ஸ்ரீ பெரிய திருமொழி-9-3—ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம்-

சயன திருக்கோலம் -சரணாகத திருக்கோலம் -தர்ப்பை சயனம் -ஆதி ஜெகந்நாத பெருமாள்
சேது அணை –3 யோஜனை அகலம் -10 யோஜனை-100 மைல் நீளம்
திரு உள்ளத்துடன் உள்ளத்துடன் பேசுவது போல் திருப்புல்லாணி அனுபவம் —
எளிமையான -பாசுரம் -ஆழமான வியாக்யானம் –
ஆழ்வார் திரு உள்ளக் கருத்தை அழகாகக் காட்டி அருளுகிறார் –

தன்னை -பிரவேசம் –

நாயகனோடு இயற்கையிலே கலந்து பிரிந்து
அந்த பிரிவோடு அவன் வர அபேஷிதமாய் இருக்க
அவன் வரக் காணாமையாலே ஆற்றாமை கரை புரண்டு
நோவு படுகிறாள் ஒரு பிராட்டி –

இனி அவன் தான் மேல் விழுந்து கலக்கக் கடவன் என்று
முறை பார்த்து இருந்து கண்டது அமையும் –
இனி ஸ்வ லாபத்துக்கு நாமே யாகிலும் பிரவர்த்திப்போம் என்று கொண்டு
தன்னுடைய ஸ்திரீத்வ பிரயுக்தமான நாண் மடம் அச்சம் தொடக்கமான வற்றை  பொகட்டு
நம் ஸ்வ ரூபத்தையும் அழித்து
அவன் தனக்கும் ஸ்வரூப ஹானியை  பண்ணி யாகிலும் முகத்தே விழிப்போம் என்று கொண்டு
அவன் இருந்த இடத்தே ஏறப் போக
ஒருப்பட்ட இத்தை கண்ட தோழி யானவள்

இது உன் தலைமைக்குப் போராது காண்-
என்று ஹிதம் சொல்ல
அவளையும்
அவளுக்கு முன்னே பிற்காலிக்கிற நெஞ்சையும்  பார்த்து
பின்னையும் மீண்டு நின்று அங்கே போக ஒருப்பட்ட படியை
நெஞ்சோடும் –
அந்த நெஞ்சு உதவாத போதும் உதவி கார்யம் செய்யும் தோழி யோடுமாக கூட்டுகிறாள் –

இவள் தான் புறப்பட்டு போகை யாகிறது அதி சாஹாசம் இறே
பிராண ரஷணம் ஒரு தலை யானால்  மரியாதைகளை பார்த்து இருக்கலாம் படி இராது இறே
ஸ்வ ரூபம் நோக்குகைகாக இங்கேயே  இருந்து நோவு படுமதில் காட்டிலும்
அங்கே போவது ஸ்வ ரூப ஹானியே யாகிலும்
பின்னையும் விழுக்காட்டிலே ஸ்வ ரூபத்தோடு சேர்ந்து தலைக் கட்டும்-

(பேறு தப்பாது என்று துணிந்து இருப்பது ஸ்வரூபம்
அத்தைத் தாண்டி
பேற்றுக்குத் த்வரிக்கையும் ஸ்வரூபம் தானே )

ஆன பின்பு அங்கே போய் அனுபவிப்போம் என்று அத்யவசிக்கிறாள் –
அவன் இத்தலையில் பருவம் அறிந்திலன் ஆகிலும்
தன் வை லஷண்யம் அறிந்து இருக்குமே   –

(அரும் பதக்காரர்
திரு நாகை அழகியாரை உருவ வெளிப்பாட்டில் கண்டு தானும் தோழியாய்
தோழி இவள் அந்நிய பரதை யாக்க
உத்யானங்களில் சஞ்சரிக்க -பூ பறிக்கும் வியாஜ்யம்
திருப்புல்லானி பெருமாள் தெய்வ சங்கல்பத்தால் சம்ச்லேஷம் —
பின்பு சாத்மிக்க வேண்டி பிரிந்தான் என்று சங்கதி –
பிரிவோடு-என்றது -பிரிவால் -என்றவாறு
மங்கை நல்லாய் போது மாதே இத்யாதி தோழி பாசுரங்கள்
அத்தலையில் வைலக்ஷண்யம் அடியாக வந்ததாலே ஸ்வரூபத்துடன் சேரும் –
தோற்றோம் மட நெஞ்சே ஜிதந்தே –
இருந்த இடத்தில் இருக்க ஒட்டாமல்
இவள் ஒருப்பட்ட அளவில் அவன் தானே வரும்
இவன் தனது வை லக்ஷண்யம் அறிந்து எல்லை மீறி வருவாள் என்று அறிவான் )
ஏஷ சேது

———————————————-

தன்னை நைவிக்கிலேன் வல்வினையேன் தொழுதும் எழு
பொன்னை நைவிக்கும் அப் பூஞ்செருந்தி  மண நீழல் வாய்
என்னை நைவித்து எழில் கொண்டு அகன்ற பெருமான் இடம்
புன்னை முத்தம் பொழில் சூழ்ந்து அழகாய புல்லாணியே —9-3-1-

தொழுதும் எழு-தொழுது எழு -நம்மாழ்வார் போல் இங்கு இவரும் –
நெஞ்சே -அத்யாகராம் பண்ணிக் கொள்ள வேண்டும் இங்கு
நீழல் வாய்-நிழலிலே
என்னை நைவித்து-சம்ச்லேஷத்தால் சிதிலமாகி –

தன்னை நைவிக்கிலேன்-
நான் தானாக மாட்டேனே
தான் எல்லாம் என்னை நைவித்தானாய் இறே இருக்கிறது –
என்னை நைவித்து எழில் கொண்டமை யுண்டு இறே –

(தான் எல்லாம்-பகவான் எல்லாப் படிகளாலும்
என்னை நான் அழிவித்துக் கொள்ள மாட்டேன்
என்னை சொல்லாமல் தன்னை –நான் தானாக மாட்டேன் ஆகவே இந்தப்பத பிரயோகம் )

தன்னை நைவிக்கிலேன்–
செயலுக்கு செயல் செய்யத் தட்டு இல்லை இறே
நான் அது மாட்டுகிறிலேன்-
(தனக்குத் தானே துன்பம் கொடுத்தால் அவனுக்குத் துன்பம் கொடுப்பது போலாகும்
தான் நிரங்குச ஸ்வா தந்த்ரன் அன்றோ )
தான் கலக்கைக்கும் சம்பாவானை உண்டாம்படி பிரிந்து படுத்தின பாட்டை நான் முடிந்து
தன்னை நிரசனம் படி பண்ண வல்லேன் இறே –
நான் அது செய்கிறிலேன்-

தான் கலந்து இத்தலையை அழித்தான் ஆகில்
நான் பிரிந்து தன்னை அழிவிக்க வல்லேன் இறே
அதுவும் செய்ய மாட்டுகிறிலேன்
அதாகிறது இவள் தன் ஜீவனத்தில் நசை யறுகை இறே –
(என் சினம் தீருவேன் நானே குலசேகரப்பெருமாள் –
கையால் அடிப்பது பாக்கியமாக கொள்பவன் -முகம் திருப்பியே-அபிநயம் -)

தன்னை நைவிக்கிலேன்-
நான் ஜகத் உப சம்ஹாரம் பண்ணுகிறிலேன்
என்னை நைவித்தான் என்று தன்னை நைவித்தால் பின்னை ஆர் உண்டு
இவள் அவனை நைவிக்கை யாகிறது -தான் முடிகை இறே
நீருக்குப் போக குடம் உடைத்தாரைப் (உடைந்தாரைப் ) போலே
அவர் வரக் கொள்ள
இத்தலை வெறும் தரையாக கிடக்கும் அன்று
அவரைக் கிடையாதே –

(நைதல் ஸ்வரூப நாச பரம் -மூன்றாவது -நைவிக்கை கலசிப்பிக்கை -இரண்டு அர்த்தங்கள் –
தனது ஜீவனத்தில் நசை அறுப்பது -தனது ஜீவனமாகிய அவன் முகத்தைப் பாராது இருப்பதே –
பிரிந்த வியசனத்தாலே மேல் விழுந்து அவன் வரும் பொழுது கிட்ட நின்று முகம் மாற வைக்கில்
அவன் நையும் என்று சொல்ல வேண்டாமே
முடிக்க வேண்டும் என்று கலந்தாலும் -முடியாதே இருந்து அவனை நோக்கப் பார்க்க வேணும் -ரஷிக்க வேண்டும் )

வல்வினையேன்-
முடிந்து பிழைக்க வேண்டி இருக்க
ஜீவித்து இருக்க வேண்டும்படியான மகா பாபத்தைப் பண்ணினேன்
துக்க ஹேது-பாபம்
சுக ஹேது -புண்யம்
இப்போது சுகம் ஆவது முடிகை இறே
முடிந்து சுகிக்க ஒண்ணாத படி பரார்த்தமாக ஜீவிக்க வேண்டும்படியான மகா பாபத்தை பண்ணினேன்-

(விட்டுப் பிரிந்து வாழ்வது துக்கம் -முடிந்தால் சுகம் இவளுக்கு -சுகத்துக்கு ஹேது புண்யம்
புண்யம் இருந்தால் முடியலாம் )

வல்வினையேன்-
என்னால் ஆற்ற ஒண்ணாத படியான பாபத்தை பண்ணினேன் –
அதாகிறது –
தொட்டுத் தெல்லாம் அத் தலையிலே சென்று தாக்கும்படியாய் இரா நின்றதே
ஏதேனும் ஒன்றை இட்டு என் ஆற்றாமையை பரிஹரிக்க வல்லேன் இறே
அத்தலைக்கு ஸ்வரூப ஹானியாய் தலைக் கட்டாது ஒழியப் பெற்றேன் ஆகில்
வஸ்து அவனுக்கு இஷ்ட விநியோஹ அர்ஹ்யமாய் அற்ற பின்பு 
இனி நம்மால் செய்யலாவது உண்டோ –

(பரார்த்தமாக ஜீவாத்மா -எல்லாம் அவனது அதீனம் -குழந்தைக்கு என்ன வந்தாலும் தாயைத் தானே பாதிக்கும் )

பாவியேன்
பாரதந்த்ர்யத்தோபாதி பொல்லாதது இல்லை கிடீர்
திகஸ்து பரவஸ்யதாம்–(ஸூந்தர 25)-என்னக் கடவது இறே
(உயர்ந்த பாரதந்தர்யமும் பொல்லாது என்னும் படி அன்றோ இவளது த்வரை இப்பொழுது )

இவள் தான் முன்பு எல்லாம் ஸ்வாதந்த்ர்யம் புருஷார்த்தம் என்று போலே காணும்  நினைத்து இருப்பது
அது புருஷார்த்தம் ஆவது ஒருவனுக்கே
இங்கன் அன்றாகில் ஸ்வரூப அந்யதா பாவம் புருஷார்த்த என்கிறது அன்றே
இப்போது ஒரு ஹேதுவாலே இறே இப் பாரதந்த்ர்யம் பொல்லாதது என்கிறது
ஸ்வ தந்த்ரரான சக்கரவர்த்தி போல்வாருக்கு அன்றோ
நினைத்தால் போலே முடியல் ஆவது –

(இருவருக்கும் ஸ்வா தந்திரம் புருஷார்த்தம் ஆகாதோ என்ன
அவனுக்கு ஸ்வா தந்தர்யமும்
நமக்கு பாரதந்தர்யம் ஸ்வரூபம்
இதில் இருந்து மாறி நமக்கு ஸ்வா தந்தர்யமும் அவனுக்கு பாரதந்தர்யமும் -அந்யதா பாவம் புருஷார்த்தம் ஆகாதே
இப்பொழுது -பாரதந்தர்யம் பொல்லாதது என்பது தசரதர் போல் முடிய முடியாமல் –
முடியவும் யத்னமும் பண்ண முடியாமல் -இருப்பதால் தானே
மாயும் வகை அறியேன் வல் வினையேன் பெண் பிறந்தே நம்மாழ்வார் )

தொழுதும் எழு-
முடிகை ஸ்வ தந்த்ர்ய கிருத்யம் ஆகில்
ஜீவிக்குமது பார்ரதந்த்ர்ய க்ருத்யமாய் இருக்கும் இறே
முடிந்து பிழைக்கப் பெறா விட்டால் அத்தை நோக்குவாருக்கு ஒரு தாரக த்ரவ்யம் வேணுமே –
நித்யாஞ்சலி புடாஹ்ருஷ்டா-நம இத்யேச்வ வாதினா –
முக்தர்களுக்கும் ஸ்வேத த்வீப வாசிகளுக்கும் லக்ஷணம் -சாந்தி பர்வம்

உண்டு பசி கெட்டது -என்னுமா போலே
நம இத்யேவ வாதி ந-
நமோ நம என்னாத போது-தங்கள் மூச்சு அடங்கும் படியாக இருப்பார்கள்
சாதனா புத்தியா சொல்லில் இறே ஒரு கால் அமைவது
அங்கு இது தானே யாத்ரையாய் இருக்குமே –

எழு-
இத்தனை சாஹசத்துக்கு நன் இசையேன் -என்று இருந்ததாயிற்று நெஞ்சு
கெடுவாய் இது சாதனா அம்சத்தில் அந்வயியாது
இது ஆற்றாமைக்கு உடலாம் காண் –
கடுகப் புறப்படு -என்கிறாள்

அதாகிறது
தேக யாத்ரையில் அந்வயிக்கும் படி
தொழுகிற தொழுகை அன்றே
ஜீவிக்கைக்கு தொழுகிற தொழுகையே-

இனி
தன் ஜீவனத்துக்கு தான் தொழுகையும் விநாசத்துக்கு  உடலாக என்றே நெஞ்சு நினைத்து இருப்பது
அத்தை அனுசந்தித்து நெஞ்சு தரைப் பட்டுக் கிடக்க
இங்கன் அன்று காண் வா -என்று கையைப் பிடித்து எடுக்கிறாள் –

(அவன் உன்னைக் கைப்பிடித்துக் கொள்ளில் போகக் காட்டுவோம் நெஞ்சு சொல்ல
அவன் வாரா விட்டால் நாமும் போகாது இருப்பதே கர்தவ்யம்
அதுக்கு பதில்
அவன் ஒரு பெண் கொடியை வதை செய்தான் ஆகில்
நாமும் பதிலுக்கு நிவாஸ வ்ருஷத்தை ஒரு மரத்தை வெட்டுவோமோ
நிவாஸ வ்ருஷ ஸாதூ நாம் ஆபந்னானாம் பராம் கதி -தாரை –
நம்மைப் பிரிந்து வரவும் மாற்றல் அடி அற்ற மரமாகத் தரைக்கிடை கிடந்த -சயன திருக்கோலம் இங்கு -கோலம் பாராய்
நிரதிசய போக்யமாக தேசத்தில் கலந்தால் நீ நைவிக்காமல்
ஏன் இருந்தாய் -தோழிக்கு பதில் மேல்
கப்பல்கள் வரும் தேச ஸ்வ பாவம் அந்நிலம் )

பொன்னை நைவிக்கும் அப்   பூஞ்செருந்தி  மண நீழல் வாய் என்னை நைவித்து –
அந்த நிலத்திலே கலந்து பிரிய வல்லானுக்கு இனி வரத்து உண்டோ
நாம் போம் இத்தனை போக்கி -கெட்டேன்
அந்நிலத்திலேயும் கலப்பார் உண்டோ –
அவன் தான் பழி கொண்டான் என்னலாம் படி யாயிற்று
அந்த தேச ஸ்வ பாவம் தான் இருக்கிற படி –

பொன்னை நைவிக்கும் அப் பூஞ்செருந்தி  மண நீழல் வாய் என்னை நைவித்து –
ஒரு கார்ய புத்தி பண்ணி இருப்பார்க்கு  அன்றோ ஆறி இருக்கலாவது
சுவடு அறிந்து பிரிந்தார்க்கும் தரிக்கப் போமோ

ஒரு ஸ்ரீ ஜனக ராஜன் திரு மகள் போல்வாருக்கு அன்றோ
அவன் தானே வரும் அளவும் ஆறி இருக்கிறோம் என்று தரிக்கல் ஆவது

பழையார் பாடாற்ற வல்லது
புதியார்க்கும் ஆற்றப் போமோ
(25 வருஷம் அனுபவித்த சீதைப்பிராட்டி போல் அல்லவே நாம் )
ஆர் உயிர் பட்டது என் உயிர் பட்டது-( 9-6-திருக்காட்கரை ) -என்னக் கடவது இறே
அசாதாரணரான நித்ய ஸூரிகளிலே திருவடி திரு வநந்த வாழ்வான் போல்வார் தான் பட்டார்களோ
நான் பட்டபடி -என்கிறார் என்று ஆயிற்று –

இதுக்கு ஜீயர் அருளிச் செய்யும் படி –
இது தன்னை ஆழ்வார் பாடா நிற்க
எம்பெருமானார் -அங்கு ஆர் உயிர் பட்டது இங்கே எனது உயிர் பட்டது -என்று அருளிச் செய்தார் –
ஆழ்வார் உடைய  அனுபவத்தை யாகில் ப்ராப்யமாக சொல்லுகிறதும்
ஆசைப் படுகிறதும்
அதுக்கு அவ்வருகே ஒரு ஏற்றம் சொல்லுவாரைப் போலே சொல்லுவான் என் என்று
நான் ( நம்பிள்ளை )ஜீயரைக்  கேட்க
நாவோடையான ஸ்திரீக்கு பர்த்தாவின் உடைய கர ஸ்பர்சம் உண்டானால்
வேர்ப்பது விடுவது ஆமா போலே
அனுபவத்தில் புதுமையால் படுகிற அலமாப்பு காணும் என்று அருளிச் செய்தாராக நம்பிள்ளை அருளிச் செய்வர் –

பொன்னை நைவிக்கும் -ஸ்வ பாவம் காண் –
தலைமையாக பேர் பெற்றவற்றை எல்லாம் அழிக்கை
அவ் ஊரில் பதார்த்தங்களுக்கு பணி

அசேதனமான செருந்தி -கேவல வர்ண சாம்ய மாதரத்தைக் கொண்டு பொன்னை அழித்தால்
துல்ய சீல வயோ வ்ருத்தாம்  – என்று கொண்டு பருவத்துக்கு அபிமானித்து இருப்பாரை
பரம சேதனன் அழிக்கச் சொல்ல வேணுமோ –
சர்வதா சாம்யம் உடையாரை அங்குள்ளார் அழிப்பார்கள் ஆயிற்று
தான் புருஷோத்தமன் ஆன இது கொண்டு -நாரீணாம் உத்தமி யான இவளை அழித்தான் ஆயிற்று –

செருந்தி பொன்னை அழித்தது
இவன் இவளை அழித்தான்
நாயகன் தான் இவள் தன்னை -பொன்னே -என்று போலே காணும் வ்யபதேசிப்பது
உமிழ் பாலை கடந்த பொன்னே -திரு விருத்தம் -என்னக் கடவது இறே  –

அப் பூஞ்செருந்தி –
வ்ருஷே வ்ருஷேச பஸ்யாமி ( ஆரண்ய )-என்னுமா போலே
கலந்த போதை அங்குத்தை போக்யதை இப்போதும் கூட நெஞ்சிலே வடிம்பு இடுகிற படி
அந்த போக்யதை இப்போதும் கூடே வந்து தோற்றா நின்றது காணும் –

பூம் செருந்தி மண நீழல் வாய் –
பரப்பு மாறப் பூத்து இருப்பது –
பரிமளம் மிக்கு இருப்பது –
நிழல் செய்து இருப்பதாய் இருக்கிறபடி
நிறமும் மணமும் நிழலும் -இவை எல்லாம் உண்டாய் இருக்கிறபடி –
ஓர் இந்த்ரியம் கொண்டு ஒதுங்க நிழல் இல்லை கிடீர்
சஷூர் இந்த்ரியத்துக்கு   நிறம் –
க்ராண  இந்த்ரியத்துக்கு மணம்-
ஸ்பர்ச இந்த்ரியத்துக்கு நிழல் –

நீழல் வாய் -என்னை நைவித்து –
ஒருவருக்கு ஒருவர் உண்டான ஏற்றம் கொண்டு கார்யம் இல்லை –
நிழலே அழிக்க வற்றது
நிழல் இடத்து என்னை நைவித்து –
கடலைத் தரை கண்டேன் -என்னுமா போலே என்னுடைய
ஸ்த்ரீத்வ அபிமானத்தை  போக்கி
(பாரதந்த்ரம் அழித்து ஸ்வாதந்தர்யம் கொடுத்து அணைக்கும் படி )
தான் கிட்டினால்
நான் தன்னை நினைத்து இருந்தது எல்லாம் போய்
அத்தலை இத்தலையாம் படி மாறாடப் பண்ணி
(பாரதந்த்ரம் – ஸ்வாதந்தர்யம் மாறாடப் பண்ணி )
கலக்கைக்கு எதிர்தலை இல்லாத படி அழித்து-
கலப்பாருக்கு எதிர் தலை வேண்டாவோ
முன்பு எல்லாம் இவள் கையிலே அவன் தான் அழிந்து இறே போந்தது
யுத்தத்திலே ஜெய அஜயங்கள் வ்யவஸ்திதம் அல்லாதா போலே யாயிற்று சம்போகத்திலும் –

என்னை நைவித்து –
ஒரு மிதுனமாய் பரிமாறா நின்றால்
அதில் இனிமை இரண்டு தலைக்கும் ஒத்து இருக்க வேண்டி இருக்க
தாம் அதில் அந்வயியாதாராய்-இருந்த படி
நைவித்து -என்று தான் சம்ஸ்லேஷத்துக்கு பேர் –

நைவித்து எழில் கொண்டு
கொன்று கிழிச்சீரை அறுத்துக் கொடு போவாரை போலே
அழித்து யாயிற்று கொண்டு போயிற்று
(அழகு தானே இவள் தனம் )

அகன்ற –
இனி அவஸ்யம் பிரிவு அபேஷிதம் இறே
உத்தேஸ்யம் கை புகுந்தால் கடலோடத் தட்டில்லை –
(பொன் கிடைத்தால் கடலோடி வியாபாரம் செய்வார்களே
பெண்ணைப் பெற்று இவரும் இங்கு கிடக்கிறார் )

பெருமான் இடம் புன்னை முத்தம் பொழில் சூழ்ந்து அழகாய புல்லாணியே-
முத்தரும்பின புன்னை பொழிலாலே
சூழ்ந்து அழகாய திருப் புல்லாணி –

——————————————————-

மார்பே மார்பிலே கை வைத்து உறங்க
கீழே தொழுது எழு என்று கையைப் பிடித்து எழுப்ப
நெஞ்சு தனது ஸ்வ பாவத்தால் உருகுமால் நெஞ்சு என்று உருக
இந்த உருகுதலுக்கு என்ன லாபம்
இங்கு தனியாக இருந்து நினைந்து உருகுதலால் என்ன பலன் தொழுதும் எழு என்கிறாள்

உருகி நெஞ்சே நினைந்து இங்கு இருந்தேன் தொழுதும் எழு
முருகு வண்டுண் மலர்க் கைதையின் நீழலில் முன்னொரு நாள்
பெருகு காதன்மை என்னுள்ளம் எய்தப் பிரிந்தான் இடம்
பொருது முந்நீர்க் கரைக்கே மணி யுந்து புல்லாணியே —-9-3-2-

நெஞ்சே இங்கே இருந்து உருகி என்
நெஞ்சே இங்கே இருந்து நினைந்து என்
அவனை உருக்குதல்
நாம் வலித்து இருத்தல் செய்யலாம் இடத்தில் இருக்க வேண்டாவோ
ஊர்த்த்வம் மாசான் ந ஜீவிஷ்யே -என்று இருப்பார்க்கு
ந ஜீவேயம் ஷணம் அபி -என்று
இருப்பாரைக் கண்டால் தரிக்கலாம் இறே
(சீதாப் பிராட்டியை நினைந்து உருகி இருந்த திருப்புல்லாணிக்குச் செல்ல வேண்டாவோ )

நெஞ்சே இங்கே இருந்து உருகி என் –
இங்கு இருந்து என் –
இது ஆர் அறிய இருந்து அழிகிறோம் –

தொழுதும் எழு-
உருகாமல் நினைக்கும் போதைக்கு இதுவே வேணும் –

(உருகி தரிக்க வேண்டினாலும் தொழ வேண்டும் –
அஞ்சலி பரமாம் முத்ரா
தொழுதால் உருகாமல் இருக்கலாம் என்று அறிவது எப்படி என்பதுக்கு மேல் உதாஹரணம் )

முருகு வண்டுண் மலர்க்கைதையின் நீழலில் –
அங்கு உள்ள திர்யக்குகளும் அகப்பட
அபிமத லாபத்தாலே செருக்கி வர்த்தியா நிற்கும் ஆயிற்று –

தேனை புஜியா நின்றுள்ள வண்டுகளை உடைத்தான
மலரை உடைத்தான தாழை நிழலின் கீழே –
அங்கு உள்ளார்க்கும் சம்போகம் ஆதல்
அதுக்கு அனந்தரமான மதுபானம் ஆதலாய் செல்லா நிற்கும் ஆயிற்று
அனந்தரமான சம்ஸ்லேஷத்துக்கு   பலாதானம் பண்ணுகிற படி –
(பலாதானம் -பலம் ஆதானம் -பின்பு வருவதுக்கு சக்தி கொடுக்க )
அவை முன்பு கலப்பது -பின்பே ஒரு கலவிக்கு உறுப்பாக வாயிற்று –
அவன் கலக்குமது பின்பு பிரிந்து ஆற்றாமையை விளைப்பித்து
கண்டு கொண்டு இருக்கைக்காக வாயிற்று –

முன்னொரு நாள்
பாவியேன் அதுவும் ஒரு நாளே

நாள் –
நாயகன் தன்னைக் கண்டால் போலே இருக்கிறது காணும்
கலந்து பிரிந்த வற்றை நாளை-அந்த நாளை – நினைத்தவாறே –
இன்று போல் அன்று இறே-
(கணையாழி -விரல் -இத்யாதி நினைத்து மகிழ்ந்தது போல் )

பெருகு காதன்மை என்னுள்ளம் எய்தப் பிரிந்தான் இடம்-
என்னுடைய ஹிருதயமானது
மிக்க காதலை உடைத்தாம் படி பண்ணி
தன்னைக் கொண்டு கடக்க நின்றான் ஆயிற்று –

பெருகு காதல் –
அதனில் பெரிய என் அவா -என்னுமா போலே
விபுத்வத்துக்கு -(பரமாத்மாவான -விபு தத்வத்துக்கும் -)அவ்வருகாம் படியாய் இருக்கை-
அணு வஸ்து இறே விபு வஸ்துவை விளாக்குலை   கொள்ளுகிறது –
அப்படியே இருக்கும் இறே-(ஞான) சங்கோசம் அற அவன் பண்ணிக் கொடுத்த வாறே –
(ஞான விகாசம் -ஸ்வேன ரூபேண -ஸ்வரூப ஆவிர்பாவம் )
பிரிகிற தமக்கும்-அது (மிக்க காதலை) உண்டாகில் பிரியான் இறே
இன்னம் காதல் தானே பெருகி தலை மறிந்தது இல்லை –
(முடிய வில்லை -பெருகிக் கொண்டே இருப்பதால் பெருகு காதல் -வர்த்தமானம் –
கூடியும் பிரிந்தும் காதலை வளர்ப்பவன் )

பிரிந்தான் –
இதுக்கு முன்பு திரு நாமங்கள் அறியாள் ஆயிற்று
தான் அறிந்த போதை கண்டதை இறே இவள் சொல்லுவது
அங்கமலக் கண்ணன் -என்னுமா போலே
(அகக் கண்ணன் -பாட பேதம் )
கறுத்து இருக்கும் வெளுத்து இருக்கும் என்னுமா போலே
இதுவும் ஒரு நிரூபகம் –

பொருது முந்நீர்க் கரைக்கே மணி யுந்து புல்லாணியே-
உத்தேஸ்ய சித்திக்கு
இருந்த இடம் விட்டுப் போக வேண்டாத தேசம்
பொருளவையில் பிரிகிறேன் -என்றவனுக்கு கண் அழிவு சொல்ல ஒண்ணாத தேசம் –
(ஆபரணம் சூட்டி அழகு பார்க்க பொருள் ஈட்ட வேண்டும் -பிரிந்து கப்பல் ஏறி போக வேண்டாமே –
கடல் அலைகளே அனைத்தும் உந்தி தள்ளுகின்றனவே )

கீழ்ப் பாட்டில் சொன்ன
ஒளி முத்தமும் தான் இருக்கிறபடி –

(முத்துக்களுக்காகவும் பிரியலாமே என்று சொல்லுமாகில்
கீழே அதுவும் உண்டே -என்னில் -புன்னை முத்தம் -முத்து போல் உள்ள புன்னை பூக்கள்
மொட்டையே முத்தாக கொள்ளலாம்
அன்றிக்கே
கடல் கரை -ஆகையால் -முத்துக்கள் சூழ்ந்த கடல் கரையில் உள்ள புன்னை பொழில்
இலங்கு முத்தும் பவளக் கொழுந்தும் எழில் தாமரைப்
புலங்கள் முற்றும் பொழில் சூழ்ந்து அழகிய புல்லாணி மேல்-9-3-10-
நிகமத்தில் -கீழே சொன்னவற்றை நிகமிக்கையாலே என்றுமாம் )

——————————————————

(நெஞ்சானது நீ என்னை உருகி நினைந்து இங்கு இருந்து என்ன பலன் என்னா நின்றாய்
நீ அவனை மறந்து இருந்தால் நானும் நினைந்து உருக மாட்டேன் என்று சொல்ல
நான் மறக்க வேண்டினாலும் அங்கு போக வேண்டும்
நினைக்கவும் மறக்கவும் அவன் நினைவே காரணம் )

நினைக்க ஒண்ணாமை அன்றிக்கே
மறக்க ஒண்ணாது -என்கிறது –
(நாஸ்திகம் -போல் நினைக்கக் கூடாது -ஆழ்வார் பாவம் நெஞ்சில் பட்டு உணர வேண்டும்
உருகுவதால் நினைக்க மாட்டாது
வை லக்ஷண்யம் மறக்க ஒட்டாது )

ஏது செய்தால் மறக்கேன் மனமே தொழுதும் எழு
தாது மல்கு தடம் சூழ் பொழில் தாழ்வார் தொடர்ந்து பின்
பேதை நின்னைப் பிரியேன் இனி என்று அகன்றான் இடம்
போது நாளும் கமழும்  பொழில் சூழ்ந்த புல்லாணியே –9-3-3-

ஏது செய்தால் மறக்கேன் மனமே –
நாட்டார் தம் தாம் உடைய அபிமதரைப் பிரிந்தால்
கூடின போது மறக்க மாட்டாராய்-
பிரிந்த போது நினைக்க மாட்டாராய் இருப்பர்கள் –
இங்கன் அன்றிக்கே
பிரிவில் மறக்க ஒண்ணாத படியாய் இரா நின்றது –
இனி அவர்கள் படி அன்றிக்கே நம்மது விசஜாதீயமாய் இருந்த பின்பு
கிட்டினால் தான் மறக்கலாமாகில் பார்க்கலாம் –
போந்து காணாய் -என்கிறாள் –
இவள் படி வ்யாவ்ருத்தமாய் இறே இருப்பது  –
(நாட்டார் இயல்பு ஒழிந்து நாரணனை நண்ணுமவள் அன்றோ )

மனமே –
பேறு இழவுகள் இரண்டாலும் வரும்
வியசன உகப்பு உதயங்களுக்கு (அப் உதயங்களுக்கு )உன்னைக் கொண்டு இறே அனுபவிப்பது –

தொழுதும் எழு-
மறைக்கைக்கும் தொழ வேணும் போலே காணும் –
ஏதேனுமாக -அபிமத லாபம் தொழுகையால் அல்லது இல்லையாய் இருந்தது –

தாது மல்கு தடம் சூழ் பொழில் தாழ்வார் –
பூக்கள் உதிர்த்த தாதாகிற படுக்கையிலே யாயிற்று கலந்து பிரிந்தது –
பூக்கள் உதிர்த்த் தாதுக்கள் மிக்கு இருந்துள்ள தடாகங்களாலே சூழப் பட்ட பொழில் பர்யங்கங்களிலே  –
ஒத்த நிலங்களிலே என்ற படி –

தொடர்ந்து –
ராமஸ்து சீதயா ஸார்த்தம் விஜஹார பஹூன் ருதூன் (பால ) -என்னுமா போலே
போக ஸ்ரோதஸ்ஸிலே
இவள் போன போன வகை தோறும் வடிம்பிட்டுக் கொண்டு வந்தான் ஆயிற்று –
இவளுக்கு ஒரு வகையால் ஓர் ஏற்றம் உண்டாம் படி பண்ணிற்று  இலன்
எவ்வளவாக கலந்து பிரிந்தால் இவளை இழக்கலாவது அவ்வளவும் கலந்து விட்டான் ஆயிற்று –

பின் பேதை நின்னைப் பிரியேன் இனி என்று அகன்றான் –
வ்யதிரேகத்தில் இவள் உளள் ஆகாள் என்னலாம் படி கலந்து வைத்து
தன்னைக் கொண்டு பின்னை அகன்றான் ஆயிற்று –
நின்னை கலக்க பொறுப்பாரை அன்றோ பிரிவது –
உன் சௌகுமார்யம் கண்டு வைத்துத் தான் பிரிவானோ –

பிரியேன் இனி என்று அகன்றான் —
கடுக  பிரிந்து கொடு நின்றால் இடி விழுந்தால் போலே இவள் முடிந்து கொடு நிற்கும் என்று பார்த்து
பிரிவு சாத்மிக்கைக்காக வ்யதிரேக முகத்தாலே பிரிவை பிரசங்கித்தான் ஆயிற்று –
(போய் வருகிறேன் என்று சொல்லாமல் பிரியேன் -பிரிவை இவள் உணர வியதிரேகத்தில் சொல்லி தயார் படுத்துகிறான் )
அதாகிறது –
இவன் அந்த சம்ஸ்லேஷ சமயத்தில் சொன்ன வார்த்தை யாகாதே இது -என்று
பிரத்யபிஜ்ஞ்ஞை ( நினைத்து ) பண்ணித் தரிக்கைக்காக –
இங்கன்  அன்றாகில் சம்ஸ்லேஷத்துக்கு உறுப்பான பாசுரம் அன்றே இது –

(சம்ஸ்லேஷ தசையில் பொய் சொன்னான்-கலவியில் ஒரு வகை தானே – என்று உணர்ந்து
பிரிந்த பின்பு சமாதானம் பண்ணிக் கொள்ளலாமே
அகலகில்லேன் இறையும் -என்னுமா போல் பிரியேன் என்பது சம்ஸ்லேஷ தசையில்
உன்மஸ்த்தக தசையில் சொல்லுவது போல் இல்லை
பிராட்டி அகலாமல் சொல்லும் வார்த்தை போல் அல்லவே இவனது )

இயற்கையில் கலவிக்கு முன்பும் உண்டு உடுத்தும் திரிந்தவள் அன்றோ இவள் -என்று இராதே கிடாய்
உன்  சுவடு அறிந்த பின்பு -இனி பிரிந்து ஆற்ற மாட்டேன் காண் -என்றிலள்  ஆயிற்று –
இவள் தான் இங்கனே வருந்திக் கொடு கிடந்தது துக்கப் பட்டாள் இத்தனை யாயிற்று –
இவள் பேதை யாயிற்று –
இவன் தான் முக்த கண்டமாய் பிரியேன் என்றாலும்
அது தான் கலவியில் ஒரு பிரகாரமோ -என்று இருக்குமாயிற்று இவள்
பிரிவு -கலவி -என்கிற இவற்றுக்கு வாசி அறியாள் ஆயிற்று –

பேதை –
வயசால் வந்த இளமை –
போகத்தால் வந்தால் முற்றி இருக்கும் இறே
இனித் தான் விலஷண  விஷயங்கள் எதிர்த் தலை தன்னையும் உண்டாம்படி பண்ணி இறே புஜிப்பது-

பிரியேன் இனி என்று அகன்றான் –
சொலவுக்குச் சேராத செயலைச் செய்தான் –
இப்படி கலந்து வைத்து பிரியுமது ஒரு சைதன்ய க்ருத்யம் அன்று இறே
பாவியேன் என் ஆற்றாமை கண்டால் கூட இருக்க அன்றோ அடுப்பது
இவன் தான் அணைத்த கையை நெகிழ்த்தே வார்த்தை சொல்லுவது –
அப்போது உடம்பில் பிறக்கும் வை வர்ண்யம் காணுமே
இது கண்டால் போகலாமா
இவள் தான் பிரிவு அறியாள் ஆகிலும் -தன் கார்யம் செய்கை தவிராதே
தன்னால் தகையலாவது அன்று இறே –

(எந்நீர்மை கண்டு இரங்கி இது தகாது -கேட்டு இரங்கி இல்லையே கண்டு இரங்கி –
கூட இருக்கும் பொழுதே வை வர்ண்யம் வருமே –
அணைப்பைக் கெட்டிப்பட சற்று நெகிழ்கை வெளுக்கும்
தொடு தொடு –புல்கிக் கிடந்தேன் இத்யாதி பாசுரங்கள்
என் நீர்மை கண்டு இரங்கி இது தகாது என்னாத-திருவாய் (1-4-4)
என் நீர்மை கண்டு-என் ஸ்வபாவம் -மார்த்த்வம் – மென்மைதனைக் கண்டு அருள் செய்து,
நாம் பிரியுமது தகாது’ என்னாதே பொகட்டுப் போனவர்க்கு.
ஸ்ரீ பட்டரை ஒரு தமிழ்ப் புலவர் ‘கேட்டு இரங்கி’ என்னாது, ‘கண்டிரங்கி’ என்னப் பெறுமோ?’ என்ன,
‘அணைத்த கை நெகிழ்த்த அளவிலே வெளுத்தபடி கண்டால் பிரியத் தகாது என்று இருக்க வேண்டாவோ?’ என்று அருளிச் செய்தார்.
கேட்ட புலவர், ‘இவ்வாறு நிகழ்வதும் உளதோ?’ என்ன,
‘புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில், அள்ளிக் கொள் வற்றே பசப்பு,’
‘காதலர் தொடுவுழி தொடுவுழி நீங்கி, விடுவுழி விடுவுழிப் பரத்தலானே’ என்பன போன்ற
தமிழ்ப் பாக்களை நீ அறியாயோ?’ என்று அருளிச் செய்தார். )

என்று அகன்றான் –
பாவியேன் இவற்றில் ஒன்றே அமையாதோ
(பிரியேன் சொல்வதும் அகன்றதும் -இரண்டும் உண்டே இங்கு )
இது தான் இரண்டாயிரம் பிரிவு போலே இருக்கிறது காணும் இவளுக்கு
பிரியேன் என்று சொன்ன போதே பிரிந்தான் இறே
பின்னை  போனதும் மிகை
(பரதன் ராமனை எதிர்த்து வந்தான் என்ற செய்தி கேட்டதுமே
நான் இல்லாமல் போனது போல் என்றார் அன்றோ பெருமாள் )

போது நாளும் கமழும்  பொழில் சூழ்ந்த புல்லாணியே –
பரிமளம் சாத்மிக்கும் படியான தேசம் ஆயிற்று
நித்ய வசந்தமான தேசம் –

(தினப்படி பூக்கள் கமழும் -அன்று அன்று வேண்டிய அளவு –
அப்படிப்பட்ட நித்ய அனுபவம் உள்ள திவ்ய தேசம் )

—————————————————-

(கீழ் மூன்று பாட்டுக்களால் தானும் நெஞ்சும் தொழுவதும் ஒருப்பட்டமை
இப்படி ச ஹ்ருதயமாக ஒரு ப்பட்டவாறே
தோழி இது என்ன புதுமை என்னை அறியாமல் கலவி உண்டோ -என்று தடுக்க
அவளை சமாதானம் பண்ணுவது இப்பாசுரம்
வண்டே சாக்ஷி -பொய் சொல்வதற்காகவே கூட்டி வந்தான்
மதுவைக் கொடுத்து இப்படி அவனுக்கு வேண்டிய சாக்ஷி சொல்லவே கூட்டி வந்தான்
மங்கை நல்லாய் தொழுதும்  எழு-தோழியையும் கூட்டிச் செல்கிறாள் இதில் )

கொங்குண் வண்டே கரியாக வந்தான் கொடியேற்கு முன்
நங்கள் ஈசன் நமக்கே பணித்த மொழி செய்திலன்
மங்கை நல்லாய் தொழுதும்  எழு போயவன் மன்னுமூர்
பொங்கு முந்நீர்க்  கரைக்கே  மணி யுந்து புல்லாணியே —-9-3-4-

கொங்குண் வண்டே கரியாக வந்தான்
தானும் யானுமே என்னும் படிக்கு ஈடாக வந்தான் –
(வண்டு -அவன் கோஷ்ட்டி -துளஸீ பீதாம்பரம் போல் அவன் உடனே இதுவும் சேர்த்தி –
பொதுவான சாக்ஷி இல்லையே-கடக சமாஸ்ரயணம் பண்ண வில்லையே – )
தன் வளையத்திலே மது பானம் பண்ணுகிற வண்டே சான்றாம்படி வந்தான்
உபவாச க்ருசர் முகம் பார்த்து வார்த்தை சொல்லார்கள் இறே சுகமே ஜீவித்து இருக்கும் இவர்கள்
அவை உண்டு உடுத்து சுகமே காலம் போக்குகிறன விறே
நக்குண்டார் நாவிழார் -என்று அவன் பக்கலிலே ஜீவித்தவை நமக்காக வார்த்தை சொல்லுமோ –

கொடியேற்கு முன்-
ச சாஷிகமான ஸம்ஸ்லேஷத்துக்கு மன்றாடும்படியான பாபத்தைப் பண்ணினேன்-

(நீ சொன்னதே போதுமே -சாக்ஷி வேண்டாமே -நீ அனுபவித்த இதுக்கு சாக்ஷி வேண்டாம் அதுவே அமையும்
கீழே கலவி நான் இல்லாமல் எப்படி -என்ன -சாக்ஷிக்கு வண்டு -இதுவே சந்தர்ப்பம் )

முன் நங்கள் ஈசன் நமக்கே பணித்த மொழி செய்திலன்-
சம்ஸ்லேஷ சமயத்திலே நம்மை தனக்காக்கி எதிர்த்தலை இல்லை என்னலாம்படி கலந்தவன் –
(நங்கள் ஈசன்-பிரிந்தாலும் -சொல்ல வைக்கும் )
நமக்கு சொன்ன பாசுரத்தின் படி செய்கிறிலன் –
கடவர்களே விலங்கி நின்றால்
பின்னை நிவாரகர் இல்லை இறே-

நமக்கே பணித்த –
ஆன்ரு சம்சயம் பரோ தர்மஸ்த்வத்த ஏவ மயா ஸ்ருத  –
கலக்கிற போதை சொல்லிற்று ஒரு வார்த்தை உண்டு
அதாகிறது –
சிலரோடு சிலர் கலந்து பிரிந்தால்
பின்னை அவர்கள் படும் வியசனம்  கண்டால்
நான் பொறுக்க மாட்டேன் காண்-
இது காண் என் பிரகிருதி  இருக்கும்படி -என்று கொண்டு சொல்லி வைத்தான் ஆயிற்று

பிரிந்து இவள் நோவு படுகிற போது-இது வன்றோ இவன் சொன்னது -என்று கொண்டு
பிரத்யபிஜ்ஞ்ஞை பண்ணி தரிக்கைக்காக
இது தான் ஓர் ஆளின் வாயில் இட்டு நீட்டுகை இன்றிக்கே
அவர் தம் வாயாலே சொல்ல
நான் என் செவியாலே கேட்டேன் -என்கிறாள் –

அவன் சொன்னபடி தப்ப நின்றானே யாகிலும்
அவன் இருந்த இடத்தே சென்று கிட்டுவது நம் பருவதுக்கும் போராது காண் -என்று தோழி சொல்ல –

மங்கை நல்லாய் தொழுதும்  எழு –
ஓம் காண்-
உன் பருவம் நோக்கி அழகிதாக உண்டாகை இறே-கடுகப் புறப்படாய்-என்கிறாள் –

தன்னுடைய பருவம் அழியா நின்ற நின்ற பின்பு
நீ பருவம் நோக்குகிறோம் என்று இருக்கிற இத்தால் பிரயோஜனம் என் –
வயோஸ் யாஹ்யதி வர்த்ததே-என்றார் இறே
நமே துக்கம் ப்ரியா தூரே நமே துக்கம் ஹ்ருதே திவா எததேவா நு ஸோசாமி –
மைதிலி நம்மைப் பிரிந்து தூரத்திலே வர்த்தியா நின்றாள் -என்றத்துக்கு வெறுக்கிறேனும் அல்லேன் –
இனி வலிய ரஷசாலே பிரிவும் பிறந்தது –
இனி எங்கனே நாம் சாதிக்கும் படி –என்றத்துக்கு வெறுக்கிறேனும் அல்லேன் –
அதாகிறது கடக்க இருந்தாள் ஆகில் கடலை அணை செய்து நாலு பயணம் உள்ளே எடுத்து விட்டுத் தீருகிறது
இனி பிரிவுக்கு ஹேது பூதனான பையலைக் கிழங்கு கொடுத்து பொகடத் தீருகிறது அக்கார்யம்
நான் இது ஒழிந்த அல்லாத வற்றுக்கும்  வெறேன்
இது ஒன்றுக்குமே நான் மோஹிப்பது
அது ஏது என் என்னில்
வயோஸ்யா ஹ்யதி வர்த்ததே  –
இவை போல காலம் என் அம்பால் மீள விடலாவது ஓன்று அன்று இறே
அணைக்கு கிழக்கு பட்ட நீரை மீட்கப் போகாது இறே –

போயவன் மன்னுமூர் –
போய் தொழுதும்   எழு -என்னுதல் –
அவன் போய் மன்னும் ஊர் -என்னுதல் –
அவ்விடம் ஆர்த்தர் இல்லாத இடம் போலே காணும் –
அவன் நித்ய வாஸம் பண்ணும் இடத்தில் ஆர்த்தர் இல்லை இறே –
(நித்தியமாக அனுபவிப்பார்கள் தானே அங்கு )

பொங்கு முந்நீர்க்  கரைக்கே  மணி யுந்து புல்லாணியே –
ஆர்த்தர்க்கு உத்தேச்யம் சென்று பெற வேண்டாதே
இருந்த இடத்தே கொடு வந்து தள்ளும் தேசம் ஆயிற்று –
பாவியேன் -அத்தேசத்தின் படி அவனுக்கும் உண்டாகப் பெற்றிலோமே –

——————————————-

(தோழி -பிரிய பரம் -தடுக்க மாட்டாதே இருக்க
நெஞ்சு குறுகியும் போகாதே -மறந்தும் இராதே
முன் நடந்த சம்ஸ்லேஷ ரஸத்தை தோழியும் நீயாக வ்ருத்த கீர்த்தனம் செய்து
போது போக்கி தரித்து இருக்க ஒண்ணாதோ –
நாம் போவது பலம் கொடுக்காதே
அவனே வருவது -பேற்றுக்கு உடைய அவன் நினைவு
அப்படி நினைத்து இருக்கவும் போகாமல் விஷணையாய் போவதை அருளிச் செய்கிறார் )

கீழே (9-3-3)மறக்க ஒண்ணாது என்றது இறே
இங்கே நினைக்க ஒண்ணாது என்கிறது –
மறத்தல் நினைத்தால் இரண்டாய் இறே இருப்பது
அவை இரண்டும் அரிதாகா நின்றது –
(கால ஷேபத்துக்காக நினைத்தால் ஆஸ்ரயம் வேவா நின்றது -நினைத்தாலே உள்ளம் சுடுகிறது )

உணரில் உள்ளம் சுடுமால் வினையேன் தொழுதும் எழு
துணரி நாழல் நறும் போது நம் சூழ் குழல் பெய்து பின்
தணரிலாவி தளரும் என வன்பு தந்தானிடம்
புணரி யோதம் பணில மணி யுந்து  புல்லாணியே —9-3-5-

தணரிலாவி தளரும்-பிரிந்தால் பிராணன் போகும்படி ப்ரீதி கொடுத்தானே
பணிலம் -சங்கு –

உணரில் -உள்ளம் சுடுமால்-
என்கிறது வருந்தி நினைக்கில் என்கிறது இல்லை
நினைந்தவாறே நெஞ்சு சுடா நின்றது என்கை –
(சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும்
சேர்ந்து இருக்கும் பொழுது நினைக்கத் தொடங்கிய போதே இனிமையாய் இருக்குமே )

வினையேன் –
ஜீவன த்வாரம் ஆனவை தானே பாதகமாம் படியான பாபத்தைப் பண்ணினேன்
சமா த்வாதச தத்ராஹம் -என்று கொண்டு
வ்ருத்தமானது தன்னையே ஸ்மரித்து  தரித்தார்கள் கிடீர்
சில பாக்யாதிகர் -(ஸீதா பிராட்டியை உதாஹரிக்கிறார் )

தொழுதும் எழு –
எல்லா அளவிலும் இது வேணும் ஆயிற்று –
போக்கடி அறவற இத்தையே பற்றக் கடவதே இருக்கும் இறே –
(பிரிந்த போதும் சேர்ந்த போதும் சாதனமாகவும் சாத்யமாகவும் இது வேணுமே )

துணரி நாழல் நறும் போது நம் சூழ் குழல் பெய்து-
பூம் கொத்துக்களை உடைத்தான நாழலின்  உடைய  செவ்விப் பூக்களை
பறித்து முடித்து இருந்துள்ள குழலிலே சுற்றி
அத்ரோபவிச்யஸா தே நகாபி புஷ்பைரலங்க்ருதா (ஸ்ரீ விஷ்ணு புராணம் )-என்னக் கடவது இறே-

பின் தணரிலாவி தளரும் என வன்பு தந்தானிடம்-
இப்படி அவன் பண்ணுகிற விருப்பத்துக்கு
நாம் விஷய பூதர் ஆகாத வன்று இரண்டு ஆஸ்ரயமும்
அழியும் என்னும் படி யாயிற்று பரிமாறின படி –

தணரில் -என்றது –
பிரியில் -என்றபடி –
தாழ்க்கில் -என்னுதல் –

வன்பு தந்தானிடம்-
இது எல்லாவற்றாலும் கூடச் செய்ததாய் ஆயிற்று –
இத்தலையில் அன்புக்கு கிருஷி பண்ணினவனாய் நின்ற இத்தனை –

புணரி யோதம் பணில மணி யுந்து  புல்லாணியே –
கடலில் திரைகள் ஆனவை சங்குகள் ஈன்ற முத்தைக் கொடு வந்து
தள்ளா நிற்கும் ஆயிற்று –
உத்பத்தி காலத்திலே காணலாய்
பின்பு அறிவார் கையிலே இட்டுப் பரீஷிக்க வேண்டாதே யிருக்கை-
திரைக் கிளர்த்திகளிலே அறை யுண்டு வழிகளிலே  ஈனுமாயிற்று –
அன்றியே
சங்குகளையும் மணிகளையும் தள்ளா நின்று இருந்துள்ள புல்லாணியே -என்னவுமாம் –

——————————————————

(நினைக்கில் உள்ளம் சுடும் என்னா நின்றாய்
அவனுடைய சவுந்தர்யாதி கல்யாண குணம் அனுசந்தானத்தால் தரித்து இருக்கலாமே என்ன
குணங்களும் ஈடுபடுத்தவையாக அன்றோ இருக்கும்
அத்தாலும் போய் அல்லது இருக்க முடியாதே )

எள்கி நெஞ்சே நினைந்து இங்கு இருந்தென் தொழுதும் எழு
வள்ளல் மாயன் மணி வண்ணன் எம்மான் மருவும் இடம்
கள்ளவிழும் மலர்க் காவியும் தூ மடல் கைதையும்
புள்ளும் அள்ளல் பழனங்களும் சூழ்ந்த  புல்லாணியே —9-3-6-

பழனங்களும்-மருத நிலங்களும் -நெய்தல் ஒரு பக்கம் மருதம் ஒரு பக்கம் உண்டே இங்கு

எள்கி நெஞ்சே நினைந்து இங்கு இருந்தென்-
ஈடு பட்டு நினைக்க வேண்டும்படியான
இங்கு இருந்து பிரயோஜனம் என் –
நினைக்க வென்று புக்கால் சாலப் பணிப்பட வேண்டும்படியாய் இருக்கும் யாயிற்று –

தொழுதும் எழு-
நினைக்கையே தொடங்கி பணிப்பட வேண்டும் இடத்தை விட்டு
காயிகமான வியாபாரம் பண்ணலாம் தேசத்து ஏறப் போரு நீ –

வள்ளல் மாயன் மணி வண்ணன் எம்மான் மருவும் இடம் –
அவன் நித்ய வாஸம் பண்ணாத இடத்தில் நினைக்கவும்  அரிது-
அவன் நித்ய வாஸம் பண்ணும் இடத்தில் காயிக வியாபாரமும் பண்ணக் குறை இல்லை –

வள்ளல் –
சம்ஸ்லேஷ சமயத்தில் தன்னை எனக்கு சர்வ ஸ்வதானம்  பண்ணினவன் –

மாயன் –
இப்போது முறை கெட்டுத் தான் இருந்த இடத்தே செல்ல வேண்டும்படி
அப்போது அப்படி பரிமாறினவன்

மணி வண்ணன் –
இவை ஒன்றுமே இல்லை யாகிலும் விட ஒண்ணாத படியான வடிவு அழகை உடையவன்  –

எம்மான் –
அவ் வடிவு அழகை  காட்டி என்னை
அனந்யார்ஹனாக எழுதிக் கொண்டவன் –

கள்ளவிழும் மலர்க்காவியும் –
அவன் நித்ய வாஸம் பண்ணுகிற இடத்திலே சென்றால்
அவனுக்கும் நமக்கும் நினைத்த படி
பரிமாறலாம் படி ஏகாந்தமான ஸ்தலம் கிடீர் –

செவ்வி அழிவதற்கு முன்பே பறிக்க வேணும் என்று மேல் விழுந்து பறித்து
ஒருவருக்கு ஒருவர் ஏறிய அது மேலே பட்டு
மதுவானது பாயா நிற்கக் காணலாய் இருக்கிற செங்கழு நீரும் –
அதாகிறது –
ஸூநா ஸூநிக்ரியைக்கு யோக்யமாய் இருக்கை –
(பீச்சாங்குழல் வைத்து சூர்ண holy பண்டிகை போல் )

தூ மடல் கைதையும் –
வெள்ளை மடலை உடைத்தாய் -இவளுக்கு ஸ்ப்ருஹை பண்ணி
மேல் விழலாம் படி யான தாழையும்
இவன் தோள் கொடுக்க  ஏறிப் பறிக்கலாம் படியாய் இருக்கை –

புள்ளும் –
நாநா வர்ணங்களையும்
நாநா வான பேச்சுக்களையும் –
உடையவான பஷிகளைக் கண்டு
இதன் பேர் என்ன இதன் பேர் என்ன -என்று இவள் கேட்க
அவன் அவற்றின் பேர் சொல்லலாம் படியான புள்ளும் –

அள்ளல் பழனங்களும் சூழ்ந்த  புல்லாணியே –
இவள் தன் செல்வாலே( செல்வம் -சம்பத்து ) விளைவது அறியாதே நீர் நிலங்களிலே புக்கு
அங்கே அளறு பாய்ந்து நின்றால்
அவன் கைக் கொடுத்து ஏற விடும்படியான நிலங்களையும் உடைத்தான
திருப் புல்லாணியைத் தொழுதும் எழு –

—————————————————–

(அவனுடைய உதார குணங்களில் ஈடுபட்டு -அது பழியாகாதோ
குண க்ருத தாஸ்யம் -கூடாதே
ஸ்வரூப ப்ரயுக்த தாஸ்யமாக வேண்டாவோ என்ன
அவ்வூரை பரவி ஏத்தி காலக்ஷேப அர்த்தமாகப் போவோம் என்கிறாள் என்று சங்கதி )

பரவி நெஞ்சே தொழுதும் எழு போயவன் பாலமாய்
இரவு நாளும் இனிக் கண் துயிலாது இருந்து என் பயன்
விரவி முத்தம் நெடு வெண் மணல் மேற்கொண்டு வெண் திரை
புரவி என்னப்  புதம் செய்து வந்து யுந்து புல்லாணியே —-9-3-7-

புரவி என்னப்  புதம் செய்து-குதிரை போல் தாவும் திரைகள் –

பரவி நெஞ்சே தொழுதும் எழு –
அக்ரமான பேச்சுக்களைச் சொல்லி
அடைவு பாராமல் தொழலாம் படியான
தேசத்து ஏறப் பாரு –
(ராக்ஷசர் குரங்குகள் கரடிகள் அணில்கள் சேவை செய்யும் படியான திவ்ய தேசம் அன்றோ )

போயவன் பாலமாய் –
போய்த் தொழுதும் எழு -என்னுதல் –
போயவன் பக்கலிலே நெஞ்சை வைத்து -என்னுதல் –

இரவு நாளும் இனிக் கண் துயிலாது இருந்து என் பயன்-
இரவும் பகலும் இருந்து
இனிக் கண் உறங்காது ஒழிகிற இத்தால் என்ன பிரயோஜனம்  உண்டு –

அநித்ரஸ் சததம் ராம (ஸூந்தர ) -என்று இவன் இருக்குமது கேட்டு
அதடியாக நாம் -நசமேஸ்தி நித்ரா (ஸூந்தர)-என்று இருக்கும் அன்று அன்றோ அபிமத சித்தி உள்ளது –

அவன் ருசி முன்னாக –
இத்தலை ருசி பண்ணும் அன்று இறே பலத்தோடே வ்யாப்தம் ஆவது –
அவனுடைய ருசி இறே பேற்றுக்கு உடலாக தலைக் கட்டுவது –
இவனுடைய ருசி அவனுடைய விரகத்துக்கு உடலாம் இத்தனை இறே –

ஆனால் பின்னை   அவனுக்கு இரக்கம் இல்லை என்கிறதோ -என்னில்
ஓம் -அப்படி சொல்லக் குறை இல்லை இறே -இப்போது அவன் வாராமையாலே –
இல்லையாகில் வருகைக்கு சக்தி இல்லை -என்னுதல்
சிலருக்கு பர தந்த்ரன் -என்னுதல் -சொல்ல ஒண்ணாது இறே
முறை கெட்டுச் சொல்ல வேண்டும்படியான தசை பிறந்தால்
முறை உடைய அவனுக்கு வரக் குறை என்
தொழுதும் எழு -என்று கொண்டு பழி யாகிறதோ –

விரவி முத்தம் நெடு வெண் மணல் மேற்கொண்டு வெண் திரை –
முகத்தோடே கூட
வெளுத்த மணற்களைக் கலந்து
கீழ் மண் கொண்டு மேல் மண் எறியும்படி-வெளுத்த திரைகள் ஆனவை  –

புரவி என்னப்  புதம் செய்து வந்து யுந்து புல்லாணியே  –
குதிரை தாவுமா போலே தாவி வந்து
தள்ளா  நின்றுள்ள திருப் புல்லாணியை

தொழுதும் எழு –
இருவருக்கும் ஓன்று கொண்டே போது போக்கலாம் படி யான
தேசத்து ஏறப் போவோம் –

——————————————————

(நெஞ்சு நாம் காலக்ஷேப அர்த்தமாக அத்தேசம் தொழப் போனால் –சாதனமாக இல்லாமல் – பழி ஆகாதே என்று
அதில் ஆஷேபம்
நாம் இங்கு விரஹ கிலேசத்துடன் போனால் கண்ட உடன் மேல் விழுந்து அணைக்கத் தோன்றும்
அது சாதனமாக விடுமே -ஆகையால் அவன் வரப் பார்த்து இருக்கும் அத்தனையே )

நிர பேஷரான இவர் ஓர் அபலை இறே -என்று பாராதே
நமக்கு ஸ்நேஹிப்பாரைப்   போலே சலத்தைப் பண்ணினார் ஆயிற்று –

அலமும் ஆழிப் படையும் உடையார் நமக்கு அன்பராய்ச்
சலமதாகித் தகவொன்றிலர் நாம் தொழுதும் எழு
உலவு கானல் கழி யோங்கு தண் பைம்பொழி லூடிசை
புலவு கானல் கழி வண்டினம் பாடு புல்லாணியே —9-3-8-

உலவு கானல் கழி-உலவு கால் நல் கழி

அலமும் –
ஹலத்தைச் சொன்னபடி
இத்தை திவ்ய ஆயுதமாகச் சொல்லக் கடவது இறே

ஆழிப் படையும் உடையார் நமக்கு அன்பராய்ச் சலமதாகித்
சர்வருக்கும் பிராப்யரான தாம்
நம்மை தமக்கு பிராப்யராகக் கொள்ளுவாரைப் போலே
ஸ்நேஹத்தைப் பண்ணினார் ஆயிற்று –

தகவொன்றிலர் –
பரி பூர்ணரான நாம் ஒரு ஸ்திரீ விஷயமாக சலத்தை
பண்ணினோம் என்கிற
இரக்கமும் கூட இன்றிக்கே இருந்தார் ஆயிற்று-
(தகவு இலர் என்னாமல் தகவு ஓன்று இலர் இரக்கமும் இல்லாமல் )

நாம் தொழுதும் எழு-
நாம் நிர்த் தயராக ஒண்ணாதே
சத்ர சாமர பாணிஸ்து லஷ்மணோ ராகவாஅநுஜ-
இளைய பெருமாள் ஒரு கையாலே சத்ரத்தையும்
மற்று ஒரு கையாலே சாமரங்களையும் பிடித்து பரிமாறும் போது
சக்கரவர்த்தி ஆண்ட பரப்பில் அதுக்கு ஓர் ஆள் இல்லாமையால் அன்று இறே
அடிமையில் கலித்தனம் -பசியனாய் – இருக்கிறபடி –
பிரியமாகாத வன்று இவனுக்கு இது பிராப்யம் ஆகாது இறே
இவன்  அவனுக்கு உகப்புச் செய்தால் இறே ஸ்வரூபம் சித்தி யாவது
ப்ரஹர்ஷயிஷ்யாமி-இலே இறே இவன் தனக்கு அந்வயம் –

(நமக்கு ஸ்வரூபம் அத்தலைக்கு ப்ரீதி விளைவிக்கையே
அவன் நிரபேஷன் -இருந்தாலும் –
நாம் தொழுது அல்லது இருக்க மாட்டாமல் தொழ
அது அவனுக்கு ப்ரீதி விஷயம் ஆகும்
இரக்கம் கிளப்ப வேண்டியது இல்லை
ஸ்வரூப சித்திக்காக தொழ வேண்டும் என்றபடி )

உலவு கானல் கழி-
உலவு கால் நல் கழி –
சஞ்சரியா நின்றுள்ள தென்றலை உடைத்தான நல்ல கழி -என்னுதல்
அன்றிக்கே
ஓடா நின்றுள்ள கால்கள் உண்டு -நீரோட்டங்கள்
அவற்றை உடைத்தான நல்ல கழி -என்னுதல்

யோங்கு தண் பைம்பொழிலூடிசை-
வைமாநிகரைப் போலே ( விமானத்தில் உள்ளவரைப் போல் )இருக்கை –
ஆகாச அவகாசம் அடையும் படியாக
ஸ்ரமஹரமாய்
பரந்து இருந்துள்ள பொழிலிலே  –

புலவு கானல் கழி வண்டினம் பாடு புல்லாணியே –
அக் கடல்கரையின் நாற்றம் தட்டாத படிக்கு ஈடாக
சோலை மேல் உயர இருக்கும் யாயிற்று வண்டினங்கள்
தேவர்கள் சம்சார வெக்காயம் தட்டாமல் இருக்குமா போலே
மதுபான மத்தமாய்க் கொண்டு
செருக்கி வருகிற வண்டினங்கள் ஆனவை
அதுக்கு போக்கு வீடாக அங்கே இருந்து இசை பாடா நிற்கும் ஆயிற்று  –
இசை கேட்டால் பொறுக்கும் படியான தேசத்து ஏறப் போவோம் -என்றபடி –

—————————————————–

(இரண்டு நிர்வாகங்கள் -ஸ்வ கத ஸ்வீ காரமாகவும் -பக்தி பரமாகவும்
நமக்கு ஒரு பிரயோஜனமாக நினைத்து உபாயமாக நாம் பற்றுவது -சரணாகதி
பக்தி -சாதனாந்தரம்
கீழ் நெஞ்சு நாமே போய் தொழுவது சாதனமாகமே
அவனே வரட்டும்
அவன் வாராமையால்
தகவு இல்லை
போய் அல்லது தீராது என்று துணிந்த வாறே
நெஞ்சை அறிந்த தோழி -ஸ்வரூபம் சேராமல் செய்ய கூடாது என்று தடுக்க
போவோம் என்று அழைக்கிறாள்
ப்ராப்தாவும் ப்ராபகனும் பிராப்திக்கு உகப்பானும் அவனே
ஸ்வார்த்தமாக -கூடாதே )

செய்யக் கடவது அல்லாதன எல்லாம் செய்து பெறக் கடவோம்
புருஷார்த்தம் -ஸ்வ யத்ன சாத்தியம் என்று இருப்பார் படுவது எல்லாம் படக் கடவோம் –

ஓதி நாமம் குளித்து உச்சி தன்னால் ஓளி மா மலர்ப்
பாத நாளும் பணிவோம் நமக்கே நலமாதலில்
ஆது தாரான் எனிலும் தரும் அன்றியும் அன்பராய்ப்
போதுமாதே தொழுதும் அவன் மன்னு புல்லாணியே —-9-3-9-

ஓளி மா மலர்ப் பாதம் -பிராபகம்
நாளும் பணிவோம்-திருவடிகளே ப்ராப்யம்-உபாயம் -நாம் நாளும் பணிவோம் ஸ்வகத ஸ்வீகாரம் -பக்தி ப்ராப்யம்
அன்பராய்ப் போதும் -சாதனா பக்தராகப் போவோம்

ஓதி நாமம் குளித்து உச்சி தன்னால்
வாயாலே திரு நாமங்களைச் சொல்லக் கடவோம் –
ஆங்கோணைகள் செய்து -( 5-3-9–மடலூர்துமே )-என்னக் கடவது இறே –
அதாகிறது
அவன் எதிரே வாரா நின்றால்
நாம்  பிரணயிநியாய் நிற்கை அன்றிக்கே
கும்பிட்டுக் கொடு நிற்க கடவோம் -என்கிறாள் –

ஓளி மா மலர்ப் பாதம் –
திருவடிகளில் போக்யதை கண்டால் வணங்கத் தான் போகாது போலே காணும்
அதாகிறது
அனுபவிக்க காலம் போரும் அத்தனை அன்றி
முறை உணர்ந்து திருவடிகளிலே விழுகைக்கு அவசரம் இல்லை
பிராப்யம் என்று இருக்கை தவிர்ந்து
ப்ராபகத்வ புத்தி பண்ணுவோம் –

நாளும் பணிவோம் –
சாதன விச்சேதத்தில்
பல விச்சேதம் வரும் என்று இருப்பார்
படுவது எல்லாம் படக் கடவோம் –

இனி அத்தலைக்கு நன்மை பார்க்குமது எல்லாம் தவிர்ந்து
நமக்கே நன்மை பார்க்கும் இத்தனை –
நமக்கே நலமாதலில்
இதுக்கு முன்பு நம் இழவுகளும் பாராதே
அவனுக்கே நன்மை பார்த்து போவோம் இறே –

ஆது தாரான் எனிலும் தரும் –
எல்லாம் செய்தாலும் அவனை பக்தி லப்யன் அன்று என்ன ஒண்ணாதே
ஒன்றும் தாரேன் -என்று இவன் பிரதிஞ்ஞை பண்ணி இருந்தாலும்
பக்தி லப்யன் என்கிற வசனத்தை மாற்ற ஒண்ணாதே –

அன்றியும் அன்பராய்ப் போதும்  –
அவன் பக்தி பண்ண விருக்குமது தவிர்ந்து
இனி நாம் பக்தராய் போவது
பேறு நம்மதானால் அதுக்கு ஈடான சாதனமும் நம் தலையில் ஆக வேண்டாவோ –

மாதே அவன் மன்னு புல்லாணியே –
அவனை ஓரிடத்தே பதி கொண்டு இருக்க பண்ணுகிறது என்
அவன் எதிரே கிளர்ந்து வரும்படி நாம் போகுதும் –
இவள் செய்கிறவை இவளுக்கு ஸவபாவம் என்று இருக்கில் அன்றோ
இவனுக்கு ஆறி இருக்கலாவது
சாதனம் என்று புத்தி பண்ணினால் பின்னை அங்கு அவனுக்கு தங்க ஒண்ணாது இறே –

(இதுவரை ஸ்வகத ஸ்வீ கார பரமாக வியாக்யானம்-இனி சாதனா பக்தி பரமாக வியாக்யானம் )

ஓதி நாமம் இத்யாதி
அவன் பண்ணின பக்தி கொண்டு  பெறலாம் என்று இருந்தோம்
அஃது  அல்ல விறே சாஸ்த்ரங்களில் சொல்லுகிறபடி
இனி சாஸ்த்ரோக்தமான பக்த்யாதி உபாயங்களை
கண் அழிவு அற அனுஷ்டித்து
அவனைப் பெறக் கடவோம் -என்கிறாள் –

அவனுடைய அங்கீ காரத்தாலே பெறலாம் என்னும் விஸ்வாசம் கொண்டு இருந்தோம் –
அது கார்யகரம் ஆகாத பின்பு இனி ஏதேனும் ஒரு க்ரியா மாத்ரத்தை பற்றும் அத்தனை இறே-

ஓதி நாமம் –
எல்லாம் செய்தாலும் -சததம் கீர்த்த யந்த -என்கிறதுக்கு ஒரு பலம் இன்றிக்கே இராது இறே
(இரக்கம் பலம் கொடுத்து இருக்க வேண்டும் -அது இல்லை ஆனதால் கீர்த்தனை செய்து பெறப் பார்ப்போம் )

குளித்து –
அவன் விஷயீ காரத்தாலே பெறுமது தப்பிற்று இறே
இனி சாதநானுஷ்டானம் கொண்டே பெற வேண்டி இருந்ததே
அவை அனுஷ்டிக்கும் போது அதிகாரிகள் ஆக வேண்டுமே
அதுக்கு ஈடாக குளிக்கக் கடவோம்
உறாவி இருந்த நம் தலைகளைக் கொண்டு அவனைப் பணியக் கடவோம் –

ஒளி மலர்ப் பாதம் –
பிராப்யமான அதுவே பிராபகம் என்று இருக்குமது தவிர்ந்து
இத்தை நம் தலையிலே ஏறிட்டுக் கொள்ளக் கடவோம்
அதுக்கு ஈடாக இரண்டு ஆகாரம் உண்டே ஆகிலும் போக்யமான ஆகாரம் ஒன்றுமே
உள்ளது என்று நினைத்து இருக்கக் கடவோம் –
(ப்ராப்யமாக மட்டுமே கொண்டு பக்தியை உபாயமாகக் கொள்வோம் என்றபடி )

இனி நாளும் பணிவோம் –
தேக யாத்ரையில் அந்வயிக்கும் அன்று இறே -அவ்வடைவு
தப்பின வன்றைக்கு பிரத்யவாயம் அன்றிக்கே ஒழிவது-
கெடுவாய் அரை ஷணம் தாழ்க்கும் காட்டில் குணாதிக வஸ்துவை
இங்கனம் அழிக்கலாமோ என்று தோழி சொல்ல

நமக்கே நலமாதல் –
ஓம் காண்-இதுக்கு  முன்பு அடங்க அவ்விஷயத்தை   நோக்கி யுண்டாயிறே
இனி உள்ள காலம் எல்லாம் நமக்கே நன்மையை பார்க்கக் கடவோம்
தத் ததச்ய சத்ருசம் பவேத் -என்று இருந்து நாம் ஜீவித்து இருந்தது அமையும்-

ஆது தாரான் எனிலும் –
எல்லாம் செய்தாலும் இவனால்  பக்த்யா த்வன்னன்யா சக்ய-என்கிறதை தவிர்க்க ஒண்ணாதே –
தன்னையே பற்றிப் பெற இருப்பார்க்கு அன்றோ தன்னைக் கொடாது ஒழியல் ஆவது  –

அன்றியும் அன்பராய் –
அது எல்லாம் கிடக்க நமக்குத் தான் பேற்றுக்கு வழி இது காண்
தந்திலன் ஆகில் தவிருகிறான்
நாம் நம் ஸ்வரூபத்தை அழித்துக் கொடு நின்றால் பின்பு அவன் ஜீவிக்கும் படி காண்கிறோம்

இவ்வன்பு தனக்கு உபய ஆகாரத்வம் உண்டு இறே
அதில் இப்போது பிரகரணத்துக்கு சேரும்படியாக சாதனத்தில் கொள்ள அமையும்
இவள் இப்படி பாரிக்கச் செய்தேயும் பிற்காலித்தாள்  போலே காணும் இவள் –

மாதே போது-என்கிறாள்
அவன் மன்னு புல்லாணியே
எல்லாம் செய்தாலும் அவன் ஆசனத்தை கிளப்பும் போது
நம் ஆற்றாமை வேணும் காண் –

—————————————————

இலங்கு முத்தும் பவளக் கொழுந்தும் எழில் தாமரைப்
புலங்கள் முற்றும் பொழில் சூழ்ந்து அழகிய புல்லாணி மேல்
கலங்கல் இல்லாப் புகழான் கலியன் ஒலி மாலை
வலம் கொள் தொண்டர்க்கு இடமாவது பாடில் வைகுந்தமே –9-3-10-

இலங்கு முத்தும் பவளக் கொழுந்தும் எழில் தாமரைப் புலங்கள் முற்றும் பொழில் சூழ்ந்து அழகிய புல்லாணி மேல் –
இந்த தேச வை லஷண்யம் ஆயிற்று இவர் தம்மை இங்கன் கவி பாடுவித்தது –
உஜ்ஜ்வலமாகா நின்றுள்ள முத்தும்
அழகிய பவளக் கொழுந்தும்
தன் பரப்பு மாறச் செவ்வி பெற அலர்ந்த தாமரைப் பொய்கைகளையும் உடைத்தான
சோலைகளாலே சூழப் பட்ட
திருப் புல்லாணி மேலே யாயிற்று கவி பாடிற்று –

கலங்கல்  இல்லாப் புகழான்-
கவி பாடினவர்  தம்முடைய
கலியன் ஒலி மாலை ஸ்வபாவம் இருக்கிற படி

பர ஹிம்சை பண்ணி திரியும் அதில் காட்டில்
அஹங்கார கர்ப்பமான கிரியா கலாபங்களாலே பெற இருக்குமது நன்றாயிற்று
அது தன்னையும் கழித்து
அவன் தன்னாலே அவனை பெருமதே நன்றாக சொல்லி
அத்தையும்
கீழில் அவையோடு ஒக்கக் கழித்து
பிராப்யத்தில்  த்வரையால் வந்த அலமாப்பை உடையார் ஆகையாலே வந்த புகழ் ஆயிற்று
புகழுக்கு கலக்கம் இல்லாமை யாகிறது இவ்வளவும் வருகை யாயிற்று –

கலியன் ஒலி மாலை –
முநி ப்ரணீதம் -என்னுமா போலே ஆப்த வசனமாய் இருக்கை-

வலம் கொள் தொண்டர்க்கு இடமாவது பாடல் வைகுந்தமே –
வலம் கொள்ளுகை-வளைய வருகை
இப்பத்து பாட்டையும் அதிகரிக்கவுமாம்
அன்றிக்கே ஒரு பாட்டை அதிகரிக்கவுமாம்
அதில் அர்த்தானுசந்தானம் பண்ணவுமாம்
அதில் இசையை அப்யசிக்கவுமாம் –
இவ்விசை தன்னை ஒருவன் பாடா நின்றால் அதில் அசஹமானனாம் அதன்றிக்கே ஒழியுமுமாம்  –
ஏதேனும் ஒரு ஆகாரத்தில் அந்வயமே வேண்டுவது –

அவர்களுக்கு வாசஸ் ஸ்தான தேசம் –
துக்க கந்த ரஹீதமான நித்ய விபூதியே

இத்தை இங்கே அப்யசிக்க
அவர்கள் இங்குத்தை தனிமை தீர
அர்ச்சிராதி மார்க்கமே அங்குள்ளார் கொண்டாடப் போய்
நித்ய விபூதியிலே புக்கு
நித்ய அனுபவம் பண்ணப் பெறுவார்  –

———-

ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.

தன்னளவில் நைந்து நொந்து தன்னிலைக்கு அல்ல செய்து
பின்னும் தொழுது தான் புல்லாணி சென்று சேர
எண்ணியமை கூறி இன்னாமை உணர்த்தும் ஆலி நாடன்
பண் எண்ண வானோர்க்கு ஆவார் -83-

அக்ருத்ய க்ருத்யம் -ஓதி நாமம் குளித்து உச்சி தன்னால்
ஒளி மா மலர் பாத நாளும் பணிவோம் நமக்கே நலமாதலின் –
பண் -ராகம் -குன்றா இன்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை –
செவிக்கினிய செஞ்சொல் கேட்டு வானவர் ஆரார் அன்றோ –

———————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: