ஸ்ரீ பெரிய திருமொழி-9-5—ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம்-

(கடல் கரை ஓரமாக ஆடல் மா குதிரையில் திருப்புல்லாணி -திருக்குறுங்குடி -திரு வல்லவாழ் —
திருமாலிருஞ்சோலை -திருக்கோட்டியூர் -மங்களா சாசனம்
இத்துடன் பதிக மங்களா சாசனம் நிகமனம்
அடுத்து பத்தாம் பத்தில் முதலில் ஒரு நாள் சுற்றம் -18 திவ்ய தேசங்களுக்கு மங்களா சாசனம் )

(அஸக்ருத் பிரபத்தி கரணம் -நம்மாழ்வாருக்கு இவருக்கும் உண்டே -அங்கி -அங்க பாவம் உண்டே –
ஐந்து இடங்களில் நம்மாழ்வார் -நோற்ற நான்கிலும் உலகமுண்ட பெரு வாயாவிலும்
இவர் பத்து இடங்களில் சரணாகதி
அரசர் பின்பு வேறே இடத்துக்கு வா என்றால் அங்கு சென்று பற்ற வேண்டுமே –
தேரழுந்தூர் பதிகம் கீழே சரண்
இப்பொழுது திருக்குறுங்குடி எம்பெருமான் இடம் -நாயகி பாவத்தால்
திரு வல்ல வாழ் -நம்மாழ்வாரும் –5-9–நாயகி பாவம் இங்கு 9-5-
கங்குலும் பகலும் –7-2/ திருவிடவெந்தை -2-7-உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் –
அதே போல் இங்கும் –
வாமன -க்ஷேத்ரம் குறியவன் குடி -இரண்டு பதிகம் திருக்குறுங்குடிக்கு
நாச்சியார் -12-உய்த்திடுமின் போல் இங்கும் )

தவள -பிரவேசம் –

அஹம் அஸ்ய அபராதாநாம் ஆலய -(அஹிர் புத்தி சம்ஹிதை பிரமாணம்
அஹம் அஸ்ய அபராதாநாம் ஆலய அகிஞ்சனன் அநந்ய கதி த்வமேவ உபாய பூதோ மே பவ –
பிரார்த்தனா மதி மாம் -சரணா கதிரித்யுக்தா -சா -தேவேசமின் பிரயுஜ்யதாம்- )
ஆத்மாவுக்கு ஞாந  ஆனந்தாதிகள் நிரூபகமாய் இருக்கை   தவிர்ந்து
அபராதங்களை இட்டு நிரூபிக்கும்படி யாயிற்று துருப்பற்றுக் கிடந்த படி –

ஜ்ஞாதாஹம் பகவத் சேஷதைக ரசோஹம்-என்று இறே
ஆகை இறே ஸ்வேன  ரூபேண அபி நிஷ்பத்யதே -என்று
ஸ்வரூபாபத்தி மோஷமாக சொல்லுகிறது –
இத்தால் இவனுக்கு பிரகிருதி சம்பந்தம் வந்தேறி என்னும் இடம் சொல்லுகிறது
ரத்நாதிகளை சாணையிலே ஏறிட்ட வாறே புகர் பெறா நின்றது
வந்தேறி யாகி இறே அழுக்கு கழிகிறது
அசித் சம்சர்க்கம் அநாதியாய் இருக்கச் செய்தே அந்தவத்தாகாவும் குறை வற்று இருந்தது

அகிஞ்சன –
இப்படி அபராதங்களுக்கு கொள்கலம் ஆகா நின்றேன்  என்கிற அனுதாபம் இன்றிக்கே இருக்கை –

அநந்ய கதி –
இப்படி ஒரு கை முதலும் இல்லாத பின்பு
இவன் தய நீயன் என்று இரங்கி கைக் கொள்ளுகைக்கு தேவரை ஒழிய வேறு ஒருவர் இல்லை –
புகு வாசல் அற்ற படி –

த்வமேவ உபாய பூதோ மே பவ
ஆராய்ந்து பார்த்த இடத்தே-(அகிஞ்சன) நானும் எனக்கு இன்றிக்கே இருந்து
(அநந்ய கதி)பிறரும் எனக்கு இன்றிக்கே இருந்த பின்பு
நீ ஒருவனே உபாயமாக வேணும் –

இதி பிரார்தனா மதி -(சரணா கதி)
இது புருஷார்த்தமாக தலைக் கட்டுகைக்கு இந்த புத்தி விசேஷமே வேண்டுவது
ஆத்மா சத்தையோ பாதி இறே ஸ்வீகாரமும் –

மாம் –
என்னை –
(த்வமேவ உபாய பூதோ மே பவ ) ஏகம் என்றால் போலே இருக்கிறது

சரணா கதிரித்யுக்தா –
இது சரணா கதி என்று சொல்லப் பட்டது
(செயல் அல்ல அறிவு தான் )

சா
அந்த சரணா கதி யானது

தேவேஸ்மின் பிரயுஜ்யதாம்
சரண்யனான சர்வேஸ்வரன் பக்கலிலே இது செய்ய அடுப்பது
ஒரோ வ்யக்திகளிலும் இது தானே ஹனன ஹேதுவாகா நின்றது இறே
நீர்மையாலே ரஷிப்பாரும் உண்டோ-

(சிபி சக்ரவர்த்தி கதை
தேவர்களும் யமனும் கூடி பரிக்ஷை பண்ண
யமன் பறவை உருக்கொண்டு
பக்ஷியை காட்டிக் கொடுக்காமல் -அதன் அளவு மாம்சம் உடலில் இருந்து வெட்டிக் கொடுக்க –
பாரம் வளர வளர -தானும் தட்டில் ஏற -பூ மாரி பொழிந்து
அப்போது நீர்மையால் அவன் ரஷித்தது உண்டு )

கீழே சில பஷிகளை தூது விட்டு –
நெஞ்சை தூது விட்டு –
அவை மீண்டு வருவதற்கு முன்பே பாதக பதார்த்தங்கள் கையிலே நலிவு பட்டு
தாய்மார் தோழிமார் அடைய ஹிதம் சொல்லி மீட்கப் பார்க்க-
உங்கள் உடைய ஹித வசனம் கேட்டு மீளாத படி நெஞ்சு அவன் பின்னே போயிற்று
அது வரும் அளவும் அவன் சொன்ன வார்த்தையை விஸ்வசித்து இருக்கும் அத்தனை
என்று துணிந்த இடத்திலும்
அவன் வரக் கண்டிலள்

இவ்விடம்( திருப்புல்லாணி )ஒருத்தி உடைய ஆற்றாமையை பரிஹரிக்கைக்காக வந்த இடம் ஆகையால்
அங்கு ஆறி இருக்கவுமாம் –
இது (திருக்குறுங்குடி ) அங்கன் அன்றிக்கே
நம்முடைய துக்க நிவ்ருதிக்காக வந்து இருக்கிற தேசம் இறே
ஆன பின்பு திருக் குறுங்குடியிலே என்னைக் கொடு போய் பொகடுங்கோள்-
கால் நடை தருவார் -என்கிறாள் –

————————————————————————-

ஒரு விஷயத்தை ஆசைப் பட்டு பெறாதே இருக்கிற நமக்கு நாட்டுப் பகையாக விட்டதே-
(தவள இளம்பிறை துள்ளும் முந்நீர் தண் மலர்த் தென்றலோடு அன்றில் ஒன்றி-நான்கும் கூடி பாதிக்கின்றன )

தவள இளம்பிறை துள்ளும் முந்நீர் தண் மலர்த் தென்றலோடு அன்றில் ஒன்றித்
துவள வென் நெஞ்சகம் சோர வீரும் சூழ் பனி நாள் துயிலாது இருப்பன்
இவளுமோர் பெண் கொடி என்று இரங்கார் என் நலம் ஐந்தும் முன் கொண்டு போன
குவளை மலர் நிற வண்ணர் மன்னு குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின் —9-5-1-

(நலம்-பக்தி -ஞான விசேஷம் -மதி ஞானம் -ஐந்து இந்திரியங்களை அபஹரித்துக் கொண்டு
ருசி ஜனக விபவ லாவண்யம் இங்கு தானே பூர்ணம் )

தவள இளம்பிறை –
அற நிர்மலமாய்
தன் பருவம் நிரம்பாதே
எல்லாருக்கும் ஒக்க வைத்த கண் வாங்காதே
கண்டு கொண்டே இருக்க வேண்டும்படியான சந்தரன்-

துள்ளும் முந்நீர் –
அக்நி போலே -ஏஷைவ ஆசம்ச தே லங்காம் -என்னுமா போலே
நான் நான் என்று முற்பட்டு கொண்டு வருகிற சிறு திவலையை யுடைத்தான கடல்  
(வானர முதலிகள் நான் நான் என்று இலங்கையை அழிக்க முற்பட்டது போல் )

தண் மலர்த் தென்றலோடு –
ஸ்ரமஹரமான மலரிலே போய்ப் புக்கு –
பத்ம கேசர சம்ஸ்ப்ருஷ்டம் –வாயு மநோ ஹர -என்கிறபடியே
அது தன்னிலும் ஆழவிழியில் வெக்கை தட்டும் என்று பார்த்து
தாதையும் சுண்ணத்தையும் ஏறிட்டுக் கொண்டு
பரிமளத்தை கொடு வந்து தோற்றின தென்றலோடு கூட –

அன்றில்-
அவை போலே ஒரு விசேஷணம் இட்டு விசேஷிகக ஒண்ணாதே
ஸ்திரீ வதம் பண்ண வல்ல அன்றில் –

ஒன்றி-
அராஜகமான தேசத்திலே வன்னியர் அடைய தங்களிலே கை செய்து
கீழ் ஓலை  விட்டு நாலு வாசலையும் வந்து பற்றுமா போலே –

(வ்யூஹம் செய்து ரஹஸ்யமாக
கண் காது மூக்கு தோல் நான்கையும் பிடித்து –ரசன இந்திரியம் நாக்கை மட்டும் விட்டு
சந்திரன் கண் -முந்நீர் தோல் -தென்றல் மூக்கு -அன்றில் காது )

இவை இப்படி எல்லாம் கூடித் திரண்டு ஒரு முகம் செய்து செய்கிறது தான் என் என்னில் –
துவள வென் நெஞ்சகம் சோர வீரும் –
முன்பே விரஹத்தாலே தரை பற்றி இருக்கிற என்னுடைய ஹிருதயமானது
துவளும்படியாகவும்
சோரும்படியாகவும்
ஈரா நின்றது –
மிருதுவாய் இருப்பதொரு கொழுந்தை நெருப்பிலே இடுவாரைப் போலே ஈரும் –
எதிர் தலையில் எளிமை கண்ட இது தனக்கு இடமாக நலியா நின்றதாயிற்று –

சூழ் பனி நாள் துயிலாது இருப்பன்-
எனக்குத் தான் ஒருவர் தேட்டமாயோ இருக்கிறது –
ஒழுகு நுண் பனிக்கு ஒடுங்கிய பேடையை யடங்க வஞ்சிறை கோலித் தழுவு நள்ளிருள் -(8-5-8 )-என்கிறபடியே
அணைத்த நாயகன் உடைய கைக்குள்ளே அடங்க வேண்டிய காலத்திலே
அவனைப் பிரிந்து பாதக பதார்த்தங்களின் கையிலே அகப்பட்டு
கண் உறங்காது இருக்கிற என்னை –

இவளுமோர் பெண் கொடி என்று இரங்கார் –
இவள் ஒரு அபலை அன்றோ
இதுக்கு எல்லாம் இவள்  ஆடல் கொடுக்க வல்லளோ -என்று
நம் பக்கலிலே கிருபை பண்ணுகிறிலன்-
அன்றிக்கே
தம்மை பிரிந்து பத்து மாசம் ஜீவித்து இருந்தவளோ பாதியாக நினைத்தி இரா நின்றார் –

என் நலம் ஐந்தும் முன் கொண்டு போன-
என் நலம் ஐந்தும் என்கிற இது ஸ்ரோத்ராதிகளால் வரும் அறிவை -என்னுதல்
அன்றிக்கே
என் நலனும் என் நிறைவும் என் சிந்தையும் என் வளையும் என்னையும் –(திரு நெடும் தாண்டகம் -25-)
என்கிற ஐந்தையும் -என்று அமுதனார் அருளிச் செய்வாராம் –

குவளை மலர் நிற வண்ணனர் மன்னு குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின் –
இவை கொடு போகைக்கு இட்ட மருந்தாயிற்று
வடிவைக் காட்டி கண்டது அடைய பகையாம்படி பண்ணி பொகட்டுப் போன இவ்விடம் போல அன்றிக்கே
இவை தான் அனுகூலமாம்படி அவன் நித்ய வாஸம் பண்ணுகிற தேசத்திலே கொடு பொய் பொகடுங்கள் –

————————————

(நீ நாட்டைப் பகைத்து கொண்டு போகச் சொல்வான் எதனால்
உன்னைப் போல் அபிமதரைப் பிரிந்தார் இல்லையோ
இத்தனை ஆற்றாமை கூடாது
நங்கள் கொண்டு போனால் ஏசுவார்களே என்று ஆறி இருக்கலாகாது என்ன
அறியாதார் ஏசினால் அத்தையே பெரும் புகழாகக் கொள்வோம் என்கிறாள்
கோதை நறு மலர் மங்கை மார்பன் குறுங்குடிக்கே-வாமன க்ஷேத்ரம் -நாச்சியார் பிரியாது இருப்பாள்
பிராட்டி முன்னாக சரணாகதி இதில் )

தாதவிழ் மல்லிகை புல்லி வந்த தண் மதியின் இளவாடை இன்னே
ஊதை திரி தந்து உழறி உண்ண   ஓர் இரவும் உறங்கேன் உறங்கும்
பேதையர் பேதமையால் இருந்து பேசிலும் பேசுக பெய் வளையார்
கோதை நறு மலர் மங்கை மார்பன் குறுங்குடிக்கே யென்னை யுய்த்திடுமின்–9-5-2-

தாதவிழ் மல்லிகை புல்லி வந்த தண் மதியின் இளவாடை இன்னே –
மல்லிகை யானது தாது அவிழ்கிற அளவிலே போய் அணைந்தது –
அது உஷ்ணிக்குமே-
அந்த வெக்கையை சந்தரனோடே கலசி ஆறி அனுகூலமாய்க் கொண்டு
மந்தமாய் சஞ்சரிக்கிற வாடை யாகிற –

ஊதை திரி தந்து உழறி உண்ண   ஓர் இரவும் உறங்கேன் உறங்கும் –
ஊதை-என்று குளிர்  காற்றுக்கு பெயர் –
ஊதை கூதையும் குளிர் பனிக் காற்று -என்னக் கடவது இறே

வாடை நலிகிற படி எங்கனே என்னில்
இன்னே -என்னும் இத்தனை
வாடை நலிகிற படியைச் சொல்லில் வாய் வேம் –

திரி தந்து உழறி உண்ண  –
ஆளைக் கண்ட மத்த கஜம் போலே
கால் வாங்கின போதே அங்கே இங்கே சஞ்சரித்து துகைத்து முடிக்க –

ஓர் இரவும் உறங்கேன்-
ஒரு போது உறக்கத்தோடு செலுத்தி
மற்றொரு போது கண் உறங்காதே நோவு படுகை அன்றிக்கே
காலம் எல்லாம் உறக்கம் இன்றிக்கே நோவு படுகிறேன் –

உறங்கும் பேதையர் பேதமையால் இருந்து பேசிலும் பேசுக –
அபிமதரைப் பிரிந்தால் வரும் கிலேசம் அறியாத அறிவு கேடர் ஆனவர்கள்
காற்றுக்கும் இறாயாதே-
அது வரும் வெளி நிலம் தேடி படுக்கை படுப்பார்கள் ஆயிற்று –
அவர்கள் தாம் தாம் உடைய அறிவு கேட்டால்
இவள் வாடைக்கு இடையா நின்றாள்  -என்றும்
கண் உறங்குகிறலள்-என்றும்
அவன் தான் வரும் அளவும் ஆறி இருக்கிறலள் -என்கிற
இது தன்னை குண ஹானியாக நினைத்து பழி சொல்லிலும் சொல்லுவார்கள் –

பெய் வளையார் –
கையில் வளை தங்குவார் (தொங்குவார் ) சொல்லும் வார்த்தை கொண்டு
நமக்கு கார்யம் என் –

கோதை நறு மலர் மங்கை மார்பன் குறுங்குடிக்கே யென்னை யுய்த்திடுமின்   –
நம்முடைய ப்ராவண்யத்தை குண ஹானியாக
உப பாதிக்கை அன்றிக்கே –
ந கச்சின் ந அபராத்யதி -என்று பொறுப்பித்து அவன் திருவடிகளோடு  சேர்க்குமவள்
இருந்த இடத்தே கொடு போய் பொகடுங்கள்  –

——————————————————-

(பேசிலும் பேசட்டும் என்று இத்தனை பதற வேண்டுமோ
இரவு நீண்டு போகாதே
பொழுது விடிந்தால் விரஹ தாபம் குறையுமே
அது அப்படி அல்ல -கல்பகாலம் போல் நீண்டு கொண்டே போகும்
விடியாது -விடிந்தாலும்
காலைப்பொழுதும் அப்படியே துன்புறுத்தும் என்கிறாள் இதில் )

காலையும் மாலை யொத்துண்டு கங்குல் நாழிகை யூழியின் நீண்டுலாவும்
போல்வதோர் தன்மை புகுந்து நிற்கும் பொங்கழலே   யொக்கும் வாடை சொல்லில்
மாலவன் மா மணி வண்ணன் மாயம் மற்றுளவை வந்திடா முன்
கோல மயில் பயிலும் புறவில் குறுங்குடிக்கே யென்னை உய்த்திடுமின் —9-5-3-

கழலே   யொக்கும்-பாடவாக்நி-கடலுக்குள் உள்ளது போல் இருக்குமே –

காலையும் மாலை யொத்துண்டு-
காலையிலும் மாலையில் போலே இருக்கை -பாதித்து முடியா நின்றது –
காலையும் மாலை போலே பாதகமாகா நின்றது –
காலை யரும்பி –மாலை யலரும் (தமிழர்கள் சொல்வர் )-என்கிறபடியேயேயாய்
இருக்கிற படியே இருக்கிறது இல்லை –
ஏக ரூபமாய் நலியா நின்றது –

கங்குல் நாழிகை யூழியின் நீண்டுலாவும் போல்வதோர் தன்மை புகுந்து நிற்கும் –
ராத்ரியில் நாழிகை யானது கல்பத்தில் காட்டிலும்
இருக்கிற ஸ்வ பாவமானது கிட்டி நில்லா நின்றது –

பொங்கழலே   யொக்கும் வாடை சொல்லில் –
வாடை பாதகமாம் படி தானே பேச்சுக்கு நிலம் இல்லை
சொல்லில் படபாமு காக்நி போலே இரா நின்றது –

மாலவன் –
அவன் ஆகிறான் -சாலப் பெரியான் ஒருவன் இறே
அவனுக்கு இவற்றுக்கு இடைய வேண்டாவே –

மா மணி வண்ணன் –
பெரியவன் என்று கை வாங்க ஒண்ணாதே –
மேல் விழுந்து பெற வேண்டும்படியான வடிவைப் படைத்தவன் –

மாயம் மற்றுள-
அவன் விபூதியில் ஆச்சர்யமான
பாதக பதார்த்தங்களுக்கு எண்ணில்லை –
அன்றில் -தென்றல் -கடலோசை -என்றால் போலே
சொல்லுகிறவற்றுக்கு ஒரு எண்ணில்லை இறே –

அவை வந்திடா முன்
அவை நலிய அபக்ரமித்தது அத்தனை –
அவை வந்துநம்மை முடித்து தலைக் கட்டுவதுக்கு முன்னே –

கோல மயில் பயிலும் புறவில் குறுங்குடிக்கே யென்னை உய்த்திடுமின் –
நம் இனம் உள்ள ஊரிலே கொடு போய் பொகடப் பாருங்கோள் –
தர்ச நீயமான மயில் நெருங்கி வர்த்திக்கிற பர்யந்தத்தை உடைத்தான
திருக்குறுங்குடி யிலே கொடு போய் பொகடப் பாருங்கோள்  –

——————————————————-

(திவா ராத்திரி விபாகம் இல்லாமல்
காலமும் நெடிதாகத் தோற்றி
பாதக பதார்த்தங்களும் நலியாது இருக்க
நெஞ்சு தானே மூலம்
நெஞ்சில் பொறுத்துக் கொள்ள வேணும் என்ன
அது செய்யப் போவது இல்லை -அடங்காதே என்கிறாள் )

கரு மணி பூண்டு  வெண்ணாகணைந்து  காரி இமில்  ஏறு அணர் தாழ்ந்து உலாவும்
ஒரு மணி யோசை என்னுள்ளம் தள்ள ஓர் இரவும் உறங்காது இருப்பேன்
பெரு மணி  வானவருச்சி வைத்த பேரருளாளன் பெருமை பேசி
குரு மணி நீர் கொழிக்கும் புறவில் குறுங்குடிக்கே யென்னை உய்த்திடுமின்—9-5-4-

கரு மணி பூண்டு  –
கரு மணியினுடைய நிறமும் ஸ்ம்ருதி விஷயமாய் பாதகம் ஆகா நின்றது –

வெண்ணாகணைந்து  –
படுபாடு அல்லது அறியாத நாகுகளோடே அணைந்து
தான் தன்னுடைய ஸ்த்ரீத்வாதி களாலே இறாய்க்க
அவன் மேல் விழும்படிக்கு ஸ்மாரமாகா நின்றது –

காரி இமில்  ஏறு அணர் தாழ்ந்து உலாவும் –
கறுத்த ககுத்தை உடைத்தாய் இருக்கிற
ஒரு மணி யாய்த்து –
மற்று உள்ள பாதக பதார்த்தங்களில் இதுக்கு ஒப்பது ஓன்று இல்லை யாயிற்று –

ஒரு மணி யோசை என்னுள்ளம் தள்ள ஓர் இரவும் உறங்காது இருப்பேன் –
அந்த மணி யோசை யாகிறது -அல்லாதவை போல் அன்றிக்கே
செவி வழியே புகுந்து பாதகம் ஆகா நின்றது இறே –
இது ஒழிந்தது அடைய உறங்கிற்று இறே
தொட்டார் மேலே தோஷமாம் படி இருக்கிற ஹிருதயத்தை தள்ள
ராத்ரியாக நித்தரை இன்றிக்கே நோவு படா நின்றேன் –

பெரு மணி  வானவருச்சிவைத்த –
அயர்வறும் அமரர்கள் தங்களுக்கு முடி மேலே மணியாக வைத்த
சிரோ பூஷணமாக வைக்கப் பட்ட –

பேரருளாளன் பெருமை பேசி –
அவனுடைய பெருமை பேசி
ஒரு மணி யோசை என் உள்ளம் தள்ள ஓர் இரவும் உறங்காது இருப்பேன் -என்னுதல்-
பேச -என்றதாகில்
ஒருவனுடைய நீர்மை இருக்கும் படியே
ஒருவனைப் பிரிந்து ஒருத்தி படும் பாடே -என்று இரண்டு இடத்திலும் உள்ளாறும்
நின்று சொல்லும்படியாக -என்றாகிறது –

குரு மணி நீர் கொழிக்கும் புறவில் குறுங்குடிக்கே யென்னை உய்த்திடுமின்  –
பெரு விலையனான ரத்னங்களை நீரானது  கொழித்து  எறடா நிற்பதான
பர்யந்தத்தோடே கூடின திருக் குறுங்குடியிலே கொடு போய் பொகடுங்கோள் –

———————————————–

(மகேந்திர கிரி -ஸ்ரீ வைஷ்ணவ நம்பி
மணி ஓசை உள்ளம் பாதிக்குமோ
என்னோடே உசாவிக் கொண்டு துன்பம் மறக்கலாமே என்ன
அது ஓன்று தானோ
ஆயன் தீம் குழலோசை அன்றோ பாதிக்கின்றது
அனைத்தும் சேர்ந்து வந்தாலும் தாங்கலாம் )

முன்பு  சொன்னவை போல் அன்றிக்கே
தனித் தனியே இவை முடித்து விடுமா போலே இரா நின்றது –
தண் மலர்த் தென்றலோடு அன்றில் ஒன்றி -என்னச் செய்தே பின்னையும் ஜீவித்து இருந்தோம் இறே –
இவை நம்மை வைப்பன வன்றிக்கே இரா நின்றன –

திண் இமில் ஏற்றின் மணியும் ஆயன் தீங்குழ லோசையும் தென்றலோடு
கொண்டதோர் மாலையும் அந்தி ஈன்ற கோல விளம்பிறையோடு கூடி
பண்டை வல்லவிவை நமக்குப் பாவியேன் ஆவியை வாட்டம் செய்யும்
கொண்டல் மணி நிற வண்ணர் மன்னு குறுங்குடிக்கே யென்னை யுய்த்திடுமின் —9-5-5-

திண் இமில் ஏற்றின் மணியும்
திண்ணியதாய் இருந்துள்ள இமில் உண்டு ககுத்து –
அத்தை உடைத்தான வ்ருஷபத்தின் உடைய கழுத்தில் மணியும்
அவிழ்த்து விடுவார் இல்லாமையாலே மணி தானும் திண்ணியதாகலாம்  இறே –

ஆயன் தீங்குழ லோசையும் –
பிராமணன் உடைய குழல் ஓசைக்கு கேளாள் காணும் இவள் –
இடையன் உடைய இனிதான குழல் ஓசையும் –
அதினுடைய ரஸ்யத்தை எவ்வளவு உண்டு -அவ்வளவும் பாதகமாம் இறே  –

தென்றலோடு கொண்டதோர் மாலையும் –
தென்றலோடு கூட பெரிய கோட்பாட்டை உடைத்தாய்
வருகிற மாலையும் –

அந்தி ஈன்ற கோல விளம்பிறையோடு கூடி-
வழிப் பகையான சந்தரன் ஆயிற்று –
சத்ருவின் வயிற்றிலே பிறந்த சத்ருவாய்-
சந்த்யை தானே  பாதகமாய் இருக்கச் செய்தே
அதிலே சந்த்யை தான் என்னுடைய சத்ரு நிரசனத்துக்கு ஒரு பிள்ளை வேணும் என்று பெற்றால் போலே இருக்கை –
ராவணன் இந்திர ஜித்தை பெற்றால் போலே –

பண்டைய வல்லவிவை நமக்கு –
அவனோடு சம்ஸ்லேஷிப்பதற்கு முன்பு தானே பாதகம் என்னும்  வ்யுத்புத்தி இல்லை –
சம்ஸ்லேஷத்தில் தானே அனுகூலமாய் இருக்கும் –
முன்புத்தை பாதக பதார்த்தங்களின் அளவாய் இருக்கிறது இல்லை -என்னுதல்  –

பாவியேன்-
கலந்த போதோடு பிரிந்த போதோடு வாசி அற ஆறி இருக்கலாம்  விஷயம் அன்றிக்கே
பிரிந்து ஆற்ற ஒண்ணாத குணாதிக விஷயத்தோடே கலக்கும் படியான மகா பாபத்தைப் பண்ணினேன் –

ஆவியை வாட்டம் செய்யும்-
தொட்டார் மேலே தோஷமாய் இருக்கிற
பிராணனை முடிக்கப் பாரா நின்றது –

கொண்டல் மணி நிற வண்ணர் மன்னு குறுங்குடிக்கே யென்னை யுய்த்திடுமின்-
இவை பாதகமாம் படி அவன் நித்ய வாஸம் பண்ணுகிற தேசத்து
ஏறக் கொடு போய் பொகடுங்கோள்  –
கொண்டல் போலேயும் நீல மணியினுடைய நிறம் போலேயும் இருக்கிற
நிறத்தை உடையனானவன் வர்த்திக்கிற தேசத்தில் கொடு போய் பொகடுங்கோள் –

—————————————————-

பாவியேன் ஆவியை வாட்டம் செய்கின்றன என்று சொன்னாய்
உன்னை அங்கு கொண்டு போகையில் இவளுக்கு ஸ்த்ரீத்வம் இல்லையே என்று ஏசினால்
அவனும் முகம் காட்டாமல் இருந்தால் செய்வது என்
இவர்கள் ஏசினால் என்
அவன் உடன் சேர்ந்த பின்பு இது அன்றோ பெண்மை என்று கொண்டாடுவார்கள்

எல்லியும் நன் பகலும் இருந்தே ஏசிலும் ஏசுக வேந்திழையார்
நல்லரவர் திறம் நாம் அறியோம் நாண் மடம் அச்சம் நமக்கு இங்கு இல்லை
வல்லன சொல்லி மகிழ்வரேலும் மா மணி வண்ணரை நாம் மறவோம்
கொல்லை வளரிள முல்லை புல்கு குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமினே –9-5-6-

எல்லியும் நன் பகலும் இருந்தே –
நல்ல இரவும் நல்ல பகலும் ஆயிற்று –
அவனோட்டை கலவிக்கு உறுப்பான காலத்தோடு
அவனை ஸ்மரிக்கைக்கு உறுப்பான காலத்தோடு வாசி அற
இரண்டு போதும் இருந்து –

ஏசிலும் ஏசுக –
பழி சொல்லிலும் சொல்லுக –
அணைத்துப் போக்கும் காலத்தோடு
நினைத்துப் போக்கும் காலத்தோடு வாசி அற
இப் ப்ராவண்யம் தன்னையே பழி யாக்கிச் சொல்லிலும் சொல்லுக –
அல்லாதார் இழவை அனுசந்தித்த வாறே ஸ்மரிக்கைக்கு உறுப்பானது தானே பேறாகத் தோற்றுமே-
பிரிந்த போது தானே  -கங்குலும் பகலும் கண் துயில் அறியாள் -என்று இழவுக்கு உடலாய் இருக்கும் இறே-

வேந்திழையார்–நல்லர் –
அவர்கள் விலஷணைகள் அன்றோ –
ஆபரணங்களை சுமந்து கொண்டு இருக்க வல்லவர்கள்
என சொல்லாதார் –

அவர் திறம் நாம் அறியோம் –
நம் இடையாட்டம் அவர்கள் அறியும் அன்று இறே –
அவர்கள் இடையாட்டம் நாம் அறிவது –

அறியாது ஒழிகிறதுக்கு ஹேது என என்னில் –
நாண் மடம் அச்சம் நமக்கு இங்கு இல்லை –
நம்முடைமை நம் கையதாகில் அன்றோ நமக்கு ஸ்மரிக்கல்  ஆவது –
அவர்களுக்கு ஸ்த்ரீத் வாதிகள் குறி அழியாது இருக்கையாலே சொல்லலாம் –
நம்முடைய ஸ்த்ரீத் வாதிகள் நம் கையில் இல்லை –

இங்கு இல்லை –
அவை போன அங்கே காணில் காணும் இத்தனை –

வல்லன சொல்லி மகிழ்வரேலும் –
வாயால் போந்ததைச் சொல்லி சிரித்தார்கள் ஆகிலும்
ஸ்த்ரீத் வாதிகளை காற்கடைக் கொண்டாள்-
அவனை மறந்திலள்-என்றால் போலே
சில வற்றைச் சொல்லி சொல்லி சிரித்தார்களே யாகிலும் –

மா மணி வண்ணரை நாம் மறவோம் –
அவர்கள் நம்முடைய ஸ்ம்ருதிக்கு உத்போதகர் ஆனார்களாம்   இத்தனை
மறுப்பு நம் கையில் கிடக்கும் படியோ –
அவன் வடிவு படைத்தது –

கொல்லை வளரிள முல்லை புல்கு குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமினே –
மறவாமை தேட்டமாம் தேசத்தை விட்டு
அவனைக் கண் கண்டு அனுபவிக்கலாம் தேசத்திலே
கொடு போய் பொகடுங்கோள் –
கொடிக்கு தரை கிடக்க வேண்டாதே கொள் கொம்பிலே படரலாம் தேசத்திலே –

—————————————————

(மா மணி வண்ணனை மறவேன் என்றாய்
அவர் அப்படி கலந்தபடி என்ன
பிரிந்த படி எப்படி
பிரிந்ததால் வந்த நலிவைச் சொல்லிக் காண் என்ன சொல்கிறாள் )

செங்கண் நெடிய கரிய மேனித் தேவர் ஒருவர் இங்கே புகுந்து என
அங்கம் மெலிய வளை கழல ஆது கொலோ வென்று சொன்ன பின்னை
ஐங்கணை வில்லி தன்னாண்மை என்னோடு ஆடுமதனை யறிய மாட்டேன்
கொங்கலர் தண் பனை சூழ் புறவில் குறுங்குடிக்கே என்னை யுய்த்திடுமின்–9-5-7-

ஆது கொலோ -சொன்னது -பிரியேன் பிரிந்தால் தரியேன் என்று சொன்ன பின்பு அர்த்தமாக –
கொங்கலர் -தேனை புறப்படா நிற்கும் –

செங்கண் நெடிய –
கண் ஒரு தலையும் வடிவு எல்லாம் ஒரு தலை யானால்
பின்னையும் கண் அழகே
விஞ்சி இருக்கும் யாயிற்று –
அகவாயில் வாத்சல்யம் தோற்றும் –
பார்க்கிற பார்வைக்கு ஒரு அவதி இல்லை –

கரிய மேனித் —
அக் கண்ணில் குளிர்ச்சிக்கு தப்பினாலும்
தப்ப ஒண்ணாதாயிற்று வடிவில் குளிர்ச்சிக்கு –

தேவர் –
கண் அழகும் வடிவு அழகும் பேசித் தலைக் கட்டினாலும்
மேன்மை பேச்சுக்கு நிலம் அல்ல வாயிற்று –

ஒருவர் –
தேவர் என்றால் ஜாதியில்  போகாது
அவ் வ்யக்தி ஒன்றிலே கிடக்கும் இத்தனை –
(சாமாப்யதிக தெய்வம் -தேவர்க்கும் தேவாவோ -ஒப்பார் மிக்கார் இலையாய மா மாயன் )

இங்கே புகுந்து –
வடிவு அழகும் மேன்மையும் கரை புரண்டால்
தாம் இருந்த இடத்தே நாம் செல்ல இருக்கை இறே அடுப்பது –
அவை தம்மதானவோபாதி தாழ்வு செய்கையும் தம்மதாய் இருக்கும் யாயிற்று  –
என்றும் அவ் வஸ்துவைப் பெறுவார் பெறுவது
தாம் தாம் ஓரடி இட்டு அன்றிக்கே அத்தலையாலே வரவு ஆயிற்று –
(வாத்சல்யம் -கண்ணால் -கிருபாவான் -ஸுவ்சீல்ய சீமா பூமி அன்றோ இங்குத்தை வாசம் )

என-
வந்த பின்பு கலவி உண்டாக நினைத்து இருக்கிறலள்  –
பிரிவுக்கு உறுப்பாக சொன்ன வார்த்தையே யாயிற்று இவள் நெஞ்சிலே கிடப்பது –

அங்கம் மெலிய வளை கழல –
ஓன்று சொன்னார் ஆயிற்று –
பிரிவை பிரசங்கித்தாராக இவை தன்னடையே போய்க் கொடு நின்றது –

ஆது கொலோ வென்று சொன்ன பின்னை –
பிரியேன் என்கிற பாசுரத்தாலே பிரிவை உணர்த்தினான்  ஆயிற்று –
வ்யதிரேகத்தால் அறிந்து கொள்கிறாள் என்று –
இவர் பிரியேன் என்கிற பாசுரத்தாலே யாகிலும் சொன்னார்
அதுவும் வாய் கொண்டு சொல்ல மாட்டாமை –
ஆது கொலோ -என்கிறாள் ஆயிற்று -இவள் –

ஐங்கணை வில்லி தன்னாண்மை என்னோடு ஆடுமதனை யறிய மாட்டேன் –
அவன் பிரிவை உணர்த்தினான் –
காமன் சர வர்ஷமாக வர்ஷிக்கத் தொடங்கினான்
வீர பத்னி என்று பாராதே நலியா நின்றான்
அவன் கை விட்டமை அறிந்தான் ஆகுமே  –

(ஐங்கணை வில்லி-தாமரை மலர்-அசோக மலர்-குவளை மலர்-மாம் பூ-முல்லை மலர்)

கொங்கலர் தண் பனை சூழ் புறவில் குறுங்குடிக்கே என்னை யுய்த்திடுமின்   –
அவன் கையிலே அம்பு தானே தாரகமான தேசத்திலே
கொடு போய் பொகடப் பாருங்கோள் –
அவனோடு கூடின வாறே பூக்கொய்கையும் ஜல க்ரீடை பண்ணுவதுமாய் -தாரகமாம் இறே-

—————————————————–

(கடல் ஓசை மட்டும் இல்லை
பிரியேன் என்று சொல்லி பிரிந்து வாரா விட்டால்
அநுராகம் வரும் வரை காத்து இருக்க வேண்டாமோ
அங்கு போனாலும் பிரயோஜனம் இல்லையே என்று சொல்வாருக்கு பதில் இதில் )

பந்துக்களை  நோக்கிச்  சொல்லுகிற  வார்த்தை இறே –
க்ரம ப்ராப்தி பார்த்து ஆறி இருக்கலாம் படி அன்று -இங்கு ஓடுகிற தசை
இனி அங்கே போய்ப் புக்காலும் அவன் தன்னாலே பேறாம்  படி எனக்கு பிரயோஜனம் உள்ளது –
அதில் அவன் கருத்து அறிந்த படியையும் அறிந்து கார்யம் செய்யப் பாருங்கோள் –
உனக்கு க்ரம ப்ராப்தி பார்த்து ஆறி இருக்க ஒண்ணாமைக்கு இப்போது வந்தது என -என்ன –
(கேவலம் அன்று கடலின் ஓசை-தனித்து இல்லை -துணையும் உண்டு
இது மட்டும் அல்ல -பலவும் உண்டு -இரண்டு அர்த்தங்கள் )

கேவலம் அன்று கடலின் ஓசை கேண்மின்கள் ஆயன் கை யாம்பல் வந்து என
ஆவி யளவும் அணைந்து நிற்கும் அன்றியும்  ஐந்து கணை தெரிந்து இட்டு
ஏவலம் காட்டி யிவன் ஒருவன் இப்படியே புகுந்து எய்திடா முன்
கோவலர் கூத்தன் குறிப்பறிந்து குறுங்குடிக்கே யென்னை யுய்த்திடுமின்—9-5-8-

கேவலம் அன்று கடலின் ஓசை –
இக்கடல் ஓசைக்கு ஓர் அடி உண்டு –
மகா ராஜர் பெருமாளை அண்டை கொண்டு வந்து அறை கூறின போது போலே இரா நின்றது –
பெருமாள் கையும் வில்லுமாய்க் கொண்டு கடக்க நிற்க அவரைப் பற்றிச் சென்று அறை கூறினார் இறே –

தேன நாதேன மஹதா நிர்ஜகாம –
முன்பு பல காலும் நம் வாசலிலே வந்து அறை கூவக் கண்டறிவோம்
இப்போது அங்கன் அன்றிக்கே
இவன் மிடற்று ஓசையிலே தசை பிறந்த படியாலே இதுக்கு ஓர் அடி உண்டாக வேணும் –
பிரபலனாய் இருப்பான் ஒருவனைப் பற்றி வந்தானாக வேணும்

நிர்ஜகாம
முன்பு போலே புறப்பட்டு தரையிலே கை மோதிப் போகாதே
இவனும் இவன் அடியாக வந்தவனும் இலக்கு போருமாகில்
புறப்பட்டு போரப் பார்ப்போம் என்று புறப்பட்டான்
அடி உண்டு என்று அறிந்தான் ஆகில் பின்னை புறப்படுவான் என் என்னில்

ஹரீஸ்வர –
எதிரிகள் ஜீவித்து இருக்க உஜ்ஜீவித்து இருந்தவன் அல்லாமையாலே

அன்றிக்கே
வெறுமிக் கடல் ஓசை யனளவே அன்று –
இன்னமும் பாத வர்க்கத்துக்கு ஒரு அவதி இல்லை -என்னுதல் –

கேண்மின்கள் -ஆயன் கை யாம்பல் வந்து என ஆவி யளவும் அணைந்து நிற்கும் –
பிரிவு என்று ஓன்று உண்டு என்றும் இவர்கள் நெஞ்சிலே பட்டு
பிரிந்தால் பதார்த்தங்களும் எல்லாம் பாதகமாம் என்று அறிவார்கள் –
என்று இருக்கிறாள்
இடையன் கையில் குழல் ஆனது வந்து என் மர்மத்தளவும் கிட்டி நில்லா நின்றது –

அன்றியும் ஐங்கணை தெரிந்து இட்டு
அதுக்கு மேலே
இவள் குழல் ஓசைக்கு முடிந்தாளாக  ஒண்ணாது
என் கையில் அம்பாலே முடிந்தாளாக வேணும் என்று பார்த்து
ஸ்திரீ வதம் அன்றோ பண்ணக் கடவது அன்று என்று பார்த்து
பிற்காலிக்குமவை அன்றிக்கே
நிர்தயமாக முடிப்பன சில அம்புகளை தெரிந்து —
ராவணனுக்கு தெரிந்து வந்தன சில அம்புகளை போலே யாயிற்று-

ஏவலம் காட்டி –
தான் எய்ய வல்ல மிடுக்கை என்னோடு காட்டி –

யிவன் ஒருவன்-
ஸ்திரீ வதம் பண்ணும் இடத்தில்
இவனை எண்ணினால் பின்னை எண்ணுகைக்கு ஆள் இல்லாதபடி இருக்குவன் ஆயிற்று –

இப்படியே புகுந்து எய்திடா முன் –
இதுக்கு இட்டுச் சொல்லலாவது ஒரு பாசுரம் இல்லை –
புண்ணறைகளைக்   காட்டும் இத்தனை  –

கோவலர் கூத்தன் –
பும்ஸாம் திருஷ்டி சித்த அபஹாரிணாம்-என்கிற படியே
தன்னோடு ஒத்த பருவத்து பிள்ளைகளை
மநோஹாரி சேஷ்டிதங்களாலே
எழுதிக் கொண்டு  இருக்குமவன் ஆயிற்று –
வன்னெஞ்சர் படுகிற பாடு இதுவானால் அபலைகளுக்கு சொல்ல வேண்டாம் இறே –

குறிப்பறிந்து குறுங்குடிக்கே யென்னை யுய்த்திடுமின்
அவன் திரு உள்ளக் குறிப்பறிந்து யென்னை அங்கே கொடு போய் பொகடப் பாருங்கோள்
அவன் வேணும் என்று இருந்தான் ஆகில் அங்கே கொடு போய்ப் பொகடுவது
வேண்டாம் என்று இருந்தான் ஆகில் இங்கே கிடந்தது முடிந்து போக –

——————————————————

(கடலோசை நாயகனை அண்டை கொண்டு நலிந்த தாகச் சொன்னாய்
அப்படி பாதிக்க கிருபை இன்றியே இருப்பானோ என்ன
ஓம் அப்படியே என்று
அதுக்கு ஹேது சொல்கிறாள் )

சோத்தென நின்று தொழ விரங்கான் தொன்னலம் கொண்டு எனக்கு இன்று தாறும்
போர்ப்பதோர் பொற்   படம் தந்து போனான் போயின ஊர் அறியேன்     என் கொங்கை
மூத்திடுகின்றன மற்றவன் தன் மொய்யகலம் அணையாது வாளா
கூத்தன் இமையவர் கோன் விரும்பும் குறுங்குடிக்கே   என்னை யுய்த்திடுமின் –9-5-9-

சோத்தென நின்று தொழ விரங்கான்-
அஞ்சலி பண்ணுமவர்கள் அதுக்கு அனுரூபமாக தாழச் சொல்லுவதொரு
சப்த விசேஷம் ஆயிற்று சோத்தோம் -என்று வாயாலே
அனுகூல பாஷணத்தைப் பண்ணி
மாறாதே நின்று
அஞ்சலி பண்ணினால்
அதுக்கு இரங்ககுகை யாகிற ஸ்வாபம் அவனுக்கு வாசனையோடு போயிற்று –

அது அறிந்த படி என் என்னில்
தொன்னலம் கொண்டு எனக்கு இன்று தாறும் போர்ப்பதோர் பொற் படம் தந்து போனான்-
பிறந்தவன்று தொடங்கி உண்டான என்னுடைய ஸ்த்ரீத் வாதிகளைக் கொண்டு
தன்னை நான் பிரிந்த வன்று தொடங்கி  இன்றளவும் வர
போர்க்கைக்கு ஒரு பொன்னின் பிடாரத்தை தருவாரைப் போலே
வை வர்ண்யத்தைத் தந்து போனான் –

இத்தலையில் உள்ளதடைய சர்வஸ் வாபாஹாரம் பண்ணி
நமக்கு சர்வஸ் வதானம் பண்ணுவாரைப் போலே
வை வர்ண்யத்தைத் தந்து போனான் –

போயின ஊர் அறியேன்   என் கொங்கை மூத்திடுகின்றன மற்றவன் தன் மொய்யகலம் அணையாது வாளா –
கூத்தன் இமையவர் கோன் விரும்பும் குறுங்குடிக்கே  என்னை யுய்த்திடுமின் –
போனாலும் ஆறி இருக்கலாம் இறே போன ஊரைச் சொல்லிப் போனான் ஆகில் –
அவன் சொல்லிப் போகாமை இல்லை –
இவள் குறிக் கொள்ள மாட்டாமை இழந்தாள்-இத்தனை இறே

அறியாய் ஆகில் மேல் இனி செய்ய நினைக்கிறது என் என்ன
இங்கு இருந்த நாள் அவன் வாய் வெருவும்படி அறிந்து இருப்புதோமே-
அத் தேசத்திலே என்னைக் கொடு போய் பொகடப் பாருங்கோள்   –

இங்கனம் ஆராய்ந்து கொண்டு அவனைத் தேடப் போக வேண்டுகிறது என் –
இங்கேயே தரித்து இருந்தாலோ -என்ன
கொங்கை மூத்திடுகின்றன –
இங்கேயே இருக்கலாம் படியாயோ இவைகள் இருக்கின்றன –

கொங்கை மூத்திடுகின்றன -மற்றவன் தன் மொய்யகலம் அணையாது வாளா-
அவனும் வந்து அணையவும் பெற்றாலும் கழிந்த பருவத்தை மீட்க ஒண்ணாதே
காணக் காண செவ்வி அழியா நின்றது ஆயிற்று –

நமே துக்கம் பிரியா தூரே –வயோஸ் யாஹ்யாத் அதி வர்த்ததே -என்னுமா போலே
அவனுடைய ஸ்ப்ருஹநீயமான மார்வோடே அணையப் பெறாதே வ்யர்த்தமே இருந்து
செவ்வி அழியா நின்றது ஆயிற்று –
முன்னிருந்து மூக்கின்று (பெரிய திருமடல் )-என்னக் கடவது இறே  –
கண்ணுக்கு இலக்காய் இருந்து காணக் காண செவ்வி அழியா நின்றது ஆயிற்று –

கூத்தன் இமையவர் கோன் விரும்பும் குறுங்குடிக்கே  என்னை யுய்த்திடுமின் –
கோவலர் கூத்தன் -என்றபடி இறே
இனவாயர் தலைவன் ஆனவன்-(5-6-6-இனத்தேவர் தலைவன் ) விரும்பி வர்த்திக்கிற
தேசத்தில்   கொடு போய் பொகடப் பாருங்கோள் –
தன்னுடைய மநோ ஹாரி சேஷ்டிதங்களாலே நித்ய ஸூரிகளை தோற்ப்பித்துக் கொண்டு இருக்கிறவன்
விரும்பி வர்த்திக்கிற திருக் குறுங்குடியிலே –

———————————————————————

(தனியாக வேறே பலன் சொல்ல வேண்டாமே -இங்கே உய்த்திடச் செய்வதே பலம் )

செற்றவன் தென்னிலங்கை மலங்கத் தேவபிரான் திரு மா மகளைப்
பெற்றும் என்னெஞ்சகம் கோயில் கொண்ட பேரருளாளன் பெருமை பேசக்
கற்றவன் காமரு சீர்க் கலியன் கண்ணகத்தும் மனத்தும் அகலாக்
கொற்றவன் முற்றுலக ஆளி   நின்ற குறுங்குடிக்கே என்னை யுய்த்திடுமின் —9-5-10-

சீர்-ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ –

செற்றவன் தென்னிலங்கை மலங்கத் தேவ பிரான் –
தேவதைகள் உடைய வரங்களாலே அழிக்க ஒண்ணாத ஊர் –
ஒருவர் கூறை எழுவர் உடுக்கும் படியாக  மூலையடியே நடக்கும்படி பண்ணினவன் –

திரு மா மகளைப் பெற்றும் என்னெஞ்சகம் கோயில்கொண்ட பேரருளாளன் –
பிரதான மகிஷி   இருக்க ஒரு சண்டாள ஸ்திரீ கால் நடையிலே ஒதுங்கும் செருக்கனாய் இருக்கும்
ராஜ புத்ரனைப் போலே
யஸ்யஸா ஜனகாத்மஜா -என்கிறபடியே
தன் சம்பந்தம் இட்டு சொல்வது மேன்மைக்கு உடலாம்படியான அவள் இருக்க
என்னுடைய ஹிருதயத்தை விரும்பி ஒரு காலும் போவானாய் இரா நின்றான் –

கோயில் கொண்ட-
இனி அவள் போக்கல் போவானாய் இருக்கிறிலன்

அதுக்கடி என் என்னில் –
பேரருளாளன் –
நம் பக்கல் பண்ணின அருளுக்கு அவதி உண்டாகில் இறே
மற்றோர் இடத்தில் போவது –

பெருமை பேசக் கற்றவன்-
அவ் வருளுக்கு அவனை ஒழிய குடியிருப்பு இல்லாதாப் போலே யாயிற்று
அவனைப் பேசுகை யாகிற இதுவும் இவ் வாஸ்ரயத்தில் ஒதுங்கின படி –
(அவன் சின்னமும் திரு நாமமும் இவள் வாயனகள் 6-5-7 )-என்றபடி-

காமரு சீர்க் கலியன் கண்ணகத்தும் மனத்தும் அகலாக் கொற்றவன் –
கண்டாருக்கு ஸ்ப்ருஹை பண்ண வேண்டும்படியான
ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யை உடையரான ஆழ்வார் உடைய
சர்வ இந்த்ரியங்களுக்கும் தானே விஷயமாய்
அரை ஷணமும் அவரை விட்டு அகல நில்லாமையாலே
கோவிந்தாபிஷேகம் பண்ணினாப் போலே இருக்கிற மேன்மையை உடையவன் –

முற்றுலக ஆளி   நின்ற குறுங்குடிக்கே என்னை யுய்த்திடுமின் –
காற்கடைக் கொள்ளுகைக்கு உபய விபூதி யோகம் என்று ஓன்று உண்டாயிற்று –
அவன் வர்த்திக்கிற குறுங்குடி யிலே என்னைக் கொடு போய் பொகடுங்கோள் –

இதுக்கு வேறு ஒரு பலம் சொல்லா விட்டது –
உகந்து அருளின தேச பிராப்தி தானே பலமாய் இருக்கையாலே –

———

தவத்தை வேள் சேமணி வேய் தென்றல் அன்றில் வாடை
அவற்றுடன் வேலை திங்கள் செய் நவை தீரும்
உற்றார் குறுங்குடிக்கு உய்த்தால் என்று உணர்த்து நீலன்
முற்ற வகற்றும் நம் மயக்கு -85-

மயக்கு -சம்சயம் -அஞ்ஞானம் -விபர்யயம் விஸ்ம்ருதி ஆகியவற்றுக்கும் உப லக்ஷணம்
தவத்தை -பிரபத்தியை -தன்மையை தெள்ளிதாக ஆழ்வார் அருளிச் செய்கிறார் –
ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.

————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: