ஸ்ரீ பெரிய திருமொழி-9-7—ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம்-

(ஸ்ரீ வல்லபன்
மங்களத்து அம்மாள் துவாதசி பாராயணம் -சேவை சாதித்த ஸ்ரீ வல்லபன்
ஏகாதசி விரதம்
தடங்கல் பண்ணி
ஸூ தரிசன தொலைகாசுரன்
தலையாறு காலாறு முத்தாறு
நாச்சியார் இருப்பதை மூடி -விலக
திரு வல்லபை வாழும் திரு மார்பன்
கண்டாகர்ணனுக்கு மோக்ஷம்
50 ஆதி த்வஜ ஸ்தம்பம் -மேலே பரந்த கோலம் திருவடி 3 ஆதி உயரம்
ஸூ தர்சன ஆழ்வானுக்கு தனி சந்நிதி
துர்வாசர் பிரதிஷடை
பன்னீராயிரம் திரு விழா கதலி பழம்
ஸ்ரீ வேலி
ஆண்டு ஆராட்டு உத்சவம் சிறப்பு

சுற்றி ஐந்து திவ்ய தேசங்கள் உப்பு மாங்காய் பிரசாதம் இன்றும் இங்கு
வாமன க்ஷேத்ரம் -கேரளா முழுவதும்
நின்ற கோலம்
சேமத் திருக்கோயில் நாச்சியார் )

தந்தை தாய்-பிரவேசம் –

வல்லிச் சிறு நுண் இடையாரிடை நீர் வைக்கின்ற அல்லல் சிந்தை தவிர அடைமின் -என்று
பர உபதேசத்துக்கு உறுப்பாக இதர விஷயங்களின் தண்மையை அனுசந்தித்தார் –
அது தம் அளவிலேயாயிற்று –
பிறருக்கு உபதேசிக்கைக்கு நாம் தாம் இதில் நின்ற நிலை என்ன என்று தம்மைப் பார்த்தார் –
இன்னமும் சம்சார வாசனை கழிந்தது இல்லை –
இழக்கைக்கு ஹேதுவான சரீர சம்பந்தம் இன்னமும் அனுவர்த்தியா நின்றது –
போக்யமான விஷயங்கள் சந்நிஹிதமாய் இரா நின்றன –

ஆன பின்பு
நாம் இன்னமும் இதில் நின்றும் அழகிதாக கால் வாங்கினமை போராது-
நாம் இதில் நின்றும் மீண்ட அளவு பார்த்து
நம் பேற்றுக்கு தாம் முற்பாடனாய் கொண்டு
மஹாபலியினுடைய யஞ்ஞ வாடத்திலே தம் உடைமை பெறுவதற்கு அர்த்தித்வம் எல்லாம் தோற்றி
நின்றாப் போலே
திரு வல்ல வாழிலே வந்து நின்றான் ஆயிற்று  –

சம்சார வாசனை கழிந்தது இல்லை –
தேஹம் அஸ்திரமாய் இரா நின்றது –
விஷயங்கள் சந்நிஹிதமாய் இரா நின்றன –
ஐஸ்வர் யாதிகள் நிலை நில்லாதாய் இரா நின்றன –
இவை இத்தனையும் தப்பி –
அவ்வருகு பட்டால் –
பாஹ்ய குத்ருஷ்டிகள் ஆகிற விலக்கடிகள் தப்புகை
சாலப் பணி யுண்டாய்  இரா நின்றது –

இவை இப்படி தண்ணிய வென்று புத்தி பண்ணி இருந்தாய் ஆகில்
அவன் நித்ய வாஸம் திரு வல்ல வாழை
வாயாலே சொல்லுவதாக
நெஞ்சாலே மருவப் பார் -என்று திரு உள்ளத்தோடு கூட்டுகிறார் –

(வல்ல வாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே -பாசுரம் தோறும் உண்டே )

(கீழே அனுகூலரையும் கூட்டிக் கொண்டு போக இருந்தவர்
இத் திரு மொழியில் ப்ராப்யாந்தரம் -பெண்கள் சிற்றிடை -வைராக்யம் கொண்டு போக வேண்டும் என்று சங்கதி )

————————————-

தாயே தந்தை என்னும் கீழே-1-9- திருவேங்கட திரு மொழியில் பார்த்தோம்

தந்தை தாய் மக்களே சுற்றம் என்று உற்றவர் பற்றி நின்ற
பந்தமார் வாழ்க்கையை நொந்து நீ பழி எனக் கருதினாயேல்
அந்தமாய் யாதியாய் ஆதிக்கும் ஆதியாய் ஆயனாய
மைந்தனார் வல்ல வாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே —9-7-1-

அந்தமாய் -அனைத்தும் இவன் இடமே லயிக்குமே -பிரளயத்தில் சமஸ்தமும் ஸூஷ்மமாக ஒட்டிக் கொண்டே இருக்குமே –
யாதியாய்-ஸமஸ்த காரணமும் இவனே -ஸ்ருஷ்ட்டி காலத்தில் உத்பத்தி ஸ்தானம் –
ஆதியாய் ஆயனாய–காரணாவஸ்திதமான  சித் அசித்துக்களுக்கும் நிர்வாஹகனாய்-
ஆயனாய மைந்தனார்-காரியங்களின் மத்ஸ்யத்தில் ஸ்ரீ கிருஷ்ணனாய் திரு அவதரித்த மிடுக்கன் –

தந்தை தாய் மக்களே சுற்றம் என்று உற்றவர் பற்றி நின்ற பந்தமார் வாழ்க்கையை –
தமப்பன் தாய் புத்ரர்கள் உறவு முறையார் சம்பந்திகள்
என்று இங்கனே பற்றிக் கொடு நிற்கிற
பந்தகமான யாத்ரையை –

நொந்து நீ பழி எனக் கருதினாயேல் –
மாதா பிதா ப்ராதா -என்கிறபடியே
அவன் ஒருவனே சர்வ வித பந்துவாய் இருக்க
சோபாதிக பந்துக்களை நிருபாதிக பந்துக்களாக நினைத்து
போருகிற பந்தகமான யாத்ரையை
அனுசந்தித்து வெறுத்து
ஈஸ்வர சேஷமான ஆத்ம வஸ்துவுக்கு இது அவத்யாஹம் என்று புத்தி பண்ணினாய் ஆகில் –

அந்தமாய் யாதியாய் ஆதிக்கும் ஆதியாய் ஆயனாய மைந்தனார்-
சர்வமும் உப சம்ஹ்ருதம் ஆனவன்று இவற்றுக்கு லய ஸ்தானமாய்-
சிருஷ்டி காலம் வந்தவாறே உத்பத்தி ஸ்தானமாய்
காரணாவஸ்திதமான  சித் அசித்துக்களுக்கும் நிர்வாஹகனாய்
கார்ய மத்யே கிருஷ்ணனாய் வந்து அவதரித்தவன் –

வல்ல வாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே-
நித்ய வாஸம் பண்ணுகிற திரு வல்ல வாழை
வாயாலே சொல்லும்படியாக
நெஞ்சாலே நினைக்கப் பண்ணப் பாராய் -நெஞ்சே என்கிறார் –

—————————————————-

கீழே பந்த ஆபாசங்களை விட்டு -சர்வவித்த பந்து இருக்கும் தேசம்
வடிவு அழகால் வசீகரிக்க வல்ல ஸ்திரீகளை விடாய் போகாமையாமே இப்படி செய்யப் போகிறது இல்லை என்ன
அதன் தோஷங்களை கண்டு அருவருத்து அஞ்சினாயேல்
சர்வ ஸுவ்லப்யன் இருக்கும் தேசம் வாயால் சொல்லி னீங்காலே அடைய உபதேசம் இதில் –
மதுரையார் மன்னன் -துவாராபதி மன்னனாக இருந்தும் மன்னார்க்காய் தூது போன ஸுவ்லப்யம் –

மின்னு மா வல்லியும் வஞ்சியும் வென்ற நுண்ணிடை நுடங்கும்
அன்ன மென்னடையினார் கலவியை அருவருத்து அஞ்சினாயேல்
துன்னு மா மணி முடிப் பஞ்சவர்க்காகி முன் தூது சென்ற
மன்னனார் வல்ல வாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே —9-7-2-

மின்னு மா வல்லியும் வஞ்சியும் வென்ற நுண்ணிடை நுடங்கும்
மின்னும் அழகிய கொடியும் வஞ்சிக் கொம்பும்
இவற்றைத் தோற்ப்பிக்கும் படியான
நேரிய இடையானது துவளும் படி இருப்பாராய்-

அன்ன மென்னடையினார் கலவியை அருவருத்து  அஞ்சினாயேல்  –
அன்னம் போலே மிருதுவான நடையை உடையரான ஸ்திரீகள்
ஓட்டை சம்சஸ்லேஷம் ஆகிறது சாலப் பொல்லாது –
அநந்தரம் ஸ்நான உபகரணம் கொண்டு புதுப்பட வேண்டி இருப்பதொன்று –
அத்தை அருவருத்து அஞ்சினாய் ஆகில் –

துன்னு மா மணி முடிப் பஞ்சவர்க்காகி முன் தூது சென்ற மன்னனார் –
நெருங்கின மணிகளால் செய்யப் பட்ட முடியை உடையரான
பாண்டவர்களுக்காக  பண்டு தன்னை தாழ விட்டு
தூது போன மேன்மையை உடையவர் –
(முடியைச் சொன்னது முடி இழந்த யது குலத்தில் பிறந்தத்தைக் காட்டி அருள )

வல்ல வாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே –
நம்மை யாரோ ஏவிக் கார்யம் கொள்வார் என்று
வந்து நிற்கிற திரு வல்ல வாழை —

———————————————-

(ஸ்த்ரீகள் உடைய போக்யதையால் துவண்டு இருப்பார் ரசிகராய் இருப்பார்கள் அன்றோ
அதில் மூட்டினால் அருவருப்பு வருமோ என்ன
அவர்கள் பேச்சு பொய்யே என்று அறிந்தாய் ஆகில் அவற்றை விட்டு இங்கு வா என்று உபதேசம் )

பூணுலா மென் முலைப் பாவைமார் பொய்யினை மெய்யிதென்று
பேணுவார் பேசுமப் பேச்சை நீ பிழை எனக் கருதினாயேல்
நீணிலா வெண் குடை வாணனார் வேள்வியில் மண்ணிரந்த
மாணியார் வல்ல வாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே —9-7-3-

பூணுலா மென் முலைப் பாவைமார் பொய்யினை மெய்யிதென்று-
முத்தாஹாரம் தொடக்கமான ஆபரணங்களை உடைத்தாய் –
விரஹசஹம் அல்லாத முலையை உடையரான ஸ்திரீகள் உடைய பொய் உண்டு –
அவர்கள் ஆபாத ப்ரதீதியில் ஸ்நேஹிதர்களாகப் பண்ணிக் காட்டும் அவற்றை மெய்யாகக் கொண்டு –

பேணுவார் பேசுமப் பேச்சை நீ பிழை எனக் கருதினாயேல் –
என்றும் ஒக்க மெய்யாய் இருக்கும் பகவத் விஷயத்தை போலே
ஆதரித்துக் கொண்டு போருகிறவர்கள் சொல்லும் வார்த்தையை
நீ தப்பு என்று புத்தி பண்ணினாய் ஆகில்  –

நீணிலா வெண் குடை வாணனார் வேள்வியில் மண்ணிரந்த மாணியார் –
நிலா பரந்தாப் போலே இருக்கிற வெண் கொற்றக் குடையை
யுடையனான மகா பலியுடைய யாகத்திலே சென்று
தன் அல்லாத ஒன்றை அர்த்திப்பாரைப் போலே பூமியை அபேஷிக்க
இரப்பிலே தகண் ஏறின வடிவை  யுடையவர் –

வல்ல வாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே –
தம்முடைய அர்த்தித்வம் தோற்ற வந்து நிற்கிற திரு வல்ல வாழை –

—————————————————-

(பேணுவார் பேச்சை பிழை என்று சொல்வது எவ்வாறு
பேச்சின் மாதுர்யம் -கிளி மொழி -பொய்யாகுமோ
பேச்சிலே தான் இனிமை இருதயத்தில் இல்லை என்று அறிந்து வர உபதேசம்
விண்ணுளார் -வேங்கடதுளார்-முந்நீர் வண்ணனார் வல்ல வாழ்)

பண்ணுலா மென் மொழிப் பாவைமார் பணை முலை யணைது நாம் என்று
எண்ணுவார் எண்ணமது ஒழித்து நீ பிழைத்து உய்யக் கருதினாயேல்
விண்ணுளார் விண்ணின் மீதியன்ற வேங்கடதுளார் வளங்கொள் முந்நீர்
வண்ணனார் வல்ல வாழ் சொல்லுமால் வல்லையாய் மருவு நெஞ்சே –9-7-4-

பண்ணுலா மென் மொழிப் பாவைமார் பணை முலை யணைது நாம் என்று  -எண்ணுவார் எண்ணமது ஒழித்து-
பண் மிக்கு இருந்துள்ள மிருதுவான பேச்சை உடையரான ஸ்திரீகள் உடைய
நெருங்கின முலைகளோடு அணையக் கடவோம் என்று
மநோ ரதிக்குமவர் களுடைய மநோ ரதத்தைத் தப்பி –

நீ பிழைத்து உய்யக் கருதினாயேல் –
நீ உஜ்ஜீவித்துப் போகப் பார்த்தாயாகில் –

விண்ணுளார் விண்ணின் மீதியன்ற வேங்கடதுளார் வளங்கொள் முந்நீர் வண்ணனார் –
நித்ய ஸூரிகளுக்கு காட்சி கொடுத்துக் கொண்டு
பரம பதத்திலே இருக்கிறவர்
அத்தோடு ஒரு போலியான ஒக்கத்தை உடைத்தான திருமலையிலே வர்த்திக்கிறவர் –
தர்ச நீயமான கடல் போலே இருக்கிற வடிவை உடையவர் –
வர்த்திக்கிற –

வல்ல வாழ் சொல்லுமால் வல்லையாய் மருவு நெஞ்சே –
திரு வல்ல வாழை –
அங்கு உள்ளு நிற்கிறவர் வடிவு அழகு இருக்கிறபடி –

———————————————-

(கீழே மூன்றும் பெண்களின் கலவி இன்பம்-விஷயாந்தர தோஷம் -சிக்கி-மீண்டாலும் –
பாழும் கிணறு போல் ஐஸ்வர்ய அனுபவம் -இதில்
ஐஸ்வர்ய ப்ராவண்யம் மிக்கு திவ்ய தேசம் மருவ முடியுமோ என்ன
அஸ்திரம் என்று அறிந்து -மஹா சக்ரவர்த்தி கூட அஸ்திரம் தானே என்று காட்டி அருளி –
வாழ்ந்தார் வாழ்ந்தது மா மழை மொக்குளின் மாய்ந்து மாய்ந்து ஆழ்ந்தார் –திருவாய் -4-1-6-
நித்ய அனுபவம் இங்கேயே -மன்னி-நமக்காக வைத்த மா நிதி -அவை உருண்டு ஓடும் சிறு நிதி )

மஞ்சு தோய் வெண் குடை மன்னராய் வாரணம் சூழ வாழ்ந்தார்
துஞ்சினார் என்பதோர் சொல்லை நீ துயர் எனக் கருதினாயேல்
நஞ்சு தோய் கொங்கை மேலங்கை  வாய் வைத்து அவள் நாளை யுண்ட
மஞ்சனார் வல்ல வாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே —9-7-5-

மஞ்சு தோய் வெண் குடை மன்னராய் வாரணம் சூழ வாழ்ந்தார் –
மேகப் பதத் தளவும் செல்ல ஓங்கின
வெண் கொற்றக் குடையை உடையராய்
திரள் திரளான ஆனை யணியை உடையராய் வாழ்ந்த –

துஞ்சினார் என்பதோர் சொல்லை நீ துயர் எனக் கருதினாயேல் –
ராஜாக்கள் முடிந்தார்கள் என்று கேட்டுப் போருகிற வார்த்தையை
நீ துக்கம் என்று புத்தி பண்ணினாய் ஆகில்

நஞ்சு தோய் கொங்கை மேலங்கை  வாய் வைத்து அவள் நாளை யுண்ட மஞ்சனார்
நஞ்சாலே நிறைந்து இருந்துள்ள முலையின் மேலே
அழகிய கையையும் வாயையும் வைத்து
அவளுடைய ஆயுஸையும் முடித்த  -மைந்தனார்

வல்ல வாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே –
விரோதி நிரசனமே யாத்ரையாய் இருக்கிறவர்
வர்த்திக்கிற திரு வல்ல வாழை –

————————————

(க்ஷேத்ர வாசிகளைக் கொண்டாடி அருளுகிறார் இதில்
திருவினார் வேத நான்கு ஐந்து தீ வேள்வியோடு அங்கமாறும் மருவினார்-
கீழே ஐஸ்வர்யம் நிலை இல்லாதது என்று அருளிச் செய்து
இதில் இந்திரியங்கள் -தங்களுக்கு வேண்டியதை கேட்டு -பாதிக்கின்றனவே
நாம் திவ்ய தேசம் மருவும் வழி என்ன
அவை பாதிக்கும் அளவை அறிந்தாய் ஆகில் –
தூண்டிலில் உள்ள ஒன்றை ஆசைப்பட்டு மீன் பிடி படுவது போல்
மின் மினி பூச்சு விளக்கில் மாட்டிக் கொண்டு மாயுமா போல்
அன்றோ இவையும் -என்கிறார் -)

உருவினார் பிறவி சேரூன் பொதி  நரம்பு தோல் குரம்பையுள் புக்கு
அருவி நோய் செய்து நின்ற ஐவர் தாம் வாழவதற்கு அஞ்சினாயேல்
திருவினார் வேத நான்கு ஐந்து தீ வேள்வியோடு அங்கமாறும்
மருவினார் வல்ல வாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே —9-7-6-

(உரு-ஸூஷ்ம சரீரம்
குரம்பையுள் புக்கு-ஸ்தூல சரீரம் -புனர் யுக்தி வாராமைக்காக
திருவினார்-தோஷம் அற்ற பூர்ணமான )

உருவினார் பிறவி சேரூன் பொதி  நரம்பு தோல் குரம்பையுள் புக்கு –
நித்தியமான  ஆத்ம வஸ்துவுக்கு ஜன்மம் ஆகிறது
ஸூஷ்ம சரீரத்தோடே கூட ஸ்தூல சரீரத்தில் பிரவேசிக்கை-
தேக சம்ஸ்லேஷ ரூபமான ஜன்மத்தோடே
மாம்சத்தை பொதிந்து கொண்டிருக்கிற
நரம்பு தோலாகிற சரீரத்தை பிரவேசித்து   –

அருவி நோய் செய்து நின்ற ஐவர் தாம் வாழவதற்கு அஞ்சினாயேல்-
எனக்கடைத்த  விஷயத்தைக் காட்டு -என்று
கிலேசிப்பிக்கிற
ஸ்ரோத்ராதிகள் உடைய குறும்புக்கு அஞ்சினாய் ஆகில் –
(ஸப்தாதி -சொல்வதால் ஸ்ரோத்ராதி இங்கு )

திருவினார் வேத நான்கு ஐந்து தீ வேள்வியோடு அங்கமாறும் மருவினார்-
ப்ராஹ்மண  லஷணங்களால் குறைவற்று இருக்கிற
நாலு வகைப் பட்ட வேதம்
பஞ்சாக்னிகள்
பஞ்ச மகா யஞ்ஞங்கள்
அங்கங்கள் ஆறு
இவற்றை யாத்ரையாக உடையராய் இருப்பார்  வர்த்திக்கிற   -திரு வல்ல வாழை –
வல்ல வாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே –

————————————————-

(இந்திரியங்களுக்கு அஞ்சி திவ்ய தேசம் வர உபதேசித்தீர்
தேகத்தில் ஸ்திரத்தவ புத்தியும் –
போக்யதா புத்தியும் –
அஸ்திரத்தை ஸ்திரமாகவும் அபோக்யதையே போக்யமாக காட்டுவதால் தானே மாயா –
பஹு ஜனங்களும் வ்யவஹாரிக்க
எனக்கு அது போய் திவ்ய தேசம் மறுவுவது எப்படி என்ன
அதுக்கு உத்தரம் இதில் )

நோயெலாம் பெய்ததோர் ஆக்கையை மெய்யெனக் கொண்டு வாளா
பேயர் தாம் பேசுமப் பேச்சை நீ பிழை எனக் கருதினாயேல்
தீயுலா வெங்கதிர்த் திங்களாய் மங்குல் வானாகி நின்ற
மாயனார் வல்ல வாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே –9-7-7-

நோயெலாம் பெய்ததோர் ஆக்கையை மெய்யெனக் கொண்டு வாளா பேயர் தாம் பேசுமப் பேச்சை நீ பிழை எனக் கருதினாயேல் –
நோய் எல்லா வற்றையும் இட்டுப் பண்ணின இந்த அஸ்த்ர சரீரத்தை மெய்யெனக் கொண்டு
ஈஸ்வரன் அடியாக வந்த இச்சையாலே  ஆதல்
அன்றிக்கே
ஈஸ்வரேச்சையாலே யாதல் வரக் கடவதான
(லோகான் சஞ்சரன் ஏகதா -இத்யாதி முக்த ஜீவன் எடுத்துக் கொள்ளலாமே
அவனது இச்சையாகவும்
பஞ்ச உபநிஷத் மாயம் -ஸாரூப்யம் அங்கு )
அப்ராக்ருத  சரீரத்தோபதியாக நினைத்து
வ்யர்த்தமே அந்யதா ஜ்ஞான யுக்தராய் இருக்கிறவர்
சொல்லிக் கொடு திரிகிற
வார்த்தையை நீ அசத்தியம் என்று புத்தி பண்ணினாய் யாகில்   –

தீயுலா வெங்கதிர்த் திங்களாய் மங்குல் வானாகி நின்ற மாயனார் –
நீர்க் களிப்பை அறுக்கைக்கு ஈடாக உஷ்ண கிரணனான ஆதித்யனாய்
அவனால் வந்த தாபத்தை ஆற்றுகைக்கு ஈடான தண்ணளியை உடைத்தான சந்த்ரனாய் –
மேக சஞ்சாரத்தை யுடைத்தான ஆகாசமாய் நிற்கிற
ஆச்சர்ய பூதரானவர் –

வல்ல வாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே –
கண்ணாலே கண்டு அனுபவிக்கலாம் படி
வந்து நிற்கிற திரு வல்ல வாழை –

———————————————————

மஞ்சு சேர் வானெரி நீர் நிலம் காலிவை மயங்கி நின்ற
அஞ்சு சேராக்கையை அரணம் அன்று என்று உய்யக் கருதினாயேல்
சந்து சேர் மென் முலைப் பொன் மலர்ப் பாவையும் தாமும் நாளும்
வந்து சேர் வல்ல வாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே–9-7-8-

மஞ்சு சேர் வானெரி நீர் நிலம் காலிவை மயங்கி நின்ற –
மேகங்கள் சஞ்சரியா நின்றுள்ள ஆகாசம்
தேஜோ பதார்த்தம்
ஜல தத்வம்
பூமி
காற்று
இவையாய்க் கொண்டு
பஞ்சீ க்ருதமாய் நின்ற –

அஞ்சு சேராக்கையை அரணம் அன்று என்று உய்யக் கருதினாயேல் –
உபசயாத்மகமான சரீரத்தை இது
(பரிணாமாய் இருக்குமே -பலவும் சேர்ந்தால் அநித்யமாகவே இருக்குமே )
நமக்கு ரஷகம் அன்று என்று புத்தி பண்ணி –
பலவாய்க் கூடி ஒன்றானது தன்னடையே பிரிந்து போம் என்று பார்த்து
உஜ்ஜீவிக்கப் பார்த்தாய் ஆகில் –

சந்து சேர் மென் முலைப் பொன் மலர்ப் பாவையும் தாமும்
போக்யதைக வேஷையாய்-
சந்தனத்தாலே அலங்க்ருதமாய்-
மிருது ஸ்வபாவமான திரு முலைத் தடங்களை உடையளாய்
பொற்றாமரையை இருப்பிடமாக    உடையாளான
பெரிய பிராட்டியாரும்
அவளுக்குத் தகுதியான தாமும்
துல்ய சீல வயோ வ்ருத்தாம் ரகவோஹர்த்தி வைதேஹீம் -என்னுமா போலே –

நாளும் வந்து சேர் -வல்ல வாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே –
அவன் வரக் கடவ வழி எல்லாம் வந்து நின்றான் –
வந்ததே -என்று
ஒரு வார்த்தை சொல்லும் இத்தனை நீ செய்ய வேண்டுவது –

(அவன் வந்து சேர்ந்த ஸ்ரமம் தீருமே நீ சொன்னாய் ஆகில் )

——————————————–

(சரீரம் அஸ்திரம் -திவ்ய தேசம் வரச் சொன்னீர்
இப்படிகளைக் கடந்து வந்தாலும்
சமயங்கள் பல பல -கண்ட இடம் எங்கும் பாஹ்யர்
லோகாயதர் ஆருகதர் புத்தர் -குத்ருஷ்டிகள்
வெள்ளியார்-லோகாயதர்
பிண்டியார் -ஆருகதர்-ஜைனர்
போதியார்-புத்தர் -போதி மரம்
சாரம் அசாரம் அறிந்து வர உபதேசம் )

வெள்ளியார் பிண்டியார் போதியார் என்று இவர் ஓதுகின்ற
கள்ள நூல் தன்னையும் கருமம் அன்று என்று உய்யக் கருதினாயேல்
தெள்ளியார் கை தொழும் தேவனார் மா முநீரமுது தந்த
வள்ளலார் வல்ல வாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே –9-7-9-

வெள்ளியார் பிண்டியார் போதியார் என்று இவர் ஓதுகின்ற –
சுக்ரனைச் சொல்லுதல்
அன்றிக்கே
வெள்ளி  மலையை வாசஸ் ஸ்தானமாக உடைய ருத்ரன் -என்ணுதல்-
அசோகா  வருஷத்தின் கீழே இருக்கக் கடவ   ஆர்ஹதர்
அரசின் கீழே இருக்கக் கடவ பௌத்தர் என்று
சொல்லப் படுகிற இவர்கள் கதறிக் கொண்டு திரிகிற –

கள்ள நூல் தன்னையும்  கருமம் அன்று என்று உய்யக் கருதினாயேல்
யதாஹி சோரஸ் சததாஹி புத்த -என்னக் கடவது இறே-
(திருடர் போல் சர்வம் ஸூந்யம் -அவனது ஸமஸ்த திருட்டு )
இது நமக்கு கர்த்தவ்யம் அன்று என்று
உஜ்ஜீவிக்க விரகு பார்த்தாயாகில்  –

தெள்ளியார் கை தொழும் தேவனார் –
சார அசார விவேக ஜ்ஞராய் இருக்குமவர்கள் ஆஸ்ரயிக்க –
அவர்களுக்கு ஆஸ்ரயணீயராய் இருக்கிறவர் –

சார அசார விவேகஜ்ஞ-
சார அசார விவேகஜ்ஞ்ஞாராய் ஆகிறார்
நல்லதையும் தீயதையும் விவேகித்து
நல்லத்தைக் கைக் கொண்டு
தீயத்தை விட்டு இருக்குமவர்கள்

கரீயாம்ச –
நல்லதை கைக் கொள்ளும்தனை சீர்மை உடையவர்கள்

விமத்சரா –
நன்மை கண்டால் பொறாமை கொண்டாடாதே இருக்குமவர்கள்

பிரமாண தந்த்ரா –
கேவல தர்க்கம் கொண்டு அர்த்த நிர்ணயம் பண்ணுகை அன்றிக்கே
பிரமாணம் கொண்டு அர்த்த நிச்சயம் பண்ணுமவர்கள்

மா முநீரமுது தந்த வள்ளலார் –
தன்னை ஒழிய வேறு ஒன்றை போக்யமாக நினைத்து இருப்பார்க்கும்
அத்தைக் கொடுக்கும் மகோதாரன் –

வல்ல வாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே –
இவ் வமிர்தம் எனக்கு வேண்டா என்னாமை கிடாய் வேண்டுவது –
(விலக்காமையே வேண்டுவது –
பேற்றுக்கு நினைவு அவன் நினைவு -அது கார்யகரமாவது விலக்காமல் இருந்தால் தானே )

———————————————

மறை வலார் குறை விலா ருறையுமூர் வல்ல வாழடிகள் தம்மை
சிறை குலா வண்டறை சோலை சூழ் கோல நீளாலி நாடன்
கறை யுலா வேல் வல்ல கலியன் வாயொலி யிவை கற்று வல்லார்
இறைவராய் இருநிலம்  காவல் பூண்டு இன்ப நன்கெய்துவாரே –9-7-10-

மறை வலார் குறை விலா ருறையுமூர் வல்ல வாழடிகள் தம்மை –
வேத தாத்பர்யம் கைப் பட்டு இருப்பாராய்
மற்றும் அத்ருஷ்ட பரிகரங்களால்   குறைவற்று இருக்கிற
பிராமணர் வர்த்திக்கிற திரு வல்ல வாழில் நிற்கிற
ஸ்வாமிகளைக் கவி பாடிற்று –

சிறை குலா வண்டறை சோலை சூழ் கோல நீளாலி நாடன்  –
சிறையை உடைத்தாய் இருக்கிற வண்டிகளின் உடைய
கொண்டாடத்தை யுடைத்தாய் இருப்பதாய் –
மற்றும் சொல்லுக்கு உறுப்பான நன்மைகள் எல்லா வற்றாலும் குறைவற்று இருக்கிற
சோலைகளாலே சூழப் பட்டு
தர்ச நீயமே இருக்கிற திரு வாலி நாட்டை உடையராய் –

கறை யுலா வேல் வல்ல கலியன் வாயொலி யிவை கற்று வல்லார் –
பிரதிபஷ நிரசன த்வரையால்  கரை கழற்ற அவசரம் இன்றிக்கே
இருக்கிற வேலைக் கையிலே உடைய ஆழ்வார்
ஒலியை உடைத்தாம் படி அருளிச் செய்த இத்தைக் கற்று வல்லார் –

இறைவராய் இரு நிலம்  காவல் பூண்டு இன்ப நன்கெய்துவாரே –
பூமிப் பரப்புக்கு அடைய தாங்களே நிர்வாஹகராய்
தேஹ சமனந்தரம்
நித்ய விபூதியிலே புக்கு
ஏஷ ஹ்யேவா  நந்தயாதி -என்கிறபடியே
நிரதிசய ஆநந்த யுக்தராவார் –

————

ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.

தந்தை கிளை தன் நிலைக்கு ஆகா இன்பம் மெய்யாம் நோய்
நஞ்சு செல்வம் கள்ளச் சமயமவை தஞ்சம் அன்று
என்று கலியன் நெஞ்சை வல்ல வாழ் வல்லையாய்ச் சொல்லு
என்ற பாடல் கற்றிடவே முந்து -87-

நஞ்சு செல்வம் -நஞ்சு போன்ற செல்வம் -நஞ்சாகிய செல்வம் –
மெய்யாம் நோய் –நோய் எல்லாம் பெய்ததோர் ஆக்கை -அன்றோ

———————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: