மன்னும் வட நெறியே வேண்டினோம் வேண்டாதார்
தென்னன் பொதியில் செழும் சந்தனக் குழம்பின் ——–40
அன்னதோர் தன்மை யறியாதார் ஆயன் வேய்
இன்னிசை யோசைக் கிரங்கா தார் மால் விடையின் —–41
மன்னு மணி புலம்ப வாடாதார் பெண்ணை மேல்
பின்னு மவ் வன்றில் பேடை வாய்ச் சிறு குரலுக்கு —–42
உன்னி யுடலுருகி நையாதார் உம்பர்வாயத்
துன்னு மதி யுகுத்த தூ நிலா நீள் நெருப்பில் ———43
தம்முடலம் வேவத் தளராதார் காம வேள்
மன்னும் சிலை வாய் மலர் வாளி கோத்து எய்யப் ——-44
பொன்னேடு வீதி புகாதார் தம் பூவணை மேல்
சின்ன மலர்க் குழலும் அல்குலும் மென் முலையும் ——-45
இன்னிள வாடை தடவத் தாம் கண் துயிலும்
பொன்னனையார் பின்னும் திரு வுறுக போர் வேந்தன் ——46
தன்னுடைய தாதை பணியாலர சொழிந்து
பொன்னகரம் பின்னே புலம்ப வலம் கொண்டு ——-47
மன்னும் வள நாடு கை விட்டு மாதிரங்கள்
மின்னுருவில் வெண் தேர் திரிந்து வெளிப்பட்டுக் ——48
கன்னிரைந்து தீய்ந்து கழை யுடைந்து கால் சுழன்று
பின்னும் திரை வயிற்ருப் பேயே திரிந்து உலாவக்———-49
கொன்னவிலும் வெங்கானத்தூடு கொடும் கதிரோன்
துன்னு வெயில் வறுத்த வெம் பரல் மேல் பஞ்சடியால் —–50
மன்னன் இராமன் பின் வைதேவி என்றுரைக்கும்
அன்ன நடைய வணங்கு நடந்திலளே——————51
பின்னும் கரு நெடும் கண் செவ்வாய்ப் பிணை நோக்கின்
மின்னனைய நுண் மருங்குல் வேகவதி என்றுரைக்கும் ———52
கன்னி தன் இன்னுயிராம் காதலனைக் காணாது
தன்னுடைய முன் தோன்றல் கொண்டேகத் தான் சென்று அங்கு ——53
அன்னவனை நோக்கா தழித் துரப்பி வாளமருள்
கன்னவில் தோள் காளையைக் கைப் பிடித்து மீண்டும் போய்ப் ——–54
பொன்னவிலும் மாகம் புணர்ந்திலளே பூம் கங்கை
முன்னம் புனல் பரக்கும் நன்னாடன் மின்னாடும் ———-55
————————————————————————–
மன்னும் வட நெறியே வேண்டினோம் –
மடல் எடுக்கையே புருஷார்த்தம் என்று உபபாதிக்கிற ஸ்ரீ ராமாயணாதிகள்-
வேண்டாதார்-
காம புருஷார்த்தத்தை வேண்டாதார் –
தென்னன் பொதியில் செழும் சந்தனக் குழம்பின் –
சந்தனம் துவளப் பண்ண வற்றாய் இருக்கை –
ருஷிகளையும் துவளப் பண்ண வற்றாய் இருக்கை
துரும்பு எழுந்தாடவும் பண்ண வற்று –
அன்னதோர் தன்மை யறியாதார் ஆயன் வேய்-
சொல்ல வாய் வேம் தன்மை அறியாதார் –
தலை மகனைப் பிரிந்தால் சந்தனம் கொப்பளிக்கும் என்று அறியாதார் –
குழல் ஓசை துடை குத்த உறங்க வல்லார் –
ப்ராஹ்மணர்க்கு ஒத்தும் -பாணர்க்கு பாட்டும் போலே -இடையர்க்கு குழல் –
அந்த ப்ரஹ்மாச்த்ரத்துக்கு ஈடுபடாதார் –
இன்னிசை யோசைக் கிரங்கா தார் –
த்வனியே நஞ்சு –
இது பாதகம் ஆகிறது -அவனுடைய சாந்த்வ நங்களை நினைத்து –
மால் விடையின் மன்னு மணி புலம்ப வாடாதார்-
நாகின் மேல் பிச்சேறின விடையினுடைய த்வனி யோவாதே மணி புலம்ப
அக்னி சகாசத்திலே தளிர் சுருங்குமா போலே சுருளாதார்-
இது தான் இறாய்க்க-அது தான் மேலே விழும்படி –
பெண்ணை மேல் பின்னு மவ் வன்றில் பேடை வாய்ச் சிறு குரலுக்கு –
அன்றிலின் உடைய ஆர்த்த நாதத்தை கேட்டும் உருகி இரங்காதவர்கள் –
பின்னும் –
வாயலகு கோத்து இருக்கை-
முன்பில் விசனத்துக்கு மேலே என்றுமாம் –
சிறு குரல் –
பிரணயத்தால் இளைத்துப் பேசுகிறபடி –
உன்னி யுடல் உருகி நையாதார் –
தங்கள் சம்ச்லேஷத்தை ஸ்மரித்து-
உம்பர்வாயத் துன்னு மதி யுகுத்த –
தலை மகனை ஒழிய நிலவிலே படுக்க வல்லவர்கள் –
உம்பர் வாய் -என்றது ஆகாசத்திலே
உகுத்த -ஸ்வ அனுமானத்தாலே அவனும் பொறுக்க மாட்டாமே உகுத்தான் என்று இருக்கிறாள் –
தூ நிலா –
கொப்பளித்த பின்பு நிலவு என்று அறிந்தாள் –
நீள் நெருப்பில் –
தாஹ்யம் சமைந்தாலும் சமையாது ஒழிகை –
அக்னி கணம் நிலவு என்னும்படி சுடுகை-
கேவல அக்னி தஹிப்பது சரீரத்தை இ றே-
இது ஆத்மாவை தஹிக்கையாலே –நீள் நெருப்பு -என்கிறாள்
நீருக்கு அவியாதே நீர் வண்ணனே அவிக்க வேண்டி -திரு நெடும் தாண்டகம் -18-இருக்கை –
தம்முடலம் வேவத் தளராதார் –
இரவல் உடம்பு அல்லவே
தம்முடலம் வேவ தரிப்பார் உண்டாகாதே
உணர்வும் உயிரும் உடம்பும் மற்று உலப்பினவும் பழுதே யாம் உணர்வைப் பெற -திரு வாய் மொழி -8-8-3-
அப்படி பெற்று இருக்கிறாரும் அல்லரே –
காம வேள் மன்னும் சிலை வாய் மலர் வாளி கோத்து எய்யப் பொன்னேடு வீதி-
காமன் உடைய சிலை இடத்துப் பொருந்தி இருந்துள்ள புஷ்ப பாணங்களை தொடுத்து எய்ய-அழகியதாய் நெடிதான வீதியிலே கையும் மடலுமாய் புறப்படாதே
ஸ்த்ரீத்வம் நோக்கிப் படி கிடந்து புறப்படாதே அடைத்துக் கொண்டு உள்ளே இருக்க வல்லவர்கள்
பொன் –அழகு
மடலூர்வாரை எதிர் கொள்ளும் வீதி –
புகாதார் –
காம பாணங்கள் வாய் மடியும் படி கல் மதிளுக்கு உள்ளே புகாதார் –
தம் பூவணை மேல்-
காந்த கர ஸ்பர்சம் போலே தென்றல் ஸ்பர்சிக்க படுக்கை பொருந்தி கிடக்க வல்லவர்கள்
பூவணை –
மென்மலர்ப் பள்ளி வெம்பள்ளி -திருவாய் மொழி -9-9-4-என்னுமா போலே நெருப்பை உருக்கி வார்த்தால் போலே இருக்கை –
சின்ன மலர்க் குழலும் அல்குலும் மென் முலையும் -இன்னிள வாடை தடவத்
சின்னப் பூவை உடைத்தான குழலையும் இடையையும் முலையையும்
அவன் தடவுமா போலே
நஞ்சூட்டின இளவாடை தடவ –
இள வாடை
பிறரை நலிய இளகிப் பதியா நின்றது –
தாம் கண் துயிலும்-
கண் உறங்குகிற போதே தம்மது அன்று
இரவல் கண்ணாக வேணும் –
பொன்னனையார் –
நெருப்பிலே கிடந்தது நிறம் பெறுவர்கள்-
காட்டுத் தீ கதுவிலும் உறங்க வல்ல பாக்யவதிகள் –
பின்னும் திரு வுறுக –
அவர்களுக்கு நித்யமாகிடுக –
போர் வேந்தன் –
ஆண் புலி –
ரணமுக ராமன் –
சக்ரவர்த்தியைக் கட்டி வைத்து ராஜ்ஜியம் பண்ண வல்ல மிடுக்கு –
ஸ்ரீ பரத ஆழ்வான் தோஷ பிரகரணத்திலே ந ச ராகவச்ய -என்று சப்த சாலங்களையும் ஓர் அம்பாலே உருவ எய்தவர் இத்தைச் செய்திலர் என்று கருத்து –
தன்னுடைய தாதை பணியால் –
சக்கரவர்த்தி ஹிருதயம் பாராதே உக்தி மாத்ரத்திலே –
அரசொழிந்து-
அரசு ஒழிந்து –
வாடல் மாலையைப் பொகடுவாரைப் போலே
தலைச் சுமை என்று
திரு வபிஷேகத்தை ஒழிந்து –
பொன்னகரம்-
பொன்னுலகுக்கு ஒக்கும் காணும் திரு வயோத்யை-
அதுக்கு காரணம் ராம சம்ச்லேஷ ஏக ரசராய் இருக்கை-
அபி வ்ருஷா பரிம்லா நாஸ் சபுஷ் பாங்குர கோரகா-அயோத்யா -59-9-என்கிறபடியே
ஸ்தாவரங்களும் உட்பட ராம குணைக தாரகமாய் இ றே இருப்பது –
பின்னே புலம்ப-
பிரியில் தரியாதே பின்னே தொடர்ந்து கூப்பிட
சுற்றம் எல்லாம் பின் தொடர -பெருமாள் திரு மொழி -8-6-
வலம் கொண்டு –
நீர்மை இ ட்டுப் பேணின பெருமாள் போக வல்லரான மிடுக்கு
வலம் -பலம் –
மன்னும் வள நாடு கை விட்டு –
இவர்களுக்கு க்ரமா கதமாய் -இவ் ஊரில் இனிதான நாடு
மம தவச்வா நிவ்ருத் தஸ்ய ந ப்ராவர்த்தந்த வர்த்மனி
உஷ்ண மாசறு விமுஞ்ச்சந்தோ ராமே சம்ப்ரச்திதே வனம் -என்று
இவையும் அகப்பட நோவு படப் போன படி
திரிந்தது வெம்சமத்து தேர்கடவி -இரண்டாம் திரு -15
இவனாம் தரை கிடப்பான்
எவ்வாறு நடந்தனை எம்மிராமாவோ -பெருமாள் திரு மொழி -9-2-
கல்லணை மேல் கண் துயிலக் கற்றனையோ -பெருமாள் திருமொழி -9-3-
என்று வயிறு பிடிக்கும் படி –
மாதிரங்கள்-
திக்குகள்-
மின்னுருவில் வெண் தேர் திரிந்து வெளிப்பட்டுக் -கன்னிரைந்து தீய்ந்து கழை யுடைந்து-
பேய்த்தேர் -கானல் –
கண்ணுக்கிட ஒரு பூண்டு இல்லாமை
தரை நிரந்தரமான கல்லாயிற்றுக் காணும்
சருகு போலே தீய்ந்து கிடக்கை –
கழை -மூங்கில்
கால் சுழன்று-
கால் -சூறாவழி
அதாவது சுழல் காற்று –
பின்னும் திரை வயிற்ருப் பேயே திரிந்து –
மற்று ஒருவர் இல்லாமை –
உலாவக்–
ஓவாதே இன்னான் பட்டான் இன்னான் படா நின்றான் என்னும் பேச்சாய்
அறக் கொடிதான காட்டின் நடுவே –
கொன்னவிலும் வெங்கானத்தூடு கொடும் கதிரோன் துன்னு வெயில் வறுத்த வெம் பரல் மேல் –
கைகேயி பாசத்தை ஆச்த்தானம் பண்ணினான்
வெய்யில் வறுத்த பரல் தானே எதிரிட்டு வெய்யில் வறுக்க வற்றாகை –
ஆதித்யனை எற்றி வைத்து எரிக்கை –
பஞ்சடியால் –
மெத்தென்று இருந்த அடி -பத்ம சம பிரபா –
மன்னன் இராமன் பின் வைதேவி என்றுரைக்கும்
மன்னன் -நாட்டுக்கு சூடின முடி தவிர்ந்து
இவளுக்கே சூடின முடி
சக்ரவர்த்தி தன்னை நீர் வார்க்கப் புக ஐயர் வந்தார் -என்ன
அதிலே தோற்றால் போலே ராஜ்யத்தை பொகட்ட வேண்டப் பாட்டிலே தோற்ற படி –
இராமன் -பெருமாள் பின் போவார்க்கு இக்காடு அன்றாகில் எது கொள்ள வேணும்
வைதேகி -அவனுக்கு பிறந்தாள் என்னும் வேண்டப்பாடு –
அன்ன நடைய வணங்கு நடந்திலளே-–
நடை கண்டால் மடலூர வேண்டும் படி இருக்கை –
அணங்கு -இவனைக் குறித்து அவள் தைவம் என்ன வேண்டும்படியாய் இருக்கை –
அவளும் கூடப் போனாள் இல்லையோ –
பின்னும் கரு நெடும் கண் செவ்வாய்ப் பிணை நோக்கின்
மின்னனைய நுண் மருங்குல் வேகவதி என்றுரைக்கும் –
பிராட்டியைப் பேசின வாயாலே பின்னையும் பேசலாவாள் ஒருத்தி-
கன்னி தன் இன்னுயிராம் காதலனைக் காணாது தன்னுடைய-
அனுபவித்தவள் அல்லள்-
பிராட்டியைப் போலே
சமா த்வாதச தத் ராஹம் ராகவச்ய நிவேசனே
புஞ்ஞ்ஜா நாமா நுஷான் போகான் சர்வ காம சம்ருத்தி நீ -சுந்தர 33-17-என்றால் –
போலே
அனுபவித்தவள் அல்லள் –
முன் தோன்றல் கொண்டேகத் தான் சென்று அங்கு அன்னவனை நோக்கா-
தமையன் ஒட்டேன் -என்று இவளைக் கொண்டு போக
தழித் துரப்பி வாளமருள்-
ஸ்வயம் வரமும் நாமேயோ -என்றாள் –
கன்னவில் தோள் காளையைக் –
பந்து வர்க்கத்தை அடங்க விட்டுப் பற்றலான தோள்
காளை -தோள் மிடுக்கும் வேண்டாதே பருவமே அமைந்து இருக்கை-
கைப் பிடித்து மீண்டும் போய்ப் –
யுத்தத்தில் எல்லாரும் காணப் பிடித்து –
பொன்னவிலும் மாகம் புணர்ந்திலளே-
ரத்தத்தின் மேலே விழுந்து தழுவினாள்-
பிராட்டி கர வதத்தின் அன்று தழுவினாள் போலே –
————————————————————————–
மன்னும் வட நெறியே வேண்டினோம் –
நாங்கள் ஆதரித்த பஷம் சொல்லக் கேட்கில்
நிலை நின்றதாய்-ஆசார்யர்கள் பரிஹரித்துப் போருகிற சம்ச்க்ருதமான வைதிக மார்க்கத்திலே நின்றோம் –
வேண்டாதார்-
இத்தை ஆதரியாதார்கள் -ஆதரித்த அபிமத விச்லேஷத்தில் நோவு படா நிற்கச் செய்தேயும்
போக உபகரணங்கள் கொண்டு கால ஷேபம் பண்ணி இருக்க வல்ல சாஹசிகர்கள் –
தென்னன் பொதியில் செழும் சந்தனக் குழம்பின் அன்னதோர் தன்மை யறியாதார் –
அவர்கள் தெற்குத் திக்குக்கு நிர்வாஹகனான ராஜாவையும்
அவன் சந்தன கிரியையும்
அப்பர்வதத்திலே படக் கடவதே வெளிறு கழிந்த சந்தனத்தையும்
அதினுடைய குழம்பிப் பூசினால் அழலக் கடவதான வ்யசனத்தையும் அறியாதவர்கள் –
ஆயன் வேய்இன்னிசை யோசைக் கிரங்கா தார் –
அதுக்கு மேலே பிராமணர் குழலூதக் கேட்டால் ஸ்வர வசன வ்யக்திகளை ஆராய்ந்து லஷணம் கொண்டாடி இருக்குமா போலே
இடையனுடைய குழலில் உண்டான இனிதான குழல் த்வநியைக் கேட்டு வ்யசனப் படாதே தரித்து இருக்க வல்லவர்கள் –
மால் விடையின் மன்னு மணி புலம்ப வாடாதார் –
நாகின் மேலே பிச்சாய்த் தொடர்ந்து வருகிற ருஷபத்தின் கழுத்திலே கயிறு இட்டு கட்டுவார் இல்லாமையாலே
ஏக ரூபமாய் அணியரானவர்கள் இத் தர்ம ஹானியை
அனுசந்தித்து கை எடுத்து கூப்பிடுமா போலே த்வனிக்க
அத்தை கேட்டு சத்தை அழிந்த தளிர் போலே சருகாய் போகாதார் –
பெண்ணை மேல் பின்னு மவ் வன்றில் பேடை வாய்ச் சிறு குரலுக்கு -உன்னி யுடலுருகி நையாதார் –
பணியின் மேலே பரஸ்பரம் வாய் அலகைக் கோத்துக் கொண்டு உறங்கின அன்றிலின் உடைய
பரிவுக்கு பாடாற்ற வல்ல சேவலுடைய த்வனிக்கு அன்றிக்கே
மார்த்தவத்தோடே கூடின பேடையினுடைய அதி தாருணமான சிறு குரல் உண்டு –
ஒரு கால் தொடங்கின வார்த்தையைத் தலைக் கட்டும் போது நடுவே பதின்கால்
இளைப்பாற வேண்டும்படி அத்யந்தம் ஆர்த்தமான சப்தம்
அத்தைக் கேட்டு தாங்கள் சேர இருந்தால் போக மத்யே பிறக்கும் சப்தங்களை அனுசந்தித்த அநந்தரம்
கிண்ணகப் பெருக்கானது கரைகளைச் சென்று குத்திக் கரைத்துப் பொகடுமா போலே
சரீரமானது கட்டழிந்து பின்னை ஓர் அவயவியாகக் காண ஒண்ணாத படி சிதிலராய் போகாதார் –
உம்பர்வாயத் துன்னு மதி யுகுத்த தூ நிலா நீள் நெருப்பில் தம்முடலம் வேவத் தளராதார்
மேலே நெருங்கின கிரணங்களை யுடைய சந்த்ரனானவன் தன கையில் நெருப்பை பிறர் கையிலே
பொகடுமா போலே பொகட்ட மறுவற்ற நிலா வாகிற பெரு நெருப்பில்
தாஹ்யம் வேறாய் தான் தாஹமாய் இருக்காய் அன்றிக்கே
இரண்டும் தானேயாய் இருக்கிற நெருப்பு படச் செய்தே சரீரமானது தக்தமாகா நிற்க -அதுக்கு ஈடுபடாதார் –
அல்ப கலஹம் தன்னிலேயும் வந்தால்
ஸ்ருஷ்டஸ்த்வம்-என்கிற போகத்திலே மிக்க நெருப்பு உண்டாகில் அப்படிப் பண்ணுவது இல்லையாகில்
தேடிக் கொண்டு வந்து செய்ய வேண்டுவது இல்லை
இத்தால் அதாஹ்ய வஸ்து படுகிற படி
நீர் சுட்டால் ஆற்றலாவது இல்லையே –
காம வேள் மன்னும் சிலை வாய் மலர் வாளி கோத்து எய்யப் பொன்னேடு வீதி புகாதார்-
காமனாகிற தேவதை சிறிது போது வில் கொண்டு வ்யாபரித்துத் பின்னை நெருப்பு சுட்டது என்று பொகடுகை அன்றிக்கே
கையிலே கொண்டு இருக்கும்படி வேறு ஓன்று வேண்டாத வில்லிலே புஷ்ப பாணங்களைத் தொடுத்து விட
அதுக்கு ஈடுபட்டு கையும் மடலுமாகக் கொண்டு
ஸ்லாக்கியமாய்ப் பெருத்து இருக்கிற வீதியிலே புறப்படாதார் –
நெடு வீதி இரண்டு அருகும் அறத் தையலார் பழித் தூற்றும் படி பெருத்து இருக்கை –
திரு நறையூர் திரு வீதியிலே கையும் மடலுமாய்ப் போகாதார்
திரு நறையூரிலே புக்கார் அடங்கலும் தம்மைப் போலே மடல் எடுக்க வேணும் என்று இருக்கிறார் –
நீணிலா முற்றத்து நின்றிவள் நோக்கினாள்-
தம் பூவணை மேல்-
இவருக்குப் படுத்த படுக்கையிலே தனியே பூவும் தாதும் சுண்ணமுமாகப் பரப்பிக் கொண்டு –
சின்ன மலர்க் குழலும் –
பருவம் செய்கிற பூவை யுடைய குழலும் –
சின்னம் -விரிகை -முடி நெகிழ்ந்த குழல் என்னவுமாம் –
அல்குலும் மென் முலையும் –
விரஹ சஹம் அல்லாத முலை-
மேலும் தென்றல் பட மாந்தும் முலை –
இன்னிள வாடை தடவத் –
காந்தன் உடைய கர ஸ்பர்சத்துக்கு யோக்யமான இடங்களிலே தென்றல் வந்து தடவ –
குன்றூடு பொழில் நுழைந்து -பெரியாழ்வார்திரு மொழி -4-8-9-இத்யாதி –
அதுக்கு இறாய்த்து கண் உறங்க வல்ல சாஹசிகர்கள் –
இனியதான இளையதான வாடை யானது காந்தன் உடைய சமாதியிலே வந்து ஸ்பர்சிக்க –
தாம் கண் துயிலும்-
கெட்டேன் இரவல் கண்ணோ இவர்களுக்கு –
பொன்னனையார் பின்னும் திரு வுறுக –
பொன்னானது நெருப்பிலே இட தர்ம லோபமற அழுக்கற்று நிறம் பெறுமா போலே
விரஹ சமயத்தில் சம்ச்லேஷ சமயத்தில் அனுகூலமான பதார்த்தங்கள் முகம் காட்ட
அவற்றின் சந்நிதியில் முடியாது -அவற்றைக் கொண்டு போது போக்கி ஸ்வரூபத்தைப் பெற்று இருக்கிறவர்கள் –
மடல் எடுக்கும் நம் போல்வாரைப் போல் அன்றே -என்று அவர்களை நிந்தித்து
தங்களுக்கு மேல் வரக் கடவதான சம்பத்தை அனுபவிக்க இருக்கிறவர்கள் அங்கனே இருந்திடுக -என்கிறாள் –
அவர்கள் படி கிடக்க கிடீர் -நம் படி யுடையார்படி கேட்கல் ஆகாதோ –
சர்வ ஜ்ஞ்க்ன குலத்திலே பிறந்தவள் இ றே இப்படி அனுஷ்டிக்கிறான் –
தான் மடலூர வி றே ஒருப்பட்டது
அதுக்கு சிஷ்டா சாரமாக ஆசரித்தார் படி சொல்லப் புக்கு
முந்துறப் பிராட்டியைச் சொல்லுகிறாள்
ஆசாரத்தில் வந்தால் முதலிலே எண்ணப் பட்டவள் இ றே –
ஜனக குலத்திலே பிறந்தவள் இ றே
கர்மணைவ ஹி சம்சித்தி மாஸ்தி தா ஜனகாதய -என்கிறபடியே ஜ்ஞான ப்ராதான்யம் கிடக்கச் செய்தே கர்ம யோகத்தால் அல்லது அபிமத சித்தி இல்லாதாரைப்போலே
அத்தை ஆதரித்து அனுஷ்டித்துக் கொண்டு போருவர்கள் பகவத் ஆஜ்ஞ அனுரூபமாக –
இவ்விடத்தை நஞ்சீயர் பட்டர் ஸ்ரீ பாதத்தை ஆஸ்ரயித்த அநந்தரம்-
பிரபன்னனுக்கு இவை அனுஷ்டேயமோ அன்றோ -என்ன
அனுஷ்டிக்க்கவுமாம் தவிரவுமாம் -என்ன
இவன் செய்யுமாகில் தவிர ஒண்ணாது
தவிருமாகில் செய்யப் படாது இருந்த படி என் -என்ன
நம்முடைய க்ரியா பாகத்திலேயாதல்
நம்முடைய நினைவாலே யாதல் வரக் கடவது அன்றே
அவன் நினைவே இ றே எல்லா வற்றுக்கும் காரணம் -என்று அருளிச் செய்தார் –
இனி பெருமாள் பின்னே போன பிராட்டி படியைச் சொல்லப் புக்கு
அதுக்கு உறுப்பாக பெருமாள் நைரபேஷ்யம் சொல்லுகிறது –
போர் வேந்தன் –
சக்கரவர்த்தி பெருமாளை காடேறப் போ -என்ன
இவ்வார்த்தை செவிப்பட்ட அநந்தரம்
கடுகப் புறப்பட்டுக் கொடு நின்ற இந்த நைரபேஷ்யத்தைச் சொல்லுகிறது –
பிராட்டி படியைச் சொல்லப் புக்கு பெருமாள் படியை பிரசங்கிப்பான் எனஎன்னில்
அதுதன்னிலே கால் தாழ்ந்து அது தன்னையே முடிய நடத்துகிறது –
தன்னுடைய தாதை –
பெருமாள் ஆகிறார் நமக்கு இஷ்ட விநியோக அர்ஹர் அன்றோ -ஆனபின்பு நாம் சொல்லிற்றுச் செய்வர் -என்று
அவன் நெஞ்சிலே படும்படி அவன் பக்கல் ப்ரவண்யராய் இருக்கை –
தயரதற்கு மகன்-திருவாய் -3-6-8-என்னக் கடவது இ றே –
பணியால்
அவனுடைய நினைவளவும் போயிற்று இலர்
இவர் காட்டேறப் போகாதே நம்மைக் காலிலும் கழுத்திலும் இட்டாகிலும் ராஜ்ஜியம் பண்ணினாராகிலோ என்று இ றே அவனுக்கு நினைவு –
அரசு ஒழிந்து
நாட்டை விட்டுக் காட்டேறப் போ என்கிற போ து
இத்தை விடுகிறோமே என்று பின்னாட்டாதே
வனவாசோ மஹோதய-என்று வன வாச முகனாய் இருக்கை-
அபி ஷேகாத் பரம் ப்ரியம் -என்னக் கடவது இ றே –
இவர் முடி சூட ஒருப்பட்ட போதே இவர் முகத்திலே விகாசம் இருந்த படி –
அழகியதாகக் கண்டோம் இ றே
இவர் இத்தை விட்டுக் காட்டேறப் போக ஒருப்பட்ட போது முகத்தில் உண்டான ஐஸ்வர்யம் ஒரு காலும் கண்டிலோம் -என்றார்கள் இறே –
சகரவர்த்தி காட்டேறப் போய் வாரீர் -என்ற அநந்தரம்
ஸ்வா தந்த்ர்யா ஹேதுவான இந்த ராஜ்யத்தை தவிரப் பெற்றோம் இ றே
என்று தலைச் சுமையை பொகட்டுப் போவாரைப் போலே பொகட்டுப் போனார் –
ஸ்ரீ பரத ஆழ்வான் -போற வேணும் -என்று காலைக் கட்டி நிர்பந்திக்க
அப்போதும் ஒரு செவ்வி மாலையைச் சூடி செவ்வி கழிந்த வாறே பொகட்டுப் போவாரைப் போலே யாயிற்றுப் போன படி-
பொன்னகரம் –
அத்தேசத்துக்குப் போலியாய் இருப்பதொரு தேசம் உண்டே
அதுவும் ஒரு தேசமே –
பொன்னகரம் பின்னே புலம்ப
ஒருராக -காட்டேறப்போகில் பிழையோம் -என்று பின்னே கூப்பிட
இஹைவ நித நம் -இத்யாதி
உயிரைப் பொகட்டு கேவல சரீரத்தைக் கொண்டு தரித்து இருக்க வென்றால் எங்கனே இருக்கும் படி -என்றார்கள் இ றே
ராமமேவ அனுபச்யத்வ -கச்சத்வ -மஸ்ருதிம் வாபி கச்சத -என்று பெருமாளை சிறிதிடம் பின்னே தொடர்ந்து போக
அவர் வழி மாறிப் போனவாறே -மீண்டு வந்து தாம்தாம் க்ருஹங்களிலே புகுரப் புக்க வாறே
இவர்களைப் பார்த்து -பெருமாளைக் காட்டேறப் பொகட்டுப் பின்னையும் இருந்தவர்கள் ஸ்திரீகள் -என்று
எங்களுக்கு ஒரு பழி வாராதே அவரை மீட்டுக் கொண்டு வருதல் அன்றியே
அவ்வழியே போய் உங்கள் பேரும் கேளாது ஒழியும்படியாதல் செய்யுங்கோள்
என்று முகத்திலே தள்ளிக் கதவடைத்தார்கள் இ றே –
புத்ரம் ப்ரதமஜம் த்ருஷ்ட்வா லப்த்வா ஜநநீ நாப்ய நந்தத -என்று
முந்துறப் பிறந்தவன் அன்றோ இவனும் காடேறப் போம் என்னும் நினைவாலே
பரத மஜனான புத்ரனைக் கண்ட தாய் உகந்திலள் -என்று இங்கனே சொல்லுவாரும் உண்டு –
பெருமாள் காட்டேறப் போனார் இனி ஆர் மடியிலே வைத்து உகக்கப் பிறந்தாய் என்று தம்தாம்
பிள்ளைகளை உகந்திலர்கள் -என்று ஜீயர் அருளிச் செய்வர் –
வலம் கொண்டு —
இவர்கள் இப்படிக் கூப்பிட்டுத் தொடரா நிற்கச் செய்தேயும்
அது கேட்டு இரங்காதே போன மிடுக்கு –
மன்னும் வள நாடு கை விட்டு –
க்ரமாதமாகை யாலே ஸ்ப்ருஹை பண்ணக் கடவதாய் இருக்கிற நாட்டை விட்டு
நித்ய விபூதியை விட்டுப் போனதால் போலேயோ –
இத்தை விட்டுப் போய்ப் புகுகிற தேசம் தான் இத்தோடு போலியாய் இருப்பதொரு தேசமாகப் பெற்றதோ-
மாதிரங்கள் மின்னுருவில் வெண் தேர் திரிந்து –
திக்கு விதிக்களுக்கு அடைய
மின் ஒளியோடே ஒத்த ஒளியை உடைத்தாய் பேய்த் தேரேராய்க் கிடக்கும் –
வெளிப்பட்டுக் –
பேய்த் தேர் சஞ்சரிக்கும் அளவன்றிக்கே
கண்ணுக்கு விஷயமாய் ஓர் இடத்திலே ஒதுங்க ஒரு சிறு தூறும் இன்றிக்கே
கண்டவிடம் எங்கும் வெளி நிலமாய் –
கன்னிரைந்து –
அவ்வளவு அன்றிக்கே கற்களாலே நெருங்கி அவை தான் கருநிலம் போலே ஓர் இடங்களிலே வந்து திரளும்படி –
தீய்ந்து கழை யுடைந்து –
அங்குள்ள உஷ்ணத்தாலே பச்சை மூங்கில்கள் வெடித்து எரிய
கால் சுழன்று-
அடிக்கிறது சுழல் காற்றேயாய்-ரஜோ ரனே-
பின்னும் திரை வயிற்ருப் பேயே திரிந்து உலாவக்-
அங்கு சஞ்சரிக்கும் பேய்கள் ஆனவை நினைத்த படி ஜீவிக்கப் பெறாமையாலே நரம்பு புடைத்து-அவைதானே தன்னிலே பின்னி பத்தெட்டு மட்டும் திரைந்து கிடக்குமாயிற்று –
பேயே திரிந்து –
மனுஷ்யரும் கலந்து சஞ்சரிக்குமது இன்றிக்கே
இப்படிப் பட்ட பேய்களே சஞ்சரிக்குமத்தனை –
உலாவ –
சிறிது காட்டிலேயோ
அப்பெருமாளும் பெரும் காட்டிலே போய்ப் புகார் என்னும் படி –
கொன்னவிலும் –
அதுக்கு மேலே அவர் பட்டார் இவர்பட்டார் -என்று கொலை சொல்லுகிற
கூப்பீடேயாய் இருக்கை-
வெங்கானத்தூடு –
வெவ்விய காட்டூடே-
வெம் கானத்தூடு நடந்திலளே-என்று அந்வயம்-
கொடும் கதிரோன் துன்னு வெயில் வறுத்த –
உஷ்ண கிரணனான ஆதித்யன் உடைய நெருங்கின கிரணங்களை வறுக்கும் ஆயிற்று
வெம் பரல் மேல் –
அங்கு உண்டான வெவ்விய பரல் கற்களின் மேலே –
பஞ்சடியால் –
அதி ஸூ குமாரமான திருவடிகளாலே –
மன்னன் இராமன் பின் –
இக்காலைக் கொண்டு போம்படியான மதிப்பையும் அழகையும் உடையவன் உடைய பின்னே
வைதேவி என்றுரைக்கும்-
விதேக ராஜன் உடைய பெண் பிள்ளை என்று சொல்லும் படி இருக்கிற
அன்ன நடைய –
அக்ர தஸ்தே கமிஷ்யாமி -என்று முன்னே நாலடியும் அவர்க்கு இருந்த படி
வணங்கு –
தேவதாபிஸ் சமா-த்ரயாணாம் ப்ரதாதீ நாம் ப்ரர்ரத்ரூணாம் தேவதா ச யா -என்கிறபடியே
பிள்ளைகள் நால்வர்க்கும் ஒக்கும் தேவதையாய் இருக்கும் இருப்பு -சீதை என்பதோர் தெய்வம் -பெரிய திரு மொழி -10-2-5–
அதில் மன காந்தையாய் இருக்குமது பெருமாளுக்கே யாயிற்று –
நடந்திலளே––
அவள் போக்கு அடிக் கழஞ்சு பெற்றது இல்லையோ –
ஒரு கந்தர்வ ஸ்திரீயை ஒரு கந்தர்வன் விவாஹம் பண்ணிக் கொண்டு போக
அவளுடைய ப்ராதா வந்து யுத்தம் பண்ணி மீட்கப் பார்க்க
அவனுக்கு மீளாதே-அந்த கந்தர்வனோடே போய்த் தானும் அவனுமாக அனுபவித்தாள் என்று-மகா பாரதத்திலே ஒரு கதை யுண்டு -அத்தைச் சொல்லுகிறது –
பின்னும் –
முதலிலே பிராட்டியைச் சொன்னால் பின்னை சொல்லுவார் அன்றிக்கே இருக்க
அநந்தரம் சொல்லலாம் படியான கீர்த்தியை யுடையாள் ஒருத்தி யாயிற்று இவள் –
கரு நெடும் கண் –
அஸி தேஷணை என்று இ ரே பிராட்டி திருக் கண்ணுக்கு ஏற்றம்
அவளில் இவளுக்கு கண்ணில் பரப்பு ஏற்றமாய் இருக்கும்
செவ்வாய்ப்-
ரஷகனையும் கூட -ஜகத்ச சைலம் பரிவர்த்தயாம் யஹம் -எண்ணப் பண்ணும் ஸ்மிதமத்துக்கு போலியாய் இருக்கை –
பிணை நோக்கின்-
அரை ஷணம் பேர நிற்கில்
ந ஜீவேயம் ஷணம் அபி -எண்ணப் பண்ணும் நோக்குக்குப் போலியாய் இருக்கை
மின்னனைய நுண் மருங்குல் –
நாயகனுக்கு எப்போதும் துணுக துணுக என்று தன்னோடு பணி போரும்படியாய் இருக்கை-
ஸூ மத் யமா -என்கிறவளுக்குப் போலியாய் இருக்கை
வேகவதி என்றுரைக்கும் —
வேகவதி என்று சொல்லுகிற-ஸ்ரீ ராமயணமாகப் பிராட்டி விருத்தாந்தம் சொன்னால் போலே-மஹா பாரதமாக தன்னைச் சொல்லும்படி இருந்தவள் –
கன்னி –
சமா த்வாதஸ தத்ராஹம் -என்று பன்னிரண்டு ஆண்டு கலந்தவள் அக்காலத்தின் சுவடு அறிந்து பின் தொடர்ந்து போன போக்கை
முதலிலே புறப்பட்டுப் போனவள் –
தன் இன்னுயிராம் காதலனைக் காணாது –
காலைப் பிடித்து தலை யளவும் செல்லக் காதலை இட்டு நிரூபிக்க வேண்டும்படி இருக்க்கிறவனைக் காணாமையாலே
தன்னுடைய முன் தோன்றல் கொண்டேகத் –
தன் பின் பிறந்தவனை நியமித்து ஆளும் இன்றிக்கே
தனக்கு முன்னே பிறந்தவனாய்
தன்னை நியமிக்க உரியனானவன் கொண்டு போக –
தான் சென்று
தான் போய்-
அங்கு அன்னவனை –
தான் போகிறவள் எனக்கு அறிவியாதே போவதே -என்று மீட்கப் புக்க ச்நேஹத்தை யுடைய தமயனை –
நோக்காது –
தமையன் என்று பாராதே
அழித்து-
இத்யுக்தா பருஷம் வாக்யம்-என்கிறபடியே அழித்து-
உரப்பி –
வேறோர் ஆஸ்ரயத்துக்கு ஆகாதபடி பண்ணி
ஸ்வயம்வரம் புறம்பு அன்றிக்கே என் பக்களிலேயாய் அற்றதோ என்று –
வாளமருள்-
மதிப்புடைத்தான பூசலிலே-
கன்னவில் தோள் காளையைக்
கல் என்று சொல்லப்படா நின்ற திண்ணிய தோளை உடையனாய்
மேல் விழுந்து அணைக்க வேண்டும்படியான பருவத்தை உடையனானவனை –
கைப் பிடித்து –
தனக்காக பூசலிலே அம்பேற்றவனைக் கையாலே பிடித்து சென்று பிடித்து –
மீண்டும் போய்ப் —
மீண்டு தன் இருப்பிலே போய் –
பொன்னவிலும் மாகம் புணர்ந்திலளே –
பர்த்தாரம் பரிஷச்வஜே -என்கிறபடியே
ஸ்ப்ருஹணீயமான மார்விலே அணைத்தாள் இல்லையோ –
————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply