ஸ்ரீ பெரிய திருமொழி-10-1—ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம்-

ஆலி நாட்டு அரசனுக்கு வயலாலி மணவாளன் அரச மரத்தின் அடியில் சர்வம் அஷ்டாக்ஷரம் -என்றபடி மந்த்ர அரசை ஓதி –
மந்த்ரத்திலும்- -மந்திரத்தின் உள்ளே வஸ்து -மந்த்ர பிரதனான ஆச்சார்யன் பக்கல் ப்ரேமம் கனத்து முதல் நான்கு திருமொழியில் –
திரு சாளக்கிராமம் -மந்த்ரம் அறிந்து அனுஷ்டானம் சாளக்ராம திரு ஆராதனம் செய்வார்களே -தாமோதர குண்டம் -கண்டகி நதி –
ஸம்ஸார பயம் -மிக்கு முதல் சரணாகதி பிராட்டி முன்னாக நைமிசாரண்யம் -த்வயம் -திரு மந்த்ர விவரணம் -வந்து உன் திருவடி அடைந்தேன்
நவ நரஸிம்ஹ -அஹோபிலம் -மாலோலன் -தெய்வம் அல்லா செல்ல ஒண்ணா சிங்க வேள் குன்றம்
அடுத்து நான்கு திரு மொழிகளால் திரு வேங்கடம் —
அடை நெஞ்சமே -இஷ்ட பிராப்திக்கு சரணாகதி -நாயேன் வந்து அடைந்தேன் -நல்கி ஆள் என்னைக் கொண்டு அருள் -திரு விக்ரமன் பிரதிநிதி –
அநிஷ்டம் தொலைக்க பிராப்தி -அண்ணா அடியேன் இடரைக் களையாயே –
மாண் குறளாக அந்தணர்க்கு இன்று அடிமைத் தொழில் பூண்டாயே -ஸ்ரீ மதே நாராயண நம -உத்தர வாக்ய அனுசந்தானம் இதில் –

மேல் தொண்டை நாட்டு –
திரு எவ்வுள்ளூர் -கிடந்தானே –
திருவல்லிக்கேணிக் கண்டேனே -நின்ற பார்த்த சாரதி -அவனே ராமனாக நடந்து –
தெள்ளிய சிங்கமாக அமர்ந்து -பறந்த கஜேந்திர வரதன் -கிடந்த என்னை ஆளுடை அப்பன் -மன்னாதான் வேதவல்லி சமேத
திரு நீர்மலை -நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தானுக்கு இடம் –
பாகவத சேஷத்வம் -திருக்கடல் மல்லை -கண்ணாரக் கண்டு கொண்டேன் –
தல சயனத்து உறைவாரை எண்ணாதே இருப்பாரே இறைப்பொழுதும் எண்ணோமோ-
உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே -பேற்றுக்கு உபாயம் அவன் நினைவே -தாய் பதிகம்
மகளாக அஷ்ட புயகரத்தானை -இவர் யார் கொலோ –
பல்லவன் மல்லையர் கோன் பணிந்த பரமேஸ்வர விண்ணகரம் அதுவே

நடு நாட்டுத் திருப்பதி
சாதனா நிஷ்டர் சாத்விகர் ஸமாச்ரயணம் போல் -திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நான் -திரு மந்த்ர விளக்கம்
திரு வயிந்த்ர புரமே -ஆதி சேஷனால் ஏற்படுத்தப்பட்ட -தேவ நாதன் -அடியவர்க்கு மெய்யன் -தாஸ ஸத்யன்

சோழ நாட்டு
திருச்சித்ர கூடம் -இரண்டு திருமொழி -துராராதனன் அல்லன் -சென்று சேர்மின்கள் -ராமன் கண்ணன் அனுபவம் மாற்றி மாற்றி இங்கு அனுபவம் –
காழிச் சீராம விண்ணகரம் –3-4-சேர்மினிரே -தனது பெருமை எல்லாம் தானே அருளிச் செய்து
திருவாலி -மூன்று திருமொழி -வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய் -புகுந்ததார் பின் வணங்கும் என் சிந்தனைக்கு இணையான
திரு மந்த்ரம் உபதேசம்
தூது விட்டு –3-6-என்னிலைமை உரையாயே -ஏவரி வெஞ்சிலை வலவா
ஓ மண் அளந்த தாளாளா –
நஞ்சீயர் ஈடுபட்ட திரு மொழி –
கள்வன் கொல் -3-7- அணி ஆலி புகுவார் கொலோ
மேல் திரு நாங்கூர்
மணி மாடக் கோயில் -3-8-நாராயண பெருமாள் -நந்தா விளக்கே அளத்தற்கு அரியாய் -ஸத்யம் ஞானம் அநந்தம்
வைகுண்ட விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே –3-9-
அரிமேய விண்ணகரம் வணங்கு மட நெஞ்சே -3-10-

நாங்கை -திருத்த தேவனார் தொகை -4-1-
நாங்கூர் வண் புருடோத்தமே –4-2-
செம் பொன் செய் கோயில் –4-3-கண்டு கொண்டு உந்து ஒழிந்தேனே –
திருத் தேற்றி அம்பலம் -பள்ளி கொண்ட பெருமாள் –4-4-என் செம் கண் மாலே
நாங்கூர் திருமணிக் கூடம் -4-5-சர்வ நிர்வாககன் –
நாங்கை மூன்றாம் –காவளம் பாடி மேய கண்ணனே களை கண் நீயே –4-6-
திரு வெள்ளக்குளத்துள் அண்ணா அடியேன் இடரைக் களையாயே –4-7- சரணாகதி பண்ணுகிறார் –
பார்த்தன் பள்ளி -4-8- நாங்கை நாலாவது -நாங்கூர் எழும் மொத்தம் 11-அர்ஜுனன் கண்ணன் சேர்ந்து சேவை
நாயிகா பாவத்தில் பல இடங்களில் ஊடுவார்கள்-
ஆனால் திரு இந்தளூரில் தானான நிலையில் -4-9-அடியேற்கு இரையும் இரங்காயே -நம்மாழ்வார் போல் அல்லரே –
திரு வெள்ளியங்குடி -4-10-மண்ணியின் தென்பால் –

திருப் புள்ளம் பூதம் குடி -5-1-
ஜகத் ரஷக பெருமாள் கூடலூர் -5-2-
திரு வெள்ளறை நின்றானே -5-3-பங்கயச்செல்வி சமேத புண்டரீகாக்ஷன்
ஐந்து திருமொழி -திருவரங்கத்துக்கு –5-4-தொடங்கி 5-8-
தென் அரங்கமே -தாய் புலம்பி -வெருவாதாள் வாய் வெருவி வேங்கடமே –
யான் கண்டது அணி நீர்த் தென் அரங்கத்தே -அனைத்து திவ்ய தேசப்பெருமாளையும்
5-7- பண்டை நான் மறையும் –அரையர் சேவை பிரசித்தம் –
5-8-ஏழை ஏதலன் -அடியிணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்தம்மானே -சரணாகதி அனுஷ்டானம் –
உலகம் அளந்த பொன்னடி
அப்பால ரெங்கன் -கோயிலடி -5-9-நாமம் பரவி நான் உய்ந்தவாறே -சக்கர செல்வன் பெயர் சாத்தி
நந்தி புர விண்ணகரம் நண்ணு மனமே -5-10-

நாயிகா பாவம் இல்லாத ஆறாம் பத்து
ஒப்பிலா அப்பன் -6-1-வேண்டேன் மனை வாழ்க்கையை -விண்ணகர் மேயவனே –பணி கொள்ள வேண்டும் –
6-2-நின்னடைந்தேன் திரு விண்ணகர் மேயவனே -பிராட்டி முன்னாக பற்றி –
6-3-அடைந்து பிறப்பு அறுத்தேன் –

6-4-7-3 வரை திரு நறையூர்
6-4-நண்ணு நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே -ப்ராப்தமான பந்து
6-5-க்ஷேத்ரம் ஏற்றம் -அந்தணர் வாழும் நறையூரே
6-6-பர உபதேசம் -செம்பியன் கோச் செங்கணான் சேர்ந்த கோயில் திரு நறையூர் மணி மாடம் சேர்மின்களே –
6-7-நறையூர் நின்ற நம்பியே -கல் கருடன் சேவை இரண்டு தடவை வருஷத்துக்கு
6-8-நான் சென்று நாடி நறையூரில் கண்டேனே -பல திவ்ய தேசப்பெருமாளைச் சேர்த்து –
6-9-இடர் கெடுத்த திருவாளர் இணை படியே அடை நெஞ்சே -சம்பந்தம் சொல்லி சரணாகதி –
பாசுரம் தோறும் திருவடி பிரஸ்தாபம் உண்டே –உலகம் உண்ட பெறுவாய் போல் இங்கும்
6-10-நம்பி நாமம் சொல்லில் நமோ நாராயணமே –

7-1-பிறவாமை எனைப் பணி எந்தை பிரானே
7-2-நள்லேன் உன்னை அல்லால் நறையூர் நின்ற நம்பீ யோ
7-3-நின்ற நம்பியை கனவில் கண்டேன்

சிறிய திரு மடல் பெரிய திரு மடல் நறையூர் நம்பிக்கே

7-4-தண் சேரை எம்பெருமான் தாள் தொழுவார் காண்மின் என் தலை மேலாரே -ததீய சேஷத்வம்
7-5-அணியார் வீதி அழுந்தூரே
7-6-தென் அழுந்தையில் மன்னி நின்ற அங்கமலக் கண்ணனை அடியேன் கண்டு கொண்டேனே –
சரணாகதி -7-7–அஞ்சி நின்னடைந்தேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே
7-8–அணி யழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே -தேவாதி ராஜன் -ஆ மருவி அப்பன்
7-9- பர உபதேசம் -சிறு புலியூர் சல சயனத்து -கிருபா சமுத்திர -பெருமாள்
7-10-சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே -பெரும் புறக் கடல் –
நின் தனக்கும் குறிப்பாகில் கற்கலாம் கவியின் பொருள் தானே –

8-பத்து திருக்கண்ண புரம்
முதல் இரண்டு தாய் பதிகம்
அடுத்த மூன்றும் மகள் பதிகம் –
அடுத்த ஐந்தும் தானான தன்மை
8-1-கண்ண புரத்து அம்மானைக் கண்டாள் கொலோ –
8-2-தெள்ளியீர் –கை வளை கொள்வது தக்கதே -தெள்ளியீர் அனுபவம் இங்கு தானே
8-3-இழந்தேன் ஏன் வரி வளையே -மாலுக்கு திருவாய் மொழி போல் –
8-4-வந்தூதாய் கோல் தும்பீ –
8-5-5-4- திருவாய் மொழி போல் துன்புற்று பாடி
8-6- ப்ராபகம் இத்திவ்ய தேசமே -தொண்டீர் உய்யும் வகை கண்டேன்
8-7-ப்ராப்யம் -அடைந்து கைங்கர்யம் செய்ய -அற்றுத் தீர்ந்து
8-8-அடியேன் கண்டு கொண்டேன் -எதிர் சூழல் புக்கு அடைய -பத்து அவதாரம்
8-9- அநந்யார்ஹ சேஷத்வம் -நினைவூட்டி -கண்ண புரம் ஓன்று உடையானுக்கு அடியேன் ஒருவர்க்கு உரியேனோ
8-10-அடியேன் அடைந்து உந்து போனேனே -உற்றதும் உன் அடியார்க்கு அடியேன் –

9-1- தாமோதர நாராயணன் -ஆஸ்ரித வாத்சல்யன் -திருக் கண்ணங்குடி –
9-2- நாகை அழகியார் -உருவ வெளிப்பாடு -மகள் பதிகம் -அச்சோ ஒருவர் அழகிய வா –
9-3-திருப்புல்லாணி -மகள் பதிகம் -தொழுதும் எழு -அதீத ப்ரேமம் -சாத்தனாந்தரம் பற்றியாகிலும் அடைவோம்
9-4- மகள் -தூது பதிகம் -அங்கு இதனைச் செப்புமினே
9-5-மகள் பதிகம் -சரணாகதி -திருக்குறுங்குடிக்கு உய்த்துடுமின் -ஸூ ந்தர பரி பூர்ணன்
9-5- திரு வல்ல வாழ் -சொல்லையாய் மருவு நெஞ்சே
9-6-தொழுமின் -வந்து காண்மின் தொண்டீர்காள்
9-7-9-8- திருமாலிருஞ்சோலை -நெஞ்சே வா
9-8-தாய் பாசுரம் –
9-10-திருக்கோட்டியூர்

————

ஒரு நல் சுற்றம் -பிரவேசம் –

தன்னை உகந்தாருக்கு தான் ஆஸ்ரயணீயனாய்
திருக் கோட்டியூரிலே ஸூலபன் ஆனபடியை  அனுசந்தித்து
தமக்கு நித்ய கைங்கர்யம் பண்ண வேணும் என்னும் அபேஷையிலே கண் அழிவு இல்லாமையாலும் –
அவன் தன்னை உகந்தாரை பரம பதத்திலே கொடு போய்
நித்ய கைங்கர்யத்தைப் பண்ணுவித்துக் கொள்ளும்
நிருபாதிக பந்துவாகையாலும்
திருப்பதிகளை அனுபவித்த ஆழ்வார்

பரம பதத்துக்கும் போக்கு அணித்து என்று அத்யவசித்து –
நவோடையான பெண்
பிறந்தகத்தின் நின்றும் புக்ககத்துக்கு போம் போது
ஜன்ம பூமியில் உள்ள
உறவு முறையார் உள்ளிடம் எங்கும்  புக்கு முகம் காட்டுமா போலே

குணாநுபவம் பரம பத்துக்கும் ஒக்குமே
ஆகையாலே சில திருப் பதிகளிலே புக்கு –
இங்கே புக்கோம்
இனி இன்ன திருப் பதியிலே புக வேணும்
என்று இப்படியே
உகந்து அருளின தேசங்கள் எங்கும் முகம் காட்டப் பார்க்கிறார் –

——————————————

நமக்கு பிராப்ய பூமியைத் தருவானாய்
தானே பிராப்யன் ஆனவனை
திரு நீர் மலையிலே கண்டோம்
இனி திருக் கண்ண மங்கையிலே  காணக் கடவோம் –
என்கிறார் –

ஒரு நல் சுற்றம் எனக்கு உயிர் ஒண் பொருள்
வரு நல் தொல் கதியாகிய மைந்தனை
நெருநல் கண்டது நீர் மலை இன்று போய்
கரு நெல் சூழ் கண்ண மங்கையுள் காண்டுமே –10-1-1-

(ஒண் பொருள்–ப்ராப்யமான அவன் தானே -புருஷார்த்தத்தை தரும் ப்ராபகன் ) –

ஒரு நல் சுற்றம் –
தானே ஆபத்துக்கு வந்து உதவும்
சர்வவித பந்துவான ஸ்வ பாவனுமாய் –

சுற்றம்
நல் சுற்றம்
ஒரு நல் சுற்றம்
குடல் துவக்கு –
தன்னை அழிய மாறியும் ரஷிக்கும் சுற்றம்
சுற்றம் என்றால் வேறு ஒரு இடத்தில் போகாச் சுற்றம் – சுற்றம் -சுற்றம் அல்லாதாரை  வ்யாவர்த்திக்கிறது
நல் சுற்றம் -ஸ்வ பிரயோஜனரை வ்யாவர்த்திக்கிறது
ஒரு நல் சுற்றம் -ஒரோ பிராப்தி அன்றிக்கே எல்லா பிராப்தியும் ஏக ஆஸ்ரயத்திலேயாய்  இருக்கிறபடி
மாத்ருத்வம் பிதாவுக்கு இல்லை
பித்ருத்வம் மாதாவுக்கு இல்லை –

எனக்கு உயிர் –
எதனையேனும் பந்துக்கள் எல்லாரும் கூட உண்டானாலும்
தான் தனக்கானபடியாக மாட்டார்கள் இறே-
சுக துக்கங்கள் தனக்கே அனுபவிக்க வேணும் இறே
எனக்கு ஆத்மாவுமாய் –

ஒண் பொருள் –
இது சத்தையை உண்டாக்கும் அர்த்தம் –
தான் மரிக்கும் இறே அர்த்த நிமித்தமாக-(லௌகிக பொருள் )
புருஷார்த்த உபயோகியான அர்த்தமுமாய் –

வரு நல் தொல் கதி-
இதுக்கு முன்பு சம்சாரத்தில் இருக்கும் படி
இனி பரமபத பிராப்தி இருக்கும்படி சொல்லுகிறது
இங்கே அர்த்த புருஷார்த்தம் தந்து விடுகை அன்றிக்கே
சரீர சமனந்தரம் வரக் கடவதாய்-
அற நன்றான தொல் கதி   –
ஆத்மானுபவம் அன்றிக்கே
இவ்வாத்மாவின் உடைய ஸ்வரூபத்துக்கு அனுரூபமான பிராப்ய பூமியைத் தருவானாய்
தானே பிராப்யமுமாய் –

(இதுவரை பர ப்ரஹ்மமே தொல் கதி-இனி -வரப்போகும் -ஸ்வரூப ஆவிர்பாவம்
தொன்மை -ஸ்வா பாவிகம் -வந்தேறி இல்லையே )
தொல் கதி –
ஸ்வா பாவிகமாய் இருந்துள்ள
ஸ்வரூப ஆவிர்பாவம் –

யாகிய-மைந்தனை-
நவ யௌவன  யுக்த விக்ரகத்தை உடையவனை –
யாகிய-மைந்தனை-
சர்வ சக்தி பதார்த்தங்களிலும் விசஜாதீயமான மிடுக்கை உடையனாய்
உபாயமானவனை -என்னுதல்
எல்லா புருஷார்த்தங்களையும் தானே தர வல்ல மிடுக்கன்
சர்வ சக்தியாகை இறே -உபாய பாவம் தானே நிர்வஹிக்கக் கடவனாய் இருக்கிறது –

நெருநல் கண்டது நீர் மலை இன்று போய் கரு நெல் சூழ் கண்ண மங்கையுள் காண்டுமே-
நேற்று திரு நீர் மலையிலே கண்டோம்
இன்று போய் கருவடைந்த நெற்பயிரோடு கூடின
வயலை உடைய
திருக் கண்ண மங்கையிலே காணக் கடவோம்
இன்று அது காண்பதும் காணக் கடவதும் இவ்வோ இடங்களாய் இருக்கை –

கரு நெல் சூழ் கண்ண மங்கை-
நித்தியரும் முக்தரும் என்றும்
பஞ்ச விம்சதி வார்ஷிகராய் இருக்குமா போலே
இங்குத்தை வயலும் நித்யமாக கருவடைந்த பயிராய் இருக்கை
அங்கு உள்ளது எல்லாம் இவருக்கு பிராப்யமாய் இருக்கிறபடி –

அனுபூதமாய்
ஸ்ம்ருதி விஷயமாய் இருப்பதும்
அனுபாவ்யமாய் இருப்பதும்
இவருக்கு உகந்து அருளின நிலம் –

———————————————–

(தீப பிரகாசம்
விளக்கு ஒளியாய் –
ஸரஸ்வதி தேவி கோபம்
வேளுக்கை ஆளரி யானைகளை ஒட்டி
அஷ்டபுஜ பெருமாளாக பேய் பிசாசு ஒட்டி
தீப பிரகாசம் -இருளை விலக்கி
சித்திரை ரேவதி -திருக்கையில் தீபாசம் ஏந்தி
அபய ஹஸ்தம்
மரகதவல்லித்தாயார்
குளிர்ந்த சோலை -தண் கா
தூப்புல் -தேசிகன் அவதாரம்
தூய புல் -1268-69-அவதாரம் )

(கீழே சர்வவித பந்துத்வம் அனுபவம்
இதில் திருமேனி ஒளியை அனுபவிக்கிறார் )

சர்வைஸ் ஸ்ப்ருஹணீயனானவை
திருமலையிலே கண்டோம் –
இனி திருத் தண் காவிலே சென்று காணக் கடவோம் –
என்கிறார் –

பொன்னை மா மணியை யணி யார்ந்ததோர்
மின்னை வேங்கடத் துச்சியில் கண்டு போய்
என்னை யாளுடை யீசனை யெம்பிரான்
தன்னை  யாம் சென்று காண்டும் தண் காவிலே —10-1-2-

யெம்பிரான்-தன்னை-எனக்கு உபகாரனான சர்வேஸ்வரன்

பொன்னை மா மணியை யணி யார்ந்ததோர் –
பொன் போலே  ஸ்ப்ருகணீயனாய்
பெரு விலையனாய்
ஸ்ரமஹரமான மணி போலே ஸ்லாக்கியமானவனாய்  –

மின்னை வேங்கடத் துச்சியில் கண்டு –
அழகு மிக்கு ஏக ரூபமான மின் போலே
உஜ்ஜ்வலனானவனை
திருமலை உச்சியின் மேலே கண்டு –

போய்-என்று மேலுக்கு

என்னை யாளுடை யீசனை யெம்பிரான் –
இன்று போய் என்னை அடிமையாக உடையவனாய்
எனக்கு நியந்தாவாய் –
எனக்கு உபாகாரகனுமாய் -ஆனவனை –

தன்னை  யாம் சென்று காண்டும் தண் காவிலே –
நாம் சென்று திருத் தண் காவிலே காணக் கடவோம் –

——————————————

(ஏழு திவ்ய தேசம் -திரு நாங்கூர் கீழே பார்த்தோம் -அனைத்துமே இங்கே சொன்னவாறு –
நின்ற அனுபவம் கீழ்
ஆலிலை கிடந்த அனுபவம் இதில் )

வடதள சாயி யானவனை திருவாலியிலே கண்டோம் –
இனி
திரு நாங்கூரிலே சென்று காணக் கடவோம்
என்கிறார் –

வேலை யாலிலைப் பள்ளி விரும்பிய
பாலை யாரமுதினைப் பைந்துழாய்
மாலை யாலியில் கண்டு மகிழ்ந்து போய்
ஞாலம் உன்னியைக் காண்டும் நாங்கூரிலே —10-1-3-

(உன்னி உன்னி உலகம் படைத்தவனே த்யேய விஷயம் -காரணந்து த்யேய )

வேலை யாலிலைப் பள்ளி விரும்பிய பாலை யாரமுதினை-
கடலிலே
ஒரு பவனாய் இருப்பதொரு ஆலிலையிலே
கண் வளர்ந்து அருளுகையை விரும்பின
சர்வ வித போக்யன் ஆனவனை  –

பாலை யாரமுதினை –
கண் வளர்ந்து அருளுகை
தமக்கு பால் போலவும்
அமிர்தம் போலவும் ரசித்த படி –

பைந்துழாய் மாலை -யாலியில் கண்டு மகிழ்ந்து போய்
அந்த ரஸ்யதையில் உண்டான ஏற்றம் போலே
ஐஸ்வர்ய ஸூசகமாய்
அழகிதான   திருத் துழாயை  உடைய சர்வேஸ்வரனை –
திரு வாலியிலே கண்டு உகந்து போய் –

ஞாலம் உன்னியைக் காண்டும் நாங்கூரிலே   –
ஜகத்துக்கு த்யேன் ஆனவனை –
வரையாதே இன்னார் என்னாமல் ஆஸ்ரயிக்கும் படி
இருக்கிறவனை திரு நாங்கூரிலே
காணக் கடவோம் –

———————————

(நிரதிசய போக்யத்தை கீழே அனுபவித்து
அதுக்கு வரும் விரோதியைப் போக்குபவனும் தானே என்கிறார் இதில் )

ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானுக்கு விரோதியான ஹிரண்யனை போக்கினவனை
திருப் பேரிலே கண்டோம்
இனிப் போய் திரு வெள்ளறையிலே காணக் கடவோம்
என்கிறார் –

துளக்கமில் சுடரை அவுணன்  உடல்
பிளக்கும் மைந்தனைப் பேரில் வணங்கிப் போய்
அளப்பில் ஆரமுதை அமரர்க்கு அருள்
விளக்கினைச் சென்று வெள்ளறை காண்டுமே —10-1-4-

துளக்கமில் சுடரை அவுணன்  உடல் பிளக்கும் மைந்தனைப் பேரில் வணங்கிப் போய்-
காற்றால்
மற்று ஒன்றால்
விச்சேதிக்கப் போகாதே
ஜ்வலந்தம் -என்கிறபடியே
ஏக ரூபமான ஒளியை உடையனாய்
ஹிரண்யன் உடலைப் பிளக்க வல்ல சர்வ சக்தியை
திருப் பேரிலே வணங்கி
போய் –

அளப்பில் ஆரமுதை அமரர்க்கு அருள் விளக்கினைச் சென்று வெள்ளறை காண்டுமே –
அபரிச்சேத்யமான போக்யதையை உடையனாய்
அத்தை அயர்வறும் அமரர்களுக்கு அனுபவிக்கக் கொடுத்து
அத்தாலே உஜ்ஜ்வலனானவனை –

அமரர்க்கு அருள் விளக்கினை –
நித்ய ஸூரிகளுக்கு பிரகாசமாய் இருப்பதோர்
அருளாய் இருக்கிறவனை

(அளப்பில் ஆரமுதை
அளப்பில் அருள்-
அருள் ஆகிய விளக்கு
விளக்கான அளப்பில் அருள் -என்று இரண்டும் )

வெள்ளறை காண்டுமே
திரு வெள்ளறையிலே காணக் கடவோம் –

—————————————–

(ஸத்ய மூர்த்தி
சயன திருக்கோலம்
பூமியில் திருவடி அழுந்த நின்ற திருக்கோலம்
குடைவரைக் கோயில்
ஆதி சேஷன் தபஸ்ஸூ -ஸத்வ குணம் வளர
சர்ப்ப நதி பாம்பாறு
ஸத்ய புஷ்கரணி
ஹயக்ரீவ வடிவில் சேவை சாதிக்க
நீண்ட சயனம்
சந்திரனும் தபஸ்ஸூ –
தத்தாராயன் விஷ்ணு
துர்வாசர் ருத்ரனே -கைலாசம் –
சந்திரன் பிரமாவே -இங்கு தபஸ்ஸூ இருந்ததாகவும்
புஷ்ப்பத்ரா நதி சித்ர சிலை பத்ர வடம் -பாறையில் தபசு
இவையும் இங்கே ஆலமரம் அரசமரமாக
புதன் க்ரஹம் -வம்சம் -காட்டுப்பன்றி -சத்ய கிரி க்ஷேத்ரம் வந்து கூட்டு புரூரவன் வந்தான் -ராஜா வந்ததும் சேவை –
மூன்று வருஷம் தங்கி கைங்கர்யம்
மது கைடபர் ஓட்ட -பூமா தேவி பயப்படாதே கையால் சொல்லி
மலை போல் ஸத்ய வாக்யன்
வராஹனுக்கு தனி சந்நிதி )

(நிரதிசய போக்யமான வடிவை அமரர்க்கு முற்றூட்டாக கொடுப்பவன்
ஹேயமான வருக்கும் ரக்ஷகன் என்கிறார் இதில் )

ருத்ரனுடைய சாபத்தைப் போக்கினவனை
திரு நறையூரிலே கண்டோம்
இனிப் போய்
திரு மெய்யத்திலே காணக் கடவோம்
என்கிறார் –

சுடலையில் சுடு நீறன் அமர்ந்ததோர்
நடலை தீர்த்தவனை நறையூர்க் கண்டு என்
உடலையுள் புகுந்து உள்ளம் உருக்கி யுண்
விடலையைச் சென்று காண்டும் மெய்யத்துள்ளே —10-1-5-

சுடலையில் சுடு நீறன் –
ஸ்மசாந பூமியிலே பஸ்மோத் தூளியன் ஆகிறது –
சுடலையில் சுட்ட சாம்பலை பூசி இருக்கிறவன் -என்றபடி

அவன் –
அமர்ந்ததோர் நடலை தீர்த்தவனை –
அனுபவித்த கிலேசத்தை தவிர்த்தவனை –

நறையூர்க் கண்டு –
திரு நறையூரிலே கண்டு –

என் உடலையுள் புகுந்து உள்ளம் உருக்கி யுண் விடலையைச் சென்று காண்டும் மெய்யத்துள்ளே
என் சரீரத்துக்கு உள்ளே புகுந்து
நெஞ்சை உருக்கி
உண்கிற வித்தகனை திரு மெய்யத்திலே காணக் கடவோம்

விடலை -என்று பாலை வனத்தில் தலை மகனைச் சொல்லுகிறது
இப் பாலையான பூமியை தனக்கு இருப்பிடம் ஆக்கின படியாலே
பாலை நிலமான சம்சாரத்துக்கு தலைவன் ஆனவனை
தம்முடைய ஹிருதயத்தில் காட்டில் பாலை நிலம் இல்லை என்று இருக்கிறார் –

(மரு காந்தாரம் சம்சாரம்
பாலை வனத்தில் சோலை போல் திவ்ய தேசங்கள்
எனது உடலான பாலை வனத்தில் உருக்கி நீர் வர வைத்த தலைவன் -)

——————————————————–

(குட மூக்கு -கும்ப கோணம் பாஸ்கர க்ஷேத்ரம்
சக்கர தீர்த்தம்
ஐப்பசி அம்மாவாசை
பிருகு மகரிஷி -சாத்விகர் பரீஷை
ஸ்ரீ நிவாஸ -பாதாள -சேவை
பிருகு மகரிஷி ஹேம மகரிஷியாக
போற்றாமை கோமள வல்லித்தாயார்
திருக்கல்யாண கோலம்
தேர் வடிவில் கர்ப்ப க்ருஹம்
ப்ரணவாகார விமானம் -அரங்கத்தில்
வைதிக விமானம் -விபீஷணன் கொடுக்க -ஆராவமுதன் –
சார்ங்கம் வில்லுடன் -சேவை
மகர சங்கராந்தி திருக்கல்யாண உத்சவம்
கிழக்கு நோக்கி திருக்கோலம்
மாசி மகம் தெப்பம்
விஜயவல்லி நாயகி சமேத சக்கர பாணி
தக்ஷிண அயோத்யா ராம ஸ்வாமி திருக்கோயில்
லஷ்மணம் இரண்டு வில்
திருவடி ராமாயணம்
மண்டப தூண்கள் சிற்பங்கள் பிரசித்தம்
திராவிட சுருதி தர்சகன் -)

(தம்மை அனுபவித்த படியை
அநந்ய ப்ரயோஜனரான தம்மிடம் வியாமுக்தன் ஆனபடியைச் சொல்ல வேணுமோ
ப்ரயோஜனாந்தர பார்களுக்கும் உடல் நோவக் கடல் கடைந்து அமுதம் தந்த வள்ளல்
வானையார் -தேவ லோகம் விடாமல் உள்ள தேவர்கள் )

பிரயோஜனாந்த பரருக்கும் அபேஷிதம் செய்யும்
பரம உதாரனை
திருச் சேறையிலே கண்டோம்
இனி
திருக் குடந்தையிலே காணக் கடவோம்
என்கிறார் –

வானையார் அமுதம் தந்த வள்ளலைத்
தேனை நீள் வயல்  சேறையில் கண்டு போய்
ஆனை வாட்டி யருளும் யமரர் தம்
கோனை யாம் குடந்தை சென்று காண்டுமே —10-1-6-

வானையார் அமுதம் தந்த வள்ளலைத்
தேவ லோகம் க்ருத க்ருத்யமாம் படி
அம்ருதத்தைத் தந்த உதாரனாய்

தேனை –
தன்னை உகந்தார்க்கு தானே போக்யம் ஆனவனை –

வானையார் அமுதம் தந்த வள்ளலைத் தேனை –
நித்ய ஸூரிகளுக்கு தன்னைக் கொடுக்குமா போலே
எனக்குத் தன்னைத் தந்த உபகாரகனை –
தேன் போலே ரஸ்யன் ஆனவனை –

நீள் வயல்  சேறையில் கண்டு –
நீண்ட வயலை உடைய திருச் சேறையிலே கண்டு –

போய் –

ஆனை வாட்டி யருளும் யமரர் தம் கோனை யாம் குடந்தை சென்று காண்டுமே
குவலயா பீடத்தை கொன்று
ப்ரஹ்மாதிகளுக்கு குடி இருப்பு கொடுத்து
அவர்களுக்கு தானே சேஷி என்னும் இடத்தை பிரகாசிப்பித்தவனை
யான் திருக் குடந்தையில் சென்று காண்டுமே –

————————————————

(திரு வெக்கா வேதா சேது
மா முனிகள் ஸ்ரீ பாஷ்யம் சாதித்த திவ்ய தேசம்
பொய்கையாழ்வார் திரு அவதாரம் -பொற்றாமரை குளம்
சொன்ன வண்ணம் செய்த பெருமாள்
நான்முகனுக்கும்
திருமழிசை ஆழ்வாருக்கும்
ஓர் இருக்கை உத்சவம்
கோமள வல்லித்தாயார்
வேத சார விமானம் )

(தேவர்களுக்கு அமுதம் கொடுத்தவன்
ஆஸ்ரித கர ஸ்பர்சம் தனக்குத் தாரகமாய் உள்ளவன் )

ஸ்ரீ கிருஷ்ணனாய்
அனுகூல ஸ்பர்சம் உள்ள வெண்ணெயை விழுங்கினவனை
(கோ சகன் )
திருவழுந்தூரிலே  கண்டோம்
இனிப் போய்
திரு வெக்காவில் காணக் கடவோம் –

கூந்தலார் மகிழ் கோவலனாய் வெண்ணெய்
மாந்து அழுந்தையில் கண்டு மகிழ்ந்து போய்
பாந்தள் பாழியில் பள்ளி விரும்பிய
வேந்தனைச் சென்று காண்டும் வெக்கா வுளே  —10-1-7-

கூந்தலார் மகிழ் கோவலனாய் வெண்ணெய் மாந்து அழுந்தையில் கண்டு மகிழ்ந்து
நல்ல கூந்தலை உடைய ஸ்திரீகளுக்கும் போக்யனாய்
கோவலனாய் வெண்ணெய் அமுது செய்து
வர்த்திக்கிறவனை
திருவழுந்தூரிலே கண்டு உகந்து

போய்-

பாந்தள் பாழியில் பள்ளி விரும்பிய வேந்தனைச் சென்று
பாந்தள் -என்று -பாம்பு
பாழி -என்று -படுக்கை
திருப் பாற் கடலிலே
திரு வநந்த ஆழ்வான் ஆகிற படுக்கையிலே
கண் வளர ஆதரித்த
சர்வ ரஷகனானவனை –

வெக்காவில் துயில் அமர்ந்த வேந்தனை -(திரு நெடும் தாண்டகம் )- என்னக் கடவது இறே
காண்டும் வெக்கா வுளே-
கண் வளரக் காணலாவது திரு வெக்கா உள்ளே –

——————————————-

(கோபிமாருக்கே பவ்யனாக இருந்தது அன்றிக்கே
ஆஸ்ரிதர்கள் அனைவருக்கும் தாரகனானவன் )

தன் திருவடிகளிலே நல்லாருக்கு ஆத்மாவனவனை
தெற்குத் திருமலையிலே கண்டோம்
இனிப் போய்
திரு விண்ணகரிலே காணக் கடவோம்
என்கிறார் –

பத்தராவியைப் பான்மதியை யணித்
தொத்தை மாலிருஞ்சோலை தொழுது போய்
முத்தினை மணியை மணி மாணிக்க
வித்தினைச் சென்று விண்ணகர் காண்டுமே –10-1-8-

பத்தராவியைப் –
தன் திருவடிகளில் நல்லார் ஆனவர்களுக்கு ஆத்மாவானவனை
தாரகனாய்
தன்னை ஒழிய செல்லாத படி இருக்கும் -என்கை-

அன்றிக்கே
ஜ்ஞாநீத் வாத்மைவ மே மதம் -என்கிறபடியே
ஸ்நேஹிதர்களாய் இருப்பாரை 
தனக்கு
தாரகமாய் உடையவனாய் இருக்கும் -என்னுதல்

ஆவியாக கண்ணுக்கு தோற்றாத படி இருக்கை அன்றிக்கே
பான்மதியை –
மறுவற்ற சந்தரனைப் போலே
சதா த்ரஷ்டவ்யனாய்
பூமிக்கு எல்லாம் ஆப்யாயனம் பண்ணுமவனை
(துன்பத்தைப் போக்குபவன் )

யணித்தொத்தை –
ஆபரண மாலையை
பொன்னரி மாலையைப் போலே

அன்றிக்கே
மணித் தொத்தை –
நீல மணி போலே ஸ்ரமஹரமான வடிவை உடையவனை –

மாலிருஞ்சோலை தொழுது போய்
தெற்கு திருமலையிலே கண்டு போய் –

முத்தினை மணியை மணி மாணிக்க வித்தினைச் சென்று விண்ணகர் காண்டுமே –
முத்து போலே
உடம்பிலே அணைந்தால் விடாய் கெடும்படி
குளிர்ந்து இருக்குமவனை
நீல மணி போலே கண்ணுக்கு ஸ்ரமஹரமான வடிவை உடையனாய் இருக்கை
பெரு விலையனான மாணிக்கம் போலே  –
தர்ச நீயமாய் இருக்கும் வடிவு அழகு அன்றிக்கே
இதுக்கு எல்லாம் சர்வ காரண பூதனாய் இருக்குமவனை
திரு விண்ணகர் காண்டுமே –

——————————————-

(திரு நாவாய்
திரு நறையூர் பதிகத்தில் பார்த்தோம்
நவ யோகி ஸ்தலம்
திருவடி பூமிக்குள்ளே சேவை
முகுந்தன்
மலர் மங்கை நாச்சியார்
பாரத புளா நதி அருகில்
கஜேந்திர ஆழ்வானுக்கும் லஷ்மீ தேவிக்கும் போட்டி -கைங்கரியத்தை பெற்றுக் கொடுத்த இடம்
பிரிந்த துன்பக்கடல் -ஆன்ரு சம்சயம் -குணம் )

(ஆஸ்ரிதற்கு எல்லாம் தாரகாதிகள் அன்றிக்கே
ஆஸ்ரித விரோதி நிரசனத்துக்காக கழல் அணிந்த திருப்பாதம் )

குவலயா பீடத்தின் கொம்பைப் பறித்தவனை
திருக் கோட்டியூரிலே கண்டு போய்
திரு நாவாயிலே காணக் கடவோம்
என்கிறார் –

கம்ப மா களிறு அஞ்சிக் கலங்க வோர்
கொம்பு கொண்ட குரை கழல் கூத்தனைக்
கொம்புலாம் பொழில் கோட்டியூர்க் கண்டு போய்
நம்பனைச் சென்று காண்டும் நாவாயுளே  –10-1-9-

(கம்ப-நடுக்கம் கம்பு என்று இரண்டு நிர்வாகங்கள் )

கம்ப மா களிறு அஞ்சிக் கலங்க வோர் கொம்பு கொண்ட
குரை கழல் கூத்தனைக்
தன்னைக் கண்டாருக்கு நடுங்க வேண்டும் படியாய்
பெரிய வடிவை உடைய குவலயா பீடம் –
தன்னைக் கண்டார் படும் அத்தை தான் பட்டு
அஞ்சிக் கலங்கிப் போம் படி
அதன் கொம்பை அநாயாசேன வாங்கி –
ஒளியோடு கூடி வீரக் கழலை உடையவனாய் –
தர்ச நீயமாக நடந்தவனை

அன்றிக்கே
மத்தமாய் -கம்பத்தை பிடுங்கிக் கொண்டு சஞ்சரிக்கிற
ஆனையானது பயப்பட்டு குலையும்படி
அதன் கொம்பை பறித்து
அக் கொம்புகளை கையிலே ஆயுதமாகக் கொண்டு
கம்சன் மற்றையாரைத் தொடர்ந்து கொடு திரிகிற போது
ஆபரணங்களால் வந்த த்வனியை உடைத்தான
திருவடிகளை வீசிக் கொண்டு நடந்த போது
வல்லார் ஆடினால் போலே இருந்தபடி –

கொம்புலாம் பொழில் கோட்டியூர்க் கண்டு போய் நம்பனைச் சென்று காண்டும் நாவாயுளே  –
நித்ய வசந்தமாய்
தழைத்த பொழிலை உடைய
திருக் கோட்டியூரிலே கண்டு போய்-
எல்லா தசைகளிலும் இவ்வாத்மாவுக்கு தஞ்சமானவனை
தன்னை விஸ்வசித்தார் உகக்கும்
திரு நாவாயிலே காண்டும் –

———————————————-

பெற்றம் ஆளியைப் பேரில் மணாளனைக்
கற்ற நூல் கலிகன்றி  யுரை செய்த
சொல் திறமிவை சொல்லிய தொண்டர்க்கு
அற்றமில்லை அண்டம் அவர்க்கு ஆட்சியே —10-1-10-

(பேரில் மணாளனை-திருப்பேர் நகருடன் பதிகம் நிகமனம் இவரும் நம்மாழ்வாரும் )

பெற்றம் ஆளியைப் பேரில் மணாளனைக் –
பெற்ற -என்று பெருமையாய்
மாளிகைக்கு விசேஷணம் ஆகவுமாம்
(திருப்பேர் நகரில் உள்ள மாளிகை )

பெற்றம் ஆளியை -என்ற பாடம் ஆகில்
பசுக்களை நோக்குமவன் -என்றது –

கற்ற நூல் கலிகன்றி  யுரை செய்த –
திரு மந்த்ரம் கற்ற இடத்தில் கற்கும் இத்தை இறே அல்லாதவையும்

சொல் திறமிவை சொல்லிய தொண்டர்க்கு –
சாஸ்திர மரியாதை தப்பாத படி
சொன்ன சப்த ராசி
ரத்ன குவை போலே –
இவை சொன்ன ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு

அற்றமில்லை அண்டம் அவர்க்கு ஆட்சியே –
விச்சேதம் இல்லை –
நச புனராவர்த்ததே
ஆண்மின்கள் வானகம் ஆளியான் தமர் –திருவாய் 10-9–என்கிறபடியே
நித்ய அனுபவம் பண்ணலாம் தேசத்தை ஆளுவார்கள் –

————

ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.

ஒருத்தி வேட்டகம் புகு முன் உற்றார் சொல்வாள் போல்
திருப்பதிகள் வான் சேர் முன் கண்டு அரும் தேன் பொன்
ஆரமித்து ஆறு பேறு எம்பிரான் என்னும் கலியன்
கார் எனக் காட்டும் இரக்கம் -91-

இப்பதிகத்தில் -27-திவ்ய தேச மங்களா சாசனம் –
அரும் தேன்–சர்வ ரஸ/ பொன் -அழகும் செல்வமும் -அச்சோ ஒருவர் அழகிய வா -வைத்த மா நிதி –

——————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: