பெரிய திருமடல் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை/ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார்- வியாக்யானம்-தனியன்/அவதாரிகை – –

ஸ்ரீ பிள்ளை திரு நறையூர் அரையர் அருளிச் செய்த தனியன்

பொன்னுலகில் வானவரும் பூ மகளும் போற்றி செயும்
நன்னுதலீர் நம்பி நறையூரர் -மன்னுலகில்
என்நிலைமை கண்டும் இரங்காரே  யாமாகில்
மன்னு மடலூர்வன் வந்து   –

————————————————————————–

அவதாரிகை –
இத் தனியன் ஆழ்வார் அபிப்ராயமே இருக்கிறது –
சர்வைஸ் ஸ்துதியனான பரிபூர்ணன்
இவ்விபூதியில் தன் கிருஷி பலமான  பரபக்தியாதி வைபவங்களைக் கண்டு தயை பண்ணாது இருப்பான் ஆகில்
அநந்ய  உபாயத்வம் குலையும் படியான    அதி ப்ராவண்யத்தை ஆவிஷ்கரிப்பன் -என்கிறது –

நல் நுதலீர் நறையூரர் நம்பி என்நிலைமை கண்டும் இரங்காரே  யாமாகில்
மன்னு மடலூர்வன் வந்து   -என்று அந்வயம் –

நல் நுதலீர் –
நல்ல நுதலை உடையவர்களே
வாண் முகத்தீர் -என்னுமா போலே சகோத்தரிகளை சம்போதிக்கிறது –

பொன்னுலகில் வானவரும் –
பரமபத வாசிகளான நித்ய சூரிகளும் –

பூ மகளும் –
பெரிய பிராட்டியாரும் –

போற்றி செயும்-
மங்களா சாசனம் பண்ணும் –
பரதனும் தம்பி சத்ருக்னனும் இலக்குமனோடு மைதிலியும்
இரவு நன் பகலும் துதி செய்ய நின்ற -என்னுமா போலே
இவர்கள் போற்றி செய்யும் நறையூர் நம்பி -என்னுதல் –

அன்றிக்கே
பொன்னுலகில் வானவராய் ஸ்வர்க்க வாசிகளான தேவர்களும்
பூ மகனும் -என்று பாடமானபோது
புஷ்பஜனான ப்ரஹ்மாவும் போற்றி செயும் -என்றுமாம் –
போற்றி செய்கைக்காக இ றே முன்னம் திசை முகனைத் தான் படைத்தது  –

நம்பி நறையூரர் –
நரையூரரான நம்பி –
திரு நறையூர் நம்பி –
இங்கு வந்து எல்லா குணங்களும் புஷ்கலமாக உடையவர் –

மன்னுலகில் என்நிலைமை கண்டும் –
தான் படைத்த படியே என் படியைக் கண்டும் –
பேராளன் பேரோதும் பெண்ணை மண் மேல் பெரும் தவத்தள் என்றல்லால் பேசலாமே -திரு நெடும் தாண்டகம் -20-என்னும் படி இ றே இவள் படி –
நித்யமாய்ப் போருகிற பூமியிலே என் தய நீய தசையைக் கண்டும்  –
தாதாடு வனமாலை தாரானோ என்று என்றே தளர்ந்தாள்-பெரிய திரு மொழி -5-5-6-என்று இ றே இவள் நிலை இருப்பது  –

இரங்காரே  யாமாகில்
இத்தசையிலும்
வண்டு திவளும் தண்ணம் துழாய் கொடீர் -திரு வாய் மொழி -2-4-5-
இரக்கம் எழீர் -திருவாய் மொழி -2-4-3-கொடாதே இரக்கம் எழாது இருப்பார் ஆகில் –

மன்னு மடலூர்வன் வந்து   –
தாம் இருக்கும் அளவும் மடலும் கையுமாய் வந்து-தம் குண பூர்த்தியை அழிப்பன் –
இத்தால் –
அவன் ஆசூவாக அங்கீ கரிக்கும் படி அதி பிராவண்யத்தை ஆவிஷ்கரிப்பன் -என்றது ஆயிற்று
இத்தலையில் வருமது சைதன்ய கார்யம் –
அத்தலையால் வருமது -சாதனம் –

————————————————————————–

அவதாரிகை –

பெரிய திரு மடல் ஆவது
கண்ணாஞ்சுழலை இட்ட ப்ரபந்தம் இன்னம் ஓன்று –
வைக்கோல் போர் சுட்டு நெல் பொரி  கொறிக்கை  –
இரண்டு தலையில் உள்ளாறும் கை விட்டால் அன்று ஒரு வழியே போகலாம் என்று தாத்பர்யம் –
வாடினேன் வாடி தொடங்கி-இவ்வளவும் வர  பகவத் குணங்களை சீலனம் பண்ணிப் போருகையாலே
அபி நிவேசம் மிக்கு -வழி அல்லா வழி யாகிலும் காண வேணும் என்று கண்ணாஞ்சுழலை இட்ட படி –
இப்பிரபந்தம் எம்பெருமானோடு கலந்து பிரிந்தாள்  ஒரு பிராட்டி
தன் ஆற்றாமையாலே மடலூர்ந்தாகிலும் காண வேணும் என்னும் தசை தமக்குப் பிறந்து பேசுகிறார் –
மடலாகிறது -இரண்டு தலைக்கும் அவத்யத்தை விளைக்குமது அன்றோ வென்ன-அது தான் அன்றோ தேட்டம் -என்கிறது –
ராமஸ்ய தயிதா பார்யா நித்யம் பிராண சமா ஹிதா – பால காண்டம் -1-26-என்றும்
மமைவ துஷ்க்ருதாம் கிஞ்சின் ம்ஹதச்தி ந சம்சய
சமர்த்தாவபி தௌ யன்மாம் நாவேஷேதே பரந்தபௌ-சுந்தர 38-47 -என்றும்
ஸ்வஸ் த்யச்து ராமாய ச லஷ்மணாய ததா பிதுர்மே ஜனகச்ய   ராஜ்ஞ-சுந்தர -32-9-என்றும்
ந மந்தராயா ந ச மாது ரஸ்யா தோஷோ ந ராஜ்ஞ்ஞோ ந ச ராகவச்ய   -என்றும்
யதி ப்ரீதிர் மகாராஜா யத்ய நுக் ராஹ்யதா மயி
ஐ ஹி  மாம் நிரவி சங்கஸ்த்வம் பிரதிஜ்ஞ்ஞாம நுபாலய -என்றும் –
வள வேழ் உலகில் –திருவாய் மொழி -1-5-படியாலும்
மிக்க சீர்த் தொண்டர் இட்ட பூந்துளவின் வாசமே -பெரிய திரு -11-1-9- என்றும்
அத்தலைக்கு சம்ருத்தியைப் பாரிக்க
உணர்வு எனும் பெரும் பதம் தெரிந்து நாடினேன் –பெரிய திரு -1-1-1-என்றும்
பேசுகிற இவருடைய பேர் அளவுக்கு போருமோ -என்னில்
ஜ்ஞான பாரதம்  அன்று
பகவத் சௌந்தர்ய பாரதம் ஆகையாலே
பஹவோ ந்ருப கல்யாண குணா புத்ரஷ்ய சந்தித்தே -அயோத்யா -2-26-என்றும்
தாது நாமிவ சைலேந்த்ரோ குணா நாமகரோ மகான் -கிஷ்-15-21- என்றும்
உண்டாகையாலே இதுவே சேரும் –

துல்ய சீல வயோ வ்ருத்தாம் -கிஷ்-16-5-என்கிறபடியை உடையராய் இருப்பார் இருவர்
தைவ யோகத்தாலே கூடி
தைவ யோகத்தாலே பிரிந்து நெடும் காலம் வரவு பார்த்து இருந்து வரக் காணாமை யாலும்
திருஷ்ட உபாயமும் அதருஷ்ட உபாயமும் கை வாராமையாலும் ஆற்ற ஒண்ணாத அபி நிவேசம் மிக்கு
மடலூர்ந்தாலும் காண வேணும் என்கை யோக்கியம் –
கூடுவதும் பிரிவதும் இரண்டும் புண்ய பலம் என்றது –
கூடுகை புண்ய பலம்
பிரிகை புண்ய பலமான படி எங்கனே என்னில்
வாதாதப கலாந்த மிவ பிரணஷ்டம் வர்ஷேன பீஜம் பிரதி சஞ்ச்ஜஹர்ஷ-சுந்தர -29-6-என்னுமா போலே
சிநேக வர்த்தகம் ஆகையாலே –
திருஷ்ட உபாயம் -என்கிறது தௌத் யாதிகளை –
அதருஷ்ட உபாயம் என்கிறது -தை யொரு திங்களில் படி –

ஸ்த்ரியோ வ்ருத்தாஸ் தருண்யச்ச சாயம் ப்ராதாஸ் சமாஹிதா
சர்வான் தேவன் நமச்யந்தி ராமச்யார்த்தே யசச்வின -அயோத்யா -1-52-என்கிறபடியே இராதே
மடலூருகிற இது சேருமோ என்னில் சேரும் –
மடலூருகை தான் உண்ணாதே குளியாதே உகந்த விஷயத்தை ஒரு படத்திலே  லிகித்து அத்தைக் கொண்டு திரிகையும்
அற விளைததால் அதன் காற் கடையிலே  விழுகையும்
விழுந்தால் அங்கனே செல்லரிக்கக் கிடக்கையும்
அங்கனே முடிகையும்
இத்தால் பிரயோஜனம் என் என்னில் அவன் கேட்கும் என்கையும்
இல்லை யாகில் இது தானே பிரயோஜனமாகை –

காமினோ வர்ணயன் காமான் லோபம் லுப்தச்ய வர்ணயன்
நர கிம் பலமாப் நோதி கூபே அந்தமிவ பாதயன் -என்று சொல்லா நிற்கச்  செய்தே விட ப்ரவ்ருத்தியாய் அசாஸ்த்ரீயமாய் சத்துக்களும் கை விடுவது ஒன்றாகையால் இது ப்ராப்தம் அன்றே என்ன
அது சப்தாதி விஷயங்களை காமமாக கொள்ளும் போதே குற்றம் உள்ளது
இது வேதாந்தத்தில் சொல்லுகிற பகவத் பக்தியை காமம் என்கையாலே குற்றம் இல்லை
வ்யவசாயாத்ருதே பிரமன் நாசாதயாதி தத்பரம் -என்றும்
பரமாத்மனி யோ ரக்தோ விரக்தோ அபரமாத்மனி
சர்வேஷணா வி நிர்முக்தஸ் ச பை சாம் போக்து மர்ஹதி -என்கிற
பகவத் அத்யவசாயத்தைக் காமம் -என்கிறது
சன்யாச தர்மத்தை -மடல் -என்று ஆளவந்தார் அருளிச் செய்தார் –
ஆனால் தர்மார்த்த மோஷங்களை சிறிய திருமடலில் இகழ்வான் என் என்னில்
ஜாபாலி பகவான் பெருமாள் திரு முன்பே லோகாதிக சித்தாந்தத்தின் படியே சில அதர்மத்தை விண்ணப்பம் செய்ய
ஜாபாலிர் ப்ராஹ்மாணோத்தம -என்று அவனைக் கொண்டாடுகையாலே இதிலும் குற்றம் இல்லை –
தர்மார்த்த மோஷங்களை  இகழ்க்கை யன்று உத்தேச்யம்
தம்முடைய புருஷார்த்தில் உள்ள தாத்பர்யம் –
கடலன்ன காமத்தராகிலும் மாதர் மடலூரார் மற்றையார் மேல் -என்று சொல்லா நின்றதே என்னில்
அது விதி
நிஷேத வசன உக்தி அன்று
ராக ப்ராப்தம் ஆகை யாலே தோற்றார் மடலூரும் அத்தனை
விதி நிஷேதம் ஆகில் ராஜாஜ்ஞ்ஞைக்கு நிற்க வேணும் காமம் –
இப்படி மடலூர்ந்தார் ஆர் என்னில் –
சதேவ கந்தர்வ மனுஷ்ய பன்னகம் ஜகத் சசைலம் பரிவர்த்த யாம் யஹம்ம் -ஆரண-64-45-என்றும்
அசோகா சோகாப நுத சொகொபஹத செதசம்
தவன் நாமானம் குரு  ஷிப்ரம் ப்ரியா சந்த்ர்சநேன மாம் -ஆரண-60-17-என்றும்
ந மே ஸ்நானம் பஹூ மதம் , வசத்ரான்யா பரணா நிச
தம் விநா கைகயீ புத்ரம் பாரதம் தர்ம சாரிணம் -யுத்த -124-7-என்றும்
யா ந சகா புறா த்ரஷ்டும் பூதை ராகா சகைரபி
தாமத்ய சீதாம் பஸ்யந்திராஜ மார்க்க்கதா ஜனா -அயோத்ய -33-7- என்றும்
மன்னன் இராமன் பின் வைதேவி என்று உரைக்கும் அன்ன நடைய அணங்கு நடந்திலளே-பெரிய திருமடல் –
என்றும் இப்படிகளால் தோற்றார் ஊரும்   இத்தனை –
வாச்வத்தாதிகள் பக்கலிலும் கண்டோம்
இவள் ராஜ புத்ரியான படி எங்கனே என்னில்
ச ச்லாக்யஸ்  ச குணீ தந்யஸ் ச குலீ நஸ் ச புத்திமான் -ஸ்ரீ விஷ்ணு புரா  -1-9-11-
என்றும்
தேசும் திறலும் திருவும் உருவுமும்  மாசில் குடிப் பிறப்பும் -மூன்றாம் திரு-10-என்றும்
குலம் தரும்செல்வம் தந்திடும் -பெரிய திரு -1-1-9- என்றும்
பகவத் கடாஷத்தாலே ராஜ புத்ரிகளுக்கு உண்டான வேண்டப் பாடு இவளுக்கு உண்டாகையால் –

இப்பிராட்டி பகவத்  விரஹத்தாலே
துளம்படு முறுவல் தோழியர்க்கு அருளாள்-பெரிய திரு -2-7-2-என்று சொல்லுகிற படியே
ஒரு வாடல் மாலை போலே இருக்கிற இவளுக்கு அபி நிவேசம் மிக்கு
மடலூரத் துணிய
அத்துணிவாலேகாட்டுத் தீ தூவினார் முகம் போலே இராதே
நீராடி உண்டார் முகம் போலே குளிர்ந்து எழிலும் அற மிக்கது  –
நிர்க்குண பரமாத்மா அசௌ தேஹம் தே வ்யாப்ய திஷ்டதி -என்று பெருமாள் கையும் வில்லும் உள்ளே நிழலிடா நின்றதீ என்று
திருவடியை பீம சேனன் சொன்னால் போலே
இவள் உடம்பில் மடல் நிழல் ஆடுகிற படியைக் கண்ட தோழி
ஒர்ப்பால் இவ் ஒண் நுதல்   உற்ற நல் நோய் இது தேறினோம் -திருவாய் -4-6-1-என்னுமா போலே
இவள் மடலூரப் புகுகிற படியை அறிந்து
தயா ச ராஜர்ஷி ஸூ தோ அபி ராமயா சமேயிவா நுத்த மராஜ கன்யயா
அதீவ ராம  ஸூ ஸூ பே அதி காமா விபு ஸ்ரீ யா விஷ்ணு ரிவாமரேஸ் வர -பால -77-32-என்று சொல்லுகிற படியே
உன்னுடைய ஆபி ஜாத்யாதி மர்யாதைகளுக்கும்
அவனுடைய ஆபிஜாத்யாதி மரியாதை களுக்கும் போராது இத் துணிவு
நாட்டாரும் பழி இடுவர்
மாதா பிதாக்களும் பந்துக்களும் கை விடுவதும் செய்வார்கள் என்று நிஷேதிக்க
என் செய்யும் ஊரவர் கவ்வை
அன்னை என் செய்யில் என் ஊர் என் சொல்லில் என் -திருவாய் -5-3-6- என்றும்
யாம் மடலூர்த்தும் -திருவாய் -5-3-10- என்றும்
மடலூர்வது போக்கிப் புருஷார்த்தம் இல்லை என்று உப பாதிக்கிறாள் –

சடக்கென மடலூராதே தோழிக்கு நின்று உத்தரம் சொல்லுவான் என் என்னில்
சாப மா நய சௌ மித்ரே -யுத்த -21-22-என்றும்
இரைக்கும் கரும் கடல் வண்ணன் -திருவாய் -5-3-11-என்றும்
சொல்லுகிற படியே மடல் என்ன
அக்கடல் பட்டது பட்டு அவன் வந்து தோன்றும் என்று
பலகைப் புறத்தே பகட்டுகிறாள்
தோழியும் இவள் சொல்லக் கேட்டுப் போது போக்கும் அளவில் அவன் வரும் என்னுமத்தாலே-சொல்லிக் காண் -என்கிறாள் –

————————————————————————–

ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் -அருளிச் செய்த வியாக்யானம்
அவதாரிகை –

பார்யா புத்ராஸ்ஸ தாசஸ்ஸ த்ரய ஏவாதனா ஸ்ம்ருதா
யத்தே சமதி கச்சந்தி யச்யைதே  தஸ்ய தத்த நம்
சீல வயோ வ்ருத்தாதிகள் துல்யமாய் இருப்பன இரண்டும் தம்மில் விஷயமாய்
இருவருக்கும் யாத்ருச்சிகமாக சம்ச்லேஷம் ப்ரவ்ருத்த மாம்படியே
விச்லேஷமும் பிரவ்ருத்தமாய்
அநந்தரம்-இரண்டு தலைக்கும் அபி நிவேசம் கரை புரண்டு பொறுக்க அரிதாய் இருக்க
பிறர் அறிய கலவி அல்லாமையாலே கடலேறி வடிந்தால் போலே இருக்கிற வடிவில் உள்ள வேறுபாட்டைக் கண்டு
பந்துக்கள் ஆனவர்கள் -பிரவ்ருத்தமான பிரகாரங்களை அறிந்து
இங்கனே பிறக்கலாகாது என்று நிரோதிதத்தாலும்
அபிமத விச்லேஷத்தாலும் ஆற்றாமை அறக் கை விஞ்சினால் பந்துக்கள் நசை அற்று
இத்தலையில் ஸ்த்ரீத்வாதி குணங்களையும் விட்டு
எதிர்த் தலைக்கு குண ஹானியையும் விளைப்பித்து –
இப்படி ஜகத் உப  சம்ஹாரம் பண்ணி யாகிலும் முகத்தே விழித்து அல்லது மீளுவது   இல்லை-என்னும் படியான ஆற்றாமை கை விஞ்சினால் பண்ணுவதொரு சாஹாச ப்ரவ்ருத்தி விசேஷமாய் இருக்கும் -மடலாவது –

இது தான் இருக்கும் படி என் என்னில்
அபிமத விஷயத்தை ஒரு படத்திலே எழுதி
வைத்த கண் வாங்காதே அத்தைப் பார்த்துக் கொண்டு
தன்னைப் பேணாதே
ஊண் உறக்கம் அற்று திரியா நின்ற இத் தர்ம ஹானியைக் கண்டு
ராஜாக்கள் கூட்டுதல்
தைவம் கூட்டுதல்
இரண்டும் இல்லையாகில் முடிந்து பிழைத்துப் போதல் -செய்யும் இத்தனை -யாதல்
இதுக்கு அபிப்ராயம் இது வாகில்
வள  வேழ் உலகில் படியே -ஸ்வ விநாசத்தை அங்கீ கரித்து
அத்தலைக்கு அவத்யம் வாராத படி பரிஹரிக்க பிராப்தமாய் இருக்க
அத்தலைக்கு அவத்யத்தை விளைத்து நினைத்தது தலைக் கட்டிக் கொள்ள நினைக்கிற இது சேருமோ -என்னில்
நிரூபித்தால் அங்கன் நினைக்கிற அதுவும் அத்தலைக்கு அவத்ய பரிஹாரம் பண்ணித் தலைக் கட்டுமதுவே   –

ஆனால் இவை கூடின படி எங்கனே என்னில் –
வள வ ழ் உலகில் தம் ஸ்வரூப ஜ்ஞானத்தாலே இறாய்க்கப் பார்த்தாராய்
இங்கு -ஈஸ்வர ஸ்வரூப ஜ்ஞானத்தாலே மேல் விழப் பார்க்கிறார் –
அவனுக்கு   குண ஹாநியை பண்ண ஒண்ணாது என்று தம்மைக் கொண்டு இறாய்த்தார்-
அவனுக்கு ஸ்வரூப ஹாநியை விளைக்க ஒண்ணாது என்று மேல் விழப் பார்க்கிறார் –
அவன் ரஷகன் என்கிற ஜ்ஞானம் மாத்ரமேயாய்
பெற்ற போது பெறுகிறோம் -என்று இருக்கில்
அவனுடைய வைலஷண்ய ஜ்ஞானம் பிறந்தது இல்லையாம்
அப்படி வள வே ழ் உலகில் அகன்றவாறே
மாசறு சோதியிலே மடல் எடுக்க ஒருப்பட்டார்
மயர்வற மதி நலம் அருளினான் -என்று பக்தி ரூபாபன்ன ஜ்ஞானம் இ றே இவர் பெற்றது
அவ்விரண்டின் உடைய காரியமும் பிறந்து அல்லது நில்லாதே
ருஷிகளில் காட்டில் பகவத் பிரசாத லப்தமான   ஜ்ஞான ஆனந்தங்களை உடைய ஆழ்வார்கள் வாசி இருக்கும் படி இ றே இது –

அங்குத் தான் -சாபமா நய -என்று வில்லைக் காட்டிப் பகட்டினாப் போலே
மடலைக் காட்டிப் பகட்டி முகத்திலே விளிக்கப் பார்க்கிற இத்தனை இ றே –
அல்லது செய்து தலைக் கட்டக் கடவதாக சொல்லுகிறது அன்றே –
மடல் எடுக்கை யாகிறது -எதிர்த் தலைக்கு குண ஹாநியை விளைக்கை இ றே
குண ஹாநியை விளைக்கவே -குணாதிக விஷயம் ஆகையாலே குணத்தை ஒழிய ஜீவிக்க மாட்டான் இறே –
குணமே தாரகமாக நினைத்து இருப்பார்க்கு குணத்தை அழிக்கை யாகிறது
குணியை அழிக்கக் கடவது இ றே –
தனக்கு குண ஹாநியை விளைக்கை யாவது தன்னையே அழிக்கை
ஆகையாலே தன்னை அழிக்க மாட்டாமே
இவள் மடலூர ஒருப்பட்ட போதே
அவன் இவள் சந்நிதியிலே வந்து மேல் விழும் –
அவனுக்கு ஸ்வரூப ஹாநி வாராமே தன் அபிமதமும் பெற்றுத் தலைக் கட்டலாம் ஆகில்
இதற்கு மேல் பட்ட வாய்ப்பு இல்லை இ றே
இனி மடல் எடாது ஒழிந்த போது
அத்தலைக்கு அவத்யத்தைப் பண்ணிற்றாம் இத்தனை இ றே –

சர்வேஸ்வரன் சிருஷ்டி யுன்முகனாய்க் கொண்டு கண் வளர்ந்து அருள
சிருஷ்டி காலமானவாறே திரு நாபியிலே ஒரு தாமரை பூத்தது –
அதிலே சதுர்முகன் தோன்றினானாய்-அவனைக் கொண்டு இவ்வருகு உண்டான கார்ய வர்க்கத்தை உண்டாக்கச் சொல்லி
அவனுக்கு கை விளக்காக நாலு வகைப் பட்ட வேதங்களையும் ஒதுவித்தானாய் –
அந்த வேதங்கள் தன்னிலே புருஷார்த்தமாகச் சொல்லப் படுகிற
தர்மார்த்த காம மோஷம் என்று சொல்லப் படுகிறது நாலு –
தர்மமும் காம சேஷம்
அப்படியே அர்த்தமும் காம சேஷம்
காம புருஷார்த்தமே பிரதானம்
இனி பகவத் புருஷார்த்தம் என்று ஓன்று உண்டு என்று சொல்வார்கள்
அது பெறுகை துர்லபம் –
பெற்று அறிவார் இல்லை –
ஆகையால் இட்டு எண்ணப் படுவது ஓன்று அன்றி
புருஷார்த்தங்களில் காமமே இ றே புருஷார்த்தம்
அல்லாதவை இதுக்கு அங்கம் இ றே-

கர்மண்யேவாதி காரச்தெ மா பலேஷூ   கதாசன –
காம்ய ரூபமான தர்மங்களிலே உனக்கு அதிகாரம் –
இதில் தாளையடியில் சொல்லுகிற பலன்களில் உண்டான அபிசந்தியைப் பண்ணாது ஒழி -என்றவாறே
மா கர்ம பல ஹேதுர்பூ-
கர்மம் பல ஹேதுவாகாமே கொள் -அதாகிறது சகர்த்ருகமாக அனுஷ்டியாதே
மா தே சங்கோ அஸ்தவ   கர்மணி –
பல த்யாகத்தை பண்ணா நின்றதாகில் அகர்த்ருகமாக அனுஷ்டிக்க வேணுமாகில்
இது தான் நமக்கு என் செய்ய -என்று கொண்டு அனநுஷ்டானம் வாராத படி பரிஹரி -என்று கொண்டு இங்கனே காம்ய ரூப கர்மம் தன்னையே பகவத் பிராப்திக்கு சாதனமாக அருளிச் செய்தான் இ றே –
இப்படியே இந்த காமமும்
பாஹ்ய விஷயங்களைப் பற்றி இருக்கும் அன்று இ றே இது த்யாஜ்யம் ஆவது –
வகுத்த விஷயத்தைப் பற்றி வரும் அன்று உத்தேச்யமாக கடவது –
அப்ராப்த விஷயங்களில் காமத்தை நிஷேதித்து -வகுத்த விஷயத்தில் காமத்தை விதித்தது
நிதி த்யாசி தவ்ய-என்று கொண்டு விதி ரூபமாய் வருகிற காமம் ஆயிற்று அது –
இங்குக் காமமாக சொல்லுகிறது தான் பகவத் பக்தியை –

இந்த பக்தி தான் உபாசன பக்தியாய் வருமது அல்ல –
பகவத் பிரசாதம் அடியாக கைங்கர்யத்துக்கு பூர்வ காலீனமாய்க் கொண்டு வரும் பக்தி யாயிற்று
கர்ம ஜ்ஞான சஹ்க்ருதமாய் வரக் கடவ பக்தி யாயிற்று வேதாந்தங்களிலே சொல்லுகிற சாதன பக்தி யாவது  –
இதுக்கு அந்த கர்ம ஜ்ஞானங்கள் இரண்டின் உடைய ஸ்தானங்களில் பகவத் பிரசாதமாய்
அதடியாக பரபக்தி பரஜ்ஞான பரமபக்தியாய் இருக்கும்
பேற்றுக்கு கைம்முதலாக-மயர்வற மதி நலம் அருளினன் -என்று சொல்லி
அவ்வருள் அடியாக
சூழ் விசும்பணி முகிலுக்கு இவ்வருக்கு எல்லாம் பர பக்தி பிறந்த படியாய்
சூழ் விசும்பணி முகில் தன்னிலே பரஜ்ஞானம்  பிறந்த படியாய்
முனியே நான் முகனிலே பரம பக்தி பிறந்த படியாய்
அநந்தரம்
பெற்றுத் தலைக் கட்டினாராய்-அருளிச் செய்தார் இ றே   –

உபாசகனுக்கு தன்னுடைய பக்தி சாதனத்துக்கு உடலாய் இருக்கும் –
பிரபன்னனுக்கு கைங்கர்யத்துக்கு பூர்வ ஷணவர்த்தியாய் -ப்ராப்ய அந்தர் கதமாய் இருக்கும் –இத்தால் -பிராப்ய ருசியைச் சொன்ன படி இ றே
ஏவம் விதமானது கர்ம புருஷார்த்தம்
அங்கன் அன்றியே இதுக்கு தூஷணம் சொல்லுமவர்கள் அவஸ்துக்கள்-அவர்களை நாம் சிலராக ஆதரியோம் –
இதிலும் பழையதாய் போருகிற வழியிலே நின்றோம் வாம்
அப்படிச் செய்தோம் நாமே  யல்லோம் –
விவஷிதராய் அறிவுடையார் இருப்பார் பலரும் இத்தையே ஆதரித்தார்கள் என்னும் இடத்துக்கு பிரமாணமும் காட்டி
இப் புருஷார்த்தையே ஆதரித்து –
இத்தை ஒழிந்த வற்றை அடையக் காற்கடைக் கொண்டு
இக்காமம் தனக்கு விஷயமாக நினைக்கிறது குணாதிக்ய விஷயத்தை யாயிற்று –
பர வ்யூஹ விபவங்கள் அன்றிக்கே குணாதிக்யம் உள்ளது உகந்து அருளின நிலங்களிலே யாகையால்
இங்கு நிற்கிற நிலைக்கு அடியான குணங்களின் ஏற்றத்தை யடைய அழித்தல்-
பெறுதல் செய்தால் அல்லது மீளுவது இல்லை என்று ஒருப்பட்ட த்வரையின் ஊற்றத்தை சொல்லி  –
அதுக்காக மடல் எடுப்பதாக அத்யவசித்த ஊற்றத்தை சொல்லித் தலைக் கட்டுகிறது –

சிறிய திரு மடலில் கிருஷ்ணாவதாரத்திலே மடல் எடுத்துப் பெற நினைத்தார் –
அவ்வதாரம் பரத்வத்தோடு  ஒக்கச் சொல்ல லாம் படி யாயிற்று –
நீர்மைக்கு எல்லை நிலமாய்
அது போலே காலாந்தர பாவியாகாதே
நினைத்த போதே மடல் எடுத்து அழிக்கலாம் படி சந்நிஹிதமுமாய் இருக்கிறது  யாயிற்று -உகந்து அருளின நிலங்களிலே மடல் எடுத்துப் பெற நினைக்கிற இது –
கிருஷ்ணன் ஆகிறான் நிர் லஜ்ஜன் ஆகையாலே தானும் ஒக்க மடல் எடுக்கும்
மடலுக்கு இறாய்ப்பான் ஒருவன் அல்லன்
குணாபிமானம் பண்ணி இருக்கும் இடத்தே குணங்களை அழிக்கை யாகிறது கடுகப் பெருகைக்கு உறுப்பாய் இருக்கும் –

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை திரு நறையூர் அரையர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: