பெரிய திருமடல்-1-மன்னிய பல் பொறி சேர்-8-துறக்கம் தலைக் கொண்ட பின்னை – -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை/ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார்- வியாக்யானம்-

மன்னிய பல் பொறி சேர் ஆயிர வாய் வாள் அரவின்
சென்னி  மணிக் குடுமித் தெய்வச்  சுடர் நடுவுள்———-1
மன்னிய நாகத்தணை மேலோர் மா மலை போல்
மின்னு மணி மகர குண்டலங்கள் வில் வீசத்————-2
துன்னிய தாரகையின் பேர் ஒளி சேர் ஆகாசம்
என்னும் விதானத்தின் கீழால் -இரு  சுடரை————-3
மன்னும் விளக்காக வேற்றி  மறி கடலும்
பன்னு திரைக் கவரி வீச நில மங்கை———————4
தன்னை முன நாள்  அளவிட்ட தாமரை போல்
மன்னிய சேவடியை வானியங்கு தாரகை மீன்———-5
என்னும் மலர்ப் பிணைய லேய்ந்த மழைக் கூந்தல்
தென்னன் உயர் பொருப்பும் தெய்வ வடமலையும்———6
என்னும் இவையே முலையா வடிவமைந்த
அன்ன நடைய வணங்கேய் அடி இணையைத்—————7
தன்னுடைய அம் கைகளால் தான் தடவத் தான் கிடந்ததோர்
உன்னிய யோகத் துறக்கம் தலைக் கொண்ட—————8

பின்னை

————————————————————————–

மன்னிய-
பத்ரம் தே-பால -73-28
வாழியரோ -திரு விருத்தம் -2-
யாமோஷதி மிவாயுஷ்மன் அந்வேஷசி மஹாவநே-ஆரண்ய 67-15 –
தன் வாக்கில் புகர் தானே அறிகையாலே-என் வாக்கிலே அகப்படாதே என் காலிலே விழுந்து பிழைத்திடுக -என்கிறாள்

பல் பொறி –
வைத்த கண் வாங்க ஒண்ணாத படி இருக்கிற அழகு –

சேர் –
சேர்ப்பாலும் கண்ட சக்கரையும் போலே இருக்கை –

ஆயிர வாய் –
சுக ச்பர்சத்தாலே -ப்ரீதிக்கு -அப்பேறு வெள்ளத்துக்கு போக்கு வீடு கண்டால் போலே இருக்கை –

வாள் அரவின் –
வாள் -ஒளி –
அஹம் புநர்–புநர் யுவேவ -அயோத்யா -12-104-என்னுமா போலே
யுவேவ வசூதேவோ அபூத் விஹாயாப் யாகதாம் ஜராம் –
சென்னி  மணிக் குடுமித் –
சென்னி -பணா –குடுமி -கொழுந்து —

தெய்வச்  சுடர் நடுவுள் –
-தெய்வம்  திவ்யம்-
பணா மணியினுடைய கொழுந்து விட்டு ஓங்குகிற அப்ராக்ருத தேஜஸ்சின்  நடுவே –
கங்கா தரங்கத்தின் உள்ளே இருக்குமவர் போலே –

மன்னி –
போக்யதையின் மிகுதியாலே
பிராட்டி திரு முலைத் தடத்தினாலே வீசி வில்லிட்டு எழுப்பினாலும் எழுப்ப ஒண்ணாது இருக்கை –

ய நாகத் –
அந்நாகம்
வாளரவாகிற நாகம் -வாள் -ஒளி

தணை மேல்-
திரு வநந்த ஆழ்வான் ஆகிற படுக்கையின் மேல் –

ஒர் மா மலை போல் –
ஓர் அஞ்சன கிரி படிந்தால் போல் இருக்கை –
மின்னு மணி மகர குண்டலங்கள் வில் வீசத் –
திரு மேனியின் நிறத்தால் வந்த இருட்சிக்கு கை விளக்குப் பிடித்தால் போலே இருக்கிற தாயிற்று –
திரு மகர குண்டலங்களின் புகர்-மின்னா நின்றுள்ள ரத்னன்களை உடைத்தான மகர குண்டலம்-தன்னுடைய ஒளியைப் பரப்ப

துன்னிய தாரகையின் பேர் ஒளி சேர் ஆகாசம் என்னும் விதானத்தின் கீழால் –
நெருங்கி இருக்கிற நஷத்ர தாரா கணங்களின் உடைய மிக்க தேஜச்சை யுடைத்தாய் இருந்துள்ள
ஆகாசம் போலே இருக்கிற திரு முத்தின் பந்தற் கீழே -என்னுதல்-
ஆகாசம் ஆகிற திரு முத்தின் பந்தற் கீழே -என்னுதல்
ஆகாசம் போலே என்ற பொதி கட்டின – என்று தோற்றி இருக்கிற படி
ஆகாசத்தை திருஷ்டாந்தமாகச் சொல்லிற்று அச்சமாய் இருக்கையாலே –

இரு  சுடரை மன்னும் விளக்காக வேற்றி –
இவன் போன இடம்  எங்கும்  கூடப் போமவர்கள் இ  றே ஆழ்வார்கள் –
ஆகையாலே திரு வாழி ஆழ்வானையும் -ஸ்ரீ பாஞ்ச ஜன்ய ஆழ்வானையும் நித்யமான விளக்காக ஏற்றி
அங்கன் அன்றிக்கே
சந்திர ஸூ ர்யர்களைச் சொல்லிற்று ஆகவுமாம்-
ஏகார்ணததிலே  சிருஷ்டி உன்முகனாய்க் கண்  வளர்ந்து அருளுகிற போதாகக் கார்ய பூதரான இவர்கள் உளரோ எப்போதும் -என்னில்
அதுக்காக இ றே முற்பட ஒரு பொருள் சொல்லிற்று
அன்றியே
கவி பாடுகிற இவர் தாம் பிற்பட்ட காலத்தில் உள்ளார் ஒருவராகையாலே தமக்கு முற்பட்டாரைச் சொல்லத் தட்டில்லை இ றே –

மறி கடலும் பன்னு திரைக் கவரி வீச-
சர்வேஸ்வரன் திரு வநந்த வாழ்வான் மேலே கண் வளர்ந்து அருளுகிற போதை அழகைக் கண்ட ஹர்ஷத்தாலே
கீழ் மண் கொண்டு மேல் மண் எறிகிற கடலானது –
தன்னுடைய பரம்பின திரைகள் ஆகிற கவரியை வீச
பெரும் திரையாய் வந்து முறிந்த குறும் திவலையானது
திருவடிகளிலே வந்து உதைத்து அது துடை குத்த உறங்குவாரைப் போலே யாயிற்று கண் வளர்ந்து அருளும் படி –
பன்னு  திரைக் கவரி வீச — என்கிற விடம் –மன்னிய சேவடியை -என்கிற இடத்தில் அந்வயிக்கக் கடவது –
நில மங்கை தன்னை முன நாள்  அளவிட்ட –
முன்னொரு நாள் பூமிப் பிராட்டியை அளந்த

தாமரை போல் மன்னிய சேவடியை –
திருவடித் தாமரையை நோக்கி –மறி கடலும் பன்னு திரை கவரி வீச –
அலை எறிகிற சமுத்திர ராஜன்
பரம்பின அலைகள் ஆகிற சாமரங்களை வீசப் பெற்றும்

வானியங்கு தாரகை மீன் என்னும் –
ஆகாசத்தில் திரியும் நஷத்ரங்கள் ஆகிறது –
பூர்வ ஷணத்திலே போல் தோன்றா நின்றது யாயிற்று இவர்க்கு பாவனா பிரகர்ஷத்தாலே –

அளவிட்ட –தாமரை போல்-
பண்டு திரு வுலகு அளந்து அருளின திருவடிகள் என்று மூதலிக்கலாம்   படி செவ்வித் தாமரைப் பூ போலே இரா நின்றது –

மன்னிய சேவடியை —
சௌகுமார்யத்துக்கு ஒரு போலியாகச் சொன்ன வித்தனை இ றே தாமரையை –
அனந்தர ஷணத்திலே செவ்வி மாறிப் போகையாலே
மாறாச் செவ்வியை  உடைத்தான திருவடிகளை மறி கடலும்
பன்னு திரைக் கவரி வீச -என்று அந்வயம் –

வானியங்கு தாரகை மீன் என்னும் -மலர்ப் பிணைய லேய்ந்த மழைக் கூந்தல் –
ஆகாசத்தில் சஞ்சரியா நின்றுள்ள நஷாத்ரா தாரா கணங்கள் ஆகிற
கலம்பகன் மாலையாலே அலங்க்ருதமாய்-
அத்தை உள்ளே அடக்கும்படி ஸ்ரமஹரமாய் இருந்துள்ள மேகமாகிற அளக பாரத்தை  உடைத்தாய் இருக்கை-
நாயகனாகிற சர்வேஸ்வரன் இவன் ஒரு கால் திருக் குழலை குலைத்து நுழுந்த அக்காலத்திலே சர்வ வித போக்யங்களையும் பெற்றானாய் இருக்கை

தென்னன் உயர் பொருப்பும் தெய்வ வடமலையும்என்னும் இவையே முலையா –
ஆர்யர்கள் இகழ்ந்த ம்லேச்ச பூமியில் உள்ளார்க்கு நிர்வாஹகரான ஷத்ரியர்கள்
என்னது என்னது -என்று அபிமா நிக்கும் படி இருக்கிற
தெற்குத் திருமலையும்
சம்சாரிகளும் வந்து ஆஸ்ரயிக்கலாம் படி  இருக்கிற மேன்மையிலே ஏற்றத்தை உடைய வடக்குத் திரு மலையும்
இப்படிச் சொல்லப் படுகிற இவை இரண்டும் முலையாக-
பெரியன சில மலைகளைச் சொல்ல வமையும் ஆகில் மேரு ப்ரப்ருதிகளைச் சொல்லாது ஒழி வான் ஏன் என்னில்
காந்தன் விரும்பி விடாதே கிடககுமாவை இ  றே முலை யாவன  –
அப்படியே சர்வேஸ்வரன் விரும்பி விடாதே கிடக்கிற தேசம் இ றே
நங்கள் குன்றம் கை விடான் -திருவாய் மொழி -10-7-4–இ றே –
ஆகையால் இ றே அவற்றை முலையாகச் சொல்லுகிறது –

ஸூ பக்ஸ் சித்ரா கூடோ அசௌ கிரி ராஜோபமோ கிரி -அயோத்யா -98-12-
இந்த சித்ர கூடத் தினத்தனை வீறுடையார் இல்லை –
கண்ணுக்கு அழகியதாய் இருக்கச் செய்தே விருப்பம் இல்லாதன சில உண்டு இ றே
அங்கன் அல்ல இ றே இதின் படி
திரு முலைகளோடு ஒக்கச் சேர்க்கலாம்
காகுத்ச்த யஸ்மின் வசதி –
நல்லது கண்டால் விட மாட்டாது விருப்பத்தைப் பண்ணி இருக்கிறார்
யதத் யாஸ்தே மஹா தேஜா –குபேர இவ நந்த நே –
துஷ்ட சத்வ பிரசுரமான இந்த பிரதேசத்திலே குபேரனானவன் தன் பூந்தோட்டத்தை விடாதே வர்த்திக்குமா போலே வர்த்திக்கிறார்
அப்படிப் பட்ட சித்ர கூடத்தோபாதி வீறுடையார் இல்லை –

வடிவமைந்த –
அம முலைகளுக்குத் தக்கபடி அவ்வடிவு தானும் பொருந்தி இருக்கை –

அன்ன நடைய –
அன்னத்தோடு ஒத்த நடையை யுடையளாய்
சம்போகார்த்தமாக நாயகன் முன்னே நாலடி நடந்தால் அவன் இதுக்கு அவ்வருகு பின்னை ஒன்றுக்கு ஆளாகாத படி இருக்கை

வணங்கேய் –
அப்ராக்ருதமான ஸ்வ பாவத்தை உடைத்தாய் இருக்கை –
தேவ தாபிஸ் சமா -பால -77-30-என்கிறபடியே
பிராட்டி பிள்ளைகள் மூவர்க்கும் தைவமாய் இருந்தாள்
பெருமாளுக்கு மன காந்தையாய் இருந்தாள்
ஆக நால்வர்க்கும் ஒக்குமாயிற்று ஆஸ்ரயணீயை யாமிடத்து –

அடி இணையைத் –
இப்படி அப்ராக்ருத ஸ்வ பாவையாய் இருக்கிற இவளும் கூட கூசும்படி
அதி ஸூ குமாரமான திருவடிகள் –

தன்னுடைய அம் கைகளால் –
அவன் தனக்கும் கூட பிரார்த்தித்துப்ப் பெற வேண்டும் படி
இருக்கிற தன்னுடைய அழகிய திருக் கைகளாலே –

தான் தடவத் –
திருவடிகளை வருடப் பெறில் உள்ளாய்-
இல்லை யாகில் இல்லை யாம் படியான ஆற்றாமை யுடையனாய்க் கொண்டு தடவ –
ஆக -கடலானது கவரி வீச
ஸ்ரீ பூமிப் பிராட்டி திருவடிகளை வருட வாயிற்று
கண் வளர்ந்து அருளுவது –

தான் கிடந்து –
ஸ்வ தஸ்   சர்வஞ்ஞானாய் -ஒன்றால் ஒரு காலுஷ்யம் இன்றிக்கே இருக்கக் கடவ அவன்
இவள் உடைய ஸ்பரசத்தாலே  வந்த ஸூ காத்தாலே இரண்டும் அறியாதே கிடந்தது உறங்கா நிற்கும் –

தோர் உன்னிய யோகத் துறக்கம் தலைக் கொண்ட பின்னை   –
அல்லாதார்க்கு முன்பே தானே நெஞ்சு இருண்டு இருக்கும் இ றே
அதுக்கு மேலே கண்ணைச் செம்பளித்தவாறே புறம்பு பிரகாசிக்கிற இதுவும் போய் இருளும் இ றே –
இவனுக்கு அங்கன் ஒன்றும் இன்றியே திருக் கண்களை செம்பளித்தால் அகவாயில்
பிரகாசிக்குமதுக்கு வர்த்தமானாய் இருக்கும் –
உன்னுகை –அனுசந்திக்கை -யோகத் துறக்கம் –
ரஜஸ் தமஸ் ஸூ க்களால் அபி பூதனாய்உறங்குகிறான் -அன்று
உறங்குவான் போல் யோகு செய்த பெருமான் -திரு வாய் மொழி -5-4-11-யோக நித்தரை இ றே
அவை நல வழியாக கரை சேரும் வகையதோ -என்று ஜகத் ரஷண சிந்தை பண்ணிக் கொண்டாயிற்று கண் வளர்ந்து அருளுகிறது –

தலைக் கொண்ட பின்னை  
காலப் பூ அலர்ந்தால் போலே உணர்ந்த அநந்தரம்-
ஸ்ருஷித்து அல்லது நிற்க ஒண்ணாத படி யானவற்றைச் சொல்லுகிறது –

————————————————————————–

ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார்- வியாக்யானம்-

மன்னிய –
மடல் எடுத்து அவனை அழிப்பதாக ஒருப்பட்ட தன் துணிவின் ஊற்றத்தை  அனுசந்தித்து என் ஒருப்பாடு சாலப் பொல்லாதே இருந்தது –
அவன் வரவு தாழ்த்து என் கையிலே தான் அழியாதே
நான் மடல் எடுப்பதற்கு முன்னே வந்து முகம் காட்டி அவன் உஜ்ஜீவித்திடுக –
மடல் எடுக்கை யாகிறது -எதிர் தலைக்கு குண ஹானியை விளைக்கை –
குணமே தாரகமாக நினைத்து இருக்கும் விஷயம் ஆகையாலே குண ஹானியை விளைக்கை யாகிறது
வஸ்துவினுடைய ஸ்வரூபத்தை அழிக்கை இ றே –
நிரூபகத்தை ஒழிய நிரூப்ய சித்தி கிடையாதே
நான் குண ஹானியை விளைத்து தன்னை அழியாமே
அதுக்கு முன்னே வந்து முகம் காட்டி உஜ்ஜீவித்திடுவான் –
அவ்வுபாயம் கொண்டு காணும் மடலூர்ந்து அவனை அழித்துப் பெறப் பார்க்கிறது –
மடல் எடுத்து வியாபரிக்கும் அதுக்கு அஞ்சுகை அன்றிக்கே
மடல் எடுப்பதாக உத்யோகித்த மாத்ரத்திலே அஞ்சுகிற இவள் எங்கனே மடல் எடுத்து அவனைப் பெற நினைத்து இருக்கிற படி –
வாழி -என்கிற வோபாதி மங்கள வாசகமாய் இருக்கும் –
வாழி -என்றது வாழ்ந்திடுக -என்றபடி இ றே
அப்படியே இங்கும் மன்னிய என்றது நித்தியமாய் உஜ்ஜீவித்திடுக -என்றபடி இ றே
அழிக்க ஒருப்பட்டாருக்கும் நினைத்தால் மங்களா சாசனம் பண்ண வேண்டும்படி யாய்க் காணும் விஷய வைலஷண்யம் இருக்கிற படி –
அதவா-
மன்னிய –
இக்காம புருஷார்த்தம் நிலை நின்றிடுக -என்றுமாம் —

இனி திரு வநந்த ஆழ்வான் உடைய வடிவைச் சொல்லுகிறது –
பல் பொறி –
பலவாய் இருந்துள்ள பொறிகளை உடையனாய்
ஆயிரம் பணங்களையும் உடையனாய் இருக்குமாகில்
பரஸ்பரம் சேராதே வைரூப்யாவஹமாய் இருக்குமோ -என்னில் –

சேர் –
இவை அடையத் தகுதியாய் இருக்கும் –
நரத்வ சிம்ஹங்கள் சேர்ந்தால் போலே –

ஆயிர வாய் –
சர்வேஸ்வரன் சாய்ந்து அருளினால் -அத்தால் வந்த ஹர்ஷத்துக்கு போக்கு விட்டு  ஏத்துக்கைக்கு  இ றே பலவாய்
வெள்ளம் மிகுந்தால் போக்கு வீடாக பல வாய்த்தலை உண்டாமா போலே ஆயிரம் வாயை யுடையனாய் இருக்கும்
இச் சேதனன் இஸ் சரீரம் விட்டால் கொள்ளும் நாநா போகத்துக்கும்  நாநா பாவனத்துவத்துக்கும்
ஸூ சகமாய் இருக்கிறது –
ஸ ஏ நான் ப்ரஹ்ம க மயதி-என்றும் –
ஸ எகத்தா பவது -என்றும்  –
சர்வேஷூ லோகேஷூ காமசாரோ பவதி -என்னக் கடவது இ றே
அநேக சரீரம் பரிக்ரஹம் பண்ணிக் கொண்டு நின்று
அடிமை செய்ய வேண்டும்படி யாயிற்று
கைங்கர்யத்தின் ருசியும் போக்யதையும் இருக்கும் படி –

வாள் அரவின்-
அரவு -ஆதி சேஷன் -வாள் -ஒளி –
இத்தால் சொல்லிற்று –
ஸ்வ இதர சமஸ்த சித் அசித் வஸ்துக்களுக்கும் நிருபாதிக சேஷி யாகையாலே
சேஷித்வ ஸூ சகமான புகர்  அவனுக்கு குறை வற்று இருக்குமா போலே
அவன் திருவடிகளிலே சர்வவித தாஸ்யத்தையும் பண்ணக் கடவனான இவனுடைய  சேஷத்வத்தால்  வந்த புகர் இருக்கிறபடி –
பரம சாம்யா பத்தி யுண்டாய் இ றே இருப்பது –
யதோசிதம்-என்னக் கடவது இ றே
சேஷ இதீரிதே ஜனை -என்று அது உள்ளவர் என்னக் கடவது இ றே
பெரு மக்கள் உள்ளவர் -என்று இ றே சொல்லுவது –

வஸ்து சத்பாவம் நித்யமாய் இருக்கச் செய்தே
முன்பு சில நாள் பிரகிருதி வச்யராய்க் கொண்டு சம்சாரித்து அத்தாலே -அசந்நேவ-என்னலாம் படியாய்
பின்பு ஏதேனும் ஒரு ஸூ க்ருத விசேஷத்தாலே பகவத் கடாஷம் பிறந்து -அவ்வருகு பட்டு
சந்த மேநம் ததோ விது-என்னும்படியாகை அன்றிக்கே
நித்யமான சேஷத்வ ஸ்வரூப சித்தியை யுடையராய்
தாங்கள் அவனை நித்ய அனுபவம் பண்ணிப் போரச் செய்தேயும்
தாங்கள் இவனுடைய பேற்றை அனுசந்தித்து
அவனும் ஒருவனே அவனுடைய பரிமாற்றமும் ஒரு பரி மாற்றமே என்று எப்போதும் ஒக்க கொண்டாடா நிற்பர்கள்-

சென்றால் குடையாம் –
யதோசிதம் -என்கிறபடியே
நான் இங்கே குடையாக நின்றேன் இங்கே போரு-என்னாதே
சர்வேச்வரனுக்கு ஒரு போது அபேஷையானால்  அப்போது குடையாய் நிற்கும் –
ஸ்ரீ மதுரையில் நின்றும் அவன் தான் திரு வாய்ப்பாடியிலே போகிற போது வர்ஷம் அவன் திரு மேனியில் படாத படி தன் பணங்களாலே மறைத்துக் கொண்டு போனான் இ றே-

இருந்தால் சிங்காசனமாம் –
நான் இங்கே சிம்ஹாசனமாய்க் கிடக்கிறேன் நீ இங்கனே போந்திரு-என்கை அன்றிக்கே
சர்வேச்வரனுக்கு துர்யோதனாதிகள் பொய்யாசனம் இட்ட போது
சிம்ஹாசனமாக என்று  நினைத்த போது சிம்ஹாசனமாய் இருக்கும் –

நின்றால் மரவடியாம் –
சஞ்சாரம் அபேஷிதமான போது சிம்ஹாசனமாய்க் கிடக்க ஒண்ணாதே -அப்போது பாதுகமாம்
மரவடியைத் தம்பிக்கு வான் பணையம் வைத்துப் போய் -இத்யாதி –

நீள் கடலில் என்றும் புணையாம் –
பரப்புடைத்தன கடலிலே சமனிலாத தன் தாளும் தோளும் முடிகளும் பல பரப்பி கண் வளர்ந்து அருளும் போது
வெள்ளை வெள்ளத்தின் மேலொரு பாம்பை மெத்தையாக விரித்து -என்கிறபடியே
திருப் பள்ளி மெத்தையாய் இருக்கும் –

அணி விளக்காம் –
திருமேனியின் நிறத்தாலும் தத் சாம்யமான திருக் குழலின் நிறத்தாலும் வந்த இருட்சியைப்-போக்குகைக்கு பிரகாசாவஹமான மங்கள தீபமாம் –

பூம் பட்டாம் –
சர்வேஸ்வரன் திரு மேனிக்குத் தகுதியான அழகிய திருப் பரிவட்டமாம் –
பரிவட்டமாவது -பும்ஸ்த்வாவஹமாய் இருக்குமது இ றே-

புல்கும் அணையாம் –
திருவடிகளை நீட்டுதல் திருக் கைகளை பொகடுதல் செய்ய வேண்டின போதைக்கு
எங்கும் பக்க நோக்கறியான் -என்கிறபடியே
பிராட்டியையும் புரிந்து பார்க்க ஒண்ணாத படி
சர்வ கந்தமான தழுவு அனையாய் இருக்கும் –

ஆர்க்குத் தான்-என்னில்
திருமாற்கு –
உத்தர கண்ட பிரக்ரியையாலே
விசிஷ்ட வேஷத்திலே யாயிற்று –

இப்படி இருக்கிற இவன்  தான் ஆர் என்னில்
அரவு
உடையவர்க்கு அழித்து வேண்டும் ஆபரணம் பண்ண லாம் படியான கட்டிப் பொன் போலே –

யதா யதா ஹி-இத்யாதி
நீயும் நானும் சேர்ந்த சேர்த்தியிலே நினைத்த கார்யம் எல்லாம் கொள்ளலாம் படி
கை வந்திருக்குமவள் மகனை -கெடுவாய் நீ காட்டிலே போ -என்கைக்கு ஒருப்படுகிறது ஏன் -என்கைக்காக சொல்லுகிறான் –

யதா யதா ஹி –
இருவருமான சேர்த்திக்கு உறுப்பாக தன்னைச் சமைத்து இருக்கும் இதுக்கு
மேற்பட தனக்கே இருக்கும் ஆகாரம் இல்லை -என்கை –

கௌசல்யா தா சீவத்-
நம்மோடு ஒக்க பட்டம் காட்டப்படும் பிரதான மகிஷியானவள்
நாம் இருவரும் சேர்ந்த சேர்த்தியிலே -இற்றைப் போகு இற்றை வருவை-என்னலாம் படி
தன்னை தாழ விடுமவள்-

சகீவச –
இப்படி தாழ நின்று பரிமாறினவளோடு நெஞ்சில் கிடந்தது சொல்ல ஒண்ணாது இருக்குமோ என்னில்
இருவரும் சேர்ந்த சேர்த்தியில் பிறந்த ஏற்றத் தாழ்வுகள் சொல்லுகைக்கு தோழியாய் இருக்கும்   –

பார்யாவத் –
பிறரோடு கலந்த போது நெஞ்சில் கிடந்ததை வாய் விட்டுச் சொல்லுகை யாவது
இத்தலையில் போக ஸ்ப்ருஹையை அறுத்ததாய் இருக்குமே
அங்கனே இருக்கச் செய்தே போக ஸ்ப்ருஹை பிறந்ததாகில் அவ்வளவிலும் பார்யையாய் இருக்கும்  –
பாரதந்த்ர்யத்தின் எல்லை இருக்கும் படி
நிலை நின்ற பார்யாத்வமும் அல்லாத வற்றோ பாதி வந்து கழியுமவையாய் இருக்கிறபடி –

பகி நீவச்ச –
பிறரோடு பரிமாறும் இடத்தில் நெஞ்சாலும் கணிசியாது இருக்கும்
இத்தை அறுக்க நினைத்தால் அதுக்குச் சொல்லும் பாசுரம் இது இ றே
கூசு முறையாய் கடக்க நிற்கும் -என்றபடி –

மாத்ருவச்சோப திஷ்டதே –
உறவற்று கடக்க நிற்கும் அளவன்றிக்கே இவன் தானும் தனக்கு வேண்டினாருமாய்ப் பரிமாறும் இடத்தில்
இவனுக்கு வேண்டும் உபகரணங்களை யும் தேடிக் கொடுத்து
இவனுக்கு பிறக்கும் ப்ரீதியும் தன் பேறாக உகக்கும் மாதாவாய் இருக்கும்
வகுத்த சேஷி பக்கல் சேஷ பூதன் ஸ்வரூப அனுரூபமாகப் பரிமாறும்
பரி மாற்றத்தை சேஷித்வம் ஔபாதிகமானவிடத்திலேயும்
சிலர் இப்படி பரிமாறக் கண்டோம் இ றே –

அரவு –
தன் மேல் சாய்கிற சர்வேஸ்வரனுக்கு நித்ய ஸ்ப்ருஹநீயமான நாற்றம் குளிர்த்தி மென்மை என்றால் போல் சொல்லுகிற இவற்றை உடைத்தாய் இருக்கை-

இப்படிப் பட்டவனுடைய
சென்னி –
சென்னி உண்டு -சிகரம்

மணிக் குடுமித் தெய்வச் சுடர் நடுவுள்   
அதிலே உண்டான மணி உண்டு -ரத்னம் –
பிரதானங்களுக்குத் தலையிலே மஹார்க்கமாய் இருப்பதொரு ரத்னம் உண்டாகச் சொல்லக் கடவது –
அந்த மணியினுடைய குடுமி உண்டு -சிகை –
அதில் உண்டான தெய்வச்   சுடர் நடுவுள்
அப்ராக்ருதமான தேஜஸ் சின்னுள்ளே –
வாள் -என்று கீழே ஒளியைச் சொல்லிற்று
இங்கு தெய்வச் சுடர் என்று தேஜஸ் சைச் சொல்லா நின்றது –
இவற்றுக்கு வாசி என் என்னில்
சர்ப்ப ஜாதிக்கு அர்ஹமாம் படி அவன் பிரக்ருதியில் உள்ள தேஜஸ் சை சொல்லிற்று அங்கு
இங்கு அவனை அனுபவிக்கையால் வந்த தேஜஸ் சை சொல்லுகிறது –

தெய்வச் சுடர் –
நாட்டில் தேஜோ பதார்த்தங்களின் உடைய தேஜஸ் போலும்  அன்றிக்கே –
ஈஸ்வரனுடைய தேஜஸ் போலும் அன்றிக்கே
அவனை நித்ய அனுபவம் பண்ணி -அவனோட்டை ஸ்பர்ச்த்தாலே -இவனுக்கு வந்த தேஜஸ் ஸூ அவனுக்கும் கூட இல்லை யாயிற்று
தான் கிடந்து -என்கிற இடத்து இதுக்கு அந்வயம்
கங்கா தர மத்யே குடி இருப்பாரைப் போலே
திரு வநந்த ஆழ்வான் உடைய தேஜஸ் தரங்க மத்யே யாயிற்று சர்வேஸ்வரன் கண் வளர்ந்து அருளுகிறது
பணா மணி வ்ராத மயூக மண்டல பிரகாரச நா நோ தா திவ்ய தா மனி -என்னக் கடவது இ றே-

மன்னிய நாகத்தணை மேலோர் மா மலை போல்-
இத்தனையும் திருஷ்டாந்தம் –
மன்னிய நாகத்தணை-
படுக்கை ஆளும் ஒரு கால் உதறிப் படுக்க வேண்டா –
இதில் சாயுமவனுக்கு புது மாறாதே யிருக்கை-
மேலோர் மா மலை போல்–
இப்படிப் பட்ட படுக்கையிலே சாய்ந்ததொரு நீல கிரி போலே யாயிற்று
திருவநந்த வாழ்வான் மேலே சர்வேஸ்வரன் சாய்ந்து அருளினால் இருக்கும் படி –
இது தான் அபூதோபமை-
மா -என்று கறுப்பாய்-நீல கிரி -என்ற படி
நீலத் தட வரை மா மணி -இத்யாதி  –
நீக்கத் தட வரை கிடந்தது போல் மா மணி திகழ அரவணை வேலைத் தலைக் கிடந்தாய் –
ஸ்ரீ கௌஸ்துபம் ஆகிற ஆபரணம் தன பக்கலிலே உஜ்ஜ்வலமாம் படி திருவநந்த வாழ்வான் மேலே
திருப் பாற் கடலிலே சாய்ந்து அருளின போது
ஒரு நீலகிரி சாய்ந்தால் போலே யாயிற்று இருப்பது –

மின்னு மணி மகர குண்டலங்கள் வில் வீசத்-
ஒளியை உடைத்தாய் இருந்துள்ள ரத்னங்களாலே சமைக்கப்  பட்ட மகர குண்டலங்களில்
உண்டான தேஹஸ் ஸூ பரம்ப
வீச -பரம்ப
திரு மேனியின் நிறத்தால் வந்த இருட்சியைத் தீர்க்கும்  மகர குண்டலங்களின் பிரபை யானது
சிதற வடித்துக் கொண்டு தன் பரப்பாய் நிற்கும் –
ரத்னன்களை உடைத்தான மகர குண்டலம் தன்னுடைய ஒளியைப் பரப்ப –

துன்னிய தாரகையின் பேர் ஒளி சேர் ஆகாசம் என்னும் விதானத்தின் கீழால்
நெருங்கி இருந்துள்ள  நஷாத்ரா தாரா கணங்கள் உடைய மிக்க ஒளி சேர்ந்துள்ள விதானம் -என்னுதல்-
ஆகாசம் மேலே இருந்துள்ள விதானம் -என்னுதல் –
இது வாயிற்று கண் வளர்ந்து அருளுகிற இடத்தில் திரு மேற்கட்டி –
வில்வீசத் துன்னிய தாரகையின் பேர் ஒளி சேர் ஆகாசம் என்னும் விதானத்தின் கீழால் –
திரு மகர குண்டலங்களின் தேஜஸ் ஸூ எங்கும் ஒக்க பரம்பின படியால்
தேஜோ பதார்த்தங்களான நஷத்ரங்களான தாரா கணங்கள் ஓர் இடத்திலே போய் திரண்டால் போலே
தன்னில் தேஜோ பதார்த்தங்கள் ஒக்கிலும் தன்னில் விஞ்சின தேஜஸ் ஸூ வந்தால்
போய் ஒதுங்கக் கடவதே இருக்குமே
பூஜ்யரைக் கண்டால் குணபூதரானவர்கள் புடைவையை ஒதுக்கிக் கடக்கப் போய் ஒதுங்கக் கடவர் இ றே
கீழால் -கீழே

இரு  சுடரைமன்னும் விளக்காக வேற்றி
தன்னுடைய உஜ்ஜ்வலமான கிரணங்களாலே சர்வ வஸ்துக்களையும் தபிக்கக் கடவனாய் இருந்துள்ள ஆதித்யனையும்
தன்னுடைய அம்ருதமான கிரணங்களாலே சர்வ வஸ்துக்களையும் ஸ்ரமஹரமாம் படி பண்ணக் கடவனான சந்திரனையும் நிலை விளக்காக ஏற்றி –
சிருஷ்டி யுன்முகனாய்க் கொண்டு கண் வளர்ந்து அருளுகிற விடத்தை இப்படிசொல்லுகைக்கு
சிருஷ்டிக்கு  முன்பு ஆகாசமும் நஷத்ர தாரா கணங்களும் சந்த்ராதித்யர்களும் உண்டோ என்னில்
இக் கட்டளை எல்லாம் உண்டாம் படிக்கு ஈடாக கண் வளர்ந்து அருளினான் -என்னுதல் –
அன்றிக்கே
இங்குத்தைப்படி அப்ராக்ருதமாய்க் கொண்டு அங்கேயுண்டாய் இருக்கும் இ றே –
அப்படிகளில் ஒன்றும் குறையாமல் கண் வளர்ந்து அருளினான் -என்னுதல் –
அங்கனும் அன்றிக்கே  –
கார்ய ரூபமான கட்டளை ஸூ ஷ்ம ரூபேண ஆவரண லோகங்களும் எல்லாம் உண்டாய் இருக்கும் இ றே –
ஆகையாலே எல்லாம் உண்டு என்கிற பகவத் சங்கல்பமான சம்ஹாரத்தை சொல்லுதல்
சர்வ அவஸ்தையிலும் தத்வ த்ரயமும் கூடி இ றே இருப்பது
அது கார்ய அவஸ்தையில் விஸ்த்ருதமாய்க் கொண்டு   பிரகாசிக்கும் –
காரணா அவஸ்தையில் நாம ரூபவிபாக அநர்ஹ மாகையாலே
ஸூ ஷ்ம சித் அசித் விசிஷ்ட ரூபேண கொள்ளும் இத்தனை போக்கி பிரகாசியாது –
ஆகியார் கார்ய அவஸ்தையிலும் காரணா அவஸ்தையிலும் உண்டு என்னும் இடத்தைப் பற்றி சொல்லுகிறது –
ஆகச் சொல்லிற்று யாயிற்று
கார்ய ரூபமாய்க் கொண்டு இவை எல்லாம் அப்படியே -என்னுதல்
அப்ராக்ருதம் என்ற போதைக்கு
இரு சுடர் என்று -இவர்கள் படியை உடையாராய் இருக்கிற
திரு ஆழியையும் ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தையும் விளக்காக ஏற்றி -என்றபடி
நிலை விளக்கு -நித்யர் இ றே
விளக்காக –
அணி விளக்காம் -என்னக் கடவது இ றே –
சென்றால்  குடையாம் -இத்யாதி –

மறி கடலும்-பன்னு திரைக் கவரி வீச-
சர்வேஸ்வரன் மேலே சாயப் பெற்ற ஹர்ஷா பிரகர்ஷத்தாலே கீழ் மண் கொண்டு மேல் மண் எறிகிற கடலும் –
இப்படி இருந்துள்ள தன்னுடைய திரைகள் ஆகிய கவரியை வீச –
சர்வேஸ்வரனோட்டை பிரத்யாசத்தியாலே வந்த கிளர்த்தி
என்றும் திரு மேனி நீ தீண்டப் பெற்று –மாலும் கருங்கடலே என் நோற்றாய்-என்னக் கடவது இ றே
உன்னை அவன் விடாமைக்கு நோற்ற நோன்பைச் சொல்ல வல்லையே
நானும் இவ்வாசையை விட்டு நோன்பு நோற்கும் படி –
பன்னு திரைக் கவரி வீச–
திரு மேனியின் பரப்புக்கு எல்லாம் பண்ண வேண்டும்படி
பரப்புடைத்தாய் இருக்கிற திரை யாகிற கவரியை வீச –

நில மங்கை தன்னை –
தனக்கு ஸ்ப்ருஹணீயையாய் இருக்கிற ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கு பிரகாரமான விபூதியை
மஹா பலி அபஹரிக்க -இந்த்ரனுக்காக
அவன் பக்கலில் நின்றும் இரந்து அளந்து கொடான் ஆயிற்று
தன்னை –
தான் எல்லாம் பட வேண்டும் படியான அவளுடைய வை லஷண்யம் தோற்றி இருக்கிறது
முன நாள்
அநு பூத காலமாய்க் கழிந்து போகக் செய்தேயும்
சம காலம் போல ஒரு போகியாகத்  தோற்றுகிறது காணும் -இவர்க்கு –
என்று கடல் கடைந்தது எவ்வுலகம் நீர் ஏற்றது -என்னக் கடவது இ றே
இன்னம் கடைந்த கடல் நுரையும் மாறிற்று இல்லை இ றே
அளந்த பூமிக்குத் திருவடிகளின் ஸ்பர்சத்தாலே வந்த கந்தம் மாறிற்று  இல்லை  –

அளவிட்ட தாமரை போல்-
காடும் மலையுமான பூமியை அளந்து கொண்டது ஒரு செவ்வித் தாமரைப் பூவை இட்டாயிற்று –

மன்னிய சேவடியை –
விகாசம் செவ்வி குளிர்த்தி பரிமலங்களுக்கு தாமரை ஒப்பாக இருக்கையாலே திருஷ்டாந்தமாக சொல்லிற்று -திரிய அத்தைக் கிடந்தது சிஷிக்கிறது –
தாமரையும் அனந்தர ஷணத்தில் செவ்வி மாறிப் போருகையாலே
இது செவ்வி மாறாதே இருக்கும் இ றே –
காடுமேடையும் முன நாள் அளந்த வருத்தம் பிரளயத்திலே வந்து இளைப்பாற வேண்டும்படியாய் யாயிற்று இருப்பது
மன்னிய சேவடியை மறி கடலும் பன்னும் திரைக் கவரி வீச  -என்று அங்கே அந்வயம்
அதி ஸூ குமாரமான திருவடிகளைக் கொண்டு காடும் மேடுமான பூமியை அளந்து கொண்ட போதை
ஆயாசத்துக்கு பரிஹாரமாக கடவ தன் திரைகளாலே
சிசிரோபசாரத்தைப் பண்ண
அவ்வதாரத்தை அனுசந்தித்தால் இன்னார் என்று அன்றிக்கே எல்லார்க்கும் ஒக்க பரிய வேண்டும் படி காணும் இருப்பது –

கொடியர் மாடம் -இத்யாதி
இப்பாட்டுக்கு பட்டர் அருளிச் செய்யக் கேட்டேன் -என்று பிள்ளை அருளிச் செய்தார் –
நித்ய சூரிகள் பரிந்து கொண்டாட பரம பதத்திலே இருக்கும் சர்வேஸ்வரன்
சம்சாரிகள் உடைய ரஷண  அர்த்தமாக இங்கே சந்நிதி பண்ண வேண்டினால்
திருவாய்ப் பாடியிலே மற்று ஒன்றிலே மறைய வளர்ந்தால் போலே உகவாதார் அறியாத படி மறையச் சாய்ந்து அருளினால் ஆகாதோ –
கொடியார் மாடம் –
சத்ருக்கள் அறியும் படி கொடி கட்டிக் கொண்டு கிடக்க வேணுமோ –
கோளூர் அகத்தும் புளிங்குடியும்-
ஓர் இடத்திலே அன்றிக்கே பல இடத்திலும் படுக்கை படுக்கிறது அப்போதை ஆயாசத்தின் பெருமைஇ றே
மடியாது –
சோம்பாதே-
இடம் வலம் கொள்ளாதே-என்னவுமாம் –
ஏக ரூபமாய் கண் வளர்ந்து அருளுகிறது இவர்களுக்கு வயிறு பிடிக்கைக்கு உடல் ஆகிறது
இன்னே –
கண் வளர்ந்து அருளுகிற போதை
அழகுக்கு பாசுரம் இட்டுச் சொல்லலாவது  ஒன்றும் இல்லை –
இப்படி என்னும் இத்தனை
நீ துயில் மேவி மகிழ்ந்தது காண்
திருமேனி ஏக ரூபமாய் துயில் மேவி ஸ்ரமத்தொடே உறங்குகிறவர்களுக்கு
அவ் உறக்கத்தாலே முகத்திலே தெளிவைக் கொண்டு
முன்புற்றை ஸ்ராந்தியையும் கல்பித்து அதுக்கு வயிறு எரிகிறார்-
அடியார் -இத்யாதி
அதுக்கடி உன் திருவடிகளில் ந்யச்த பரராய்
உன் கை பார்த்து இருக்கிற பிரபன்னர்க்காக அன்று இ றே –
தேவர்களுக்கும் ருஷிகளுக்கும் விரோதிகளான அசூர ராஷசர்களை நிரசிக்க வந்த ஆயாசமோ
அன்றேல் -இத்யாதி –
அன்றிக்கே -உன்னை இரப்பாளன்   ஆக்கி இந்த்ரனுக்காக
பூமிப் பரப்பை எல்லாம் அளந்து கொண்ட ஆயாசமோ
தோள் நொந்து கிடக்கிறாயோ
பூமி எல்லாம் அளந்த தாள் நொந்து கிடக்கிறாயோ
இத்தை அருளிச் செய்ய வேணும்
அதுக்கு கருத்து
அருளிச் செய்யும் போதை ஸ்வர நாதம் கொண்டு அதுக்குத் தக்க சிசிரோபசாரம் பண்ணப் பார்க்கிறார் –
நடந்த கால்கள் நொந்தவோ -தாளால் உலகம் -இத்யாதி
அவசியம் பூமிப் பரப்பை அளக்க வேண்டினால் திருக் கைகளால் அளந்தால் ஆகாதோ
தம்முடைய ஜீவனத்தை அழி க்க இசையார் இ றே இவர்
வடிவிணை இல்லா மலர் மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடி -என்னக் கடவது இ றே –
வடிவு அழகுக்கு இணை இல்லை யாயிற்று
இவளுடைய வடிவுக்கு அவனும் சர்வதா சாம்யம் ஆக மாட்டான்
தன் சௌகுமார்யத்துக்கு அநு ரூபமாம் படி இருக்கிற ஸ்ரீ பூமிப் பிராட்டி
மலர் மகள் பிடிக்கும் மெல்லடியை –
இது வாயிற்று சௌகுமார்யத்துக்கு எல்லை இருக்கும் படி
இவர்கள் திருவடிகளை வருடப் புக்கால் பூ வைத் தொட்டால் போலே கூசித் தொட வேண்டும் படி யாயிற்று சௌகுமார்யாதிசாயம் இருப்பது –
வாளா கிடந்தருளும் வாய் திறவான் –
இவர்கள் சென்றால் துணுக என்று எழுந்திருத்தல் குளிரக் கடாஷித்தல்
மாமக்ரூரேதி வஷ்யதி -என்றால் போலே
ஆழ்வீர் வந்தது என் என்றாப் போலே வினவுதல்
ஒன்றும் செய்கிறிலன்
அதுக்கு மேலே நீர் வாய்ப்புத் தேடி படுக்கை படா நின்றான்
நீர் தானும் உறுத்தும் என்று பார்த்து
அதின் மேலே மெல்லியது ஒன்றைத் தேடித் படா  நின்றான்
சாதனா சாத்தியங்கள் இரண்டும் இங்கே யாகையாலே
முந்துற பூமியை நிரூபிக்கிறது
ஆவது என் என்னில் அவன் உகந்து அருளின தேசங்கள் இங்கே யாகையாலே-
வானியங்கு தாரகை மீன் என்னும் மலர்ப் பிணைய லேய்ந்த மழைக் கூந்தல்-
ஆகாசத்திலே சஞ்சரியா நின்றுள்ள நஷத்ர தாரா கணங்கள் என்று சொல்லப் படுகிற
பூக்களாலே தொடுக்கப் பட்ட மாலையோடு கூடின குளிர்ந்த  மயிர் முடியை உடையளுமாய் –
வான் -என்கையாலே உச்சமான ஸ்தானத்திலே என்னும் இடம் தோற்றுகிறது-
இயங்கு -என்கையாலே அதனுடைய அசைவு தோற்றுகிறது  –
தாரகை மீன் என்னும் மலர்ப் பிணைய லேய்ந்த -என்கையாலே ஒரு பூவால் அன்றிக்கே கலம்பகன் மாலை என்னும் இடம் தோற்றுகிறது –
பிணைய லேய்ந்த மழைக் கூந்தல்–என்கையாலே ஒரு கொம்பிலே பிறந்து மற்று ஓர் இடத்திலே கொடு போந்து-சேர்க்கை யாகிற கால விளம்பத்தால் வரும் செவ்வி மாறாதே இருக்கை-மாலையாய்க் கொண்டு மயிரிலே பூத்தால் போலே இருக்கை –
மழைக் கூந்தல்–இத்தை அனுபவிக்க ஸ்ரமஹரமாய் இருக்கை
மழை போலே குளிர்ந்த கூந்தல் -என்னுதல்
மேகங்கள் ஆகிற மயிர் முடி என்னுதல்
ஸ்திரீகளுக்கு பிரதான அவயவம் தலையும் முலையும் ஆயிற்று
அதில் தலை இருக்கும் படி சொல்லி
முலை இருக்கும் படி சொல்லுகிறது மேல்-
தென்னன்
தென்னன் கொண்டாடும் -என்கிறபடியே தென்னனதான திருமலையும் –உயர் பொருப்பும் –
நீண்ட மலை
மஞ்சுயர் மா மதி தீண்ட நீண்ட மாலிருஞ்சோலை -என்கிற உயரத்தை சொல்லுகிறது –
தெய்வ வடமலையும்-
நித்ய ஸூ ரிகளதான வடக்குத் திருமலையும் –
என்னும் இவையே முலையா –
என்று சொல்லப் படுகிற திருமலைகள் இரண்டும்  முலையாக
இந்த பூமியில்  உள்ளாரையும் விட மாட்டாத நீர்மையின் ஏற்றம் செல்லும் திரு மலையும்
அறிவுடையார் விரும்பும் திருமலையும்
மேரு மந்த்ராதிகளைச் சொல்லாதே திருமலைகளைச் சொல்லுவான் என் என்னில்
முலைகள் ஆக்கின காந்தன் விரும்பி படு காடு கிடககுமாவை யாயிற்று
சர்வேஸ்வரன் விரும்பி நித்ய வாஸம் பண்ணும் இடங்கள் இ றே இரண்டு திருமலைகளும்
கிரி ராஜோபமோ கிரி -என்று சித்ர கூடத்துக்கும் ஒப்பாக சொல்லிற்று திருமலைகளை இ றே  –
வடிவமைந்த-
மயிர் முடியும் முலைகளும் இருந்த படி சொல்லிற்று இ றே-
இனி வடிவில் ஒன்றும் பார்க்க வேண்டுவது இல்லையே –
இப்படி –
வடிவமைந்த–
வடிவுக்கு அங்கன் ஒப்புச் சொல்லலாவது ஒன்றும் இல்லை –

அன்ன நடைய -வணங்கேய் –
நடை அழகைக் கண்டால் பின்னையும் மயிர் முடிகளிலும் முலைகளிலும் நெஞ்சு போகாதபடி பண்ணும் –
கால தத்வம் உள்ளதனையும் நடை அழகோடு பனி போரும் ஆயிற்று நடை இருப்பது –
நாயகனுக்கு சர்வ ஸ்வதானம் பண்ணுகை யாவது -முன்பே நாலடி நடக்கை –
அன்னத்தோடு ஒத்த நடையை உடையளுமாய் அணங்கை ஏய்ந்து இருப்பாளும் ஆனவள் –
அப்ராக்ருத ஸ்வ பாவை யானவள் –
த்ரயாணாம் பிரதாதீ நாம் தேவதா ச யா ராமஸ்ய ச மன காந்தா -சுந்தர -55-26-
பிள்ளைகள் மூவருக்கும் ஒக்கு மாயிற்று -தேவதையாம் இடத்தில்
பெருமாளுக்கு வாசி என் என்னில் -மன காந்தையாய் இருக்கும் –
ஆஸ்ரயநீயை என்று தோற்றும்படி யாய் இருக்கை-
குரு மணங்கும் தெய்வப் பெண் -என்னக் கடவதுஇ றே-
அடி இணையைத்தன்னுடைய அம் கைகளால் தான் தடவத் –
அவன் தன்னடியைத் தடவ வேண்டும்படியான ஏற்றத்தை யுடைய தான்
தன்னுடைய அழகிய கைகளாலே தடவ
அணங்கு -என்கையாலே ஆஸ்ரயநீயத்தை தோற்றுகிறது-
இப்படி ஏற்றம் உடையவளை அவன் கொண்டாட வேண்டும்படி இருக்க -அது தவிர்ந்து -தான் அவனை ஆதரியா நிற்கும்
பிராட்டியே இருக்கச் செய்தே –அடியிணையை -என்கையாலே தோற்ற தோல்வி தோற்றி இருக்கிறது –
தன்னுடைய -என்கையாலே -அவன் கொண்டாட வேண்டும் படியான பிரதாண்யம் தோற்றுகிறது –
அங்கைகளால் தான் தடவ -என்கையாலே ஸ்வ மார்த்தவ நிரீ ஷன ஷமை இல்லாமை தோற்றுகிறது  –
இவள் ஒரு கால் திருக் கைகளால் அவன் திருவடிகளைத் தடவினால்
அவனுக்கு ஜகத் வ்யாபாராதி களால் வரும் ஆயாசம் எல்லாம் ஆறும் போலே காணும் –
தான் தடவ –
இது குணம் என்று செய்கை யன்றிக்கே அபி நிவிஷ்டையாய்ச் செய்கை –

தான் கிடந்தது –
தனி கிடந்தது அரசு செய்யும் -என்கிறபடியே தான் கிடந்தது
ஆனையில் கிடந்த கிடைக்கை -என்கிறபடியே ஒரு மத ஹஸ்தி சாய்ந்தால் போலே சாய்ந்து-உலாவும் போதை அழகுக்கு மேலே சாய்ந்த போதை யழகு உறைத்து இருக்கிறதாயிற்று

ஒர் உன்னிய யோகத் துறக்கம் தலைக் கொண்ட பின்னை-
ஓர் உறக்கம் -என்னுதல்
ஒருப்படுவதான உறக்கம் -என்னுதல்
உன்னிய என்று கிடைக்கையாலே -ஒருப்பட வேண்டா அத்விதீயமான நித்ரை -என்றபடி  நித்ரைக்கு அத்விதீயமாம் -ஜகத் ரஷண சிந்தை ஒழிய தன்னை அனுசந்தித்தல்
பரம பதத்தை அனுசந்தித்தல்-செய்யுமது இன்றிக்கே இருக்கை –
உன்னிய –
ஜீவர்கள் உடைய ஆனந்த்யத்துக்கு எல்லை இல்லையே
ஒருவனே அநேகர் உடைய ரஷண சிந்தை பண்ணப் புக்கால் அதிலே சிறிது குறை உண்டாய் தோற்றுகை அன்றிக்கே
ஒருவனுடைய ரஷன சிந்தை பண்ணுமா போலே இருக்கிற ஜ்ஞான வைச்த்யத்தைப் பற்றச் சொல்லுகிறது –
யோகத் துறக்கம் –
தமோ குண அபிபூதமாய் அஸ்திரமாய் இருப்பது ஓன்று   அன்றே –
நம்முடைய கிரியா பாவத்தாலே யாதல்
மற்று ஒரு ஹேதுவாலே யாதல்
வரக் கடவதான நித்ரை அவர்களுக்கு இல்லை
இனி நித்ரை யுள்ளது -உலகு எல்லாம் நன்கு ஒடுங்க யோகணைவான் -என்கிறபடியே
சர்வரும் நல வழி போய்க் கரைமரம் சேரும் விரகு ஏது என்று பார்த்து பர ஹித சிந்தை பண்ணிக் கொண்டு கண் வளர்ந்து அருளுகிறபடி
ஆத்மா நம் வா ஸூ தேவாக்யம் சிந்தையன் -என்கிற வதுவும் அன்றிக்கே இருக்கை –
உறக்கம் -தலைக் கொண்ட பின்னை-
இனி அநந்தரம் சிருஷ்டி ப்ராப்தம் என்னும்படி நித்ரையை பிராப்தனாய்
பகல் எல்லாம் அமர்ந்து-பின்னை முருடு கொளிந்திற்று என்னுமாபோல் அன்றிக்கே
நித்ரையினுடைய குளிர்த்தியைச் சொல்லுகிறது –
அநந்தரம் வரக் கடவ ப்ரஹ்மாவின் உடைய உத்பத்திக்குக் காரணமாய் இருக்கை –

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: