Archive for May, 2014

ஸ்ரீ பெரிய திருமொழி-7-7–ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம்-

May 20, 2014

திருவுக்கும் திருவாகிய –பிரவேசம் –

அடியேன் கண்டு கொண்டு களித்தேனே -என்றார் கீழ் –
அது தானேயாய் நிற்கப் பெறாதே
பாதகமான இந்த்ரியங்கள் விடாதே அணித்தாய் நின்று
நலிகிறபடியை அனுசந்தித்து அஞ்சி
நம் ஆழ்வார் -உண்ணிலாவில் -பட்ட கிலேசத்தை அடையப் பட்டு
இதுக்குப் போக்கடி அவன் திருவடிகளிலே விழுந்து சரணம் புகுகைக்கு
மேற்பட இல்லை என்று அத்யவசித்து
புருஷகார பூதையான பிராட்டி முன்னாகத்
தம்முடைய அநந்ய கதித்வத்தை சொல்லிக் கொண்டு
சரணம் புகுகிறார் –

————————————————————

திருவுக்கும் திருவாகிய செல்வா தெய்வத்துக்கு அரசே செய்ய கண்ணா
உருவச் செஞ்சுடர் ஆழி வல்லானே உலகுண்ட வொருவா திரு மார்பா
ஒருவருக்கு ஆற்றி உய்யும் வகை என்றால் உடன் நின்று ஐவர் என்னுள் புகுந்து ஒழியாது
அருவித் தின்றிட வஞ்சி நின்னடைந்தேன் அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே –7-7-1-

திருவுக்கும் திருவாகிய செல்வா –
ஸ்வ வ்யதிரிக்த ருடைய சம்பத்துக்கு நிதான பூதையான
பிராட்டிக்கு சம்பத்து ஆனவனே –

தெய்வத்துக்கு அரசே-
அயர்வறும் அமரர்கள் அதிபதியே –

செய்ய கண்ணா –
புண்டரீகாஷனான சர்வேஸ்வரனே –

உருவச் செஞ்சுடர் ஆழி வல்லானே –
விரோதி நிரசனத்துக்கு பரிகரமாய்-
அழகிய வடிவை உடைத்தாய் –
நிரவதிக தேஜோ ரூபமான
திரு வாழியைக் கையிலே உடைய  சர்வேஸ்வரனே –

லஷ்மீ பதி என்னுதல் –
நித்ய சூரிகளுக்கு எல்லாம் நிர்வாஹகன் -என்னுதல் –
கை சலியாமல் திரு வாழியைக் கையிலே பிடிக்க  வல்லவன் -என்னுதல்
இவை இ ரே சர்வாதிகத்துவத்துக்கு லஷணம்
உலகுண்ட வொருவா-
குணாகுணம் நிரூபணம்   பண்ணாதே
தளர்ந்தார் தாவளம் ஆனவனே –

திரு மார்பா –
உன்னைத் தளர்ந்தார் தாவளம் ஆக்குமவளைத்
திரு மார்விலே உடையவனே –

ஒருவருக்கு ஆற்றி உய்யும் வகை என்றால்-
ஏக விஷயத்தில் சேஷத்வம் குலைந்தது கிடாய் –
ஒருவருக்கு ஆடல் கொடுத்து
உஜ்ஜீவிக்கும் படியாய் இருக்கிறது இல்லை –

உடன் நின்று ஐவர் என்னுள் புகுந்து ஒழியாது –
ரஷகனான உன்னில் காட்டிலும்
பாதக வர்க்கம் அணித்தாய் நின்று நலியா நின்றன –
உண்ணிலாவிய -என்னுமா போலே
ஒருவர் இருவர் இன்றிக்கே
சேதன சமாதியாலே நலியா நின்றுள்ள
ஐந்து இந்திரியங்கள் என் பக்கலில் வந்து புகுந்து
என்னை நெருக்கி
ஒரு ஷணமும் கால் வாங்குகிறன  இல்லை –

அருவித் தின்றிட வஞ்சி நின்னடைந்தேன் –
என்னுடைய விஷயத்தை காட்டு -என்னுடைய விஷயத்தைக் காட்டு -என்று
இவை தனித் தனியே அலைத்து நெருக்க
அவற்றுக்கு அஞ்சி வந்து
சர்வ ஸ்வாமியான உன்னுடைய திருவடிகளிலே
சரணம் புகுந்தேன் –

அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே –
ரஷணத்தில் அதிகரித்த உனக்கு
அத்தை முடிய நடத்த வேண்டாவோ –

—————————————————————–

பந்தார் மெல்விரல் நல்வளைத் தோளி பாவை பூ மகள் தன்னொடும் உடனே
வந்தாய் என் மனத்தே மன்னி நின்றாய் மால் வண்ணா மழை போல் ஒளி வண்ணா
சந்தோகா பௌழியா தைத்ரியா சாம வேதியனே நெடுமாலே
அந்தோ நின்னடி யன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே –7-7-2-

பந்தார் மெல்விரல் –
தன்னொடும் உடனே  வந்தாய் –
சர்வேஸ்வரன் உடன் கலக்கும் போதும் அகப்பட
ஒரு ஷணமும் விடாதே
பந்தை உடையளாய்
அப்பந்தும் உட்பட பொறாத விரல்களை உடையளுமாய் –

நல்வளைத் தோளி பாவை பூ மகள் –
தர்ச நீயமான  வளைகளை உடைய
திருத் தோள்களை உடையளாய்
தாமரைப் பூவை இருப்பிடமாக உடைய
பெரிய பிராட்டியாரோடு கூடி வந்தாய் –
அரவிந்தப் பாவையும் தானும் -என்கிறபடியே
சபரிகரனாய் கொண்டாய்த்து வந்து புகுந்தது –

என் மனத்தே மன்னி நின்றாய் –
இவ்வரவாலே நெஞ்சை நெகிழப் பண்ணி
விலக்காமை உண்டானவாறே
ஆவா சந்த்வஹம் இச்சாமி -என்கிறபடியே
வந்து புகுந்தான் ஆய்த்து-

மால் வண்ணா –
கறுத்த நிறத்தை உடையவனே –

மழை போல் ஒளி வண்ணா –
கறுத்து இருக்கை அன்றிக்கே
மேகம் போலே குளிர்ந்த வடிவை உடையவனே –

சந்தோகா பௌழியா தைத்ரியா சாம வேதியனே –
ஆர்த்த ரஷணத்துக்கு ஈடான சர்வஞ்ஞத்தை உடையவனே –
இத்தால்
வேதார்த்த தத்வ ஞானத்தை உடையவனே -என்றபடி –

நெடுமாலே –
அவ்வேதங்களாலே சொல்லப் படுகிற ஆதிக்யத்தை உடைய சர்வாதிகனே –

அந்தோ நின்னடி யன்றி மற்று அறியேன் –
வேறேயும் சில ரஷகர் உண்டாய்
அவர்கள் ரஷிக்கிறார்கள் என்று உனக்கு ஆறி இருக்க ஒண்ணாது கிடாய் –
அநந்ய கதியான நான் உன் திருவடிகள் ஒழிய
வேறு ஒரு புகல் உடையேன் அல்லேன் –

அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே –
அநந்ய கதிகளை நோக்குகைக்கு அன்றோ
தேவரீர் இங்கே வந்து நிற்கிறது –

————————————————————-

நொய்யார் ஆழியும் சங்கமும் ஏந்தும் நீண்ட  தோளுடையாய் அடியேனைச்
செய்யாத வுலகத்திடைச் செய்தாய் சிறுமைக்கும் பெருமைக்கும் உள் புகுந்து
பொய்யால் ஐவர் என் மெய் குடியேறப் போற்றி வாழ்வதற்கு அஞ்சி நின்னடைந்தேன்
ஐயா நின்னடி யன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே –7-7-3-

நொய்யார் ஆழியும் சங்கமும் ஏந்தும் நீண்ட  தோளுடையாய் –
கடைந்து பற்றற நெய் இட்டு இருக்கிற
திவ்ய ஆயுதங்களை உடையவனே –
நொய் -கூர்மை
ஆர்தல் -மிகுதி
கூர்மை மிக்க திரு வாழி-
அவற்றுக்குத் தகுதியான திருத் தோள்களை உடையவனே –

அடியேனைச் –
தேவருக்கு யோக்யனாய் இருக்கிற என்னை –

செய்யாத வுலகத்திடைச் செய்தாய் –
லோகத்திலே செய்யாத வற்றை எல்லாம் செய்தாய் –
உன் திருவடிகளில் கைங்கரியத்தை
நினையாத லோகத்திலே வைத்தாய் –

சிறுமைக்கும் பெருமைக்கும் உள் புகுந்து -பொய்யால் ஐவர் என் மெய் குடியேறப்-
ஷூத்ர விஷயங்களை லபிக்கைக்கும்
கிட்ட அரிய விஷயங்களை லபிக்கைக்கும் ஆக
க்ருத்ரிம ரூபத்தாலே
நான் என்கிற சொல்லுக்கு உள்ளே அடங்கும்படி
என் சரீரத்திலே வந்து குடி புகுந்தன வாய்த்து —

போற்றி வாழ்வதற்கு அஞ்சி-
அவற்றை ஆராதித்துப் பின் சென்று
வர்த்திக்கும் அதற்க்கு அஞ்சி

நின்னடைந்தேன்-
நிருபாதிக சேஷியான உன்னைக் கிட்டினேன் –

ஐயா-நின்னடி யன்றி மற்று அறியேன்-
நிருபாதிக பந்துவே –
உன் திருவடிகளை ஒழிய
வேறு ஒரு புகல் உடையேன் அல்லேன் –

அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே-
நிருபாதிக பந்தம் தோற்ற
வந்து நிற்கிறவனே –

———————————————————————

பரனே பஞ்சவன் பௌழியன் சோழன் பார்மன்னர் மன்னர் தாம் பணிந்து ஏத்தும்
வரனே மாதவனே மது சூதா மற்றோர் நற்றுணை நின்னலால் இலேன் காண்
நரனே நாரணனே திரு நறையூர் நம்பீ எம்பெருமான் உம்பர் ஆளும்
அரனே ஆதி வராஹம் முன்னானாய் அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே  -7-7-4-

பரனே –
சர்வ ஸ்மாத் பரன் ஆனவனே –

பஞ்சவன் பௌழியன் சோழன் பார்மன்னர் மன்னர் தாம் பணிந்து ஏத்தும் வரனே-
பஞ்சவன் என்றும்
பவுழியன் -என்றும்
சோழர்கள் பேர் –
ஒரோ ராஜ்யங்களுக்கு கடவராய்
ஐஸ்வர்ய பிரதானராய் இருக்கிற ராஜாக்கள்
தம்தாமுடைய அபிமத அர்த்தமாக வந்து ஆஸ்ரயித்து
அவை பெற்றுப் போம்படிக்கு ஈடாக நிற்கிற பரனே –
அவர்களுக்கு ஆஸ்ரயநீயனாய் உள்ளவனே  –

மாதவனே –
அவர்கள் உடைய அபிமதங்களை தலைக் கட்டிக் கொடுப்பிக்கும்
புருஷகாரத்தை உடையவனே –

மது சூதா-
அவர்கள் உடைய விரோதியைப் போக்குகைக்கு ஈடான
விரோதி நிரசன சீலன் ஆனவனே –

மற்றோர் நற்றுணை -நின்னலால் இலேன் காண்-
தன்னை அழிய மாறியும் அடைந்தாரை நோக்கும்
துணை உன்னை ஒழிய
வேறு ஒருவரை உடையேன் அல்லேன் –

நரனே நாரணனே –
ஆஸ்ரித அர்த்தமாக
அவர்கள் உன்னை பெறுகைக்கு பண்ணும் தபஸ்சை
நீ அவர்களை பெறுகைக்காக பண்ணுமவனே-

திரு நறையூர் நம்பீ –
திரு நறையூரிலே வந்து நிற்கிற
கல்யாண குண பூரணனே –

எம்பெருமான்-
அங்கே பிராட்டியும் நீய்மாய் நிற்கிற நிலையைக் காட்டி
என்னை அனந்யார்ஹன் ஆக்கினவனே-

உம்பர் ஆளும் அரனே –
மேல் உண்டான தேவதைகளை நிர்வஹிக்கிற ருத்ரனுக்கு
அந்தராத்மாவாய் நின்று
அவர்களை நிர்வஹிக்கிறவனே-
ருத்ரம் சமாஸ்ரித தேவா ருத்ரோ  ப்ரஹ்மாணம் ஆஸ்ரித
ப்ரஹ்மா மாம் ஆஸ்ரிதோ ராஜன் நாஹம் கஞ்சிது பாஸ்ரித -ஏன்னா நின்றது இ றே  –

ஆதி வராஹம் முன்னானாய் –
ஒருவனுக்கு உள்ளீடாய் நின்று ரஷிக்கை அன்றிக்கே
வராஹ கல்பத்தின் உடைய ஆதியிலே மகா வராஹமாய்
வந்து அவதரித்து
கண்ணுக்கு இலக்காய் நின்று நோக்கினவனே –

அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே  –
அது தன்னை பழம் கதை யாக்கி
இப்போது
திருவழுந்தூரிலே வந்து நிற்கிறவனே –

—————————————————

விண்டான் விண் புக வெஞ்சமத்து அரியாய் பரியோன் மார்வகம் பற்றிப்  பிளந்து
பண்டான் உய்ய வோர் மால் வரை ஏந்தும் பண்பாளா பரனே பவித்ரனே
கண்டேன் நான் கலியுகத்ததன் தன்மைக் கருமமாவதும் என்று எனக்கு அறிந்தேன்
அண்டா நின்னடி யன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே -7-7-5-

விண்டான் விண் புக வெஞ்சமத்து அரியாய் பரியோன் மார்வகம் பற்றிப்  பிளந்து
ஹிரண்யாஸூரன்  ஆனவன் வீர ஸ்வர்க்கத்துக்கு
ஏறிப் போம்படியாக
கொடிய யுத்தத்திலே
நரசிம்ஹ வேஷத்தை உடையனாய் –
அஹங்கார மமகாரங்களாலே தடித்த வடிவை உடையானவனுடைய மார்வைச் சென்று பற்றி
இரண்டு பிளவாம் படி பண்ணி –

இத்தால் அது சிறுக்கன் அறியச் செய்த செயல் இ றே-
அங்கன் உபகார ஸ்ம்ருதியும் இல்லாத பசுக்களுக்கும் இடையருக்கும்
உதவினபடியைச் சொல்லுகிறது –
பண்டான் உய்ய வோர் மால் வரை ஏந்தும் பண்பாளா
பண்டு ஆன் -பசுக்களை உய்ய
முன்பு பசுக்களும் இடையரும் பிழைக்கும் படி கைக்கு எட்டிற்று
ஒரு பெ ரு மலையை எடுத்து ரஷித்தநீர்மையை உடையவனே –

பரனே-
இப் பிரஜா ரஷண  தர்மத்திலே உனக்கு
அவ்வருகு ஒருவரும் இல்லாதபடி இருக்கிறவனே –
பவித்ரனே –
அசுத்தரை சுத்தி யாக்கும் சுத்தியை உடையவனே –

கண்டேன் நான் கலியுகத்ததன் தன்மைக் –
இக்கலி யுகத்தின் உடைய தன்மையை அழகியதாகக் கண்டேன் –
உன் பக்கலிலே வை முக்யத்தைப் பண்ணுவித்து –
விஷய பிராவண்யத்தைப் பிறப்பித்து –
முடிக்கும் சம்சார ஸ்வ பாவத்தை நான் அழகிதாக அறிந்தேன் –

கருமமாவதும் என்று எனக்கு அறிந்தேன்-
எனக்கு ஹிதமாவதும்
உன் திருவடிகளை ஆஸ்ரயிக்கும்  அதுவே
என்று அறிந்தேன் –

அண்டா நின்னடி யன்றி மற்று அறியேன்
அண்டத்துக்கு நிர்வாஹகன் ஆனவனே –
அன்றிக்கே –
இடையருக்கு நிர்வாஹகன் ஆனவனே -என்றுமாம் –

அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே –
ஸ்ரீ பிரகலாதனுக்கும்
இடையருக்கும்
பசுக்களுக்கும்
உதவினபடியே பிற்பாடருக்கும் உதவுகைகாக
அன்றோ இங்கு வந்து நிற்கிறது –

————————————————

தோயாவின் தயிர் நெய் அமுது உண்ணச்சொன்னார் சொல்லி நகும் பரிசே பெற்ற
தாயால் ஆப்புண்டு இருந்து அழுது ஏங்கும் தாடாளா தரையோர்க்கும் விண்ணோர்க்கும்
சேயாய் கிரேத திரேதா துவாபர கலியுகமிவை நான்கும் ஆனாய்
ஆயா நின்னடி யன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே –7-7-6-

தோயாவின் தயிர் நெய் அமுது உண்ணச் –
அறத் தோயாத இனிய தயிரையும் நெய்யையும்
பொருந்தி அமுது செய்ய –

சொன்னார் சொல்லி நகும் பரிசே-
வாய்க்கு போந்தார் போகும் படி சொல்லுகிற பழிக்கு அஞ்சாதே
மழலைத் தயிரும் நெய்யும் புஜித்தோம் ஆகில் இதுக்கு வருவது ஓன்று உண்டோ -என்றும்
ஒன்றை இட்டுப் பழி சொல்லுகிறார்கள் அன்றே -என்றும்
நாட்டார் சொல்லுகிற பழிக்கு லஜ்ஜியாதே இருந்தான் ஆய்த்து –

பெற்றதாயால் ஆப்புண்டு இருந்து –
யசோதை பிராட்டியால் கட்டுண்டு –

அழுது ஏங்கும் தாடாளா –
பிரதி கிரியை அற்று போக மாட்டாதே
நின்ற வேண்டப் பாட்டை உடையவனே –

தரையோர்க்கும் விண்ணோர்க்கும் சேயாய்-
பூமி அந்தரிஷங்களில் உள்ளார்
ஸ்வ யத்னத்தால் காணப் பார்க்கும் அன்று
அவர்களுக்கு தூரஸ்தன் ஆனவனே –

நீர் இங்கனே பதறுகிறது என் –
காலம் வந்து கார்யம் செய்ய வேண்டாவோ என்ன –
கிரேத திரேதா துவாபர கலியுகமிவை நான்கும் ஆனாய் ஆயா நின்னடி யன்றி மற்று அறியேன் –
கலௌ கிருதயுகம் தஸ்ய -என்ன ஒண்ணாதோ உனக்கு –
காலம் நீ இட்ட வழக்கு அன்றோ –
உன் திருவடிகளை ஒழிய வேறு ஒன்றை அறியேன் –

அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே –
அந்த கிருஷ்ணாவதாரத்தில் பிற்பாடருக்கும்
இழவாமைக்கு அன்றோ நீ இங்கு வந்து நிற்கிறது –

———————————————————–

கறுத்துக் கஞ்சனை அஞ்ச முனிந்தாய் கார் வண்ணா கடல் போல் ஒளி வண்ணா
இறுத்திட்டான் விடை ஏழும் முன் வென்றாய் எந்தாய் அந்தரம் ஏழும் ஆனாய்
பொறுத்துக் கொண்டு இருந்தால் பொறுக்க ஒணாப் போகாமே  நுகர்வான் புகுந்து ஐவர்
அறுத்துத் தின்றிட வஞ்சி நின்னடைந்தேன் அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே —7-7-7-

கறுத்துக் கஞ்சனை அஞ்ச முனிந்தாய் –
எல்லாரும் ரஷை பெற்று ஜீவிக்க வேணும் என்று இருக்கிற
இவன் பக்கலிலே துர் அபிசந்தியைப் பண்ணினான் ஆய்த்து-
கம்சன் -அவன் பண்ணின அபிசந்தி
அவன் தன்னோடு போம்படி கோபித்து
கம்சனானவன் பீதனாம் படி முனிந்தாய் -சீறினாய் –

கார் வண்ணா –
கண்டாருக்கு ஸ்ரமஹரமான வடிவை உடையவனே –

கடல் போல் ஒளி வண்ணா –
கடல் போலே சர்வ பதார்த்தங்களுக்கும் ரஷகனாய்
அத்தோடு ஒத்த நிறத்தை உடையவனே –

இறுத்திட்டான் விடை ஏழும் முன் வென்றாய் –
அசூராவேசத்தாலே மிருத்யு போலே வந்த ருஷபங்கள்
ஏழின் உடைய கொம்பையும் முறித்து
அவற்றை ஜெயித்தாய் –

எந்தாய்-
அச் செயலைக் காட்டி என்னை எழுதிக் கொண்டாய்-

அந்தரம் ஏழும் ஆனாய் –
உபரிதன லோகங்கள் ஏழையும்
உடையவன் ஆனவனே –

பொறுத்துக் கொண்டு இருந்தால் பொறுக்க ஒணாப் போகாமே  நுகர்வான் புகுந்து ஐவர்
அறுத்துத் தின்றிட வஞ்சி நின்னடைந்தேன் அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே –
இவற்றால் வந்த நலிவை ஆற்றி இருப்போம் என்றால்
ஆற்ற ஒண்ணாத படியாக போகங்களை
புஜிக்க வேண்டும் என்று ஐவர் நெருக்கி புஜிப்பிக்க
அவர்களுக்கு அஞ்சி
உன் திருவடிகளிலே சரணம் புகுந்தேன் –

—————————————————————————

நெடியானே கடியார் கலி நம்பீ நின்னையே நினைந்து இங்கு இருப்பேனைக்
கடியார்  காளையர் ஐவர் புகுந்து காவல் செய்து அக்காவலைப் பிழைத்துக்
குடிபோந்து உன்னடிக் கீழ் வந்து புகுந்தேன் கூறை சோறு  இவை தந்து எனக்கு அருளி
அடியேனைப் பணியாண்டு கொள் எந்தாய் அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே —7-7-8-

நெடியானே-
சர்வாதிகனான சர்வேஸ்வரனே –

கடியார் கலி நம்பீ –
பரிமளத்தை உடைத்தாய்
அரண் பெற்று இருக்கிற –
ஆர் கலி உண்டு -கடல்
அதிலே சாய்ந்து அருளின
கல்யாணகுண  பூரணனே –

நின்னையே நினைந்து இங்கு இருப்பேனைக்கடியார்  காளையர் ஐவர் புகுந்து காவல் செய்து –
பரம பதத்தே இருந்து
அங்கு உள்ளார் நினைக்கும் நினைவை
இங்கேயே இருந்து உன்னையே நினைத்து இருக்கும் என்னை –
நெஞ்சிலே நன்மை இன்றிக்கே
பிறரை நலிய நலிய இளகிப் பதியா நின்ற
பருவத்தை உடைய ஐவர் வந்து புகுந்து சிறை செய்கிற –

அக்காவலைப் பிழைத்துக் குடிபோந்து உன்னடிக் கீழ் வந்து புகுந்தேன் –
த்யக்த்வா புத்ராம்ச தாராம்ச ராகவம் சரணம் கத -என்கிறபடியே
அவற்றைத் தப்பி உன் திருவடிகளிலே சரணம் புகுந்தேன் –

கூறை சோறு  இவை தந்து எனக்கு அருளி –
எனக்கு கூறையும் சோறுமாய் இருக்கிற
இத்  திருவடிகளைத் தந்து அருளி  –
தோட்டமில்லவள்-என்கிறபடியும்
எல்லாம் கண்ணன் -என்கிறபடியும் –
கூறை சோறாக நினைத்து இருப்பது இவை யாய்த்து இவர் –

அடியேனைப் பணியாண்டு கொள் எந்தாய் –
வகுத்த ஸ்வாமியான நீ
ராஜபுத்ரனாய் பிறந்து
முடி இழந்து போவாரைப் போலே ஆகாமே
அடியேனாக இருக்கிற என்னை
நித்ய கைங்கர்யத்தைக்  கொண்டு அருள வேணும் –

அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே –
ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கு வந்து புகுரலாம்படி
கடற்கரை வெளியிலே வந்து நின்றாப் போலே
எனக்கு உறவுமுறையார் கை விட்டவன்று
வந்து கிட்டலாம் படி அன்றோ –

—————————————————————

கோவாய் ஐவர் என் மெய் குடி ஏறிக் கூறை சோறு இவை தான் வென்று குமைத்துப்
போவார் நான் அவரைப் பொறுக்கிலேன் புநிதா புட்கொடியா நெடுமாலே
தீவாய் நாகணையில் துயில்வானே திருமாலே இனிச் செய்வது ஓன்று அறியேன்
ஆவா வென்று அடியேற்கு இறை இரங்காய் அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே  –7-7-9-

கோவாய் ஐவர் என் மெய் குடி ஏறிக் –
நீ சேஷியாமாவது தவிர்ந்து
இவை எனக்கு நியாமகமாய்க் கொண்டு வந்து
என் சரீரத்திலே குடி புகுந்தது –

கூறை சோறு இவை தான் வென்று குமைத்துப் –
நான் கூறையும் சோறுமாக நினைத்து இருக்குமது ஒழிய
வேறு சிலவற்றைத் தா என்று என்னை நெருக்கி
ஒரு ஷணமும் கால் வாங்குகிறிலர்கள்-
நான் அவர்கள் நலிவைப் பொறுக்க மாட்டுகிறிலன்-

புநிதா –
என் விரோதியைப் போக்கி ரஷிக்குமது உன் பேறாக நினைத்து இருக்கும்
சுத்தி யோகத்தை உடையவனே –

புட்கொடியா –
இவை எல்லாவற்றுக்கும் கொடி கட்டி இருக்கிறவனே –

நெடுமாலே-
ஆஸ்ரிதர் பக்கல் மிக்க வ்யாமோஹத்தை உடையவனே-

தீவாய் நாகணையில் துயில்வானே –
ஆஸ்ரித சம்ச்லேஷ ஏக ஸ்வபாவனே –
உனக்கு என் வருகிறதோ என்று அஞ்ச வேண்டாதபடி
சத்ருக்கள் மேலே நெருப்பை உமிழ்கிற
திரு வநந்த வாழ்வான் மேலே சாய்ந்து அருளினவனே-

திருமாலே –
அப்படுக்கையில் சாய்வது
இருவருமான சேர்த்தியோடே யாய்த்து –

இனிச் செய்வது ஓன்று அறியேன் ஆவா வென்று அடியேற்கு இறை இரங்காய்-
இனி நான் என்னுடைய ஹித விஷயமாக செய்வது ஓன்று அறியேன் –
ஐயோ ஐயோ என்று அநந்ய கதியான என் பக்கலிலே
கிருபையைப் பண்ணி அருள வேணும்  –

அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே –
கிருபை பண்ணுகைக்கு   வந்து நிற்கிற இடம் அன்றோ இவ்விடம் –

———————————————————————–

அன்னம் மன்னு பைம் பொழில் சூழ்ந்த அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானைக்
கன்னி மன்னு திண் தோள் கலிகன்றி   ஆலிநாடன் மங்கைக் குலவேந்தன்
சொன்ன விந்தமிழ் நன் மணிக் கோவை தூய மாலை இவை பத்தும் வல்லார்
மன்னி மன்னவராய் உலகாண்டு மான வெண் குடைக் கீழ் மகிழ்வாரே —–7-7-10-

அன்னம் மன்னு பைம் பொழில் சூழ்ந்த –
அன்னங்கள்   நித்ய வாஸம் பண்ணுகிற
பரந்த பூவை உடைத்தான பொழிலாலே  சூழப் பட்ட –
அன்னங்கள் ஒன்றோடு ஓன்று ஊடினால்
உடம்போடு உடம்பு அணுகாதபடி கிடைக்க்கு வேண்டும் பரப்பு போந்து இருக்குமாய்த்து
பூவின் பெருமை –

அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானைக் —
திரு அழுந்தூரிலே மேற்கு பார்ச்வத்திலே
நின்ற சர்வாதிகனான சர்வேஸ்வரனை –

கன்னி மன்னு திண் தோள் கலிகன்றி   ஆலிநாடன் மங்கைக் குலவேந்தன் –
ஒரு நாளும் அழியாத மிடுக்கை உடைத்தான
தோள்களை உடைய ஆழ்வார்
திருவாலி நாட்டுக்கு நிர்வாஹகராய் உள்ளார் –
திருமங்கையில் உள்ளாருக்கு பழையதாக
ராஜாவாக உள்ளார்

சொன்ன விந்தமிழ் –
சொன்ன இனிய தமிழான –

நன் மணிக் கோவை-
இந்த ரத்ன மாலையை –

தூய மாலை இவை பத்தும் வல்லார் –
லஷணங்களில் குறைவற்று இருக்கிற இப்பத்தையும்
அப்யசிக்க வல்லவர்கள் –

மன்னி மன்னவராய் உலகாண்டு மான வெண் குடைக் கீழ் மகிழ்வாரே –
சில காலம் ராஜாக்களாய்
லோகங்களை அடைய நிர்வஹித்து
பெரிய முத்தின் குடைக் கீழே இருந்து
நிரவதிக ப்ரீதி உக்தராகப் பெறுவார்  –
இந்த்ரிய அவஸ்தையை அனுசந்தித்து அஞ்சினவர்
இத்தைப் பலமாகச் சொல்லுவான் என் என்னில்
இவருக்கு அந்த ஐஸ்வர்யம் -பாகவத சேஷம் ஆக்குகைக்கு உடலாகையாலே
அதுவும் புருஷார்தத்திலே  புக்குப் போய்த்து காண்-என்று பட்டர் அருளிச் செய்தாராம் –

————

ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.

திரு வழுந்தூரான் நெடியான் நல் துணையான் தூயன்
திருவன் நிறைவறிவன் என்று திருத்த ஐவர்
செய் துயரை வேறு புகலின்றி கலிகன்றி சேர்ந்தான்
உய்ய தாளாம் செங்கமலம் -67-

ஐவர் -ஐந்து புலன்கள்
நெடியான் -தேவராய நிற்கும் அத்தேவும் அத்தேவரில் மூவராய் நிற்கும் முது புணர்ப்பும்
அம்மூவரில் முதல்வனாக நிற்கும் நெடியான் -மனிசர்க்குத் தேவர் போலெ தேவர்க்கும் தேவனான தேவாதி தேவன்
நிறைவறிவன் -சர்வஞ்ஞன் –

—————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பெரிய திருமொழி-9-1—ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம்-

May 20, 2014

(ஸ்ரீ தாமோதர நாராயணப்பெருமாள் -பரத்வ ஸுவ்லப்யம் -வஸிஷ்டருக்காக சேவை
ஸ்ரவண தீர்த்தம் -கேட்டாலே பாவனத்வம் -தீர்த்தமாட வேண்டாம்
சில தரிசன தீர்த்தம் பார்த்தால்
உறங்கா புளி தோலாத வழக்கு காயாத பூ ஊறா கிணறு -நான்கும் சொல்வர் )

வங்க மா முந்நீர் -பிரவேசம் –

பாட்டினால் உன்னை என் நெஞ்சத்து இருந்தமை காட்டினாய் -என்று பாடின கவி தன்னை
நீரே மதிக்கும் படி கவி பாட வல்லீருமாய் இருந்தீர் –
தான் உகந்த ஊர் எல்லாம் தன் தாள் பாடி (திரு நெடும் தாண்டகம் )-என்கிறபடியே
எங்கும் புக்கு அனுபவிக்க வேணும் எண்ணம்
அபிநிவேசம் உண்டாய் இருந்தது –
இங்கு இருக்கும் நாள் தானே
வழு விலா யடிமை செய்ய வேண்டும் -என்று நீர்
மநோ ரதித்த படியே
கவி பாடி அடிமை செய்கின்றீர்-
பின்பு இத் தேக அவசானத்திலே அவ்வருகே கொடு போய்
அஹம் அன்னம் அஹம் அன்னம் -என்று நீர் பேசும் பேச்சு
தன்னையும் அங்கே கேட்கிறோம்-
ஆன பின்பு உமக்கு   ஓர் இடத்திலும்   ஒரு குறைகளும் இல்லை
நாம் உகந்த நிலங்கள் எங்கும்  புக்கு கவி பாடும் -என்று
தான் திருக் கண்ணங்குடியில் நிற்கிற நிலையைக் காட்டிக் கொடுக்க
கண்டு-
வெள்ள நீர் வெள்ளத் தணைந்த வரவணை மேல்  -என்கிறபடியே
நம்முடைய ரஷணத்திலே  உத்யுக்தராய்க் கொண்டு
திருப் பாற் கடலிலே வந்து கண் வளர்ந்து அருளினவன் தானே
இங்கே
திருக் கண்ணங்குடியிலே வந்து சந்நிஹிதன் ஆனான் என்று
அங்கே கவி பாடி அனுபவித்து ஹ்ருஷ்டர் ஆகிறார் –

————————————————-

வங்க மா முந்நீர் வரி நிறப் பெரிய வாள் அரவின் அணை  மேவிச்
சங்கமாரங்கைத் தடமலருந்திச் சாம மா மேனி என் தலைவன்
அங்கமாறைந்து வேள்வி  நால் வேத  மருங்கலை  பயின்று எரி மூன்றும்
செங்கையால் வளர்க்கும் துளக்கமில் மனத்தோர் திருக் கண்ணங்குடியுள் நின்றானே —9-1-1-

சாம மா மேனிப்பெருமாள் -நீல மேக ஸ்யாமளன்
சிஷா இத்யாதி அங்கங்கள்
ஐந்து வேள்வி -பஞ்ச ப்ரஹ்ம தேவ பித்ரு மனுஷ பூத -ஐந்தும்
அரும் கலை -இதிஹாச புராணங்கள்
துளக்கமில் மனத்தோர்—அவனே ரக்ஷகன்-ப்ராப்யன் என்ற மஹா விஸ்வாஸம்
சங்கை இல்லா திரு உள்ளம் -இது வர அனுஷ்டானங்கள் கொண்டவர்
மனஸ்ஸூ சுத்தியும் அனுஷ்டானங்களும் -ஞானமும் -கற்க கசடு அறக் கற்று அதன் பின் அதன் படி நிற்பவர்கள் –

வங்க மா முந்நீர் –
மரக் கலங்களை  உடைத்தான பெரிய கடலிலே –
கடலுக்கு சிறப்பாக இட்டுச் சொல்லக் கடவது இறே மரக் கலங்களை –

வரி நிறப் பெரிய வாள் அரவின் அணை  மேவிச்
நாநா வான வரிகளையும்
அழகிய நிறத்தையும் உடையனாய் –
பிராட்டிமாருக்கும் தனக்கும் நினைத்த
பரிமாற்றங்களை எல்லாம்
பரிமாறுகைக்கு ஈடான  பரப்பையும் உடையனாய்
மென்மை குளிர்ச்சி  நாற்றம் தொடக்கமான வற்றையும் (வெண்மை பரப்பு )
உடையனான திரு வநந்த ஆழ்வான் மேல் படுக்கை வாய்ப்பாலே
பொருந்தி கண் வளர்ந்து அருளி –

சங்கமாரங்கைத் –
அழகிய திருக் கையிலே ஏந்தின
ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை உடையனாய் –

தடமலருந்திச் –
ஜகத் காரண மான தாமரைப் பூவை
திரு நாபியிலே உடையனுமாய் –

சாம மா மேனி என் தலைவன் —
கண்டார் கண் குளிரும்படியாக ஸ்ரமஹரமான திரு மேனியை யுடைய என் சர்வாதிகன் –

அங்கமாறைந்து வேள்வி  நால் வேத  மருங்கலை  பயின்று எரி மூன்றும்  செங்கையால் வளர்க்கும் துளக்கமில் மனத்தோர்-
சீஷாதிகள்
பஞ்ச மகா யஞ்ஞம்
நாலு வகைப் பட்ட வேதம்
வேதார்த்தை விசதீகரிக்கக் கடவதான இதிஹாசாதிகள்
இவற்றிலே வாசனை உடையருமாய்
ஸ்த நந்த்ய பிரஜையை உணர்ந்து நோக்கும் தாயைப் போலே
அக்னி த்ரயத்தையும் ஆதானம் பண்ணி நோக்கும்
கையை உடையருமாய்
ஒரு கருமத்தை அனுஷ்டியா நின்றோம்
அது நமக்கு ரஷகம் அன்று
சர்வேஸ்வரனே ரஷகன் -என்று
இருக்கும் இருப்பில் குலைத்தலை உடைய நெஞ்சை
உடையார் அன்றிக்கே
இருப்பாருமானவர்கள் வர்த்திக்கிற –

திருக் கண்ணங்குடியுள் நின்றானே –

——————————————————-

ஸ்ரீ கஜேந்திர மோக்ஷ அனுபவம்
ஸூவ ரக்ஷணத்தில் இழிந்து பின்பு அன்றோ ஆதி மூலமே என்றது
கீழே துளக்கமில் மனத்தோரைப் பார்த்தோம் –
திருக் கையும் ஸ்ரீ பாஞ்ச சன்யமுமாய் பள்ளி கொண்டவன் அனுபவம் கீழ்-
ப்ராப்யத்திலே மட்டுமே புத்தி –
இதில் திருக் கையும் திரு ஆழியுமாக வந்து ரக்ஷித்து அருளியதை அனுபவிக்கிறார்

கவள மா கதத்த கரி உய்யப் பொய்கை காரம் கொளக் கலங்கி யுள் நினைந்து
துவள மேல் வந்து தோன்றி வன் முதலை துணி படச்   சுடு படை துரந்தோன்
குவளை நீள் முளரிக் குமுத மொண் கழுநீர் கொய் மலர் நெய்தல் ஒண் கழனித்
திவளும் மாளிகை சூழ் செழு மணிப் புரிசைத் திரு கண்ணங்குடி யுள் நின்றானே —9-1-2-

கதத்த-சினத்த -மதம் பெருகும் –
முளரி–தாமரை
குமுதம் -ஆம்பல்

கவள மா கதத்த கரி உய்யப் பொய்கை காரம் கொளக் கலங்கி யுள் நினைந்து –
கவளம் கொண்டு இருப்பதாய்
மிக்க மதத்தை உடைத்தாய் இருக்கிற ஆனையானது
தன் செருக்காலே தன் நிலம் அல்லாத பொய்கையிலே புக்கு
தன் நிலம் ஆகையாலே நினைத்த படி வியாபாரிக்க வல்ல
முதலையின் வாயலிலே அகப்பட்டு –
காரம் -முதலை –
தன்னால் பரிஹரித்து கொள்ள ஒண்ணாமையாலே கலங்கி –
(பரமாபத ஆபன்ன ) மனஸா சிந்த யத்தரிம் – என்கிறபடியே நெஞ்சால் நினைக்க

துவள மேல் வந்து தோன்றி வன் முதலை துணி படச்   சுடு படை துரந்தோன்-
ஆகாச அவகாசத்தை வெளி அடைத்துக் கொண்டு வந்து தோற்ற –
சாபத்தாலே திண்ணியதான நெஞ்சை உடைய முதலை
(பாகவதர் திருவடிகளையே பற்றி சாபம் போக்க வேண்டும் என்று உணர்ந்து திண்ணிய நெஞ்சை உடைய முதலை )
சின்னம் பின்னம் -என்கிறபடியே
துணி படும்படி பிரதி பஷத்தின் மேலே  நெருப்பை உமிழா நின்றுள்ள
திரு ஆழியை ஏவினவன் –

குவளை நீள் முளரிக் குமுத மொண் கழுநீர் கொய் மலர் நெய்தல் ஒண் கழனித்
குவளை தாமரை ஆம்பல் செங்கழு நீர்
பறிக்கைக்கு யோக்யமான மலரை யுடைத்தான நெய்தல்
இவற்றாலே
தர்ச நீயமான வயலை உடைத்தாய் –

திவளும் மாளிகை சூழ் செழு மணிப் புரிசைத் –
ஒளி விடா நின்றுள்ள மாளிகைகள்
ரத்ன மயமான மதிள்கள்
இவற்றை உடைத்தான  –
திரு கண்ணங்குடி யுள் நின்றானே  –

—————————————————

ரக்ஷணத்துக்கு கூப்பிட்ட ஸ்ரீ கஜேந்திர ரக்ஷணம்
கீழே ரக்ஷணத்துக்கு கூப்பிடாத ஸமஸ்த லோகத்தையும் ரக்ஷித்தமை இதில்
ஒரு நீர்ப்புழுவால் வந்த ஆபத் ரக்ஷணம் கீழே
பிரளய ஆபத்தால் வந்த ஜகத்தையே ரஷித்த படியை அனுபவிக்கிறார் –

வாதை வந்து அடர வானமும் நிலனும் மலைகளும் அலை கடல் குளிப்ப
மீது கொண்டு உகளும் மீனுருவாகி விரி புனல் வரி யகட்டு ஒளித்தோன்
போதலர் புன்னை மல்லிகை மௌவல் புது விரை மது மலர் அணைந்து
சீத ஒண் தென்றல் திசை தொறும் கமழும் திருக் கண்ணங்குடியுள் நின்றானே —-9-1-3-

வாதை வந்து அடர வானமும் நிலனும் மலைகளும் அலை கடல் குளிப்ப
எங்கும் ஒக்க பிரளயமாய் நலிவானது மேலிட
ஆகாசமும்
பூமியும்
குல பர்வதங்களும்
கடலிலே புக்கு அகப்பட –

மீது கொண்டு உகளும் மீனுருவாகி விரி புனல் வரி யகட்டு ஒளித்தோன் –
இவற்றை அடைய தன் மேலே ஏறிட்டுக் கொண்டு
தரிக்க வற்றாய் –
பெரிய களிப்பை உடைய மத்ஸ்ய ரூபியாய்
பரந்த புனலை தன் செலுவிலெ-ஏக தேசத்திலே -அடக்கினவன் –

போதலர் புன்னை மல்லிகை மௌவல் புது விரை மது மலர் அணைந்து –
காலத்திலேயே அலருகிற
புன்னை
மல்லிகை
மௌவல்
இவற்றின் உடைய செவ்விப் பரிமளத்தையும்
தேனையும் உடைத்தான
மலரிலே புக்கு –

சீத ஒண் தென்றல் திசை தொறும் கமழும்
அதன் வெக்காயம் தன் மேல் படாதபடி போந்து -குளிர்ச்சியை உடைத்தாய்
மந்தரமாக சஞ்சரிக்கிற தென்றல் ஆனது
(மந்த மாருதம் -மந்த்ரம் மலை போல் என்றுமாம் )
திக்குகள் தோறும் கமழா நின்றுள்ள
திருக் கண்ணங்குடி யுள் நின்றானே –

————————————

ஒரு பிரளய ஆபத்து ரக்ஷணம் கீழே
அவ்வளவேயோ
அடி பட்டு உரு மாய்ந்த -ஹிரண்யனால் ஒளிக்கப் பட்ட பூமியை
உத்தாரணம் பண்ணியும்
பாரத்தை இறக்கியும்
ரஷித்தவன் என்று அனுபவிக்கிறார் –

(கீழ்க் குலம் புக்க வராஹ கோபாலர் போல் சேர்த்து அனுபவம் -பூமியும் வம்சமும் உத்தரிக்க
கோபாலன் -பூமி பாரம் தீர்த்த ஆபத்தான அனுபவம்
தேர் பாகன் -அர்ஜுனனுக்கு -மட்டுமே இருந்தாலும் இங்கு பஞ்ச பாகன் என்கிறார்
சரீரம் வாழ்க்கையே தேர் என்றுமாம் -மாயப் போர் தேர்ப்பாகன் )

வென்றி சேர் திண்மை விலங்கல் மா மேனி வெள் எயிற்று ஒள் எரித் தறு கண்
பன்றியாய் அன்று பார்மகள் பயலைத் தீர்த்தவன் பஞ்சவர் பாகன்
ஒன்றலா வுருவத் துலபபில் பல் காலத் துயர் கொடி  யொளி வளர் மதியம்
சென்று சேர்  சென்னிச் சிகர நன் மாடத் திருக் கண்ணங்குடியுள் நின்றானே—9-1-4-

வென்றி சேர் திண்மை விலங்கல் மா மேனி வெள் எயிற்று ஒள் எரித் தறு கண்  –
வெற்றியை உடைத்தாய்
திண்ணியதாய்
மலை போலே பெரிய வடிவையும்
வெளுத்த எயிற்றையும் உடைத்தாய்
அக்னி கல்பமாய் ஜாதி உசிதமான வட்டணித்த கண்ணை உடைத்தான –
(நீல வரை இரண்டு பிறை கவ்வி -கோல வராஹம் )

பன்றியாய் அன்று பார்மகள் பயலைத் தீர்த்தவன் பஞ்சவர் பாகன் –
வராஹமாய்
பூமியை பிரளயம் கொண்டது என்று அத்தை எடுத்து
ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கு வந்த வை வர்ண்யத்தைப் போக்கினவன் –
பாண்டவர்களுக்கு சாரதி யானவன் –

ஒன்றலா வுருவத் துலபபில் பல் காலத் துயர் கொடி  யொளி வளர் மதியம் –
நாநா வான வடிவை உடைத்தாய்
முடிவின்றிக்கே அநேக காலம்  செல்லுவதாய்
உயர்ந்து இருந்துள்ள கொடிகள் ஆனவை
சந்தர மண்டலத்து அளவிலே –

சென்று சேர்  சென்னிச் சிகர நன் மாடத் –
சென்று சேரும்படி
ஓங்கின சிகரங்களை உடைத்தாய்
அழகிய  மாடங்களை உடைய
திருக் கண்ணங்குடி யுள் நின்றானே    –

—————————————-

பூ பாரம் இறக்கிய மாத்திரம் அன்றிக்கே
அந்ய சேஷமாய் போன லோகங்களை அடிக்கீழ் கொண்ட வாமன திருவிக்ரமன் அனுபவம் இதில் –

மன்னவன் பெரிய வேள்வியில் குறளாய் மூவடி நீரொடும் கொண்டு
பின்னும் ஏழு உலகம் ஈரடியாகப் பெரும் திசை யடங்கிட நிமிர்ந்தோன்
அன்ன மென் கமலத் தணி மலர்ப் பீடத் தலை புனலிலைக் குடை நீழல்
செந்நெல் ஒண் கவரி யசைய வீற்று இருக்கும் திருக் கண்ணங்குடி யுள் நின்றானே —9-1-5-

மன்னவன் பெரிய வேள்வியில் குறளாய் மூவடி நீரொடும் கொண்டு
மகா பலி உடைய
அர்த்தித்தார் அர்த்தித்து எல்லாம் கொடுக்கிற யாகத்திலே
வாமன வேஷத்தை பரிஹரித்துக் கொண்டு போய் புக்கு
அவன் வார்த்த நீரோடு
மூன்றடியும் கொண்டு ஸ்வீகரித்து

(த்ரய சம்ப்ரதாயம் ஆகவே இங்கும் மூன்றடி
மாவலி மூவடி மண்தா -இதுவும் த்ரயம்
கோட்டங்கை வாமனனாய் செய்த கூத்துக்கள்
மான் தோல் போட்டு மூடி -அந்தப்புரத்திரை -கடாக்ஷம் லேசம் இருந்தால் கார்யகரம் ஆகாதே )

பின்னும் ஏழு உலகம் ஈரடியாகப் பெரும் திசை யடங்கிட நிமிர்ந்தோன் –
அநந்தரம்
பூமிப் பரப்பை அடைய
இரண்டடியாலே  அளப்பதாக
பரந்த திக்குகள் அடங்கலும்
திருவடிகளுக்கு உள்ளே அடங்கும் படி வளர்ந்தவன் –

அன்ன மென் கமலத் தணி மலர்ப் பீடத் தலை புனலிலைக் குடை நீழல்
அன்னமானது தன் கால் பொருக்கும் படி
மிருதுவான கமலத்தில் உண்டான அழகிய பீடத்தில்
அலைகிற புனலிலே உண்டான இலை யாகிற
குடை நிழல் கீழே

செந்நெல் ஒண் கவரி யசைய வீற்று இருக்கும் திருக் கண்ணங்குடியுள் நின்றானே –
செந்நெல் யானது சாமரம் வீச
ஐஸ்வர்யத்தால் உண்டான வ்யாவர்த்தி அடைய தோற்றும்படி இரா நின்றதாயிற்று –
(சீரார் செந்நெல் கவரி வீசும் திருக்குடந்தை போல் இங்கும்
நாத யாமுனர் போல்வார் -அன்னம் -நாயனார் இப்பாடல் போன்றவற்றை திரு உள்ளம் கொண்டே சாதித்து அருளுகிறார் )

—————————————————-

(பஞ்ச கிருஷ்ண ஷேத்ரங்கள்
கீர்த்தி வீர நாராயண -பஞ்ச நாராயண ஷேத்ரங்கள் -மேல்கோட்டை அருகில்
பஞ்ச நரசிம்ம ஷேத்ரங்கள் திருவாலி
பஞ்ச கமல க்ஷேத்ரம் -திருக்கண்டியூர்
பஞ்ச சார க்ஷேத்ரம் -திருச்சேறை
திருக் கண்ணங்குடியுள் நின்றானே-திருக்கண்ணங்குடிக்கு இரண்டு அடிகளும் –
நின்ற தாமோதர நாராயணனுக்கு இரண்டு அடிகளில் விசேஷணங்கள் அமைத்து நான்கு அடிகள் )

(ஆழியூர் -அருகில் உள்ள திவ்ய தேசம்
தஸ்மிந் த்ருஷ்டே பர அவர – அறிவோம் -தத்வ டீகை -பரர்களாய் இருப்பவர்களையும் இவனைப் பார்த்து அவரம்
பரத்வத்துக்கும் அவரத்துக்கும் ஸீமா பூமி இவனே
தாமோதர நாராயணன் அன்றோ
நீள மேக ஸ்யாமளன் -சாம மா மேனி என் தலைவன்-
பக்தியால் வாங்கவும் பெருவானே
தாமத்தால் கட்ட வில்லை ப்ரேமத்தால் தான் –
யானைக்கும் இவனுக்கும் சாம்யம்
வசிஷ்டர் பரம கிருஷ்ண பக்தர் -முன் கலியுக -முக்காலம் உணர்ந்தவர் –
வெண்ணெயாலே விக்ரகம் -பக்தியால் உருகாமல் இருக்க தியானிக்க
கோபால பிள்ளை வந்து -கண்ணன் கண்ணனை உண்ண
பின்னால் துரத்தி வர
இங்கு -கர்ப்ப க்ரஹம் -வந்து –
மகிழ மரம் அடியில் ரிஷிகள் தவம் -போக ஒட்டாமல் திருவடிகளைப் பற்ற
இங்கேயே சேவிக்க வரம் கேட்டுப் பெற்றார்கள்
வசிஷ்டருக்கு தாமோதரன் -ரிஷிகளுக்கு நாராயணன்
லோக நாத பெருமாள்
நீல மேக வண்ணன்
லோக நாயகித் தாயார் தாயார்
தாமோதர நாராயணன்
அரவிந்த நாயகி தாயார்
ஸ்ரவண புஷ்காரனி
மகிழ மரம் தல வ்ருக்ஷம்
பஞ்ச நாராயண ஷேத்ரங்கள் இங்கும் அருகில்
ஆனந்த நாராயணர்
வரத நாராயணர்
தேவ நாராயணர்
யாதவ நாராயணர் -ஆக இந்த ஐந்தும்
புத்த விக்ரஹம் இங்கே -வைத்த வ்ருத்தாந்தம் –
உறங்கா புளி -தோலா வழக்கு – ஊறா கிணறு -காயா மகிழ் –
மள்ளூரிலும் அப்ரமேய ஸ்வாமியும் தவழ்ந்த கண்ணனும் சேவை )

(குண லேசம் உள்ள மாவலையைத் தலை அறுக்க மாட்டாமல்
தன்னையே இரப்பாளானாக்கி -தன் திருவடிக்கீழ் இட்டு
லோக ரக்ஷணம் பண்ணி அருளியதை கீழே
அப்படி குண லேசமும் தேடிக் காணாதே
துர்மானிகளாய் -அதிலும் தோற்றாரை -குண லேசம் காணாமல்
அழித்து ரக்ஷணம் செய்ததை இதில் )

மழுவினால் அவனி யரசை மூவெழு கால் மணி முடி பொடிபடுத்துதிர
குழுவு வார் புனலுள் குளித்து வெங்கோபம் தவிர்ந்தவன் குலை மலி கதலி
குழுவும் வார் கமுகும் குரவு நற்பலமும் குளிர் தரு சூத மாதவியும்
செழுமையார் பொழில்கள்  தழுவு நன் மாடத் திருக் கண்ணங்குடியுள் நின்றானே–9-1-6-

உதிர குழுவு-ரத்த ஸமூஹம்
சூதம் -மாம் பழம்
மாதவியும்-குருக்கத்திப்பூ

மழுவினால் அவனி யரசை மூவெழு கால் மணி முடி பொடிபடுத்துதிர
மழுவைக் கொண்டு பூமியில்
ராஜாக்களை இருபத்தொரு படி கால் அறுத்து

குழுவு வார் புனலுள் குளித்து வெங்கோபம் தவிர்ந்தவன்
அவர்கள் உடைய ருதிர வெள்ளத்திலே குளித்து
உதகக் கிரியையும் பண்ணி
மிக்க கோபம் தவிர்ந்தவன் –

குலை மலி கதலி குழுவும் வார் கமுகும் குரவு நற்பலமும் குளிர் தரு சூத மாதவியும்
குலை மிக்க வாழைத் தோப்பும்
திரண்டு உயர்ந்த கமுகும்
குரவும்
நன்றான பலவும்
குளிர்ந்த நிழலைத் தரும் மாவும்
குருக்கத்தியும்

செழுமையார் பொழில்கள் தழுவு நன் மாடத் –
அழகு மிக்கு இருந்துள்ள பொழில்கள்
சூழ்ந்து இருப்பதாய்
அழகிய மாடங்களை உடைத்தான திருக் கண்ணங்குடியுள் நின்றானே  –

———————————————–

ஆஸூர ப்ரக்ருதி நிரஸனம் கீழே
அவ்வளவும் அன்றியே
கை விஞ்சி பெரு மிடிக்கனாய் இருந்த ராக்ஷஸ நிரஸனம் இதில் –

வானுளாரவரை வலிமையால் நலியும் மறி கடல் இலங்கையார் கோனைப்
பானுநேர் சரத்தால் பனங்கனி போலப் பரு முடியுதிர வில் வளைத்தோன்
கானுலா மயிலின் கணங்கள் நின்றாடக் கண முகில் முரச நின்றதிரத்
தேனுலா வரி வண்டின் இன்னிசை முரலும் திருக் கண்ணங்குடியுள் நின்றானே—9-1-7-

வானுளாரவரை வலிமையால் நலியும் மறி கடல் இலங்கையார் கோனைப் –
தன் மிடுக்காலே காவலாக வைத்த
இந்த்ராதிகளையும் நலியா நிற்பானாய்
திரைக் கிளப்பத்தை உடைத்தான கடலை
அகழாக உடைத்தான
இலங்கைக்கு நிர்வாஹகனாய் இருக்கிற
ராவணனை –

பானுநேர் சரத்தால் பனங்கனி போலப் பரு முடியுதிர வில் வளைத்தோன்-
ஆதித்ய கிரணம் போலே கூரிய அம்புகளாலே
வர பலத்தாலே பூண் கட்டின முடிகள் ஆனவை
பனம் பழம் போலே உதிரும்படி
வில்லை வளைத்தவன் –

கானுலா மயிலின் கணங்கள் நின்றாடக் கண முகில் முரச நின்றதிரத்
காட்டிலே திரியக் கடவதான மயிலினங்கள் உடைய
திரள்கள் ஆனவை ஆட
திரண்ட மேகங்கள் வாத்தியம் போலே த்வனிக்க

தேனுலா வரி வண்டின் இன்னிசை முரலும் திருக் கண்ணங்குடியுள் நின்றானே-
மதுபான மத்தமான வண்டுகள்
இனிய இசை பாடா நின்றுள்ள

ராவணன் உடன் பொருத ஸ்ரமம் ஆறும் படி
ஆடல் பாடல் கேட்டுப் போது போக்கி இருக்கலான
தேசம் ஆயிற்று  –

—————————————–

(வானுளார் அவரை நலிந்தது கீழே
இதிலும் பரம ஆகாச ஸ்ரீ வைகுண்ட நாதனான பராத்பரனான அவனையும் வஞ்சிக்க
நினைத்த மூடாத்மா -துஸ் ஸபா மதியத்தில்
அவ் வஞ்சனைக்கு அகப்படாதே வளர்ந்த கிருஷ்ண அவதார -பாண்ட தூத -அனுபவம் இதில்
நிமிர்ந்த -ஊரகம் பாடகம் அருகில் தானே -ஐந்தாம் எட்டாம் பாசுரம் –
உலகம் ஈரடியாகப் பெரும் திசை யடங்கிட நிமிர்ந்தோன்-9-1-5-
பெரிய மா மேனி அண்டமூடுருவப் பெருந்திசை அடங்கிட நிமிர்ந்தோன்-9-1-8-
25- அடி உயரமாக இருந்த திருக்கோலம் -திருப்பாடகம் )

அரவு நீள் கொடியோன் அவையுள் ஆசனத்தை அஞ்சிடாதே இட வதற்குப்
பெரிய மா மேனி அண்டமூடுருவப் பெருந்திசை அடங்கிட நிமிர்ந்தோன்
வரையின் மா மணியும் மரகதத் திரளும் வயிரமும் வெதிருதிர் முத்தும்
திரை கொணர்ந்துந்தி வயல் தொறும் குவிக்கும் திருக் கண்ணங்குடி யுள் நின்றானே —9-1-8-

அரவு நீள் கொடியோன் அவையுள் ஆசனத்தை அஞ்சிடாதே இட வதற்குப்
சர்ப்பத் த்வஜன்-என்னக் கடவது இறே துரியோதனனை –
(த்வஜத்தில் மட்டும் இல்லாமல் உள்ளத்திலும் சர்ப்ப – குணம் உள்ள துராத்மா
அர்ஜுனன் ஆஞ்சேனையரைக் கொடியில் கொண்டவன் )
அவன் தன ஓலகத்தினுள்ளே ஆசனத்தை
ஜகத்துக்கு வேர் பற்றானவனை அளிக்கப் புகா நின்றோம்
என்று கூசாதே இட்டு

பெரிய மா மேனி அண்டமூடுருவப் பெருந்திசை அடங்கிட நிமிர்ந்தோன்
அதுவே ஹேதுவாக
பெரிய வடிவானது அண்ட அவகாசத்தை ஊடுருவ
திக்குகள்  தன பக்கலிலே அடங்கும்படியாக வளர்ந்தவன் –

வரையின் மா மணியும் மரகதத் திரளும் வயிரமும் வெதிருதிர் முத்தும்
சஹ்ய பர்வதத்தில் இருக்கிற ரத்னங்கள்
மரகத திரள்
வயிரம் என்கிற ரத்ன விசேஷங்கள்
மூங்கில் உதிர்த்த முத்துக்கள் -இவற்றை –

திரை கொணர்ந்துந்தி வயல் தொறும் குவிக்கும் திருக் கண்ணங்குடியுள் நின்றானே
திரைகள் ஆனவை
தன்னில் அடங்காமையாலே கொடு வந்து தள்ளி
வயிலிலே குவியா நிற்கும் –

——————————————————-

தூது போகையில் உண்டான ஆச்சார்யம்
அதுக்கும் இசையாதவரை
தேர்க்காலாலே அழித்த ஆச்சார்ய சேஷ்டித அனுபவம் இதில் –

பன்னிய பாரம் பார் மகட்கு ஒழிய பாரத மா பெரும் போரிலே
மன்னர்கள் மடிய மணி நெடும் திண் தேர் மைத்துனர்க்கு உய்த்த மா மாயன்
துன்னு மாதவியும் சுர புனைப் பொழிலும் சூழ்ந்தெழு செண்பக மலர்வாய்
தென்ன  வென்றளிகள் முரன்றிசை பாடும் திருக் கண்ணங்குடியுள் நின்றானே —9-1-9-

பன்னிய பாரம் பார் மகட்கு ஒழிய பாரத மா பெரும் போரிலே
எல்லாம் பொறுக்கத் தக்க பூமி தானே
என்னால் பொறுக்கப் போகாது என்று கூப்பிடும்படி
விஞ்சின பாரமானது
ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கு வாராத படி
மகா பாரதத்திலே

மன்னர்கள் மடிய மணி நெடும் திண் தேர் மைத்துனர்க்கு உய்த்த மா மாயன்  –
ராஜாக்கள் ஆனவர்கள் மடியும் படியாக
அர்ஜுனன் முன்னே நின்று தேரை நடத்தினவன் –

மா மாயன்
ஆச்சர்ய குண சேஷ்டிதங்களை உடையவன் –

துன்னு மாதவியும் சுர புனைப் பொழிலும் சூழ்ந்தெழு செண்பக மலர்வாய்
நெருங்கின மாதவியும்
சுர புன்னை பொழிலும்
சுற்றிலே ஓங்கின செண்பங்களையும் உடைத்தாய் –

தென்ன  வென்றளிகள் முரன்றிசை பாடும் –
அவற்றிலே படிந்த வண்டுகள் ஆனவை
முரன்று இசை பாடா நின்றுள்ள
திருக் கண்ணங்குடியுள் நின்றானே –

(செண்பகங்களில் வண்டுகள் படிந்தால் உயிர் இழக்கும் என்பர் கவிகள்
இங்கு தேனைக் குடித்து தென்னா தென்னா என்கிறது
திவ்ய தேசத்தில் பிரதிகூலர் இல்லையே
வானரங்கள் பூஞ்சுனை புக்கு -திவ்ய தேசம் முயலை இருக்காதே -போல் இங்கும் )

—————————————————–

கலை யுலா வல்குல் காரிகை திறத்துக் கடல் பெரும் படையொடும் சென்று
சிலையினால் இலங்கை தீ எழச் செற்ற திருக் கண்ணங்குடியுள் நின்றானை
மலை குலா மாட மங்கையர் தலைவன் மான வேல் கலியன் வாய் ஒலிகள்
உலவு சொல் மாலை   யொன்பதொடு ஒன்றும்  வல்லவர்க்கு இல்லை நல்குரவே –9-1-10-

கடல் பெரும் படை-சமுத்திரத்தை விட பெரிய சேனை
மான வேல்-அபிமான ஜனகமான திவ்ய ஆயுதம்
உலவு சொல்-நிறைந்த ஸூ க்திகள்
இல்லை நல்குரவே- -பெருமாளை பிரிந்து இருக்கும் தாரித்ர்யம் வாராது

கலை யுலா வல்குல் காரிகை திறத்துக் கடல் பெரும் படையொடும் சென்று
பிராட்டி உடைய பரியட்டப்  பண்பிலே தோற்று
பெரிய படை வெள்ளத்தோடு
முதலிகளோடு சென்று

சிலையினால் இலங்கை தீ எழச் செற்ற –
ப்ரஹ்மாஸ்த்ரத்துக்கும் அழியாத ஊரை
வில்லாலே அக்னி கிளரும்படியாக செற்ற

திருக் கண்ணங்குடி யுள் நின்றானை –

மலை குலா மாட மங்கையர் தலைவன் மான வேல் கலியன் வாய் ஒலிகள்
மலை போலே இருந்துள்ள மாடங்களை உடைத்தான
திரு மங்கையில் உள்ளாருக்கு ப்ரதானர் ஆனவர்
பிடித்தார்க்கு தன் அபிமானத்தை பிறப்பித்தான வேலை உடைய ஆழ்வார்
ஒலியை உடைத்தாக அருளிச் செய்தவையாய்

உலவு சொல் மாலை  யொன்பதொடு ஒன்றும்  வல்லவர்க்கு இல்லை நல்குரவே
லஷணங்களில் குறை அற்று இருந்துள்ள
இப் பத்தையும் அப்யசிக்க வல்லார்க்களுக்கு
பகவத் தாரித்ர்யம் இல்லை –
என்கிறார் –

ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.

வங்கக் கடல் துயின்று இங்குப் பிறந்து தொண்டர் தாம்
பொங்காத் துயர் அகற்றி ஏதலரை மங்குவித்து
கண்ணங்குடியுள் நின்றான் புகலாய் என்னு நீலன்
பொன்னடியே நம் தமக்குப் பொன்-81-

பொங்க -நன்றாக வாழும்படி-

————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பெரிய திருமொழி-8-10–ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம்-

May 19, 2014

வண்டார் -பிரவேசம் –

கண்ணாலே கண்டு களிக்கின்றது இங்கு என்று கொலோ -என்று சொல்லி நின்றாரே –
கண்ணாலே கண்டு கழிக்கை பேறு ஆனால்
அதுக்கு தன் கை பார்த்து இருக்க வேண்டும்படி இருக்கிறவனை
கேட்போம் என்று பார்த்து நீ சொல் -என்கிறார் –

(பாட்டினால் உன்னை என் நெஞ்சத்து இருந்தமை காட்டினாய் கண்ண புரத்துறை யம்மானே  —8-10-9-
என்பதை திரு உள்ளம் பற்றி சங்கதி –
உண்மையில் கால் பார்த்து -கை பார்த்து என்றது உதவியை என்றபடி )

உம்முடைய அநந்ய கதித்வத்தை ஆவிஷ் கரித்து-
கைங்கர்யத்தை ஒழியச் செல்லாத உம்முடைய சாபல்யத்தை
ஆவிஷ் கரித்த நீர்-
கைங்கர்யம் பெற்றீரே –
வாசிகமான அடிமை செய்யா நின்றீர் ஆகில்-
இனி வேண்டுவது உண்டோ என்று-
அத்தை இவர் திரு உள்ளத்திலே படுத்த
அத்தாலே இனியராத் தலைக் கட்டுகிறார் –

உன் தனக்கே தொண்டானேற்கு என் செய்கின்றாய் -தொண்டராக்கிய பின்பு என்ன செய்ய வேண்டும்

——————————————–

வண்டார் பூ மா மலர் மங்கை மண நோக்கம்
உண்டானே உன்னை உகந்து உகந்து உன் தனக்கே
தொண்டானேற்கு என் செய்கின்றாய் சொல்லு நால் வேதம்
கண்டானே கண்ண புரத் துறை யம்மானே—8-10-1-

மண நோக்கம்–மங்கள கடாக்ஷம்-வீக்ஷணம் -முழுக்க பார்த்து பர ப்ரஹ்மம் ஆனான் -பட்டர்
உண்டானே-தாரகமாகக் கொண்டானை
நால் வேதம் கண்டானே-இவற்றை வெளியிட்டான் -என்றும் இவை இவனைக் காட்டின என்றும் –

வண்டார் பூ மா மலர் மங்கை மண நோக்கம் -உண்டானே-
வண்டுகள் ஜாதியாகப் படிந்து இருப்பதாய்
தர்ச நீயமாய்
பிராட்டிக்கு நினைத்த படி வர்திக்கைக்கு  ஈடான
பரப்பை உடைத்தான தாமரைப் பூவை இருப்பிடமாக உடைய
பெரிய பிராட்டியார் உடைய நோக்கை
தாரகாதிகளாக உடையவனே –
(தாரகம் போஷகம் போக்யம் மங்களாவாஹம் நான்கும் அன்றோ இவள் கடாக்ஷம் )

உன்னை –
அவளோடு கூடி இருக்கிற உன்னை –
பிரமச்சாரி எம்பெருமானை அன்று ஆய்த்து
இவர் உகந்து இருப்பது –

உகந்து உகந்து –
மிகவும் உகந்து –

உன் தனக்கே தொண்டானேற்கு –
தாயும் தமப்பனும் சேர இருக்க
அனுவர்த்திப்பாரைப் போலே
அவனும் அவளுமான் சேர்த்தியிலே அடிமை செய்ய வேண்டும்
என்று ஆய்த்து இவர் ஆசைப் பட்டு இருப்பது –
பிராட்டியும் அவனுமான சேர்த்தியிலே அடிமை செய்ய வேணும் என்னும்
சாபல்யத்தை உடைய எனக்கு –
(உனக்கு இல்லாமல் உன் தனக்கே என்று மிதுனம் சொன்ன படி )

என் செய்கின்றாய் சொல்லு-
நீ செய்து அருளப் பார்த்தது என் சொல்லு –
பிராப்ய பிராபகங்கள் இரண்டும்
அவனும் அவளுமான சேர்த்தியிலே யாயிற்று இவர் நினைத்து இருப்பது –
உபாய பாவததிலே குறைவற இருக்கிற நீ செய்து அருளுவதாக
நினைத்து இருக்கிறது என் சொல்லு –
(உபாய பாவம் உனக்கே -அவள் புருஷகாரம் செய்தாயிற்றே )

என் செய்கின்றாய் சொல்லு-
தம்முடைய உகப்பை பேற்றுக்கு பரிகரமாக நினைத்து இருக்கிறிலர் –
அவன் நினைவே பேற்றுக்கு பரிகரமாக நினைத்து இருக்கையாலே -சொல்லு என்கிறார் –
(இவர் விருப்பம் ஆசை த்வரை எல்லாம் அதிகாரி ஸ்வரூபமே )

நால் வேதம்  கண்டானே –
பிரளய காலத்திலே இவற்றின் உடைய ஆநு பூர்வியை
ஸ்மரித்து இருந்து வெளி இடுகை -இறே
இவற்றைக் காண்கை யாவது
நித்தியமான வேதத்தில் சாஷாத் காரத்துக்கு மேற்பட இல்லை இறே
(ஆகவே படைத்தானே என்னாமல் -கண்டானே -சப்தங்கள் போனாலும் ஆனு பூர்வி அழியாதே )

அன்றிக்கே
பட்டர் அருளிச் செய்ததாக சிறியாத்தான் பணிக்கும் படி –
இது கர்த்தரி அன்று -கர்மணி கிடாய் -என்று
பிராப்ய பிராபகங்கள் இரண்டும் அவனே என்னும் இடத்தை யாயிற்று
வேதங்கள் வெளி இட்டது –

கண்ண புரத் துறை யம்மானே –
பிரமாணங்களிலே கேட்டுப் போகை அன்றிக்கே
கண்ணாலே கண்டு அனுபவிக்கலாம் படி
திருக் கண்ண புரத்திலே வந்து
சுலபனான நீ சொல்லு –

—————————————————————

உன் தனக்கே தொண்டனானேன் என்றாரே
இங்கன் சொல்லுவான் என்
புறம்பே ஆஸ்ரயிப்பாரும் ஆஸ்ரயணீயருமாய் அன்றோ இருக்கிறது -என்ன
அவர்கள் செய்தபடி செய்கிறார்கள் –
எனக்கு முன்னம் இதர விஷயங்களில் புத்தி இல்லை -என்கிறார் –

பெரு நீரும் விண்ணும் மலையும் உலகேழும்
ஒரு தாரா நின்னுள் ஒடுக்கிய நின்னை யல்லால்
வரு தேவர் மற்றுளர் என்று என் மனத்திறையும்
கருதேன் நான் கண்ண புரத்துறை யம்மானே —8-10-2-

தாரா-தாராக -மாலையாக –
வரு தேவர் -நானே ப்ராப்யம் ப்ராபகம் ஆஸ்ரயணீயன் என்று வருவார்

பெரு நீரும் விண்ணும் மலையும் உலகேழும்
கடலும்
ஆகாசமும்
குல பர்வதங்களும்
லோகங்கள் ஏழும்
இவற்றை அடைய பிரளயத்தில்

ஒரு தாரா –
ஒரு மாலையாக –

நின்னுள் ஒடுக்கிய நின்னை யல்லால்
ஒரு பூவை விழுங்கினால் போலே யாயிற்று
வருத்தம் அற்று இருந்தபடி
(திருத் துளசி இதழை வாயில் போட்டுக் கொண்ட படி அநாயாசேன -இனிமையாய் –
ரஷித்தோம் என்ற உகப்பு உண்டே உனக்கே )

அன்றிக்கே
ஒரு தாரா –
ரஷணத்துக்கு தனி மாலை இட்டு நிற்கிறவனே-
இவற்றை அடையவும் திரு வயிற்றிலே வைத்து
நோக்கின உன்னை அல்லது –

வரு தேவர் மற்றுளர் என்று என் மனத்து –
பிரளயம் வந்த போதாக உன் வயிற்றிலே போய்ப் புக்கு
நீ வெளிநாடு காணப் புறப்பட விட்டவாறே
நான் ஆஸ்ரயணீயன் என்று வருவதொரு தேவதை உண்டாக நான் அறியேன் –
(அகில காரணம்-அத்புத காரணம் -நிஷ் காரணம் -என்றதும்
கஜேந்திர ஆழ்வானை ரக்ஷிக்க வந்தவர் உங்கள் தேவனோ )

இறையும் -கருதேன் நான் –
பூர்வ பஷத்வேநவும் நினைத்து அறியேன் –

கண்ண புரத்துறை யம்மானே –
பிரளய ஆபத்தை பரிஹரித்து இன்று
ஆஸ்ரயணீயன் என்னும் இடம் தோற்ற நீ வந்து சந்நிஹிதனாக
நான் எங்கனே வேறு சிலரை ஆஸ்ரயணீயன் என்று இருக்கும் படி –
சம்சார பிரளயத்தை பரிஹரிக்கைகாக இறே
நீ இங்கே வந்து நிற்கிறது –

—————————————————–

(திருக் கல்யாண திருக்கோலம் -தானம் வாங்கும் ஹஸ்தம்
நீல மேகப்பெருமாள் மூலவர் -ஆஹ்லாத கரம்
புண்டரீக விசாலாட்க்ஷம் சரத் சந்த்ர நிவாசனம் நீலாத்ரி த்ருஷ்டாந்தம் நீலமேகம் அஹம் பஜே
சவுரி பெருமாள் உத்சவர்
உத்பலாதவக விமானம் -ஆழ்வார் திருக்கண்கள் கொண்டே சேவிக்க முடியும்
பலம் -மாம்சம் உத்பல -வைராக்யம் -சரீரத்தில் ஆசை விட்டவர்களுக்கே
மோக்ஷம் கொடுப்பதற்காகவே -முமுஷுக்களுக்கே -இங்கு சேவை
சரணம் ஆகும் தனது தாள் அடைந்ததற்கு எல்லாம் மரணம் ஆனால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்
சரண முகுந்தன் -மோக்ஷ பூமி பிரதன்
64 சதுர் முகமாக நமக்காக இங்கே எழுந்து அருளி
முக்கோட்டை -பாடத்தெரியாதவனுக்கும் பாட வைக்கும் -மலையாள வார்த்தை இது
5121-வருஷங்கள் கலியுகம் தோன்றி – திருமங்கை ஆழ்வார் முதல் 500 வருஷத்தில் -வரப்போகிறார் -ஷேம க்ருஷிகன்
உபரி சரவஸூ -தேவர்களுக்கு உதவி செய்து போக -இங்கே வர -ரிஷிகள் இங்கே தபஸ்ஸூ செய்ய -சாமாக்கதிர்கள் போல் இருக்க
இவன் வெட்ட முகிலை -ரிஷிகள் என்று உணர்ந்து -பாகவத அபசாரம்
அவன் திருக்குமாரத்தி திருக்கல்யாணம் செய்து அருளவே இங்கே எழுந்து அருளுகிறார்
சவுரி -திரு நாமம்-சஹஸ்ர நாமம் -த்வாபர யுகம் பீஷ்மர் காட்டி
ராஜா -அர்ச்சகர் -மாலை கேசம் இருந்த விருத்தாந்தம் –
முனியதரன் சரித்திரம் -முனியை தரையர் சந்நிதியும் இங்கே உண்டு -பிரசித்த பிரசாதம் –
5 நாளி அரசி மூன்று நாளி பருப்பு-(தோல் உரிக்கப்படாத பயத்தம் பயறு ) இரண்டு நாளி நெய் கொண்டு செய்தது –
திருக்கண்ண புர அரையர் சரித்திரம் -தாளம் வீசி அடிபட்ட தழும்பு இன்றும் சேவிக்கிறோம் –
விபீஷணனுக்கு நடை அழகு -கைத்தல சேவை -சாதிக்கும் திவ்ய தேசம் -கீழை வீடு இது -ஸ்ரீ ரெங்கம் மேலை வீடு -)

(திருநறையூர் நம்பி பஞ்ச சம்ஸ்காரம் செய்து அருளி –
வயலாலி மணவாளன் உபதேசம் –
இங்கு அர்த்தம் அருள பெற்றார் –
எட்டு பத்துக்களுக்கும் சார தமமான உயிர் பாசுரம் இது –
உற்றதும் உன் அடியார்க்கு அடிமை-தாத்பர்யம் –
ததீய சேஷத்வமே -கேட்டதும் அல்லிக் கமலக் கண்ணனாய் இருப்பானே )

வேறு சிலரை ஆஸ்ரயணீயர் அல்லர் -என்று நினைத்து இருக்கும் அளவேயோ  –
தாமஸ புருஷர்களோடு சம் சர்க்கமும் இல்லை –
சாத்விகரை ஒழிய காலம் செலுத்தவும் மாட்டேன் -என்கிறார் –
எண்ணாத மானிடத்தை எண்ணுமவன் அல்லேன் -என்றும்
பேராளன் பேரோதும் பெரியோரை யொருகாலும் பிரிவிலேன்-என்கிறார் –
(இரண்டுக்கும் இரண்டு பாசுர பிரமாணங்கள் )

மற்றுமோர் தெய்வம்   உளதென்று இருப்பாரோடு
உற்றிலேன் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை
மற்றெல்லாம் பேசிலும் நின் திரு வெட்டெழுத்தும்
கற்று நான் கண்ண புரத் துறை யம்மானே —8-10-3-

மற்றுமோர் தெய்வம்   உளதென்று இருப்பாரோடு உற்றிலேன்
தேவதாந்தர ஸ்பர்சம் உடையாரோடு
எனக்கு ஒரு சம்பந்தமும் இல்லை –

உற்றதும் உன் அடியார்க்கு அடிமை மற்றெல்லாம் பேசிலும் நின் திரு வெட்டெழுத்தும் கற்று நான் –
அவர்களை விட்டு உன் அளவில் நின்றவனும் அல்லேன் –

இவ்வனுஷ்டானம் தான் நீர் எங்கே யார் சொல்ல பரிஹரித்தீர் -என்ன
நீ சொன்ன முதல் வார்த்தைக்கு அர்த்தமாக
நான் நினைத்து இருப்பது இது -என்கிறார் –
(நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் தானே முதல் வார்த்தை
திரு மந்த்ரம் என்றது ஆயிற்று )

இது பின்னை அநேக அர்த்தங்களை சொல்லுமே –
ஜீவ ஸ்வரூபத்தைச் சொல்லும் –
நம்முடைய ஸ்வரூபத்தை சொல்லும் –
ஜீவ வஸ்துக்களுக்கும்  நமக்கும் உண்டான சம்பந்தத்தை சொல்லும் –
ப்ராப்தி பலமான கைங்கர்யதளவும் வந்திருக்குமே -என்ன

அது அநேக அர்த்தங்களைச் சொல்லிற்றே யாகிலும்
அதில் எங்குமாக நான் அறுதி இட்டு இருக்கும் அர்த்தம்
அனந்யார்ஹ சேஷத்வம் –
அது தான் ததீய சேஷத்வ பர்யந்தமாய் அல்லது இராது –

(சேஷத்வம் -அநந்யார்ஹத்வம் -பாகவத சேஷத்வம் -ஆய -உகாரார்த்தம்–நமஸ்ஸூ -கீழே பார்த்தோம் –
பகவத் சேஷத்வத்தின் எல்லை நிலம் -அவனது அவயவ பூதங்கள்
மாற்று எல்லாம் பேசிலும் -திரு மந்த்ரார்த்தங்கள் பலஉண்டே –
முதல் வார்த்தைக்கு -பல அர்த்தங்கள் உண்டே -உன் அடியார்க்கு அடிமை என்று அறிந்தேன்
நான் கண்டு கொண்டேன் நாராயணா -உபக்ரமம்
பிராப்தி -சேஷ சேஷி பாவ சம்பந்த நிபந்தன முறை -உறவின் முறை –
எங்குமாக அறுதி இட்டு இருக்கும் அர்த்தம் -என்றது -அநந்யார்ஹத்வம் -உனது அடியார்க்கு அடிமை –
ததீய சேஷத்வ பர்யந்தமாகப் போனால் தான் பகவத் அநந்யார்ஹத்வம் சித்திக்கும் –
அவன் திரு உள்ளம் உகக்கும் படி நடக்க வேண்டுமே –அவன் திரு உள்ளம் உகப்பே பிரயோஜனம்
ஞாதவ்ய தயா -அறிய வேண்டியதாக அறிந்து
ஜீவ ஸ்வரூபம் ஆஸ்ரய தயா ஞாதவ்யம் -மகாரம் மனா ஞானி மனா அவ போதனை
பகவத் ஸ்வரூபம் விஷய தயா -ஜேயம்
தத் விஷய கைங்கர்யம் -சேஷத்வ கார்யம் -சேஷத்வ பலம் –
கீழே இவ்வளவும் சொன்னதுக்கு தாத்பர்யம் -சேஷத்வம் சித்திக்க -பாகவத சேஷத்வ பர்யந்தமும்
பாகவத பர்யந்த கைங்கர்யம் வரை போனால் தான் நிலை நிற்கும் –
ஆகையால் உன் அடிமை ஆகை ஆயிற்று என்பதே உனது அடியார்க்கு அடிமை என்பது சித்திக்கும் )

கண்ண புரத் துறை யம்மானே –
இது அன்றோ நீ இங்கே வந்து இருந்து ஓதுவித்த அர்த்தம் –
கீழும் கண்ண புரத் துறை யம்மானே என்று போருகையாலே
இதுவும் அப்படி நடத்தப் பார்க்குமன்று அஷரம் ஏறி வரும் –
அதுக்காக
கற்று நான் வல்லது கண்ண புரத் துறை யம்மானே -என்னுதல்
(கண்ண புரத் துறை யம்மானே–12 அக்ஷரங்கள்
கற்று நான் வல்லது கண்ணபுரத்தானே -பாட பேதம் )

அன்றிக்கே
ரீதி பேதம் பிறவாமைக்காக
கண்ண புரத்துறை அம்மானே   —

நின் திரு வெட்டு எழுத்தும் கற்று நான் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை -என்றாவது –
உன் அளவில் நின்றவன் அல்லேன் -என்ற போது
அவன் திரு உள்ளம் என் படுகிறதோ  -என்று நஞ்சீயர் அருளிச் செய்ய
பிள்ளை -அல்லிக் கமலக் கண்ணன் ஆகிறான் -(திருவாய் -8-10-11)-என்று அருளிச் செய்தார் –
நீக்கமில்லா அடியார்  தன் அடியார்  அடியார் எம் கோக்கள் -(திருவாய் -8-10-10 )-என்று
இவர் பாகவத சேஷத் தளவில் நின்றவாறே அவன் அல்லிக் கமலக் கண்ணன் ஆனான் –

பிரபன்னன் உடைய லஷணம் ஆகிறது –
ஸ்ரீயபதியே -உபாய உபேயங்கள் என்று இருக்கையும்
தேவதாந்தர ஸ்பர்சமும்
தாமஸ புருஷர்களோடு சம்சர்க்கமும் இன்றிக்கே இருக்கையும் –
பாகவதரை ஒழிய செல்லாமை யுண்டாய் இருக்கையும் –

தர்மியை அனுபந்தித்து இருக்கும் தர்மங்களை நேரே
வ்யவஹரித்தது இல்லையே யாகிலும்
தர்மியைச் சொன்ன போதே
தர்மங்களை எல்லாம் சொல்லிற்றாம் இறே-

(அவனைச் சொன்ன போதே அவயவ பூதங்களான பாகவதர்களையும் சொன்னது ஆகுமே )

————

ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் அருளிய வார்த்தா மாலை –வார்த்தை -340-
பாகவத சேஷத்வ விதுரமான பகவத் சேஷத்வமும் -தேகாத்ம அபிமானம் போலே
பொல்லாது என்று முதலி யாண்டான் –
திருமங்கை ஆழ்வாருக்கு ததீய விஷயத்தில் உண்டான ஊற்றம் சொல்லுகிறது –
இது இவரின் மடிபிடி ரகஸ்யம் என்பார்கள் –

நம்பி தன் நல்ல மா மலர் சேவடி சென்னியில் சூடியும் தொழுதும் எழுந்தாடியும் -பெரிய திருமொழி -7-3-10-

பாசுரத்தை கேட்டு இவர் கால் வாசி அறிந்தவராய் இருந்தார் என்று -ஆழ்வீர்
திருச்சேறையிலே வாரீர் -உம்முடைய அபேஷிதத்தை தலைக்கட்டித் தருகிறோம் -என்ன –
இவர் திருச்சேறையிலே எழுந்து அருள –
இவ் வாழ்வார் உடைய அசைந்த வளையத்திலே புனுகை வழிய வார்த்தால் போலே –

மா மதலைப் பிரான் -தம்முடைய திருவடிகளை கொண்டு வந்து வைக்கப் புக –
அத்தை புறம் கையாலே தட்டி –
உன் பொது நின்ற பொன்னம் கழலோ -மூன்றாம் திருவந்தாதி -88-என் தலை மேல் இருப்பது
உன் தாள் தொழுவார் காண்மின் என் தலை மேலார் -பெரிய திருமொழி -7-4-1–என்ன

அத்தைக் கேட்டு லஜ்ஜா விஷ்டனாய் -உமக்கு அந்தர்யாமியாய் இருந்தோமே -என்ன –

எம்பெருமான் தாள் தொழுவார் எப்பொழுதும் என் மனத்தே இருக்கின்றாரே -பெரிய திருமொழி -7-4-2-என்ன –

ஆகிலும் அர்ச்சாவதாரமாய் ஸுலபனாய் இருந்தோமே என்ன –

கடல் மல்லைத் தல சயநத்து உறைவாரை கொண்டாடும் நெஞ்சுடையார் அவர்
எங்கள் குல தெய்வமே -பெரிய திருமொழி -2-6-4-என்ன –

அவர்கள் எங்கே உளர் என்ன –

போதோடு புனல் தூவும் புண்ணியரே விண்ணவரில் பொலிகின்றாரே -பெரிய திருமொழி-2-6-4- என்று
அவர்கள் ஸ்வரூபத்தை சொல்ல –

கண்கள் ஆரளவும் நின்று கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே -பெரிய திருமொழி -7-10-9-என்கிறபடியே
கண்ணுக்கு இரை இடுகைக்கும் நெஞ்சுக்கு அனுசந்தானமாக இரை இடுகைக்கும் நாம் வேணுமே -என்ன –

வண் சேறை எம்பெருமான் அடியார் தம்மைக் கண்டேனுக்கு இது
காணீர் என்னெஞ்சும் கண் இணையும் களிக்குமாறே -பெரிய திருமொழி -7-4-6-என்ன

ஆகில் சர்வ கந்தஸ் சர்வ ரச -என்கிறபடியே உமக்கு ரசாயன சேவைக்கு நாம் வேண்டுமே -என்ன –

எம்பெருமான் தாளை நாளும் சிந்திப்பாருக்கு என்னுள்ளம்
தேனூறி எப்பொழுதும் தித்திக்குமே -பெரிய திருமொழி -7-4-5-என்ன –

ஆகில் உமக்கு உபாய உபேயத்துக்கு நாம் வேணுமே என்ன –

உபாயத்துக்கு முற்பாடர் ஆகையாலும் –
உபேயத்துக்கு எல்லை நிலம் ஆகையாலும் –
இருந்த நாளுக்கு உசாத் துணை யாகையாலும் –
பேராளன் பேரோதும் பெரியோரை ஒருகாலும் பிரிகிலேனே -பெரிய திருமொழி -7-4-4- என்ன –

ஆகில் அடியிலே நமக்கு தாசர் என்று புகுந்தீரே -என்ன –

மற்று எல்லாம் பேசிலும் நின் திரு எட்டு எழுத்தும் கற்று நான்
உற்றதும் உன் அடியாருக்கு அடிமை -பெரிய திருமொழி -8-10-3-என்ன –

இவர் நின்ற நிலையிலே தமக்கு பிறந்த ப்ரீதி அதிசயத்தாலே -பின்னையும் அவ் வாழ்வார் திரு உள்ளத்தை
சோதிகைக்காக –
அடியிலே நம்மைக் கவி பாட என்று இழிந்து
நம் அடியார் திறத்திலே மண்டிற்று என் -என்ன –

ராஜபுருஷ என்னுமா போலே -ஒருவனைக் கவிபாடுமவன் ஊரும் பேரும் தாரும்
குடியும் வைத்துக் கவிபாடுமா போலே சொன்னேன் இத்தனை –
ததீய விஷயமே உத்தேச்யம் என்ன –

ஆகிலும் பிரித்துச் சொன்னீரே என்ன –

பர்த்தாவின் தேகத்தை விரும்பின பதி வ்ரதைக்கு குற்றம் உண்டாகில் இறே -திவ்ய மங்கள விக்ரஹத்தை
விரும்பின எனக்கு குற்றம் உண்டாவது -என்ன –

என்று தமக்கு ததீய விஷயத்தில் உண்டான ஊற்றத்தைச் சொல்ல

ஈஸ்வரன் திரு உள்ளமும் களித்து –
இவ் வாழ்வாருக்கு தோற்றம் -என்று-
இவர் திறத்தில் மடல் எடுக்கும்படி யாயிற்று ஈஸ்வரன் திரு உள்ளம் –

————————————————-

அக் குணங்கள் எல்லாம் உண்டானாலும்
நாம் விரும்பி இருத்தல் –
வலிய புருஷகாரம் இருத்தல் -செய்த அன்று -அன்றோ –
அது -கார்யகரமாவது என்ன –
நஞ்சு தாரகமான உனக்கு ஆகாதது இல்லை
பிராட்டிமார் எனக்கு புருஷகாரம் ஆனபின்பு என் கார்யத்துக்கு குறை உண்டோ -என்கிறார் –

பெண்ணானாள் பேரிளம் கொங்கையின் ஆர் அழல் போல்
உண்ணா நஞ்சுண்டு உகந்தாரை யுகந்தேன் நான்
மண்ணாளா வாள் நெடும் கண்ணி மது மலராள்
கண்ணாளா கண்ண புரத் துறை யம்மானே —8-10-4-

பெண்ணானாள் –
பேயாய் இருந்து வைத்து
பெண் ஆனாள்-
நிருபாதிக ஸ்த்ரீத்வம் உள்ளது யசோதை பிராட்டிக்கே இறே –
அவளாக தன்னை பாவித்து வந்தாள் ஆயிற்று –

பேரிளம் கொங்கையின் ஆர் அழல் போல் –
ஏறிட்டு கொண்டது ஒழிய
பேயான படியாலே -முலை பெருத்து இருக்கும் இறே -(பேர் கொங்கை )
யசோதை பிராட்டியாக அநு கரித்து வருகையாலே
இளமையும் கிடக்கும் -(இளம் கொங்கை )
அக்னி கல்பமான விஷம் ஆயிற்று –
நெருப்பை வாயிடுவார் இல்லை இறே –

உண்ணா நஞ்சுண்டு உகந்தாரை யுகந்தேன் நான் –
அறிவுடையார் புஜித்து அறியா விஷத்தை
தாரகமாக புஜித்து
(தாய் முலை இருக்க பேய் முலை வாய் வைத்து பித்தர் என்று பேசும்படி )
பிரதிகூல்யையான பூதனையை முடித்து
அநு கூலர் விரோதி போகப் பெற்றோம் -என்று உகந்த உன்னை உகந்தேன் உன்னை –

மண்ணாளா வாள் நெடும் கண்ணி மது மலராள்-கண்ணாளா-
விஷம் தாரகமான உனக்கு ஆகாதார் இல்லை –
நீ கை விடப் பார்க்கும் அன்றும்
விட ஒண்ணாத புருஷகாரம் உண்டு –
(திருக் கண்ணபுர நாயகி தனிக் கோலமும் உண்டே இங்கு )

மண்ணாளா –
பொறை தானாய் இருக்காய்-
தான் பொறை யாளாய் இருக்கும் அளவன்றிக்கே
செய்த குற்றங்களை அவன் திரு உள்ளத்திலே படாத படி
ந கச்சின் ந அபராத்யதி –  என்று
அவனையும் பொறுப்பிக்கும் அவள் ஆயிற்று –
நோக்காலும் போக்யதையாலும்
அவன் தன் வழியே போம்படி நியமிக்குமவள் ஆயிற்று –
(கண்ணாளா -நோக்கு –மது மலராள் -போக்யதை )

கண்ண புரத் துறை யம்மானே  –
இவை எல்லாம் உண்டானாலும்
கார்யகரம் ஆகாது இறே
நீ தூரஸ்தனாய் இருந்தாய் ஆகில் –
அக் கண் அழிவையும் அறுத்து வைத்தாயே –

—————————————————

நாமும் உகந்து –
வலிய புருஷகாரமும் உண்டாய் –
ஸூலபனும் -ஆனாலும்
நீர்
புறம்பு பற்றற்று
அகிஞ்சனராய் வரும் அன்று அன்றோ கார்யகரம் ஆவது -என்ன
என் குறை அறுத்து வைத்தேன்-
நீ உன் தலையிலே குறை கிடவாதபடி பரிஹரித்துக் கொள்ளாய்-என்கிறார் –

பெற்றாரும் சுற்றமும் என்று இவை பேணேன் நான்
மற்றாரும் பற்றிலேன் ஆதலால்  நின் அடைந்தேன்
உற்றான் என்று உள்ளத்து வைத்தருள் செய் கண்டாய்
கற்றார் சேர் கண்ண புரத்துறை யம்மானே —8-10-5-

பெற்றாரும் சுற்றமும் என்று இவை பேணேன் நான்
நான் வேறு சிலரை பந்துக்கள் என்று
நினைத்து இருப்பது இல்லை –

மற்றாரும் பற்றிலேன் –
ஐயோ இவனுக்கு புறம்பு ஒருவரும் இல்லை -என்பாரையும்
உடையேன் அல்லேன் –
புறம்பு ஒருவரும் இல்லை யாகில்
நீர் உண்டே என்ன
நானும் எனக்கு கழுத்துக் கட்டி –
(கழுத்தில் கல்லைக் கட்டி குளத்தில் விழுவது போல் அன்றோ நானே எனக்கு உதவுவது )

ஆதலால்  நின் அடைந்தேன்
நிராலம்பநாய் விழுமவனுக்கு
ஒரு தரையிலே விழ வேணுமே-
சதம் நிபதிதம் பூமௌ -( காகாஸூரன் விழுந்தால் போல் )

உற்றான் என்று உள்ளத்து வைத்தருள் செய் கண்டாய் –
இவன் நம்மை விட்டு
புறம்பே போய் படக் கடவது எல்லாம் பட்டான் -என்று
உன் திரு உள்ளத்திலே கொண்டு
என் பக்கலிலே கிருபையை பண்ணி அருள வேணும் –

அன்றிக்கே –
என்னால் அறுத்துக் கொள்ள ஒண்ணாத சம்பந்தம் உன் கை யதன்றோ –
இவன் கீழ் விட்டுப் போந்த உறவு முறை எல்லாம் நாமே அன்றோ
என்ற இத்தை திரு உள்ளத்திலே கொண்டு
என் பக்கலிலே கிருபையை பண்ணி அருள வேண்டும் –
(நம் உறவு நம்மால் ஒழிக்க ஒழியாதது அன்றோ )

கற்றார் சேர் கண்ண புரத்துறை யம்மானே —
நீ வர்த்திக்கிற ஊரில் உள்ளார்
விழுந்த ஏடு எடுத்து வாசித்தார் உண்டோ –
அறிவுடையார்க்கு எல்லாம் பட வேண்டாவோ –

ஆர்யேண-கருணம் -கார்யம் -என்னக் கடவது இறே என்று ஜீயர்( நஞ்சீயர் ) அருளிச் செய்த வார்த்தை –
(பிராட்டி திருவடிக்குச் சொன்ன வார்த்தை )

அவர்கள் பக்கல் வேண்டாதவற்றை  கிடந்தது ஆராயா நிற்கிறது என் –
நம் ஸ்வரூபத்துக்கு ஈடாக செய்ய வேண்டுவது கிடக்க
ஆராய்ந்தால் கை விட ஒண்ணாத வற்றை ஆராய்கிறது என் –

—————————————————

நீ எனது குற்றங்களை பாராதே
என்னைக் கொள்ளும் அளவு மட்டும் போராது-
செய்த குற்றங்கள் ஆராய்வதாக  நீ இட்ட
யமாதிகளும் என் பக்கல் வாராத படி
பண்ண வேணும் -என்கிறார் –

ஏத்தி உன் சேவடி எண்ணி யிருப்பாரை
பார்த்து இருந்து அங்கு நமன் தமர் பற்றாது
சோத்தம் நாம் அஞ்சுதம் என்று  தொடாமை நீ
காத்தி   போல் கண்ண புரத்துறை யம்மானே–8-10-6-

ஏத்தி உன் சேவடி எண்ணி யிருப்பாரை-
உன் திருவடிகளை ஏத்தி
வழு விலா யடிமை செய்ய வேண்டும் நாம் -என்கிற மநோ ரதத்தை உடையராய் இருக்குமவர்களை –

பார்த்து இருந்து அங்கு நமன் தமர் பற்றாது-
அவர்களுடைய சரீர விச்லேஷ சமயம் பார்த்து இருந்து –
அவ்வஸ்தையிலே
அந்திம சமயத்திலே
யமபடர் வந்து கிட்டாதே-

சோத்தம் நாம் அஞ்சுதம் என்று  தொடாமை நீ காத்தி போல்-
அவர்கள் அனுகூலராய் இருப்பாரைக் கண்டால்
சொல்லுவன இச் சப்தங்கள் –
இறைஞ்சியும் சாதுவராய் போதுமின்கள் (நான்முகன் )-என்கிறபடியே –
அவர்களைக் கண்டால் நாங்கள் அருகு வாரோம் -என்று
கடக்கப் போம் படியாய் அன்றோ உன் ஸ்வபாவம்

கண்ண புரத்துறை யம்மானே –
அவ்வளவுகள் அறிந்து நோக்குகைக்காக அன்றோ
இங்கு வந்து நிற்கிறது –

——————————————-

அவர்கள் கிட்டாமையையோ –
உன் பிரபாவத்தாலே அவர்களுக்கு மறைந்து வர்த்திக்க வேண்டும்படியாய் அன்றோ
இருக்கிறது -என்கிறார் –

வெள்ளை நீர் வெள்ளத்து அளைந்த அரவணை மேல்
துள்ளு நீர் மெள்ளத் துயின்ற பெருமானே
வள்ளலே யுன் தமர்க்கு என்றும் நமன் தமர்
கள்ளர் போல் கண்ண புரத்துறை யம்மானே—8-10-7-

வெள்ளை நீர் வெள்ளத்து அளைந்த அரவணை மேல் –
திருப் பாற் கடலிலே
திரு வநந்த ஆழ்வான் மேலே –

துள்ளு நீர் –
கடலிலே சிறு திவலைகள் ஆனவை
திரு மேனியிலே சௌகுமார்யத்துக்கு  ஈடாக
வந்து துடை குத்த –

மெள்ளத் துயின்ற பெருமானே-
ஆர் எம வஸ்யர் ஆகிறார்
ஆர் கூப்பிடுகிறார்
என்று கூக்குரல் கேட்கும்படி
செவி தாழ்த்துக் கொண்டு மெள்ள கண் வளரும்  சர்வாதிகனே –

வள்ளலே –
ஆஸ்ரித விஷயத்தில் பண்ணின
ஔதார்ய வெள்ளம் இருந்த படி என்ன –

யுன் தமர்க்கு என்றும் நமன் தமர் -கள்ளர் போல் –
உன் அடியாரை -உன்னுடையாரைக் கண்டால்
ய மபடர் கிட்டாமையேயோ-
மறைந்து அன்றோ வர்திபபது

கண்ண புரத்துறை யம்மானே  –
காக்கிற நீ சந்நிஹிதனாய் இருக்க
அவர்கள் எங்கனே வெளியில் திரியும் படி –

—————————————————–

நீ பாபங்களைக் கனக்க கூடு பூரித்து வைக்க –
அதனுடைய பலானுபவத்தை பண்ணுவிக்குமவர்களுக்கு
மறைந்து வர்திக்கைக்கு ஹேது என் -என்ன –

நீ ஆஸ்ரிதர்க்காக உன்னை அர்த்தி யாக்கின படியையும்
விரோதி நிரசன சீலனாய் இருக்கிற படியையும்
அனுசந்தித்தேன் –
அவை வாசனையோடே போய் நிற்க்கக் கண்டேன் -என்கிறார்-

மாணாகி வையம் அளந்ததுவும் வாளவுணன்
பூணாகம் கீண்டதுவும் ஈண்டு நினைந்து இருந்தேன்
பேணாத வல்வினையேன் இடர் எத்தனையும்
காணேன் நான் கண்ண புரத்துறை யம்மானே—8-10-8-

பேணாத வல்வினையேன்-ஆத்மாவுக்கு கிஞ்சித்தாகிலும் ஹிதம் பண்ணாத பாபிஷ்டன் –

மாணாகி வையம் அளந்ததுவும் வாளவுணன் பூணாகம் கீண்டதுவும் –
உண்டு என்று இட்ட போதோடு
இல்லை என்று தள்ளிக் கதவடைத்த போதோடு
வாசி அற முகம் மலர்ந்து போம்படி இரப்பிலே
தகண் ஏறின வடிவை உடையனாய்
பூமிப் பரப்பை யடைய அளந்து கொண்டதுவும்
சிறுக்கனுக்காக சாயுதனான ஹிரண்யன் உடைய
ஆபரணங்களால் அலங்க்ருதமான மார்வைக் கிழித்ததுவும் –

ஈண்டு நினைந்து இருந்தேன் –
நீ முற்காலத்திலே செய்த செயலை நான் இப்போது நினைத்து இருந்தேன் –

பேணாத வல்வினையேன் இடர் எத்தனையும் -காணேன் நான்-
தேகாத் வ்யதிரிக்தமாய் இருப்பதோர் ஆத்மா உண்டு என்று
அதுக்கு ஒரு நன்மை பாராதே
தேஹாத்ம அபிமானியாய்
மகா பாபங்களை திரட்டின நான்
அவை  அடங்கலும் நிஸ் சேஷமாக போய் கொடு நிற்கக் கண்டேன் –

கண்ண புரத்துறை யம்மானே –
போக்குமவன் அளவுக்கு ஈடாய் அன்றோ
போமதின் அளவு இருப்பது –

———————————————-

உம்முடைய விரோதி போன படி தான் என் –
நீர் பெற்ற பேறு தான் என் -என்ன –
(குழந்தை சொல்வதைத் தாய் கேட்க ஆசை கொள்ளுவாள் போல்
இவர் சொல்லக் கேட்டு உகப்பவன் அன்றோ அவன் )

நாட்டினாய் என்னை உனக்கு முன் தொண்டாக
மாட்டினேன் அத்தனையே கொண்டு என் வல்வினையைப்
பாட்டினால் உன்னை என் நெஞ்சத்து இருந்தமை
காட்டினாய் கண்ண புரத்துறை யம்மானே  —8-10-9-

நாட்டினாய் என்னை உனக்கு முன் தொண்டாக –
முந்துற முன்னம் நீ செய்தது
இவனை நம்முடையான் என்று
அங்கே நாட்டுங்கள்   -என்றாய்
நீ எனக்கு பிரதம ஸூஹ்ருதமாக செய்தது
இவனை நம்முடையனாக அங்கே நாட்டுங்கள் என்று சொன்னாய் –
(நம்முடையானாக அடிமை செய்ய வைத்துக் கொள்ளும் அந்த கணக்கில் வைத்து ஸ்திரப்படுத்தி அருளினாய்
முத்ரை மோதிரம் கொடுத்து அருளினாய் )

மாட்டினேன் அத்தனையே கொண்டு என் வல்வினையைப்
நானும் அவ்வளவைக் கொண்டு
உன்னைப் பற்றின ராஜ குலத்தாலே
அநாதி காலம் புத்தி பூர்வகமாக பண்ணின பாபங்களை
நிஸ் சேஷமாகப் போக்கினேன் –

பாட்டினால் உன்னை என் நெஞ்சத்து இருந்தமை காட்டினாய் –
விரோதி போகப் பெற்ற அளவேயோ –
அது போனால் பெறக் கடவ கைங்கரியத்தையும் பெற்றேன் –
வாசிகமான வடிமையும் செய்யப் பெற்றேன் –

நாம் பாடின கவியினுடைய மதிப்பு இருந்த படியாலே
இது நம்மால் வந்ததாகக் கூடாது –
உள்ளே இருந்து பாடுவிக்கிறான் ஒருத்தன் உண்டு என்று அறிந்த இது கொண்டே
நீ என் ஹிருதயத்தில் இருக்கிற இருப்பை நிச்சயிக்கலாம் படி பண்ணினாய்  –

கண்ண புரத்துறை யம்மானே    –
இவரைப் பாடுவித்த
முக்கோட்டையாய் இருந்தபடி –

————————————————–

கண்ட சீர்க் கண்ண புரத்துறை யம்மானை
கொண்ட சீர்த் தொண்டன் கலியன் ஒலி மாலை
பண்டமாய்ப் பாடும் அடியவர்க்கு எஞ்ஞான்றும்
அண்டம் போய் ஆட்சி யவர்க்கு அது அறிந்தோமே —8-10-10-

கண்ட சீர்க் கண்ண புரத்துறை யம்மானை-கேட்ட சீர் பரமபத பரமன் போல் அன்றே –

கண்ட சீர்க் கண்ண புரத்துறை யம்மானை
உண்டான சம்பந்தத்தை
பிரமாணங்களிலே கேட்டுப் போகை அன்றிக்கே
கண்ணாலே கண்டு அனுபவிக்கலாம் படி
நிரவதிக சம்பத்தை உடைத்தான திருக் கண்ண புரத்திலே
நித்ய வாஸம் பண்ணுகிற
சர்வேஸ்வரனை  –

கொண்ட சீர்த் தொண்டன் –
ஆழ்வார் உடைய ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயைச் சொன்னால்
அதிலே சிலர் விப்ரதிபத்தி பண்ணுகை அன்றிக்கே
ஆழ்வார் ஆகில் தொண்டர் -என்று எல்லாரும்
நெஞ்சில் கொள்ளும்படியான
நன்மையை உடையராய் இருப்பார் ஆயிற்று –
இதில் விமதி விஷயம் இன்றிக்கே இருக்கை –

கலியன் ஒலி மாலை –
ஆழ்வார் ஒலியை உடைத்ததாக
அருளிச் செய்த மாலை

பண்டமாய்ப் பாடும் அடியவர்க்கு எஞ்ஞான்றும் அண்டம் போய் ஆட்சி யவர்க்கு –
இவற்றை நிதியாக கொண்டு பாடும் அடியார்களுக்கு
கால தத்வம் உள்ளதனையும்
ஆண்மின்கள் வானகம் -என்கிறபடியே
பரமபதம் ஆட்சியாகக் கடவது –
அண்டம் -ஆகாசம் -பரமாகாசம்

அது அறிந்தோமே —
சர்வேஸ்வரன் என் பக்கல் பண்ணின ஓரம் இருந்தபடி
(ஒர வஞ்சனை பார பக்ஷம் -ஆஸ்ரித வ்யாமோஹன் )
கண்டேனுக்கு
இத்தை அப்யசித்தவர்களுக்கும்
அவ்வளவு சென்று அல்லது பர்யவசிக்க ஒண்ணாது
என்னும் இடத்தை அழகியதாக அறிந்தோம் –

———–

ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.

வண்டாம் தெய்வத் கண்ணபுரத்தான் பற்று ஆறு பேறாக்
கொண்டு ஏத்தி வேற்று இறை தேறுவாரை அண்டாதே
மந்திரத்தின் உட்பொருள் சொன்னான் கலியன் தான் தொண்டர்
தொண்டன் என மாலாம் வங்கர்க்கு -80-

தெய்வ வண்டு-எம்பெருமான் –
மாலாம் வங்கர்க்கு -வங்கமாம் மாலுக்கு -வங்கம்-கப்பல்
மால் -கருமை பெருமை மையல்
வைகுந்தம் என்பதோர் தோனி பெறாது உழல்கின்றேன்
மந்திரத்தின் உட்பொருள் -உற்றதும் உன்னடியார்க்கு அடிமை –

———————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பெரிய திருமொழி-8-9—ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம்-

May 19, 2014

கீழே அவனுடைய பல படிகளையும் காட்டி ஞான பிரதானம் பண்ணி அருளிய திவ்ய தேசம் என்றார்
இனி ஞான கார்யமான -க்ருதார்த்தனாக -செய்வன செய்தவனாகப் பெற்றதை அனுசந்தித்து
இனி இருவருக்கும் சேஷம் அன்று என்றதை அனுசந்தித்து சங்கதி –
ஆழ்வாரைப் பெற்றதும் தாம் பிரயோஜனம் பெற்று மகிழ்ந்தவன் இவனே -கருவரை போல் நின்றான்
கண்ண புரம் ஓன்று உடையானுக்கு  அடியேன் ஒருவர்க்கு உரியேனோ –8-9-3-

கைம்மானம் -பிரவேசம் –

தாம் நெடும் காலம் இழந்த இழவுகள் எல்லாம் தீர
திருக் கண்ண புரத்திலே தம்மை அனுபவிப்பதாக
எழுந்து அருளி இருந்தான் -என்றார் -கீழ்த் திரு மொழியிலே –
இதில்
இப்படி என் இழவு எல்லாம் தீர்க்க வந்து அருளி நிற்கிற
திருக் கண்ண புரத்திலே -ஜ்ஞான பிரதான தேசம் —
கருவரை போல் நின்றானுக்கு அடியேன்
வேறு ஒருவர்க்கு உரியேன் அல்லேன்
என்கிறார் –

——————————————————-

கைம்மான மத யானை யிடர்  தீர்த்த கரு முகிலை
மைம்மான மணியை யணி கொள்  மரகதத்தை
எம்மானை யெம்பிரானை  ஈசனை யென் மனத்துள்
அம்மானை அடியேன் அடைந்து உய்ந்து போனேனே—8-9-1-

கைம்மான-துதிக்கையால் மான -பெருமை -கொண்ட மதம் கொண்ட -பூவை ஸமர்ப்பிக்க இருந்த பெருமை
மைம்மான மணி-மை மிக்க -மதிப்புடைய மணி
தாமரை -அக்கமலத்து இலை போல் திரு மேனி -பச்சை மா மலை போல் மேனி
பிரான் -இவனே மணி மரகதம் என்று காட்டி அருளிய உபகாரம்
கீழே அடையுங்கோள் நமக்கு உபதேசம் -இதில் அடைந்து உய்ந்தேன் என்று காட்டி அருளுகிறார் –

கைம்மான மத யானை யிடர்  தீர்த்த
முன்கை மிடுக்காலே
எல்லாவற்றையும் தூக்கி அடித்து பொகடுகிறோம்
என்று இருக்கிற
பெரும் தன்மையை உடைய
மத யானையை இடர் தீர்த்த –

கரு முகிலை
காள மேகம் போன்ற வடிவுடையவனை  –

மைம்மான மணியை யணி கொள்  மரகதத்தை –
மை போன்ற நிறத்தை உடைய
பெரு விலையனான  மணி போன்றவனை –
அழகிய மரகதத்தை –

எம்மானை யெம்பிரானை  ஈசனை –
அவ் வடிவு அழகாலே என்னை எழுதிக் கொண்டவனை –
எனக்கு உபகாரகனான
சர்வேஸ்வரனை –

(ஆஹ்லாதகரம் முகில் -இடர் தீர்த்த
மைமான மணி
அழகிய பச்சை மரகதம்
மூன்றையும் காட்டி சேஷபூதனாக்கி அருளிய உபகாரம்
ஆதரம் பெறுக வைத்த அழகன்
பிரானாக இருக்கும் சர்வேஸ்வரன் )

யென் மனத்துள் அம்மானை –
யென் நெஞ்சிலே இருக்கிற சர்வேஸ்வரனை –

அடியேன் அடைந்து உய்ந்து போனேனே –
அடைந்து உஜ்ஜீவிக்கப் போனேன் –

—————————————————————–

கூக்குரல் கேட்டு திருப்பாற் கடலை விட்டு வந்து ரக்ஷித்தமை கீழே
குரல் கேட்க வேணும் என்று அணித்தாக நித்ய வாஸம் செய்து அருளுகிறவன் என்கிறார்

தருமான மழை முகிலைப் பிரியாது தன்னடைந்தார்
வருமானம் தவிர்க்கும் மணியை யணி யுருவில்
திருமாலை யம்மானை யமுதத்தைக் கடல் கிடந்த பெருமானை –
அடியேன் அடைந்து உய்ந்து பிழைத்தேனே —8-9-2-

வருமானம் தவிர்க்கும்-யஸ்ய அனுக்ரஹம் -தருபவர்க்கு செல்வம் ஒழிப்பவன் –
இங்கு மானம் -அவமானம் ஒழிப்பவர்
உனக்கு ஆட்பட்டும் இன்னும் உழல்வேனோ என்பர்களே
உனக்கு வரும் ஏசுச் சொற்களை பொறுக்க மாட்டோமே

தருமான மழை முகிலைப் பிரியாது –
அபேஷித்தார்க்கு அபேஷிதங்களைக்   கொடுக்கக் கடவதாய்
இருந்துள்ள கற்பகத் தரு போலவும்
(அர்ச்சித்தார்த்த பரிதாபம் தீக்ஷிதன் எனக்கே தன்னைத் தந்த கற்பகம் )
அபேஷா நிரபேஷமாக கொடுக்கக் கடவதான
பெரிய மேகம் போலேயும் ஆனவனை –

(தரும் -பிரார்தித்தவர்களுக்கு மட்டும்
வரும் முகில் -பிரார்த்திக்காமலே வர்ஷிக்கும் மேகம் போல்)

தன்னடைந்தார் வருமானம் தவிர்க்கும் மணியை –
தன்னைச் சேர்ந்தார்க்கு வரும்
அவமானங்களை போக்கும் மணியை –
மணியை -என்கிறது சிந்தா மணியை –
(சிந்தா மணி -சிந்தாமல் சிதறாமல் சிந்தித்தவற்றை கொடுக்கும் -சிந்தனைக்கு அழகியான் )

யணி யுருவில் -திருமாலை-
அழகிய வடிவை உடைய ஸ்ரீயபதியை –

யம்மானை-
சர்வ சேஷியை –

யமுதத்தைக் கடல் கிடந்த பெருமானை –
என்னை சாவாமை காத்தவனை –
என்னுடைய ரஷணத்தில் உத்யுக்தனாய்க் கொண்டு
திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிற சர்வாதிகனை –
ப்ரஹ்மாதிகளுக்காக கடலிலே வந்து
கண் வளர்ந்து அருளின பெரியவனை –

அடியேன் அடைந்து உய்ந்து பிழைத்தேனே –
அடியேன் அடைந்து உய்ந்து பிழைக்கப் பெற்றேன் –
(கூப்பீடு கேட்க்கும் இடம் போல் அன்றிக்கே வகுத்த இடம் அன்றோ )

—————————————————

அநந்யார்ஹத்வம் -திருமந்த்ரார்த்த ஞானம் அருளப் பெற்று அருளிச் செய்கிறார் இப்பதிகம் –
உயிரான பாசுரம்
திருக்கண்ண புரம் உள்ள பாசுரம் -இதிலும் 9 -10 -பாசுரங்களில் மட்டும் இப்படி உள்ளது
கீழேயும் இதே போல் ஒரே பாசுரம் இருப்பதையும் –
இரண்டு பாசுரங்களில் இல்லாத இரண்டு பதிகங்கள் பார்த்தோம் பார்த்தோம்
ஆக மூன்று பதிகங்களில் மட்டும் இப்படி உண்டு -100 பாசுரங்களில் 18 பாசுரங்களில் இல்லை –
இவரைப் பாடுவித்த முக்கோட்டை இது

கண்ண புரம் ஓன்று உடையானுக்கு  -பரமாத்மா அகாரம்
அடியேன் -சேஷ பூதன் -மகார அர்த்தம்
உடையானுக்கு -ஆய -சேஷத்வ வாசகம் லுப்த சதுர்த்தி
ஒருவர்க்கு உரியேனோ-அநந்யார்ஹ சேஷத்வம் குறிக்கும் உகார அர்த்தம் –
மோக்ஷ பிரதன் -ஸ்ரஷ்டா -இவன் ஒருவனே
பிரதிபந்தங்களைப் போக்கி இசைவித்து தனது தாளிணைக் கீழ் தனது பேறாக இருத்தும் ஸ்வாமி

அடியேன் அடைந்து உய்ந்து பிழைத்தேனே – என்றார் கீழே
சங்கதி தன்னை பெரியவாச்சான் பிள்ளை தாமே அருளிச் செய்கிறார்

இது தான் உமக்கு எத்தனை  குளிக்கு நிற்கும் -என்ன
நான் பிறர்க்கு உரியேன் அல்லேன் -என்கிறார் –

விடை ஏழு அன்று அடர்த்து வெகுண்டு விலங்கலுறப்
படையாலாழி தட்ட பரமன் பரஞ்சோதி
மடையார் நீலம் மல்கும் வயல் சூழ் கண்ண புரம் ஓன்று
உடையானுக்கு  அடியேன் ஒருவர்க்கு உரியேனோ –8-9-3-

விலங்கலுற-திரிகூட மலை -அஸ்தமன கிரி -இரண்டு சரித்திரங்கள் வியாக்யானத்தில் உண்டே

விடை ஏழு அன்று அடர்த்து வெகுண்டு விலங்கலுறப் -படையாலாழி தட்ட-
சீறி ருஷபங்கள் ஏழையும்
நெரித்து
திரிகூட சிகரத்திலே சென்று கிட்டும்படியாக
கான வெண் குரங்கும் முசுவும் படையாகக் கொண்டு
கடலை அடைத்த –

அன்றிக்கே –
அஸ்தமய பர்வதத்திலே   ஆதித்யன் அஸ்தமித்தான்
என்னும்படியாக
திரு ஆழியாலே ஆதித்யன் தேஜஸ்சை தடுத்து  மறைத்த –

பரமன் –
சமாதிக தரித்திரன் –

பரஞ்சோதி-
பிராட்டிக்கு வந்த பிரதி பந்தகத்தைப் போக்கி
அத்தாலே வந்த
தேஜஸ்சை உடையனாய் இருக்கிறவன் –

மடையார் நீலம் மல்கும் வயல் சூழ் –
மடைகள் அடைய மிக்க நீலத்தை உடைத்தான
வயலாலே சூழப் பட்ட –

கண்ண புரம் ஓன்றுஉடையானுக்கு  –
திருக் கண்ண புரத்தை தனக்கு
வாசஸ் ஸ்தானமாக உடையவனுக்கு –
ஸ்ரீ வைகுண்ட நாதனாய் இருக்கும் இருப்புக்கு
அவ்வருகே ஓன்று போலே காணும் இது –

அடியேன் ஒருவர்க்கு உரியேனோ-
சேஷ பூதனான நான் –
வேறு சிலர்க்கு உரியேன் அல்லேன் –

இத்தால்
தம் ஸ்வரூபம் சொல்லுகிறார் –
பிறர்க்கு உரியேன் அல்லேன் என்னும் இடம் சொல்லுகிறார் –
அசாதாராண விபூதி உக்தன் ஆனவனுக்கு
என்னும் இடம் சொல்லுகிறார் –
(நித்ய விபூதி லீலா விபூதி உக்தன் அன்றிக்கே கண்ண புரம் ஓன்று உடையானுக்கு –
ஓன்று பத சேர்க்கையால் – பகவத் ஸ்வரூபம் சொல்லிற்று )

—————————————-

இதுவும் அத்புத பாசுரம் –
சோழ ஸிம்ஹம் சாந்த யோக ரூபம் –
தக்கான் குளம்-பக்தர்களுக்கு உசிதனான -தக்க அவனுக்கு -தக்க குளம்
பாசுரம் முழுவதும் இரண்டாம் வேற்றுமை வைத்து பல பாசுரங்கள் அருளிச் செய்யும் நாலு கவி பெருமாள் அன்றோ

ஒருவருக்கு உரியேனோ என்றார் கீழ்
இதில் அவனுக்கு அசாதாரணமான பரம போக்யத்வம் அருளிச் செய்கிறார் –
அக்காரக்கனி -சக்கரை பழம்
எக்காலத்து எந்தையாய் என்னுள் மன்னி அக்காரக்கனி -நம்மாழ்வார்
சக்கரை விதை இட்டு தேனை இட்டு வளர்ந்து வந்த செடி பூத்து காய்த்து கனிக்கும் மரத்தில் -அபூத உவமை –

மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள்
புக்கானைப் புகழ் சேர் பொலிகின்ற பொன் மலையை
தக்கானைக் கடிகைத் தடங்குன்றின் மிசையிருந்த
அக்காரக் கனியை அடைந்து உய்ந்து போனேனே–8-9-4-

மறையாய் விரிந்த விளக்கை-மறையாயும் பரவிய விளக்காகவும் -தன்னைத் தானே விளக்கி -மற்றவற்றையும் விளங்குபவர்
வேதத்தால் சொல்லப் படுபவரை தானே விளங்குபவர் என்னலாமோ என்னில்
ஸப்த பிரமாணம் பரிச்சேதிக்க ஒண்ணாதே -ஆகவே விரிந்த விளக்கே என்கிறார் –
எல்லை காண முடியாமல் இருப்பவன் என்று காட்டும் ப்ரமாணமே வேதம்
பொன் மலையை–1305 உள்ள மலைக்கு மேலே பொன் மலை

வாதூல ஸ்ரீ நிவாஸ குரு -தொட்டாச்சார்யார் அதீனம்
தாயார் நவராத்திரிக்கு கீழே எழுந்து அருளுவார்
சேஷ பீடத்தில் பக்தலோசன பெருமாள் -உத்சவர் மேலே எறியும் சேவை உண்டு
ஆஹ்வான ஹஸ்தம் –
கோயிலைப் பார்த்துக் கொண்டே எழுந்து அருளப் பண்ணுவார்கள்
தத்துவம் தகவு அன்று -தகவு என்பதே தக்கான் -கிருபை மிக்கவன்
கடிகை -அசலம் நாழிகை பொழுது இருக்கவே அசையாத பாப கூட்டங்கள் போகுமே
இத்தை விட்டு சலம் -சரீரத்தையே பார்த்து இழந்து போகிறோமே –

சக்ர தீர்த்தம் -திருவடி நரசிம்மன் திருவடி நோக்கி நித்தியமாக சேவித்துக் கொண்டே இருக்கும் சேவை –
மூலவர் யோக நரசிம்மர் நான்கு திருக்கரங்கள் -வீற்று இருந்த -பட்டயம் சாத்தி சேவை
உத்சவர் பக்த வத்சலன் -பக்தர்களுக்கு தக்க கிருபை பொழிபவன்
அம்ருத தீர்த்தம் பாண்டவ தீர்த்தம் தக்கான் குளம்
அம்ருத பல வல்லி மாய்ச்சியார் -லஷ்மீ தீர்த்த கரை
ஸிம்ஹ விமானம் -ஹேம கோடி விமானம்
சப்த ரிஷிகள் இங்கு இருந்து தபஸ்ஸூ
மலைக்கு ஏறும் பொழுது இவர்கள் நடுவில் சேவை உண்டு
அத்ரி கஸ்யபர் கௌதமர் பரத்வாஜர் வசிஷ்டர் ஜமதக்கினி
திருவடி சங்கு சக்கரம் ஏந்தி சேவை
ரிஷிகளுக்காக சாந்த ஸ்வரூபம் உடன் சேவை
தொட்டாச்சார்யார் 1543-1607-வாதூல வம்சம்
இங்கும் தில்லை திருச்சித்ர கூடம் ப்ரதிஷ்டை செய்து அருளினார்
நித்தியமாக திருச்சித்ர கூட பாசுரங்கள் திரு மலையிலும் கோவிந்தராஜன் சன்னதியிலும் நித்ய சேவை உண்டே

ராமர் அரங்கன் சந்நிதி திருவடிக்கு அருள் புரிந்தே சேவை
கார்த்திகை பரணி நக்ஷத்ரம் திருவடி இங்கு ஆவிர்பாவம்
1588 பங்குனி சுக்ல பக்ஷம் பஞ்சமி திதியில் பக்த லோசனனுக்கு கீழேயும் திருக்கோயில் நிர்மாணம்
தக்கான் குளம் -கயா போக வேண்டாம் -அதே மஹிமை -வரதராஜர் சந்நிதியும் உண்டே -கருட வாஹனத்துடன் இங்கே சேவை உண்டே

மிக்கானை –
சர்வாதிகனை –

மறையாய் விரிந்த விளக்கை-
வேறு ஒன்றால் காண வேண்டாதே
தனக்குத் தானே பிரகாசகமாய் இருப்பது –
பிரமாணங்களால் அறியப் பார்க்கும் அன்று
அவற்றாலே பிரகாசிக்கிற மேன்மைக்கு எல்லை அன்றிக்கே இருப்பது –

என்னுள் புக்கானைப்-
என் ஹிருதயத்திலே தானே புகுந்தவனை –

புகழ் சேர் பொலிகின்ற பொன் மலையை-
ஒரு சம்சாரி சேதனன் உடைய ஹிருதயத்திலே
அவனுக்கு அபேஷை இன்றிக்கே இருக்க
தானே போய் புகுவதே –
இது ஒரு நீர்மை இருக்கும்படியே -என்று
இருந்ததே குடியாக
எல்லாரும் ஒக்கச் சொல்லுகையாலே வந்த
மிக்க புகழை உடையனாய்க் கொண்டு
உஜ்ஜ்வலனாய் இருக்கிறவனை  –

தக்கானைக்-
பரம தார்மிகனை –
(கிருபை -தகவு -ஆன்ரு ஸம்சயம் பரோ தர்மம் – கிருபையே தர்மம் -கிருபாவானே தார்மிகன் என்றபடி )

கடிகைத் தடங்குன்றின் மிசையிருந்த அக்காரக் கனியை –
திருக் கடிகை யாகிற திருமலையின் மேலே
அக்காரம் போலேயும்
கனி போலேயும்
நிரதிசய போக்யனாய் இருக்கிறவனை –

அடைந்து உய்ந்து போனேனே  –

—————————————————

(பர கத ஸ்வீ காரமே உத்தாரகம் –
வந்தாய் -வந்து புகுந்த பின்பே எந்தாய் என்ற ஞானம் அருளி -இதனாலே மீளாமல் மனத்திலே இருந்தாய் –
திருக்குடந்தை உடன் –சயனம் -கீழே திரு சோழ ஸிம்ஹ புரம் -வீற்று இருந்து –
இங்கு நின்று அருளி -எல்லாம் கைக் கொண்டு அருளவே
பாட்டுக்கு எல்லாம் தொகுத்து தாத்பர்யம் அருளுகிறார் வியாக்யானத்தில்
வந்ததுக்கு மேற்பட நீ பண்ணக் கடவதொரு உபகாரம் உண்டோ -இதுவே அருளிச் செயல்களுக்கு எல்லாம் தாத்பர்யம் -)

நாம் என்ன உபகாரம் பண்ணினோமாக
தான் இப்படி கிடந்து படுகிறது -என்ன  –

வந்தாய் என் மனத்தே வந்து நீ புகுந்த பின்னை
எந்தாய் போய் அறியாய் யிதுவே யமையாதோ
கொந்தார் பைம் பொழில் சூழ் குடந்தைக் கிடந்துகந்த
மைந்தா வுன்னை   என்றும் மறவாமை பெற்றேனே —8-9-5-

போய் அறியாய்–நித்ய ஸூரிகள் இடம் போவதற்கு நினைக்காமல் -போகாமல் என்னாமல் போக அறியாமல் –
அந்தாமத்து அன்பு செய்து பேரேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தாய்

வந்தாய் என் மனத்தே வந்து நீ புகுந்த பின்னை-
இதுக்கு மேற்பட நீ பண்ணக் கடவதொரு
உபகாரம் உண்டோ –

வந்தாய் –
நான் இருந்த இடம் தேடி நீயே வந்தாய் –
இவன் வந்திடுவான் எனக்கு என்றும் இராத
என் ஹிருதயத்திலே நீயே வந்து புகுந்த பின்பு –

எந்தாய்-
என் ஸ்வாமி யானவனே –
ஸ்வாமி ஆனபடியால் சொத்தை விடமாட்டாமல் வந்து புகுந்தாய்
புகுந்த பின்பு அடியேனுக்கு நீயே எந்தாய் என்ற ஞானத்தையும் அளித்து அருளினாய்

போய் அறியாய் யிதுவே யமையாதோ-
நித்ய ஸூரிகள் பக்கலில்
போவதாகவும் நினைக்கிறது இல்லை –
இதுவே அமையாதோ –
இனி இதுக்கு மேற்பட ஒருவனுக்கு பேறு ஆகையாவது என் –

கொந்தார் பைம் பொழில் சூழ் குடந்தைக் கிடந்துகந்த-
கொத்துக்கள் மிக்கு
அழகியதாய்   இருந்துள்ள பொழிலாலே சூழப்பட்ட
திருக் குடந்தையிலே கண் வளர்ந்து
நாம் ஆஸ்ரிதர்க்கு உறுப்பாகப் பெற்றோமே இறே-என்று
அத்தாலே உகந்து –

மைந்தா வுன்னை   என்றும் மறவாமை பெற்றேனே –
இவர்களுக்கு விட ஒண்ணாத படி
நவீக்ருதமான யௌவனத்தை உடையனவாய் இருந்தவனே –

(ஆராவமுதம் -அப்பொழுதைக்கு அப்பொழுது நவீ க்ருதமான யௌவனம்
நவ களேபரம் உத்சவம் -திரு ஜெகந்நாத -திவ்ய மங்கள விக்ரஹம் –18-வருஷங்களுக்கு
திருக் குடந்தையில் க்ஷணம் தோறும் )

இப்படி உபகாரகனான உன்னை மறவாது ஒழியப் பெற்றேன் –
நீயோ தீரக் கழிய உபகரித்து நின்றாய் –
நான் அந்த உபகாரகத்தை மறவாது ஒழியப் பெற்றேன் –
இனி இதுக்கு மேற்பட பேறு உண்டோ –

————————————————-

எஞ்சா வென் நரகத்து அழுந்தி நடுங்குகின்றேற்கு
அஞ்சேல் என்று அடியேனை யாட் கொள்ள வல்லானை
நெஞ்சே நீ நினையாது இறைப் போதும் இருத்தி கண்டாய்
மஞ்சார் மாளிகை சூழ் வயலாலி மைந்தனையே –8-9-6-

அடியேனை யாட் கொள்ள வல்லானை-சேஷ பூதனான அடியேனை தாஸ பூதனாக்கிக் கொள்ள
சேஷ பூதன் இயற்க்கை -கைங்கர்யம் கொண்டால் தானே தாஸ பூதன் ஆவோம் –
அடியேன் என்ற சொல்- அர்த்தமாவதற்கு வல்லமை தேவரீருக்கே –

நெஞ்சைப் பார்த்து
அதினுடைய நினைவை காதாசித்கமாக்கி
அவன் நம்மை உபகரித்து நின்றான்
நீ தப்பச் செய்யா நின்றாய் –
என்கிறார் –

எஞ்சா வென் நரகத்து அழுந்தி நடுங்கின்றேற்கு அஞ்சேல் என்று –
யமன் தண்டலானால்
பண்ணின பாபத்தைக் கணக்கிட்டு
அதுக்குத் தக்க பலத்தை அனுபவிப்பித்து
பின்னை விட்டடிப்பார்கள் –
அங்கன் அன்றிக்கே –
சம்சாரத்துக்கே ஹேதுவான பாபத்துக்கு
ஓர் அவதி இல்லாமையாலே ஒரு காலும் குறைந்து
காட்டாதாயிற்று –

ஒரு காலும் குறையாத இருக்கிற சம்சாரத்திலே
(சம்சார சாகரம் கோரம் அனந்த கிலேச பாஜனமாய் இருக்குமே )
தரை காண ஒண்ணாத படி அழுந்தி
நடுங்குகிற என்னை
நான் உண்டே நீ அஞ்சாதே கொள் -என்று –

அடியேனை யாட் கொள்ள வல்லானை –
ஷத்ரிய புத்திரன் தலையிலே
முடியை வைத்தால் போலே –
(தாஸ்ய பூதன் ஆக்கினதே அடி சூடும் அரசனாக முடி சூட்டுவதே )

நெஞ்சே நீ நினையாது இறைப் போதும் இருத்தி கண்டாய் –
நெஞ்சே –
நீ ஜ்ஞான பிரசர த்வாரம் அன்றோ
நீ நினை என்று என்னை பிரேரிக்க வேண்டாவோ –
ஒரு ஷண காலமும் நீ நினையாதே இரா நின்றாய் –
(இது வன்றோ முன்னின்ற நிலை )

மஞ்சார் மாளிகை சூழ் வயலாலி மைந்தனையே –
நினைக்க அருமைப் பட வேண்டும்படி
அவன் தன்னை அரியனாகத் தான் நீ நினையாது இருக்கிறாயா –
மேக பதத் தளவும் ஓங்கின மாடங்கள் சூழ்ந்து இருப்பதாய்
வயலோடு கூடின திரு வாலியிலே வந்து
சந்நிஹிதன் ஆன மைந்தனையே –
(இப்படி அண்ணியனாக-போக்யமாக -எளிமையாக இருந்தும் நினையாது இழப்பதே )

——————————————————

கீழே அண்ணியனாக-போக்யமாக -எளிமையாக -இருப்பவன் என்று -நினைக்க வழி சொல்லி
இனி எத்தால் மறக்க முடியும் என்கிறார் இதில் –

உமக்கு இத்தனை அதி மாத்திர நிர்பந்தம் என் என்ன –
இவ்விஷயத்தை விட்டுப் போய்-பின்னை நீ ஆரை நினைக்க இருக்கிறாய் -என்
புறம்பு நினைக்க ஒருவரும் இல்லையோ என்னில்
இது வன்றோ புறம்பு உள்ளார் படி   –

பெற்றார் பெற்று ஒழிந்தார் பின்னும் நின்று அடியேனுக்கு
உற்றானாய் வளர்த்து என் உயிராகி நின்றானை
முற்றா மா மதி கோள் விடுத்தானை யெம்மானை
எத்தால் யான் மறக்கேன் இனி இது சொல் என் ஏழை நெஞ்சே—8-9-7-

உற்றானாய் வளர்த்து-ஸகல வித பந்துவாய் -பழகியதை சொல்லி பிதா நாராயணா-த்வம் மாதா –
சேலேய் கண்ணியரும் -மாதா தேவோ பவ -இவற்றைச் சொல்லி
பண்டைய நாளாலே-9-2- -எல்லா உறவும் -அடுத்து -9-3-சகல வித கைங்கர்ய பிராத்தனை போல்
எத்தால் யான் மறக்கேன் இனி- தென் குறுங்குடி நின்ற அச் செம் பொனே திகழும் திரு மூர்த்தியை உம்பர் வானவர்
ஆதி யம் சோதியை எம்பிரானை என் சொல்லி மறப்பேனோ –2-1-10- போல் இங்கு இவர்

பெற்றார் பெற்று ஒழிந்தார் –
பித்ராதிகள் ராகாந்தராய்
பிரஜைகளை உத்பாதித்து யௌவன விரோதி என்று
பொகட்டுப் போக நிற்பர்கள் ஆயிற்று –
பின்னையும் இவனுக்கு ஒரு உறவு முறை ஒழிய செல்லாது இறே –
பண்ணிப் போந்த வாசனையாலே
அவ்வளவில் அவர்கள் வழியாலே நின்று முகம் கொடுக்குமாயிற்று –

பின்னும் நின்று அடியேனுக்கு உற்றானாய் வளர்த்து
தன் கை பார்த்து இருக்க வேண்டும் படியான பருவத்தை உடைய எனக்கு
எல்லா உறவு முறையும் தானேயாய் நின்று நோக்கி –

என் உயிராகி நின்றானை  –
தாய்  தகப்பன் பொகட்ட அன்றும் நான்  ஜீவிக்க வேணும்
என்று இருக்கும் இறே
இச் சேதனன் தான் –
அப்படி தனக்கு பரிவனான தானாயும் நோக்கினான் ஆயிற்று –

முற்றா மா மதி கோள் விடுத்தானை யெம்மானை
பருவம் நிரம்பாத
சந்த்ரனுக்கு வந்த ஷயத்தைப் போக்கி
தன்னுடைய ரஷகத்வத்தைக் காட்டி
என்னை எழுதிக் கொண்டவன்

எத்தால் யான் மறக்கேன்-
பண்ணின உபகாரம் அளவுபட்டு மறக்கவோ –
புறம்பேயும் ஒரு புகல் உண்டாய் மறக்கவோ –

இனி இது சொல் என் ஏழை நெஞ்சே
சம்சாரத்தே சில விடவுமாய்
பற்றவுமாய் இருக்கிற இருப்பைக் கொண்டு
பகவத் விஷயத்தை மறக்கலாம் என்று இருக்கிற நீ சொல்லு –

————————————————

கீழே பெற்றவர்களே பொகட்டு போனாலும் கண்ண நீர் பாய்ச்ச வேண்டாத
தாயும் தந்தையும் இவனே என்றும் உற்றானாய் வளர்த்தான் என்றார் –

உமக்கு உற்றானாய் நின்றவன்
பண்ணின உபகாரம் தான் என் என்ன
ஸ்வ அனுபவத்துக்கு விச்சேதம் வாராத படி பண்ணி
தந்தவன் அன்றோ -என்கிறார்
அதுக்கு உம்முடைய பக்கல் உள்ளது என் என்னில் –
(ஞானிகள் வேண்டாம் வேண்டாம் என்னும் இப்பிறவிச் சூழலிலே பிறந்தேன் -இதுவே நான் செய்தது )

கற்றார் பற்று அறுக்கும் பிறவிப் பெரும் கடலே
பற்றா வந்து அடியேன் பிறந்தேன் பிறந்த பின்னை
வற்றா நீர் வயல் சூழ் வயலாலி யம்மானைப்
பெற்றேன் பெற்றதுவும் பிறவாமைப் பெற்றேனே —8-9-8-

(மாய வன் சேற்று அள்ளல் அழுத்தாமல் பொய் நிலத்தில் இருந்து -பற்று அறுக்கும் –
பிறந்தாலும் சங்கம் இல்லாமல் -இருப்பவர்கள் அன்றோ நமது ஆச்சார்யாதிகள்
வைராக்யம் இருந்தால் சம்சாரத்தில் இருந்தாலும் பூ ஸூரர் ஆவோம்
அற்ற பத்தர் சுற்றி வாழும் அம் தண் நீர் அரங்கமே –
வைராக்ய சிகாமணிகள் அன்றோ கோயிலில் வாழும் வைஷ்ணவர்கள்
கர்மத்தால் பிறந்தாலும் பிறந்ததே தப்பு இல்லை -பற்று அறுக்க வேண்டும்
திருவாலி அம்மானைப் பற்றுவதற்கும் பிறக்க வேண்டுமே
பிறக்கவும் வைத்து தானும் அண்மையில் நித்ய வாஸம் இருந்து ஆச்சார்யர்களைக் கொண்டு உபதேசித்த பின்பும்
பற்று அறுக்காமல் இருக்கக் கூடாதே
புத்தி கொடுத்து யோக க்ஷேமம் வஹாம் அஹம் -நானே வகிக்கிறேன்
கிடைக்காதது கிடைக்கப் பெற்று பெற்றதுவும் நழுவாமல் இருக்கப் பண்ணுவதும் அவனே )

கற்றார் பற்று அறுக்கும் பிறவிப் பெரும் கடலே
அறிவுடையார்
இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை -என்று கழித்து கொள்ளத் தேடும்
சம்சாரம், ஆகிற பெரும் கடலிலே —

பற்றா வந்து அடியேன் பிறந்தேன் பிறந்த பின்னை –
திரை மேலே திரையாக கொண்டு போந்து ஏறடுமா போலே
ஒரு ஜன்மம் ஒரு ஜன்மத்திலே தோள் மாற
மாறி மாறி பல பிறப்பும் பிறந்து போனேன் –
இப்படி பிறந்து போரா நிற்கச் செய்தே
நான் பிறந்த சம்சாரத்திலே அவன் வந்து சந்நிஹிதன் ஆகையாலே அவனைப் பெற்றுக் கொண்டு நின்றேன் –
(64 சதுர் யுகங்களுக்கு முன்பே அன்றோ நாம் பிறந்து உழல்கின்று உள்ளோம் -அநந்த கோடி சதுர் யுகங்கள் அன்றோ )

வற்றா நீர் வயல் சூழ் வயலாலி யம்மானைப் பெற்றேன் பெற்றதுவும் பிறவாமைப் பெற்றேனே
ஒரு நாளும் நீர் மாறாத வயல் சூழ்ந்த திருவாலியிலே
நிற்கிற சர்வேஸ்வரனைப் பெற்றேன்

பெற்றதுவும்
அந்த பெற்ற பேறு தானும் –

பிறவாமை பெற்றேன் –
இப் பேற்றுக்கு விச்சேதத்தை பண்ணக் கடவ ஜன்மம்
மறுவல் இடாதபடி   பெற்றேன் -என்னுதல் –

அன்றிக்கே
இப் பேற்றுக்கு அடியாக
என் பக்கல் ஒரு நன்மை பிறவாது இருக்கச் செய்தே
பெற்றேன் -என்னுதல்

அங்கன் இன்றிக்கே
பெற்றேன் என்னும் உபகார ஸ்ம்ருதியும் வர்த்தியாத படி பெற்றேன் -என்னுதல்

(அடுத்த பிறவி பிறக்காமல் என்றும்
என்னிடம் நன்மை பிறவாமை என்றும்
நன்று உணர்வும் பிறவாமல் என்றும் மூன்று நிர்வாகங்கள்
ஒரு பிறவியும் வாராமல் என்றது ஸூ வ அனுபவ விச்சேதம்
இதுக்கு அடியாக எனது பக்கல் நன்மை ஓன்று இராமல் -ஸ ஹேதுகமாக -இல்லாமல் நிர்ஹேதுகமாக என்கிறது
நன்மையால் என்றால் வேண்டிய பொழுது கூடுவதும் இல்லை என்றால் விச்சேதம் வருமே
அதுக்கு நெஞ்சாறல் -பிரதியுபகாரம் பண்ண -இனி என்ன செய்வோம் -என்று தடுமாறினால் தடங்கல் வருமே
அது கூடவும் படாமலும் இருக்கும் படி அருளுகிறார் –
இதுவே என் பணி என்னாதே அதுவே ஆட்ச் செய்யுமீதே )

உபகார ஸ்ம்ருதி அனுவர்த்தித்த அன்று
பிரத்யுபகாரம் தேடி
நெஞ்சாறல் பட வேண்டும்படி இருக்கும் இறே
அது வேண்டாத படி
பிராப்தம் இது என்று இருக்கும் படி
உபகரித்தான் ஆயிற்று –

(முலைப்பால் குடித்த குழந்தை உபகார ஸ்ம்ருதி பண்ண வேண்டாவே –
இவனோ அநாதியாக தாயுமாய் தந்தையாய் உற்றானாய் அன்றோ உபகரிக்கிறான் )

——————————————————————-

(தலைச் சங்காடு -பூம் புகாரில் அருகில் -தலைச் சங்கு நாண் மதியம் முழு பெயர்
நாண் மதியப் பெருமாள்
ஆஹ்லாத கரம்
மதி -மனஸ்ஸூ அறிவு -சந்த்ரனுக்கும் மனஸ்ஸூக்கும் தொடர்பு
கண்களில் ஸூர்யன் தொடர்பு
தலைச் சங்காடு –
தலைக்காவேரி -தொடங்கும் இடம் இது -காவேரி உடைய தலை -கடலில் கலக்கும் இடம் -சங்குகள் கூடுமே –
தை நீராடல்
சீர்காழி வழியாகவும் மாயவரம் வழியாகவும்
முளைத்து எழுந்த திங்கள் தானாய்
கையில் உள்ளக பாஞ்ச ஜன்யம் -அநந்யார்ஹத்வம் காட்டும் சேவையாலேயே
வெஞ்சுடர் பெருமாள் உத்சவர்
செம்கமல தாயார்
சங்க காலப் பாடல்கள் -சிலப்பதிகாரம் –
இப்பாசுரம் ஒன்றே மங்களா சாசனம் இத்திவ்ய தேசத்துக்கு)

(நெஞ்சும் தாமுமாய் உசாவிக் கொண்டு அனுபவித்தார் கீழ்
இப்படி இருக்கும் பொழுது கண்கள் யுகபத் பரிபூர்ண திவ்ய தேசங்களைக் காணும் அவாவில்
அலை பாய்ந்ததை அருளிச் செய்கிறார்
பூமா -யஸ்ய நான்யத் பஸ்யதி –நான்யத்ர விஜானாதி -வேறு ஒன்றையும் அனுபவிக்காமல்
கண்களுக்கு பூர்ண விஷயங்கள் அன்றோ இவ்வர்ச்சா விசேஷங்கள் )

கண்ணார் கண்ண புரம் கடிகை கடி கமழும்
தண்ணார் தாமரை சூழ் தலைச் சங்க மேல் திசையுள்
விண்ணோர் நாண் மதியை  விரிகின்ற வெஞ்சுடரை
கண்ணாரக் கண்டு கொண்டு களிக்கின்றது இங்கு என்று கொலோ —8-9-9-

இங்கு-இந்த சம்சார பாலைவனத்திலேயே

கண்ணார் கண்ண புரம்-
கண்டார்க்கு கண் மாறி வைக்க ஒண்ணாத படியான
திருக் கண்ண புரம் –
(தோள் கண்டார் தோளே கண்டார் போல் )

கடிகை –
திருக் கடிகை –

கடி கமழும் தண்ணார் தாமரை சூழ் தலைச் சங்க மேல் திசையுள் –
பரிமளத்தை புறப்படவிடா நிற்பதாய்
ஸ்ரமஹரமான தாமரைகளாலே சூழப் பட்ட
தலைச் சங்க காட்டில்
மேல் பார்ஸ்வத்தில் –

விண்ணோர் நாண் மதியை   –
நித்ய ஸூரிகளுக்கு என்றும் ஒக்க அனுபாவ்யன் ஆனவன்
ஆயிற்று இங்கே வந்து ஸூலபன் ஆனான் –

விரிகின்ற வெஞ்சுடரை-
உதய காலத்திலே ஆதித்யனைப் போலே பிரதாபம்
விஞ்சி இருப்பது –
கண்ணாலே முகக்கலாம் படி இருப்பது –

கண்ணாரக் கண்டு கொண்டு களிக்கின்றது இங்கு என்று கொலோ-
ஒரு தேச விசேஷத்திலே போனால்
(போய் -இல்லாமல் போனால் -என்றார்
முயல் விட்டு காக்கை பின் போகாதவர் அன்றோ -ஆகவே போனால் என்கிறார் )
சதா தர்சநத்தாலே -அஹம் அன்னம் அஹம் அன்னம் -என்று களிக்குமத்தை
இங்கே
கண்ணாலே கண்டு களிக்கப் பெறுவது என்றோ -என்கிறார் –

இங்கே கண்களாலே காண்கை யாவது என் என்னில்
இவருடைய த்வரை இருக்கிற படி இறே-

(ஞான தர்சன பிராப்தி -மூன்று தசைகள் -அங்கு கிடைப்பதை இங்கு என்று த்வரிக்கிறார் –
நினைத்த போதே சென்று சேவிக்க ஆசைப்படுகிறார் –
இவருக்கு த்வரை -அவனோ சர்வ சக்தன் -பெறுவதற்கு தடை இல்லையே )

———————————————————–

செரு நீர் வேல் வலவன் கலிகன்றி மங்கையர் கோன்
கரு நீர் முகல் வண்ணன் கண்ண புரத்தானை
இரு நீரின் தமிழின் இன்னிசை மாலைகள் கொண்டு தொண்டீர்
வரு நீர் வையம் உய்ய விவை பாடி யாடுமினே —8-9-10-

(செரு நீர்-யுத்தம் செய்வதே ஸ்வ பாவம்
கை வந்த கலை -வேல் கையில் கொண்டவர்
தமிழின்-இனிய தமிழ்
வரு நீர் வையம்-கடல் சூழ்ந்த வையகம்
நீஞ்சல் உஜ்ஜீவனம் அடைய பாடி ஆடுங்கள்
நீங்கள் பாடி ஆட வையகம் உஜ்ஜீவிக்கும் என்றுமாம் )

செரு நீர் வேல் வலவன் கலிகன்றி மங்கையர் கோன்
செரு சேர் கையை
ஸ்வ பாவமாக உடைய வேல் கை வந்து  இருக்குமவருமாய் –
பிரதி பஷ நிரசன ஸ்வ பாவ ருமாய்
திரு மங்கையில் உள்ளாருக்கு பிரதானரான  ஆழ்வார்   –

கரு நீர் முகல் வண்ணன் கண்ண புரத்தானை-
ஸ்ரமஹரமான வடிவை உடைய
சௌரிப் பெருமாளை யாயிற்று கவி பாடிற்று –

இரு நீரின் தமிழின் இன்னிசை மாலைகள் கொண்டு தொண்டீர்
விஷய வைலஷண்யத்தை ஒழியவே
மிக்க நன்மையை உடைத்தாய் இருக்கிற
இன் தமிழாகிற இசைத் தொடையைக் கொண்டு
கைங்கர்ய ருசியை உடையரான  நீங்கள் –
(பாவின் இன்னிசைப் பாடித் திரிவேன் -இன்னிசையே போதும் -நாவினால் நவிற்று இன்பம் எய்த )

வரு நீர் வையம் உய்ய விவை பாடி யாடுமினே   –
கடல் சூழ்ந்த பூமியிலே
இவற்றைப் பாடுவது ஆடுவதாய்
உஜ்ஜீவித்துப் போகப் பாருங்கோள் –

அன்றிக்கே –
மம சாதர்மம் ஆகதா சர்க்கேபி நோ பஜாயந்தே பிரளயே நவ்ய தந்திச (ஸ்ரீ கீதா ஸ்லோகம் ) -என்கிறபடியே
வரக் கடவதான பிரளயத்திலே புக்கு அழுந்தி
நோவு படாமே நீங்கள் இவற்றைக் கொண்டு பாடுவது ஆடுவதாக
உங்கள் சஞ்சாரத்தாலே ஜகத்தை
உஜ்ஜீவிப்பிக்கப் பாருங்கோள் என்னுதல்  –

(பொலிக பொலிக பொலிக –கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல் மலியப் புகுந்து
இசை பாடி ஆடி யுழி தரக் கண்டோம் -5-2-1-போல் இவரும் இங்கு )

———-

ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.

கைம்முதல் இன்றித் தன்னுள்ளத்து உற்றானாய் நோக்கி
வெம் நரகை நீக்க மிக்கானாய்க் கணபுரம் நிற்பார்க்கு
அல்லால் பிறர்க்கு இன்மை தான் பகரும் சீர்க் கலியன்
சொல் தேன் பருகு வண்டாய் -79-

நிர்ஹேதுகமாக -உற்றானாய் வளர்த்து என்னுயிராகி நின்ற முதல்வன்
உற்றான் -ஒழிக்க ஒழியாத நவவித சம்பந்தம் உண்டே
கண்ணபுரம் ஓன்று உடையானுக்கு அடியேன் ஒருவர்க்கு உரியேனோ -அநந்யார்ஹத்வம் –

————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பெரிய திருமொழி-8-8—ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம்-

May 18, 2014

ஆழி எழ -திருவாய் மொழியில் அவதாரங்கள் அனுபவம்
அங்கு தனக்குக் காட்டிய அடைவில்
இங்கு மத்ஸ்ய அவதாரம் தொடங்கி க்ரமமாக அனுபவிக்கிறார்
தொண்டீர் உய்யும் வகை அறிந்தேன் -ப்ராபகம் -என்று உபதேசம் அநிஷ்டம் நிவ்ருத்தி பூர்வகமாக
கீழே அதுவே ப்ராப்யம் -மலி புகழ் கண்ணபுரம் என்று அனுசந்தித்தார்
அவ்வளவும் இல்லாமல் அவன் தானே உம்மைப் பெற வேணும் என்று திரியா நின்றான்
நீர் அவன் படிகளை இத்தேசத்தில் கண்டேன் என்று ஞானம் ஏற்பட இதுவே சாதனம் என்று அனுசந்திக்கிறார் –
என்று சங்கதி –

அநிஷ்ட நிவாரகத்வமும் அறிந்து
ப்ராப்யமும் அறிந்து
ஞான சாதனமும் அறிந்து
அவன் படிகளைக் காணீர் என்று உபதேசித்து அருளுகிறார் –

வானோர் பிரவேசம் –

திருக் கண்ண புரம் பிராப்யம் என்றார் கீழ் –
நமக்கு பிராப்யம் என்னும் அளவேயோ
அவன் அநாதி காலம் எதிர் சூழல் புக்கு
தட்டித் திரிய
நாம் அத்தை அறியாதே இருந்து
திரிந்த நாளிலே
இழவு  எல்லாம் தீரும்படியான தேசம் அன்றோ –
என்கிறார்  –

————————————————–

வானோர் அளவும் முது முந்நீர் வளர்ந்த காலம் வலி யுருவில்
மீனாய் வந்து வியந்துய்யக் கொண்ட தண் தாமரைக் கண்ணன்
ஆனா வுருவிலானா யவனை யம்மா விளை வயலுள்
கானார் புறவில் கண்ண புரத்தடியேன் கண்டு கொண்டேனே —8-8-1-

முது முந்நீர் -பழைய சாஹரம் -ஆற்று நீர் வேற்று நீர் ஊற்று நீர்
வளர்ந்த காலம் -பிரளய காலத்தில்
வலி யுருவில்-மிடுக்கான உருவில்
வியந்து -வேறுபட்ட -ஆச்சர்யப்படும் படி -காவலுக்கு வைத்த கடலே அழிக்கும் காலம் அன்றோ
உய்யக் கொண்ட -ஜகாத் ரக்ஷணம் பண்ணி அருளும்
ஆனா வுருவில் -அழியாத உருவில் –
ஆனாயவனை -இடையன் உருவில்

வானோர் அளவும் முது முந்நீர் வளர்ந்த காலம் வலி யுருவில் மீனாய் வந்து –
தேவர்கள் எல்லை அளவும் செல்லக் கடல் வெள்ளம்
பரந்த நாள்
அத்தை அடைய தன்னுடைய ஒரு   செலுவிலே அடக்க வல்ல
மிடுக்கை உடைய மத்ஸ்யமாய் வந்து –

வியந்துய்யக் கொண்ட –
நாம் ரஷகமாக விட்ட கடல் தானே பாதகம் ஆவதே
இருந்த படி என் விஸ்மயப்பட்டு -என்னுதல் –
அன்றிக்கே
வேறுபட்டு ஜகத் காரண பூதனான தான்
ப்ரஹ்மாதி அளவிலே தன்னை அமைய விட்டால்
தான் நின்ற நிலைக்கு இது சேராதாய் இருக்கும் இறே –
(இணைவனாம் -ஸஜாதீயனாக -ஸூலபனாய்
சர்வ பிரகாரியாய் சர்வ சரீரீயாய் இருந்தும் எந்நின்ற யோனியுமாய் பிறந்து )
அங்கனும் அன்றிக்கே –
விஜா தீயமான வடிவை உடையவன் ஆகையாலே
வந்த நெடு வாசியைச் சொல்லிற்று ஆகவுமாம் –

தண் தாமரைக்கண்ணன் –
மத்ஸ்ய கமல லோசன -என்னக் கடவது இறே –

ஆனா வுருவிலானா யவனை யம்மா விளை வயலுள் –
சதா ஏக ரூபமான வடிவை
இதர சஜாதீயமாக்கிக் கொண்டு வந்து அவதரித்தவன் –
(சதைக ரூப ரூபாயா -ஸ்வரூபமும் உருவமும் மாறாதவை அன்று )
ஆனாத வுரு -கெடாத வுரு என்றபடி –
அழகியதாய்
பரந்து இருந்துள்ள வயலை உடைத்தாய்  –

கானார் புறவில் கண்ண புரத்து
கானார்ந்து இருந்துள்ள பர்யந்தத்தை உடைத்தான
திருக் கண்ண புரத்திலே –
ஒரு புறம் காடாய் இருக்குமா போலே காணும் –
(கீழே-8-7-10- ஒரு புறம் கடலாய் இருக்குமா போலே காணும் என்று பார்த்தோம் )

அடியேன் கண்டு கொண்டேனே –
சேஷ பூதனான நான் காணப் பெற்றேன் –
(மத்ஸ்ய மூர்த்தி என்ன ஞானத்துக்கு சாதனமாக இத்திவ்ய தேசம் என்றதாயிற்று
வேத பிரதானம் )

—————————————————–

ஜகத் ரக்ஷணம் ஸ்ரீ கூர்மாவதாரம்
எதிர் சூழல் புக்கு -ஞானம் பிரதானத்துக்கு கீழே –
வேதம் பிரதானம் பண்ணி அருளிய மத்ஸ்ய அவதாரம் -அறிந்த படி
சகல பாரங்களை -ரஷா பாரம் -தாங்கி அருளிய அவதாரம் அறிந்த படி –
நமது ரக்ஷண பரம் ஸகல பாரங்களிலும் மேலானவை அன்றோ –
கடல் கடைந்து அமுதம் கொண்ட அன்று மந்த்ரம் மலை அழுந்தாமல் ரக்ஷித்து அருளிய அவதாரம்

மலங்கு விலங்கு நெடு வெள்ளம் மறுக அங்கோர் வரை நட்டு
இலங்கு சோதி யாரமுதம் எய்தும் அளவோர் ஆமையாய்
விலங்கல் திரியத் தடங்கடலுள் சுமந்து கிடந்த வித்தகனை
கலங்கல் முந்நீர்க் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே–8-8-2-

விலங்கல்-மந்த்ர பர்வதம் –
இலங்கு சோதி -பிரகாசிக்கும் -போகும் பிராணனையும் தக்க வைக்கும் ஜோதி உண்டே –
எய்தும் அளவும் -அமுதம் கிளர்ந்து வரும் வரை –
வித்தகனை-ஆச்சர்ய பூதனை –
கலங்கல் முந்நீர்-அமுதம் கிடைத்த திருப்பாற் கடலையும் -இங்குள்ள கடலையும் சொன்னவாறு –
ஆராவமுதம் இங்கே கிடைக்கப் பெற்றதே

மலங்கு விலங்கு நெடு வெள்ளம் மறுக அங்கோர் வரை நட்டு –
ஜல ப்ராசுர்யம் உள்ள இடத்திலே போலே காணும்
மலங்குகள் தான் வர்த்திப்பது –
உள்ளுக் கிடந்த பதார்த்தங்கள் அடங்கலும் அங்கே இங்கே  தடுமாறும் படி  கடல் குழம்ப
அங்கு ஆழத்துக்கு அவதி இல்லாத இடத்தில் மலையை கொடு புக்கு நிறுத்தி –

இலங்கு சோதி யாரமுதம் எய்தும் அளவோர் ஆமையாய்
போன பிராணங்களை மீட்க்கைக்கு ஈடான
தேஜஸ்சை உடைத்தான அம்ருதமானது தோற்றும் அளவும்
நீருக்கு இறாயாதாய வடிவை உடைய
ஆமையாய்-

விலங்கல் திரியத் தடங்கடலுள் சுமந்து கிடந்த வித்தகனை –
மலை திரிந்து வரும்படியாக பரப்பை உடைத்தான கடலிலே
அதுக்கு தாரக பூதனாய்க் கொண்டு
கிடந்த விஸ்மய நீயனை –

கலங்கல் முந்நீர்க் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே
கடல் ஒரு புறமாய் இருக்கும் போலே   –

—————————————–

ஸ்ரீ வராஹ நாயனார் திரு அவதார அனுபவம் இதில்
பாரங்களை சுமக்கும் படியே அன்றிக்கே
சம்சார பிரளயத்தில் இருந்து எடுத்து அருளும் -ஏனத்துருவாய் கிடந்த
ஞானப்பிரானே நான் கண்ட நல்லதுவே –
கோல வராஹம் ஒன்றாய் கோட்டிடைக் கொண்ட அம்மான்
ஞான வேத பிரதானம் -பாரங்கள் சுமந்து -மட்டும் இல்லாத இதன் ஏற்றம்

பாராரளவும் முது முந்நீர் பரந்த காலம் வளை மருப்பில்
ஏரார் உருவத் தேனமாய் எடுத்த வாற்றல் அம்மானை
கூரார் ஆரல் இரை கருதிக் குருகு பாயக்   கயல் இரியும்
காரார் புறவில் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே –8-8-3-

பாராரளவும் முது முந்நீர் பரந்த காலம் வளை மருப்பில்-
பூமிப் பரப்பு அடைய
கடல் கொண்ட காலத்து
வளைந்த கொம்பை கொண்ட ஏனமாய் –

ஏரார் உருவத் தேனமாய் –
ஆயிரம் பண்ணை பிரளயம் கொண்டால் ஆகாதோ
இப்படி அழகு நிறைந்த வராஹ விக்ரஹத்தை
ஒரு கால் காணலாம் ஆகில் –

எடுத்த வாற்றல் அம்மானை-
அண்ட பித்தியிலே சென்று சேர்ந்த பூமியை
இடந்து எடுத்துக் கொண்டு  ஏறுகைக்கு ஈடான
வலியை உடைய சர்வேஸ்வரனை –

கூரார் ஆரல் இரை கருதிக் குருகு பாயக்   கயல் இரியும்-
கூறிய வாய் அகலை உடைத்தான குருகானது
ஆரலை ஆமிஷம் என்று புத்தி பண்ணிப் பாய
கயல்கள் ஆனவை இரியா நிற்கும் –

காரார் புறவில் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே-
மேகங்களின் உடைய
திருக் கண்ண புரத்திலே –

————————————————

சம்சார ப்ரளயத்தில்தம்மை எடுத்து அருளிய அளவு அன்றிக்கே –
சம்சார பீஜமான அஹங்காராதிகளை ஒழித்து பிறவிச் சூழலில் இருந்து மீட்டு அருள
ஹிரண்ய கசிபு தானே அகங்கார மமகார உருவம்
நகாக்ரத்தாலே போக்கி அருளிய ஸ்ரீ நரஸிம்ஹ அவதார அனுபவம் –
பாலும் சக்கரையும் சேர்ந்தால் போலே அழகியான் தானே அரி யுருவம் தானே –

உளைந்த வரியும் மானிடமும் உடனேத் தோற்ற ஒன்றுவித்து
விளைந்த சீற்றம் விண் வெதும்ப  வேற்றொன் அகலம் வெஞ்சமத்து
பிளந்து வளைந்த வுகிரானைப் பெரும் தண் செந்நெல் குலை தடிந்து
களம் செய் புறவில் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே –8-8-4-

உளைந்த-உளையப் பண்ணின
அகலம் பிளந்து வளைந்த வுகிரானை –மார்பைப் பிளந்ததால் திரு உகிர் வளைந்ததா –
திரு உகிர் வளைந்து இருந்ததால் பிளந்தானா என்ன ஒண்ணாத படி

உளைந்த வரியும் மானிடமும் உடனேத் தோற்ற ஒன்றுவித்து
தன்னுடைய தோற்றரவிலே
சத்ரு பஷமானது குலைந்து ஓடும்படி இருக்கிற சிம்ஹமும்
உளை மயிருமாய்
மனுஷ்ய வேஷமும்
சேராத வடிவு இரண்டும் சேர்ந்து தோன்ற –

விளைந்த சீற்றம் விண் வெதும்ப  –
அப்போது பிறந்த சீற்றத்தைக் கண்டு
ரஷ்ய கோடியிலே அந்வயித்த தேவ லோகம்
எவ்வளவாய்த் தலைக் காட்டுகிறதோ -என்று அஞ்ச –

வேற்றொன் அகலம் வெஞ்சமத்து -பிளந்து வளைந்த வுகிரானைப்-
வேற்றொன் உண்டு -சத்ருவான ஹிரண்யன்
அவனுடைய மார்வை யுத்தத்திலே பிளந்து வளைந்த
திரு வுகிரை உடையவனை –

பெரும் தண் செந்நெல் குலை தடிந்து களம் செய் புறவில் –
பெருத்து அழகியதாய் இருந்துள்ள
செந்நெல் குலைகளை
வயிரத்தை வெட்டுமா போலே வெட்டி
பரிமாற்றம் மாறாத பர்ய்யந்தத்தை உடைத்தான –

கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே  –

————————

தம்முடைய விரோதியை நகாக்கரத்தாலே போக்கி அருளின
அளவு அன்றிக்கே
திருவடிக்கீழ் கொள்ளும் அப்பன் -என்றபடி
ஸ்ரீ வாமன அவதார அனுபவம் இதில் –

தொழு நீர் வடிவில் குறள் உருவாய் வந்து தோன்றி மா வலி பால்
முழு நீர் வையம் முன் கொண்ட மூவா வுருவின் அம்மானை
உழு நீர் வயலுள் பொன் கிளைப்ப ஒரு பால் முல்லை முகையோடும்
கழு நீர் மலரும் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே —8-8-5-

தொழு நீர் வடிவில் குறள் உருவாய்-அனவைரும் தொழும் படியான நீர்மை உடைய வாமன வேஷம் –
மூவா வுருவின்-ஸதா ஏக ரூபம் உடையவன் அன்றோ –
பொன் கிளைப்ப-ஸ்வர்ணம் தானே விளையுமாம்
ஒரு பால் முல்லை முகையோடும் கழு நீர் மலரும்–ஒரு பக்கம் பூக்களும் விகசிக்கும் –
காலை மாலை மலர் சூட்ட வேண்டுமே -கைங்கர்ய உபகரணங்கள் ஸம்ருத்தமாய் இருக்கும் திவ்ய தேசம் –

தொழு நீர் வடிவில் குறள் உருவாய் வந்து தோன்றி மா வலி பால் முழு நீர் வையம் முன் கொண்ட-
அவசா பிரதி பேதிரே-(உத்யோக பர்வம் )என்கிறபடியே-
(எழலுற்று மீண்டும் இருந்தானே துரியோதனனும்
தங்கள் வசம் இழந்து தொழப் பண்ணுமே
ஊராக தீண்டியது அது உலகமாகத் தீண்டியது இது )
கண்டார்க்கு தொழுது அல்லாது நிற்க ஒண்ணாத
வடிவை உடைய வாமன வேஷத்தை உடையவனாய்
வந்து அவதரித்து
கடல் சூழ்ந்த ராஜ்ஜியம் மகா பலியதாய்
அவன் பக்கலிலே தான்  இரந்து
பெற்றானாம் படி பெற்ற –

மூவா வுருவின் அம்மானை –
சதா ஏக ரூபமான விக்ரஹத்தை உடைய சர்வேஸ்வரனை –
தோன்றுகின்ற வாமன வேஷம் அன்று கிடீர் இவனுக்கு
நிலை நின்ற வடிவு -என்கிறார் –

உழு நீர் வயலுள் பொன் கிளைப்ப ஒரு பால் முல்லை முகையோடும் கழு நீர் மலரும்-
உழுகையே ஸ்வபாவமாக உடைத்தான வயலிலே
பொன்னானது வந்து தோற்றும் –
பொன் படு குட்டம் ஆயிற்று –

பொன் படாத இடம் அடைய
முல்லை -கருமுகை -செங்கழுநீர்
இவை எல்லாம் மலரா நிற்கும் ஆயிற்று –

கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே –

—————————————————-

ஸாஸ்த்ர வாஸனை இல்லாமல் ப்ராப்ய ப்ராபக மாக இவனே என்று அறிந்தது
திவ்ய தேசம் மூலமே என்று அருளிச் செய்த பெருமை இவர் ஒருவருக்கே –
இச்சா க்ருஹீத அபிமத அவதாரங்களை அனுபவிக்கிறார் –

தனது அடிக்கீழ் கொள்ளுமவனே அன்றிக்கே
ப்ரக்ருதி ப்ராக்ருதங்களாய் உள்ள அனைத்து பிரதிபந்தங்களையும் போக்க வல்ல -சக்தன் –
ஷத்ரியர் முடித்தமைக்கு இதுக்கு உப லக்ஷணம் –

வடிவாய் மழுவே படையாக வந்து தோன்றி மூ வெழு கால்
படியார் அரசு களை கட்ட பாழியானை அம்மானை
குடியா வண்டு கொண்டு உண்ணக் கோல நீலம் மட்டுகுக்கும்
கடியார் புறவில் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே —8-8-6-

குடியா வண்டு-தாரா புத்ராதிகள் உடன் கூட்டமாக வண்டுகள் –

வடிவாய் மழுவே படையாக வந்து தோன்றி மூ வெழு கால் –
வடித்த வாயை உடைய மழுவே ஆயுதமாக வந்து தோன்றி

(வடித்த-மடித்த கூராக்கிய
இவருக்கு மழு -இருந்தாலும் வில் வித்யை கர்ணனுக்கு கற்றுக் கொடுத்தார்
பரசு ராமருக்கு கலப்பை
நரசிம்மருக்கு திரு உகிர்
ராமனுக்கு கோதண்டம்
கண்ணனுக்கு கொல்லா மாக்கோல் மட்டுமே கொண்டு -பசு மேய்க்க )

இருபத்தொரு படி கால் பூமி நெளியும்படியாக
வந்து தோன்றின –

படியார் அரசு களை கட்ட பாழியானை அம்மானை –
ஷத்ரிய குலத்தை அறுத்துப் பொகட்ட
வலியை உடைய சர்வேஸ்வரனை –

(பாழி அம் தோளுடை பத்ம நாபன் -பாழி -வல்லமை
அம்மான் -ஸர்வேஸ்வரன் ஆவேசித்து இருக்கும் கௌண அவதாரம்
பரசுராமர் உபாஸ்ய விஷயம் அல்ல-முக்ய அவதாரம் இல்லையே
போற்றும் புனிதன் -ஸ்தோத்ரம் பண்ணும் படி -)

குடியா வண்டு கொண்டு உண்ணக் கோல நீலம் மட்டுகுக்கும் –
பசல்களோடும்
குட்டிகளோடும்
வண்டுகள் வந்து புஜிக்க-
பின்னையும் தர்ச நீயமான  நீலமானது
மதுவை பிரவஹியா நிற்கும் –
கடலிலே ஒரு சிறாங்கையை  புஜிக்கும் காட்டில்
கடல் வற்றாது இறே-

கடியார் புறவில் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே –
பரிமள பிரசுரமான பர்யந்தத்தை உடைய
திருக் கண்ண புரம் –

———————————————

முன் இராமன் -இங்கு தானாய் -பின்பு -பின்னும் ராமனாய் -சக்ரவர்த்தி திரு மகன் -பூர்ண அவதாரம் அன்றோ –
சகல பிரதிபந்தங்களையும் போக்கும் அளவு அன்றிக்கே
தன்னையே நாளும் வணங்கித் தொழும் படி சேஷித்வம் தோன்ற-நம் பரனை- அவதரித்து அருளிய
பரம் தத்வம் -பரஞ்சோதி -பரமாத்மா -பர ப்ரஹ்மம் -பராயணம் -பூர்ண சேஷி -வணங்கிலி ராமன்
உண்மையாக அனைவரையும் வணங்கி கிம் கர என்றும் சமுத்திர ராஜனையும் சரண் அடைந்தாராகிலும்
அது அவதாரத்துக்குத் தக்க நடிப்பு -சேஷித்வம் ஸ்புடம் அநேக இடங்களிலும் உண்டே –
ஆகவே வையம் எல்லாம் உடன் வணங்க வணங்கா மன்னனாய்த் தோன்றி-ஸஹஸ்ர நாம தத் துல்யம் —
ம்ருத ஸஞ்சீவனம் -சேவிக்காதவர் சேவித்தால் விசுவாமித்திரர் வசிஷ்டர் பெருமை அறியலாம் -ஆச்சார்யர் பெருமை காட்டவே –
தயரதற்கு மகன் அன்றி மற்று இல்லை தஞ்சம் -சக்ரவர்த்தி திரு மகன் என்றே உகக்குமவன்
ரஞ்சனீ அஸ்ய விக்ரமன் சத்ருக்களும் புகழும் படி –
நாம் வணங்கும் மன்னர்களாக -அடி சூடும் அரசு அல்லால் மற்று ஒன்றை எண்ணாமல் –
ந நமேயம் -என்று இருக்கக் கூடாதே

வையம் எல்லாம் உடன் வணங்க வணங்கா மன்னனாய்த் தோன்றி
வெய்ய சீற்றக் கடியிலங்கை குடி கொண்டோட வெஞ்சமத்து
செய்த வெம்போர் நம் பரனைச் செழும் தண் கானல் மண நாறும்
கைதை வேலிக் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே –8-8-7-

வையம் எல்லாம் உடன் வணங்க வணங்கா மன்னனாய்த் தோன்றி –
உகந்தாருடன் உகவாதாருடன்
வாசி அற
தன்னை வணங்க
தான் ஒருவனையும் வணங்காத ராஜனாய்த் தோன்றி –
(இசைவித்து தனது தாள் இணைக் கீழ் இருத்தும் அம்மான் அன்றோ
தாரை மண்டோதரி சூர்ப்பணகை -இத்யாதிகளும் ஸ்தோத்ரம் பண்ணும் படி
தென் இலங்கை கோமானைச் செற்ற மனதுக்கு இனியான்
அழகு குணம் வீரம் சிஸ் ரூஷை -லோகங்களை ஸத்யத்தால்
வெல்லுமவன் )

வெய்ய சீற்றக் கடியிலங்கை குடி கொண்டோட வெஞ்சமத்து -செய்த வெம்போர் நம் பரனைச்-
வெவ்விய சீற்றத்தை உடைய
கடியிலங்கை குடி கொண்டோட
யுத்தத்திலே வெவ்விய போரை பண்ணின
நம்முடைய ஸ்வாமியை –
(ஒருவர் இருவர் மூவர் என்று உருவு கரந்து வெந்நரகம் சேரா வகையே சிலை குனித்த வீரன் )

செழும் தண் கானல் மண நாறும் கைதை வேலிக்
அழகிய குளிர்ந்த நெய்தல் நிலத்தையும்
பரிமளத்தையும் உடைத்தான தாழையையும்
வேலியாக உடைத்தான –

கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே  –

——————————————————–

அக்ரூர ஆழ்வான் பலராமன் ஆழ்வான் லஷ்மணன் ஆழ்வான் சொல்வது இல்லை -கைங்கர்ய பிரதானர்கள்
பரசுராம ஆழ்வான் சொல்கிறோம்
பலராம ஆழ்வான் -கௌண அவதாரம் இவரும்
பரதாழ்வான் சத்ருக்ந ஆழ்வான் பிரஹலாத ஆழ்வான் விதுர ஆழ்வான் சொல்வோம்
ஆதி சேஷன் அவதாரம் -லஷ்மணனும் பலராமனும் -ஆனால் தனது சக்தியையும் ஆவேசமாகக் கொண்டதால்
இவர் தசாவதாரத்தில் -கண்ணனுக்கு நம்பி மூத்த பிரானாகக் கொண்டார் –

ராஜா -இடுப்பில் சாவிக் கொத்தும் -ஒற்றைக் குழையும் -குண்டலம் உண்டே -ஒரு காதில் நீல மணியும் இருக்கும்
சவ்ரி ராஜர் -நாகை அழகியார் -ராஜ மன்னார் -காட்டு மன்னார் -சேவிக்கிறோமே
குழை -காது ஆபரணம்
கலப்பை மூடி இருப்பதால் ஒரு காது மட்டுமே பலராமன் இடம் சேவிக்கிறார் –

கையும் கலப்பையுமாகப் பிறந்த நம்பி மூத்த பிரான் விஜயத்தில்
தாம் தோற்று ஜிதந்தே என்னப் பண்ணிய அவதாரம் என்று மங்களா சாசனம் –

ஒற்றைக் குழையும் நாஞ்சிலும் ஒரு பால் தோன்றத் தான் தோன்றி
வெற்றித் தொழிலார் வேல் வேந்தர் விண் பால் செல்ல வெஞ்சமத்து
செற்ற கொற்றத் தொழிலானைச் செந்தீ மூன்றும் இல்லிருப்ப
கற்ற மறையோர் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே –8-8-8-

ஒரு பால் ஒற்றைக் குழையும் ஒரு பால் நாஞ்சிலும் தோன்ற-என்றபடி –

ஒற்றைக் குழையும் நாஞ்சிலும் ஒரு பால் தோன்றத் தான் தோன்றி –
ஒரு காது குழையும்
கலப்பையும் ஒரு கால்
தோன்ற தான் வந்து –
( கரூர் அருகில் தான் தோன்றி மலையில் தான் தோன்றி பெருமாள் சேவை சாதிக்கிறார் )

வெற்றித் தொழிலார் வேல் வேந்தர் விண் பால் செல்ல வெஞ்சமத்து -செற்ற கொற்றத் தொழிலானைச்-
வெற்றியே தொழிலாக உடைய
வேலை உடைய ராஜாக்கள் விண்ணிலே செல்ல
யுத்தத்திலே செற்ற வெற்றியை
தொழிலாக உடையவனை –

செந்தீ மூன்றும் இல்லிருப்ப கற்ற மறையோர்-
த்ரேதாக்னிகள் தங்கள் கிருஹங்களிலே இருக்கை  –
த்ரேதாக்னி முகத்தாலே பகவத் சமாராதானம் பண்ணுகையாலே
ஹவிஸ்ஸைக் கொள்ள தங்கள் கிருஹங்களுக்கு உள்ளே
சர்வேஸ்வரன் எழுந்து அருளி இருக்கும் படி
கற்ற பிராமணர் –
(குளித்து மூன்று அனலை ஓம்பும் -கற்ற மறையோர் -அனுஷ்டான பர்யந்தம் –
கற்றபடியே ஆராதனையும் செய்கிறார்கள் )

கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே-

——————————————

ப்ருந்தாரண்ய நிவேசன் -கோவர்த்தன தாரி -த்வாரகாதீசன் –
இருட்டிலே பிறந்து -இருள் அன்ன மா மேனி
தம்மை ஜிதம் என்னப் பண்ணின நம்பி மூத்த பிரான் அனுபவம் கீழே
தம்முடைய சகல பாரங்களை நீக்க –
மண்ணின் பாரம் நீக்கவே பிறந்த ஸ்ரீ கிருஷ்ணன் அனுபவம் இதில்
பஞ்ச கிருஷ்ண க்ஷேத்ரங்களில் ஓன்று அன்றோ இது –
துவரி-வாய் கூம்ப -பாரம் மிக்கு இருப்பதைப் போக்கி உஜ்ஜீவனம்

துவரிக் கனிவாய் நில மங்கை துயர் தீர்ந்து உய்யப் பாரதத்துள்
இவரித் தரசர் தடுமாற இருள் நாள் பிறந்த வம்மானை
உவரியோதம் முத்துந்த ஒரு பால் ஒரு பால் ஒண் செந்நெல்
கவரி வீசும் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே —8-8-9-

இவரித்த -எதிரிட்ட

துவரிக் கனி வாய் நிலமங்கை துயர் தீர்ந்து உய்யப் –
இலவந் துவரிகள் போலேயும்
கோவைக் கனி போலேயும்
இருக்கிற வாயை உடைய
நில மங்கை கிலேசம் கெட்டு உஜ்ஜீவிக்கைக்காக

பாரதத்துள் இவரித் தரசர் தடுமாற –
பாரத சமரத்திலே இவரித்தர்சர் -என்னுதல்-
அன்றியே
பாரதத்திலே அரசர் தடுமாற இவரித்து -என்னுதல்
இவர்தல் -ஏறுதல் –

இருள் நாள் பிறந்த வம்மானை –
அபர பஷத்திலே
அஷ்டமியிலே
நள் இருளிலே
பிறந்தவனை –

உவரியோதம் முத்துந்த ஒரு பால் ஒரு பால் ஒண் செந்நெல் கவரி வீசும் –
ஓர் அருகு கடல் திரையானது
முத்தைத் தள்ள
ஓர் அருகு அழகிய செந்நெல் ஆனது
கவரி எறட்டும்-( வீசும் )

கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே –

————————————–

மீனோடு ஆமை கேழல் அரி குறளாய் முன்னும் ராமனாய்த்
தானாய் பின்னும் ராமனாய்த் தாமோதரனாய்க் கற்கியும்
ஆனான் தன்னை கண்ண புரத் தடியன்  கலியன் ஒலி செய்த
தேனார் இன் சொல் தமிழ் மாலை செப்பப் பாவம் நில்லாதே —8-8-10-

மீனோடு ஆமை கேழல் அரி குறளாய் முன்னும் ராமனாய்த்
தானாய் பின்னும் ராமனாய்த் தாமோதரனாய்க் கற்கியும் ஆனான் தன்னை
மத்ஸ்யாதி தசாவதாரங்களையும் பண்ணி
ஜகத் ரஷணம் பண்ணின தன்னை –

(1-வேதம் கொடுத்து ரக்ஷணம் மத்ஸ்யாவதாரம்
2-அமுதம் கொடுத்து ரக்ஷணம் கூர்மாவதாரம்
3-பக்தர் – பூமா தேவியை -இடந்து -சம்சார பிரளயத்தில் இருந்து ரக்ஷணம் வராஹ அவதாரம்
4-பக்த விரோதிகளை அழித்து ரக்ஷணம் நரஸிம்ஹ அவதாரம்
5-சொத்தை -இரந்தும் -ரக்ஷணம் -ஸ்வ ஸ்வா தந்தர்யம் போக்கி ரக்ஷணம் வாமன அவதாரம்
6-ப்ரக்ருதி பிராகிருத பிரதிபந்தங்கள் போக்கி ரக்ஷணம் பரசுராம அவதாரம்
7-மரியாதை ஸ்தாபித்து தர்ம ரக்ஷணம் ராமாவதாரம்
8-துஷ்ட நிரஸனம் பண்ணி ரக்ஷணம் பலராம அவதாரம்
9-பூமி பாரம் போக்கி ரக்ஷணம் தாமோதர அவதாரம்
10-கலி போக்கி கிருத யுகம் நாட்டி ரக்ஷணம் கற்கி அவதாரம் )

கண்ண புரத் தடியன் –
திருக் கண்ண புரத்திலே கண்டு
அடிமை புக்க –

கலியன் ஒலி செய்த தேனார் இன் சொல் தமிழ் மாலை
ஆழ்வார் அருளிச் செய்த
தேனோடு ஒத்த நல்ல சொல்லை உடைய
தமிழ் மாலை சொல்ல

செப்பப் பாவம் நில்லாதே
பாவமானது போம் –

———–

ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.

வான் மண் உய்வான் தான் அவதாரம் பத்து செய்யும்
வானவனைக் கண்ணபுரத்துள் கலியன் கோனாகக்
கண்டு கொண்டேன் என்னும் சொல் உய்வார் கருத்தினில்
திண்ணமதாம் ஞானக்கை -78-

ஆழ்வாருடைய ஈரச் சொற்களே உய்ய நினைப்பார்க்கு நிச்சயமான ஞானக்கை –

————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பெரிய திருமொழி-8-7–ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம்-

May 18, 2014

கீழே ப்ராப்யமாக -உய்யும் வகை கண்டீர் என்று அருளிச் செய்தவர்
இதில் ப்ராப்யம் என்று விவஷித்து சங்கதி அருளிச் செய்கிறார் –

வியமுடையின் -பிரவேசம் –

வருந்தாது இரு -என்றார் –
என்ன வாசி கண்டு வருந்தாது இருப்பது என்ன –
பரமபதம் நமக்கு பிராப்யம் ஆகிறதும்
பிராப்யன் ஆனவன் நித்ய வாஸம் பண்ணுகையாலே அன்றோ –

ஆன பின்பு
பிராட்டிமாரோடு
சேதனரோடு
ப்ரஹ்மாதிகளோடு
வாசி யற-எல்லாருக்கும் ஒக்க பிராப்யன் ஆனவன் தான்
தனக்கு பிராப்யம் என்று விரும்பி வர்த்திக்கிற தேசம்
திருக் கண்ண புரம் –

ஆன பின்பு
நமக்கும் அவ்விடமே பிராப்யம் என்று
அத் தேசத்தை அனுபவிக்கிறார் –

————————————————————-

விய முடை விடையின முடை தர மட மகள்
குய மிடை தட வரை யகல மதுடையவர்
நய முடை நடையன மிளையவர் நடை பயில
கய மிடை கண புர மடிகள் தமிடமே —8-7-1-

வியம் உடை விடையினம் உடை தர மட மகள்
குயம் இடை தட வரை யகலம் அதுடையவர்
நயம் உடை நடையனம் இளையவர் நடை பயில
கயம் இடை கண புர மடிகள் தம் இடமே -8-7-1-

விய முடை விடையின முடை தர-
வியம் -என்று வேறுபாடு
அதாகிறது -கம்ச ப்ரேரிதமாய் வந்தவை இறே-

(வியம் உடை -வேறுபாட்டை உடைய -கம்சன் ஏவாமலே வந்தவை –
கும்பன் வைத்தவை அன்றோ இவை -கன்யா சுல்கம் –
கம்சனால் அனுப்பப்பட்டவை என்றுமாம் )

அன்றிக்கே
வியம் -என்று ஒக்கமாய் -பயாவஹமாம் படி
மலை போலே பெரிய வடிவை உடைத்தாய் இருந்த படியைச் சொல்லுதல் –
இப்படி இருக்கிற வ்ருஷபங்கள் ஏழையும் பசளைக் கலம் -பச்சைப் பானை -போலே   உடைய –

மட மகள் குயமிடை தடவரை யகலம துடையவர் –
ஆத்ம குணோபேதையான
நப்பின்னை பிராட்டி உடைய
குயங்கள் உண்டு -குசங்கள் -திரு முலைத் தடங்கள் –
அவை நெருக்கிகிற மலை போலே
அகன்ற திரு மார்பை உடையவன் –
(ஆத்ம ரூப குணங்கள் இரண்டையும் சொன்னவாறு )

அன்றிக்கே
குயமுடை -என்ற பாடம் ஆன போது
குயமுடைத் தடவரை என்கிறதை மெலித்து
குயமுடை தடவரை -என்று கிடக்கிறது –

நயமுடை நடையன மிளையவர் நடை பயில-
கண்டார்க்கு ஆகர்ஷ்கமாம் படி
தர்ச நீயமான நடையை உடைத்தான அன்னங்கள் ஆனவை
அங்குத்தை ஸ்திரீகள் உடைய நடையிலே
குருகுல வாஸம் பண்ணா நிற்கும் ஆயிற்று –
(நயமடை நடையன-நயம் மடம் -நய மட -பாட பேதம்
பெடையோடு அன்னம் நடை பயிலும் -திரு நறையூர் பதிகத்திலும் இதே போல் உண்டே )

கயமிடை கண புர மடிகள் தமிடமே –
பொய்கைகளாலே நெருங்கி இருந்துள்ள
திருக் கண்ண புரம்
நமக்கு ஸ்வாமி யானவனுடைய
வாசஸ் ஸ்தானம்   –

——————————————–

கீழே நப்பின்னைப்பிராட்டியும் தாமுமாய் இருக்கும் -சேர்த்தியில் அடிமை செய்யும் மதிமுக மடந்தையர் –
இங்கும் உண்டாகையாலே ப்ராப்ய பூமி இதுவே என்று நாம் அறியும் படி -அனுபவம்
இதில் இவ்விருவருமான சேர்த்தியிலே அடியார் குழாங்கள் சேர்ந்து கைங்கர்யம் செய்யும் படியை அனுபவிக்கிறார்
அடியவர் அளவிய பதங்களைக் கடாக்ஷித்து சங்கதி –

இணை மலி மருதி னொடெரு திறவிகல் செய்து
துணை மலி முலையவள் மணமிகு கலவியுள்
மண மலி    விழவினொடடிய வரளவிய
கண மலி  கண புர மடிகள் தம் இடமே –8-7-2-

இணை மலி மருது எருதினொடு இற இகல் செய்து
துணை மலி முலையவள் மணமிகு கலவியுள்
மண மலி    விழவினொடு அடியவர் அளவிய
கண மலி  கண புரம் அடிகள் தம் இடமே –8-7-2-

மண மலி-கல்யாண குணங்கள் மேல் மேல் வரும் உத்சவம் -ஸ்வயம்வரம்
கை கோத்து செல்லும் கோஷ்ட்டி என்றுமாம்
இணை மலி மருதி னொடெரு திறவிகல் செய்து–இணை மருது இற எருதினொடு இகல் செய்து -இகல் யுத்தம்

இணை மலி மருதி னொடெரு திறவிகல் செய்து
இணை மலி மருது இற-எருதினோடு இகல் செய்து –
சேர்த்தி மிக்கு இருந்துள்ள
மருதுகள் ஆனவை இரண்டும்
தன்னில் ஓன்று என்னலாம் படி க்ருத் சங்கேதமாய்
பொருந்தி நிற்கிற மருதுகள்
இவன்  தவழ்ந்து போகிற போக்கிலே இற்று விழும்படி –

எருதினோடு இகல் செய்து – துணை மலி முலையவள் மணமிகு கலவியுள்-
ருஷபங்களோடே கூட யுத்தம் பண்ணி
சேர்த்தி அழகு மிக்கு இருந்துள்ள முலைத் தடங்களை உடைய
நப்பின்னைப் பிராட்டி உடைய ஸ்வயம்வரத்தில் உண்டான
சம்ஸ்லேஷம் பெறுகைக்காக –

மண மலி  விழவினொடடிய வரளவிய கண மலி  கண புர மடிகள் தமிடமே –
கல்யாணங்கள் மேன் மேல் உண்டாகிற திரு நாளிலே
அன்றிக்கே
மணம் -என்று -கை கோக்கைக்கு பேராய்
நெருங்கக் கோத்துக் கொண்டு சேவித்து நிற்கிற  திரு நாளில்  –

அடியவர் அளவிய கண மலி கண புரம் –
ஸ்ரீ வைஷ்ணவர்கள் உடைய நெஞ்சு கலந்த திரள்
மிக்கு இருந்துள்ள திருக் கண்ண புரம் –
மணம் மிக்க உத்சவத்துடனே  அடியவர் கூடின -என்றுமாம் –

மண மலி    விழவினொடு –
அடியவர் அளவிய கணம் மலி  கண புரம்
இணை மலி மருது நடந்து
துணை மலி முலையவள் மணமிகு கலவியுள்-ஆசையாலே
எருதினோடு இகல் செய்து இருக்கிற
அடிகள் தம் இடமே -என்று அன்வயம் –

————————————————

கீழே அடியார்-ஸ்ரீ வைஷ்ணவ ஸம்ருத்தி உடைய தேசம் என்று அனுபவித்தார்
ஆளவந்தார் அருளிச் செய்த படியே -சம்சாரம் -அவிவேகம் கநாந்த -திங் முகே பஹு தா சந்தத
துக்க வர்ஷணி யாய் இருக்க ப்ராப்ய பூமி என்னலாமோ –
அனந்த கிலேச பாசனம் -லீலா விபூதி அன்றோ -எண்ணில்-
பாலை வனத்தில் சோலை போல் -கலி யுகம் நீங்கி க்ருத யுகம் போல்
அரியனவற்றை செய்து அவ்வருஷத்தைப் போக்குவான் -துக்க மழை -போல் கல் மழை தடுத்த
கோவர்த்தன தாரி எழுந்து அருளி இருக்க -சங்கை வேண்டாமே
ப்ராப்ய தேசம் என்னக் குறை இல்லையே

புயலுறு வரை மழை பொழி தர மணி நிரை
மயலுற வரை குடை யெடுவிய நெடியவர்
முயல் துளர் மிளை முயல் துளவள விளை வயல்
கயல் துளு கண புர மடிகள் தமிடமே  —8-7-3-

புயலுறு வரை மழை பொழி தர–மேகங்களில் இந்திரன் அதிஷ்டானம் பண்ணி பிரவேசித்து கல் மழை பொழிய
மணி நிரை -கிருஷ்ணனையே ரக்ஷகனாகக் கொண்ட பசுக்கூட்டங்கள்
மயலுற -புத்தியில் மயங்க -சற்றே கலங்கும் அளவுக்கு முன்பே
வரை குடை யெடுவிய நெடியவர்-கோவர்த்தனம் எடுத்து ஜகத் ரக்ஷணத்தில் திரு உள்ளத்தில் கொண்டு பிரார்த்திக்காமலே ரக்ஷிப்பவன்
முயல் துளர் மிளை -முயன்று வயலில் களை எடுக்க
முயல் துள-முயல் துள்ளி வர
வளம் விளை வயல்-கழனிகளில்
கயல் துளு -மத்ஸ்யங்கள் துள்ள

புயலுறு வரை மழை பொழி தர –
மேகத்திலே போய் புக்கொன்றி
அவன் கல் வர்ஷத்தை வர்ஷிக்க
இந்த்ரன் கருத்தை பின் சென்று வர்ஷிக்கும் அத்தனை இறே
மேகங்களில் இந்த்ரன் பிரேவேசித்து -உறு
வரை -கல்  –

மணி நிரை மயலுற வரை குடை யெடுவிய நெடியவர்
தன்னையே ரஷகனாய் உடைத்தாய் இருந்துள்ள
பசு நிரையானது
அறிவு கெட்டு கலங்க  –

மணி -என்று அழகாய்
அதாகிறது
அவனும் ரஷிக்க-தானும் ஒருதலை பற்றுகை அன்றிக்கே
அவனே ரஷகனாம்படி இருக்கை-
(சமித்து பாதி சாவித்ரி பாதியாய் இல்லாமல்
ஈஸ்வர ப்ரவ்ருத்தி விரோதி ஸ்வ ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி இருந்த அழகு )

மலையை குடையாக எடுத்து பரிஹரித்து
ரஷத்தில் தன்னை எண்ணினால்
பின்னை ஒருவர் இல்லாத படி இருக்கிறவர்   –

முயல் துளர் மிளை முயல் துள-
யத்னியா நின்றுள்ள -துளர் உண்டு -களைக் கொட்டு –
அத்தைக் கொண்டு களை பறிக்கிறவர்கள் முகத்திலே
மிளை யுண்டு -சிறு தூறு –
அதில் நின்றும் புறப்பட்ட முயல்கள் ஆனவை
இவர்கள் முன்னே துள்ளும் ஆயிற்று –

வள விளை வயல்-கயல் துளு கண புர மடிகள் தமிடமே-
அழகிய வயலிலே உழுகிறவர்கள் முகத்திலே கயல்கள்
துள்ளா நிற்கும் ஆயிற்று  –

குறிஞ்சி நிலமும்
மருத நிலமும்
கலந்தால் போலே காணும் இருப்பது –

(குறிஞ்சி நிலமும்-மலையும் மலை சார்ந்த இடமாயும்
மருத நிலமும்-வயலும் வயல் சார்ந்த இடமாயும்
கடலும் கடலும் சார்ந்த நெய்தலும் இங்கு உண்டே )

————————————————–

துக்க வர்ஷம் போக்குமவன் இருக்கிறான் ஆகவே ப்ராப்யம் என்றால்
நமக்கு கிஞ்சித் கைங்கர்யம் கிடைத்தால் அன்றோ ப்ராப்யம்
அதுக்குக் குறை உண்டோ
அவன் ஆஸ்ரித கர ஸ்பர்ச த்ரவ்யத்தில் அதி அபி நிவேசம் கொண்டு அன்றோ இங்கு எழுந்து அருளி உள்ளான்
நமக்கு கிஞ்சித் காரம் கொடுத்து அருளவே பிராட்டி உடன் இங்கு –
ஒன்றைப் பத்தாக்கிக் கொடுப்பவள் -கண புர நாயகியும் உண்டே

ஏதலர் நகை செய விளைய வரளை வெணெ
போது செய்தமரிய புனிதர் நல் விரை மலர்
கோதிய மது கரம் குலவிய மலர் மகள்
காதல் செய் கண புர மடிகள் தமிடமே —8-7-4-

நல் விரை மலர்-நல்ல பரிமளம் உடைய புஷ்ப்பம்
கோதிய மது கரம் குலவிய -வண்டுகள் மொய்க்குமே
மலர் மகள்-தாமரையாள்
காதல் செய் -விரும்பி நித்ய வாஸம் -கைங்கர்யம் கொடுத்து அருளவே -ஒன்றை பத்தாக வளர்த்துக் கொடுக்கவே
கண புர மடிகள் தமிடமே —உகந்து அருளி நித்ய வாஸம் செய்து அருளுகிறார்
ஏதலர் நகை செய -சத்ருக்கள் -சிஸூ பாலாதிகள் -ராஜ ஸூய யாகத்தில் கேலி –
இளையவர் அளை வெணெ-ஆயர் சிறுமியர் அளைந்த வெண்ணெயாலே பூர்ணன் ஆனான்
போது செய்து அமுது செய்து –
அமரிய -பூர்ணன்
புனிதர் -வெண்ணெய் உண்ட கண்ணனையும் இத்தையும் சேர்த்த அழகு –
தன்னதான சொத்து அன்றோ வெண்ணெயும் நாமும் -கள்வா –

ஏதலர் நகை செய விளைய வரளை வெணெபோது செய்தமரிய புனிதர் –
சத்ருக்கள் உண்டு -சிசுபாலாதிகள்
அவர்கள் சிரிக்கும் படியாக
பெண்கள் அளைந்த வெண்ணெயை
அக்காலத்திலியே அமுது செய்து
அது தனக்கு தாரகமாய் இருக்கிற இருப்பிலே
புரை யற்று இருக்குமவன் –
(சர்வம் பூர்ணம் ஸஹோம் இவற்றை பெற்றதாலேயே பூர்ணன் ஆனான் –
ஆஸ்ரிதர் கர ஸ்பர்சம் பட்ட த்ரவ்யமே தாரகம் )

நல் விரை மலர் கோதிய மது கரம் குலவிய மலர் மகள் காதல் செய் கண புர மடிகள் தமிடமே –
மிக்க பரிமளத்தை உடைத்தான பூவிலே மது பானம் பண்ணின வண்டுகளானவை
தம்தாம் செருக்காலே அவற்றைக் கோதி  –
அது -ஆத்த சாரமான வாறே -அத்தைவிட்டுப் போந்து
கொண்டாடி சூழ பரவா நின்றுள்ள பூவை
இருப்பிடமாக உடைய பெரிய பிராட்டியார்
விரும்பி வர்த்திக்கிற தேசம் –
புனிதரான அடிகளுக்கு ஸ்தானம் –

————————————————-

கீழ் பெண்களை அளைந்த வெண்ணெயால் பூர்ணன் என்ன –
கிஞ்சித் காரம் நமக்கு கிடைத்தாலும்
அவர்கள் அவனை அல்லது அறியாத செல்வச் சிறுமியர்கள் அன்றோ
நாம் கிஞ்சித் கரிக்கும் போது சாத்ருச ப்ரேமம் இல்லையே
அவன் ப்ரயோஜானாந்தர பரர்களுக்காகவும் தன்னை அழிய மாறி
அளித்தும் செவ்வையாக பரிமாறுபவன் அன்றோ
வாமன ராம அவதார சேஷ்டிதங்கள் அனுபவம்

தொண்டரு மமரரும் முனிவரும் தொழுதெழ
அண்டமொட கலிடமளந்த    வரமர் செய்து
விண்டவர் பட மதிள லங்கை முன்னெரி  யெழக்
கண்டவர் கண புரமடி கள் தமிடமே —8-7-5-

தொண்டரும் அமரரும் முனிவரும் தொழுது எழ-பரம ஸ்ரீ வைஷ்ணவர்கள் ப்ரஹ்மாதி தேவர்கள் சனகாதிகள் –
எல்லா கோஷ்ட்டியாரும் ஆஸ்ரயித்து -பணிந்து உஜ்ஜீவிக்க
நாம் இம்மூன்றிலும் இல்லா விட்டாலும் இவர்களுக்கு அடியவர்களாகி உஜ்ஜீவிக்கலாமே
நித்யர் -சேர்த்து மூன்று வகைகள் அநந்த பத்ம நாபி ஸ்வாமி -மூன்று வாசலாலே சேவை
அண்டமோடு அகலிடம் அளந்து    
அமர் செய்து விண்டவர் பட
மதிள் இலங்கை முன்னெரி  யெழ-தளிகைப் பண்ண மட்டும் முன்பு அக்னி இருக்க –
வாயு புத்ரன் -திருவடியும் அக்னியும் -அண்ணன் தம்பி சேர்ந்ததும் தன்னிலைமை பெற்றதே
கண்டவர் கண புரமடி கள் தமிடமே —இப்படிப்பட்டவர் அன்றோ -ஆகவே கவலைப்பட வேண்டாம்
நாம் தேவர்களிலும் சிறந்த அநந்ய ப்ரயோஜனராக இருந்து உஜ்ஜீவிக்கலாமே

தொண்டரு மமரரும் முனிவரும் தொழுதெழ
ஸ்ரீ வைஷ்ணவர்களும்
ப்ரஹ்மாதிகளும்
சனகாதிகளும்
தொழுது உஜ்ஜீவிக்கும் படியாக –

அண்டமொட கலிடமளந்த    வரமர் செய்து –
அண்டமொடு அகலிடம் அளந்தவர்  அமர் செய்து –
அந்தரிஷத்தோடு
பூமிப் பரப்பை அளந்தவர் –

அமர் செய்து –விண்டவர் பட மதிள லங்கை முன்னெரி  யெழக்  கண்டவர் கண புரமடிகள் தமிடமே –
பூசல் செய்து –
த்விதாபஜ்யேயம் -என்று பொருந்தாமையிலே நின்றவர்கள் முடிய –
ப்ரஹ்மாதிகளும் கூட கணிசிக்க வரிதான ஊரை
அக்னியானது கிளர்ந்து வியாபாரிக்கும் படி பண்ணினவர் –

——————————————————-

அவன் கலந்து பரிமாறும் ஆஸ்ரித வ்யாமுக்தன் ஆனாலும் –
அவன் விட மாட்டாராய் இருந்தாலும்
நாம் விட்டு விட்டால் -ஒரு தலைக்காமமாய் முடிந்து விட்டால்
வந்தவர் எதிர் கொள்ள -வந்து உன் அடியவர் மனம் புகுந்தாலும்
அநாதி கால கர்மங்கள் அடியாக நெஞ்சம் அத்வேஷம் பாராட்டி
இத்தலையிலில் ப்ரேமம் இல்லாமல் போனால் என்ன
அவன் திரு மேனி காதல் கடை புரையும் விளைவிக்கும் அன்றோ
தன் பால் ஆதாரம் பெறுக வைக்கும் அழகன்
கோல மேனி காண வரவே -பாபங்கள் விலகி -ஹ்ருதய முடிச்சுகள் விலகி -நல்ல புத்தி வருமே-
இரு தலைக்காமம் தன்னடையே வருமே –
ருசி ஜனக விபவ லாவண்யம்- வைஷ்ணவ வாமனத்திலே பூர்ணம் திருக்குறுங்குடி -கண்ட பின் –
ருசி விவசர்க்குப் பாதமே சரணாக்கும் ஒவ்தார்யம் வானமா மலையிலே கொழுந்து விடும் –

மழு வியல் படை யுடையவனிடம் மழை முகில்
தழுவிய வுருவினர் திருமகள் மருவிய
கொழுவிய செழு மலர் முழுசிய பறவை  பண்
எழுவிய கண புர மடிகள் தமிடமே —8-7-6-

திருமகள் மருவிய–பெரிய பிராட்டியார் நித்ய வாசம் செய்து அருளுவதால் –
கொழுவிய செழு மலர் – இளமையை உடைத்தாய் அழகிய மலர்களில்
முழுசிய பறவை  பண் எழுவிய -ஆழ்ந்த வண்டுகளின் கானம் மிக்கு உள்ளவாயும்
மழு வியல் படை யுடையவனிடம் -பரசு ஆயுதம் தனக்கு விதேயமாகக் கொண்டவன் கொண்டவன்
மழை முகில்- தழுவிய வுருவினர் –ஜல ஸம்ருத்த மேக ஸ்யாமள திவ்ய மங்கள விக்ரஹம்

மழு வியல் படை யுடையவனிடம் –
மழுவைத் தனக்கு விதேயமான ஆயுதமாக
உடையவனுடைய ஸ்தானம் –

மழை முகில்  தழுவிய வுருவினர் –
மேகம் போலே ஸ்ரமஹரமான
வடிவை உடையவர் –

திருமகள் மருவிய கொழுவிய செழு மலர் முழுசிய பறவை  பண்  எழுவிய கண புர மடிகள் தமிடமே –
பெரிய பிராட்டியார் நித்ய வாஸம் பண்ணுகையாலே
இளைதாய்
கொழுவியதாய்
அழகியதான பூவிலே
முழுகின வண்டின் உடைய
பண் கிளர்ந்த திருக் கண்ண புரம் அடிகள் தம் இடமே   –

—————————–

ஜெகதாகாரம் இதில்
அவன் திரு மேனி காதல் விளைவிக்கும் என்றாலும் -இப்படியே வாதம் செய்யும் நம்மவருக்காக -மேலும் அருளிச் செய்கிறார் –
போந்த காலங்களில் விமுகராக அலைந்து திரிந்த காலங்களை நினைக்கவே கலக்கமும் அச்சமும் வருமே
அத்தசையிலும் அவன் நம்மை விடானே
ஒரு தலைக்காமம் ஒத்துக் கொண்டாலே போதுமே
மெதுவாக மெதுவாக நாம் அவனைப் பாரா விடிலும் அவன் நம்மைப் பார்த்துக் கொண்டே தான் ஏற நாள் பார்த்து இருக்குமவன்
சர்வ வ்யாபகனாய் ஆபி முக்யம் பார்த்து இருப்பவன் அன்றோ –
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே
மேலும் இங்கு வரவே அடியார்கள் உடன் கூடி அனுபவிக்க அனுபவிக்க
ஆனந்த சாகரத்தில் ஆழ்ந்து பழைய வ்ருத்தம் நினைக்கவே விரகு இல்லையே –

பரிதி யொடணிமதி பனிவரை திசை நிலம்
எரிதி யொடென வினவியல் வினர் செலவினர்
சுருதியொ டருமறை முறை சொலு மடியவர்
கருதிய கண புர மடிகள் தமிடமே–8-7-7-

பரிதி யொடணிமதி பனிவரை -ஸூ ர்யன் -சந்திரன் -ஹிமவான் போன்ற குல பர்வதங்கள் –
திசை நிலம் எரிதி யொடென வினவ -திக்குகள் பூமி அக்னி இத்யாதிகளை
இயல்வினர் -இயல்வாக பிரகாரங்களாக -விட்டுப் பிரியாமல் சார்ந்தே இருக்கும்
செலவினர்-செலுத்துதல் -நடத்திப் போவார்
நின்றனர் விருந்தினர் –என்னும் ஓர் இயல்வினர் -ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகள் இவனது அதீனமே
சுருதியொ டருமறை முறை -ஸூரங்களுடன் அரிதான வேதங்களை முறையாக
வேத தாத்பர்யம் அறிந்து சேஷ சேஷி பாவம் அறிந்த ஸ்ரீ வைஷ்ணவர்கள் -நீதி வானவர் போல்
சொலு மடியவர்-சொல்லும் ஸ்ரீ வைஷ்ணவர்கள்
கருதிய -ப்ராப்யமாகக் கருதிய -இது தானே இத்திருமொழிக்கு தாத்பர்யம்

பரிதி யொடணிமதி பனிவரை திசை நிலம்- எரிதி யொடென வினவியல் வினர் செலவினர்
ஆதித்யனோடு
தர்ச நீயமான சந்தரன்
குல பர்வதங்கள்
திக்குகள் பூமி
எரிகிற அக்னி
இப்படிப் பட்ட பதார்த்தங்களை

என இன இயல்வினர் செலவினர் –
தமக்கு பிரகாரமாக யுடையராய்
நடத்திப் போருகிறவர்
இத்தால் ஜகதாகாரதையைச் சொன்ன படி –

சுருதியொ டருமறை முறை சொலு மடியவர் கருதிய கண புர மடிகள் தமிடமே   –
நல்ல ஸ்வரத்தை உடையதாய்
தன்னைப் பெறிலும் பெற அரிதாய் இருக்கிற  வேதங்களை
அவன் சேஷி -நாம் சேஷ பூதர் -என்று இருக்கிற முறையிலே சொல்லுகிற அடியார்
தங்களுக்கு பிராப்யம் என்று புத்தி பண்ணி வர்த்திக்கிற
திருக் கண்ண  புரம் –
வேத நாவர் விரும்பும் திருக் கண்ண புரம் –திருவாய் மொழி -என்னக் கடவது இறே-

————————————–

பூர்வ விருத்தங்களை நினைக்க விரகு இல்லை என்னவே
நெஞ்சு உகந்து கிஞ்சித் கரித்து மகிழலாம் ஆனாலும்
உப கரணங்கள் வேண்டுமே என்ன
திரு உலகு அளந்தவன் திருவடி பட்டு மலர்ந்த -முகத்தாமாரை இங்கு
தளிர் புரையும் திருவடி அன்றோ
பக்தி உழவன் போல் இங்குள்ள உழவர்கள் கால்கள் படவே தாமரைகள் மலருமே
உழவாலும் உழவர் திரு அடியாலும் மலரும்
வேண்டிய வாறு கிஞ்சித் காரம் செய்ய மலர்களின் செழிப்பும் -ஒன்றைப் பத்தாக்கிக் கொடுக்கும் பிராட்டியும் உண்டே
இருவருமாக சேர்த்தியிலே வேண்டியபடி அடிமை செய்யலாம் என்று அருளிச் செய்கிறார்

படி புல்கு மடி  யிணைப் பலர் தொழ மலர் வைகு
கொடி புல்கு  தட வரை யகலமது டையவர்
முடி புல்கு நெடு வயல் படை செல வடி மலர்
கடி புல்கு கண புர மடிகள் தமிடமே –8-7-8-

படி -பூமியை
புல்கு மடி  யிணைப் பலர் தொழ -அளந்தவனை பலரும் தொழ
மலர் வைகு கொடி -தாமரைப் பூவில் கொடி போன்ற பிராட்டி ( லோகத்தில் கொடிகளில் மலர் உண்டு )
புல்கு  தட வரை யகலமது டையவர்-திருமார்பில் பற்றி -அகலகில்லேன் இறையும் என்று இருப்பவர் அன்றோ
முடி புல்கு -நாற்று முடிகளுடன் கூடி
நெடு வயல் -நெடுகிய வயல்கள்
படை செல -கலப்பை செல்ல
வடி செல-உழவர் காலால் குழப்ப
மலர் கடி புல்கு கண புர மடிகள் தமிடமே

படி புல்கு மடி  யிணைப் பலர் தொழ மலர் வைகுகொடி புல்கு  தட வரை யகலமது டையவர் –
படி என்று பூமி
அத்தை புல்கும் அடி இணை உண்டு -பூமிப் பரப்பை அளந்து கொண்ட திருவடிகள்
சங்கைஸ் ஸூராணாம் -என்கிறபடியே
அவற்றை எல்லாரும் ஒக்க இருந்ததே குடியாக ஆஸ்ரயிக்க-
மலர் வைகு கொடி உண்டு -பெரிய பிராட்டியார்
அவள்  விரும்பி அணையா நின்றுள்ள
பெரிய  வரை போன்று இருந்த மார்வை உடையவர் –

முடி புல்கு நெடு வயல் படை செல வடி மலர்  –
நடுகைக்காக எங்கும் ஒக்க பரம்பிக்   கிடக்கிற
முடிகளை உடைத்தான பரந்த வயலிலே
கலப்பையைக் கொடு புக்கு நடத்தி –

அடி செல மலர் -கடி புல்கு கண புர மடிகள் தமிடமே
அடைவிலே காலாலே
ஒரு கால் குழப்புவார்கள்
அவ்வளவிலே இடையிலே தப்பிக் கிடந்த தாமரை பூவானது
பரிமளத்தை புறப்பட விடா நிற்கும் ஆயிற்று –

——————————————

கீழில் ஆராதன உபகரணங்கள் குறைவற்று இருப்பதால் ப்ராப்யம் என்றார்
இதில் இருவருக்கும் கைங்கர்ய பிரதி சம்பந்திகள் குறைவற்று உண்டு –
ஸ்ரீ மஹா லஷ்மி தாயார் பூமா பிராட்டி -இருவருமாக சேர்த்திக்கும் கைங்கர்யம் செய்யலாமே

புல மனு மலர் மிசை மலர் மகள் புணரிய
நில மகளென வின மகிளர் களிவரொடும்
வலமனு படை யுடை மணி வணர் நிதி குவை
கல மனு கண புர மடிகள் தமிடமே —-8-7-9-

நிதி குவை கல மனு கண புர மடிகள் தமிடமே –விஷ்ணு போதம் -அவனே நிதி -மரக்கலங்களிலும் நிதி உண்டே
மனு-மன்னி இருக்கும் வியாப்தமாய் இருக்கும் -கப்பல்கள் மன்னி இருக்குமே -இங்கும்
திருமலை ராயன் பட்டணம் ஆண்டு தோறும் எழுந்து அருளி தீர்த்தவாரி கண்டு அருளுகிறார்
புல மனு மலர் மிசை -மலருக்கு ஏற்றம் -புலன்கள் அழுந்தி கிடக்கும்படி-
இதை அனுபவித்ததை வேறே எங்கும் போகாதபடி அழகு வாசனை இத்யாதிகள் உண்டே
மலர் மகள் -ஸ்ரீ தேவியும் -மலர் மிசை மலர் மகள் அன்றோ இவள் -மலரில் எழுந்து அருளி இருக்கும் பெரிய பிராட்டியார் –
புணரிய நில மகள்-மிக்க ஸம்ஸ்லிஷ்டையாய் இருக்கும் பூமா தேவியார் -பிரியாமல் மால் செய்யும்
என மகிளர்கள் இவரொடும்-இப்படிப்பட்ட மஹிஷிகள் -ஸ்ரீ பூமா நீளா தேவிமார்கள்
வலமனு படை யுடை -வலக்கையில் பிரியாமல் இருக்கும் படைக்கலம் -திரு ஆழி ஆழ்வான்
மணி வணர் -மணி வண்ணர் -நீல மேனி ஸ்யாமள வண்ணர்

புல மனு மலர் மிசை மலர் மகள் புணரிய நில மகளென வின மகிளர் களிவரொடும்
கண்டார் உடைய இந்த்ரியங்கள்
பிணிப்புண்ணும்  படியாய் இருக்கிற மலரை தனக்கு
இருப்பிடமாக வுடையாளாக இருக்கிற பெரிய பிராட்டியார் –
தன்னோடு நித்ய சம்ஸ்லிஷ்டையாய் ஸ்ரீ பூமிப் பிராட்டி
என்று இப்படி சொல்லப் படுகிற நிருபாதிக
ஸ்த்ரீத்வத்தை உடையராய் இருக்கிற இவர்களோடும் –

(ஆண்கள் பெண் பாவனையில் பாடலாம் -நாயகி என்றுமே ஆண் பாவனையில் பாசுரங்கள் இல்லையே
நித்ய நிருபாதிக -ஸ்த்ரீத்வம் -ஏவம் பூத பூமி நீளா நாயகிகள் உண்டே )

வலமனு படை யுடை மணி வணர் நிதி குவை –
வலத் திருக் கையிலே மன்னா நின்றுள்ள
திரு ஆழியை உடையனுமாய்
நீல மணி போலே போலே குளிர்ந்து இருந்துள்ள
வடிவை உடையவர் -( உடைய ஸ்தானம் இது )

கல மனு கண புர மடிகள் தமிடமே –
பொற் குவை மாறாத மரக் கலங்களை உடைய
திருக் கண்ண புரம்
கடல் ஒரு புறமாய் இருக்கும் போலே காணும் –
(வேலை மோதும் மதிள் சூழ் திருக்கண்ண புரம் -9-10-1- அன்றோ )

————————————————-

மலி புகழ் கண புர முடைய வெம்மடிகளை
வலி கெழு மதிளயல்  வயலணி மங்கையர்
கலியன தமிழிவை விழுமிய விசையினொடு
ஒலி சொலு மடியவ ருறு துயரிலரே  —-8-7-10-

மலி புகழ் கண புர முடைய வெம்மடிகளை-பரமபதத்தை விட புகழ் மலிந்த –
ப்ராப்ய பூமி என்று அன்றோ உபக்ரமித்தார்
வலி கெழு மதிள் -திடமான பெருமை மிக்க மதிள்
விழுமிய விசையினொடு-அழகிய ஸ்வரத்தோடு
ஒலி சொலும் -அப்யஸிக்க வல்ல
அடியவர் உறு துயரிலரே-ஆஸ்ரிதர் அனுபாவ்யமான நேர்ந்த பாபங்கள் அடையார்கள்

மலி புகழ் கண புர முடைய வெம்மடிகளை
பரம் பதத்தில் காட்டில் மிக்க புகழை உடைத்தாய் இருக்கிற
திருக் கண்ண புரத்தை வாசஸ் ஸ்தானமாக
உடைய என் ஸ்வாமியை
கவி பாடிற்று –
(திவ்ய தேசமும் அடியேனும் இவனுக்கு சொத்து தானே
அஹம் ச ராஜ்யம் ச- பரதாழ்வான் )

வலி கெழு மதிளயல்  வயலணி மங்கையர் –
வலி மிக்கு இருந்துள்ள
மதிளின் அருகே உண்டான வயலாலே அலங்க்ருதமான
திரு மங்கைக்கு நிர்வாஹகரான –

கலியன தமிழிவை –
ஆழ்வார் அருளிச் செய்தவை –

விழுமிய விசையினொடு-ஒலி சொலு மடியவர் –
அழகிய இசையோடு கூட –
இத் திரு மொழியை –வண்  குறிஞ்சி -என்று சொல்லுவார்கள் –
இத்தை அப்யசிக்குமவர்கள் –

உறு துயரிலரே    –
அவர்களுக்கு அவஸ்யம் அநு போக்தவ்யம் -என்கிற
பாபங்கள் கிட்டாது –

———–

ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.

வியன் ஞாலத்தில் மல்கு சீரால் நாள் வானில்
நயமுடைக் கண்ணபுரம் பேறாக உயவடைக்
கூறு நீலன் சித்ர கவி தேரும் அடியார் தாம்
ஏறுவர் ஏதுமின்றி வான் –77-

நாதனும் நித்ய முக்தர்களும் இங்கே ஆசையுடன் உக்காந்து வந்து நித்யவாஸம் இருப்பதால்
இத்தையே உபாயமாகக் கொண்டு உஜ்ஜீவிக்க ஆழ்வார் உபதேசித்து அருளுகிறார்
கூற்று எழுத்துக்களைக் கொண்டே அருளிச் செய்த பதிகம் -சித்ரா கவித்துவம் பொலிய உள்ளது
நல் வான் -கைவல்யத்தில் வ்யாவ்ருத்தி –

—————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பெரிய திருமொழி-8-6–ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம்-

May 17, 2014

ஆண் பாவனையில் -பர உபதேச பதிகம்
அதாள பாதாள த்தில் இருந்து ஹிமாச்சல உச்சிக்கு வந்து அருளிச் செய்கிறார் இதில்
கீழே பாவியேன் ஆவியை அடுக்கின்றது கிலேசம்
இங்கு உய்யும் வகை கண்டேன் -என்று களிக்கிறார் -அதுக்கு சங்கதி –

தொண்டீர் உய்யும் -பிரவேசம் –

ஆதித்யனும் வந்து உதிக்கிறிலன்-
நாழிகையும் கல்பகத்தில் காட்டிலும் நெடிதாய்ச் செல்லா நின்றது –
அநுகூல பதார்த்தங்களும் பாதகமாய் நின்றன
ஒரு துணை காண்கிறிலேன்   –
சத்தையும் கூட அழியும் அளவாகா நின்றது –
இது எவ்வளவாய்த் தலைக் கட்டுமோ -அறிகிறிலேன் -என்றார் கீழில் திரு மொழியில் –

சம்சார ஸ்வ பாவத்தாலே இவை தான் ஒருபடிப் பட்டு நில்லா விறே-
ஆகையால்
ஆதித்யனும் ஒரு கால் வந்து உதிக்கவும் கூடும் இறே –
இவை ( ஆதித்யாதிகள் -பாதகங்கள் எல்லாமே ) தான் அகஞ்சுரிப் பட்டவாறே
( புர பிரான் ) சொன்ன வார்த்தையும் செவிப்படும் –

அவன் வந்திலன் என்று நீர் நம்மைச் சொன்னவிடம் தப்பைச் சொன்னீர் –
நாம் திருக் கண்ண புரத்திலே வந்து நிற்கிறது ஏதுக்காக-
ஆஸ்ரித அர்த்தமாக அன்றோ நாம் இங்கு வந்து நிற்கிறது –
நமக்காக என்று நீர் அறிந்திலீர் ஆகில் நமக்கு ஒரு குறைகளும் இல்லை –
நினைத்த அன்றே எல்லாம் செய்கைக்கு ஒரு தட்டும் இல்லை என்று இருந்தீர் ஆகில்
இனி அவ்வருகு உள்ளவை எல்லாம் தன்னடையே வருகிறது என்று  ஆறி இருக்க அமையாதோ என்று
அவன் சமாதானம் பண்ண –
சமாஹிதராய்
ஆழ்வார் தம் இடையாட்டத்தில் தாம் கை வாங்கி இருந்தார் –

அவனோ வந்து உதவுகிறிலன்-
இது எவ்வளவாய் வந்து தலைக் காட்டுகிறதோ -என்று
ஒரு நீர்ச் சாவியாய் கிடக்கிற அநுகூல வர்க்கத்தைப் பார்த்து –
நீங்கள் இங்கனே நோவு பட வேண்டா
நமக்கு உஜ்ஜீவிக்கைக்கு ஒரு விரகு உண்டு  -என்ன –

அதாகிறது
சர்வேஸ்வரன் நம்முடைய ரஷணத்தில் உத்யுக்தனாய்க் கொண்டு
திருக் கண்ண புரத்திலே சந்நிஹிதன் ஆனான் –
நாமும் அவனை ஆஸ்ரயித்து உஜ்ஜீவிப்போம்-
போருங்கோள் என்கிறார்   –

துன்பத்தில் தமியேன் என்றவர் நல்லது கண்டதும் இனியது தனி அருந்த மாட்டாரே –
கண்டு கொண்டுகந்த -கண்ண புரம் நாம் தொழுதுமே  -என்கிறார்

——————————————-

தொண்டீர் உய்யும் வகை கண்டேன் துளங்கா வரக்கர் துளங்கா முன்
திண் தோள் நிமிரச் சிலை வளையச் சிறிதே முனிந்த திரு மார்பன்
வண்டார் கூந்தல்  மலர் மங்கை வடிக்கண் மடந்தை மா நோக்கம்
கண்டான் கண்டு கொண்டுகந்த கண்ண புரம் நாம் தொழுதுமே –8-6-1-

சிறிதே முனிந்த திரு மார்பன்-அல்பம் கோபித்த வீர ஸ்ரீ உடையவன்
நோக்கம் கண்டான்–ஆஸ்ரித ரக்ஷணத்துக்காக பிராட்டிமார் கடாக்ஷம் –

தொண்டீர் –
வழு விலா வடிமை செய்ய வேண்டும் என்று-( 3-3-1 )
பாரித்து கொண்டு இருக்கிறவர்களே –

உய்யும் வகை கண்டேன் –
அசந்நேவ ச பவதி-(தைத்ரியம் ) -என்னும் நிலை கழிந்து
அவனை ஆஸ்ரயித்து
உஜ்ஜீவிக்கைக்கு ஒரு விரகு கண்டேன் –

அது எது என்றால் –
கண்ண புரம் நாம் தொழுதுமே  –

துளங்கா வரக்கர் துளங்கா முன் –
இதுக்கு முன்பு அச்சம் இருக்கும் படி
புதியது உண்டு அறியாத ராஷச ஜாதியானது அஞ்சும்படியாக –

திண் தோள் நிமிரச் சிலை வளையச் –
பிரதி பஷம் என்றால் சலியான தோளானது நிமிரும் படியாகவும்
வில்லானது வளையும் படியாகவும் –

சிறிதே முனிந்த –
ஜகத் உப சம்ஹாரத்தோடே தலைக் கட்டும் அளவன்றிக்கே
ராஷச ஜாதி அளவிலே முனிந்தான் ஆயிற்று –
சங்கல்ப்பத்தால் இவை எல்லாம் உண்டாக்குமவன் சீறினால்
பின்னை எல்லாமாக  ஒன்றாக அழியும் இத்தனை –

திரு மார்பன் –
வீர ஸ்ரீக்கு குடி இருப்பான மார்வை படைத்தவன் –

வண்டார் கூந்தல்  மலர் மங்கை வடிக் கண் மடந்தை மா நோக்கம்
அச் சேர்த்தியிலே அடிமை செய்ய வேண்டும்
என்னும் அதுவும் உண்டாகப் பெற்றதாயிற்று –

(மிதுனத்தில் கைங்கர்யம் என்றும்
புருஷகார பாவமும் உண்டு என்றும் இரண்டு நிர்வாகங்கள் )

வண்டார் கூந்தல்  மலர் மங்கை-
தொழுவார் குற்றம் காண்கைக்கு அவசரம் இல்லாத படி
மயிர் முடியாலே அவனை துவக்கும் பெரிய பிராட்டியார் –

வடிக் கண் மடந்தை –
ஒரு மயிர் முடி வேண்டாதே
தன் நோக்காலே
அவனை ஓடி எறிந்திட்டு வைக்கும்
கண்ணை உடைய ஸ்ரீ பூமிப் பிராட்டி –

மா நோக்கம் கண்டான் –
ஒண்  டொடியாள் திரு மகளும் நீயுமே நிலா நிற்ப கண்ட சதிர் -என்னுமா போலே
பிரஜைகளின் உடைய ரஷணத்துக்கு இவர்களும் தாமுமான சேர்த்தி
உண்டாக வேணும் என்று பார்த்து வைத்தான் ஆயிற்று –

கண்டு கொண்டுகந்த -கண்ண புரம் நாம் தொழுதுமே  –
அவனும்
நாமும் இவர்களும் சேர வர்த்திக்கைக்கு
ஏகாந்தமான ஸ்தலம் என்று உகந்த
திருக் கண்ண புரத்தை
தொழுவோம் –

———————————————————–

அது பிராட்டி பக்கல் ஓரத்தால் செய்த செயல் அன்றோ –
நாம் அதற்கு பிற்பாடர் ஆனோமே -என்ன
அது வேண்டா –
அவன் விரோதி நிரசன சீலன் -என்கிறார் –

பொருந்தா வரக்கர் வெஞ்சமத்துப் பொன்ற வன்று புள்ளூர்ந்து
பெரும் தோள் மாலி தலை புரளப் பேர்ந்த வரக்கர் தென்னிலங்கை
இருந்தார் தம்மை உடன் கொண்டு அங்கு எழிலார் பிலத்துப் புக்கு ஒளிப்பக்
கருந்தாட் சிலை கைக் கொண்டானூர் கண்ண புரம் நாம் தொழுதுமே —8-6-2-

கருந்தாட் சிலை-வைரம் பாய்ந்த -அசைக்க மாட்டாத திடமான சிலை –

பொருந்தா வரக்கர் வெஞ்சமத்துப் பொன்ற வன்று புள்ளூர்ந்து –
சர்வதா நாம் அனுகூலித்தாலும்
பொருந்தாமையிலெ நிலை நின்ற
ராஷச ஜாதியானது யுத்தத்திலே முடியும்படியாக
திருவடியை மேல் கொண்டு –

(அன்று நேர்ந்த நிசாசரர் கவர்ந்த வெங்கணைக் காகுத்தன்
ந மே த்வேஷ்யா ந ப்ரியா-சமோஹம் சர்வ பூதேஷு என்று அவன் இருந்தாலும்
வெட்டிக் கொண்டு போவார்களும் உண்டே -ந நமேயம் என்று இருப்பார்கள் அன்றோ
சரணம் அடைந்தவர்களின் வாசி பார்க்காமல் -சமமாக ப்ரீதியுடன் பார்க்குமவன் )

பெரும் தோள் மாலி தலை புரளப்
மிக்க தோள் வலியை உடைய மாலி தலையானது
புரளும்படியாக

பேர்ந்த வரக்கர் தென்னிலங்கை -இருந்தார் தம்மை உடன் கொண்டு அங்கு எழிலார் பிலத்துப் புக்கு ஒளிப்பக்-
அவனை ஒழிந்த  மற்று உள்ள ராஷசர்கள்
புற்றுப் போலே என்றும் ஒக்க துர் வர்க்கம் மாறாத
இலங்கையில் உண்டான ராஷசரையும் கூட்டிக் கொண்டு
போக பூமியான பாதாளத்தில் புக்கு மறைய –

கருந்தாட் சிலை கைக் கொண்டானூர் கண்ண புரம் நாம் தொழுதுமே    –
வயிரம் பற்றித் திண்ணியதான வில்லை
கையிலே பிடித்தவனுடைய ஊரான
திருக் கண்ண புரத்தை நாம் தொழுவோம் –

————————————————————

முதல் பாட்டில் ப்ரஸ்துதமான ராமாவதாரம் பின்னாட்டின படி  சொல்லுகிறது-
கருந்தாட் சிலை-கீழே
இதில் கல்விச் சிலை

வல்லி இடையாள் பொருட்டாக மதிள் நீர் இலங்கையார் கோவை
அல்லல் செய்து வெஞ்சமத்துள் ஆற்றல் மிகுத்த வாற்றலான்
வல்லாளரக்கர் குலப்பாவை   வாட முனி தன் வேள்வியைக்
கல்விச் சிலையால் காத்தானூர் கண்ண புரம் நாம் தொழுதுமே  —8-6-3-

வல்லி இடையாள் பொருட்டாக -ஸீதா திருக்கல்யாணத்தை பொருட்டே அனைத்து சேஷ்டிதங்களும்
ஸீதா மத்யே ஸூ மத்ய -பிரணவமே நடந்து காட்டியதே –
இடையே இல்லாத பிராட்டி இடையிலே சென்றாள் -என்றபடி
மதிள் நீர்-நீரே துர்க்கமாக
வெஞ்சமத்துள்-ககனம் -கடல் -ராம ராவண யுத்தம் -இவற்றுக்கு இவையே ஒப்பு
வல்லாளரக்கர் குலப்பாவை -தாடகை
கல்விச் சிலை-தனுர் வித்யை கற்கும் பொழுது
தனுர் வித்யை காந்தர்வ வித்யை ஆயுர் வித்யை அர்த்த சாஸ்திரம் உப அங்கங்கள்

வல்லி இடையாள் பொருட்டாக மதிள் நீர் இலங்கையார் கோவை –
கொடி போன்ற இடையை உடைய பிராட்டிக்காக கடலை
அகழாக உடைத்தாய்
மதிளை உடைத்தான இலங்கையில் உள்ளாருக்கு
நான் நியாமகனல்லேனோ
என்று இருக்கிறவனை –

அல்லல் செய்து வெஞ்சமத்துள் ஆற்றல் மிகுத்த வாற்றலான் –
தேரை அழித்து-வில்லை முறித்து -அவன் முதுகு காட்டும்படி பண்ணி
எளிவரவு படுத்தின படியை சொல்லுகிறது –
யுத்தத்தில் இன்று போய் நாளை வா  -என்றான் இறே-
நீ இளைத்த சமயத்தில் உன்னை அழிக்கை போராது காண் –
ஆஸ்வாஸ்ய-இவன் இளைத்தால் தன் பரிகரத்தில் உள்ளாரை
ஆஸ்வசிப்பிக்குமா போலே
நீ போய் ஆஸ்வசித்து வா -என்றான் இறே –

(ராவணன் இடம் தோற்கும் பாக்யத்தை ராமன் இழந்தான் –
வெறும் கை வீரனாக இருக்கும் வாய்ப்பை இழந்தான் ராவணன் )

பருவம் நிரம்புவதற்கு முன்னே செய்த செயல் மேல் அருளுகிறார்
(ஊண ஷோடஸ வருஷ –12 வயசிலே -இன்னும் 16 ஆகவில்லை என்றது –
யுத்த யோக்யதைக்கு 16 வயசு ஆக வேண்டுமே )
வல்லாளரக்கர் குலப்பாவை   வாட –
வலிய ஆண்மையை உடைய ராஷச ஜாதிக்காக
கண் காட்டி யானவள் முடியும்படியாக –

(பாவை -மரப்பாவை -அத்தைப்போலே தர்சனீயம் –
கண் காட்டி -ராக்ஷஸர்களுக்கு முதலில் இருந்து காட்டிய தாடகை அன்றோ )

முனி தன் வேள்வியைக் கல்விச் சிலையால் காத்தானூர் கண்ண புரம் நாம் தொழுதுமே  –
ருஷியினுடைய யாகத்தை –
ஸ்ரீ பரசுராமன் ஆழ்வானை வென்று
தன்னைதான வில்லை ( வைஷ்ணவ சாபம் ) வாங்குவதற்கு முன்பே
பிடித்த வில்லைக் கொண்டு காத்தானூர் –

——————————————————————————–

சக்ரவர்த்தி திரு மகனின் வீர ரஸா அனுபவம்
அவ்வளவு அன்றிக்கே
கடலை வற்ற அடிக்க -கோல் எடுத்தால் தான் ஆடும் -தொடுத்த சிலை –
குரங்கைக் கொண்டு பணி கொள்வது -கல்லை மிதக்கப் பண்ணுவதான-
பரத்வ செயல்கள் -ஜடாயு மோக்ஷம் -விபீஷண பட்டாபிஷேகம் போல் இவையும்
அத்புத செயல்கள் -இவற்றில் ஈடுபடுகிறார்

மல்லை முந்நீர் அதர்பட வரி வெஞ்சிலை கால் வளைவித்துக்
கொல்லை விலங்கு பணி செய்யக்   கொடியோன்  இலங்கை புகலுற்றுத்
தொல்லை மரங்கள் புகப் பெய்து துவலை நிமிர்ந்து வான் அணவக்
கல்லால் கடலை அடைத்தானூர் கண்ண புரம் நாம் தொழுதுமே  —-8-6-4-

கொல்லை விலங்கு-அரண்யங்களில் உள்ள கிளைகளில் தாவித் திரியும் குரங்குகள்
தொல்லை-பழையதான

மல்லை முந்நீர் அதர்பட –
மல்லை -என்று மிகுதி
ஜல ராசியாய் மூன்று வகைப் பட்ட ஜலத்தை உடைத்தான
(ஆற்று நீர் வேற்று நீர் ஊற்று நீர்கள் )
கடலானது வழி பட –
அப்ரமேயோ மஹோததி -என்று ஒருவராலும் பரிச்சேதிக்க அரிதான கடலானது  வழிப் பட –

வரி வெஞ்சிலை கால் வளைவித்துக்-
தர்ச நீயமான வரிகளை உடைத்தாய்
பிடித்த பிடியிலே எதிரிகள் அஞ்சும்படியான வெம்மையை
உடைத்தான வில்லை வளைத்து –

கொல்லை விலங்கு பணி செய்யக்  –
ஒரு காலும் பூசல் கண்டு அறியாதே
என்றும் ஒக்க பணை யிலே திரியக் கடவ குரங்குகள் பணி செய்ய
அஸ்ப்ருஷ்ட    சம்சார கந்தரான திருவடி திரு வநந்த ஆழ்வான் தொடக்கமனவர்
செய்யக் கடவ கைங்கர்யத்தை
இடக்கை வலக்கை வாசி அறியாத திர்யக்குகள் செய்ய –

கொடியோன்  இலங்கை புகலுற்றுத்-
அவன் பண்ணின க்ரௌர்யத்தை திரு உள்ளத்தாலே
முன்னோட்டுக் கொண்டு கொடியோன் என்கிறார்  –
ஜனகனும் ஜனநியும் ஓர் இடத்தில் இருக்கப் பொறாத க்ரௌர்யம் இறே –

இலங்கை புகலுற்று–மல்லை முந்நீர் அதர்பட வரி வெஞ்சிலை கால் வளைவித்துக்
கொல்லை விலங்கு பணி செய்ய-கல்லால் கடலை அடைத்தானூர்-

தொல்லை மரங்கள் புகப் பெய்து –
இதுக்கு முன்பு பறியுண்டு அறியாத பழைய மரங்கள் அடைய
பறியுண்டு போம்படி அதிலே பிரவேசிப்பித்து

துவலை நிமிர்ந்து வான் அணவக்-
அடைக்கிற போதை திவலைகள் ஆனவை கிளர்ந்து
ஆகாச அவகாசத்தை
இடம் அடைக்க –

கல்லால் கடலை அடைத்தானூர் –
நீரிலே இட்டால் ஆழக் கடவ மலைகளைக் கொண்டு
கடலை அடைத்த சக்கரவர்த்தி திரு மகனுக்கு
வாசஸ் ஸ்தானமான
கண்ண புரம் நாம் தொழுதுமே –

—————————–

அத்புத ரஸா அனுபவம் கீழ்
அவ்வளவு அன்றிக்கே
சக்ரவர்த்தி ரௌத்ர ரஸம் அனுபவிக்க கோலி
முன்பும் பின்பும் உண்டான வித்யா பிரதான -ஹம்ஸ -ஹயக்ரீவ அவதாரங்கள் -சாந்தி ரஸ
போக பிரதான கிருஷ்ண-காமன் பயந்தான் -ஸ்ருங்கார ரஸம் சேர்த்து அனுபவிக்கிறார்

ஆஸ்ரித ரஷணம் ஒரு தலையானால்
தன்னைப் பேணாதே ரஷிக்கும்-ஸ்வபாவன் -ஆயிற்று-

ஆமையாகி யரியாகி அன்னமாகி அந்தணர் தம்
ஓமமாகி ஊழியாகி உவரி சூழ்ந்த நெடும் புணரிச்
சேம மதிள் சூழ் இலங்கைக் கோன் சிரமும்  கரமும் துணித்து முன்
காமன் பயந்தான் கருதுமூர் கண்ண புரம் நாம் தொழுதுமே—-8-6-5-

உலகு சூழ்ந்த -பாட பேதம் –

ஆமையாகி யரியாகி அன்னமாகி –
கூர்ம ரூபமாய்
ஹயக்ரீவமாய் -சிம்ஹம் என்றுமாம் –
இழந்த வேத சஷூஸ்சை மீட்டுக் கொடுக்கைக்காக அன்னமாய் –

அந்தணர் தம் ஓமமாகி –
ப்ராஹ்மணர் ஹவிஸ்ஸூகளைக் கொள்வான் தானே இறே-

ஊழியாகி –
காலமே சேஷித்து இருந்துள்ள காலமாகி –
ஒருவனும் இல்லாத அன்று தான் உளனாய் இருக்கும் இறே  –
(ஒன்றும் தேவும் –மற்றும் யாரும் இல்லாத அன்று )

உவரி சூழ்ந்த நெடும் புணரிச் சேம மதிள் சூழ் –
ஓங்கின திரைகளை உடைத்தான உவரியான கடலாலே சூழப் பட்டு இருப்பதுமாய்
ஒருவராலும் பிரவேசிக்க அரிதான மதிளை உடைத்தான –

உலகு -என்ற பாடம் ஆகில் –
லோகத்தை சூழ்ந்த பெரிய கடல் என்றபடி –

இலங்கைக் கோன் சிரமும்  கரமும் துணித்து-
இலங்கைக்கு நிர்வாஹகனான ராவணன் உடைய தலைகளை அறுப்பது
தோள்களை துணிப்பதாக கொண்டு
போது போக்காக கொன்ற படி –

முன் காமன் பயந்தான் கருதுமூர் கண்ண புரம் நாம் தொழுதுமே –
நாட்டைத் தன் வடிவாலே பகட்டித் திரிகிற காமனுக்கும்
உத்பாதகனான
கிருஷ்ணன் விரும்பி வர்த்திக்கிற தேசம் –

—————————————————————-

கீழ் பாட்டுக்களில் தொண்டர்களுக்கு உபதேசம்
இனி பிரஸ்துதமான அவதார ரசங்களை தமது நெஞ்சுக்கு உபதேசம் –

வருந்தாது இரு நீ மட நெஞ்சே நம் மேல் வினைகள்  வாரா   முன்
திருந்தா வரக்கர் தென்னிலங்கைச் செந்தீ யுண்ணச் சிவந்தொரு நாள்
பெருந்தோள் வாணற்க்கு அருள் புரிந்து பின்னை மணாளனாகி முன்
கருந்தாள் களிறு ஓன்று ஒசித்தானூர் கண்ண புரம் நாம் தொழுதுமே —8-6-6-

செந்தீ -முன்பு வெளுத்து -ராவணனுக்குப் பயந்து –
ஆகவே செந்தீ என்று விசேஷணத்துடன் அருளிச் செய்கிறார்
வாணற்க்கு அருள் புரிந்து-கிருபையால் இரண்டு கரங்களை விட்டு வைத்தான்

வருந்தாது இரு நீ மட நெஞ்சே –
பூர்வ வ்ருத்தத்தை அனுசந்தித்து
நாம் என் படக் கடவோம் என்று கிலேசியாதே
நிர் பயமாய் இருக்கப் பார் –
சாதுவான நெஞ்சே –
உன்னையே பார்த்து
பகவத் பிரபாவம் ஒன்றையும் பாராத நெஞ்சே –
(முத்தனார் முகுந்தனார் புகுந்து நம்முள் மேவினார் எத்தினால் இடர்க்கடல் கிடத்தி ஏழை நெஞ்சமே )

நம் மேல் வினைகள்  வாரா   –
பாபங்களை கூடு பூரித்து வைத்து வருந்தாது இருக்கும் படி எங்கனே -என்னில்
நாம் பண்ணினவை அன்றோ -என்று
அவை நம் பக்கல் வந்து கிட்ட வற்றோ
ந்யஸ்த பரரை நலிய மாட்டா விறே-
(புண்ய பாபங்கள் ஈஸ்வர ப்ரீதி அப்ரீதி காரியமே -தானே வாராவே )

நயவேன் -இத்யாதி -முதல் திருவந்தாதி -64
ஆரே இத்யாதி -மூன்றாம் திருவந்தாதி -27-சொல்லிக் கொள்வது –

நயவேன் பிறர் பொருளை நள்ளேன் கீழரோடு
உய்வேன் உயர்ந்தவரோடு அல்லால் வியவேன்
திரு மாலை யல்லது தெய்வம் என்று ஏத்தேன்
வருமாறு என் என் மேல் வினை —–முதல் திருவந்தாதி-64–

ஆரே துயர் உழந்தார் துன்புற்றார் ஆண்டையார்
காரே மலிந்த கருங்கடலை – நேரே
கடைந்தானைக் காரணனை நீரணை மேல் பள்ளி
அடைந்தானை நாளும் அடைந்து —மூன்றாம் திருவந்தாதி –27-

அவன் எறட்டுக் கொண்டு போக்க எங்கே கண்டோம் என்னில் –
முன் திருந்தா வரக்கர் தென்னிலங்கைச் –
பிராட்டி தன் பிரதி பந்தத்தை போக்குகைக்காக
தான் யத்தனித்தது உண்டோ –
(சொல்லினால் சுடுவேன் -அது ராமன் வில்லுக்கு மாசு ஆகுமே )
பிரதிபந்தம் பிரபலமான தனையும் அவனுக்கு கார்யம் செய்தோமாம் படி என்றோ அவன் படி
மால்யவான் போல்வார் சொன்ன ஹிதத்துக் கேளாதே
ராஷசர் உடைய இலங்கையை –

செந்தீ யுண்ணச் சிவந்தொரு நாள் –
முன்பு ராவண பயத்தாலே பாகாதிகளுக்கு (தளிகைப் பண்ண வேண்டும் அளவு மட்டுமே )
வேண்டுவது சஞ்சரித்து
உடம்பு வெளுத்து இருக்கக் கடவ
அக்னி தன்னிறம் பெற்று புசிக்கும் படியாக
சிவந்து -சீறி-

பெருந்தோள் வாணற்க்கு அருள் புரிந்து –
அநேகம் தோள் படைத்தோம் என்று அபிமாநித்து இருக்கிற
பாணன் உடைய தோள்கள் ஆயிரத்தையும் துணித்து
அவனுக்கு தேக யாத்ரை நடத்தும்படியாக
இரண்டு கையைக் கொடுத்தான் ஆயிற்று –

பின்னை மணாளனாகி –
நப்பின்னை பிராட்டிக்கு வல்லபனுமாய் –

முன் கருந்தாள் களிறு ஓன்று ஒசித்தானூர் கண்ண புரம் நாம் தொழுதுமே –  
முன் கறுத்து திண்ணியதான தாளை உடைய
குவலயா பீடத்தை அநாயாசேன முறித்தானூர் –

——————————————————–

துஷ்டமான ஒரு யானையைக் கொன்றதை கீழே அருளிச் செய்து
அந்த பிரசங்கத்தில்
அனுகூலமான யானையை-ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானை ரஷித்ததையும்
ராவணனை நிரசித்து ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கு பட்டாபிஷேகம் செய்து அருளியவற்றையும் அனுபவிக்கிறார்

இலை யார் மலர்ப் பூம் பொய்கை வாய் முதலை தன்னால் அடர்ப்புண்டு
கொலை யார் வேழம் நடுக்குற்றுக் குலைய வதனுக்கு அருள் புரிந்தான்
அலை நீர் இலங்கைத் தசக்ரீவற்கு இளையோருக்கு அரசை அருளி முன்
கலை மாச் சிலையால் எய்தானூர்  கண்ண புரம் நாம் தொழுதுமே —-8-6-7-

கலைமா–கலை மான் -மாய மான் -மாரீசன் –

இலை யார் மலர்ப் பூம் பொய்கை வாய் முதலை தன்னால் அடர்ப்புண்டு –
இலைகளால் மிக்கு இருப்பதாய்
பரப்பு மாறப் பூத்து
தர்ச  நீயமான பொய்கையிலே போய் புக்கு
ஒரு ஜல சரசத்வத்தாலே நெருக்குண்டு –

கொலையார் வேழம் நடுக்குற்றுக் குலைய வதனுக்கு அருள் புரிந்தான்
மதித்திக் கொடு திரிகிற ஆனையானது
விழுக்காடு அறியாதே வேற்று நிலத்திலே புக்கு அகப்பட்டு
தன் வியாபாரம் அற்று முதலையினுடைய வ்யாபாரமேயாய்
அத்தாலே நடுங்கிக் குலைய
அவ்வஸ்தையிலே வந்து உதவினான் –

அலை நீர் இலங்கைத் தசக்ரீவற்கு இளையோருக்கு அரசை அருளி –
ராவணன் பண்ணின பிராதி கூல்யம்
தம்பி அளவாக வந்தேறுவதாக இருக்கச் செய்தேயும்
அத்தைப் பாராதே அவன் தம்பிக்கு ராஜ்யத்தை கொடுத்தான் ஆயிற்று –

முன் -கலைமாச் சிலையால் எய்தானூர்  கண்ண புரம் நாம் தொழுதுமே –
அதுக்கு முன்பு தமையனுடைய வைரத்துக்கு
ஹேதுவாய்க் கொண்டு
வந்த மாயா மிருகத்தை ஓர் அம்பாலே முடித்தவன் –

—————————————————

கீழ்ப் பாட்டில் -ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு
திவ்யம் வர்ஷ சஹச்ரம்-என்று பதினாயிரம்  சம்வத்சரம் கிலேசப் பட்டு
ஸ்வ யத்ன நிவ்ருத்தி பிறந்த பின்பு வந்து உதவினான் –
ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கு -த்யக்த்வா புத்ராம்ச தாராம்ச்ச-என்று
பிராப்ய ஆபாசங்களையும் விட்டு சரணம் புகுருகையாலே அரசு அளித்தான் –

எனக்கு  அங்கனே இருப்பதொரு நிலையும் அன்றிக்கே
சஞ்சலம் ஹி மன -என்கிறபடியே
நின்றவா நில்லாத ஸ்வ பாவத்தை யுடைத்தாய் இருக்கை
உண்டாகையாலே
எங்கனே வந்து இருப்பது என்ன
பாஞ்சாலிக்கு விரோதிகள் என்ற பேர் பெற்றவற்றை  எல்லாம் போக்கி அருளினவன் -என்கிறார் –
நெஞ்சை தேற்றுகிறார் -இரண்டு பாட்டாலும்

(கீழே ஸ்ரீ கஜேந்திர ஆழ்வான் 16000 தேவ வருஷம் போராடி –
நாமும் சம்சார சாகரம் உண்டே -ஐந்து இந்திரியங்கள் ஐந்து முதலைகள் -ஜனனம் மரணம் -அநாதி காலம் புரிய வைக்க –
கிலேசப்பட்டு ஸ்வ யத்ன நிவ்ருத்தி பிறந்த பின்பு த்வரித்து வந்து உதவியதை அருளிச் செய்து
ஈஸ்வர ப்ரவ்ருத்தி விரோதி ஸ்வ ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி தானே பிரபத்தி –
முன்பே வந்தால் ஆணை இட்டு விலக்குவார்களே –
வாய் வார்த்தையாகவே சர்வம் கிருஷ்ண மயம் சொன்னாலும் யானே என் தனதே என்று அன்றோ இருக்கிறோம்
ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கும் த்யக்த்வா புத்ராம்ச தாராம்ச -இத்யாதி –
ப்ராப்ய ஆபாசங்களாகத் தோற்றும் அனைத்தையும் விட்டு சரண் அடைந்த பின்பு உதவியது
எனக்கு அவ்வளவும் இல்லையே -அஹங்காரம் ஒட்டிக் கொண்டு ஆபாசங்களையும் விடாமல் இருக்க –
சஞ்சலம் ஹி மனஸ்ஸூ -நின்றவா நில்லா ஸ்வ பாவமாய் இருக்க -எங்கனம் வந்து உதவுவான்
பாஞ்சாலிக்கு விரோதி என்ற பேர் பெற்றவை எல்லாம் காலாலும் கையாலும் கொன்று நின்ற கிருஷ்ணன் படி
அதுவாய் இருக்க -பூதனாதிகளும் இவளுக்கு விரோதி என்றே திரு உள்ளம் –
ஆபத்தில் புடவை சுரக்கவும் -செற்றாரை நிரசிக்கவும் இவன் வளர்ந்து இருக்க வேண்டுமே –
இதனால் உனக்கும் அருளுவான் என்று திரு உள்ளத்தைத் தேற்றுகிறார் இரண்டு பாட்டுக்களாலும் –
விரோதி நிரசனம் ஸ்வாபாவிகம் -அவனுக்கு என்கிறார் –
ஸ்ரீ கிருஷ்ணனுடைய பல பால்ய சேஷ்டிதங்களை அருளிச் செய்கிறார் இதில் )

மாலாய் மனமே யருந்துயரில் வருந்தாது இரு நீ வலி மிக்க
காலார் மருதும் காய்சினத்த கழுதும் கதமாக் கழுதையும்
மாலார் விடையும் மத கரியும் மல்லர் உயிரும் மடிவித்து
காலால் சகடம் பாய்ந்தானூர் கண்ண புரம் நாம் தொழுதுமே—8-6-8-

யரும் துயர் -அனுபவித்து போக்க ஒண்ணாத துயர்
காலார் மருதும்-இரண்டு வேரூன்றி இருந்த மருத மரங்கள்
கழுது-பூதனை
கழுதை -தேனுகாசுரன்
மல்லர்-விசேஷணம் வைக்க வேண்டாதபடி க்ரூரர் –

மாலாய் மனமே யருந்துயரில் வருந்தாது இரு நீ –
முன்பு பண்ணின பாபங்களை அனுசந்தித்து
என் படக் கடவோம் -என்று
பிச்சேறின நெஞ்சே
அனுபவித்து தலைக் கட்ட ஒண்ணாத துக்கங்களிலே  நீ கிலேசியாது இரு –
(மனம் – அசேதனம் -சேதன சமாதியில் பேசுகிறார் -மனம் சிந்தனைக்கு உண்டான கருவியே )

(அவனுக்கு நேரே விரோதிகள் இல்லையே
ஆஸ்ரிதர்கள் வயிறு எரியும் படி அன்றோ அவன் படி
பாஞ்சாலி விரோதிகள் போல் ஐந்து இந்த்ரியங்களால் வரும் விரோதிகளையும் போக்கி அருளுவான் )

என் கொண்டு வருந்தாது இருப்பது என்றால் –
வலி மிக்க காலார் மருதும் காய் சினத்த கழுதும் கதமாக் கழுதையும் –
அவன் படி இது அன்றோ –
மிக்க பலத்தை உடைத்தாய்
வேரூன்றி இருந்து உள்ள மருதும்-
மிக்க சீற்றத்தை உடைத்தாய் இருக்கிற பூதனையும் –
(காய்தலும் கோபம் சினமும் கோபமும் -மிக்க கோபம் என்றபடி )
கோபத்தை உடைத்தாய் இருந்துள்ள குதிரையும் –
கழுதையும் –

(பூதனை முதலில்
கத மா -கேசி இறுதியில் வந்த விரோதிகள்
நாரதர் பயப்படும் படி அன்றோ கேசி
அபதானங்கள் ஆழ்வாருக்குக் காட்டி அருளிய படியே அருளிச் செய்கிறார் -க்ரமம் படி அல்லவே )

மாலார் விடையும் மத கரியும் மல்லர் உயிரும் மடிவித்து    —
பெரிய வடிவை உடைத்தான வ்ருஷபங்களும்
மதத்தை உடைத்தான ஆனையும் –
மலை துள்ளினால் போலே கிளர்ந்து வருகிற மல்லர் உடைய பிராணங்களும் –
இவற்றை அடைய நிரசித்து –

(விசேஷணம் மல்லருக்கு பாசுரத்தில் இல்லா விட்டாலும் வியாக்யானத்தில் மல்லருடைய குரூரம் காட்டி அருளுகிறார் )

காலால் சகடம் பாய்ந்தானூர் கண்ண புரம் நாம் தொழுதுமே –
முலை வரவு தாழ்ந்தது என்று சீறி நிமிர்த்த
திருவடிகளுக்கு
இலக்காய் சகடாசுரன் துகளாய்ப் போம்படி பண்ணினவன் –

—————————————————

கீழே சங்கதி இதுக்கும் உண்டே
கீழ் பாசுரம் பால சேஷ்டிதங்கள்
சகடாசுரன் பங்குனி ரோகினி ஏழு மாதம்
குன்று ஏந்தியது ஏழு திரு நக்ஷத்திரத்தில்

குன்றால் மாரி பழுதாக்கிக் கொடியேர் இடையாள் பொருட்டாக
வன் தாள் விடை ஏழு அன்று அடர்த்த வானோர் பெருமான் மா மாயன்
சென்றான் தூது பஞ்சவர்க்காய்த் திரிகால் சகடம் சினம் அழித்துக்
கன்றால் விளங்காய் எறிந்தானூர்  கண்ண புரம் நாம் தொழுதுமே —8-6-9-

(கன்றால்-தேனுகாசுரன்-பதவுரையில் காட்டி –வத்ஸ கபிஸ் தாஸுரன் -என்றே சொல்வர் இருவரையும் )

குன்றால் மாரி பழுதாக்கிக் கொடியேர் இடையாள் பொருட்டாக  வன் தாள் விடை ஏழு அன்று அடர்த்த –
மலையை எடுத்து இந்த்ரன் வியாபாரம் வ்யர்த்தமாம் படி பண்ணி
கொடி போலே அழகிய இடையை உடைய நப்பின்னை பிராட்டிக்காக
வலிய தாளை உடைய ருஷபங்கள் ஏழையும்
அழியச் செய்த –
(ஏழு – கர்பம் பிறவி -ஸப்த அவஸ்தைகள்
கொம்புகள் புண்ய பாப ரூப கர்மங்கள் )

வானோர் பெருமான் –
அயர்வறும் அமரர்கள் அதிபதி –
நித்ய ஸூரிகள் பரிய இருக்கும் மேன்மையை உடைய தன்னை கிடீர்
தன்னைப் பேணாதே இவற்றின் காலிலே பொகட்டது-
(அஸ்தானே பய சங்கிகள் -உறகல் உறகல் -இத்யாதி )

மா மாயன் —
ஆச்சர்ய சேஷ்டிதங்களை உடையவன் –

சென்றான் தூது பஞ்சவர்க்காய்த் –
தன்னைப் பேணாதே
கால் நடையே
கழுத்திலே ஓலை  கட்டி
பாண்டவர்களுக்காக துரியோதனன் பக்கலிலே தூது போனவன் –

திரிகால் சகடம் சினம் அழித்துக் –
ஊருகிற காலை உடைத்தான சகடத்தின் உடைய
சினத்தை போக்கி –

கன்றால் விளங்காய் எறிந்தானூர் –
இருவரும் தங்களிலே க்ருத சங்கேதரராய்
ஒருவனைக் கொண்டு ஒருவனை நிரசித்தவன் –
கண்ண புரம் நாம் தொழுதுமே –

————————————-

கரு மா முகில் தோய் நெடு மாடக் கண்ண புரத் தெம்மடிகளைத்
திரு மா மகளால் அருள் மாரிச் செழு நீராலி  வள நாடன்
மருவார் புயல் கைக் கலிகன்றி மங்கை வேந்தன் ஒலி வல்லார்
இரு மா நிலத்துக்கு அரசாகி யிமையோர் இறைஞ்ச  வாழ்வாரே –8-6-10-

(இரு -இரண்டு – பூமி -ஸ்வர்க்கம் -பெரிய என்றுமாம்
அருள் மாரி இவர் இன்ப மாரி -நம்மாழ்வார்
47 திவ்ய தேசம் மங்களா சாசனங்கள் இவர் மட்டுமே செய்த அருள் வண்மை உண்டே
இமையோர் இறைஞ்ச  வாழ்வாரே-மாதவன் தமர் என்றும்
குடந்தை எம் கோவலன் அடியார் என்றும்
என்று பரஸ்பர நீச பாவம் இவர்களுக்கு உண்டே )

கரு மா முகில் தோய் நெடு மாடக் கண்ண புரத் தெம்மடிகளைத்-
நீர் கொண்டு எழுந்த காள மேகங்கள் வந்து தோயும்படி
ஓங்கின மாடங்களை உடைத்தான
திருக் கண்ண புரத்திலே
என் ஸ்வாமியைக் கவி பாடிற்று –

திரு மா மகளால் அருள் மாரிச் செழு நீராலி  வள நாடன் –
பெரிய பிராட்டியார் உடைய முழு நோக்குக்கு இலக்கான படியாலே
அருள் மாரி -என்றது தன்னையே திரு நாமம் உடையாரானார் ஆயிற்று –
ஜல சம்ருத்தியை உடைத்தான திருவாலி நாட்டை யுடையவர் –

மரு வார் புயல் கைக் கலிகன்றி மங்கை வேந்தன் ஒலி வல்லார் –
என்றும் ஒக்க உண்டாய்
குறைவற வர்ஷிப்பதான புயல் உண்டாகில் ஆயிற்று
இவர் கைக்கு ஒப்புச் சொல்லல் ஆவது –
என்றும் ஒக்க குறைவறக் கொடுக்கிறவர்க்கு
காதா சித்கதமாக தோற்றி ப்ராதேசிகமாக வர்ஷிக்கிறது ஒப்பாக மாட்டாதே –
(புயல் மேகம் -மருவார் -என்று காலத்தோடு பொருந்தி பூர்ணமாய் )
திரு மங்கைக்கு ராஜாவான ஆழ்வார்
ஒலியை உடைத்தாம் படி  அருளிச் செய்த இத் திரு மொழியை வல்லார் –

இரு மா நிலத்துக்கு அரசாகி –
பௌமம் மநோ ரதம்  ஸ்வர்க்க்யம் -என்கிறபடியே
அலங்காரங்களை எல்லாம் -சத்ர சாமராதி ராஜ சிஹ்னங்களை-பெற்று –

யிமையோர் இறைஞ்ச  வாழ்வாரே  —
இவ்வளவிலே போகாதே
பரம பதத்திலே போய் புக்கு
பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர் -( 10-9-)-என்கிறபடி
நித்ய ஸூரிகள் திருவடிகளில் விழும்படியான பேற்றைப் பெறுவார் –

———

ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.

தொண்டர்க்கு வேண்டிற்றுச் செய்யும் கணபுரத்தான்
நண்ணார் ஒழிப்பானை ஆறாக நண்ணவும்
நண்ணா நம் மேல் வினை என்றுத் தேற்றியும் கூறும்
அண்ணலை போற்றும் வியந்து -76-

வியந்து -விருப்புற்று /
வருந்தாது இரு மட நெஞ்சே நம் மேல் வினைகள் வாரா என்றும்
மாலாய் மனமே யாரும் துயரில் வருந்தாது இரு நீ -என்றும் தேற்றிய
ஆழ்வாரை விருப்பமுடன் போற்றுவதும் மேல் ஒரு நன்மை இல்லை –

————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பெரிய திருமொழி-8-5—-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம்-

May 17, 2014

மாலைப்பூசல் -மல்லிகை கமழ் தென்றல் திருவாய் மொழி போல் இதுவும்
அவன் ஆஜ்ஜை படியே அனைத்தும் -ஸூர்யனும் இவள் விசனம் காண மாட்டாமல் அஸ்தமிக்க –
விரஹ தாபத்தால் அருளிச் செய்யும் பதிகம்
சீதாபிராட்டி -10 மாதங்கள்
பரத்தாழ்வான் 14 ஆண்டுகள்
தேவகிப்பிராட்டி -10 மாதங்கள்
கோபிமார் இவன் மாலையில் முன் வரிசையில் காணாமல் பின் வருவதால் பட்ட நோவு
மல்லிகை கமழ் தென்றல் -(9-9-)
பூர்வர்-இரவு பொழுது பிரிந்த வியசனம் என்று நிர்வகிக்க –
எம்பெருமானார் -அவ்வளவு நேரம் தங்க மாட்டாத ப்ரக்ருதி -மாலைப் பூசலே என்று நிர்வகித்தார்

ஒவ் ஒரு கோபிகள் நிலைக்கும் ஒரு பாசுரம்
ஒன்பதாவது பாசுரத்தில் தான் திருக்கண்ண புரம் பிரஸ்தாபம் வரும்
நாகை அழகியர் பதிகத்திலும் பத்தாவது பாசுரத்தில் மட்டுமே இதே போல் உண்டு –
மாசறு சோதி -5-3- மடலூர முடியாமல் இரவு வர -ஊர் எல்லாம் துஞ்ச நீள் இரவாய் நீண்டது
கண்ணனும் வாரானால் காகுத்தனும் வாரானால் போல் இங்கும் இருள் மூட
கோபிமார் அனைவரும் பட்ட பாடு இவள் ஒருத்தியும் படுகிறாள் –

தந்தை காலில் -பிரவேசம் –

அங்குத்தை சம்பந்தம் உள்ளது  ஒன்றைக் கொண்டு வந்து
என்னை ஆஸ்வசிப்பிக்க வேண்டும் என்று
சில தும்பிகளை போக விட்டாள் –
அவையும் போய் அவனைக் கொடு வந்தால்
தானும் அவனுமாக அனுபவிப்பதாக இவள் இலையகல
பாரித்து கொண்டு இருந்தாள் –
அவன் வந்திலன்-

அதுக்கு மேலே பாதக பதார்த்தங்கள் மிகைத்து
அவற்றுக்கு ஆடல் கொடுத்து பதார்த்த தர்சனம் பண்ணிப்
போது போக்க ஒண்ணாத படி
கண்ட விடம் எங்கும் இருள் மூடி
ஹிதம் சொல்வாரும்
அழைப்பாரும் தேட்டமாம் படியாய் விழுந்தது –

தானும் ராத்ரியும் பாதக பதார்த்தங்களுமேயாய்
நோவு பட்டு
திருவாய்ப் பாடியிலே கிருஷ்ணனைப் பிரிந்த பெண்கள் எல்லாரும்
ஒரு சந்தையில்   பட்ட பாட்டை
இவள் ஒருத்தியும் பட்டு கூப்பிடுகிறாளாய்ச் செல்லுகிறது –

(தாரின் ஆசையில் போயின நெஞ்சமும் தாழ்ந்த தோர் துணை   காணேன்
ஊரும் துஞ்சிற்று உலகமும் துயின்றது ஒளியவன் விசும்பு இயங்கும்
தேரும் போயிற்றுத் திசைகளும் மறைந்தன-8-5-2–என்றபடி -பாதிக்கும் அவர்களைச் சொன்னபடி
சப்தாதி விஷயங்களே விரஹ தாபம் உண்டாக்கும் அவன் இல்லாமல் -)

———————————————————-

தந்தை காலில் விலங்கற வந்து தோன்றிய தோன்றல் பின் தமியேன் தன்
சிந்தை போயிற்று திருவருள் அவனிடைப் பெறும் அளவு  இருந்தேனை
அந்தி காவலன் அமுதுறு பசுங்கதிர் அவை சுட அதனோடு
மந்த மாருதம் வனமுலை தட வந்து வலி செய்வது ஒழியாதே  —8-5-1-

தமியேன்-தனியேன்
இணைக் கூற்றங்கள் -சந்திரனும் மாருதமும் இங்கு

தந்தை காலில் விலங்கற வந்து தோன்றிய தோன்றல் பின் தமியேன் தன் சிந்தை போயிற்று –
பிறரால் வந்த விலங்கு பரிஹரிக்குமவன்
தன்னால்  வந்த விலங்கு பரிஹரியாது ஒழிவதே –
ஸ்ரீ வசுதேவர் காலிலே விலங்கு கழலும்படி வந்து அவதரித்த
முக்த்தன் உடைய ஸ்வபாவத்தை அனுசந்தித்து
ஆபத்துக்களிலே வந்து உதவும் ஸ்வ பாவனான பின்பு
அந்த பித்ராதிகள் அளவில்லாத ஆசையை உடைய நமக்கு
வந்து உதவுவானோ என்று பிரிந்து தனி இருக்கிற
என் நெஞ்சானது அவன் பின்னே போயிற்று –
(நீர் இருக்க –என் நெஞ்சம் தூது விட்ட பிழை -யார் இடத்தில் கூறுவேன் –
என்னையும் மறந்து தன்னையும் மறைந்ததே -)

திருவருள் அவனிடைப் பெறும் அளவு  இருந்தேனை –
நெஞ்சு கை தாராத சமயத்திலே அவன்
அருளாது ஒழியுமே–(மூன்றாம் -19-)என்று
அவன் அருள் பெறுவதாக அவசரம் பார்த்து இருந்தேன் நான் –
அவ்வருளின் கார்யம் பலியாமையே யன்றிக்கே
த்வேஷ கார்யமே தலைக் கட்டிற்று –

அந்தி காவலன்-
பாடி காப்பாரே களவு காணுமா போலே
ராத்திரி தத்வத்துக்கு நிர்வாஹகனான சந்தரன் உடைய  –

அமுதுறு பசுங்கதிர் அவை சுட –
விஷம் பாதகமானால் அம்ருதத்தை இட்டு பரிஹரிக்கலாம்
அம்ருதம் பாதகம்  ஆனால் பின்னை பரிஹரிக்கல் ஆவது இல்லை –
அம்ருத கிரணங்கள் ஆனவை நெருப்பை முகந்து எறட்டினால் போலே சுட   –

அதனோடு மந்த மாருதம் –
அது தான் அமையும் ஆயிற்று பாதகத்தில் உறைப்புக்கு –
அத்தோடு கூட அளவுபட சஞ்சரியா நின்றுள்ள
தென்றலானது தோற்றிற்று –

வனமுலை தட வந்து –
அவனுடைய கர ஸ்பர்சம் யாதோர் இடத்தில் உண்டாம்
அவ்விடம் எங்கும் புக்கு ஸ்பரசித்துக் கொடு வாரா நின்றதாயிற்று –

வலி செய்வது ஒழியாதே  –
அத் தென்றல் தனக்கு நாம் இத்தனை நலிந்தோம் ஆகில்
இனி ஓர் அளவிலே விட அமையாதோ என்று
தயை பிறந்து கை வாங்குமாம் இறே –
அதன்றிக்கே இடை விடாது நலியா நின்றதாயிற்று –
ராவணன் பண்ணின பிராதி கூல்யத்துக்கும் ஓர் அவதி உண்டாயிற்று இறே
இது பண்ணுகிற பிராதி கூல்யத்துக்கு ஓர் அவஸானம் காணாது ஒழிகிறது –

(சப்தாதி விஷயங்களில் ஸ்பர்ச பாதகம் இதில் சொல்லிற்று )

———————————————————

கிருஷ்ணனுடைய அநிஷ்ட நிரஸனம் -தந்தை காலில் விலங்கு அறுத்த
அந்த செயலில் ஈடுபட்ட -கோபிமார் அவஸ்தை
இதில் தோளும் தோள் மாலை அழகில் ஈடுபட்ட கோபி அவஸ்தை

மாரி மாக்கடல்  வளை வணர்க்கு இளையவன் வரை புரை திரு மார்பில்
தாரின் ஆசையில் போயின நெஞ்சமும் தாழ்ந்த தோர் துணை   காணேன்
ஊரும் துஞ்சிற்று உலகமும் துயின்றது ஒளியவன் விசும்பு இயங்கும்
தேரும் போயிற்றுத் திசைகளும் மறைந்தன செய்வது ஓன்று அறியேனே –8-5-2-

விசும்பு இயங்கும்-ஆகாசத்தில் மயங்கிற்று -அஸ்தமித்தது

மாரி மாக்கடல்  –
புறம்பு ஒரு ரஷகர் உள்ளாத அளவில்
அணைத்து அல்லது நிற்க ஒண்ணாத படியான வடிவு படைத்தவன் –
மாரி போலேயும்
கடல் போலேயும்
இருக்கிற வடிவை உடைத்தானவன்  –

வளை வணர்க்கு இளையவன் –
அவ் வடிவு அழகோபாதியும் பெற்று அல்லது நிற்க ஒண்ணாதே
இருக்கிறது காணும் அவன் முன் பிறக்கப் பிறந்ததுவும்

வளை வணர்க்கு இளையவன் -சங்கு போல் நிறத்த
இத்தை இட்டு விசேஷித்து-
பல தேவர் –வெளுத்த ஸாத்விக -ஸூத்த ஸ்வ பாவர் -இவருக்கு பவ்யன் –
இவனோ மாரி மாக்கடல் -திருமேனி போல் திரு உள்ளமும் கறுத்து இருக்க வேண்டுமோ –

கிருஷ்ணஸ்ய அதி மநோ ஹரி ப்ரேம கர்ப்ப சந்தே சைரித்யாதி (ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-24-)
கிருஷ்ணனைப் பற்றி கோபிகளுக்கு சொல்லி ஆஸ்வாஸம் செய்த நம்பி மூத்த பிரான்
கிருஷ்ணன் தீம்பாலே புண்பட்ட நெஞ்சை ஆற்றி
இருவரையும் சேர விடுவான் இறே –
ஹா ராமா ஹா லஷ்மணா–(ஸூந்தர )என்னுமா போலே –

வரை புரை திரு மார்பில் -தாரின் ஆசையில் போயின நெஞ்சமும் தாழ்ந்தது –
ஒரு பிரயோஜனத்துக்காக போகில் இறே
அத்தைக் கொடு போகல் ஆவது –
வரை போலே இருக்கிற திரு மார்பிலே
இரண்டருகும் அருவி விழுந்தால் போலே
இட்ட மாலையைப் பெற வேணும் என்னும் ஆசையாலே
போன நெஞ்சானது
ஒரு கால் மீளுகை அன்றிக்கே
அங்கே அதி மாத்ர பிராவண்யத்தை  உடைத்தாய்க் கொண்டு கால் தாழ்ந்தது –

தோர் துணை  காணேன் –
போன நெஞ்சம் மீண்டது இல்லை –
நாயகனோ பொகட்டுப் போனான் –
இனி துணை யாவர் உண்டோ –

ஊரும் துஞ்சிற்று-
நீ தான் ஓர் ஊரிலே அன்றோ இருக்கிறது
அவ் ஊரில் உள்ளாரோ என்னில்
அவர்கள் அபஹ்ருத சித்தராய் இருக்கிறார்கள் சிலர் அல்லர்களே
ஆகையால் நித்ரா காலங்களிலே உறங்கத் தட்டில்லை –

ஆக –
அழைப்பாரும்
ஹிதம் சொல்வாரும் இல்லை யாயிற்று –

உலகமும் துயின்றது –
அத்தோடு சேர்ந்த லோகங்களும் அடைய உறங்கிற்று –

ஒளியவன் விசும்பு இயங்கும் தேரும் போயிற்றுத் –
ஆஸ்வாச கரனான ஆதித்யனும் போனான் –
தனக்கு சஞ்சரிக்கைக்கு ஸ்தலம் இல்லாமை போனானோ
அவன் போனாலும்
அவன் சஞ்சரிக்கும் ரத சந்நிதி
உண்டாகில் நான் ஜீவியேனோ-

திசைகளும் மறைந்தன-
அவன் சந்நிதி கொண்டு இறே திக் விபாகம் பண்ணுவது
அவையும் போய் மறைந்தன –

செய்வது ஓன்று அறியேனே –
புறம்பு உள்ளார் ஒருவரும் இல்லை யாயிற்று –
அகவாய் குடி போயிற்று –
நாயகனோ வந்து அணைகிறிலன்-
இனி எத்தைச் செய்வது –

———————————————————-

கீழ் இரண்டு பாட்டிலும் நெஞ்சு இழந்தார் படி
இங்கு குழல் ஓசையில் ஈடுபட்டு வளை இழந்த கோபிமார் தசையில் பேசுகிறாள் –

ஆயன் மாயமே யன்றி மற்றென் கையில் வளைகளும் இறை நில்லா
பேயினார் உயிர் உண்டிடும் பிள்ளை நம் பெண் உயிர்க்கு  இரங்குமோ
தூய மா மதிக் கதிர் சுடத் துணை யில்லை  யிணை முலை வேகின்றதால்
ஆயன் வேயினுக்கு அழிகின்றது உள்ளமும்   அஞ்சேல் என்பார்  இல்லையே—8-5-3-

ஆயன் மாயமே யன்றி மற்றென் கையில் வளைகளும் –
கிருஷ்ணன் பிரிகிற போது -பிரியேன் -பிரியில் ஆற்றேன் -என்று
பிரிந்து போனான் –
அங்கன் இன்றிக்கே இவை சடக்கென பிரிந்து கொடு நின்றது –
(ஆயன் மாயத்துக்கும் மேல் அன்றோ இவற்றின் மாயம் )

அனு ராகேண சைதில்யம் உபயாந்த்யா ஸூ கரேஷூ வலயான்யபி ஆஸூ–(ஸ்ரீ விஷ்ணு புராணம் 5-18)-என்னுமா போலே
ஆஸூ சைதில்யம் உபயாந்தி –
கடுகப் பிரிந்து கொடு நிற்கக் கண்ட இத்தனை –
கைப் பட்டார் அடைய விட்டுப் போகிற காலம் ஆகாதே –
(கைப் பட்டார்-வளையல்களும் உற்றாரும் )

இறை நில்லா –
இறையும் நில்லா –
அவன் போன பின்பு ஒரு ஷணமும் தங்கிற்று இல்லை –

பேயினார் உயிர் உண்டிடும் பிள்ளை நம் பெண் உயிர்க்கு  இரங்குமோ
முதலிலே பூதனை கையிலே அகப்பட்டு
நம்மை நலியப் பார்த்தவன் (அவன் ஆபத்து இவரை அன்றோ நலியும் )
இன்றாக நம் பக்கலில் இரங்குமோ –
அடியிலே தொடங்கிற்று இலனோ அவன் பெண் பிறந்தாரை நலிய –

தூய மா மதிக் கதிர் சுடத் –
மறு வற்ற சந்தரன் உடைய
கிரணங்கள் ஆனவை நெருப்பை எறட்டுச் சுட –

துணை யில்லை  யிணை முலை வேகின்றதால் –
அவிப்பார் இன்றிக்கே ஒழிந்ததே
தான் கண்டபடியே வேவா நின்றதாயிற்று –

ஆயன் வேயினுக்கு அழிகின்றது உள்ளமும்   –
இவ்வளவிலே வாராதே இரான் என்கிற நெஞ்சையும்
அழித்து கொடு வந்து
தோற்றா நின்றதாயிற்று
(கோபப்பட வேண்டிய நெஞ்சையும் ஈடுபட வைத்து )

இடையன் ஊதுகிற குழல் –
பிராமணர் ஊதுகிற குழலுக்கு அகப்படாள் காணும் இவள் –
(ஆய்ச்சியர் வெண்ணெய் காணில் இவன் உண்ட வெண்ணெய் என்னும் போல் )

அஞ்சேல் என்பார்  இல்லையே–
மாஸூச -என்பார் ஒருவரையும் காண்கிறதில்லை –

—————————————————————

கீழ் குழல் ஓசையில் ஈடுபட்ட கோபி அவஸ்தை
இதில் சங்கு ஒலியில் ஈடுபட்ட கோடி அவஸ்தை –

கயம் கொள் புண் தலை களிறு உந்து வெந்திறல் கழல் மன்னர் பெறும் போரில்
மயங்க வெண் சங்கம் வாய் வைத்த மைந்தனும் வந்திலன் மறி கடல் நீர்
தயங்கு வெண் திரைத் திவலை நுண் பனி எனும் தழல் முகந்து இள முலை மேல்
இயங்கு மாருதம் விலங்கில் என்னாவியை எனக்கெனப் பெறலாமே —8-5-4-

கயம் கொள் புண் தலை களிறு உந்து வெந்திறல் கழல் மன்னர் பெறும் போரில் மயங்க –
எப்போதும் ஒக்க மதித்து இருக்கையாலே
துறட்டியாலே குத்துண்டு
அறாக் கயமான புண்ணை-
தலையிலே உடைத்தாய் இருக்கிற ஆனைகளை மேற் கொண்டு
தங்கள் கருத்திலே நடத்த வல்லராய்
பெரு மிடுக்கராய்
வீரக் கழலை உடைய ராஜாக்கள்
யுத்தத்திலே மயங்கும் படியாக  –

வெண் சங்கம் வாய் வைத்த மைந்தனும் வந்திலன் —
சகோஷோ தாரத்த ராஷ்ட்ரானாம் ஹ்ருதயாநி -என்கிறபடியே
ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை திருப் பவளத்தே வைத்தூதி
பிரதி பஷத்தை அழியச் செய்த மிடுக்கனும் வருகிறிலன்-

ரஷகன் ஆனவன் இவ்வளவில் வந்து உதவிற்றிலன்
பாதக பதார்த்தம் தானே (தென்றல் )
இனிக் கிருபை பண்ணி மீளில்
நான் எனக்கு உரியேனாய் இருக்கலாம் –

மறி கடல் நீர் தயங்கு வெண் திரைத் திவலை நுண் பனி எனும் –
கிளர்த்தியை உடைத்தாய் இருந்துள்ள கடலிலே நீரில் அசைந்து வாரா நின்றுள்ள
வெளுத்த திரையால் உண்டான திவலை யாகிற நுண்ணிய பனி என்று சொல்லப் படுகிற –

தழல் முகந்து இள முலை மேல் இயங்கு மாருதம் –
நெருப்பை முகந்து விரஹ சஹம் அல்லாத
முலையிலே எறட்டுக் கொண்டு
சஞ்சரியா நின்றுள்ள தென்றல் ஆனது –

விலங்கில் என்னாவியை எனக்கெனப் பெறலாமே –
ஓர் அளவில் ஸ்திரீ வதம் அன்றோ
இது ஆமோ என்று மீளில்
பாதகரே ரஷகராக வேண்டும் தசை காணும் –

ராவணா நீ என்னை பெருமாள் உடன் சேர்க்க வல்லையே -என்றாள் இறே பிராட்டி
நான் எனக்கு உரியேனாய் இருக்கலாம் –

———————————————————–

கீழே பூமிப் பிராட்டி பாரம் போக்க வெண் சங்கு ஏந்தியவன் -ஈடுபட்ட கோபிமார் தசை
இதில் பெரிய பிராட்டியாருக்கு ஆஸ்வாஸ கரமான கணையாழி –
பர்த்தாராம் இவ -அணைத்து – மகிழ்ந்த செயலில் ஈடுபட்ட கோபிமார் தசை

ஏழு மா மரம் துளை படச் சிலை வளைத்து இலங்கையை மலங்குவித்த
ஆழியான் நமக்கு அருளிய அருளொடும் பகல் எல்லை கழிகின்றதால்
தோழி நாம் இதற்கு என் செய்தும் துணை இல்லை சுடர் படு முது நீரில்
ஆழ வாழ்கின்ற வாவியை யடுவதோர் அந்தி வந்து அடைகின்றதே –8-5-5-

ஆழியான்-கணை யாழி உடைய சக்ரவர்த்தி திரு மகன்
வாழ்கின்ற வாவியை-ஜீவித்து அவனை அணைக்க நசை கொண்ட ஜீவன்

ஏழு மா மரம் துளை படச் சிலை வளைத்து –
பிறரை விஸ்வசிப்பித்து கார்யம் செய்யுமவன்  கிடீர்
விஸ்வசித்து ஆசையோடு இருக்கிற எனக்கு உதவாது ஒழிகிறான்

இலங்கையை மலங்குவித்த-
இலங்கையை ஒருவர் கூறை எழுவர் உடுக்கும்படி பண்ணின –

ஆழியான்-
கைகேயி யினுடைய வரத்திலே
அகப்படாதது கையிலே அறுகாழி  ஒன்றுமே போலே –

நமக்கு அருளிய அருளொடும் பகல் எல்லை கழிகின்றதால்
நமக்கு அவன் பண்ணின அருளோடு கூட
அதினுடைய பல ரூபமான
பகலும் போய் நின்றதாயிற்று –
அருள் போகவே பகலும் போம் இறே –

தோழி நாம் இதற்கு என் செய்தும் –
இனி இரண்டு அபலைகள் இருந்து
நோக்கிக் கொள்ளவோ –

துணை இல்லை –
அவன் இருந்தான் ஆகில்
அப்பொழுதை பிழைக்கவுமாம் இறே –

சுடர் படு முது நீரில் ஆழ
ஆதித்யன் ஆனவன் தான் தோற்றின கடலிலே புக்கு அஸ்தமிக்க

வாழ்கின்ற வாவியை யடுவதோர் அந்தி வந்து அடைகின்றதே –
ஆஸ்வாச கரனான அவனை இழந்து
பின்னையும் ஜீவிப்பதாக நசை பண்ணி இருக்கிற
பிராணங்களை முடிப்பதாக
அத்விதீயமாய் இருப்பதொரு சந்த்யை வந்து தோன்றா நின்றது –

——————————————————————

கையும் அறுகாழியில் ஈடுபட்ட கோபி தசை கீழே
கையும் வில்லுமாய் இருந்து கடலைக் கலக்கிய சாரங்க பாணி இடம் ஈடுபட்ட கோபி இதில் –
சஸ்திரம் தரித்தவரில் நான் ராமனாக இருக்கிறேன் என்றான் அன்றோ கீதாச்சார்யர் –
வில்லிறுத்து மெல்லியல் தோய்ந்தாய்
வில்லாண்டான் -போதும் போதும் என்று நிறுத்துவதே ஆண்மை

முரியும் வெண்டிரை முது கயம் தீப்பட முழங்கு அழல் ஏறி அம்பின்
வரி கொள் வெஞ்சிலை வளைவித்த மைந்தனும் வந்திலன் என் செய்கேன்
எரியும் வெங்கதிர் துயின்றது பாவியேன் இணை நெடுங்கண்  துயிலா
கரிய நாழிகை  ஊழியில் பெரியன கழியுமாறு அறியேனே —8-5-6-

த்ரி ஜாமா -மூன்று ஜாமங்கள் -என்று இருக்கும் இரவோ
ஊழி-கல்பம் -1000 சதுர்யுகம் -விட பெரியதாக உள்ளதே

முரியும் வெண்டிரை முது கயம் –
கிளர்ந்து சஞ்சரியா நின்றுள்ள
வெளுத்த நீரை உடைத்தான
முது கயம் உண்டு -பழையதான கடல் -அது

தீப்பட –
நெருப்பு கொளுத்தி எரிய
விக்கிரம சோழ தேவர் -இது என்ன வைக்கோல் போர் தான் –

முழங்கு அழல் ஏறி அம்பின் வரி கொள் வெஞ்சிலை வளைவித்த மைந்தனும் வந்திலன்-
த்வனி உண்டாம்படி நெருப்பு எரியா நின்றுள்ள
தீப்த பாவக சங்காசை -(யுத்த )-என்கிறபடியே
நெருப்பை தூவா நின்றுள்ள அம்பை உடைத்தாய்
தர்ச நீயமாய் இருக்கிற வில்லை வளைத்த
மிடுக்கன் வருகிறிலன்

என் செய்கேன் –
இனி ஒரு அபலை இருந்து நோக்கிக் கொள்ளவோ –
எரியும் வெங்கதிர் துயின்றது –
தன்னுடைய பிரகாசத்தாலே
பதார்த்த தர்சனத்தை பண்ணுவித்து
(பதார்த்தம் – சொல்லுக்கு பொருளாக -பதம் அர்த்தம் -காட்டும் ஸூர்யன் )
ஆஸ்வாசத்தை பண்ணக் கடவனான ஆதித்யனும் போய் அஸ்தமித்தான்-
ஈஸ்வர பார தந்த்ர்யத்தையே முடிய அனுஷ்டித்து
ஓர் அளவிலே தோற்றாதே
நித்ரையிலே அந்ய பரனானான் –
(ஜயத்ரதன் -ஆழி கொண்டு மறைத்து -அஸ்தமித்தது போல் காட்டி- பின்பும் தன்னைக் காட்டினான் அன்றோ )

பாவியேன் இணை நெடுங்கண்  துயிலா –
லோக த்ருஷ்டியான தான் கண் உறங்கினால்
என் கண் உறங்க ஆகாதோ
(த்யுமணி -ஆகாசம் உலகம் இவற்றுக்கு கண் ஸூரியன் )

கரிய நாழிகை  –
தனக்கு அநபிமதமான ராத்திரி கறுத்து இருக்கையாலே
அதுக்கு அவயவமான நாழிகையும் கறுத்து இருக்குமோ -என்கிறாள்

அன்றிக்கே
கரிய-கொடிதான நாழிகை என்னவுமாம்

அன்றிக்கே
அந்த சந்த்யா காலமானது –
கரிய நாழிகை -அந்தி  காலம் –

ஊழியில் பெரியன கழியுமாறு அறியேனே –
இது ஒரு கால் கால் வாங்கிற்றாம்படி அறிகிறிலேன்-

பண்டு சில கல்பங்கள் கழியும்படி கேட்டிருந்தோம்  –
இந் நாழிகை கால் வாங்கவும் காண் கிறிலோம்  –

—————————————————

பிராட்டிக்காக கடலைக் கலக்கியது மாத்திரம் அன்றிக்கே
கடலைக் கடைநதும் -அடைத்ததும் -சேஷ்டிதங்களில் அகப்பட்ட கோபி தசை இதில்
அஜிதன் திரு நாமம் கடைந்தவனது –
சக்ரவர்த்தி திருமகன் அடைந்தான் –

கலங்க மாக் கடல் கடைந்து அடைத்து இலங்கையர் கோனது வரை யாகம்
மலங்க வெஞ்சமத்து அடு சரம் துரந்த எம்மடிகளும் வாரானால்
இலங்கு வெங்கதிர் இள மதி யதனொடும் விடை மணி யடும் ஆயன்
விலங்கல் வேயினது ஓசையுமாய் இனி விளைவது ஓன்று அறியேனே —8-5-7-

கலங்க மாக்கடல் கடைந்து அடைத்து இலங்கையர் கோனது வரையாகம்
ஒருவராலும் பரிச்சேதிக்க அரிதான கடலானது
கீழ் மண் கொண்டு மேல் மண் எறியும் படி
பிராட்டிக்காக கடைந்து –
அவள் தனக்காக அடைத்து –
இலங்கைக்கு நிர்வாஹகன் ஆனவன் உடைய
வரை போலே திண்ணியதான மார்விலே

மலங்க வெஞ்சமத்து அடுசரம் துரந்த எம்மடிகளும் வாரானால்-
அம்பு தைத்து துடிக்கும்படி –
யுத்தத்திலே கொலை அம்பை நடத்தின
சர்வ ஸ்வாமி யானவனும்  வருகிறிலன் –

இலங்கு வெங்கதிர் இள மதி யதனொடும் விடை மணி (ஓசையும்) யடும் –
விளங்கா நின்று கொண்டு
சுடுகிற கிரணங்களை உடைய
பால சந்த்ரனோடே
வ்ருஷபத்தின் உடைய கழுத்து மணி ஓசையும்
முடியா நின்றது
இவை தான் போரும் இறே பாதகத்துக்கு

அதுக்கு மேலே –
ஆயன் விலங்கல் வேயினது ஓசையுமாய்-
இடையன் உடைய கையில் அபிஜாதமாய் இருந்துள்ள
குழல் ஓசையுமாய்
என்னை முடியா நின்றது –
(மூங்கில் மட்டுமே வில்லாகவும் புல்லாங்குழலாகவும் ஆன பாக்யம் பெற்றதே )

இனி விளைவது ஓன்று அறியேனே    –
நான் முடியவே அவனைக் கிடையாது –
அவன் போகவே அவனால் நோக்கப் படும் விபூதி த்வயமும் இல்லையாம்
ஆன பின்பு இது எவ்வளவாய் தலைக் கட்டும் என்று அறியேன் –

(நித்ய விபூதியும் கூட அழியுமாகும் தசை அன்றோ இவளுக்கு இதில் )

—————————————————————–

பிராட்டிக்கு அரியன செய்து -பண்டை நாள் படியே -கீழ் அனுபவம்
லோகத்தில் மரியாதா பங்கம் பிறவாமைக்காக மழு ஏந்தி ரக்ஷணத்தில் ஈடுபட்ட கோபி தசை இதில்

முழுது இவ்வையகம்   முறை கெட மறைதலும்  முனிவனும் முனி வெய்த
மழுவினால் மன்னர் ஆர் உயிர் வவ்விய மைந்தனும் வாரானால்
ஒழுகு நுண் பனிக்கு ஒடுங்கிய  பேடையை யடங்க வஞ்சிறைக் கோலித்
தழுவு நள்ளிருள் தனிமையில் கடியதோர் கொடு வினை அறியேனே —8-5-8-

முழுது இவ்வையகம்   முறை கெட மறைதலும்  முனிவனும் முனிவெய்த
பிராமணரை முன்னாக கொண்டு நடக்க கடவதான
ஷத்ரிய மரியாதை யானது குலைய
அத்தாலே
ஜமதக்னி பகவான் சீற
அது ஹேதுவாக இதுக்கு நிமித்த பூதரான ஷத்ரியரை இருப்பதொரு கால் –

மழுவினால் மன்னர் ஆர் உயிர் வவ்விய மைந்தனும் வாரானால்
மழுவாலே துணித்து பொகட்ட மிடுக்கை உடைய
ஸ்ரீ  பரசுராம ஆழ்வானும் வருகிறிலன் –

ஷத்ரிய மரியாதையை குலைக்கையாலும்
பிதாவை பரிபவிக்கையாலும்
ராஜ வம்சத்தை திரட்டி வைத்து
அறுத்து பொகட்டான் ஆயிற்று –

ஒழுகு நுண் பனிக்கு ஒடுங்கிய  பேடையை யடங்க வஞ்சிறைக் கோலித் தழுவு நள்ளிருள் தனிமையில் –
கூடுகளின் உள்ளே வந்து பாயா நின்றுள்ள
நுண்ணிய பனிக்கு
ஒடுங்குகிற பேடையை அடங்கும்படியாக சிறகை விரித்து
பஷிகள் அணைக்கிற காலத்திலே –

பிரிந்து தனி இருக்கிற இருப்பில் காட்டிலும்
கொடியதோர் கடு வினை அறியேனே –
அவசியம் அனுபோக்தவ்யம் -என்கிறபடியே
அனுபவித்து அல்லது நசியாத படி க்ரூரமாய் இருப்பதொரு
பாபம் உண்டாக அறிகிறிலேன் –

இன்னம் இதில் காட்டில் நரகத்தில் போய் அனுபவிப்பதோர்
அனுபவம் தான் உண்டாக அறிகிறிலேன் –

(வெந்நரகம் சேரா வகையே சிலை குனித்தான் -அம்பில் பட்ட பாடே போதுமே -இதுவே பெரிய நரகம் –
நரகத்தை நகு நெஞ்சே -சம்சாரமே நரகம் )

——————————-

கோபிமார்கள் தசைகளை அடைந்து நோவு பட்டாள் கீழ் எல்லாம்
இப்பொழுது சிலை இலங்கு பொன்னாழி பிராட்டி படியே அடைந்து நோவு படுகிறாள்
ஆகவே திருக்கண்ண புர பிரஸ்தாபம் இதில் –

கனம் செய் மா மதிள் கண புரத் தவனொடும் கனவினில் அவன் தந்த
மனம் செய் இன்பம் வந்து உள் புக  வெள்கி என் வளை நெக விருந்தேனை
சினம் செய் மால் விடைச் செறு மணி யோசை    என் சிந்தையைச் சிந்துவிக்கும்
அனந்தல் அன்றிலின் அரி குரல்  பாவியேன் ஆவியை யடுகின்றதே —-8-5-9-

கனம் செய் மா மதிள் கண புரத் தவனொடும் கனவினில் அவன் தந்த –
திண்ணியதாய் -அரணாகப் போரும்படியான
மதிளை யுடைய திருக் கண்ண புரத்திலே
எழுந்தி அருளி இருக்கிறவன் உடன்  ஸ்வப்ன கல்பமாம் படி
அவன் தந்த –

மனம் செய் இன்பம் வந்து உள் புக  வெள்கி என் வளை நெக விருந்தேனை –
மானச மாத்ரமாய்
பாஹ்ய சம்ஸ்லேஷம் இல்லாமையாலே
அது உள்ளே வந்து புகுர
அத்தாலே ஈடுபட்டு கையில் வளை கழலும் படியாக இருந்த என்னை –
(சிலை இலங்கு -தெள்ளியீர் போல் இங்கும் வளைகள் பிரஸ்தாபம் )

சினம் செய் மால் விடைச் செறு மணி யோசை    என் சிந்தையைச் சிந்துவிக்கும் –
சீற்றத்தையும் பெரிய வடிவையும் உடைத்தான
வ்ருஷபத்தின் உடைய
கழுத்திலே உண்டாய்
கண்ணுக்கு ஆபாசமாய் கார்யத்தில் முடித்து விட வற்றான
மணியினுடைய த்வநியானது
என்னுடைய ஹிருதயத்தை  சிதிலமாக்கா நின்றது –

அனந்தல் அன்றிலின் அரி குரல்  –
அனந்தலை உடைத்தான அன்றிலின் உடைய
தழு தழுத்த பேச்சானது –

பாவியேன் ஆவியை யடுகின்றதே —
கண்டத்துக்கு எல்லாம் பாத்த்ய கோடியிலே அந்வயிக்கும் படி
மகா பாபத்தை பண்ணின என்னுடைய
தர்மி லோபத்தை பண்ணுகையிலே ஒருப்படா நின்றது –

(இராப்பத்து -ஆயிரம் கால் தாண்டி ரிஷப கதி- உண்டே மணி ஓசையும் கேட்கலாம்
தர்மம் -ஆழ்வார் குணம் தர்மி -ஆழ்வார் ஜீவன் )

————————————————————

வார் கொள் மென் முலை மடந்தையர் தடங்கடல் வண்ணனைத் தாள் நயந்து
ஆர்வத்தால் அவர் புலம்பிய புலம்பலை யறிந்து முன்னுரை செய்த
கார் கொள் பூம் பொழில் மங்கையர் காவலன் கலிகன்றி ஒலி வல்லார்
ஏர் கொள் வைகுந்த மா நகர் புக்கு இமையவரோடும் கூடுவரே  —8-5-10-

ஆர்வத்தால்-கரை புரண்ட அபி நிவேசத்தால் –

வார் கொள் மென் முலை மடந்தையர் தடங்கடல் வண்ணனைத் தாள் நயந்து –
பிராப்த யௌவனைளான திரு வாய்ப்பாடியிலே பெண்கள்
கிருஷ்ணன் திருவடிகளை ஆசைப் பட்டு
கிட்டாமையாலே –

ஆர்வத்தால் அவர் புலம்பிய புலம்பலை யறிந்து முன்னுரை செய்த –
அபிநிவேசம்  கரை புரண்டு கூப்பிட்ட கூப்பீடை
புத்தி பண்ணி
அவ் வவஸ்தை பிறந்து கூப்பிட்ட  –

கார் கொள் பூம்பொழில் மங்கையர் காவலன் கலிகன்றி ஒலி வல்லார் –
நிரந்தரம் மேக சஞ்சாரம் உடைத்தான
பரந்த பொழிலை உடைய
திரு மங்கையில் உள்ளாருக்கு ரஷகராய் உள்ள ஆழ்வார் ஒலியை உடைத்தாம் படி
அருளிச் செய்த இத் திரு மொழியை அப்யசிக்க  வல்லார் –

ஏர் கொள் வைகுந்த மா நகர் புக்கு இமையவரோடும் கூடுவரே  –
பிரிவாற்றாமை கூப்பிடுவது தவிர்ந்து
நித்ய விபூதியில் நித்ய ஸூரிகளோடே கூடி
அஹம் அன்னம் அஹம் அன்னம் (தைத்ரியம் )-என்கிறபடியே
ஹர்ஷத்துக்கு போக்கு விட்டுக் கூப்பிட்டு
பின்னை
ஒரு காலும் புனராவ்ருத்தி இல்லாத  பேற்றைப் பெறுவர் –

————

ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.

தன் தன்மையில் மீதி வேய் ஆ மணி தென்றல் இருள்
அன்றில் அந்தி செய்ய நலிவு ஒன்றில்
ஒருவனாய்த் தான் நீலனாய் ஆய்ச்சியர் தம் அல்லல் உற்ற
உரைப்பது எவ்வாறு தொண்டீர் -75-

வேய் -மூங்கில் ஆகுபெயர் புல்லாங்குழலைக் குறிக்கும்
உற்ற -உற்றாமையின் கடைக்குறை -ஆழ்வார் ஒருவரே சாயங்காலப் பொழுதில்
ஆய்ச்சியர் அனைவரும் அனுபவித்த அல்லலை அடைந்தமை காட்டும் –
அவ்வாறு நலிவுற்ற ஆழ்வார் பிரிவாற்றாமையை தாம் கூற வாய் திறக்க வலி உண்டோ
ஆழ்வாருடைய அவா மண் திணி ஞாலமும் ஏழு கடலும் நீள் விசும்பும் கழியப் பெரிது அன்றோ –

————

ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.

தொண்டர்க்கு வேண்டிற்றுச் செய்யும் கணபுரத்தான்
நண்ணார் ஒழிப்பானை ஆறாக நண்ணவும்
நண்ணா நம் மேல் வினை என்றுத் தேற்றியும் கூறும்
அண்ணலை போற்றும் வியந்து -76-

வியந்து -விருப்புற்று /
வருந்தாது இரு மட நெஞ்சே நம் மேல் வினைகள் வாரா என்றும்
மாலாய் மனமே யாரும் துயரில் வருந்தாது இரு நீ -என்றும் தேற்றிய
ஆழ்வாரை விருப்பமுடன் போற்றுவதும் மேல் ஒரு நன்மை இல்லை –

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பெரிய திருமொழி-8-4—ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம்-

May 16, 2014

விண்ணவர் தங்கள் -பிரவேசம் –

இப்பிராட்டி தன் இழவைச் சொல்லி பரவசையாய் விழுந்து கிடந்தாள்-
தளர்த்தியாலே உடம்பு கிருசமாய்
குழலும் பேணாதே
பூவும் மறுத்துக் கிடக்கும் இறே-

இத்தை அறியாதே –
பழைய வாசனையைக் கொண்டு
மது பானம் பண்ணுவதாக சில தும்பிகள் வந்து பறந்தன –

அத்தைப் பார்த்து –
வாஹி வாத யத காந்தா தாம் ஸாம் ப்ருஷ்டவா மாமபிஸ் ப்ருச -ஸாம் ( யுத்த -5-)-என்னுமா போலே
(பிராட்டியை ஸ்பர்சித்து காற்று வீச பெருமாள் பிரார்தித்தது )
மதுவுக்கு கிருஷியைப் பண்ணி
மது பானம் பண்ணப் பாராய் -என்கிறாள் —

(கிருஷி பண்ண வேண்டியதே தும்பி -முதல் முயற்சி ஆச்சார்ய க்ருத்யம் தானே
நாயகன் மாலையில் உள்ள பரிமளம் கொண்டு வீசி -விரஹ தாபம் தீர்க்க த்ருஷ்டாந்தம்
அங்குள்ள வண்ணம் கொண்டு வர முடியாதே -பரிமளம் கொண்டு வந்து –
சீரான கல்யாண குணங்களை உபதேசித்து -ஆச்சார்ய க்ருத்யம் )

————————————————————–

விண்ணவர் தங்கள் பெருமான் திரு மார்வன்
மண்ணவ ரெல்லாம்   வணங்கும் மலி புகழ் சேர்
கண்ண புரத் தெம்பெருமான் கதிர் முடி மேல்
வண்ண நறுந்துழாய் வந்தூதாய்  கோற்றும்பீ  –8-4-1-

விண்ணவர் தங்கள் பெருமான் திரு மார்வன் –
நித்ய ஸூரிகளும் பிராட்டிமாரும் அனுபவிக்கிற
விஷயம் இது வன்றோ –
நான் உன்னைக் குடிக்கச் சொல்லுகிற வேப்பங்குடி நீர் –
சூட்டு நன் மாலைகள் தூயனவேந்தி கொண்டு-(திரு விருத்தம் ) நித்ய ஸூரிகள் அடிமை செய்ய
பிராட்டியும் தானுமாய் இருக்கும் ஆயிற்று –

(உன்னைப் பிரிந்து அன்றோ அவனும் என்ன
அக் குறை இல்லை என்று நித்ய ஸூரிகளும் பிராட்டிமாரும் அனுபவிக்கும் விஷயம் அன்றோ
விண்ணவர் பெருமான் என்று இல்லாமல் விண்ணவர் தங்கள் பெருமான் -பகல் ஓலக்கம் இருக்கும் பெருமான்
நிரதிசய போக்ய அனுபவத்தால் வந்த -அனுபவித்தாள் தங்கள் தாங்களாக இருக்கிறார்கள் அன்றோ அங்கு )

மண்ணவ ரெல்லாம்   வணங்கும் –
நித்ய விபூதில் உள்ளார் எல்லாரும் அதிகாரிகளாய் இருக்குமா போலே யாயிற்று
இங்கு உள்ளார் எல்லாரும் அதிகாரிகளாம் படியாகத் தான் வந்து நிற்கிற நிலை –
அங்கு அநாதாரிகள் ஒருவரும் இல்லாதாப் போலே
இங்கு எத்தனையேனும் தாழ்ந்தாரும்  அதிகாரிகளாம் படியாக வாய்த்து வந்து நிற்கிறது –

மலி புகழ் சேர் -கண்ண புரத் தெம்பெருமான் –
சீல குணம் சத் கார்ய வாதம் கொண்டு அறிய வேண்டும்படியாய் இருக்கும் –
அங்கு பிரமாணங்கள் சொல்ல அறியும் இத்தனை –
இங்கு எத்தனையேனும் தாழ்ந்தாருக்கும் முகம் கொடுத்துக் கொண்டு நிற்கிற நிலையைக்
கண்ணாலே காண்கையாலே அது ஸ்பஷ்டம் ஆவது இங்கே யாயிற்று –

(இங்கு தானே இவன் குணவான் என்பது ப்ரத்யக்ஷம்
அங்கும் இருக்கும் என்று அனுமானித்து தானே அறியலாம்
வேதம் சப்தம் மூலமும் அறியலாம்
ஆகவே இங்கே தானே ஸ்பஷ்டம் )

கதிர் முடி மேல் –
இப்படி உபய விபூதிக்கும் கவித்த தாகையாலே
ஒளியை உடைத்தாய் இருக்கிற
திரு வபிஷேகத்தின் மேலே –

வண்ண நறுந்துழாய் வந்தூதாய்  –
செவ்வி மாறாதே பரிமளத்தை உடைத்தாய் இருக்கிற
திருத் துழாயிலே   படிந்து
அங்குத்தை பரிமளத்தை கொடு வந்து இங்கே ஊது –

கோற்றும்பீ  –
கோல்களிலும் பணை களிலும் வைத்த மதுவை பானம் பண்ணக் கடவ உன்னை
சர்வ ரஸ -என்கிற வஸ்துவைப் போய்
அனுபவி என்று அன்றோ சொல்கிறது –

ஸ்வாபதேசம்
சப்தாதி விஷய நிஸ் சாரதையும் -( மலர் சருகாய் இருக்கும் இங்கு -அல்பம் அஸ்திரம் )
பகவத் அனுபவ நிரதிசய சாரவத்தையும்
சிஷ்யருக்கு அறிவிக்கிறார் (தும்பி -சம்சாரிகள் -ஆழ்வார் ஆச்சார்யர் )

———————————————

மண்ணவர் எல்லாம் வணங்கும் என்னா நின்றாய்
மண்ணவர் தேவதாந்த்ர பஜநம் பண்ணுகிறார்கள்
மானிடர் அல்லர் -அசத்துக்கள்
வைதிகர் எல்லாரும் இவனையே தொழுகிறார்கள்
வேத வேத்யன் இவனே என்கிறார் –

வேத முதல்வன் விளங்கு புரி நூலன்
பாதம் பரவிப் பலரும் பணிந்தேத்தி
காதன்மை செய்யும் கண்ண புரத் தெம்பெருமான்
தாது நறுந்துழாய் தாழ்ந்தூதாய் கோற்றும்பீ –8-4-2-

காதன்மை-காதல் -ஸ்நேஹம்
தாழ்ந்து -அவகாஹித்து -உள் புகுந்து

வேத முதல்வன் –
புருஷர்கள் தங்கள் ஆஸ்ரயங்கள் தோற்றச் சொன்ன வஸ்துவைப் ( தேவதாந்த்ரங்களைப் )பற்றிச் சொல்லுகிறேனோ –
ஆகமாதிகளில் சொல்லப் படுகிற வஸ்துவைப் பற்றிச் சொல்லுகிறது அன்று  –
அபௌருஷேயம்  ஆகையாலே நிர் தோஷமான  வேதைக சமதி கம்யன் ஆகையாலே
வந்த பிரதாந்யத்தை உடையவன் –
(அவர்கள் எல்லாம் பேச நின்ற பெருமையை மட்டுமே உடையவர்கள் அன்றோ )

விளங்கு புரி நூலன் –
ஹிரண்மய புருஷ -என்கிறபடியே
அழகிய விக்ரஹத்தையும்
அதிலே விளங்கா நின்றுள்ள திரு யஞ்ஞோபவீதத்தையும் உடையவன் –

பாதம் பரவிப் பலரும் பணிந்தேத்தி காதன்மை செய்யும் கண்ண புரத் தெம்பெருமான் –
திருவடிகளை அக்ரமமாக ஏத்தி
அதிலே விழுந்து
எல்லாரும் ஸ்தோத்ரம் பண்ணி
ஸ்நேஹத்தைப் பண்ணுகிற
நிதித்யாசிதவ்ய– (இடையூறு இடைவெளி இல்லாமல் )-என்று விதிக்கிற விஷயத்தில் அன்றோ
நான் உன்னைப் பற்றச் சொல்லுகிறது

(ஸ்வரூப ரூப மஹாத்ம்யம் சொல்லி
திருவடிகள் -அவனையே சொல்லும்
தாத பாதர்–தந்தையின் கால் அல்ல தந்தை என்றே அர்த்தம்
பாதம் பரவி–என் பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு -அவனுக்கு )

தாது நறுந்துழாய் தாழ்ந்தூதாய் கோற்றும்பீ –
பூத்துச் செவ்வியை உடைத்தாய் இருக்கிற
திருத் துழாயிலே தாழ்ந்து
இங்கே வந்து ஊத வேணும் –

——————————————–

வேத வேத்யன் என்று இவனைச் சொன்னாய
தேவதாந்தரங்களும் சில பலன்களைக் கொடுப்பதும் வேதம் சொல்லுமே
ஸர்வ தேவ நமஸ்காரங்கள் கேசவனையே சொல்லும்
அவை ஷூத்ர பலன்கள்
அவற்றை விலக்கி பரம புருஷார்த்தம் இதில் –

(ஓடி ஓடிப் பலபிறப்பும் பிறந்து, மற்றோர் தெய்வம்
பாடி ஆடிப் பணிந்து பல்படி கால் வழி ஏறிக் கண்டீர்;
கூடி வானவர் ஏத்த நின்ற திருக் குருகூரதனுள்
ஆடு புட் கொடி ஆதி மூர்த்திக்கு அடிமை புகுவதுவே–-ஸ்ரீ திருவாய் மொழி-4-10-7-)

விண்ட மலரெல்லாம் ஊதி நீ என் பெறுதி
அண்ட முதல்வன் அமரர்கள் எல்லாரும்
கண்டு வணங்கும் கண்ண புரத் தெம்பெருமான்
வண்டு நறுந்துழாய் வந்தூதாய் கோற்றும்பீ –8-4-3-

விண்ட மலரெல்லாம் ஊதி நீ என் பெறுதி-
திறந்து கிடந்த வாசலில் எல்லாம் நுழைந்து திரிவாரைப் போலே
(நாயைப் போல் விஷயாந்தரங்களில் ஈடு பட்டுத் திரியும் சம்சாரிகள் )
இருந்ததீ உன்னுடைய யாத்ரை –
இதழ்   அலரும் அளவும் அவசரம் பார்த்து நின்றால்
மற்று உள்ளவற்றில் அடங்கலும் மது ஒழுகிப் போமே-
இது தன்னிலும் உள்ளது அல்பமாய் அஸ்திரமாய் இருக்கும்
அது தான் முதலிலே கிடையாதே
கிடைத்ததோ அத்யல்பம்
அல்ப பலத்துக்கு யத்னம் பண்ணுவார் உண்டோ –

அண்ட முதல்வன் –
அண்டத்துக்கு நிர்வாஹகன் –

அமரர்கள் எல்லாரும்  கண்டு வணங்கும் கண்ண புரத் தெம்பெருமான் வண்டு நறுந்துழாய் –
தங்களை ஆஸ்ரயணீயராக நினைத்து
இறுமாந்து இருக்கிறவர்கள் எல்லாரும்
அவ்விறுமாப்பைப் பொகட்டு
திருவடிகளிலே ஆஸ்ரயிக்கும் படி
திருக் கண்ண புரத்திலே நிற்கிறவன் –

(மனிதற்குத் தேவர் போல் தேவர்களுக்கும் தேவன் இவன் ஒருவனே அன்றோ

தாராய தண் துளப வண்டுழுத வரை மார்பன் என்கின்றாளால்
போரானைக் கொம்பொசித்த புட் பாகன் என்னம்மான் என்கின்றாளால்
ஆரானும் காண்மின்கள் அம் பவளம் வாயவனுக்கு என்கின்றாளால்
கார் வானம் நின்றதிரும் கண்ண புரத் தம்மானைக் கண்டாள் கொலோ–8-1-4- )

வந்தூதாய் கோற்றும்பீ –
சஜாதீயர் உடைய   யாத்ரை அமையாதோ உனக்கு –

————————————————————

தேன் வரவும் நீயே க்ருஷி பண்ணி பின்பு அனுபவிக்க வேணும் –
ஆச்சார்யர் பரகத ஸ்வீ காரம்-அவரே பலனையும் அனுபவிக்கும் படி –
அமரர்கள் அனைவரும் கண்டு வணங்கும்படி இவனுக்கு ஏற்றம் என்ன என்று கேட்க
தன்னை அழிய மாறியும் வேதங்களை கொடுத்த ஏற்றம் உண்டே

நீர் மலிகின்றதோர் மீனாய் ஓர் ஆமையுமாய்
சீர் மலின்ற தோர் சிங்க வுருவாகிக்
கார் மலி வண்ணன் கண்ண புரத் தெம்பெருமான்
தார் மலி தண்டுழாய் தாழ்ந்தூதாய் கோற்றும்பீ –8-4-4-

ஓர்-அத்விதீயம்
சீர் -வீர ஸ்ரீ
கார்மலி வண்ணன் கண்ண புரத் தெம்பெருமான்-நீல மேகப் பெருமாள் தானே இவன்

நீர் மலிகின்றதோர் மீனாய் ஓர் ஆமையுமாய்
கடலிலே அக் கடல் கண் செறி இட்டால் போலே
(நெருக்கமாக வியாபித்து ஒரு லக்ஷம் யோஜனை-10 லக்ஷம் mile)
இருக்கிற வடிவை உடைய மத்ஸ்யமாய் –
அலைகடல் நீர் குழம்ப -(11-4-)-என்னக் கடவது இறே –
கடலிலே நீர் குழம்பிச் சேறாம் படி இறே கொண்ட வடிவின் பெருமை –
அன்றிக்கே
ஜலசர ஜாதியுமான வடிவை உடைய ஆமையாய் –
(தண்ணீரில் நீந்தும் -ஜலத்தில் பிறந்த இரண்டு உருவங்கள் என்றுமாம் )

நிலையிடமெங்கும் இன்றி நெடு வெள்ளம் உம்பர் வளநாடு மூட விமையோர்
தலையிட மற்று எமக்கோர் சரண் இல்லை யென்ன அரணாவான் என்னும் அருளால்
அலைகடல் நீர் குழம்ப வகடாவோடி அகல் வான் உரிஞ்ச முதுகில்
மலைகளை மீது கொண்டு வருமீனை மாலை மறவாது இறைஞ்சு என் மனனே -11-4-1-

சீர் மலின்ற தோர் சிங்க வுருவாகிக்  –
வீர ஸ்ரீ யால் குறைவற்ற நரசிம்ஹமாய் –
உகவாதவனுக்காக கொண்ட வடிவையோ நான் பற்றச் சொல்லுகிறது –
(ஹிரண்யன் வரம் படி அன்றோ அந்த திவ்ய மங்கள விக்ரஹம்
பிராட்டியே கிட்ட முடியாத குரூரம் அன்றோ )

கார் மலி வண்ணன் கண்ண புரத் தெம்பெருமான் –
எல்லாருக்கும் மேல் விழுந்து பற்ற வேண்டும்படியான
வடிவை உடையனுமாய்க் கொண்டு
திருக் கண்ண புரத்திலே நிற்கிற
சர்வேஸ்வரனை அன்றோ பற்றச் சொல்லுகிறது –

தார் மலி தண்டுழாய் தாழ்ந்தூதாய் கோற்றும்பீ –
பூமிக்கு ஸ்ரமஹரமாய் இருந்துள்ள
திருத் துழாயிலே —

(கிருஷ்ணன் கிருஷ் பூமி வாச -கிருஷ்ண துளஸீ –
சாத்திக் கொண்ட தாலேயே கறுத்த திருமேனி என்றும் –
அவன் ஸ்பர்சத்தாலே இதுவும் கறுப்பானது )

———————————————

கீழ்ப்பாட்டில் சொன்ன அர்த்தங்கள் பின்னாட்ட
தேவர்கள் வணங்கும் சர்வேஸ்வரன் -இப்பாசுரம் –

ஏரார் மலரெல்லா மூதி நீ என் பெறுதி
பாரார் உலகம் பரவப் பெரும் கடலுள்
காராமையான கண்ண புரத் தெம்பெருமான்
தாரார் நறுந்துழாய் தாழ்ந்தூதாய் கோற்றும்பீ —8-4-5-

ஏரார் மலரெல்லா மூதி நீ என் பெறுதி  –
ஒன்றிலே உன் அபேஷை குறைவறக் கிடக்கிறது அன்றே –
நிறம் கொண்டு பிரமிக்கிற இத்தனை இறே உள்ளது –
எங்கும் புக்கும் ஆத்ம ரஷணம்  பண்ணினாய்
என்னும் வார்த்தை கேட்கப் பெற்றிலையே –

(திறந்து கிடைக்கும் வாசல்கள் எல்லாம் நுழைந்து என் பெற்றாய்
அநந்யார்ஹன் ஆக வேண்டாவோ
தேக ரக்ஷணம் தானே மது பருகுவது
கடக க்ருத்யம் பண்ண வேண்டாவோ -ஸ்வரூபம் நிலை பெற )

பாரார் உலகம் பரவப் –
மணம் மிக்கு இருந்துள்ள லோகம் எல்லாம் பரவ –

பெரும் கடலுள் -காராமையான கண்ண புரத் தெம்பெருமான் –
கீழ்ச் சொன்னது தான் பின்னாட்டுகிற படி
காராமை -பெரிய ஆமை –

தாரார் நறுந்துழாய் தாழ்ந்தூதாய் கோற்றும்பீ –
பூமிக்கு செவ்வி பெற்று இருந்துள்ள
திருத் துழாயிலே
தாழ்ந்தூதாய் –

—————————————————–

திருக்கண்ண புரம் -சொல்லாமல் இப்பாசுரம்
ஆமைக்கு அநந்தரம் வராஹ அவதாரம்
அத்தைச் சொல்லிக் கொண்டு சேர்ப்பாரும் உண்டு என்று தாத்பர்யம் சங்கதி –

1-நீ அங்கே சென்றால் முகம் தருவிப்பார் உண்டு
2-அவன் தான் விரோதி நிரசன சீலன்
3-என்றும் ஒக்க ஆபத்துக்களில் உதவிப் போந்தவன்
4-உதவாது ஒழியிலும் விட ஒண்ணாத வடிவு அழகை உடையவன்
ஆன பின்பு அவன் பக்கலிலே சென்று
இங்கே வந்தூதப் பாராய் -என்கிறாள் –

மார்வில் திருவன்  வலனேந்து சக்கரத்தன்
பாரைப் பிளந்த பரமன் பரஞ்சோதி
காரில் திகழ் காயா வண்ணன் கதிர் முடி மேல்
தாரில் நறுந்துழாய் தாழ்ந்தூதாய் கோற்றும்பீ–8-4-6-

கதிர் முடி-பார் அளந்த பேர் அரசு விசும்பு அரசு என்னை வஞ்சித்த ஓர் அரசு –
கிரீட மகுட சூடாவதம்ச -மூன்று அரசுக்கு உரிய திரு அபிஷேகம்
திருவடி திருமஞ்சனம் தான் -64 சதுர் யுக பெருமாள் அன்றோ

மார்வில் திருவன் –
திரு மார்விலே பிராட்டி எழுந்து அருளி இருந்து
அவன் தன் ஸ்வா தந்த்ர்யத்தாலே
இத் தலையில் குற்றம் கண்டு
அழன்று கை விடும் அன்று
தன் முழு நீர்மையாலே அவனை ஆற்றி
பொருந்து விடுமாயிற்று –
(புருஷகார க்ருத்யத்துக்கு அழகான விளக்கம்
அழன்று கை விடும் அன்று-கோபித்து ஷிபாமி -ந க்ஷமாமி என்பானே )

வலனேந்து சக்கரத்தன்-
அவள் சொல்ல அன்று இறே
கையிலே திரு ஆழியை ஏந்திற்று
எப்போதும் கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான் இறே – (பெரிய திருவந்தாதி)

பாரைப் பிளந்த பரமன்-
அண்ட பித்தியிலே புக்குச் சேர்ந்து
உரு மாய்ந்த பூமியைக் கை விடாதே
அதுக்கு ஈடாய் இருப்பதோர் வடிவைக் கொண்டு புக்கு
இடந்து எடுத்துக் கொண்டு ஏறி
ரஷணத்தில் தன்னை எண்ணினால் பின்னை
ஒருவரை எண்ண ஒண்ணாத படி இருக்கிறவன் –

(ஞானப்பிரானை அல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே
பரமன் -பரஞ்சோதி -ப்ராப்யன்
அஸ்மாத் சரீராத் சமுதாயா -பரஞ்சோதி உப சம்பத்தயே ஸ்வேன ரூபேண)

பரஞ்சோதி  –
எல்லாருக்கும் ஒக்க பிராப்யனாய் இருக்குமவன் –

காரில் திகழ் காயா வண்ணன் –
பிராப்யன் அன்றாகிலும்
விட ஒண்ணாத வடிவு அழகு
கறுப்பு இத்தனையுமே அதுக்கு ஏற்றமாக சொல்லலாவது
பரிமளம் இத்தனையும் அவனுக்கு ஏற்றமாய் இருக்கும் ஆயிற்று –

கதிர் முடி மேல் தாரில் நறுந்துழாய் தாழ்ந்தூதாய் கோற்றும்பீ –
ஆதி ராஜ்ய பிரகாசமான
திரு அபிஷேகத்தின் மேலே உண்டான
செவ்வியை உடைத்தான திருத் துழாயிலே படிந்து
இங்கே வந்தூதப் பாராய் –
(இவனே தேவாதி ராஜன் கோள் சொல்லிக் கொடுக்குமே )

———————————————–

ஏனமாய் தனது உடமையை எடுத்தபடி கீழே
வாமனனாய் உடைமையை இரந்து அழிய மாறி கொண்டது இதில்
அநேக அவதாரங்கள் -கதம்பம் போல்
கல்கி அவதாரத்துக்கு தீஷித்து இருக்குமவன்
மது -அரசன் -மது கைடவர் நிரசித்தவன்
காமன் தன் தாதை-ஸாஷாத் மன்மத -அவனுக்கும் உத்பாதகன்

வாமனன் கற்கி மதுசூதனன் மாதவன்
தார் மன்னு தாசரதியாய தட மார்வன்
காமன் தன் தாதை திருக் கண்ண புரத் தெம்பெருமான்
தாம நறுந்துழாய் தாழ்ந்தூதாய் கோற்றும்பீ –8-4-7-

வாமனன் –
தன்னுடைய உடைமையை பெருகைக்கு
தானே அர்த்தியாய் வருமவன் –
(மீட்கை நன்றே பிச்சை புகினும் மீட்கை நன்றே
நமக்குத் தானே பிச்சை புகினும் கற்கை நன்றே )

கற்கி-
பிரதி பஷத்தை துகைக்க கடவனாக
தீஷித்து இருக்கிறவன் –

மதுசூதனன்-
முன்பே முதல்களைப் பிடுங்கித் தந்தவன் –
(முதல்கள் -வேதங்கள் )

மாதவன் –
இக்குணங்களுக்கு  அடியாக
ஸ்ரீ யபதியாய் உள்ளவன் –

தார் மன்னு தாசரதியாய தட மார்வன்  –
ரஷணத்துக்கு தனி மாலை இட்டு இருக்கையாலே
வளைத்து கார்யம் கொள்ளலாம் படி
இருக்குமவன் –
(விரதம் -தீஷிதம் -விரத சம்பன்னன் இவன் தானே
நீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது -தடுத்தும் வளைத்தும் பிரார்த்திக்கலாம் )

காமன் தன் தாதை திருக் கண்ண புரத் தெம்பெருமான் –
அழகாலே நாட்டை வெருட்டித் திரிகிற
காமனுக்கும் கூட உத்பாதகன் –
(அங்க தேசம் –அநங்கனாக ஆக்கப் பட்டான் -அங்க ஹீனன் ஆனான் -இங்கே )

தாம நறுந்துழாய் தாழ்ந்தூதாய் கோற்றும்பீ –
மாலையாய்
பரிமளிதமான
திருத் துழாயிலே தாழ்ந்து
இங்கே வந்தூதாய் –

——————————————-

தாசாரதி -வீரப்பாட்டை அருளிச் செய்கிறார் –
வாளரக்கர் காலன்-இவனே ராமன் -பஞ்ச கிருஷ்ண க்ஷேத்ரமாக இருந்தாலும் நடந்து காட்ட மேலை வீடு தானே
விபீஷணனுக்கு தனி சந்நிதி -ஸ்ரீ ரெங்கத்திலும் உண்டே -கீழ வீட்டிலும் உண்டு
அமாவாசை தோறும் -உத்சவ பத்து நாள்களிலும் கைத்தல சேவை
வில்லை சாதித்திக் கொண்டே நடை அழகு காட்டி சேவை
மன்னு புகழ் -குலசேகரப்பெருமாள் அனுபவமும் உண்டே

நீல மலர்கள் நெடு நீர் வயல் மருங்கில்
சால மலரெல்லாமூதாதே  வாளரக்கர்
காலன் கண்ண புரத் தெம்பெருமான் கதிர் முடி மேல்
கோல நறுந்துழாய் கொண்டூதாய் கோற்றும்பீ —8-4-8-

நீல மலர்கள் நெடு நீர் வயல் மருங்கில் -சால மலரெல்லாம் –
மிக்க நீரை உடைத்தாய்
வயலிலே உண்டான நீலப் பூக்கள் –
அந்த வயலின் உடைய பர்யந்தத்திலே
உண்டான பூக்கள் எல்லாவற்றையும் –

ஊதாதே –
அல்ப பிரயோஜனதுக்காகவும் யத்நியாதே –
பூவாகில் மது இன்றிக்கே இருக்குமோ என்று
ப்ரம-ஜனகமாம் அதுவே யாயிற்று உள்ளது –
(ப்ரயோஜனாந்தரங்கள் -ஸுகம் அல்பமாகவும் அஸ்திரமாகவும் இருந்தாலும் மயக்கும் )

வாளரக்கர் காலன் கண்ண புரத் தெம்பெருமான் கதிர் முடி மேல் –
சா யுதரான விரோதிகளுக்கும் மிருத்யு வானவன் –
திருக் கண்ண புரத்திலே வந்து
சந்நிஹிதனான சர்வேஸ்வரனுடைய
புகரை உடைத்தான  திரு அபிஷேகத்தின் மேலே உண்டான-

கோல நறுந்துழாய் கொண்டூதாய் கோற்றும்பீ –
தர்ச நீயமான
திருத் துழாய் மாலையிலே வந்தூதாய் –

————————————————-

இதிலும் திருக்கண்ண புரம் பத பிரயோகம் இல்லை -ஆறாம் பாசுரம் போல் –
கீழே தாசாரதி வீர ஸ்ரீ விளக்கி
காமன் தன் தாதை -கிருஷ்ண அவதாரம் அனுபவம் இதில் –
7-8-9- மூன்றும் இப்படி ஒரு பேடிகை

நந்தன் மதலை நில மங்கை நற்துணைவன்
அந்த முதல்வன் அமரர்கள் தம் பெருமான்
கந்தங்கமழ்   காயா வண்ணன் கதிர் முடி மேல்
கொந்து நறுந்துழாய் கொண்டூதாய் கோற்றும்பீ —8-4-9-

நில மங்கை–ஸ்ரீ பூமா தேவி —
ஸ்ரீ பூவராஹ ஸ்வாமி -ஸ்ரீ முஷ்ணம் -ஸ்ரீ யான பூமி தேவி என்றும் ஸ்ரீ யும் பூமா தேவியும் என்றும்
அந்த முதல்வன்-அந்தமும் முதல்வனும் -ஸம்ஹார -ஸ்ருஷ்ட்டி –
அழிப்பதில் முதல்வன் -பர தேவதை -சம்ஹார நிர்வாககன் -என்றுமாம்

நமக்கு அபூமியான இருக்கிற இடத்தில்
போகச் சொல்லுகிறேனோ –

நந்தன் மதலை-
ஸ்ரீ நந்தகோபர் திரு மகனாய் வந்து
அவதரித்து ஸூலபன் ஆனவன் –
(மா மதலைப்பெருமாள் திருச்சேறையில் சேவை உண்டே )

நிலமங்கை நற்துணைவன்-
பிறந்தது பூமி பாரத்தை
போக்குகைக்காக   வாயிற்று –
(வராஹ கோபாலர் -வம்ச பூமிகளை உத்தரிக்க அவதாரங்கள்
பூமியே பாரம் இல்லாமல் கோட்டிடை கொண்டவனும் பூ பாரம் போக்கியவனும் )

அந்த முதல்வன் –
சர்வ சம்ஹர்த்தா வுமாய்
சர்வ ஸ்ரஷ்டாவுமானவன் –
(உப சேஸனம் -ஊறு காய்-தொட்டு உண்டு -மிருத்யு தேவதையும் ஸம்ஹரிப்பவன் இவனே
மத்த ஸர்வம் அஹம் ஸர்வம் )

அமரர்கள் தம் பெருமான் –
அயர்வறும் அமரர்கள் அதிபதி –

கந்தங்கமழ்   காயா வண்ணன் கதிர் முடி மேல் –
பரிமளம் கந்தியா நின்றுள்ள
காயம் பூ போலே இருக்கிற திரு நிறத்தை உடையவன் –
காயாவோடு ஒப்புச் சொல்ல லாவது நிறம் மாத்ரமே –
சர்வ கந்த சர்வ ரஸ -( சாந்தோக்யம் )-என்கிற ஏற்றமே  உண்டு –

கொந்து நறுந்துழாய் கொண்டூதாய் கோற்றும்பீ –
கொத்தாய் பரிமிளதமாய் இருந்துள்ள –

————————————————

நாம் பாட தும்பி நீ நினைக்க வேண்டுமே –
ஆச்சார்யர் சங்கல்பிக்கவே – கை புகவே அனைத்துமே கிட்டும் –
காமன் சோமன் குயில் காலிலும் விழுந்து கூடிடு கூடல் என்பார்கள் அன்றோ –

வண்டமரும் சோலை வயலாலி நன்னாடன்
கண்ட சீர் வென்றிக் கலியன் ஒலி மாலை
கொண்டல் நிற வண்ணன் கண்ண புரத்தானைத்
தொண்டரோம் பாட நினைந்தூதாய்   கோற்றும்பீ -8-4-10-

ஒலி -இவரது என்றும்
வயலாலி நன்னாடன் கண்ட சீர்–உலகோர் கண்டு புகழ்ந்து பாடும் ஒலியும்

நிகமத்தில் –
வண்டமரும் சோலை வயலாலி நன்னாடன் –
வண்டுகள் மதுபான மத்தமாய்க் கொண்டு த்வனியா நின்றுள்ள
சோலையையும்
வயலையும் உடைத்தான
திருவாலி நாட்டுக்கு நிர்வாஹகராய் உள்ளார் –

கண்ட சீர் வென்றிக் கலியன் ஒலி மாலை –
பிரமாணங்களில் கேட்டுப் போகை அன்றிக்கே
கண்ணாலே காணலாம் படியான
நிரவதிக சம்பத்தை உடையருமாய்
பிரதி பஷத்தை வென்று இருப்பாருமான
ஆழ்வார் ஒலியை உடைத்தாம் படி சொன்ன
இத் தொடையைக் கொண்டு –

கொண்டல் நிற வண்ணன் கண்ண புரத்தானைத் –
ஸ்ரமஹரமான வடிவை உடையனாய்க் கொண்டு
திருக் கண்ண புரத்திலே வந்து சந்நிஹிதனான
சர்வேஸ்வரனை –

தொண்டரோம் பாட நினைந்தூதாய்   கோற்றும்பீ –
சேஷ பூதரான நாங்கள் இவற்றைக் கொண்டு பாடும்படியாக
நீ உன் ஹிருதயத்திலே கொண்டு
அவன் பக்கலிலே அறிவித்து
எங்களுக்கு அவன் முகம் தரும்படி பண்ணி
எங்கள் குறையைத் தீர்க்கப் பாராய் –
(வாஸா தர்மம் அவாப்னோதி -ஸீதா பிராட்டி திருவடியிடம் பிரார்த்தித்தால் போல்)

இவர் ஒருவரும் ஆஸ்வஸ்தர் ஆகவே எல்லாரும்
ஆஸ்வஸ்தர் காணும் –

(ஸ்ரீ நிவாச திருக்கல்யாணம் தான் உண்டு அனைவருக்கும் பசி போனதே
துர்வாசர் -திரௌபதி -கண்ணன் உண்டதும் அனைவருக்கும் பசி போனதே )

(திருத்துழாய் தேன் இவற்றால் -ஆழ்வாரை மருள் ஏற்ற
அத்தாலே தாமாக பேசும் பொழுது பிராட்டி
தும்பிகளைப் பார்த்து இப் பதிகம் பாடுவதே பலம் என்னும் இடம் தோன்ற வியாக்யானம்
தொண்டரும் -நம்மையும் கூட்டிக் கொண்டு தனது பேறு நமக்கு எல்லாருக்கும் கிட்டும் என்கிறார் )

———–

ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.

விண்டு ஒழியத் தன் வாட்டம் கண்ணபுரத்தான் துளவம்
வண்டான தொண்டரை வசமத்து கொண்டூத
வேண்டி உய்யும் விரகு கூறும் பரகாலன்
வேண்டினார்க்குத் தஞ்சமாம் தந்தை –74–

அடியாரை வண்டாக /
பிராகிருத தந்தையிலும் விருத்தி தஞ்சமாகிய தந்தை -ஆத்மாவின் உஜ்ஜீவனத்துக்கு –

—————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பெரிய திருமொழி-8-3—-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம்-

May 16, 2014

திருக்கண்ண புரம் -பத்து பதிகங்கள் -முதல் ஐந்துமே பெண்ணான மணி வல்லிப் பேச்சு –
முதல் இரண்டும் திருத்தாயார் பாசுரங்கள் -அடுத்த மூன்றும் தலைமகள் பாசுரம்
அடுத்த ஐந்தும் தானான பாசுரம்
மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் இவனே –
தானே வைகுந்தம் கொடுக்கும் -பிரான் -உபகாரகன் –

மாலுக்கு -இழந்தது சங்கே கற்பே மாண்பே இத்யாதி -திருத்தாயார் திருவாய் மொழி –
தானே சொல்ல முடியாத தசை போல் கீழ் இரண்டும்

அதில் பலவற்றை இழந்ததை சொல்ல
இங்கு தானே இழந்ததை சொல்லிக் கொள்கிறாள்
இங்கு வளையல்களை மட்டும் இழந்தவற்றை பத்தும் பத்துமாக அருளிச் செய்கிறார்
இழந்தேன் என் வரி வளையே —8-3-1-
இழந்தது என் கன வளையே —8-3-2-
என் செறி வளையே —8-3-3-
இழந்தேன் என் பொன் வளையே —8-3-4-
இழந்தேன் என் வரி வளையே—8-3-5-
இழந்தேன் என் ஒளி வளையே—8-3-6-
இழந்தேன் என் ஒளி வளையே —8-3-7-
இழந்தேன் என் செறி வளையே —8-3-8-
இழந்தேன் என் பெய் வளையே —-8-3-9-

கரையெடுத்த பிரவேசம் –

ஏதைர் நிமித்தைர் அபரைச்ஸ் ஸூ ப்ரரூ சம்போதிதா ப்ராகபி சாது சித்தை
வாத ஆதப க்லாந்த மிவ   பிரணஷ்டம் வர்ஷேண பீஜம்  பிரதி சஞ்ச  ஹர்ஷ –
கை வளை கொள்வது தக்கதே -என்று தாயார் சொன்னவாறே-

(த்ருஷ்டாந்தம் -ராமாயணம் ஸூந்தர காண்டம்
ஸூப நிமித்தங்களைக் கண்டு உணர்ந்தால் போல்
மணி நிறம் கொண்டான் -கை வளை கொண்டான் -இரண்டையும் சொன்னாலும்
வளை இழந்தது கை மேலே காணலாய் இருப்பதால்
இத்தையே பேசி -திரு உள்ளத்தில் ஸங்க்ரஹேன
தெள்ளியீர் -கை வளை கொண்டது –
தேவர்க்கும் தேவராய இருந்து -கை வளை கொண்டது-
ஒவ் ஒரு பதத்துக்கும் பல முறை கேட்டதே நிமித்தங்கள் இவளுக்கு )

(தெள்ளியீர் தேவர்க்கும் தேவர் திருத் தக்கீர்
வெள்ளியீர் வெய்ய விழு நிதி வண்ணரோ
துள்ளு நீர் கண்ணபுரம் தொழுதாள் இவள்
கள்வியோ கை வளை கொள்வது தக்கதே –8-2-1-

1-தெள்ளியீர் -ஸர்வஞ்ஞத்வம் -இவள் கை வளை கொள்வது தக்கதே-
2-தேவர்க்கும் தேவர் -மனிசர்க்குத் தேவர் போல் தேவர்க்கும் தேவர் -சஷுஸ் அனைவருக்கும் –
இவள் கை வளை கொள்வது தக்கதே
3-திருத் தக்கீர்–பெரிய பிராட்டியாருக்குத் தக்க -திருவுக்கும் திருவாகிய செல்வர் -இவள் கை வளை கொள்வது தக்கதே
4-வெள்ளியீர் -ஸூத்த ஸ்வபாவம் -இவள் கை வளை கொள்வது தக்கதே
5-வெய்ய விழு நிதி வண்ணரோ-சுட்டு உரைத்த நன் பொன் இவர் ஒளி ஒவ்வாது -இவள் கை வளை கொள்வது தக்கதே
ஐந்து பதங்களும் தக்கதே என்ற பத்துடன் சேர்த்து அன்வயித்து கொள்ள வேண்டும்)

இத்தைக் கேட்டு உணர்ந்த பெண் பிள்ளை
தன் கையைப் பார்த்து இழந்தேன் வரி வளை -என்கிறாள் –

கீழ்த் திரு மொழியிலே -கை வளை கொள்வது தக்கதே -என்று திருத் தாயார் சொன்னாள்
அவள் பல காலும் சொல்லக் கேட்கையாலும்
இவள் அது தன்னை வாய் வெருவுகையாலும்
(அது தன்னை பரிஹரிக்கைக்கு வேங்கடம் -நீர் மலை -திரு மெய்யம் -வாய் வெருவி-சொன்னதே பலம் கொடுக்குமே )
கீழ் பிறந்த  மோஹமானது போய்

அல்பம் அறிவு பிறந்து (மயக்க நிலை மாறி )
அது தான் ஆஸ்வாசத்துக்கு உடலாகை தவிர்ந்து
தான் படுகிற வ்யசனத்தை அனுபாஷிக்கைக்கு உடலாக
அத்தாலே இரவல் வாயாலே
தன் இழவைச் சொல்லுகை அன்றிக்கே
தானே தன் இழவுகளைச் சொல்லி கூப்பிடுகிறாளாய் இருக்கிறது –

——————————————-

கரையெடுத்த -எடுத்த -எடுவித்த என்றபடி
சங்கு -ஸூத்த ஸ்வ பாவனராயும் -பவள -ராக -பக்தி -ப்ரதானாராயும் –
நீர்மை இடும்படியான தேசம் இருந்தவனான மாத்ரம் அன்றிக்கே
அரியன செய்து நோக்குமவனுக்கு இழந்தேன் வளையை என்கிறாள் –

கரை யெடுத்த சுரி சங்கும் கன பவளத்து எழு கொடியும்
திரை எடுத்து வரு புனல் சூழ் திருக் கண்ண புரத்து உறையும்
விரை யெடுத்த  துழாய் அலங்கல் விறல் வரைத் தோள் புடை பெயர
வரை யெடுத்த பெருமானுக்கு இழந்தேன் என் வரி வளையே —8-3-1-

விரை-பரிமளம்
விறல்–மிடுக்கு
வரையெடுத்த-கோவர்த்தன மலை எடுத்த
வரி வளை–தர்ச நீயமான வளை

கரை யெடுத்த சுரி சங்கும் கன பவளத்து எழு கொடியும்
கரை -என்று கோஷத்துக்கு பெயர்
சங்கானது திரை மேல் திரையாக போந்து ஏறுகிற போது
கரையிலே பார்த்து நின்றார்கள் –
ஒரு சங்கினுடைய அளவு  இருக்கிறபடி என் -என்று சொல்லுகிற கோஷம் ஆதல் –
அன்றிக்கே
சங்கு தனக்கே ஸ்வத உண்டாய் இருப்பதொரு கோஷம் உண்டு இறே
அத்தைச் சொல்லிற்று ஆதல் –

கன பவளத்து எழு கொடியும்-
செறிந்த பவளத்தின் உடைய வளர்ந்த கொடியும் –

திரை எடுத்து வரு புனல் சூழ் திருக் கண்ண புரத்து உறையும்
திரைகள் ஆனவை எடுத்துக் கொண்டு வாரா நின்ற
ஜல சம்ருத்தியை உடைத்தான திருக் கண்ண புரத்திலே நித்ய வாஸம் பண்ணுகிற –

விரையெடுத்த  துழாய் அலங்கல் விறல் வரைத் தோள் புடை பெயர வரையெடுத்த பெருமானுக்கு இழந்தேன் என் வரி வளையே –
பசுக்களுக்கும் இடையருக்கும் வந்த ஆபத்தை பரிஹரிக்கைக்காக
கோவர்த்தன கிரியை தோள் அசையும்படி எடுத்துக் கொண்டு நின்றான் ஆயிற்று –
மிக்க பரிமளத்தை உடைத்தான திருத் துழாய் மாலையையும் உடைத்தாய்
பெரிய மிடுக்கையும் உடைத்தாய்
மலை போலே இருக்கிற திருத் தோள்கள் அசையும் படியாக
மலையை எடுத்து பரிஹரித்த ஆபத் சகனான
சர்வேஸ்வரனுக்கு-என்னுடைய தர்ச நீயமான வளையை இழந்தேன் –

(அரியன செய்தவன் என்னை அறியாமல் இருக்கிறானே )

————————————————————–

வரை எடுத்த பெருமானுக்கு என்று கீழே
திருவாய்ப்பாடியில் உள்ளோர் வளைகள் இழக்கவில்லையே
மதுரா சென்றவன் திரும்ப மாட்டானே என்றார்கள் அன்றோ
அங்கு அத்தோடு வியசனம் தீர்ந்தது
மதுரைக்கும் தொடர்ந்து போனேன் என்கிறாள்

அரி விரவும் முகில் கணத்தால் அகில் புகையால் வரையோடும்
தெரிவு அரிய மணி மாடத் திருக் கண்ண புரத் துறையும்
வரி அரவின் அணைத் துயின்று மழை மதத்த சிறு தரு கண்
கரி வெருவ மருப்பு ஒசித்தார்க்கு இழந்தது என் கன வளையே —8-3-2-

அரி விரவு-கறுப்பானது எங்கும் ஒக்க பரந்து இருக்கிற
தெரிவு அரிய-பேத ஞானம் இல்லாதபடி முகிலும் அகில் புகையும்
மழை மதத்த சிறு தரு கண் கரி -மத ஜலம் கொட்டும் -சிறிய கண்களுடைய -குவலயா பீடம்

அரி விரவும் முகில் கணத்தால் அகில் புகையால் வரையோடும்-
கறுப்பானது எங்கும் ஒக்க பரந்து இருக்கிற  காள மேக சமூஹங்களாலும்
அவ் ஊரில் உள்ளார் உண்டாக்குகிற அகில் புகையாலும் உண்டான இருட்சியாலே

தெரிவு அரிய மணி மாடத் திருக் கண்ண புரத் துறையும் –
மலைக்கும் மாடத்துக்கும் வாசி தெரிந்து பிரதிபத்தி பண்ண ஒண்ணாத  படியாய்
ரத்ன மயமான  மாடங்களை உடைத்தான திருக் கண்ண புரத்திலே நித்ய வாஸம் பண்ணுகிற –

வரி அரவின் அணைத் துயின்று மழை மதத்த சிறு தரு கண்
நாநா வான வரிகளை உடைத்தாய்
நாற்றம் மென்மை குளிர்சிகளை உடைத்தாய் இருக்கிற
திரு வநந்த   ஆழ்வான்  ஆகிய படுக்கையிலே கண் வளர்ந்து அருளி
வர்ஷ தாரைகள் போலே இருக்கிற மத ஜலத்தை உடைத்தாய்
வடிவிலே பெருமைக்கு ஈடாக பெருத்து இருக்கை அன்றிக்கே
ஜாதி உசிதமாம் படி சிறுத்து
க்ரௌர்யம் எல்லாம் தோற்றும்படியாய் பார்க்கிற கண்களை உடைத்தாய் இருந்துள்ள

கரி வெருவ மருப்பு ஒசித்தார்க்கு இழந்தது என் கன வளையே –
குவலயா பீடமானது  வெருவும்படியாக
அதன் கொம்புகளை அநாயாசேன முறித்துப் பொகட்ட
அச் செயலுக்கு வளை இழந்தேன் –

மாடங்கள் அழகிலும் -படுக்கை வாய்ப்பாலும் -களிறு தரு புணர்ச்சி -உலக இயல்பு -வளை இழவாமை-
இங்கு தன்னையே நமக்கு ரஷித்து அளித்த செயல்

————————————————–

நீ தொடர்ந்து மதுரையில் இழந்ததை சொல்லா நின்றாய்
நகர ஸ்த்ரீ கலாலாபம் -பசப்பு மொழிகள் -மது ஸ்தோத்ரேண-பேச்சில் பிச்சேறுபவன்
உன் மேல் மால் ஏறுவானோ -என்ன
பின்னை கொல் -என்கிறபடியே -அவனே மால் ஏறும்படி இருந்தவள் அன்றோ -என்னும் கருத்தால்
விடைகள் ருஷபங்கள் கொண்ட வ்ருத்தாந்தம் இதில்

துங்க மா மணி மாட நெடு முகட்டின் சூலிகை போம்
திங்கள் மா முகில் துணிக்கும் திருக் கண்ண புரத் துறையும்
பைங்கண் மால் விடை அடர்த்துப் பனி மதி கோள் விடுத்துகந்த
செங்கண் மால் யம்மானுக்கு   இழந்தேன் என் செறி வளையே —8-3-3-

துங்கம் -ஸ்ரேஷ்டம்
கோள்-வியாதியால் ஏற்பட்ட சிறை -க்ஷய ரோகம்
செங்கண் மால் யம்மானுக்கு -வ்யாமோகமுடைய ஸர்வேஸ்வரன்
செறி -கழற்ற ஒண்ணாத

துங்க மா மணி மாட நெடு முகட்டின் சூலிகை போம் –
ஒக்கத்தை உடைத்தாய்
பெரு விலையனான ரத்னங்களை உடைத்தாய் உள்ள
மாடங்களில் உண்டான சூலமானது –

திங்கள் மா முகில் துணிக்கும் —
சந்திரனையும்
பெரிய வடிவையும் உடைய மேகங்களின் உடைய
கீழ் வயிற்றை பேதிக்கிற  –

திருக் கண்ண புரத் துறையும் –
பைங்கண் மால் விடை அடர்த்துப்
பசுமையை உடைத்தான கண்களை யுடையுமாய்
பெருய வடிவையும் உடைய ருஷபங்களை அழியச் செய்து

பனி மதி கோள் விடுத்து-
குளிர்ச்சியைப் பண்ணக் கடவனான சந்த்ரனுக்கு வந்த
ஷயத்தை போக்கி-

உகந்த செங்கண் மால் யம்மானுக்கு   இழந்தேன் என் செறி வளையே –
அது தன்னை தன் பேறாக நினைத்து இருக்கிற
புண்டரீ காஷனான சர்வேஸ்வரனுக்கு
ஒரு காலும் கழற்ற ஒண்ணாத வளையை இழந்தேன் –
சங்கு தங்கு முன் கை நங்கையாய் இருக்க வேண்டியவள் அன்றோ இழந்தேன் –

———————————————————————

நப்பின்னை இடம் போல் மால் ஏறி இருந்தவன் என்னா நின்றாய்
ஆஸ்ரித கர ஸ்பர்சத்தில் அதி வ்யாமோஹம் -கட்டுப்பட்டு இருப்பானே என்ன –
கட்டுப்பட்ட காலத்திலும் ரஷிப்பவன் வருவதுக்கு தடை உண்டோ

கணம் மருவும் மயில் அகவும் கடி பொழில் சூழ் நெடு மறுகில்
திணம் மருவும் கன மதிள் சூழ் திருக் கண்ண புரத் துறையும்
மணம் மருவும் தோள் ஆய்ச்சி யார்க்கப்  போய் உரலோடும்
புணர் மருதம் இற   நடந்தாற்க்கு இழந்தேன் என் பொன் வளையே —8-3-4-

மறுகில்-திரு வீதிகள்
திணம்–திண்ணம் -திடமாக
அகவும்-மயில் அகவும் சப்தம் -இருந்தாலும் இங்கே ஆடா நிற்கும் என்னும் பொருளில் வந்தது

கணம் மருவும் மயில் அகவும் கடி பொழில் சூழ் நெடு மறுகில்
திரள் மிக்கு இருந்துள்ள மயில்கள் ஆனவை தம்முடைய ப்ரீதியாலே
ச சம்பிரம நிருத்தம் பண்ணா நிற்பதுமாய் –
பரிமள பிரசுரமான சோலையை உடைத்தாய்
பெரிய திரு வீதிகளை உடைத்தாய் –

திணம் மருவும் கன மதிள் சூழ் – –
திண்மை மிக்கு இருக்கையாலே
அரணாக போரும்படியான மதிளை உடைத்தாய் இருந்துள்ள –
திருக் கண்ண புரத் துறையும்-
(ஸப்த பிரகாரம் போல் ஏழு மதிள்கள் இருந்தவாற்றை நம்மாழ்வார் )

மணம் மருவும் தோள் ஆய்ச்சி யார்க்கப்  போய் உரலோடும் –
பிள்ளை பக்கல் பரிவாலே எப்போதும் ஒக்க கந்த த்ரவ்யங்களாலே
அலங்கரிக்கப் பட்ட தோள்களை உடைய யசோதை பிராட்டி போல்வார்
பந்தித்த வற்றை அறுத்து கொடு போகை  அன்றிக்கே
கட்டின உரலையும் இழுத்துக் கொண்டு போய் –

பகதத் தாதிகள் விட்ட அஸ்த்ரங்கள் ஆகில் இறே நேரே மார்வைக் காட்டி நிற்பது
பரிவுடையாளாய் கட்டினதுக்கு பண்ணலாவது பிரதி கிரியை இல்லையே
ஆகையால் அத்தையும் இழுத்துக்   கொடு போய் –

புணர் மருதம் இற   நடந்தார்க்கு இழந்தேன் என் பொன் வளையே –
இரண்டு எண்ண ஒண்ணாத படி நிர் விவரமாய் இருக்கிற மருதுகள்
முறிந்து விழும்படியாக போன முக்தனுக்கு
என்னுடைய ஸ்லாக்கியமான வளையை இழந்தேன் –

————————————————————————-

ஒருத்தி கையிலே கட்டுண்டும் -விரோதிகளைப் போக்கியும் -புணர் மருதம் இவள் விரோதி தானே –
தன்னை அவளுக்கு கொடுத்தவன்
எனது விரஹ தாப விரோதியைப் போக்கி தன்னைத் தாரானோ

வாய் எடுத்த மந்திரத்தால் அந்தணர் தம் செய் தொழில்கள்
தீ எடுத்து மறை வளர்க்கும் திருக் கண்ண புரத் துறையும்
தாய் எடுத்த சிறு கோலுக்கு உளைந்தோடி தயிர் உண்ட
வாய் துடைத்த மைந்தனுக்கு இழந்தேன் என் வரி வளையே—8-3-5-

வாய் எடுத்த மந்திரத்தால் அந்தணர் தம் செய் தொழில்கள் –
உச்ச ஸ்வரமாக பிரயோக்கிகிற மந்த்ரங்களாலே
பிராமணர்
தங்களுக்கு கர்த்தவ்யமான படியாலே

தீ எடுத்து மறை வளர்க்கும் –
அக்னியை ஜ்வலிப்பித்து வைதிக மரியாதையை நோக்கிக் கொண்டு போருகிற –

திருக் கண்ண புரத் துறையும் –

தாய் எடுத்த சிறு கோலுக்கு உளைந்தோடி தயிர் உண்ட –
அனுகூல ஸ்பர்சம் உள்ள த்ரவ்யம் ஒழியச் செல்லாமையாலே
வெண்ணெயும் பாலையும் களவிலே அமுது செய்ய
(ஆய்ச்சியர் வெண்ணெய் காணில் தானே உண்பான் )
அவை ஈட்டப் பட்ட வருத்தத்தாலே யசோதை பிராட்டி கையில் கோலைக் கொள்ள

அவள் தாய் இறே
அச்சம் உறுத்துகைக்கு செய்த செயல் இறே
என்று  அறிய மாட்டாதே ஈடுபட்டு ஓடி

அமுது செய்த தயிரைக் காட்டி -நீ களவு கண்டாய் என்பார்கள் என்று பார்த்து
அத்தை இல்லை செய்கைக்காக –

வாய் துடைத்த மைந்தனுக்கு இழந்தேன் என் வரி வளையே
முகம் எங்கும் தடவிக் கொள்ளுகிற
இளிம்பனுக்கு நான் இளிம்பு பட்டேன் –

———————————————————

சிறு கோலுக்கு -பயந்து இருக்கும் பருவம் அவனது
நீயும் பேதைப்பருவம்
வளை இழக்கும்படி வந்தது என்ன
சிறுவனுக்காக –
வாசி அறிந்து -விரோதியை அழித்தவன்
நானும் விரஹ தாபத்தால் இழந்தேன் -என்று சங்கதி –

மடல் எடுத்த நெடும் தாளை மருங்கு எல்லாம் வளர் பவளம்
திடல் எடுத்து சுடர் இமைக்கும் திருக் கண்ண புரத் துறையும்
அடல் அடர்த்து அன்று இரணியனை முரண் அழிய வணி யுகிரால்
உடல் எடுத்த பெருமானுக்கு இழந்தேன் என் ஒளி வளையே—8-3-6-

அணி யுகிரால்-அழகியான் தானே அரி உருவம் தானே –

மடல் எடுத்த நெடும் தாளை மருங்கு எல்லாம் வளர் பவளம் –
மடலினுடைய ஒக்கத்தை உடைத்தான
நெடிதான தாழைகளை உடைத்தான பரிசரம் எல்லாம்
வளர் பவளமானது –

திடல் எடுத்து சுடர் இமைக்கும் –
திடல்களிலே மூடப் படர்ந்து
பிரகாசத்தைப் பண்ணா நின்றுள்ள –

திருக் கண்ண புரத் துறையும் –

அடல் அடர்த்து அன்று இரணியனை முரண் அழிய வணி யுகிரால்  –
யுத்தத்திலே நெருக்கி
அன்று ஹிரண்யன் மிடுக்கு அழியும்படி யாக
பிராட்டிமாரும் கண்டு கொண்டு இருக்கும் படியாக
உகிராலே-
(ஜ்வாலா நரஸிம்ஹன் இன்றும் சேவிக்கலாம் இந்த கோலம் )

உடல் எடுத்த பெருமானுக்கு இழந்தேன் என் ஒளி வளையே –
அவன் உடைய சரீரத்தை பேதித்து
தன்னுடைய ஈஸ்வரத்வத்தை நிலை நிறுத்தினவனுக்கு
என் பருவத்தில் ஒருவனுக்கு உதவினான் அன்றோ
என்று இருந்தாயிற்று வளை இழந்தது  –

(ஈஸ்வரனாக தன்னை நினைத்தவனை நஸ்வரன் என்று காட்டிய அவதாரம் அன்றோ )

——————————————————

ஒருத்தனுக்கு ரஷித்தவன்
ஊருக்காகா-ஸமஸ்த உலகத்தாருக்காக -பிரளய ஆபத் சஹன் -என்று
கிடாய் நான் வளை இழந்தேன்

வண்டமரும் மலர்ப் புன்னை வரி நீழல் அணி முத்தம்
தெண் திரைகள் வரத் திரட்டும் திருக் கண்ண புரத் துறையும்
எண் திசையும் எழு சுடரும் இரு நிலனும் பெரு விசும்பும்
உண்டு உமிழ்ந்த பெருமானுக்கு இழந்தேன் என் ஒளி வளையே —8-3-7-

எழு சுடரும் எழு கடலும் -பாட பேதங்கள் –

வண்டமரும் மலர்ப்புன்னை வரி நீழல் அணி முத்தம் –
வண்டு படிந்த பூக்களை உடைத்தான
புன்னையினுடைய வரி நீழலிலே
ஓர் இடம் வெளியாய் ஓர் இடம் நிழலாய் இருக்கும் ஆயிற்று –

தெண் திரைகள் வரத் திரட்டும் திருக் கண்ண புரத் துறையும் –
அதில் வெளியான பிரதேசங்களிலே
தெளிந்த நீர்கள் ஆனவை
முத்துக்களைக் கொண்டு வந்து திரட்டா நிற்கும் ஆயிற்று –

எண் திசையும் எழு சுடரும் இரு நிலனும் பெரு விசும்பும் –
எட்டுத் திக்குகளையும்
எழு வகைப் பட்ட கடல்களையும்
எழு சுடரும் -என்ற பாடமான போது எழா நிற்கிற ஆதித்யாதிகளையும் நினைத்தது ஆகிறது –
பரப்பை உடைத்தான பூமியையும்
இவற்றுக்கு எல்லாம் அவகாச பிரதானம் பண்ணுகிற ஆகாசத்தையும் –

உண்டு உமிழ்ந்த பெருமானுக்கு இழந்தேன் என் ஒளி வளையே –
பிரளய காலத்தில் எடுத்து வைத்து
பின்னே வெளி நாடு காண உமிழ்ந்த
சர்வேஸ்வரனுக்கு
இழந்தேன் என் வரி வளையே –
அவனுடைய ஆபத் சகச்வத்தை விஸ்வசித்து கிடாய் நான் கெட்டேன் -என்கிறார் –

———————————————————————–

அநந்த பத்ம நாபன் -அனுபவம்
பிரளயத்தில் ரக்ஷித்தான் -உனக்கு என்ன பிரளயம் வளையலை இழக்க
விரஹ தாபம் -மஹா பிரளயம்
எனக்கு விரஹம் உண்டாக்கின அவனே ஸமஸ்த வற்றையும் உண்டாக்கிய திரு நாபி கமலத்தை பாடுகிறாள்

கொங்கு மலி கருங்குவளை கண்ணாகத் தெண் கயங்கள்
செங்கமல முகமலர்த்தும் திருக் கண்ண புரத் துறையும்
வங்கமலி தடங்கடலுள் வரி அரவின் அணைத் துயின்ற
செங்கமல நாபனுக்கு இழந்தேன் என் செறி வளையே —8-3-8-

கயங்கள்-பொய்கைகள்
குவளை கண் -தாமரை முகம் ஒப்பு என்றால் –கால மருட்சி வருமே -என்றால் -ஒரு சேர மலராதே –
யுகபத் ஏக காலம் கூடாதே
செங்கமலம் போன்ற பெண்களுடைய கமல முகம் அலர்த்துகிறது -விகசிப்பியா நின்றது

கொங்கு மலி கருங்குவளை கண்ணாகத் தெண் கயங்கள் –
பரிமள பிரசுரமாய்
கறுத்த நிறத்தை உடைத்தாய் இருந்துள்ள
குவளைப் பூக்களை
கண்ணாகக் கொண்டு தெளிந்த பொய்கைகள் ஆனவை –
(கரும் குவளை சிவந்த குவளை வெண்மை குவளை மூன்றுமே உண்டே )

செங்கமல முகமலர்த்தும் – –
சிவந்த தாமரைப் பூக்கள்  ஆகிற முகத்தை
அலரா நின்றுள்ள –

திருக் கண்ண புரத் துறையும்-
வங்கமலி தடங்கடலுள் வரி அரவின் அணைத் துயின்ற –
மரக் கலங்களால் மிக்கு இருப்பதாய்
கண் வளர்ந்து அருளுகைக்கு ஈடான பரப்பை உடைத்தாய் இருக்கிற கடலிலே –
தர்ச நீயமான வடிவை உடையனான திரு வநந்த ஆழ்வான் மேலே
கண் வளர்ந்து அருளுகிற –

செங்கமல நாபனுக்கு இழந்தேன் என் செறி வளையே –
சிவந்த கமலத்தை உடைத்தான திரு நாபியை உடையவனுக்கு
உத்பாதகனை விஸ்வசித்து
முடிந்தேன் -என்கிறாள் –

—————————————–

சகல ஜகத் உத்பாதகன் தானே உண்டாக்கிய விரக தாபம் அனுபவித்தே தீர்க்க வேணும் என்றும்
அவனே வரும் அளவும் ஆறி இருக்க வேணும் காண் என்றும் சொல்ல
தன்னைப் பிரிய மாட்டாதவரை தான் பிரிய மாட்டாரே
பாஞ்ச ஜன்ய அம்சம் பரதாழ்வான் -சேஷ அம்சம் இளைய பெருமாள்
தீர்த்தமாடாமல் இருந்தாலும் படுக்கையை பிரிய முடியாதே
நான் பிரிய மாட்டாதவள் தானே -பிரியலாமா -என்கிறாள்

வாராளும்  இளங் கொங்கை  நெடும் பணைத் தோள் மடப்பாவை
சீராளும் வரை மார்பன் திருக் கண்ண புரத் துறையும்
பேராளன் ஆயிரம் பேர் ஆயிரம் வாய் அரவணை மேல்
பேராளர் பெருமானுக்கு இழந்தேன் என் பெய் வளையே —-8-3-9-

வாராளும்  இளங் கொங்கை  நெடும் பணைத் தோள் மடப்பாவை சீராளும் வரை மார்பன்-
வாராலே தாங்கப் பட்டு இருப்பதாய்
இளைமையை உடைத்தாய் இருக்கிற
கொங்கைகளை   உடையவளாய்
நெடிய பணை போலே இருக்க்கிற தோள்களை உடையவளாய்
ஆத்ம குணங்கள் -அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு -நிறைந்த
நிருபாதிக ஸ்த்ரீத்வத்தை உடையவளாயிருக்கிற பெரிய பிராட்டியார்
வர்த்திக்கையாலே உண்டான சம்பத்தை உடைத்தாய்
வரை போலே திண்ணிய தான மார்வை உடையவன் –

திருக் கண்ண  புரத் துறையும் பேராளன் –
திருக் கண்ண புரத்திலே வந்து ஸூலபன் ஆகையால் வந்த
ஏற்றத்தை உடையவன் -( கண்டு பற்றுகைக்கு ஸூ வ்லப்யம் )

ஆயிரம் பேர் ஆயிரம் வாய் அரவணை மேல் பேராளர் பெருமானுக்கு –
தூங்கு மெத்தை போலே அசையா நின்றுள்ள
திரு வநந்த ஆழ்வான் மடியிலே  ஏறட்டுக் கொண்டு
ஆயிரம் வாயாலும் அனுபவத்துக்கு பாசுரமான
ஆயிரம் திரு நாமங்களையும் சொல்லி
ஸ்தோத்ரம் பண்ணுகையால் வந்த பெருமையை உடையவனுக்கு

யசோதை பிராட்டி தன் மடியிலே வைத்துக் கொண்டு
ஆடுமா போலே ஆயிற்று –
(அது எளிமையால் மேன்மை இது மேன்மையால் மேன்மை )

இழந்தேன் என் பெய் வளையே-
தன்னை ஒழியச் செல்லாமை உடையாருக்கு
தன்னை கொடுக்குமவன் அன்றோ –
நம் செல்லாமை பரிஹரியானோ விஸ்வசித்து
வளை இழந்தேன் -என்கிறாள்  –

—————————————————————-

தேமருவு பொழில் புடை சூழ் திருக் கண்ண புரத் துறையும்
வாமனனை  மறி கடல் சூழ் வயலாலி வள நாடன்
காமரு சீர்க் கலிகன்றி கண்டுரைத்த தமிழ் மாலை
நா மருவி யிவை  பாட வினையாய நண்ணாவே —8-3-10-

கண்டுரைத்த-கிருபையால் உரைத்த –

தேமருவு பொழில் புடை சூழ் திருக் கண்ண புரத் துறையும் –
தேன் மிக்கு இருந்துள்ள பொழிலாலே சூழப் பட்ட
பர்யந்தத்தை உடைத்தான
திருக் கண்ண புரத்திலே நித்ய வாஸம் பண்ணுகிற –

வாமனனை  மறி கடல் சூழ் வயலாலி வள நாடன் –
வாமனை யாயிற்று கவி பாடிற்று
தன்னுடைய பேற்றுக்குத் தான்  அர்த்தியாய் வருமவன் ஆயிற்று –
(திருக் கல்யாண திருக்கோலம் -தானம் வாங்கும் ஹஸ்தத்துடன் சேவை சாதிக்கிறார் )

சப்தியாது நின்றுள்ள கடலாலே சூழப் பட்டு இருப்பதாய்
பரந்த வயலை உடைத்தான
ஆலி நாட்டை உடையராய் –

காமரு சீர்க் கலிகன்றி கண்டுரைத்த தமிழ் மாலை –
எல்லாருக்கும் ஸ்பருஹை  பண்ண வேண்டும்படியான
ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயை உடையரான  ஆழ்வார்
அருளிச் செய்த இந்த தமிழ் தொடையை –

நா மருவி யிவை  பாட வினையாய நண்ணாவே –
நாவிலே பொருந்தும் படி பாட
ச ஹ்ருதயமாக பண்ணின பாபங்களும் விட்டுப் போம் –

உக்தி மாத்ரத்தைச் சொல்ல
புத்தி பூர்வகமாக பண்ணின பாபங்கள் கிட்டா -என்கிறார் –

————-

ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.

கரை வளை மாமை இழந்தேன் கணபுரத்தான் தன்
கரையில் செயல் எண்ணி என்று உரை செய்
பரகாலன் தான் தனது விட்டமை கூறும்
வரந்தமிழால் வாய்க்குமோ விண்-73-

கரை வளை -சப்திக்கின்ற வளை /
கரையில் செயல் /-எல்லையில்லாத சேஷ்டிதங்கள் /
வரையெடுத்து -கரி வெருவ மருப்பு ஓசித்து-விடைகள் அடர்த்து -மதி கோள் விடுத்து
புனர் மருதம் இற நடந்து/ தாய் எடுத்த சிறு கோளுக்கு உழைத்து ஓடி / தயிர் வெண்ணெய் உண்டு /
இரணியனை அணி யுகிரால் முரண் அழித்து / உண்டு உமிழ்ந்து போன்றவை
/ வரந்தமிழ் -சிறந்த தமிழ்
கலை வளை -அஹம் மம க்ருதிகள்-

——————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-