ஸ்ரீ பெரிய திருமொழி-9-6—-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம்-

(நின்ற நம்பி அனுபவம் – கிடந்த நம்பியை அனுபவிக்க கூட்டிப் போகிறார்
நான்கு ஆழ்வார் பல்லாண்டு
நம்பி ஆறு
ஏழு சிகரங்கள்
பொதிகை மலை பகுதி மகேந்திர கிரி
கரண்ட மாடு பொய்கை
நின்ற இருந்த கிடந்த நம்பி தக்ஷிண திருப்பாற் கடல்
வர்ண கலாபம் நின்ற நம்பி –
திருமங்கை ஆழ்வார் திருவரசு -அஞ்சலி ஹஸ்தம்
நம்மாழ்வாராக நம்பியே -ஆகவே தனியாக இங்கு இல்லை
திருவடி தொழுவது -திரு மங்கை ஆழ்வார்
இருந்த நம்பி பர வாசுதேவன் போல்
மலைக்கு மேல் நம்பி அந்தர்யாமி போல்
ராமானுஜர் வட்டப்பாறை -வடுகா –ஸ்ரீ வைஷ்ணவ நம்பி
உபதேசம் பெற்றார்
கைசிக மஹாத்ம்யம் -கார்த்திகை சுக்ல பக்ஷம் ஏகாதசி -நாடகம் இன்றும் இங்கு நடக்கும் )

அக்கும் புலியின்   -பிரவேசம் –

கால் நடை தாராதே இருக்கிற என்னை
கால் நடை தருவார்
அவன் இருந்த தேசத்திலே கொடு போய் பொகடுங்கோள் -என்றார் –

திரு மா மகளைப் பெற்றும் என்னெஞ்சகம் கோயில் கொண்ட  பேரருளாளர் -என்று
பிராட்டி சந்நிதியும் உண்டாகவும் அனுசந்தித்தார் –
தமக்கு புருஷகாரம் ஆவார் அங்கே உண்டு -என்று அனுசந்தித்தவாறே தமக்கே
கால்நடை தரும் அளவாய் வந்து விழுந்தது –

அத்தாலே –
அங்கு நிற்கிறவன் தான் சால சீலாவானாய்
நாம் தான் வருவது எப்போதோ -என்று -தாம் முற்பாடனாய்-
நம் அவசரம் பார்த்து நிற்பான் ஒருவன் –
அனுகூலராய் இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களையும் போருங்கோள் என்று கூட்டிக் கொண்டு
தாமே போகப் பார்க்கிறார் –

(வந்து காண்மின் -பதங்களைக் கடாக்ஷித்து
கீழே பிறர் தம்மைக் கொண்டு போக இருந்தவர்
இத்திரு மொழியில் –தளர்ச்சி மாறி -உணர்ச்சி வந்து -ஸீலாவான் —
வாமனன் சீலன் ராமானுஜன் -வராஹ ஷேத்ரமும் இது -கௌசிக ஏகாதசி பிரபலம்
உபதேசித்து பிறரையும் கூட்டிப் போகும் படியான தசை பிறந்தது )

——————————————————————-

அக்கும் புலியின தளமுடையார் அவரொருவர்
பக்கம் நிற்க நின்ற பண்பரூர் போலும்
தக்க மரத்தின் தாழ்சினை ஏறி தாய் வாயில்
கொக்கின் பிள்ளை வெள்ளிற  வுண்ணும் குறுங்குடியே —9-6-1-

அக்கும் புலியின தளமும் -எலும்பும் புலித் தோலும் –

அக்கும் புலியின தளமுடையார்-
அவனுக்கு ஆகாதார் இல்லை -என்கிறார் –
(அன்பன் -அனைவருக்கும் அன்றோ இவன் -ஸமோஹம் சர்வ பூதா நாம் )
ஈஸ்வர அபிமாநிகளாய் இருப்பர்க்கும் முகம் கொடுத்துக் கொண்டு இருக்குமவன்
அனுகூலராய்ச் சென்று கிட்டுகிற நமக்கு முகம் தரச் சொல்ல வேணுமோ –

தொடையொத்த துளவமும் கூடையும் பொலிந்து -என்கிறபடியே
அனுகூல சிஹ்னத்தோடே வருகை அன்றிக்கே
அக்கும் -எலும்பும்
புலித் தோலும் உடையராய்
மற்றும் எருக்கம் பூ சாம்பல் என்றால் போலே நிஷித்த த்ரவ்யங்களுக்கு ஒரு அவதி இல்லை இறே –

அவர் ஒருவர் –
அவன் தவிர ஒண்ணாமை யாலே முகம் கொடுத்தாலும்
தமக்கு இதில் ஓர் ஆதாரம் இல்லாமையாலே-முகத்தை மாற வைத்து சொல்லுகிறார் –

பக்கம் நிற்க நின்ற பண்பரூர் போலும்
அவன் ஓர் அருகே நிற்க நின்ற
அவ்வளவே அன்றியே
இன்னமும் தண்ணியராய் வாருங்கோள் என்று
சீலத்தை உடையவன் வர்த்திக்கிற ஊர் போலே –
(வடிவு அழகிய ஸூந்தர பரிபூர்ண நம்பி -குண பூர்த்தி உண்டே )

தக்க மரத்தின் தாழ்சினை ஏறி தாய் வாயில் கொக்கின் பிள்ளை வெள்ளிற  வுண்ணும்-
அங்கு நிற்கிற அவன் படி
அங்குத்தை ஸ்தாவரங்களுக்கும் உண்டாயிற்று –
தக்க மரத்தின்-ஒரு முள் பற்றை அன்றிக்கே பாலார்க்கும் தவழ்ந்து ஏறலாம் படி இருக்கிற
அங்குத்தை வருஷங்களின் படி -என்று பட்டர் அருளிச் செய்ததாக பிரசித்தம் இறே –

அன்றிக்கே
மேலே -கொக்கின் பிள்ளை -என்கையாலே
தன்னோடு நாம சாம்யத்தை உடைத்தான மரத்திலே என்பாரும் உண்டு
கொக்கு என்று மாவுக்கும் பெயர் (நாரைக்கும் மா மரத்துக்கும் கொக்கு )
கொக்கின் பழம் வீழ் கூடலூரே ( 5-2-) -என்று உண்டாகையாலே –
தக்க மரத்தின் உடைய
தாழ்ந்த பணை தன்னிலே ஏறி  –

தாய் வாயில் கொக்கின் பிள்ளை வெள்ளிற  வுண்ணும்-குறுங்குடியே   –
கொக்கின் பிள்ளை தாய் வாயில்
வெள்ளிறாவை உண்ணா நிற்கும் ஆயிற்று  –
வெள்ளிறா-என்று ஒரு மத்ஸ்ய விசேஷம்
அதின் வாய்க்கு அடங்குமது தேடிக் கொடு வந்து கொடுக்கும் யாயிற்று
முறை கெடாமல் புஜித்துப் போருமாயிற்று
தாய் கொடு வந்து கொடுக்க அது ஜீவித்து போருமாயிற்று
(புள்ளு பிள்ளைக்கு இரை தேடும் போல் இங்கும்
ஆச்சார்யர் கை பார்த்து -முறை அறிந்து )

ஆக
ரஷ்ய ரஷக பாவம் மாறாதே போரும் தேசமாயிற்று
சீலாவானாய் இருக்கிறவன் வர்த்திக்கிற தேசம் –
அவ் ஊரில் மரங்களுக்கும் அவன் படி உண்டு என்கிறார் –

———————————————————-

(கீழ் நின்ற நம்பி அனுபவம்
இதில் கிடந்த நம்பியை அனுபவிக்க கூட்டிப் போகிறார்
நான்கு ஆழ்வார் பல்லாண்டு
நம்பி ஆறு
ஏழு சிகரங்கள்
பொதிகை மலை பகுதி மகேந்திர கிரி
கரண்ட மாடு பொய்கை
நின்ற இருந்த கிடந்த நம்பி தக்ஷிண திருப்பாற் கடல்
வர்ண கலாபம் நின்ற நம்பி –
திருமங்கை ஆழ்வார் திருவரசு -அஞ்சலி ஹஸ்தம்
நம்மாழ்வாராக நம்பியே -ஆகவே தனியாக இங்கு இல்லை
திருவடி தொழுவது -திரு மங்கை ஆழ்வார்
இருந்த நம்பி பர வாசுதேவன் போல்
மலைக்கு மேல் நம்பி அந்தர்யாமி போல்
ராமானுஜர் வட்டப்பாறை -வடுகா –ஸ்ரீ வைஷ்ணவ நம்பி
உபதேசம் பெற்றார்
கைசிக மஹாத்ம்யம் -கார்த்திகை சுக்ல பக்ஷம் ஏகாதசி -நாடகம் இன்றும் இங்கு நடக்கும் )

திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிற அழகு எளியர்க்கு கிட்ட ஒண்ணாமை அன்றிக்கே
ப்ரஹ்மாதிகளுக்கும் அகப்பட இக் கரையிலே நின்று கூப்பிடும்படி சர்வாதிகனாய் இருக்கிறவன்
எல்லாருக்கும் ஒக்க அனுபவிக்கலாம் படி வர்த்திக்கிற தேசம் திருக் குறுங்குடி என்கிறார் –

துங்கார ரவத் திரை வந்துலவத் தொடு கடலுள்
பொங்கா ரரவில் துயிலும் புநிதரூர் போலும்
செங்கால அன்னம் திகழ் தண் பணையில் பெடையோடும்
கொங்கார் கமலத் தலரில் சேரும் குறுங்குடியே—-9-6-2-

துங்கார ரவத் திரை வந்துலவத் தொடு கடலுள்   –
ஒக்கத்தை உடைத்தாய்
பெரிய   ஆரவாரத்தை உடைத்தாய்
இருக்கிற திரைகளானவை-சிறு திவளைகளாலே திருவடிகளில் வந்து தொடை குத்த –

பொங்கா ரரவில் துயிலும் புநிதரூர் போலும்  –
ஆழத்தை உடைத்தான கடலிலே பெரிய கிளர்த்தியை உடையனாய்
கண் வளர்ந்து அருளுகைக்கு ஈடான பரப்பை உடையனாய்
மென்மை குளிர்த்தி முதலானவற்றை   உடையனான
திரு வநந்த   வாழ்வான்  மேலே ஜகத் ரஷண சிந்தை பண்ணிக் கண் வளர்ந்து அருளுகிற –
இது தான் ஸ்வயம் பிரயோஜநார்தம் அன்றிக்கே
ஆஸ்ரித அர்த்தம் ஆகையாலே வந்த சுத்தியை உடைத்தவன் வர்த்திக்கிற ஊர் போலே  –

செங்கால அன்னம் திகழ் தண் பணையில் பெடையோடும் கொங்கார் கமலத் தலரில் சேரும் குறுங்குடியே
சிவந்த காலை உடைத்தான அன்னமானது
அழகியதாய் குளிர்ந்த நீர் நிலங்களிலே பரிமளத்தை புறப்பட விடா நின்றுள்ள
தாமரைப் பூவிலே தன் சஹ சரத்தோடே  நித்ய சம்ஸ்லேஷம் பண்ணி வர்த்தியா நின்றுள்ள திருக்குறுங்குடியே –

கீழே  நின்ற நம்பி அனுபவம்
இதில் கிடந்த நம்பி அனுபவம் –

————————————————

(பர உபதேசம் இதிலும் ஆறாம் பாசுரத்தில் நேராக அழைக்கிறார்
கீழே கிடந்த நம்பி அழகை அனுபவித்து
மங்களாசாசனம் பண்ணுவதே வாழ்வு
தொண்டீர்காள் வாருங்கோள் என்கிறார் )

வாழக் கண்டோம் வந்து காண்மின் தொண்டீர்காள்
கேழல் செங்கண் மா முகில் வண்ணர் மருவுமூர்
ஏழைச் செங்காலின் துணை நாரைக்கு இரை தேடிக்
கூழைப் பார்வைக் கார் வயல் மேயும் குறுங்குடியே -9-6-3-

(கேழல்–வராஹ க்ஷேத்ரம் அன்றோ இது )

வாழக் கண்டோம் –
கிலேசித்து நோவு பட வேண்டாதே –
வாழுகைக்கு வழி பார்த்து வைத்தோம் –

வந்து காண்மின் தொண்டீர்காள் –
கைங்கர்ய ருசி உடைய நீங்கள்
கடுக வாருங்கோள் –

கேழல் –
ரஷ்ய வர்க்கத்தின் உடைய ரஷணத்துக்கு ஏகாந்தமாக கைக் கொள்ளும்
வடிவு ஒழிய தனக்கு என்ன ஒரு ரூபம் இல்லையாயிற்று –

செங்கண்-மா முகில் வண்ணர் மருவுமூர் –
மஹாஸ் வராஹஸ் ஸ்புட பத்ம லோசன -என்கிறபடியே
(ஸ்ரீ யபதி கேசவன் புண்டரீகாக்ஷன் -எல்லா அவதாரங்களிலும் உண்டே )
காணவே தாபம் எல்லாம் ஆறும்படியாக குளிர்ந்து
முகில் போலே இருக்கிற வடிவை உடையனாய் இருகிறவன் –
அவதாரங்கள் போலே தீர்த்தம் பிரசாதித்து போகாதே நித்ய வாஸம் பண்ணுகிற தேசம் –

ஏழைச் செங்காலின் துணை நாரைக்கு இரை தேடிக் கூழைப் பார்வைக் கார் வயல் மேயும் குறுங்குடியே –
மிருதுவாய் சிவந்த காலை உடைத்தாய்
சம்ஸ்லேஷத்தாலே போது போக்க வேண்டும்படியாய் இருக்கிற இனிய துணையான சேவலுக்கு ஆமிஷம் தேடி
க்ரித்ரிமமான பார்வையை உடைய நாரை யானது
கருவடைந்த பயிர்களிலே போய் மேயா நிற்குய்ம் யாயிற்று-
பேடையோடே நித்ய சம்ஸ்லேஷத்தாலே இட்டடி பேர்க்க மாட்டாதே
கிடந்த இடத்தே கிடக்க –
பேடையானது கால் நடை தந்து அதுக்கு இரை தேடித் போகா நிற்கும் யாயிற்று –

அதனுடைய பும்ஸ்த்வம் இத்தலையாய் –
இதனுடைய ஸ்த்ரீத்வம் அத்தலையாய் மாறாடும் படியாக யாயிற்று கலந்தது –

இது கால் நடை தந்து போன படி எங்கனே -அது கிடக்க -என்னில்
இதின் காலில் சிவப்பை நினைத்தால் அதுக்குக் கடலோடலாம் இறே
தன்னைக் குறித்து தோற்ற தோல்வி யாகையாலே
சேவலின் மிடுக்கும் இதன் மேலே வந்து ஏறும் இறே –

———————————————–

(வாழக் கண்டோம் என்று சொன்னீரே
பாசங்கள் விட்ட பின் தானே அவனைக் காணப் பெறும்
அவனே பிரதிபந்தகங்களைப் போக்கி தன்னையும் கொடுத்து அருள்வான் )

சிரம் முன் ஐந்தும் ஐந்தும் சிந்தச் சென்று அரக்கன்
உரவும் கரமும் துணித்த வுரவோனூர் போலும்
இரவும் பகலும் ஈன் தேன் முரல மன்று எல்லாம்
குரவின் பூவே தான் மண நாறும் குறுங்குடியே -9-6-4-

தேன்-வண்டு-

சிரம் முன் ஐந்தும் ஐந்தும் சிந்தச் சென்று அரக்கன் உரவும் கரமும் துணித்த வுரவோனூர் போலும்
தலைகள் பத்தும் சிதறும்படியாக
சென்று அடை மதிள் படுத்தி
ராவணன் உடைய நெஞ்சில் திண்மையையும்
தோளில் மிடுக்கையும் போக்கின ஆண் பிள்ளை வர்த்திக்கிற ஊர் போலே –

இரவும்   பகலும் ஈன் தேன் முரல –
திவா ராத்ரா விபாகம் இன்றிக்கே
எப்போதும் ஒக்க வண்டுகள் ஆனவை மது பானத்தை பண்ணி ஆளத்தி வைக்க –

மன்று எல்லாம் குரவின் பூவே தான் மண நாறும் குறுங்குடியே –
வெளி நிலம்  அடைய குரவின் பூ நாற்றமாய் கிடக்கும் ஆயிற்று

சர்வ இந்த்ரியங்களுக்கும் விஷயம் உள்ள தேசம் ஆயிற்று
வண்டின் உடைய த்வநியாலே செவிக்கு விஷயம் உண்டாய்
புஷ்ப கந்த க்ராஹணத்தாலே க்ராண  இந்த்ரியத்துக்கு விஷயம் உண்டாய்
இது தான் அனைத்துக்கும் உப லஷணமாய் இருக்குமாயிற்று –

————————————————-

(பிராட்டிக்காக ராவணனை நிரசித்தான்
நமக்கும் விரோதியைப் போக்குவானோ என்ன
ஆஸ்ரிதர் இட்ட வழக்காக தொழில் செய்தவன் அன்றோ -என்று சங்கதி
கீழே இங்கு சக்ரவர்த்தி திரு மகன்
இதில் கண்ணனாக இங்கு அனுபவம் )

கவ்வைக் களிற்று மன்னர் மாளக் கலி மாந்தேர்
ஐவர்க்காய் அன்று அமரில் உய்த்தானூர் போலும்
மை வைத்திலங்கு  கண்ணார் தங்கள் மொழி யொப்பார்
கொவ்வைக் கனிவாய்க் கிள்ளை பேசும் குறுங்குடியே–9-6-5-

கவ்வைக் களிற்று மன்னர் மாளக் கலி மாந்தேர்
கவ்வையை உடைத்தாய்
பெரிய ஆரவாரத்தையும் உடைத்தாய்
திரள் திரளான ஆனை அணிகளை உடைய ராஜாக்கள் ஆனவர்கள் முடியும் படியாக –
பெரு மிடுக்கை உடைத்தாய் –
பரந்து இருந்துள்ள தேரை –

ஐவர்க்காய் அன்று அமரில் உய்த்தானூர் போலும் –
பாண்டவர்களுக்காக யுத்தத்தில் நடத்தினவன்
வர்த்திக்கிற ஊர் போலும் –
முடி சூடுவார் யாரோ என்று இருக்குமாயிற்று
தாழ்வு செய்து திரிகைக்கு –

மை வைத்திலங்கு  கண்ணார் தங்கள் மொழி யொப்பார்
அஞ்சனத்தால் அலங்க்ருதமாய்
உஜ்ஜ்வலமாகா நின்றுள்ள  கண்ணை உடையரான ஸ்திரீகள் உடைய
பேச்சை புத்தி பண்ணி -அப்படியே நமக்கும் வர வேணும் என்று

கொவ்வைக் கனிவாய்க் கிள்ளை பேசும் குறுங்குடியே   –
கோவைப் பழம் போலே சிவந்த அதரத்தை உடைத்தான
கிளிகளானவை
அவர்கள் பேச்சை அப்யசியா நின்றுள்ள திருக் குறுங்குடியே –

————————————

(நாங்கள் அங்கே வந்து செய்ய வேண்டியவை என்ன
கைங்கர்யமே உஜ்ஜீவனம்
தொண்டு செய்வதில் ஆசை ஒன்றே உஜ்ஜீவிக்க உபாயம் )

தீ நீர் வண்ண மா மலர் கொண்டு விரை ஏந்தி
தூ நீர் பரவித் தொழுமின் எழுமின் தொண்டீர்காள்
மா நீர் வண்ணர் மருவி யுறையும் இடம் வானில்
கூநீர் மதியை மாடம் தீண்டும் குறுங்குடியே —9-6-6-

தீ நீர் வண்ண மா மலர் கொண்டு விரை ஏந்தி தூ நீர் பரவித் தொழுமின் எழுமின் தொண்டீர் காள்-
தூப தீபங்களுக்கு அக்னி
அர்க்க்யாதிகளுக்கு ஜலம்
நாநா விதமான புஷ்பம்
இவற்றோடு கூட கந்த த்ரவ்யமான சந்தனம்
இப்படி சாமாராதன உபகரணங்களைத் தரித்துக்  கொண்டு
அதிகாரிகளான நீங்கள்
அடைவு கெட ஏத்தி
அஞ்சலியைப் பண்ணி
உஜ்ஜீவித்துப் போகப் பாருங்கோள்  –
அதிகாரிகளாய் -அநந்ய பிரயோஜனராய் -கைங்கர்ய ருசியை உடைய நீங்கள் –

மா நீர் வண்ணர் மருவி யுறையும் இடம் வானில் கூநீர் மதியை மாடம் தீண்டும் குறுங்குடியே-
கடல் போலே ஸ்ரமஹரமான வடிவை உடையவன்
அவதாரங்கள் போலே தீர்த்தம் பிரசாதியாதே நித்ய வாஸம் பண்ணுகிற தேசம் –
ஸ்வர்க்கத்தில் வளைவை ஸ்வ பாவமாக உடைய சந்தரன் இறாய்க்க
அவன் மேலே விழுந்து தீண்டும் படியான ஒக்கத்தை உடைத்தாய் இருக்குமாயிற்று அங்குத்தை மாடங்கள் –

—————————————–

(தூய்மை உண்டோ
கண்டு கேட்டு இத்யாதி விஷயாந்தர ப்ராவண்யம் விட வேண்டுமே
பாகவத அபசாரம் படாமல்
அகிஞ்சன்யராய் அநந்ய கதி உடையராய் வர வேண்டும்
அடியீர்காள் இதில் தொண்டீர்காள் கீழ்
தாஸ பூதர் -சேஷ பூதர் போல் இவை இரண்டும் )

வல்லிச் சிறு நுண்ணிடை யாரிடை நீர் வைக்கின்ற
அல்லல் சிந்தை தவிர அடைமின் அடியீர்காள்
சொல்லில் திருவே யனையார் கனிவாய் எயிறு ஒப்பான்
கொல்லை முல்லை மெல்லரும்பீனும் குறுங்குடியே —9-6-7-

வல்லிச் சிறு நுண்ணிடை யாரிடை நீர் வைக்கின்ற அல்லல் சிந்தை தவிர அடைமின் அடியீர்காள்-
கொடி போலே நேரியதாய்
நுண்ணிய தான இடையை உடைய ஸ்திரீகள் பக்கல்
நீங்கள் வைக்கிற துக்காவஹமான மநோ ரதத்தை தவிர –

முதலிலே கிடையாமையாய்
அலாபத்தால் வரும் கிலேசம் பொறுக்க ஒண்ணாததாய்-
அது தான் அப்ராப்தமாய்-
மேல் நரகத்துக்கு உறுப்பாய் இருக்க
சேஷித்தது
ஜன்மாதிகளுக்கு ஹேதுவாய் இருக்கிற   விஷயங்களைப் பற்றி இருக்கிற
மநோ ரதத்தைத் தவிர்த்து
அவனுக்கே அடியோம் என்று இருக்கிற நீங்கள் அவன் வர்த்திக்கிற
ஊரைச் சென்று அடையுங்கோள்-

சொல்லில் திருவே யனையார் கனிவாய் எயிறு ஒப்பான்-
இவ்வருகே உள்ளாள் ஒருத்தியை
பிரதான மகிஷி யோடு ஒக்க சொல்ல ஒண்ணாது இறே-
அத்தை பொறுத்து வடிவு அழகைக் கொண்டு சொல்லப் பார்க்கில்
சாஷாத் ஸ்ரீ லஷ்மியோடு ஒக்கச் சொல்லலாம் படி இருப்பார்கள் ஆயிற்று
அவர்கள் உடைய சிவந்த அதரத்தில் உண்டான எயிறு உண்டு
தந்த பங்க்தி -அத்தோடு ஒக்க வேணும் என்று பார்த்து –

கொல்லை முல்லை மெல்லரும்பீனும் குறுங்குடியே  –
ஊரில் கொடியினுடைய தந்த  பங்க்தியை  கண்டவாறே
கொல்லையில் கொடியும் அப்படியாக வேணும் என்று
மெல்லரும்பை உண்டாக்கும் ஆயிற்று –

—————————————-

(விஷய ப்ராவண்யங்களை விட்டு
கைங்கர்யம் செய்ய வேண்டும் என்று சொன்னீர்
எங்களுக்கு அதில் ஈடுபாடு எவ்வாறு வரும்
அவனும் எங்களை ஸ்வீ கருத்து கைங்கர்யம் கொள்வானோ என்னில்
ப்ரீதி வளர்த்து -அனுபவிக்க அமையுமே –
ஆழ்வார் சம்பந்தி -கீழ் மேல் ஏழு பிறப்பும் -தமர்காள் )

நாராரிண்டை நாண் மலர் கொண்டு நந்தமர்காள்
ஆராவன்போடு எம்பெருமானூர் அடைமின்கள்
தாராவாரும் வார் புனல் மேய்ந்து வயல் வாழும்
கூர்வாய் நாரை பேடையோடாடும் குறுங்குடியே –9-6-8-

நாராரிண்டை –
நாரிலே செறியத் தொடை உண்ட மாலை –

நாண் மலர் –
தொடை உண்ணாத செவ்விப் பூ –
அன்றிக்கே
மாலையான செவ்விப் பூ -என்னுதல்

கொண்டு நந்தமர்காள் –
நம்மோடு ஒரு  சம்பந்தம்  உடைய நீங்கள் –

ஆராவன்போடு எம்பெருமானூர் அடைமின்கள் –
பர பக்தி உக்தராய்க் கொண்டு –
வகுத்த ஸ்வாமி யானவன்
இருக்கிற தேசத்தை சென்று அடையுங்கோள்  –

தாராவாரும் வார் புனல் மேய்ந்து வயல் வாழும் கூர்வாய் நாரை பேடையோடாடும் குறுங்குடியே   –
தாராக்கள் நெருங்கி
ஜல சம்ருத்தியை உடைத்தான நிலங்களிலே மேய்ந்து
அந்த வயலிலே வர்த்தியா நின்றுள்ள
கூரிய வாய் அலகை உடைத்தான நாரையானது
தன் பேடையோடே சம்ஸ்லேஷித்து
அந்த ஹர்ஷத்துக்கு போக்கு விட்டு ஆடா நின்றுள்ள திருக் குறுங்குடியே –

——————————————————————–

(உம்முடைய சம்பந்தத்தால் பேறு கிட்டும் என்று சொன்னீர்
ப்ரீதி பூர்வகமாக கைங்கர்யம் பண்ண வேண்டும் என்று சொன்னீர்
ப்ராரப்தம் சஞ்சித கர்மாக்கள் கிடைக்க அது சித்திக்குமோ
போய பிழையும் புகு தருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்
தன்னடையே நசிக்குமே என்று உபதேசிக்கிறார் )

நின்ற வினையும் துயரும் கெட மா மலரேந்திச்
சென்று பணிமின் எழுமின் தொழுமின் தொண்டீர்காள்
என்றும் இரவும் பகலும் வரி வண்டு இசை பாடக்
குன்றின் முல்லை மன்றிடை நாறும் குறுங்குடியே —9-6-9-

நின்ற வினையும் –
பிரபல கர்ம பிரதிபந்தமாய்க் கொண்டு
அது சமைந்தால் அனுபவித்திலே இழிகைக்கு அவசரம் பார்த்து நிற்கிற பாபம் —
(சஞ்சித கர்மாக்கள் )

துயரும் –
அங்கன் என்றால் பிரதிபத்தம் அன்றிக்கே
அப்போது அனுபவிக்கிற பாபம்
(ப்ராரப்த கர்மாக்கள் )

கெட மா மலரேந்திச் –
இவை நசிக்கும் படியாகச் செவ்விப் பூக்களைத் தரித்துக் கொண்டு சென்று –

சென்று பணிமின் எழுமின் தொழுமின் தொண்டீர்காள்  –
தீர்க்க பிரமாணத்தை பண்ணுங்கோள் –
வழு விலா வடிமை செய்ய வேண்டும் -என்றும் இருக்கும் நீங்கள் –

என்றும் இரவும் பகலும் வரி வண்டு இசை பாடக் –
இரவு பகல் என்று வாசி அன்றிக்கே
என்றும் ஒக்க மது பானத்தை பண்ணி வந்த பௌஷ்கல்யம்
வடிவிலே தோற்ற இருக்கிற வண்டானது
உள்ளு புக்க த்ரவ்யம் இருந்த இடத்திலே இருக்க ஒட்டாமையாலே இசை பாட –

குன்றின் முல்லை மன்றிடை நாறும் குறுங்குடியே —
அது தனக்கு என்னத் தேடித் போக வேண்டாதே
இருந்த இடத்தே வந்து கந்தியா நிற்கும் ஆயிற்று  –
(இங்கு உள்ளாருக்கு பரகத ஸ்வீ காரமே நிஷ்டை )

——————————————-

சிலையால் இலங்கை செற்றான் மற்றோர் சினவேழம்
கொலையார் கொம்பு கொண்டான் மேய குறுங்குடி மேல்
கலையார் பனுவல் வல்லான் கலியன் ஒலி மாலை
நிலையார் பாடல் பாடப் பாவம் நில்லாவே —9-6-10-

சிலையால் இலங்கை செற்றான்
தேவதைகள் உடைய வர பலத்தாலே அழியாத ஊரை
அம்பாலே அழியச் செய்தவன் –

மற்றோர் சினவேழம் –
அங்கன் ஓர் ஆயுதமும் இன்றிக்கே
வெறும் கை உடனே போய்
மிக்க சினத்தை உடைத்தாய் –

கொலையார் கொம்பு கொண்டான் மேய குறுங்குடி மேல் –
கொன்று கொடு திரிகிற குவலயா பீடத்தின் உடைய கொம்பை
அனாயாசேன முறித்து –
அவ்விரண்டு அவதாரத்திலும் பிற்பட்டாருக்கு இழக்க வேண்டாத படி
நித்ய வாஸம் பண்ணுகிற திருக் குறுங்குடியின் மேலே –

கலையார் பனுவல் வல்லான் கலியன் ஒலி மாலை –
சாஸ்திர உக்தமான லஷணத்தில் ஒன்றும் குறையாத படி
கவி பாட வல்லரான ஆழ்வார்
ஒலியை உடைத்தாக அருளிச் செய்த –

நிலையார் பாடல் பாடப் பாவம் நில்லாவே –
உக்தி ஆபாசங்களால் அழிக்க ஒண்ணாத படியான
திண்மையை உடைய இத்தை
அஹ்ருத்யமாகச் சொல்ல
புத்தி பூர்வகமாகப் பண்ணின பாபங்கள் போம் –

—————-

ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.

அக்காணி அன்பர்க்கு அகற்ற குறுங்குடியுள்
முக்காலம் முன்னிற்கும் நம்பியை தக்க தொண்டர்
தம்முடன் சென்று தொழ எண்ணும் கலிகன்றி
நம் நலம் நல்கும் தந்தை –86-

நலம் -பக்திக்கும் நல்ல வாழ்வுக்கும்
அக்கு ஆணி -எலும்பாலாகிய சரீரம் -என்பு தூண் நாட்டி
அக்காணி கழித்து –பெரிய திருமொழி -5-2-3-
தீ நீர் வண்ண மா மலர் கொண்டு தூ நீர் பரவித் தொழுமின் எழுமின் தொண்டீர்காள் -என்றும்
நாறார் இண்டை நாண் மலர் கொண்டு ஆரா வன்போடு எம்பெருமானூர் அடைமின்கள் -என்றும்
நின்ற வினையும் துயரும் கெட சென்று பணிமின் எழுமின் தொழுமின் தொண்டீர்காள் -என்றும்
அருளிச் செய்கிறார் அன்றோ இப்பதிகத்தில்
முக்காலம் முன் நிற்கும் -எப்பொழுதும் நமக்கு முன்னே வந்து திவ்ய தேசம் உகந்து
நித்ய வாசம் செய்வதே நமக்கு அருளுவதற்காகவே –

———————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: