்படியால் உன் திருவடிச் சூடும் தகைமையினார்
எப்படி யூராமி லைக்கக் குருட்டாமிலைக்கும் என்னும்
அப்படி யானும் சொன்னேன் அடியேன் மற்று யாது என்பனே — – 94-

இருத்தும் வியந்து என்னைத் தன் பொன்னடிக் கீழ் என்று
அருத்தித் தெனைத்தோர் பல நாள் அழைத்தேற்கு
பொருத்தமுடை வாமனன் தான் புகுந்து என்தன்
கருத்தை யுற வீற்றிருந்தான் கண்டு கொண்டே-8-7-1-

அருள் தான் இனி யான் அறியேன் அவன் என்னுள்
இருள் தானற வீற்றிருந்தான் இதுவல்லால்
பொருள் தான் எனில் மூ வுலகும் பொருள் அல்ல
மருள் தானீதோ மாய மயக்கு மயக்கே–8-7-3-

செவ்வாய் யுந்தி வெண் பல் சுடர்க் குழை தம்மோடு
எவ்வாய்ச் சுடரும் தம்மில் முன் வளாய்க்கொள்ள
செவ்வாய் முறுவலோடு எனதுள்ளத்திருந்த
அவ்வாயன்றி யானறியேன் மற்றருளே–8-7-7-

————

பாசுரம் –95-யாதானும் ஒரு ஆக்கையில் புக்கு —
துறையடைவு–தலைவி அறத்தோடு நிற்கத் துணிதல் –
திருமாலிருஞ்சோலை -10-8-

யாதானும் ஓர் ஆக்கையில் புக்கு அங்கு ஆப்புண்டும் ஆப்பு அவிழ்ந்தும்
மூதாவியில் தடுமாறும் உயிர் முன்னமே  -அதனால்
யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை நல் வீடு செய்யும்
மாதாவினைப் பிதுவை திரு மாலை வணங்குவனே – -95 –

திருமால் இரும் சோலை மலை என்றேன் என்ன
திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
குரு மா மணி உந்து புனல் பொன்னித் தென் பால்
திருமால் சென்று சேர்விடம் தென் திருப் பேரே-10-8-1-

பேரே உறைகின்ற பிரான் இன்று வந்து
பேரேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
காரேழ் கடல் ஏழ் மலை ஏழ் உலகு உண்டும்
ஆரா வயிற்றானை அடங்கப் பிடித்தேனே–10-8-2-

பிடித்தேன் பிறவி கெடுத்தேன் பிணி சாரேன்
மடித்தேன் மனை வாழ்க்கையுள் நிற்பதோர் மாயையை
கொடிக் கோபுர மாடங்கள் சூழ் திருப் பேரான்
அடிச் சேர்வது எனக்கு எளிது ஆயினவாறே–10-8-3-

————

பாசுரம் -96-வணங்கும் துறைகள் பல பல ஆக்கி –
துறையடைவு–தலைவி வெறி விலக்குவிக்க நினைத்தால் –
ஒன்றும் தேவும் -4-10-

வணங்கும் துறைகள் பல பல வாக்கி மதி விகற்பால்
பிணங்கும் சமயம் பல பல வாக்கி  அவையவை தோறு
அணங்கும் பல பல வாக்கி நின் மூர்த்தி பரப்பி வைத்தாய்
இணங்கு நின்னோரை இல்லாய் நின் கண் வேட்கை எழுவிப்பனே – -96 –

ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா
அன்று, நான்முகன் தன்னொடு தேவர் உலகோடு உயிர் படைத்தான்
குன்றம் போல் மணி மாடம் நீடு திருக் குருகூரதனுள்
நின்ற ஆதிப் பிரான் நிற்க, மற்றைத் தெய்வம் நாடுதிரே!–4-10-1-

———-

பாசுரம் -97-எழுவதுவும் மீண்டு படுவதும் பட்டு –
துறையடைவு–தலைவனைப் பிரிந்து தூக்கம் இல்லாமல் தலைவி வருந்துதல் –
பரிவதில் ஈசனை -1-6-

எழுவதும் மீண்டே படுவதும் படு எனை யூழிகள் போய்க்
கழிவதும் கண்டு கண்டு எள்கல் அல்லால் இமையோர்கள் குழாம்
தொழுவதும் சூழ்வதும் செய் தொல்லை மாலைக் கண்ணாரக் கண்டு
கழிவதோர் காதல் உற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே – – 97-

பண்டைய திருமாலைக் கண்டு -காதல் பிறந்து -வளர்ந்து – இருக்குமே

பகவான் ஸ்வாராதன்-பரிவதில் ஈசனை -1-6-

பரிவதில் ஈசனைப் பாடி –விரிவது மேவலுறுவீர்
பிரிவகையின்றி நன்னீர்த் தூயப் –புரிவதும் புகை பூவே –1-6-1-

மதுவார் தண்ணம் துழாயான் –முது வேத முதல்வனுக்கு
எதுவேது என் பணி என்னாது அதுவே ஆட்செய்யுமீடே –1-6-2-

ஈடும் யெடுப்புமிலீசன் -மாடு விடாது என் மனனே
பாடும் என் நா அவன் பாடல் ஆடும் என் அங்கம் அணங்கே –1-6-3-

அணங்கு என ஆடும் என் அங்கம் -வணங்கி வழி படும் ஈசன்
பிணங்கி யமரர் பிதற்றும் -குணங்கு எழு கொள்கையினானே –1-6-4-

மனம் விடாது -கண்கள் அவனையே காணும் அங்கு உண்டே)

————

பாசுரம் -98-துஞ்சா முனிவரும் அல்லாதாவரும் –
துறையடைவு-தலைவனது அருமையை தோழி கூறுதல் –
கெடுமிடராய-10-2-

துஞ்சா முனிவரும் அல்லாதவரும் தொடர நின்ற
எஞ்சாப் பிறவி இடர் கடிவான் இமையோர் தமக்கும்
தன் சார்விலாத தனிப் பெரு மூர்த்தி தன் மாயம் செவ்வே
நெஞ்சால் நினைப்பரிதால் வெண்ணெய் ஊண் என்னும் ஈனச் சொல்லே – -98 –

மூன்று திருவாசல்கள் உண்டே -இங்கு
ச ஸைன்ய -நித்யர் -புத்ர சிஷ்யர் -சனகாதி ப்ரஹ்மாதிகள் -பூ ஸூ ரர்கள் அர்ச்சனத்துக்கு – முடி முக பாதங்களைக் காட்டி -த்வார த்ரய -சாம்யம்

கெடும் இடராய வெல்லாம் கேசவா வென்ன நாளும்
கொடு வினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுக கில்லார்
விடமுடை யரவில் பள்ளி விரும்பினான் சுரும்பலற்றும்
தடமுடை வயல் அனந்த புரநகர் புகுதும் இன்றே-10-2-1-

தீரும் நோய் வினைகள் எல்லாம் திண்ணம் நாம் அறியச் சொன்னோம்

பேரும் ஓர் ஆயிரத்துள் ஓன்று நீர் பேசுமினே-10-2-3-

புண்ணியம் செய்து நல்ல புனலொடு மலர்கள் தூவி
எண்ணுமின் எந்தை நாமம் இப்பிறப்பு அறுக்கும் அப்பால்
திண்ணம் நாம் அறியச் சொன்னோம் செறி பொழில் அனந்த புரத்து
அண்ணலார் கமல பாதம் அணுகுவார் அமரர் ஆவார்–10-2-5-

அமரராய்த் திரிகின்றார் கட்கு ஆதிசேர் அனந்த புரத்து
அமரர் கோன் அர்ச்சிக்கின்று அங்கு அகப்பணி செய்வர் விண்ணோர்
நமர்களோ சொல்லக் கேண்மின் நாமும் போய் நணுக வேண்டும்
குமரனார் தாதை துன்பம் துடைத்த கோவிந்தனாரே-10-2-6-)

———–

பாசுரம் -99-ஈனச் சொல் ஆயினும் ஆக –
துறையடைவு–தலைவி தன் அன்புறுதியைத் தோழிக்கு கூறுதல் –
செஞ்சொல் கவிகாள் -10-7-

ஈனச் சொல்லாயினுமாக எறி திரை வையம் முற்றும்
ஏனத்துருவாய் யிடந்த பிரான் இரும் கற்பகம் சேர்
வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் மற்று எல்லாயவர்க்கும்
ஞானப் பிரானை யல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே – – 99-

செஞ்சொல் கவிகாள் -10-7-இதன் விவரணம்-இங்கு ஈனச்சொல் -நைச்சியம் பாவித்து அருளிச் செய்கிறார்

செஞ்சொற் கவிகாள் உயிர் காத்து ஆட்செய்மின் திருமால் இரும் சோலை
வஞ்சக் கள்வன் மா மாயன் மாயக் கவியாய் வந்து என்
நெஞ்சும் உயிரும் உள் கலந்து நின்றார் அறியா வண்ணம் என்
நெஞ்சும் உயிரும் அவை உண்டு தானே யாகி நிறைந்தானே–9-7-1-

அருளை ஈ என் அம்மானே என்னும் முக்கண் அம்மானும்
தெருள் கொள் பிரமன் அம்மானும் தேவர்கோனும் தேவரும்
இருள்கள் கடியும் முனிவரும் ஏத்தும் அம்மான் திருமலை
மருள்கள் கடியும் மணி மலை திருமால் இரும் சோலை மலையே–10-7-7-

வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் மற்று எல்லாயவர்க்கும் ஞானப் பிரானை யல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே )

————

பாசுரம் -100-நல்லார் நவில குருகூர் நகரான் —
துறையடைவு–
முனியே நான்முகன் -10-10-

நல்லார் நவில் குருகூர் நகரான் திரு மால் திருப்பேர்
வல்லார் அடிக் கண்ணி சூடிய மாறன் விண்ணப்பம் செய்த
சொல்லார் தொடையில் இந்நூறும் வல்லார் அழுந்தார் பிறப்பாம்
பொல்லா வருவினை மாய வன் சேற்று அள்ளல் பொய் நிலமே – – 100-

முனியே நான்முகனே முக்கண் அப்பா என் பொல்லாக்
கனிவாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே என் கள்வா
தனியேன் ஆர் உயிரே என் தலை மிசையாய் வந்திட்டு
இனி நான் போகல் ஒட்டேன் ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே–10-10-1-

சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவு இல் பெரும் பாழேயோ
சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதீயோ
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே–10-10-10-

அவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி
அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொல்
அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
அவா இல் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே–10-10-11-

———————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: