Archive for May, 2014

ஸ்ரீ பெரிய திருமொழி-10-1—ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம்-

May 26, 2014

ஒரு நல் சுற்றம் -பிரவேசம் –

தன்னை உகந்தாருக்கு தான் ஆஸ்ரயநீயனாய்
திருக் கோட்டியூரிலே சுலபன் ஆனபடியை  அனுசந்தித்து
தமக்கு நித்ய கைங்கர்யம் பண்ண வேணும் என்னும் அபேஷையிலே கண் அழிவு இல்லாமையாலும் –
அவன் தன்னை உகந்தாரை பரம பதத்திலே கொடு போய்
நித்ய கைங்கர்யத்தைப் பண்ணுவித்துக் கொள்ளும்
நிருபாதிக பந்துவாகையாலும்
திருப்பதிகளை அனுபவித்த ஆழ்வார்
பரம பதத்துக்கும் போக்கு அணித்து என்று அத்யவசித்து –
நாவோடையான பெண்
பிறந்தகத்தின் நின்றும் புக்ககத்துக்கு போம் போது
ஜன்ம பூமியில் உள்ள
உறவுமுறையார் உள்ளிடம் எங்கும்  புக்கு முகம் காட்டுமா போலே
குணாநுபவம் பரம பத்துக்கும் ஒக்குமே
ஆகையாலே சில திருப் பதிகளிலே புக்கு -இங்கே புக்கோம்
இனி இன்ன திருப் பதியிலே புக வேணும் என்று இப்படியே
உகந்து அருளின தேசங்கள் எங்கும் முகம் காட்டப் பார்க்கிறார் –

——————————————

நமக்கு பிராப்ய பூமியைத் தருவானாய்
தானே பிராப்யன் ஆனவனை
திரு நீர் மலையிலே கண்டோம்
இனி திருக் கண்ண மங்கையிலே  காணக் கடவோம் –
என்கிறார் –

ஒரு நல் சுற்றம் எனக்கு உயிர் ஒண் பொருள்
வரு நல் தொல் கதியாகிய மைந்தனை
நெருநல் கண்டது நீர் மலை இன்று போய்
கரு நெல் சூழ் கண்ண மங்கையுள் காண்டுமே –10-1-1-

ஒரு நல் சுற்றம் –
தானே ஆபத்துக்கு வந்து உதவும்
சர்வவித பந்துவான ஸ்வ பாவனுமாய் –
சுற்றம்
நல் சுற்றம்
ஒரு நல் சுற்றம்
குடல் துவக்கு –
தன்னை அழிய மாறியும் ரஷிககும் சுற்றம்
சுற்றம் என்றால் வேறு ஒரு இடத்தில் போகாச் சுற்றம் – சுற்றம் -சுற்றம் அல்லாதாரை  வ்யாவர்த்திக்கிறது
நல் சுற்றம் -ஸ்வ பிரயோஜனரை வ்யாவர்த்திக்கிறது
ஒரு நல் சுற்றம் -ஒரோ பிராப்தி அன்றிக்கே எல்லா பிராப்தியும் ஏக ஆஸ்ரயத்திலேயாய்  இருக்கிறபடி
மாத்ருத்வம் பிதாவுக்கு இல்லை
பித்ருத்வம் மாதாவுக்கு இல்லை –

எனக்கு உயிர் –
எதனையேனும் பந்துக்கள் எல்லாரும் கூட உண்டானாலும்
தான் தனக்கானபடியாக மாட்டார்கள் இறே-
சுக துக்கங்கள் தனக்கே அனுபவிக்க வேணும் இறே
எனக்கு ஆத்மாவுமாய் –

ஒண் பொருள் –
இது சத்தையை உண்டாக்கும் அர்த்தம் –
தான் அர்த்திக்கும் இறே அர்த்த நிமித்தமாக
புருஷார்த்த உபயோகியான அர்த்தமுமாய் –

வரு நல் தொல் கதி-
இதுக்கு முன்பு சம்சாரத்தில் இருக்கும் படி
இனி பரமபத பிராப்தி இருக்கும்படி சொல்லுகிறது
இங்கே அர்த்த புருஷார்த்தம் தந்து விடுகை அன்றிக்கே
சரீர சமனந்தரம் வரக் கடவதாய்-
அற நன்றான தொல் கதி   –
ஆத்மானுபவம் அன்றிக்கே
இவ்வாத்மாவின் உடைய ஸ்வரூபத்துக்கு அனுரூபமான பிராப்ய பூமியைத் தருவானாய்
தானே பிராப்யமுமாய் –
தொல் கதி –
ஸ்வா பாவிகமாய் இருந்துள்ள
ஸ்வரூப ஆவிர்பாவம் –

யாகிய-மைந்தனை-
நவ யௌவன  யுக்த விக்ரகத்தை உடையவனை –
யாகிய-மைந்தனை-
சர்வ சக்தி பதார்த்தங்களிலும் விசஜாதீயமான மிடுக்கை உடையனாய்
உபாயமானவனை -என்னுதல்
எல்லா புருஷார்த்தங்களையும் தானே தர வல்ல மிடுக்கன்
சர்வ சக்தியாகை இறே -உபாய பாவம் தானே நிர்வஹிக்கக் கடவனாய் இருக்கிறது –

நெருநல் கண்டது நீர் மலை இன்று போய் கரு நெல் சூழ் கண்ண மங்கையுள் காண்டுமே-
நேற்று திரு நீர் மலையிலே கண்டோம்
இன்று போய் கருவடைந்த நெற்பயிரோடு கூடின
வயலை உடைய
திருக் கண்ண மங்கையிலே காணக் கடவோம்
இன்று அது காண்பதும் காணக் கடவதும் இவ்வோ இடங்களாய் இருக்கை –
கரு நெல் சூழ் கண்ண மங்கை-
நித்தியரும் முக்தரும் என்றும்
பஞ்ச விம்சதி வார்ஷிகராய் இருக்குமா போலே
இங்குத்தை வயலும் நித்யமாக கருவடைந்த பயிராய் இருக்கை
அங்கு உள்ளது எல்லாம் இவருக்கு பிராப்யமாய் இருக்கிறபடி –
அனுபூதமாய்
ஸ்ம்ருதி விஷயமாய் இருப்பதும்
அனுபாவ்யமாய் இருப்பதும்
இவருக்கு உகந்து அருளின நிலம் –

———————————————–

பொன்னை மா மணியை யணி யார்ந்ததோர்
மின்னை வேங்கடத் துச்சியில் கண்டு போய்
என்னை யாளுடை யீசனை யெம்பிரான்
தன்னை  யாம் சென்று காண்டும் தண் காவிலே —10-1-2-

சர்வைஸ் ஸ்ப்ருஹணீயனானவை
திருமலையிலே கண்டோம் –
இனி திருத் தண் காவிலே சென்று காணக் கடவோம் –
என்கிறார் –

பொன்னை மா மணியை யணி யார்ந்ததோர் –
பொன் போலே  ஸ்ப்ருகணீயனாய்
பெரு விலையனாய்
ஸ்ரமஹரமான மணி போலே ஸ்லாக்கியமானவனாய்  –

மின்னை வேங்கடத் துச்சியில் கண்டு –
அழகு மிக்கு ஏக ரூபமான மின் போலே
உஜ்ஜ்வலனானவனை
திருமலை உச்சியின் மேலே கண்டு –

போய்-என்று மேலுக்கு

என்னை யாளுடை யீசனை யெம்பிரான் –
இன்று போய் என்னை அடிமையாக உடையவனாய்
எனக்கு நியந்தாவாய் –
எனக்கு உபாகாரகனுமாய் -ஆனவனை –

தன்னை  யாம் சென்று காண்டும் தண் காவிலே –
நாம் சென்று திருத் தண் காவிலே காணக் கடவோம் –

——————————————

வேலை யாலிலைப் பள்ளி விரும்பிய
பாலை யாரமுதினைப் பைந்துழாய்
மாலை யாலியில் கண்டு மகிழ்ந்து போய்
ஞாலம் உன்னியைக் காண்டும் நாங்கூரிலே —10-1-3-

வடதள சாயி யானவனை திருவாலியிலே கண்டோம் –
இனி
திரு நாங்கூரிலே சென்று காணக் கடவோம்
என்கிறார் –

வேலை யாலிலைப் பள்ளி விரும்பிய –
கடலிலே
ஒரு பவனாய் இருப்பதொரு ஆலிலையிலே
கண் வளர்ந்து அருளுகையை விரும்பின
சர்வ வித போக்யன் ஆனவனை  –

பாலை யாரமுதினைப் –
கண் வளர்ந்து அருளுகை
தமக்கு பால் போலவும் அமிர்தம் போலவும் ரசித்த படி –

பைந்துழாய் மாலை -யாலியில் கண்டு மகிழ்ந்து போய்
அந்த ரஸ்யதையில் உண்டான ஏற்றம் போலே
ஐஸ்வர்ய சூசகமாய்
அழகிதான   திருத் துழாயை  உடைய சர்வேஸ்வரனை –
திரு வாலியிலே கண்டு உகந்து போய் –
ஜகத்துக்கு உத்தேயன் ஆனவனை –

ஞாலம் உன்னியைக் காண்டும் நாங்கூரிலே   –
வரையாதே இன்னார் என்னாமல் ஆஸ்ரயிக்கும் படி
இருக்கிறவனை திரு நாங்கூ ரிலே
காணக் கடவோம் –

———————————

துளக்கமில் சுடரை அவுணன்  உடல்
பிளக்கும் மைந்தனைப் பேரில் வணங்கிப் போய்
அளப்பில் ஆரமுதை அமரர்க்கு அருள்
விளக்கினைச் சென்று வெள்ளறை காண்டுமே —10-1-4-

ஸ்ரீ ப்ரஹ்லதா ஆழ்வானுக்கு விரோதியான ஹிரண்யனை போக்கினவனை
திருப் பேரிலே கண்டோம்
இனிப் போய் திரு வெள்ளறையிலே காணக் கடவோம்
என்கிறார் –

துளக்கமில் சுடரை அவுணன்  உடல் பிளக்கும் மைந்தனைப் பேரில் வணங்கிப் போய்-
காற்றால்
மற்று ஒன்றால் விச்சேதிக்கப் போகாதே
ஜ்வலந்தம் -என்கிறபடியே
ஏக ரூபமான ஒளியை உடையனாய்
ஹிரண்யன் உடலைப் பிளக்க வல்ல சர்வ சக்தியை
திருப் பேரிலே வணங்கி
போய் –

அளப்பில் ஆரமுதை அமரர்க்கு அருள் விளக்கினைச் சென்று வெள்ளறை காண்டுமே –
அபரிச்சேத்யமான போக்யதையை உடையனாய்
அத்தை அயர்வறும் அமரர்களுக்கு அனுபவிக்கக் கொடுத்து
அத்தாலே உஜ்ஜ்வலனானவனை –
அமரர்க்கு அருள் விளக்கினைச் –
நித்ய சூரிகளுக்கு பிரகாசமாய் இருப்பதோர்
அருளாய் இருக்கிறவனை
திரு வெள்ளறையிலே காணக் கடவோம் –

—————————————–

சுடலையில் சுடு நீறன் அமர்ந்ததோர்
நடலை தீர்த்தவனை நறையூர்க் கண்டு என்
உடலையுள் புகுந்து உள்ளம் உருக்கி யுண்
விடலையைச் சென்று காண்டும் மெய்யத்துள்ளே —10-1-5-

ருத்ரனுடைய சாபத்தைப் போக்கினவனை
திரு நறையூரிலே கண்டோம்
இனிப் போய்
திரு மெய்யத்திலே காணக் கடவோம்
என்கிறார் –

சுடலையில் சுடு நீறன் –
ஸ்மசாந பூமியிலே பஸ்மோத் தூளியன் ஆகிறது –
சுடலையில் சுட்ட சாம்பலை பூசி இருக்கிறவன் -என்றபடி
அவன் –

அமர்ந்ததோர் நடலை தீர்த்தவனை –
அனுபவித்த கிலேசத்தை தவிர்த்தவனை –

நறையூர்க் கண்டு –
திரு நறையூரிலே கண்டு –

என்உடலையுள் புகுந்து உள்ளம் உருக்கி யுண் விடலையைச் சென்று காண்டும் மெய்யத்துள்ளே
என் சரீரத்துக்கு உள்ளே புகுந்து
நெஞ்சை உருக்கி
உண்கிற வித்தகனை திரு மெய்யத்திலே காணக் கடவோம்
விடலை -என்று பாலை வனத்தில் தலை மகனைச் சொல்லுகிறது
இப்பாலையான பூமியை தனக்கு இருப்பிடம் ஆக்கின படியாலே
பாலை நிலமான சம்சாரத்துக்கு தலைவன் ஆனவனை
-தம்முடைய ஹிருதயத்தில் காட்டில் பாலை நிலம் இல்லை என்று இருக்கிறார் –

——————————————————–

வானையார் அமுதம் தந்த வள்ளலைத்
தேனை நீள் வயல்  சேறையில் கண்டு போய்
ஆனை வாட்டி யருளும் யமரர் தம்
கோனை யாம் குடந்தை சென்று காண்டுமே —10-1-6-

பிரயோஜனாந்த பரருக்கும் அபேஷிதம் செய்யும்
பரம உதாரனை
திருச் சேறையிலே கண்டோம்
இனி
திருக் குடந்தையிலே காணக் கடவோம்
என்கிறார் –

வானையார் அமுதம் தந்த வள்ளலைத்
தேவ லோகம் க்ருதக்ருத்யமாம் படி
அம்ருதத்தைத் தந்த உதாரனாய்

தேனை –
தன்னை உகந்தார்க்கு தானே போக்யம் ஆனவனை –

வானையார் அமுதம் தந்த வள்ளலைத் தேனை –
நித்ய சூரிகளுக்கு தன்னைக் கொடுக்குமா போலே
எனக்குத் தன்னைத் தந்த உபகாரகனை –
தேன் போலே ரஸ்யன் ஆனவனை –

நீள் வயல்  சேறையில் கண்டு –
நீண்ட வயலை உடைய திருச் சேறையிலே கண்டு –

போய் –

ஆனை வாட்டி யருளும் யமரர் தம் கோனை யாம் குடந்தை சென்று காண்டுமே
குவலயா பீடத்தை கொன்று
ப்ரஹ்மாதிகளுக்கு குடி இருப்பு கொடுத்து
அவர்களுக்கு தானே சேஷி என்னும் இடத்தை பிரகாசிப்பித்தவனை
யான் திருக் குடந்தையில் சென்று காண்டுமே –

————————————————

கூந்தலார் மகிழ் கோவலனாய் வெண்ணெய்
மாந்து அழுந்தையில் கண்டு மகிழ்ந்து போய்
பாந்தள் பாழியில் பள்ளி விரும்பிய
வேந்தனைச் சென்று காண்டும் வெக்கா வுளே  —10-1-7-

ஸ்ரீ கிருஷ்ணனாய்
அனுகூல ஸ்பர்சம் உள்ள வெண்ணெயை விழுங்கினவனை
திருவழுந்தூரிலே  கண்டோம்
இனிப் போய்
திரு வெக்காவில் காணக் கடவோம் –

கூந்தலார் மகிழ் கோவலனாய் வெண்ணெய் மாந்து அழுந்தையில் கண்டு மகிழ்ந்து
நல்ல கூந்தலை உடைய ஸ்திரீகளுக்கும் போக்யனாய்
கோவலனாய் வெண்ணெய் அமுது செய்து
வர்த்திக்கிறவனை
திருவழுந்தூரிலே கண்டு உகந்து

போய்-

பாந்தள் பாழியில் பள்ளி விரும்பிய வேந்தனைச் சென்று
பாந்தள் -என்று -பாம்பு
பாழி -என்று -படுக்கை
திருப் பாற் கடலிலே
திரு வநந்த ஆழ்வான் ஆகிற படுக்கையிலே
கண் வளர ஆதரித்த
சர்வ ரஷகனானவனை –

வெக்காவில் துயில் அமர்ந்த வேந்தனை – என்னக் கடவது இறே
காண்டும் வெக்கா வுளே-
கண் வளரக் காணலாவது திரு வெக்கா உள்ளே –

——————————————-

பத்தராவியைப் பான்மதியை யணித்
தொத்தை மாலிருஞ்சோலை தொழுது போய்
முத்தினை மணியை மணி மாணிக்க
வித்தினைச் சென்று விண்ணகர் காண்டுமே –10-1-8-

தன் திருவடிகளிலே நல்லாருக்கு ஆத்மாவனவனை
தெற்குத் திருமலையிலே கண்டோம்
இனிப் போய்
திரு விண்ணகரிலே காணக் கடவோம்
என்கிறார் –

பத்தராவியைப் –
தன் திருவடிகளில் நல்லார் ஆனவர்களுக்கு ஆத்மாவானவனை
தாரகனாய் தன்னை ஒழிய செல்லாத படி இருக்கும் -என்கை-
அன்றிக்கே
ஜ்ஞாநீத்வாத் மைவமேமதம் -என்கிறபடியே
ஸ்நேஹிதர்களாய் இருப்பாரை  தனக்கு
தாரகமாய் உடையவனாய் இருக்கும் -என்னுதல்

ஆவியாக கண்ணுக்கு தோற்றாத படி இருக்கை அன்றிக்கே
பான்மதியை –
மறுவற்ற சந்தரனைப் போலே
சதா த்ரஷ்டவ்யனாய்
பூமிக்கு எல்லாம் ஆப்யாயனம் பண்ணுமவனை

யணித்தொத்தை –
ஆபரண மாலையை
பொன்னரி மாலையைப் போலே
அன்றிக்கே
மணித் தொத்தை –
நீல மணி போலே ஸ்ரமஹரமான வடிவை உடையவனை –

மாலிருஞ்சோலை தொழுது போய்
தெற்கு திருமலையிலே கண்டு போய் –

முத்தினை மணியை மணி மாணிக்க வித்தினைச் சென்று விண்ணகர் காண்டுமே –
முத்து போலே
உடம்பிலே அணைந்தால் விடாய் கெடும்படி
குளிர்ந்து இருக்குமவனை
நீல மணி போலே கண்ணுக்கு ஸ்ரமஹரமான வடிவை உடையனாய் இருக்கை
பெரு விலையனான மாணிக்கம் போலே  –
தர்ச நீயமாய் இருக்கும் வடிவு அழகு அன்றிக்கே
இதுக்கு எல்லாம் சர்வ காரண பூதனாய் இருக்குமவனை
திரு விண்ணகர் காண்டுமே –

——————————————-

கம்ப மா களிறு அஞ்சிக் கலங்க வோர்
கொம்பு கொண்ட குரை கழல் கூத்தனைக்
கொம்புலாம் பொழில் கோட்டியூர்க் கண்டு போய்
நம்பனைச் சென்று காண்டும் நாவாயுளே  ———————10-1-9-

குவலயா பீடத்தின் கொம்பைப் பறித்தவனை
திருக் கோட்டியூரிலே கண்டு போய்
திரு நாவாயிலே காணக் கடவோம்
என்கிறார் –

கம்ப மா களிறு அஞ்சிக் கலங்க வோர் கொம்பு கொண்ட
குரை கழல் கூத்தனைக்
தன்னைக் கண்டாருக்கு நடுங்க வேண்டும் படியாய்
பெரிய வடிவை உடைய குவலயா பீடம் –
தன்னைக் கண்டார் படும் அத்தை தான் பட்டு
அஞ்சிக் கலங்கிப் போம் படி
அதன் கொம்பை அநாயாசேன வாங்கி –
ஒளியோடு கூடி வீரக் கழலை உடையவனாய் –
தர்ச நீயமாக நடந்தவனை
அன்றிக்கே
மத்தமாய் -கம்பத்தை பிடுங்கிக் கொண்டு சஞ்சரிக்கிற
ஆனையானது பயப்பட்டு குலையும்படி
அதன் கொம்பை பறித்து
அக்கொம்புகளை கையிலே ஆயுதமாகக் கொண்டு
கம்சன் மற்றையாரைத் தொடர்ந்து கொடு திரிகிற போது
ஆபரணங்களால் வந்த த்வனியை உடைத்தான
திருவடிகளை வீசிக் கொண்டு நடந்த போது
வல்லார் ஆடினால் போலே இருந்தபடி –

கொம்புலாம் பொழில் கோட்டியூர்க் கண்டு போய்நம்பனைச் சென்று காண்டும் நாவாயுளே  –
நித்ய வசந்தமாய்
தழைத்த பொழிலை உடைய
திருக் கோட்டியூரிலே கண்டு போய்-
எல்லா தசைகளிலும் இவ்வாத்மாவுக்கு தஞ்சமானவனை
தன்னை விஸ்வசித்தார் உகக்கும்
திரு நாவாயிலே காண்டும் –

———————————————-

பெற்றம் ஆளியைப் பேரில் மணாளனைக்
கற்ற நூல் கலிகன்றி  யுரை செய்த
சொல் திறமிவை சொல்லிய தொண்டர்க்கு
அற்றமில்லை அண்டம் அவர்க்கு ஆட்சியே —10-1-10-

பெற்றம் ஆளியைப் பேரில் மணாளனைக் –
பெற்ற -என்று பெருமையாய்
மாளிகைக்கு விசேஷணம் ஆகவுமாம்
பெற்றம் ஆளியை -என்ற பாடம் ஆகில்
பசுக்களை நோக்குமவன் -என்றது –

கற்ற நூல் கலிகன்றி  யுரை செய்த –
திரு மந்த்ரம் கற்ற இடத்தில் கற்கும் இத்தை இறே அல்லாதவையும்

சொல் திறமிவை சொல்லிய தொண்டர்க்கு –
சாஸ்திர மரியாதை தப்பாத படி
சொன்ன சப்த ராசி
ரத்ன குவை போலே –
இவை சொன்ன ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு

அற்றமில்லை அண்டம் அவர்க்கு ஆட்சியே –
விச்சேதம் இல்லை –
நச புனராவர்த்ததே
ஆண்மின்கள் வானகம் -என்கிறபடியே
நித்ய அனுபவம் பண்ணலாம் தேசத்தை ஆளுவார்கள் –

——————————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பெரிய திருமொழி-9-10—ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம்-

May 26, 2014

எங்கள் எம்மிறை -பிரவேசம் –

சர்வ அபேஷித பிரதானனாய்க் கொண்டு
திருமலையிலே வந்து நிற்கிற நிலையை
அனுசந்தித்தார் -கீழ் –
அத்தனை பொதுவான நிலை தவிர்ந்து
ஆஸ்ரிதர்க்கே ஸ்வயமாகக் கொண்டு
திருக் கோட்டியூரிலே எழுந்து அருளி நிற்கிற நிலையை அனுசந்திக்கிறார் –
அவன் பண்டு -பெற்ற தமப்பன் பகையாக
ஸ்ரீ பிரஹலாத ஆழ்வானுக்கு உதவி
அவன் விரோதியைப் போக்கி
அதிரும் கழல் பொரு தோள் இரணியன் ஆகம் பிளந்து அரியாய்
உதிரம் அளந்த கையோடே நிற்கிற தேசம் என்றும் –
அவன் தானே அநேகம் அவதாரங்களைப் பண்ணி ஆஸ்ரிதர்க்கு உதவினவன் என்றும் நினைத்து
அத்தனை பொதுவான நிலை தவிர்ந்து
ஆஸ்ரிதர்க்கே ஸ்வயமாகக் கொண்டு
திருக் கோட்டியூரிலே எழுந்து அருளி இருக்கிறவனுடைய
சௌலப்யத்தை அனுசந்தித்து
ப்ரீதராய் அனுபவிக்கிறார் –
ப்ரஹ்லாதிகளுக்கு  -மத்தஸ் சர்வம் அஹம் சர்வம் -என்னலாம்படி
ஹிருதயத்தை விடாதே இருந்து
பிரசாதத்தைப் பண்ணுமவன்
திருக் கோட்டியூரிலே சந்நிஹிதன் ஆனான் -என்கிறார் –

—————————————————————

எங்கள் எம்மிறை யெம்பிரான் இமையோர்க்கு நாயகன் ஏத்த அடியவர்
தங்கள் தம் மனத்துப் பிரியாது அருள் புரிவான்
பொங்கு தண்ணருவி புதம் செய்யப் பொன்களே சிதறும் இலங்கொளி
செங்கமல மலரும் திருக் கோட்டியூரானே —9-10-1-

எங்கள் எம்மிறை –
எங்களிலே விரிந்த சொல் -யெம் -என்று
எங்கள் ஸ்வாமி -என்றபடி –

யெம்பிரான் –
உபகாரகன் –

இமையோர்க்கு நாயகன் –
அயர்வறும் அமரர்கள் அதிபதி –
அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இருந்து
ஆஸ்ரிதரான எங்களுக்கு
ஸ்வாமியுமாய்-உபகாரகனுமாய் –

ஏத்த அடியவர் தங்கள் தம் மனத்துப் பிரியாது அருள் புரிவான் –
அடியவர் தங்கள் -என்றது -அடியவர்க்கு -என்றபடி
தம் திரு நாமத்தைச் சொல்லி ஏத்தும் படியாக
நெஞ்சை பிரியாதே இருந்து
அவர்களுக்கு பிரசாதத்தைப் பண்ணுமவன் –

பொங்கு தண்ணருவி புதம் செய்யப் பொன்களே சிதறும் -இலங்கொளி செங்கமல மலரும் திருக் கோட்டியூரானே

பொங்கு -என்று மேலுக்கு –
புதம் -அம்புதம் -ஆகிறது மேகம் –
கிளர்ந்து ஸ்ரமஹரமான அருவிகள் நீர் மாறாதே
ஒழுகுமா போலே
புதம் பொன்களே சிதற –
மேகம்  பொன்களையே சிந்த –
அத்தாலே மிக்க ஒளியை உடைத்தாய்
செந்தாமரைகள் மாறாதே அலர்ந்த
திருக் கோட்டியூரிலே சந்நிஹிதன் ஆனவன் –

——————————————-

எவ்வ நோய் தவிர்ப்பான் எமக்கு இறை இன்னகைத் துவர்வாய் நிலமகள் தம்
செவ்வி தோய வல்லான் திரு மா மகட்கு இனியான்
மௌவல் மாலை வண்டாடும் மல்லிகை மாலையோடும் அணைந்த மாருதம்
தெய்வ நாற வரும் திருக் கோட்டியூரானே —9-10-2-

நம்முடைய துக்கங்களை எல்லாம் போக்குகைக்காக
பிராட்டிமாரோடே கூட
திருக் கோட்டியூரிலே சந்நிஹிதன் ஆனான்
என்கிறார் –

எவ்வ நோய் தவிர்ப்பான் எமக்கு இறை –
எனக்கு வகுத்த் ஸ்வாமி யாகையாலே
நம்முடைய துக்கா வஹமான வியாதியைப் போக்கும் ஸ்வபாவனாய் —

இன்னகைத் துவர்வாய் நிலமகள் தம் செவ்வி தோய வல்லான் திரு மா மகட்கு இனியான் –
இனிய நகையையும்
சிவந்த அதரத்தையும்
உடைய ஸ்ரீ பூமி பிராட்டியார் உடைய
செவ்வியை அனுபவிக்க வல்லனாய்
அத்தாலே
பெரிய பிராட்டியாருக்கு இனியன் –
ந கச்சின் ந அபராத்யதி -என்று குற்றம் பொறுப்பிப்பாள்  ஒருத்தியும்
பொறைக்கு உவாத்தாயிருப்பாள் ஒருத்தியும்
ஆக கூடி இனியனாய் இருக்கிறவன் –

மௌவல் மாலை வண்டாடும் மல்லிகை மாலையோடும் அணைந்த மாருதம் தெய்வ நாற வரும் திருக் கோட்டியூரானே –
மௌவல் மாலையோடும்
மல்லிகை மாலையோடும்
மது பானம் பண்ணின வண்டுகள் ஆடா நின்றன –
இவற்றோடு கூடி அணைந்த மாருதம் உண்டு -காற்று
அது அப்ராக்ருதமான பரிமளத்தை
கந்திக்க வந்து உலவா நிற்கும் திருக் கோட்டியூரானே –

—————————————————

வெள்ளியான் கரியான் மணி நிற வண்ணன் விண்ணவர் தமக்கு இறை எமக்கு
ஒள்ளியான் உயர்ந்தான் உலகு ஏழும் உண்டு உமிழ்ந்தான்
துள்ளு நீர் மொண்டு கொண்டு சாமரைக் கற்றை சந்தந முந்தி வந்தசை
தெள்ளு நீர் புறவில் திருக் கோட்டியூரானே —9-10-3-

அவ்வோ யுகங்கள் தோறும் ஆஸ்ரயிப்பார் உகந்த
திரு நிறத்தை தானும் உகந்து கொண்டு
பிரளய ஆபத்துக்களிலும் உதவும் ஸ்வ பாவனானவன்
திருக் கோட்டியூரிலே சந்நிஹிதன் ஆனான் –
என்கிறார் –

வெள்ளியான் கரியான் மணி நிற வண்ணன் விண்ணவர் தமக்கு இறை
கிருத யுகத்தில் வெளுத்த நிறத்தை உடையவனாய்
கலி காலத்தில் ஏதேனும் வடிவு கொண்டாலும் விரும்புவார் இல்லாமையாலே
கறுத்த நிறத்தை  உடையவனாய்
த்வாபரத்திலே நீல நிறத்தை உடையனாய்
அயர்வறும் அமரர்கள் அதிபதியாய்
சர்வாதிகனாய் வைத்து –

எமக்கு ஒள்ளியான் உயர்ந்தான் உலகு ஏழும் உண்டு உமிழ்ந்தான் –
எனக்கு வைத்த கண் வாங்க ஒண்ணாத படி
தன் அழகைக் காட்டி
பிரளய ஆபத்தில் ஜகத்தை உண்டு
ஆபத் சகனாய் உமிழ்ந்தவன் –

துள்ளு நீர் மொண்டு கொண்டு சாமரைக் கற்றை சந்தந முந்தி வந்தசை
குறும் திவலைகளை உடைய திரைகளாலே
நீரானது சாமரத் திரளையும்
சந்தனத்தையும் இழுத்துக் கொண்டு  வந்து தள்ளி அலையா நிற்பதாய் –

தெள்ளு நீர் புறவில் திருக் கோட்டியூரானே –
கொழிக்கும் ஸ்வபாவத்தை உடைய
பர்யந்ததோடு கூடின  திருக் கோட்டியூரானே –
தெள்ளு நீர் -தெளிந்த நீரை உடைய பர்யந்தம் -என்னுமாம்
துள்ளு நீர் -தெழித்து வருகிற நீரானது –

———————————————-

ஏறும் ஏறி  இலங்கும் ஒண் மழுப் பற்றும் ஈசற்கு இசைந்து உடம்பிலோர்
கூறு தான் கொடுத்தான் குல மா மகட்கு இனியான்
நாறு செண்பக மல்லிகை மலர் புல்லியின் இளவண்டு நன்னறும்
தேறல் வாய் மடுக்கும் திருக் கோட்டியூரானே —9-10-4-

பிராட்டியோடு ஒக்க ருத்ரனுக்கும்
திரு மேனி யிலே இடம் கொடுத்த சீலவான்
திருக் கோட்டியூரிலே சந்நிஹிதன் ஆனான்
என்கிறார் –

ஏறும் ஏறி  இலங்கும் ஒண் மழுப் பற்றும் ஈசற்கு இசைந்து உடம்பிலோர் கூறு தான் கொடுத்தான்
வ்ருஷபத்திலும் ஏறி
உஜ்ஜ்வலமான அழகிய மழுவைப் பற்றும் ருத்ரனுக்கு –
சர்வேஸ்வரன்  திருவடியை வாகனமாக உடையவனாய் இருக்குமாகில்
ஓர் எருத்தை ஏறி
அவன் திரு வாழியைப் பிடிக்கும் ஆகில்  -ஒரு மழுவைப் பிடித்து
இப்படி துர்மாநியான ருத்ரனுக்கு
துர்மானம் பார்த்து உபேஷியாதே
இசைந்து திரு மேனியிலே ஒரு கூறு கொடுத்தவன் –

குல மா மகட்கு இனியான் –
பெரிய பிராட்டியாருக்கு
பித்தர் பனி மலர் மேல் பாவைக்கு -என்கிறபடியே
அவளோடு ஒக்க இவனுக்கும் திரு மேனியிலே இடம் கொடுத்தவன் –

நாறு செண்பக மல்லிகை மலர் புல்லியின் இளவண்டு நன்னறும்
பரிமளத்தை உடைத்தான
செண்பகப் பூ மல்லிகை -இவற்றைத் தழுவி
இவற்றால் வந்த உஷ்ணம் மாற்றுகைக்கு
தர்ச நீயமாய் பால்யாவஸ்தமான வண்டு
அற விலஷணமான –

தேறல் வாய் மடுக்கும் திருக் கோட்டியூரானே –
தேனிலே வாயை மடா நிற்கும் திருக் கோட்டியூரானே –

————————————————–

வங்க மா கடல் வண்ணன் மா மணி வண்ணன் விண்ணவர் கோன் மது மலர்
தொங்கல் நீண் முடியான் நெடியான் படி கடந்தான்
மங்குல் தோய் மணி மாட வெண் கொடி மாகமீது உயர்ந்தேறி வானுயர்
திங்கள் தான் அணவும் திருக் கோட்டியூரானே –9-10-5-

பண்டு பூமியை அளந்து கொண்டவன்
இப்போது திருக் கோட்டியூரிலே சந்நிஹிதன் ஆனான்
என்கிறார் –
வங்க மா கடல் வண்ணன் மா மணி வண்ணன் –
மரக் கலங்களை உடைய
மகார்ணவம் போலேயுமாய்
ஸ்லாக்கியமான நீல மணி போலே இருக்கும்
திரு நிறத்தை உடையனாய் –

விண்ணவர் கோன் –
இவ்வடிவை நித்ய சூரிகளுக்கு போக்யமாகக் கொடுத்த
அயர்வறும் அமரர்கள் அதிபதியாய்

மது மலர் தொங்கல் நீண் முடியான் நெடியான் படி கடந்தான்-
தேனை உடைத்தான
பூ மாலையோடு கூடின
ஆதி ராஜ்ய சூசகமான
திரு அபிஷேகத்தை உடையவனாய்
சர்வாதிகனாய்
பூமி எல்லாம் தன் கால் கீழே இட்டுக் கொண்டவன் –

மங்குல் தோய் மணி மாட வெண் கொடி மாகமீது உயர்ந்தேறி வானுயர் திங்கள் தான் அணவும்
மேகத்தில் சென்று கிட்டி மணி மயமான மாடத்திலே
கட்டின வெள்ளைக் கொடி ஆகாசத்தின் மேலே
உயரப் பரந்து
ஸ்வர்க்கத்திலே வர்த்திக்கிற  சந்த்ரனைச் சென்று
ஸ்பர்சியா நிற்கும்
வானுயர் திங்கள்
மிகவும் உயரா நின்ற சந்த்ரனை அணையா நின்ற
திருக் கோட்டியூரானே –

——————————–

காவலன் இலங்கைக்கு இறை கலங்கச் சரம் செல உய்த்து மற்றவன்
ஏவலம் தவிர்த்தான் என்னை யாளுடை யெம்பிரான்
நாவலம் புவி மன்னர் வந்து வணங்க மாலுறைகின்றது இங்கு எனத்
தேவர் வந்து இறைஞ்சும் திருக் கோட்டியூரானே —9-10-6-

ராவணன் மிடுக்கை அழித்த தசராத்மாஜன்
இப்போது திருக் கோட்டியூரிலே சந்நிஹிதன் ஆனான்
என்கிறார்  –

காவலன் இலங்கைக்கு இறை கலங்கச் சரம் செல உய்த்து மற்றவன் –
ஈஸ்வரனோடு ஒக்க நானும் காவலன் என்று
திக் பாலர்களைத் தவிர்த்து ஜகத்துக்கு ரஷகன் தானேயாய்
இலங்கைக்கு நிர்வாஹகன் மலங்கும்படி
சரங்களை செல்ல நடத்தி –

ஏவலம் தவிர்த்தான் என்னை யாளுடை யெம்பிரான்-
ராவணன் உடைய -எய்ய வல்லார் என்னோரோடு ஒப்பார் இல்லை என்னும் மிடுக்கை தவிர்த்து
அச் செயலாலே  என்னை அடிமை கொண்டிருக்கும் உபகாரகன் ஆனவன் –

நாவலம் புவி மன்னர் வந்து வணங்க மாலுறைகின்றது இங்கு எனத் தேவர் வந்து இறைஞ்சும் –
ஜம்பூத்   வீபத்தில் ராஜாக்கள் வந்து ஆஸ்ரயிக்க-
சர்வேஸ்வரன் வந்து சந்நிதி பண்ணுகிறது இங்கே -என்று ப்ரஹ்மாதிகள் வந்து ஆஸ்ரயிக்கும்
திருக் கோட்டியூரானே   –

—————————————————-

கன்று கொண்டு விளங்கனி எறிந்து ஆநிரைக்கு அழிவன்று  மா மழை
நின்று காத்து உகந்தான் நில மா மகட்கு இனியான்
குன்றின் முல்லையின் வாசமும் குளிர் முல்லையின் மணமும் அளைந்து இளம்
தென்றல்  வந்து உலவும் திருக் கோட்டியூரானே —9-10-7-

கன்றாயும் விளாவாயும் வந்த அசூரர்களால் வரும்  நலிவைப் போக்கி
கோவர்த்தன உத்தாரணம் பண்ணின
மகா அபதானத்தை உடையவன் -இப்போது
திருக் கோட்டியூரிலே சந்நிஹிதன் ஆனான்
என்கிறார் –

கன்று கொண்டு விளங்கனி எறிந்து –
கன்றைக் கொண்டு விளாவை உதிர எறிந்து –
க்ரித்ரிமத்தால் வந்த இரண்டு அசுரர்களையும்
ஒன்றை இட்டு ஒன்றை முடித்தவன் –

ஆநிரைக்கு அழிவு என்று  மா மழை நின்று காத்து உகந்தான் –
பசுக்களுக்கு அழிவு வருமன்று மகா வர்ஷத்தை
மலையை எடுத்துக் கொண்டு நின்று காத்து
இவற்றுக்கு உறுப்பாக பெற்றோம் -என்று உகந்தவன் –

நில மா மகட்கு இனியான்-
பசுக்களையும் இடையரையும் காத்தால் உகபபாள்
ஸ்ரீ பூமி பிராட்டியார் இறே-
பூ பாரத்தை போக்குகையாலே ஸ்ரீ பூமிப் பிராட்டியாருக்கு இனியன் ஆனவன் –

குன்றின் முல்லையின் வாசமும் குளிர் முல்லையின் மணமும் அளைந்து இளம்தென்றல்  வந்து உலவும் –
குளிர்ந்த மலையில் உண்டான முல்லையின் பரிமளமும்
மல்லிகையின் பரிமளமும்
அலைந்து மிருதுவான தென்றல் வந்து சஞ்சரியா நிற்கும்
திருக் கோட்டியூரானே –

—————————————————

பூங்குருந்து ஒசித்தானை காய்ந்த அரிமாச் செகுத்து  அடியேனை ஆளுக
ஈங்கு என்னுள் புகுந்தான் இமையோர்கள் தம் பெருமான்
தூங்கு தண் பலவின் கனித்தொகு வாழையின் கனியொடு மாங்கனி
தேங்கு தண் புனல் சூழ்த் திருக் கோட்டியூரானே—9-10-8-

குருந்து தொடக்கமான விரோதி வர்க்கத்தைப் போக்கின
ஸ்ரீ கிருஷ்ணன் -இப்போது
திருக் கோட்டியூரிலே சந்நிஹிதன் ஆனான்
என்கிறார் –

பூங்குருந்து ஒசித்தானை காய்ந்த -அரிமாச் செகுத்து –
பூத்த குருந்தை அநாயாசேன முறித்து
குவலயா பீடத்தை முடித்து –
அரிமா செகுத்து –
வேகத்தை உடைய கேசியைக் கொன்று -என்றுமாம்
பச்சைக் குதிரை -என்னவுமாம்

அடியேனை ஆளுக ஈங்கு என்னுள் புகுந்தான் -இமையோர்கள் தம் பெருமான்
என்னை அடிமை கொள்ள விரும்பி
அயர்வறும் அமரர்கள் அதிபதி யான மேன்மையைப்
பாராதே
சம்சாரத்திலே
என்னுள்ளே
புகுந்தான் –

தூங்கு தண் பலவின் கனித்தொகு வாழையின் கனியொடு மாங்கனி தேங்கு தண் புனல் சூழத் –
இற்று விழப் புகுகிறதோ என்னும்படி
பழுத்து தூங்கா நின்று
அழகியதான பலாப் பழம்
திரட்சியை உடைத்தான வாழைப் பழம்
இவற்றோடு கூட மாம்பழம்
வந்து விழுந்து தேங்கி
ஸ்ரமஹரமான -புனல் சூழ்ந்த
திருக் கோட்டியூரானே –

—————————————————-

கோவையின் தமிழ் பாடுவார் குடமாடுவார் தட மா மலர் மிசை
மேவு நான் முகனில் விளங்கு புரி நூலர்
மேவு நான் மறை வாணரை வகை வேள்வி ஆறங்கம் வல்லவர் தொழும்
தேவ தேவபிரான் திருக் கோட்டியூரானே —9-10-9-

தான் தன்னை சர்வ பிரகாரத்தாலும் அனுபவிக்கைக்கு ஈடான
பக்தியை உடையராய் -ப்ரஹ்மாவோடு சமாநரான-ப்ராஹ்மணருக்கு
ஆஸ்ரயநீயனாய்  திருக் கோட்டியூரிலே வந்து சந்நிஹிதன் ஆனான்
என்கிறார் –

கோவையின் தமிழ் பாடுவார் குடமாடுவார் தட மா மலர் மிசை-
கோவையை உடைத்தாய்
இனிய தமிழான இத் திருமொழியை பாடுவார்
செருக்காலே திரு வாய்ப் பாடியிலே படியாக
குடக்கூத்தை யாடுவாராய்
திரு நாபி கமலத்திலே பிறந்த

மேவு நான் முகனில் விளங்கு புரி நூலர்
சதுர்முகனில் காட்டில் உஜ்ஜ்வலிதமான
யஞ்ஞோபவீதத்தை உடையரான பிராமணர் –

மேவு நான் மறை வாணரை வகை வேள்வி ஆறங்கம் வல்லவர் தொழும்
தன்னை உள்ளபடி பேச வல்ல வேதங்களுக்கு
வியாச பதம் செலுத்த வல்லராய்
பஞ்ச மகா யஞ்ஞம்
அங்கங்கள் ஆறும்
கை வந்து இருக்கிறவர்கள் ஆஸ்ரயிக்கிற –

தேவ தேவபிரான்-திருக் கோட்டியூரானே-
ப்ரஹ்மாதிகளுக்கு ஆஸ்ரயநீயரான அயர்வறும் அமரர்களுக்கு
ஸ்வாமி யானவன்   -இங்கே வந்து வர்த்திக்கிறான் –

———————————-

ஆலுமா வலவன் கலிகன்றி மங்கையர் தலைவன் அணி பொழில்
சேல்கள் பாய்  கழனித் திருக் கோட்டியூரானை
நீல மா முகில் வண்ணனை நெடுமாலை யின் தமிழால் நினைந்த விந்
நாலும்  ஆறும் வல்லார்க்கு இடமாகும் வானுலகே —9-10-10-

ஆழ்வார் அருளிச் செய்த இப்பத்தும்
வல்லார்களுக்கு
பரமபதமே வாசஸ் ஸ்தானம்
என்கிறார் –

ஆலுமா வலவன் கலிகன்றி மங்கையர் தலைவன் அணி பொழில் –
சரசஞ்சாரத்தை உடைத்தான குதிரையை
நடத்த வல்ல ஆழ்வார்
திரு மங்கைக்கு நிர்வாஹகர் ஆனவர் –
சம்சாரத்துக்கு ஆபரணாம் படி அழகிய பொழிலையும்

சேல்கள் பாய்  கழனித் திருக் கோட்டியூரானை –
சேல்கள் பாயா நின்றுள்ள வயலையும் உடைய
திருக் கோட்டியூரை உடையனாய் –

நீல மா முகில் வண்ணனை நெடுமாலை-
நீலமாய்
ஸ்லாக்கியமான
முகில் போலே இருக்கும் திரு நிறத்தை உடையனான
சர்வேஸ்வரனை –

யின் தமிழால் நினைந்த –
இனிய தமிழைக் கொண்டு
சம்சார தாபம் தீரும்படியாக நினைத்த –

நீல மா முகில் வண்ணனை-நெடுமாலை–
ஸ்ரமஹரமான வடிவை உடையவனை –
அத்தாலே என்னை முறை அறிவித்தவனை –
வ்யாமுக்தன் ஆனவனை –

விந் நாலும்  ஆறும் வல்லார்க்கு இடமாகும் வானுலகே –
தமக்கு இனிதானவாறே பிரித்து அனுபவிக்கிறார் –
இது கற்றவர்களுக்கு இடமாவது பரமபதம் –

——————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பெரிய திருமொழி-9-9–ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம்-

May 25, 2014

மூவரில் –பிரவேசம் —

இவ்விருப்பைத் தவிர்த்து பரம பதத்தைத் தர வேணும் என்று அபேஷித்தார்-
அப்போதே அது பெறாமையாலே -இத்தைத் தவிர்த்து அத்தை தருகைக்காக வந்து நிற்கிற
இங்கே ஆஸ்ரயித்து நாம் அபேஷிதம் பெறாது ஒழிவோமோ என்று அவசந்னராய்
அந்த அவசாத அதிசயத்தாலே தாமான தன்மை அழிந்து
எம்பெருமானோடே கலந்து  பிரிந்தாள் ஒரு பிராட்டி தசையை பிராப்தராய்
அப்பிராட்டி தான் தம் தசையைத் தான் பேச மாட்டாதே கிடக்க
அவள் படியைப் பேசுகிற திருத் தாயார் தசையை ப்ராப்தராய் –
அவள் தன் மகள் தசையை அனுசந்தித்து
இவள் ஆற்றாமை இருந்த படியால் அவனோடு அணைந்து அல்லது தரிக்க மாட்டாள் போலே போலே இருந்தது –
அணைத்து விட வல்லளே
அன்றிக்கே இங்கனே நோவு  படும் இத்தனையோ -என்று
பின்னையும் தானே அவனைக் கிட்டியே விடும் என்று
அறுதி இட்டு தரிக்கிறாளாய் இருக்கிறது –

—————————————————–

மூவரில் முன் முதல்வன் முழங்கார் கடலுள் கிடந்து
பூ வளருந்தி தன்னுள்  புவனம் படைத்து உண்டு உமிழ்ந்த
தேவர்கள் நாயகனைத் திரு மால் இருஞ்சோலை   நின்ற
கோவலர் கோவிந்தனைக் கொடியேரிடை கூடுங்கொலோ–9-9-1-

மூவரில் முன் முதல்வன் –
இந்த்ரனையும் கூட்டி மூவர்க்கு பிரதானன் -என்னுதல்-
அன்றிக்கே
மூவரில் வைத்துக் கொண்டு தான் பிரதானன் -என்னுதல் –

முழங்கார் கடலுள் கிடந்து-
திரைக் கிளப்பத்தாலே பெரிய கோஷத்தை உடைத்தான
திருப் பாற் கடலிலே ப்ரஹ்மாதிகள் கூக்குரல் கேட்கும் படி வந்து கண் வளர்ந்து அருளி –

பூ வளருந்தி தன்னுள்  புவனம் படைத்து உண்டு உமிழ்ந்த
தேவர்கள் நாயகனைத்-
விலஷணமான திரு நாபி கமலத்திலே
ஜகத்தை சிருஷ்டித்து
பின்னைப்  பிரளயம் வந்தவாறே -வயிற்றிலே எடுத்து வைத்து –
உள்ளே கிடந்து நெருக்குப் பட ஒண்ணாது என்று வெளிநாடு காண உமிழ்ந்து
இப்படி நோக்குகிற -அயர்வறும் அமரர்கள் அதிபதியை –

திரு மால் இருஞ்சோலை   நின்ற கோவலர் கோவிந்தனைக் கொடியேரிடை கூடுங்கொலோ–
இப்படி உபய விபூதி உக்தனாய் இருந்து வைத்து –
கிருஷ்ணனாய் வந்து அவதரித்து –
பசுக்களுக்கும் இடையருக்கும் வந்த கிலேசத்தைப் பரிஹரித்து –
கோவிந்தாபிஷேகம் பண்ணினவன் –
பிற்பாடராய்-
இடக்கை வலக்கையும் அறியாத சம்சாரிகளுக்கும் முகம் கொடுக்கைக்காக
திருமலையிலே வந்து சந்நிஹிதன் ஆனான் –
அவனோடு அணைக்கைக்கு ஈடான அழகை உடையவள்
அணைந்தே விட வல்லளோ –

———————————————-

புனை வளர் பூம் பொழிலார் பொன்னி சூழ் அரங்க நகருள்
முனைவனை மூவுலகும் படைத்த முதல் மூர்த்தி தன்னைச்
சினை வளர் பூம் பொழில் சூழ் திருமால் இருஞ்சோலை   நின்றான்
கனை கழல் காணும் கொலோ கயற்கண்ணி எம் காரிகையே –9-9-2-

புனை வளர் பூம் பொழிலார் பொன்னி சூழ் அரங்க நகருள்
புன்னைகள் வளரா நிற்பதாய்
காவிரியால் சூழப் பட்டு இருக்கிற கோயிலாகிற
மகா நகரத்திலே கண் வளர்ந்து அருளுகிற

முனைவனை மூவுலகும் படைத்த முதல் மூர்த்திதன்னைச்
பிரதானனை-
மூ வுலகும் படைத்த பிரதான மூர்த்தி தன்னை  –

சினை வளர் பூம் பொழில் சூழ் திருமால் இருஞ்சோலை   நின்றான்-
பணைகள் மிக்க பூம் பொழிலிலே –

கனை கழல் காணும் கொலோ கயற்கண்ணி எம் காரிகையே –
ரஷணத்துக்கு இட்ட வீரக் கழல் த்வனியா நின்றுள்ள திருவடிகளை –
அவற்றைக் காண்கைக்கு கண் படைத்த இவள்
கண்டே விட வல்லளேயோ  –

—————————————–

உண்டு உலகு ஏழினையும் ஒரு பாலகனாய் ஆலிலை மேல்
கண் துயில் கொண்டுகந்த கரு மாணிக்க மா மலையை
திண்டிறல் மா கரி சேர் திரு மாலிருஞ்சோலை நின்ற
அண்டர் தங்கோவினை  இன்று அணுகும் கொலோ என்னாயிழையே —9-9-3-

உண்டு உலகு ஏழினையும் ஒரு பாலகனாய் ஆலிலை மேல் –
சகல லோகங்களையும் எடுத்து வயிற்றிலே வைத்து
ஒரு பாலகனாய்
ஒரு பவனான ஆலந்தளிரிலே

கண் துயில் கொண்டுகந்த கரு மாணிக்க மா மலையை
கண் வளர்ந்து அருளி
ரஷ்ய வர்க்கத்தின் உடைய ரஷணத்தை பெறுகையாலே
ஸ்ரமஹரமான வடிவை உடையவனாய் இருக்கிறவனை –

திண்டிறல் மா கரி சேர் திரு மாலிருஞ்சோலை நின்ற –
சிம்ஹங்களுக்கு அஞ்சாத திண்மையை உடைத்தான
ஆனைகள் சேரா நின்றுள்ள
திரு மலையிலே நின்று அருளின –

அண்டர் தங்கோவினை  இன்று அணுகும் கொலோ என்னாயிழையே  –
அண்டாந்தர வர்த்திகளுக்கு நிர்வாஹகன் ஆனவனை –
அவனுக்கு ஈடாக ஒப்பித்து இருக்கிற இவள்
அவ் ஒப்பனையோடு சென்று அணுக வல்லளேயோ –

————————————————–

சிங்கமதாய் அவுணன் திறலாகம் முன் கீண்டுகந்த
பங்கய மா மலர்க்கண் பரனை யெம் பரஞ்சுடரை
திங்கள் நன் மா முகில் சேர் திரு மாலிருஞ்சோலை நின்ற
நங்கள் பிரானை யின்று நணுகும் கொலோ என்  நன்னுதலே —9-9-4-

சிங்கமதாய் அவுணன் திறலாகம் முன் கீண்டுகந்த –
சிம்ஹ   வேஷத்தை உடையனாய்
ஹிரண்யன் உடைய வர பலத்தாலே திண்ணியதான மார்வை
அநாயாசேன கிழித்து
சிறுக்கன் விரோதியை   போக்கப் பெற்றோமே -என்று அத்தாலே உகந்து

பங்கய மா மலர்க்கண் பரனை யெம் பரஞ்சுடரை   –
உகந்த உகப்பு திருக் கண்களிலே தோற்றுமபடி
இருக்கிற சர்வாதிகனை –
ஜ்வலந்தம் -என்கிறபடியே -திரு மேனியிலே புகுந்த புகரைச் சொல்லுகிறது –
திங்கள் நன் மா முகில் சேர் திரு மாலிருஞ்சோலை நின்ற –
சந்திர பதத் தளவும் ஓங்கின சிகரத்தை உடைத்தான
திரு மலையிலே வந்து சந்நிஹிதனாய் –

நங்கள் பிரானை யின்று நணுகும் கொலோ என்  நன்னுதலே –
நமக்கு எளியவன் ஆனவனை –
அவ் வெளிமைக்கு தோற்று இருக்கிற இவள்
கிட்ட வல்லளேயோ –

————————————

தானவன் வேள்வி தன்னில் தனியே குறளாய் நிமிர்ந்து
வானகமும் மண்ணகமும் அளந்த திரி விக்கிரமன்
தேனமர் பூம் பொழில் சூழ் திரு மாலிருஞ்சோலை நின்ற
வானவர் கோனை யின்று வணங்கித் தொழ வல்லள் கொலோ –9-9-5-

தானவன் வேள்வி தன்னில் தனியே குறளாய் நிமிர்ந்து  –
மகா பலியினுடைய யாகத்திலே
ஆசூர பிரக்ருதிகள் நடுவே தனியே
வாமன வேஷத்தைக் கொண்டு போய்ப் புக்கு வளர்ந்து –

வானகமும் மண்ணகமும் அளந்த திரி விக்கிரமன் –
பூமியாந்தரிஷ்யாதிகள் மூன்றடியிலே அடங்கும்படி
அளந்தவன் –

தேனமர் பூம் பொழில் சூழ் திரு மாலிருஞ்சோலை நின்ற –
தேன் மிக்கு பூத்து இருந்துள்ள
சோலையாலே சூழப்பட்ட
திருமலையிலே வந்து நின்ற –

வானவர் கோனை யின்று வணங்கித் தொழ வல்லள் கொலோ –
அயர்வறும் அமரர்கள் அதிபதியை
அவர்களோடு ஒத்த ருசியை உடைய
இவள் வணங்கித் தொழ வல்லள் கொலோ –

————————————————

நேசமிலாதவர்க்கும் நினையாதவர்க்கும் அரியான்
வாச மலர்ப் பொழில் சூழ் வட மா மதுரைப் பிறந்தான்
தேசமெல்லாம் வணங்கும் திரு மாலிருஞ்சோலை நின்ற
கேசவ நம்பி தன்னைக் கெண்டை யொண்  கண்ணி காணும் கொலோ —9-9-6-

நேசமிலாதவர்க்கும் நினையாதவர்க்கும் அரியான் –
பர பக்தி இல்லாதார்க்கும்
ஈஸ்வரன் இல்லை என்கைக்காகிலும் நினையாதவர்க்கும்
அரியான்
சதுர் விம்சதி தத்வாத்மிகையாய் இருக்கும் பிரகிருதி
பஞ்ச விம்சகன் ஆத்மா
ஷட் விம்சகன் ஈஸ்வரன் -என்று
பரிகணித்தது இல்லை என்றும் அதுவும் அன்றிக்கே இருக்கை –

இத்தால் சொல்லிற்று ஆயிற்று –
பர பக்திக்கும் அத்வேஷத்துக்கும் வாசி வையாதே
தன்னைக் கொடுப்பான் ஒருவன் -என்கை –

வாச மலர்ப் பொழில் சூழ் வட மா மதுரைப் பிறந்தான் –
பர பக்தியையும்
அத்வேஷத்தையும்
பிறப்பிக்கைக்காக-வந்து அவதரித்தவன் –

தேசமெல்லாம் வணங்கும் திரு மாலிருஞ்சோலை நின்ற –
அந்த அவதார பலம் இருக்கிறபடி –

கேசவ நம்பி தன்னைக் –
பிரசஸ்த கேசனாய் இருக்கிறவனை –

கெண்டை யொண்  கண்ணி காணும் கொலோ –
அக் குழலுக்கு தகுதியான
அவயவ சோபையை உடையவள்
கிட்ட வல்லளேயோ –

————————————-

புள்ளினை வாய் பிளந்து பொரு மா கரி கொம்பொசித்து
கள்ளச் சகடுதைத்த கரு மாணிக்க மா மலையை
தெள்ளருவி கொழிக்கும் திரு மாலிருஞ்சோலை நின்ற
வள்ளலை வாணுதலாள் வணங்கித் தொழ வல்லள் கொலோ -9-9-7-

புள்ளினை வாய் பிளந்து பொரு மா கரி கொம்பொசித்து –
பகாசுரன் வாயைக் கிழித்து
யுத்தோன் முகமாய்
பெரிய வடிவை உடைத்தாய் கொண்டு வந்த
குவலயா பீடத்தின் உடைய கொம்பை அநாயாசேன போக்கி –

கள்ளச் சகடுதைத்த கரு மாணிக்க மா மலையை –
க்ரித்ரித சகடமானது –
முலை வரவு தாழ்த்த சீறி நிமிர்த்த திருவடிகளுக்கு
இலக்காய் தூள் தூளாகும்படி பண்ணி
விரோதி நிரசனத்தால் வளர்ந்து புகர் பெற்று நின்ற நிலை –

தெள்ளருவி கொழிக்கும் திரு மாலிருஞ்சோலை நின்ற –
விரோதி நிரசனத்தால் வந்த ஸ்ரமம் அடைய
ஆற்றலாம் படியான தேசம் ஆயிற்று –
தெளிந்த அருவிகள் ஆனவை கொழித்து  எறடா நின்றுள்ள
திருமலையிலே –

வள்ளலை வாணுதலாள் வணங்கித் தொழ வல்லள் கொலோ  –
தன்னை சர்வ ஸ்வதானம் பண்ணி கொடு நிற்கிறவனை –
அந்த ஔதார்யத்துக்கு நாம் இலக்காக வேணும் என்று இருக்கிற
இவளுடைய மநோ ரதம் ஒரு படித் தலைக்கட்ட வற்றேயோ-

——————————————–

பார்த்தனுக்கு அன்று அருளிப் பாரதத்தொரு   தேர் முன்னின்று
காத்தவன் தன்னை விண்ணோர் கரு மாணிக்க மா மலையை
தீர்த்தனைப் பூம்  பொழில் சூழ் திரு மாலிருஞ்சோலை நின்ற
மூர்த்தியைக் கை தொழவும் முடியும் கொலோ என் மொய் குழற்கே —9-9-8-

பார்த்தனுக்கு அன்று அருளிப் பாரதத்தொரு   தேர் முன்னின்று –
சத்ரு பஷமான துர்யோநாதிகள் மிகைத்தவன்று
கிருஷ்ணன்
அர்ஜுனன் பக்கலிலே கிருபையை பண்ணி
பாரத சமரத்திலே சத்ரு நிரசனத்துக்கு பரிகரமான
தேரிலே
ரதியை சீறுமவனுக்கு
தான் இலக்காய்க் கொண்டு
உடம்புக்கீடிடாதே -வெறும் கையோடு நின்று –

காத்தவன் தன்னை –
அவனை நோக்கினவனை –
ஒரு விபூதிக்காக முன் நின்ற படி சொல்லுகிறது
இப்படி சத்ருக்கள் முன்னே தன்னை அழிவுக்கு இட்டவனை –

இப்படி நோக்கினவன் தான் ஆர் என்னில்
விண்ணோர் கரு மாணிக்க மா மலையை –
நித்ய சூரிகள் பரிந்து நோக்க
அவர்களுக்கு அனுபாவ்யமாய்
ஸ்ரமஹரமாய்
ஸ்ப்ருஹநீயமாய் இருக்கிற
வடிவை உடையவனாய் இருக்கிறவனை –

தீர்த்தனைப் –
அவர்களுக்கு அவ்வடிவை அனுபவிப்பைக்கு கொடுத்துக் கொண்டு இருக்கும் இருப்பு
தன்  பேறாகையாலே வந்த சுத்தியை உடையவனை –

பூம்  பொழில் சூழ் திரு மாலிருஞ்சோலை நின்ற மூர்த்தியைக்-
அவர்கள் அனுபவித்த வடிவு அழகை
இங்கு உள்ளார் இழவாத படி
தனக்கு வாசஸ் ஸ்தானமாகப் போரும்படி
தர்ச நீயமான பொழி லாலே சூழப் பட்ட
திருமலையிலே நிற்கிற சர்வேஸ்வரனை –

கை தொழவும் முடியும் கொலோ என் மொய் குழற்கே  –
தன் மயிர் முடியாலே இவனைத் துவக்க வல்ல
இவள்
அவனைத் தொழுதாளாய்த் தலைக் கட்ட வல்லளேயோ –

——————————————————————

வலம்புரி யாழியானை வரையார்  திரடோளன் தன்னைப்
புலம் புரி நூலவனைப் பொழில் வேங்கட வேதியனைச்
சிலம்பிய லாறுடைய திரு மாலிருஞ்சோலை நின்ற
நலந்திகழ்  நாரணனை   நணுகும் கொல் என் நன்னுதலே —9-9-9-

வலம்புரி யாழியானை வரையார்  திரடோளன் தன்னைப் –
ஆஸ்ரித ரஷணத்துக்கு ஈடான பரிகரம் உடையவனை –
அப்பரிகரம் ஒழியவும் ரஷிக்கைக்கு ஈடான தோள் மிடுக்கை உடையவனை –

புலம் புரி நூலவனைப் பொழில் வேங்கட வேதியனைச் –
ரஷித்து இலனேயாகிலும் விட ஒண்ணாத படி
கண்டார் இந்த்ரியங்கள் தன் பக்கலில் துவைக்கு ஈடான
திரு யஞ்ஞோபவீதத்தை உடையவனை –
ரஷிக்கைக்கு பாங்காக ரஷ்ய வர்க்கம் உள்ள இடம் தேடி
வேதைக சமதிகம்யனாய் வைத்து
கண்ணுக்கு இலக்காகும் படி திரு மலையிலே நின்றவனை –

சிலம்பிய லாறுடைய திரு மாலிருஞ்சோலை நின்ற –
அது தன்னை பரதத்வோடு ஒக்கச் சொல்லலாம் படி
எத்தனையேனும் சாலத் தண்ணியர்க்கும்
முகம் கொடுத்துக் கொடு நிற்கிற இடம் இறே இவ்விடம் –
ஸ்வர்க்கத்தில் அப்சரஸ்கள் வந்து ஆஸ்ரயிக்க
அவர்கள் உடைய சிலம்பின் உடைய ஸ்வபாவத்தை உடைத்தான ஆற்றை உடைய
திருமலையிலே வந்து நிற்கிற

நலந்திகழ்  நாரணனை   நணுகும் கொல் என் நன்னுதலே –
கல்யாண குணங்களாலும் உஜ்ஜ்வலிதனாகா நின்றுள்ள
சர்வாதிகனான சர்வேஸ்வரனை கிட்டுக்கைக்கு யோக்யமான
அழகை உடைய இவள் அவனைக் கிட்டிவிட வல்லளேயோ –

————————————————-

தேடற்கு அரியவனைத் திரு மாலிருஞ்சோலை நின்ற
ஆடற்பரவையனை அணியா யிழை காணும் என்று
மாடக் கொடி மதிள் சூழ் மங்கையார் கலிகன்றி சொன்ன
பாடல் பனுவல் பத்தும் பயில்வார்க்கு இல்லை பாவங்களே–9-9-10-

தேடற்கு அரியவனைத்
தானே தன்னைக் கொடு வந்து காட்டில் காட்டுமத்தனை யல்லது
ஸ்வ யத்னத்தாலே ஒருவராலும் ப்ராபிக்க அரிதானவனே –

திரு மாலிருஞ்சோலை நின்ற -ஆடற்பரவையனை –
திருவடி திருத் தோளிலே ஏறித்
திரு மலையிலே வந்து
தன்னைத் தானே கொடு வந்து காட்டினவனை –

அணியா யிழை காணும் என்று –
அவனைக் காண்கைக்கு ஈடான தன்னை
அலங்கரித்துக் கொண்டு இருக்கிற இவள் காணும் என்று –

மாடக் கொடி மதிள் சூழ் மங்கையார் கலிகன்றி சொன்ன –
மாடக் கொடிகளோடு கூடின மதிள்கள் இவற்றாலே
சூழ்ந்து இருக்கிற திருமங்கையில் உள்ளார்க்கு
பிரதானரான ஆழ்வார் அருளிச் செய்த –

பாடல் பனுவல் பத்தும் பயில்வார்க்கு இல்லை பாவங்களே  –
பாடலான பனுவல் பத்தையும் அப்யசிப்பார்க்கு
பிராப்தி பிரதிபந்தங்கள் அடங்கலும் போம் –
காணும் கொலோ என்கிற சம்சயம் இவர் தம்மோடேயாய்
இவர் உடைய பிரபந்தம் அப்யசிப்பார்க்கு
பிராப்தியில் ஒரு கண் அழிவு இல்லை  –

——————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பெரிய திருமொழி-9-8—ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம்-

May 25, 2014

முந்துற -பிரவேசம் –

திரு வல்ல வாழைச் சேரப் பாராய் -என்றார் தம் திரு உள்ளத்தைப் பார்த்து –
அது தம்முடைய த்வரைக்கு ஈடாக ப்ரவர்த்திதது இல்லை –
சர்வ ரஷகனாய் அர்த்தித்தார் உடைய சர்வ பலங்களையும் கொடுக்க கடவனாய்
சர்வாதிகனாய்
விரோதி நிரசன சீலனாய்
பாஹ்ய குத்ருஷ்டிகளால் சலிப்பிக்க ஒண்ணாத ஸ்வ பாவத்தை உடையனாய் –
சர்வ சமாஸ்ரயணீயனாய் கொண்டு
திருமலையிலே வந்து நின்றான் –
நாம் அங்கே போய் அனுபவிப்போம் –
அதிலே ஒருப்படு-என்று
பிதாவானவன் முந்துற நமஸ்கரித்துக் காட்டி
பின்னை
காட்சியிலே முற்பட்டு
தம் திரு உள்ளத்தோடு கூட்டுகிறார் –

——————————–

முந்துற வுரைக்கேன் விரைக் குழல் மடவார் கலவியை விடுதடுமாறல்
அந்தரம் ஏழு மலை கடல்  ஏழுமாய எம்மடிகள் தம் கோயில்
சந்தொடு மணியும் அணி மயில் தழையும் தழுவி வந்தருவிகள் நிரந்து
வந்திழி சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே —9-8-1-

பிராப்த விஷயத்தை வணங்கிலும் வணங்குகிறாய்
தவிரிலும் தவிருகிராய் –
இதர விஷயங்களை முந்துற முன்னம் விட்டுக் கொடு
நிற்கப் பாராய் -என்கிறார் –

முந்துற வுரைக்கேன் விரைக் குழல் மடவார் கலவியை விடு –
உனக்கு செய்ய வேண்டுமதில் நான் முந்துறச் சொல்லுகிறது –
பரிமளத்தை உடைத்தான குழலை  உடையரான ஸ்த்ரீகளோட்டை சம்ஸ்லேஷத்தை நன்று என்று
அது குவாலாக நினைத்து இருக்கும் அத்தை விட்டு –

தடுமாறல்-
அலாபத்தால் வரும் வ்யசனம் பொறுக்க ஒண்ணாது என்று அத்தை விடு  –
தடுமாற்றத்தை பண்ணுவது ஓன்று -என்னுதல்
அன்றிக்கே
கலவி யாகிற தடுமாற்றம் -என்னுதல் –

அந்தரம் ஏழு மலை கடல்  ஏழுமாய எம்மடிகள் தம் கோயில் –
சப்த த்வீபங்களும்
சப்த சமுத்ரங்க ளுமாய்
நிற்கிற சர்வ ஸ்வாமி வர்த்திக்கிற தேசம் –

சந்தொடு மணியும் அணி மயில் தழையும் தழுவி வந்தருவிகள் நிரந்து –
நல்ல சந்தனத்தோடே கூட பெரு விலையனான ரத்னங்களையும்
அந்த சந்தன மரங்களையும்
வேரோடு பறித்து விழ விட்டு
பெரிய ரத்னங்களையும் கூடக் கொண்டு –
தர்ச நீயமான மயில் தழையையும் உருட்டிக் கொண்டு
அருவிகள் ஆனவை நெருங்கி –

வந்திழி சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே-
வந்து -இழியா நின்றுள்ள பர்யந்தத்தை உடைத்தான
திருமலையை வணங்குவோம்
வா என்னோடே ஒரு மிடறான நெஞ்சே  –

—————————————-

இண்டையும் புனலும் கொண்டிடையின்றி எழுமினோ தொழுதும் என்று இமையோர்
அண்டரும் பரவ வரவணைத் துயின்ற சுடர் முடிக் கடவுள் தம் கோயில்
விண்டலர் தூளி வேய் வளர் புறவில் விரை மலர்க் குறிஞ்சியின் நறுந்தேன்
வண்டமர் சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே —9-8-2-

இண்டையும் புனலும் கொண்டிடையின்றி எழுமினோ தொழுதும் என்று
நல்ல பூ மாலையும்
சமாராதானத்துக்கு பிரதான உபகரணமான ஜலமும்
இவற்றைத் தரித்துக் கொண்டு இடைவிடாதே ஒருப்படுங்கோள்-நாம் ஆஸ்ரயிக்கும் படியாக என்று –

இமையோர் அண்டரும் பரவ வரவணைத் துயின்ற சுடர் முடிக் கடவுள் தம் கோயில்-
நித்ய சூரிகளும்
அண்டாந்தர வர்த்திகளானவர்களும்  ஆஸ்ரயிக்க
திரு வநந்த வாழ்வான் மேலே  பள்ளி கொண்டு
ஆதி ராஜ்ய சூசகமான திரு அபிஷேகத்தை உடைய
ப்ரதானர் வர்த்திக்கிற தேசம் –

விண்டலர் தூளி வேய் வளர் புறவில் விரை மலர்க் குறிஞ்சியின் நறுந்தேன்
விட்டு அலரா நிற்பதாய்
தூளி உண்டு -சுண்ணம் -அத்தை உடைத்தாய்
மூங்கில் வளரா நின்றுள்ள பர்யந்தத்திலே
பரிமள பிரசுரமான
குறிஞ்சியினுடைய செவ்வித் தேனை –

வண்டமர் சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே –
வண்டுகள் ஆனவை
பானம் பண்ணா நின்றுள்ள
பர்யந்தத்தை உடைய –திரு மால் இரும் சோலையை வணங்குதும் –

—————————————–

பிணி வளராக்கை நீங்க நின்று  ஏத்தப் பெரு நிலம் அருளில் முன்னருளி
அணி வளர் குறளாய் அகலிடம் முழுதும் அளந்த வெம்மடிகள் தம் கோயில்
கணி வளர் வேங்கை நெடு நிலமதனில்   குறவர் தம் கவணிடைத் துரந்த
மணி வளர் சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே–9-8-3-

பிணி வளராக்கை நீங்க நின்று  ஏத்தப் பெரு நிலம் அருளில் முன்னருளி –
துக்கத்தை வளரா நின்றுள்ள சரீரத்தை கழிக்க வேணும் என்று ஆஸ்ரயிக்க –
அதுக்காக பரந்த பூமியை நிர்ஹேதுக கிருபையால் தந்து அருளி –

அணி வளர் குறளாய் அகலிடம் முழுதும் அளந்த வெம்மடிகள் தம் கோயில் –
அழகு மிக்கு இருந்துள்ள ஸ்ரீ வாமன வேஷத்தை பரிஹரித்து
அதி ஸூ குமாரமான திருவடிகளைக் கொண்டு
பூமிப் பரப்பை அடைய அளந்து கொண்டு –
அந்தச் செயலாலே என்னை எழுதிக் கொண்ட ஸ்வாமி யானவன்
பிற்பட்டார்க்கு இழக்க வேண்டாத படி நிற்கிற தேசம் –

கணி வளர் வேங்கை நெடு நிலமதனில்   குறவர் தம் கவணிடைத் துரந்த-மணி வளர் சாரல் –
அங்குத்தைக்கு வெறு நாள் சொல்லுவார் இல்லாமையாலே
கணியாகக் கொண்டு வளரா நின்றுள்ள
வேங்கையை உடைத்தாய் -பரப்பை உடைத்தான பூமியிலே
ஆட்டைக்கு ஒரு கால் இது பூக்கக் கடவதாய்
அத்தி இட்டு ஆண்டு என்று அறியும் இத்தனை ஆயிற்று –
இந்த வேங்கையை உடைத்தான வெளி நிலத்திலே
அங்கு உள்ள குறவர் ஆனவர்கள் தம்தாமுடைய
எறி கவனையிலே  வைத்து எறிந்த மணி யினுடைய ஒளி
எங்கும் ஒக்க பரம்பா நின்றுள்ள பர்யந்தத்தை உடைய
மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே  —

————————————————

சூர்மையிலாய பேய் முலை சுவைத்துச் சுடு சரமடு சிலைத் துரந்து
நீர்மையிலாத தாடகை மாள நினைந்தவர் மனம் கொண்ட கோயில்
கார்மலி வேங்கை கொங்கலர் புறவில் கடி மலர்க் குறிஞ்சியின் நறுந்தேன்
வார் புனல் சூழ் தண் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே –9-8-4-

சூர்மையிலாய பேய் முலை சுவைத்துச் சுடு சரமடு சிலைத் துரந்து
க்ரௌர்யத்தை வடிவாக உடைய பூதனை முலையைச் சுவைத்திட்டு –
இவன் முகத்தில் விழித்து வைத்து பின்னையும் இறங்காத படி இறே க்ரௌர்யம்-
எதிரிகள் மேலே நெருப்பைத் தூவிக் கொண்டு சென்று
விழுகிற அம்புகளை முடிக்க வற்றான வில்லிலே தொடுத்து விட்டு –

நீர்மையிலாத தாடகை மாள நினைந்தவர் மனம் கொண்ட கோயில் –
ஸ்த்ரீத்வ பிரயுக்தமான மேன்மை இல்லாத தாடகை முடியும்படியாக
ஒரு ருஷி வாக்யத்தையே கொண்டு
ஸ்திரீ வதம் என்று பிற்காலியாதே
ரஷகரான நமக்கு ரஷ்ய வர்க்கத்தின் உடைய ரஷணத்துக்கு
ஏகாந்தமானது செய்ய வேண்டாவோ -என்று
அவள் முடியும்படி திரு உள்ளத்திலே கொண்டவன் –
பின்னையும் பிற்பாடர் உடைய   ரஷணத்துக்கு பாங்கான நிலம் என்று
விரும்பி -வர்த்திக்கிற கோயில் –

கார்மலி வேங்கை கொங்கலர் புறவில் கடி மலர்க் குறிஞ்சியின் நறுந்தேன்   வார் புனல் சூழ் தண் –
மேக பதத்தளவும் செல்ல ஓங்கின வேங்கை என்னுதல்-
நீல வேங்கைகள் என்னுதல் –
கோங்கு ஆகிற  வ்ருஷம்-
இவை அலரா நின்றுள்ள பர்யந்தத்திலே
பரிமள பிரசுரமான குறிஞ்சியினுடைய செவித் தேனானது வெள்ளம் இடா நின்றுள்ள
ஸ்ரமஹரமான திருமலை –  மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே –

—————————————————-

வணங்க லிலரக்கன் செருக்களத் தவிய மணி முடி யொருபதும் புரள
அணங்கு எழுந்தவன்   தன் கவந்தம் நின்றாட அமர் செய்த வடிகள் தம் கோயில்
பிணங்கலில் நெடு வேய் நுதி முகம் கிழிப்பப் பிரசம் வந்து இழிதரப் பெருந்தேன்
மணம் கமழ்  சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே –9-8-5-

வணங்க லிலரக்கன் செருக்களத் தவிய மணி முடி யொருபதும் புரள
த்விதா பஜ்யே யமப்யேவம் ந நமேயம்  -என்கிறபடியே
இரண்டாக பிளக்கிலும் வணங்கேன் -என்று இருந்த ராவணன் யுத்த பூமியிலே மடிய –
தேவதைகள் உடைய வரத்தாலே திண்ணியதாய் ரத்ன மயமான முடி பத்தும்
புற்று மறிந்தால் போலே கிடந்தது துடிக்க –

அணங்கு எழுந்தவன்   தன் கவந்தம் நின்றாட அமர் செய்த வடிகள் தம் கோயில் –
தைவா விசிஷ்டம் போலே இருக்க அவனுடைய சரீரமானது நின்றாட –
சங்கல்ப்பத்தாலே அன்றிக்கே பத்தும் பத்தாக வீர வாசி தோற்ற
பூசலிலே பொறுத்த ஸ்வாமி கள் வர்த்திக்கிற தேசம் –

பிணங்கலில் நெடு வேய் நுதி முகம் கிழிப்பப் பிரசம் வந்து இழிதரப் பெருந்தேன் மணம் கமழ்  சாரல்-
ஒன்றோடு ஓன்று பிணைந்து
பெரிய ஒக்கத்தை உடைத்தான மூங்கிலானது
மலை முழைஞ்சிலே வைத்த தேன் கூட்டளவும் வர வளர்ந்து
தன்னுடைய நுனியாலே அதனுடைய வாயைக் கிழிக்க
தேன் வைத்த நாலு வகைப் பட்ட ஈக்களும் வந்து இழிய
தேனினுடைய கந்தமானது  எங்கும் ஒக்க பரம்பா   நின்றுள்ள
மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே –

———————————–

விடங்கலந்தமர்ந்த வரவணைத் துயின்று விளங்கனிக்கு இளங்கன்று விசிறி
குடங்கலந்தாடிக் குரவை முன் கோத்த கூத்த வெம்மடிகள் தம் கோயில்
தடங்கடல் முகந்து விசும்பிடைப் பிளிறத் தடவரைக் களிறு என்று முனிந்து
மடங்கல் நின்ற திரு மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே –9-8-6-

விடங்கலந்தமர்ந்த வரவணைத் துயின்று விளங்கனிக்கு இளங்கன்று விசிறி-
மது கைடபர்கள் தொடக்கமான உகவாதவர் மேலே விஷத்தை உமிழா நிற்பானாய்-
அவனுக்கு எப்போதும் விடாதே மருவ வேண்டும்படி திரு மேனிக்கு அனுரூபமான
சௌகுமார்யத்தை உடையனான  திரு வநந்த வாழ்வான் மேலே கண் வளர்ந்து அருளி –
அங்கு நின்றும் போந்து
அவதரித்து
விளாம் பழத்துக்காக ஒரு சிறு கன்றை வீசி

குடங்கலந்தாடிக் குரவை முன் கோத்த கூத்த வெம்மடிகள் தம் கோயில்-
கையிலே குடங்களைக் கொண்டு கூத்தாடி -பெண்கள் உடைய குரவைக் கூத்திலே தன்னைக் கொடு வந்து கோத்து
மநோ ஹாரியான சேஷ்டிதத்தை உடைய சுவாமி வர்த்திக்கிற தேசம் –

தடங்கடல் முகந்து விசும்பிடைப் பிளிறத் தடவரைக் களிறு என்று முனிந்து
கடல் மணலே சேஷிக்கும்படி ஜலாம்சத்தை முகந்து
மேகங்கள் போய் ஆகாசத்தே ஏறி
உள்ளுப் புக்க த்ரவ்யத்தின் கனத்தாலே அங்கே நின்று பிளிற
அதனுடைய த்வநியைக் கேட்டு –

மடங்கல் நின்ற –
மடங்கல் உண்டு -சிம்ஹம்
அது மலையிலே வர்த்திக்கிற ஆனையாக புத்தி பண்ணி
நாம் வர்த்திக்கிற தேசத்திலே வேறேயும் ஓன்று வர்த்திக்கை யாவது என்-என்று
சீறி அதிரா நின்றுள்ள –
திரு மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே –

—————————————————

தேனுகனாவி போயுக வங்கோர் செழும் திரள் பனம் கனி யுதிர
தானுகந்து எறிந்த தடங்கடல் வண்ணர் எண்ணி முன் இடம் கொண்ட கோயில்
வானகச் சோலை மரகதச் சாயல் மா மணிக்கல்லதர் நிறைந்து
மானுகர் சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே–9-8-7-

தேனுகனாவி போயுக வங்கோர் செழும் திரள் பனம் கனி யுதிர –
தேனுகன் உடைய பிராணன் முடியும்படி
அங்கே அடியே பிடித்து தலை அளவும் செல்ல தர்ச நீயமாம் படி
பழுத்துக் கிடக்கிற பனம் பழங்கள் உதிரும்படி –

தானுகந்து எறிந்த தடங்கடல் வண்ணர் எண்ணி முன் இடம் கொண்ட கோயில் –
ஆஸ்ரித விரோதிகளை போக்குகையில் உண்டான ப்ரீதியாலே உகந்து எறிந்த
ஸ்ரமஹரமான வடிவை உடையவன்
ஆஸ்ரித விரோதிகளைப் போக்குகைக்கு பாங்கான தேசம் என்று திரு உள்ளத்தாலே ஆதரித்து வர்த்திக்கிற கோயில் –

வானகச் சோலை மரகதச் சாயல் மா மணிக்கல்லதர் நிறைந்து –
மரகதத்தின் உடைய ஒளியை யுடைத்தாய் கொண்டு
ஆகாச அவகாசம் அடையும் படி ஓங்கி இருந்துள்ள சோலையில் உள்ளில்
நீலப் பாறைகளில் உண்டான வழியே போய்ப் புக்கு –

மானுகர் சாரல் –
மான்கள் ஆனவை அங்கு உள்ள தேன்களைப் பருகா நின்றுள்ள பர்யந்தத்தை உடைய –
மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே –

—————————————————-

புதமிகு  விசும்பில் புணரி சென்று அணவ பொரு கடல ரவணைத் துயின்று
பதமிகு பரியின் மிகுசினம் தவிர்த்த பனி முகில் வண்ணர் தம் கோயில்
கதமிகு சினத்த கடதடக் களிற்றின் கவுள் வழிக் களி வண்டு பருக
மத மிகு சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே –9-8-8-

புதமிகு  விசும்பில் புணரி சென்று அணவ பொரு கடல ரவணைத் துயின்று  –
அம்புதத்தை குறைத்து புதம் -என்று கிடக்கிறது –
மேகங்களாலே நெருங்கின ஆகாசத்திலே -கிளர்ந்த திரைகள் சென்று ஸ்பர்சிக்க –
தன்னில் தான் பொரா நின்றுள்ள திருப் பாற் கடலிலே திரு வநந்த வாழ்வான் மேலே கண் வளர்ந்து அருளி –

பதமிகு பரியின் மிகுசினம் தவிர்த்த பனி முகில் வண்ணர் தம் கோயில் –
அங்கு நின்றும் போந்து –
அவதரித்து
பதத்தாலே -பதற்றத்தாலே -அடி மேல் அடியாக விட்டுக் கொடு வருகிற குதிரையினுடைய
மிக்க சீற்றத்தைப் போக்கின -ஸ்ரமஹரமான வடிவை உடையவன் வர்த்திக்கிற கோயில் –

கதமிகு சினத்த கடதடக் களிற்றின் கவுள் வழிக் களி வண்டு பருக-
மிக்க கோபத்தை உடைத்தாய்
அதுக்கடியான அகவாயில் த்வேஷத்தை யுடைத்தாய்
மத முதிதமாய் –
பெரிய வடிவை யுடைத்தாய் இருந்துள்ள –
ஆனையினுடைய கபோலத்தின் வழியே அந்த மத ஜலத்தை
வண்டுகள் ஆனவை பானம் பண்ண –
கொசுகு ஒரு மூலையிலே இருந்து அழித்தது என்னாக் கடல் வற்றாது இறே-

மத மிகு சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே –
பின்னையும் மதம் பாய்ந்து வெள்ளம் இடா நின்றுள்ள
பர்யந்தத்தை உடைய –

—————————————————–

புந்தியில் சமணர் புத்தர் என்று இவர்கள் ஒத்தன பேசவும் உகந்திட்டு
எந்தை பெம்மனார் இமையவர் தலைவர் எண்ணி முன் இடம் கொண்ட கோயில்
சந்தனப் பொழிலின் தாழ் சினை நீழல் தாழ் வரை  மகளிர்கள் நாளும்
மந்திரத்திறைஞ்சும் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே –9-8-9-

புந்தியில் சமணர் புத்தர் என்று இவர்கள் ஒத்தன பேசவும் உகந்திட்டு –
வேதத்துக்கு அப்ராமண்யம் சொல்லும்படி
ஜ்ஞானஹீனராய் இருக்கிற சமணர்
அப்படியே இருக்கிற புத்தர் என்று   சொல்லப் படுகிற இவர்கள்
தாங்கள் அதிகரித்த சித்தாந்தங்களுக்கு ஏகாந்தமான வற்றைச் சொல்லச் செய்தேயும்
இவர்கள் நம்மை அறிந்திலர்களே –
இவர்களுக்கு நாம் வேண்டாம் ஆகில்
நாம் என்றால் உகந்து இருக்கும் ஆஸ்ரிதருக்கு உதவப் பெற்றோமே என்று
அத்தாலே ஹ்ருஷ்டராய் –

எந்தை பெம்மனார் இமையவர் தலைவர் எண்ணி முன் இடம் கொண்ட கோயில் –
என் குல நாதனாய்
அப்படி அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இருக்கிறவர்
நித்ய சூரிகளுக்கும் சம்சாரிகளுக்கும் ஒக்க முகம் கொடுக்கலாம் தேசம் என்று திரு உள்ளம் பற்றி வர்த்திக்கிற தேசம் –

சந்தனப் பொழிலின் தாழ் சினை நீழல் தாழ் வரை  மகளிர்கள் நாளும் மந்திரத்திறைஞ்சும்-
சந்தனச் சோலையில் உண்டான
தாழ்ந்த பணைகளில் உண்டான நிழலின் கீழே போய்
வரை மகளிர்கள் ஆனவர்கள் நாள் தோறும் தங்கள் வர பலத்துக்கு ஈடான
மந்த்ரத்தைக் கொண்டு ஆஸ்ரயா நின்றுள்ள – மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே –

——————————————–

வண்டமர் சாரல் மாலிருஞ்சோலை மா மணி வண்ணரை வணங்கும்
தொண்டரைப் பரவும் சுடரொளி நெடு வேல் சூழ் வயலாலி நன்னாடன்
கண்டல் நல வேலி மங்கையர் தலைவன் கலியன் வாயொலி செய்த பனுவல்
கொண்டிவை பாடும் தவம் உடையார்கள் ஆழ்வார் இக்குரை கடலுலகே –9-8-10-

வண்டமர் சாரல் மாலிருஞ்சோலை மா மணி வண்ணரை வணங்கும் –
பரிமளம் படிந்தாப் போலே வண்டுகள் மது பானம் பண்ணா நின்றுள்ள
பர்யந்தத்தை உடைத்தான திருமலையிலே
ஸ்ரமஹரமான வடிவை உடையராய்க் கொண்டு
எழுந்து அருளி இருக்கிற அழகரை –

தொண்டரைப் பரவும் சுடரொளி நெடு வேல் சூழ் வயலாலி நன்னாடன் –
அவ்வடிவு அழகிலே துவக்குண்டு ஆஸ்ரயிக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களை
அடைவு கெட ஏத்தும் ஸ்வ பாவராய்
அதின் எல்லையிலே நின்றால் போலே
சத்ரு நிரசனத்தால் வந்த கரை கழற்ற அவசரம் இல்லாத
சுடர் ஒளி நெடு வேலை கையிலே உடையராய்
சூழ் வயலை உடைத்தான திருவாலி நாட்டை உடையராய் –

கண்டல் நல வேலி மங்கையர் தலைவன் கலியன் வாயொலி செய்த பனுவல்
தாழைகளை வேலியாக உடைத்தாய் இருந்துள்ள திரு மங்கையில் உள்ளாருக்கு
நிர்வாஹகரான ஆழ்வார்
ஒலியை உடைத்தாய் அருளிச் செய்த பனுவலை –

கொண்டிவை பாடும் தவம் உடையார்கள் ஆழ்வார் இக்குரை கடலுலகே –
ஸ்வ ஹிருதயத்திலே அனுசந்தித்துக் கொண்டு
பாடுகைக்கு ஈடான பாக்கியம் உடையவர்கள்
இக்கடல் சூழ்ந்த பூமிக்கு நிர்வாஹகர் ஆகப்  பெறுவார் –

———————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பெரிய திருமொழி-9-7—ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம்-

May 24, 2014

தந்தை தாய்-பிரவேசம் –

வல்லிச் சிறு நுண் இடையாரிடை நீர் வைக்கின்ற அல்லல் சிந்தை தவிர அடைமின் -என்று
பர உபதேசத்துக்கு உறுப்பாக இதர விஷயங்களின் தண்மையை அனுசந்தித்தார் –
அது தம் அளவிலேயாயிற்று –
பிறருக்கு உபதேசிக்கைக்கு நாம் தாம் இதில் நின்ற நிலை என்ன என்று தம்மைப் பார்த்தார் –
இன்னமும் சம்சார வாசனை கழிந்தது இல்லை –
இழக்கைக்கு ஹேதுவான சரீர சம்பந்தம் இன்னமும் அனுவர்த்தியா நின்றது –
போக்யமான விஷயங்கள் சந்நிஹிதமாய் இரா நின்றன –
ஆனபின்பு நாம் இன்னமும் இதில் நின்றும் அழகிதாக கால் வாங்கினமை போராது-
நாம் இதில் நின்றும் மீண்ட அளவு பார்த்து
நம் பேற்றுக்கு தாம் முற்பாடனாய் கொண்டு
மஹாபலியினுடைய யஞ்ஞா வாடத்திலே தம் உடைமை பெறுவதற்கு அர்தித்வம் எல்லாம் தோற்றி நின்றாப் போலே
திரு வல்ல வாழிலே வந்து நின்றான் ஆயிற்று  –
சம்சார வாசனை கழிந்தது இல்லை –
தேஹம் அஸ்திரமாய் இரா நின்றது –
விஷயங்கள் சந்நிஹிதமாய் இரா நின்றன –
ஐஸ்வர் யாதிகள் நிலை நில்லாதாய் இரா நின்றன –
இவை இத்தனையும் தப்பி –
அவ்வருகு பட்டால் –
பாஹ்ய குத்ருஷ்டிகள் ஆகிற விலக்கடிகள் தப்புகை
சாலப் பணி யுண்டாய்  இரா நின்றது –
இவை இப்படி தண்ணிய வென்று புத்தி பண்ணி இருந்தாய் ஆகில்
அவன் நித்ய வாஸம் திரு வல்ல வாழை வாயாலே சொல்லுவதாக
நெஞ்சாலே மருவப் பார் -என்று திரு உள்ளத்தோடு கூட்டுகிறார் –

————————————-

தந்தை தாய் மக்களே சுற்றம் என்று உற்றவர் பற்றி நின்ற
பந்தமார் வாழ்க்கையை நொந்து நீ பழி எனக் கருதினாயேல்
அந்தமாய் யாதியாய் ஆதிக்கும் ஆதியாய் ஆயனாய
மைந்தனார் வல்ல வாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே —9-7-1-

தந்தை தாய் மக்களே சுற்றம் என்று உற்றவர் பற்றி நின்ற பந்தமார் வாழ்க்கையை –
தமப்பன் தாய் புத்ரர்கள் உறவு முறையார் சம்பந்திகள்
என்று இங்கனே பற்றிக் கொடு நிற்கிற
பந்தகமான யாத்ரையை –

நொந்து நீ பழி எனக் கருதினாயேல் –
மாதா பிதா ப்ராதா -என்கிறபடியே
அவன் ஒருவனே சர்வ வித பந்துவாய் இருக்க
சோபாதிக பந்துக்களை நிருபாதிக பந்துக்களாக நினைத்து
போருகிற பந்தகமான யாத்ரையை
அனுசந்தித்து வெறுத்து
ஈஸ்வர சேஷமான ஆத்ம வஸ்துவுக்கு இது அவத்யாஹம் என்று புத்தி பண்ணினாய் ஆகில் –

அந்தமாய் யாதியாய் ஆதிக்கும் ஆதியாய் ஆயனாய மைந்தனார்-
சர்வமும் உப சம்ஹ்ருதம் ஆனவன்று இவற்றுக்கு லய ஸ்தானமாய்-
சிருஷ்டி காலம் வந்தவாறே உத்பத்தி ஸ்தானமாய்
காரணாவஸ்திதமான  சித் அசித்துக்களுக்கும் நிர்வாஹகனாய்
கார்ய மத்யே கிருஷ்ணனாய் வந்து அவதரித்தவன் –

வல்ல வாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே-
நித்ய வாஸம் பண்ணுகிற திரு வல்ல வாழை
வாயாலே சொல்லும்படியாக
நெஞ்சாலே நினைக்கப் பண்ணப் பாராய் -நெஞ்சே என்கிறார் –

—————————————————-

மின்னு மா வல்லியும் வஞ்சியும் வென்ற நுண்ணிடை நுடங்கும்
அன்ன மென்னடையினார் கலவியை அருவருத்து   அஞ்சினாயேல்
துன்னு மா மணி முடிப் பஞ்சவர்க்காகி முன் தூது சென்ற
மன்னனார் வல்ல வாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே —9-7-2-

மின்னு மா வல்லியும் வஞ்சியும் வென்ற நுண்ணிடை நுடங்கும்
மின்னும் அழகிய கொடியும் வஞ்சிக் கொம்பும்
இவற்றைத் தோற்ப்பிக்கும் படியான
நேரிய இடையானது துவளும் படி இருப்பாராய்-

அன்ன மென்னடையினார் கலவியை அருவருத்து   அஞ்சினாயேல்  –
அன்னம் போலே மிருதுவான நடையை உடையரான ஸ்திரீகள்
ஓட்டை சம்ச்லேஷம் ஆகிறது சாலப் பொல்லாது –
அநந்தரம் ஸ்நான உபகரணம் கொண்டு புதுப்பட வேண்டி இருப்பதொன்று –
அத்தை அருவருத்து அஞ்சினாய் ஆகில் –

துன்னு மா மணி முடிப் பஞ்சவர்க்காகி முன் தூது சென்ற மன்னனார் –
நெருங்கின மணிகளால் செய்யப் பட்ட முடியை உடையரான
பாண்டவர்களுக்காக  பண்டு தன்னை தாழ விட்டு
தூது போன மேன்மையை உடையவர் –

வல்ல வாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே –
நம்மை யாரோ ஏவிக் கார்யம் கொள்வார் என்று
வந்து நிற்கிற திரு வல்ல வாழை —

———————————————-

பூணுலா மென் முலைப் பாவைமார் பொய்யினை மெய்யிதென்று
பேணுவார் பேசுமப் பேச்சை நீ பிழை எனக் கருதினாயேல்
நீணிலா வெண் குடை வாணனார் வேள்வியில் மண்ணிரந்த
மாணியார் வல்ல வாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே —9-7-3-

பூணுலா மென் முலைப் பாவைமார் பொய்யினை மெய்யிதென்று-
முத்தாஹாரம் தொடக்கமான ஆபரணங்களை உடைத்தாய் –
விரஹசஹம் அல்லாத முலையை உடையரான ஸ்திரீகள் உடைய பொய் உண்டு –
அவர்கள் ஆபாத ப்ரதீதியில் ஸ்நேஹிதர்களாகப் பண்ணிக் காட்டும் அவற்றை மெய்யாகக் கொண்டு –

பேணுவார் பேசுமப் பேச்சை நீ பிழை எனக் கருதினாயேல் –
என்றும் ஒக்க மெய்யாய் இருக்கும் பகவத் விஷயத்தை போலே
ஆதரித்துக் கொண்டு போருகிறவர்கள் சொல்லும் வார்த்தையை
நீ தப்பு என்று புத்தி பண்ணினாய் ஆகில்  –

நீணிலா வெண் குடை வாணனார் வேள்வியில் மண்ணிரந்த மாணியார் –
நிலா பரந்தாப் போலே இருக்கிற வெண் கொற்றக் குடையை
யுடையனான மகா பலியுடைய யாகத்திலே சென்று
தன் அல்லாதத ஒன்றை அர்த்திப்பாரைப் போலே பூமியை அபேஷிக்க
இரப்பிலே தகண் ஏறின வடிவை  யுடையவர் –

வல்ல வாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே –
தம்முடைய அர்த்தித்வம் தோற்ற வந்து நிற்கிற திரு வல்ல வாழை –

—————————————————-

பண்ணுலா மென் மொழிப் பாவைமார் பணை முலை யணைது நாம் என்று
எண்ணுவார் எண்ணமது ஒழித்து நீ பிழைத்து உய்யக் கருதினாயேல்
விண்ணுளார் விண்ணின் மீதியன்ற வேங்கடதுளார் வளங்கொள் முந்நீர்
வண்ணனார் வல்ல வாழ் சொல்லுமால் வல்லையாய் மருவு நெஞ்சே –9-7-4-

பண்ணுலா மென் மொழிப் பாவைமார் பணை முலை யணைது நாம் என்று  -எண்ணுவார் எண்ணமது ஒழித்து-
பண் மிக்கு இருந்துள்ள மிருதுவான பேச்சை உடையரான ஸ்திரீகள் உடைய
நெருங்கின முலைகளோடு அணையக் கடவோம் என்று
மநோ ரதிக்குமவர் களுடைய மநோ ரதத்தைத் தப்பி –

நீ பிழைத்து உய்யக் கருதினாயேல் –
நீ உஜ்ஜீவித்துப் போகப் பார்த்தாயாகில் –

விண்ணுளார் விண்ணின் மீதியன்ற வேங்கடதுளார் வளங்கொள் முந்நீர் வண்ணனார் –
நித்ய சூரிகளுக்கு காட்சி கொடுத்துக் கொண்டு
பரமபதத்திலே இருக்கிறவர்
அத்தோடு ஒரு போலியான ஒக்கத்தை உடைத்தான திருமலையிலே வர்த்திக்கிறவர் –
தர்ச நீயமான கடல் போலே இருக்கிற வடிவை உடையவர் –
வர்த்திக்கிற –

வல்ல வாழ் சொல்லுமால் வல்லையாய் மருவு நெஞ்சே –
திரு வல்ல வாழை –
அங்கு உள்ளு நிற்கிறவர் வடிவு அழகு இருக்கிறபடி –

———————————————-

மஞ்சு தோய் வெண் குடை மன்னராய் வாரணம் சூழ வாழ்ந்தார்
துஞ்சினார் என்பதோர் சொல்லை நீ துயர் எனக் கருதினாயேல்
நஞ்சு தோய் கொங்கை மேலங்கை  வாய் வைத்து அவள் நாளையுண்ட
மஞ்சனார் வல்ல வாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே —9-7-5-

மஞ்சு தோய் வெண் குடை மன்னராய் வாரணம் சூழ வாழ்ந்தார் –
மேகப் பதத் தளவும் செல்ல ஓங்கின
வெண் கொற்றக் குடையை உடையராய்
திரள் திரளான ஆனை யணியை உடையராய் வாழ்ந்த –

துஞ்சினார் என்பதோர் சொல்லை நீ துயர் எனக் கருதினாயேல் –
ராஜாக்கள் முடிந்தார்கள் என்று கேட்டுப் போருகிற வார்த்தையை
நீ துக்கம் என்று புத்தி பண்ணினாய் ஆகில்

நஞ்சு தோய் கொங்கை மேலங்கை  வாய் வைத்து அவள் நாளையுண்ட மஞ்சனார்
நஞ்சாலே நிறைந்து இருந்துள்ள முலையின் மேலே
அழகிய கையையும் வாயையும் வைத்து
அவளுடைய ஆயுஸையும் முடித்த  -மைந்தனார்

வல்ல வாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே –
விரோதி நிரசனமே யாத்ரையாய் இருக்கிறவர்
வர்த்திக்கிற திரு வல்ல வாழை –

————————————

உருவினார் பிறவி சேரூன் பொதி  நரம்பு தோல் குரம்பையுள் புக்கு
அருவி நோய்செய்து நின்ற ஐவர் தாம் வாழவதற்கு அஞ்சினாயேல்
திருவினார் வேத நான்கு ஐந்து தீ வேள்வியோடு அங்கமாறும்
மருவினார் வல்ல வாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே —9-7-6-

உருவினார் பிறவி சேரூன் பொதி  நரம்பு தோல் குரம்பையுள் புக்கு –
நித்தியமான  ஆத்மவஸ்துவுக்கு ஜன்மம் ஆகிறது
சூஷ்ம சரீரத்தோடே கூட ஸ்தூல சரீரத்தில் பிரவேசிக்கை-
தேக சம்ச்லேஷ ரூபமான ஜன்மத்தோடே
மாம்சத்தை பொதிந்து கொண்டிருக்கிற
நரம்பு தோலாகிற சரீரத்தை பிரவேசித்து   –

அருவி நோய் செய்து நின்ற ஐவர் தாம் வாழவதற்கு அஞ்சினாயேல்-
எனக்கடைத்த  விஷயத்தைக் காட்டு -என்று
கிலேசிப்பிக்கிற
ஸ்ரோத்ராதிகள் உடைய குறும்புக்கு அஞ்சினாய் ஆகில் –

திருவினார் வேத நான்கு ஐந்து தீ வேள்வியோடு அங்கமாறும் மருவினார்-
ப்ராஹ்மண  லஷணங்களால் குறைவற்று இருக்கிற
நாலு வகைப் பட்ட வேதம்
பஞ்சாக்னிகள்
பஞ்ச மகா யஞ்ஞங்கள்
அங்கங்கள் ஆறு
இவற்றை யாத்ரையாக உடையராய் இருப்பார்  வர்த்திக்கிற   -திரு வல்ல வாழை –
வல்ல வாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே –

————————————————-

நோயெலாம் பெய்ததோர் ஆக்கையை மெய்யெனக் கொண்டு வாளா
பேயர் தாம் பேசுமப் பேச்சை நீ பிழை எனக் கருதினாயேல்
தீயுலா வெங்கதிர்த் திங்களாய் மங்குல் வானாகி நின்ற
மாயனார் வல்ல வாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே –9-7-7-

நோயெலாம் பெய்ததோர் ஆக்கையை மெய்யெனக் கொண்டு வாளா பேயர் தாம் பேசுமப் பேச்சை நீ பிழை எனக் கருதினாயேல் –
நோய் எல்லா வற்றையும் இட்டுப் பண்ணின இந்த அஸ்த்ர சரீரத்தை மெய்யெனக் கொண்டு
ஈஸ்வரன் அடியாக வந்த இச்சையாலே  ஆதல்
அன்றிக்கே
ஈஸ்வரேச்சையாலே யாதல் வரக் கடவதான அப்ராக்ருத  சரீரத்தோபதியாக நினைத்து
வ்யர்த்தமே அந்யதா ஜ்ஞான யுக்தராய் இருக்கிறவர்
சொல்லிக் கொடு திரிகிற
வார்த்தையை நீ அசத்தியம் என்று புத்தி பண்ணினாய் யாகில்   –

தீயுலா வெங்கதிர்த் திங்களாய் மங்குல் வானாகி நின்ற மாயனார் –
நீர்க் களிப்பை அறுக்கைக்கு ஈடாக உஷ்ண கிரணனான ஆதித்யனாய்
அவனால் வந்த தாபத்தை ஆற்றுகைக்கு ஈடான தண்ணளியை உடைத்தான சந்த்ரனாய் –
மேக சஞ்சாரத்தை யுடைத்தான ஆகாசமாய் நிற்கிற
ஆச்சர்ய பூதரானவர் –

வல்ல வாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே –
கண்ணாலே கண்டு அனுபவிக்கலாம் படி
வந்து நிற்கிற திரு வல்ல வாழை –

———————————————————

மஞ்சுசேர் வானெரி நீர் நிலம் காலிவை மயங்கி நின்ற
அஞ்சு சேராக்கையை அரணம் அன்று என்று உய்யக் கருதினாயேல்
சந்துசேர் மென் முலைப் பொன் மலர்ப் பாவையும் தாமும் நாளும்
வந்துசேர் வல்ல வாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே–9-7-8-

மஞ்சுசேர் வானெரி நீர் நிலம் காலிவை மயங்கி நின்ற –
மேகங்கள் சஞ்சரியா நின்றுள்ள ஆகாசம்
தேஜோ பதார்த்தம்
ஜலதத்வம்
பூமி
காற்று
இவையாய்க் கொண்டு
பஞ்சசீக்ருதமாய் நின்ற –

அஞ்சு சேராக்கையை அரணம் அன்று என்று உய்யக் கருதினாயேல் –
உபசயாத்மகமான சரீரத்தை இது
நமக்கு ரஷகம் அன்று என்று புத்தி பண்ணி -பலவாய்க் கூடி ஒன்றானது தன்னடையே பிரிந்து போம் என்று பார்த்து
உஜ்ஜீவிக்கப் பார்த்தாய் ஆகில் –

சந்துசெர் மென் முலைப் பொன் மலர்ப் பாவையும் தாமும்
போக்யதைக வேஷையாய்-
சந்தனத்தாலே அலங்க்ருதமாய்-
மிருது ஸ்வபாவமான திரு முலைத் தடங்களை உடையளாய்
பொற்றாமரையை இருப்பிடமாக    உடையாளான
பெரிய பிராட்டியாரும்
அவளுக்குத் தகுதியான தாமும்
ரகவோஹர்த்தி வைதேஹீம் -என்னுமா போலே –

நாளும் வந்துசேர் -வல்ல வாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே –
அவன் வரக் கடவ வழி எல்லாம் வந்து நின்றான் –
வந்ததே -என்று ஒரு வார்த்தை சொல்லும் இத்தனை நீ செய்ய வேண்டுவது –

——————————————–

வெள்ளியார் பிண்டியார் போதியார் என்று இவர் ஓதுகின்ற
கள்ள நூல் தன்னையும் கருமம் அன்று என்று உய்யக் கருதினாயேல்
தெள்ளியார் கை தொழும் தேவனார் மா முநீரமுது தந்த
வள்ளலார் வல்ல வாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே –9-7-9-

வெள்ளியார் பிண்டியார் போதியார் என்று இவர் ஓதுகின்ற –
சுக்ரனைச்சொல்லுதல்
அன்றிக்கே வெள்ளி  மலையை வாசஸ் ஸ்தானமாக உடைய ருத்ரன் -என்ணுதல்-
அசோகா  வருஷத்தின் கீழே இருக்கக் கடவ   ஆர்ஹதர்
அரசின் கீழே இருக்கக் கடவ பௌத்தர் என்று
சொல்லப் படுகிற இவர்கள் கதறிக் கொண்டு திரிகிற –

கள்ள நூல் தன்னையும்  கருமம் அன்று என்று உய்யக் கருதினாயேல்
யதாஹி சோரஸ் சததாஹி புத்த -என்னக் கடவது இறே-
இது நமக்கு கர்த்தவ்யம் அன்று என்று
உஜ்ஜீவிக்க விரகு பார்த்தாயாகில்  –

தெள்ளியார் கை தொழும் தேவனார் –
சார அசார விவேக ஜ்ஞராய் இருக்குமவர்கள் ஆஸ்ரயிக்க –
அவர்களுக்கு ஆஸ்ரயணீயராய் இருக்கிறவர் –
சார அசார விவேகஜ்ஞ-
சார அசார விவேகஜ்ஞ்ஞாராய் ஆகிறார் -நல்லதையும் தீயதையும் விவேகித்து
நல்லத்தைக் கைக்கொண்டு
தீயத்தை விட்டு இருக்குமவர்கள்
கரீயாம்ச –
நல்லதை கைக் கொள்ளும்தனை சீர்மை உடையவர்கள்
விமத்சரா –
நன்மை கண்டால் பொறாமை கொண்டாடாதே இருக்குமவர்கள்
பிரமாண தந்த்ரா –
கேவல தர்க்கம் கொண்டு அர்த்த நிர்ணயம் பண்ணுகை அன்றிக்கே
பிரமாணம் கொண்டு அர்த்த நிச்சயம் பண்ணுமவர்கள்

மா முநீரமுது தந்த வள்ளலார் –
தன்னை ஒழிய வேறு ஒன்றை போக்யமாக நினைத்து இருப்பார்க்கும்
அத்தைக் கொடுக்கும் மகோதாரன் –

வல்ல வாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே –
இவ்வமிர்தம் எனக்கு வேண்டா என்னாமை கிடாய் வேண்டுவது –

———————————————

மறைவலார் குறைவிலா ருறையுமூர் வல்ல வாழடிகள் தம்மை
சிறைகுலா வண்டறை சோலை சூழ் கோல நீளாலி நாடன்
கறையுலா வேல் வல்ல கலியன் வாயொலி யிவைகற்று வல்லார்
இறைவராய் இருநிலம்  காவல் பூண்டு இன்ப நன்கெய்துவாரே –9-7-10-

மறைவலார் குறைவிலா ருறையுமூர் வல்ல வாழடிகள் தம்மை –
வேத தாத்பர்யம் கைப் பட்டு இருப்பாராய்
மற்றும் அத்ருஷ்ட பரிகரங்களால்   குறைவற்று இருக்கிற
பிராமணர் வர்த்திக்கிற திரு வல்ல வாழில் நிற்கிற
ஸ்வாமிகளைக் கவி பாடிற்று –

சிறைகுலா வண்டறை சோலை சூழ் கோல நீளாலி நாடன்  –
சிறையை உடைத்தாய் இருக்கிற வண்டிகளின் உடைய
கொண்டாடத்தை
யுடைத்தாய் இருப்பதாய் -மற்றும் சொல்லுக்கு உறுப்பான நன்மைகள் எல்லா வற்றாலும் குறைவற்று
இருக்கிற
சோலைகளாலே சூழப் பட்டு
தர்ச நீயமே இருக்கிற திரு வாலி நாட்டை உடையராய் –

கறையுலா வேல் வல்ல கலியன் வாயொலி யிவைகற்று வல்லார் –
பிரதிபஷ நிரசன த்வரையால்  கரை கழற்ற அவசரம் இன்றிக்கே
இருக்கிற வேலைக் கையிலே உடைய ஆழ்வார்
ஒலியை உடைத்தாம் படி அருளிச் செய்த இத்தை கற்று வல்லார் –

இறைவராய் இருநிலம்  காவல் பூண்டு இன்ப நன்கெய்துவாரே –
பூமிப் பரப்புக்கு அடைய தாங்களே நிர்வாஹகராய்
தேஹ சமனந்தரம்
நித்ய விபூதியிலே புக்கு
ஏஷஹ்யேவா  நந்தயாதி -என்கிறபடியே
நிரதிசய ஆநந்த யுக்தராவார் –

———————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பெரிய திருமொழி-9-6—-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம்-

May 24, 2014

அக்கும் புலியின்   -பிரவேசம் –

கால் நடை தாராதே இருக்கிற என்னை
கால்நடை தருவார்
அவன் இருந்த தேசத்திலே கொடு போய் பொகடுங்கோள் -என்றார் –
திரு மா மகளைப் பெற்றும் என்னெஞ்சகம் கோயில் கொண்ட  பேரருளாளர் -என்று
பிராட்டி சந்நிதியும் உண்டாகவும் அனுசந்தித்தார் –
தமக்கு புருஷகாரம் ஆவார் அங்கே உண்டு -என்று அனுசந்தித்தவாறே தமக்கு
கால்நடை தரும் அளவாய் வந்து விழுந்தது –
அத்தாலே –
அங்கு நிற்கிறவன் தான் சால சீலாவானாய்
நாம் தான் வருவது எப்போதோ -என்று -தாம் முற்பாடனாய்-
நம் அவசரம் பார்த்து நிற்பான் ஒருவன் –
அனுகூலராய் இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களையும் போருங்கோள் என்று கூட்டிக் கொண்டு
தாமே போகப் பார்க்கிறார் –

——————————————————————-

அக்கும் புலியின தளமுடையார் அவரொருவர்
பக்கம் நிற்க நின்ற பண்பரூர் போலும்
தக்க மரத்தின் தாழ்சினை ஏறி தாய் வாயில்
கொக்கின் பிள்ளை வெள்ளிற  வுண்ணும் குறுங்குடியே —9-6-1-

அக்கும் புலியின தளமுடையார்-
அவனுக்கு ஆகாதார் இல்லை -என்கிறார் –
ஈஸ்வர அபிமாநிகளாய் இருப்பர்க்கும் முகம் கொடுத்துக் கொண்டு இருக்குமவன்
அனுகூலராய்ச் சென்று கிட்டுகிற நமக்கு முகம் தரச் சொல்ல வேணுமோ –
தொடையொத்த துளவமும் கூடையும் பொலிந்து -என்கிறபடியே
அனுகூல சிஹ்னத்தோடே வருகை அன்றிக்கே
அக்கும் எலும்பும் புலித் தோலும் உடையராய்
மற்றும் எருக்கம் பூ சாம்பல் என்றால் போலே நிஷித்த த்ரவ்யங்களுக்கு ஒரு அவதி இல்லை இறே –

அவர் ஒருவர் –
அவன் தவிர ஒண்ணாமை யாலே முகம் கொடுத்தாலும்
தமக்கு இதில் ஓர் ஆதாரம் இல்லாமையாலே-முகத்தை மாற வைத்து சொல்லுகிறார் –

பக்கம் நிற்க நின்ற பண்பரூர் போலும்
அவன் ஓர் அருகே நிற்க நின்ற
அவ்வளவே அன்றியே இன்னமும் தண்ணியராய் வாருங்கோள் என்று
சீலத்தை உடையவன் வர்த்திக்கிற ஊர் போலே –

தக்க மரத்தின் தாழ்சினை ஏறி தாய் வாயில் கொக்கின் பிள்ளை வெள்ளிற  வுண்ணும்-
அங்கு நிற்கிற அவன் படி
அங்குத்தை ஸ்தாவரங்களுக்கும் உண்டாயிற்று –
தக்க மரத்தின்-ஒரு முள் பற்றை அன்றிக்கே பாலார்க்கும் தவழ்ந்து ஏறலாம் படி இருக்கிற அங்குத்தை வருஷங்களின் படி -என்று
பட்டர் அருளிச் செய்ததாக பிரசித்தம் இறே –
அன்றிக்கே
மேலே -கொக்கின் பிள்ளை -என்கையாலே தன்னோடு
நாம சாம்யத்தை உடைத்தான மரத்திலே என்பாரும் உண்டு
கொக்கு என்று மாவுக்கும் பெயர்
கொக்கின் பழம் வீழ் கூடலூரே  -என்று உண்டாகையாலே –
தக்க மரத்தின் உடைய
தாழ்ந்த பணை தன்னிலே ஏறி  –

தாய் வாயில் கொக்கின் பிள்ளை வெள்ளிற  வுண்ணும்-குறுங்குடியே   –
கொக்கின் பிள்ளை தாய் வாயில்
வெள்ளிறாவை உண்ணா நிற்கும் ஆயிற்று  –
வெள்ளிறா-என்று ஒரு மத்ஸ்ய விசேஷம்
அதின் வாய்க்கு அடங்குமது தேடிக் கொடு வந்து கொடுக்கும் யாயிற்று
முறை கெடாமல் புஜித்துப் போருமாயிற்று
தாய் கொடு வந்து கொடுக்க அது ஜீவித்து போருமாயிற்று
ஆக
ரஷ்ய ரஷக பாவம் மாறாதே போரும் தேசமாயிற்று
சீலாவானாய் இருக்கிறவன் வர்த்திக்கிற தேசம் –
அவ் ஊரில் மரங்களுக்கும் அவன் படி உண்டு என்கிறார் –

———————————————————-

துங்க வரவத் திரை வந்துலவத் தொடு கடலுள்
பொங்கா ரரவில் துயிலும் புநிதரூர் போலும்
செங்கால அன்னம் திகழ் தண் பணையில் பெடையோடும்
கொங்கார் கமலத் தலரில் சேரும் குறுங்குடியே—-9-6-2-

திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிற அழகு எளியர்க்கு கிட்ட ஒண்ணாமை அன்றிக்கே
ப்ரஹ்மாதிகளுக்கும் அகப்பட இக்கரையிலே நின்று கூப்பிடும்படி சர்வாதிகனாய் இருக்கிறவன்
எல்லாருக்கும் ஒக்க அனுபவிக்கலாம் படி வர்த்திக்கிற தேசம் திருக் குறுங்குடி என்கிறார் –

துங்க வரவத் திரை வந்துலவத் தொடு கடலுள்   –
ஒக்கத்தை உடைத்தாய்
பெரிய   ஆரவாரத்தை உடைத்தாய்
இருக்கிற திரைகளானவை-சிறு திவளைகளாலே திருவடிகளில் வந்து தொடை குத்த –

பொங்கா ரரவில் துயிலும் புநிதரூர் போலும்  –
ஆழத்தை உடைத்தான கடலிலே பெரிய கிளர்த்தியை உடையனாய்
கண் வளர்ந்து அருளுகைக்கு ஈடான பரப்பை உடையனாய்
மென்மை குளிர்த்தி முதலானவற்றை   உடையனான
திரு வநந்த   வாழ்வான்  மேலே ஜகத் ரஷண சிந்தை பண்ணிக் கண் வளர்ந்து அருளுகிற –
இதுதான் ஸ்வயம் பிரயோஜநார்தம் அன்றிக்கே
ஆஸ்ரித அர்த்தம் ஆகையாலே வந்த சுத்தியை உடைத்தவன் வர்த்திக்கிற ஊர் போலே  –

செங்கால அன்னம் திகழ் தண் பணையில் பெடையோடும்கொங்கார் கமலத் தலரில் சேரும் குறுங்குடியே
சிவந்த காலை உடைத்தான அன்னமானது
அழகியதாய் குளிர்ந்த நீர் நிலங்களிலே பரிமளத்தை புறப்பட விடா நின்றுள்ள
தாமரைப் பூவிலே தன் சஹசரத்தோடே  நித்ய சம்ச்லேஷம் பண்ணி வர்த்தியா நின்றுள்ள திருக்குறுங்குடியே –

கீழே  நின்ற நம்பி அனுபவம்
இதில் கிடந்த நம்பி அனுபவம் –

————————————————

வாழக் கண்டோம் வந்து காண்மின் தொண்டீர்காள்
கேழல் செங்கண் மா முகில் வண்ணர் மருவுமூர்
ஏழைச் செங்காலின் துணை நாரைக்கு இரை தேடிக்
கூழைப் பார்வைக் கார் வயல் மேயும் குறுங்குடியே -9-6-3-

வாழக் கண்டோம் –
கிலேசித்து நோவு பட வேண்டாதே –
வாழுகைக்கு வழி பார்த்து வைத்தோம் –

வந்து காண்மின் தொண்டீர்காள் –
கைங்கர்ய ருசி உடைய நீங்கள்
கடுக வாருங்கோள் –

கேழல் –
ரஷ்ய வர்க்கத்தின் உடைய ரஷணத்துக்கு ஏகாந்தமாக கைக் கொள்ளும்
வடிவு ஒழிய தனக்கு என்ன ஒரு ரூபம் இல்லையாயிற்று –

செங்கண்-மா முகில் வண்ணர் மருவுமூர் –
மஹாஸ் வராஹஸ் ஸ்புட பத்ம லோசன -என்கிறபடியே
காணவே தாபம் எல்லாம் ஆறும்படியாக குளிர்ந்து
முகில் போலே இருக்கிற வடிவை உடையனாய் இருகிறவன் –
அவதாரங்கள் போலே தீர்த்தம் பிரசாதித்து போகாதே நித்ய வாஸம் பண்ணுகிற தேசம் –

ஏழைச் செங்காலின் துணை நாரைக்கு இரை தேடிக் கூழைப் பார்வைக் கார் வயல் மேயும் குறுங்குடியே –
மிருதுவாய் சிவந்த காலை உடைத்தாய்
சம்ஸ்லேஷத்தாலே போது போக்க வேண்டும்படியாய் இருக்கிற இனிய துணையான சேவலுக்கு ஆமிஷம் தேடி
க்ரித்ரிமமான பார்வையை உடைய நாரை யானது கருவடைந்த பயிர்களிலே போய் மேயா நிற்குய்ம் யாயிற்று-
பேடையோடே நித்ய சம்ச்லேஷத்தாலே இட்டடி பேர்க்க மாட்டாதே
கிடந்த இடத்தே கிடக்க -பெடையானது கால் நடை தந்து அதுக்கு இரை தேடித் போகா நிற்கும் யாயிற்று –

அதனுடைய பும்ஸ்த்வம் இத்தலையாய் -இதனுடைய ஸ்த்ரீத்வம் அத்தலையாய் மாறாடும் படியாக யாயிற்று கலந்தது –
இது கால் நடை தந்து போன படி எங்கனே -அது கிடக்க -என்னில்
இதின் காலில் சிவப்பை நினைத்தால் அதுக்குக் கடலோடலாம் இறே
தன்னைக் குறித்து தோற்ற தோல்வி யாகையாலே
சேவலின் மிடுக்கும் இதன் மேலே வந்து ஏறும் இறே –

———————————————–

சிரம் முன் ஐந்தும் ஐந்தும் சிந்தச் சென்று அரக்கன்
உரவும் கரமும் துனித்த வுரவோனூர் போலும்
இரவும் பகலும் ஈன் தேன் முரல மன்று எல்லாம்
குரவின் பூவே தான் மண நாறும் குறுங்குடியே -9-6-4-

சிரம் முன் ஐந்தும் ஐந்தும் சிந்தச் சென்று அரக்கன் உரவும் கரமும் துனித்த வுரவோனூர் போலும்
தலைகள் பத்தும் சிதறும்படியாக
சென்று அடை மதிள் படுத்தி
ராவணன் உடைய நெஞ்சில் திண்மையையும்
தோளில் மிடுக்கையும் போக்கின ஆண் பிள்ளை வர்த்திக்கிற ஊர் போலே –

இரவும்   பகலும் ஈன் தேன் முரல –
திவாராத்ரா விபாகம் இன்றிக்கே
எப்போதும் ஒக்க வண்டுகள் ஆனவை மது பானத்தை பண்ணி ஆளத்தி வைக்க –

மன்று எல்லாம் குரவின் பூவே தான் மண நாறும் குறுங்குடியே –
வெளி நிலம்  அடைய குரவின் பூ நாற்றமாய் கிடக்கும் ஆயிற்று
சர்வ இந்த்ரியங்களுக்கும் விஷயம் உள்ள தேசம் ஆயிற்று
வண்டின் உடைய த்வநியாலே செவிக்கு விஷயம் உண்டாய்
புஷ்ப கந்த க்ராஹணத்தாலே க்ராண  இந்த்ரியத்துக்கு விஷயம் உண்டாய்
இது தான் அனைத்துக்கும் உப லஷணமாய் இருக்குமாயிற்று –

————————————————-

கவ்வைக் களிற்று மன்னர் மாளக் கலி மாந்தேர்
ஐவர்க்காய் அன்று அமரில் உய்த்தானூர் போலும்
மைவைத்திலங்கு  கண்ணார் தங்கள் மொழி யொப்பார்
கொவ்வைக் கனிவாய்க் கிள்ளை பேசும் குறுங்குடியே–9-6-5-

கவ்வைக் களிற்று மன்னர் மாளக் கலி மாந்தேர்
கவ்வையை உடைத்தாய்
பெரிய ஆரவாரத்தை  யும் உடைத்தாய்
திரள் திரளான ஆனை அணிகளை உடைய ராஜாக்கள் ஆனவர்கள் முடியும் படியாக –
பெரு மிடுக்கை உடைத்தாய் –
பரந்து இருந்துள்ள தேரை –

ஐவர்க்காய் அன்று அமரில் உய்த்தானூர் போலும் –
பாண்டவர்களுக்காக யுத்தத்தில் நடத்தினவன்
வர்த்திக்கிற ஊர் போலும் –
முடி சூடுவார் யாரோ என்று இருக்குமாயிற்று
தாழ்வு செய்து திரிகைக்கு –

மைவைத்திலங்கு  கண்ணார் தங்கள் மொழி யொப்பார்
அஞ்சனத்தால் அலங்க்ருதமாய்
உஜ்ஜ்வலமாகா நின்றுள்ள  கண்ணை உடையரான ஸ்திரீகள் உடைய
பேச்சை புத்தி பண்ணி -அப்படியே நமக்கும் வர வேணும் என்று

கொவ்வைக் கனிவாய்க் கிள்ளை பேசும் குறுங்குடியே   –
கோவை பலம் போலே சிவந்த அதரத்தை உடைத்தான
கிளிகளானவை
அவர்கள் பேச்சை அப்யசியா நின்றுள்ள திருக் குறுங்குடியே –

————————————

தீ நீர் வண்ண மா மலர் கொண்டு விரை ஏந்தி
தூ நீர் பரவித் தொழுமின் எழுமின் தொண்டீர்காள்
மா நீர் வண்ணர் மருவி யுறையும் இடம் வானில்
கூநீர் மதியை மாடம் தீண்டும் குறுங்குடியே —9-6-6-

தீ நீர் வண்ண மா மலர் கொண்டு விரை ஏந்திதூ நீர் பரவித் தொழுமின் எழுமின் தொண்டீர் காள்-
தூப தீபங்களுக்கு அக்னி
அர்க்க்யாதிகளுக்கு ஜலம்
நாநா விதமான புஷ்பம்
இவற்றோடு கூட கந்த த்ரவ்யமான சந்தனம்
இப்படி சாமாராதன உபகரணங்களைத் தரித்துக்  கொண்டு
அதிகாரிகளான நீங்கள்
அடைவு கெட ஏத்தி
அஞ்சலியை பண்ணி
உஜ்ஜீவித்துப் போகப் பாருங்கோள்  –
அதிகாரிகளாய் -அநந்ய பிரயோஜனராய் -கைங்கர்ய ருசியை உடைய நீங்கள் –

மா நீர் வண்ணர் மருவி யுறையும் இடம் வானில்கூநீர் மதியை மாடம் தீண்டும் குறுங்குடியே-
கடல் போலே ஸ்ரமஹரமான வடிவை உடையவன்
அவதாரங்கள் போலே தீர்த்தம் பிரசாதியாதே நித்ய வாஸம் பண்ணுகிற தேசம் –
ஸ்வர்க்கத்தில் வளைவை ஸ்வ பாவமாக உடைய சந்தரன் இறாய்க்க
அவன் மேலே விழுந்து தீண்டும்   படியான ஒக்கத்தை உடைத்தாய் இருக்குமாயிற்று அங்குத்தை மாடங்கள் –

—————————————–

வல்லிச் சிறு நுண்ணிடை யாரிடை நீர் வைக்கின்ற
அல்லல் சிந்தை தவிர அடைமின் அடியீர்காள்
சொல்லில் திருவே யனையார் கனிவாய் எயிறு ஒப்பான்
கொல்லை முல்லை மெல்லரும்பீனும் குறுங்குடியே —9-6-7-

வல்லிச் சிறு நுண்ணிடை யாரிடை நீர் வைக்கின்ற அல்லல் சிந்தை தவிர அடைமின் அடியீர்காள்-
கொடி போலே நேரியதாய்
நுண்ணிய தான இடையை உடைய ஸ்திரீகள் பக்கல்
நீங்கள் வைக்கிற துக்காவஹமான மநோ ரதத்தை தவிர –
முதலிலே கிடையாமையாய்
அலாபத்தால் வரும் கிலேசம் பொறுக்க ஒண்ணாததாய்-
அது தான் அப்ராப்தமாய்
மேல் நரகத்துக்கு உறுப்பாய் இருக்க
சேஷித்தது
ஜன்மாதிகளுக்கு ஹேதுவாய் இருக்கிற   விஷயங்களைப் பற்றி இருக்கிற
மநோ ரதத்தைத் தவிர்த்து
அவனுக்கே அடியோம் என்று இருக்கிற நீங்கள் அவன் வர்த்திக்கிற
ஊரைச் சென்று அடையுங்கோள்-

சொல்லில் திருவே யனையார் கனிவாய் எயிறு ஒப்பான்-
இவ்வருகே உள்ளாள் ஒருத்தியை
பிரதான மகிஷி யோடு ஒக்க சொல்ல ஒண்ணாது இறே-
அத்தை பொறுத்து வடிவு அழகைக் கொண்டு சொல்லப் பார்க்கில்
சாஷாத் ஸ்ரீ லஷ்மியோடு ஒக்கச் சொல்லலாம் படி இருப்பார்கள் ஆயிற்று
அவர்கள் உடைய சிவந்த அதரத்தில் உண்டான எயிறு உண்டு
தந்த பங்க்தி -அத்தோடு ஒக்க வேணும் என்று பார்த்து –

கொல்லை முல்லை மெல்லரும்பீனும் குறுங்குடியே  –
ஊரில் கொடியினுடைய தந்த  பங்க்தியை  கண்டவாறே
கொல்லையில் கொடியும் அப்படியாக வேணும் என்று
மெல்லரும்பை உண்டாக்கும் ஆயிற்று –

—————————————-

நாராரிண்டை நாண் மலர் கொண்டு நந்தமர்காள்
ஆராவன்போடு எம்பெருமானூர் அடைமின்கள்
தாராவாரும் வார் புனல் மேய்ந்து வயல் வாழும்
கூர்வாய் நாரை பேடையோடாடும் குறுங்குடியே –9-6-8-

நாராரிண்டை –
நாரிலே செறியத் தொடை உண்ட மாலை –
நாண் மலர் –
தொடை உண்ணாத செவ்விப் பூ –
அன்றிக்கே
மாலையான செவ்விப் பூ -என்னுதல்
கொண்டு நந்தமர்காள் –
நம்மோடு ஒரு  சம்பந்தம்  உடைய நீங்கள் –

ஆராவன்போடு எம்பெருமானூர் அடைமின்கள் –
பர பக்தி உக்தராய்க் கொண்டு -வகுத்த ஸ்வாமி யானவன்
இருக்கிற தேசத்தை சென்று அடையுங்கோள்  –

தாராவாரும் வார் புனல் மேய்ந்து வயல் வாழும்கூர்வாய் நாரை பேடையோடாடும் குறுங்குடியே   –
தாராக்கள் நெருங்கி
ஜல சம்ருத்தியை உடைத்தான நிலங்களிலே மேய்ந்து
அந்த வயலிலே வர்த்தியா நின்றுள்ள
கூரிய வாய் அலகை உடைத்தான நாரையானது
தன் பேடையோடே சம்ஸ்லேஷித்து
அந்த ஹர்ஷத்துக்கு போக்கு விட்டு ஆடா நின்றுள்ள திருக் குறுங்குடியே –

——————————————————————–

நின்ற வினையும் துயரும் கெட மா மலரேந்திச்
சென்று பணிமின் எழுமின் தொழுமின் தொண்டீர்காள்
என்றும் இரவும் பகலும் வரி வண்டு இசை பாடக்
குன்றின் முல்லை மன்றிடை நாறும் குறுங்குடியே —9-6-9-

நின்ற வினையும் –
பிரபல கர்ம பிரதிபத்தமாய்க் கொண்டு
அது சமைந்தால் அனுபவித்திலே இழிகைக்கு அவசரம் பார்த்து நிற்கிற பாபம் —

துயரும் –
அங்கன் என்றால் பிரதிபத்தம் அன்றிக்கே
அப்போது அனுபவிக்கிற பாபம்

கெட மா மலரேந்திச் –
இவை நசிக்கும்படியாகச் செவ்விப் பூக்களைத் தரித்துக் கொண்டு சென்று –

சென்று பணிமின் எழுமின் தொழுமின் தொண்டீர்காள்  –
தீர்க்க பிரமாணத்தை பண்ணுங்கோள் –
வழு விலா வடிமை செய்ய வேண்டும் -என்றும் இருக்கும் நீங்கள் –

என்றும் இரவும் பகலும் வரி வண்டு இசை பாடக் –
இரவு பகல் என்று வாசி அன்றிக்கே
என்றும் ஒக்க மது பானத்தை பண்ணி வந்த பௌஷ்கல்யம்
வடிவிலே தோற்ற இருக்கிற வண்டானது
உள்ளு புக்க த்ரவ்யம் இருந்த இடத்திலே இருக்க ஒட்டாமையாலே இசை பாட –

குன்றின் முல்லை மன்றிடை நாறும் குறுங்குடியே —
அது தனக்கு என்னத் தேடித் போக வேண்டாதே
இருந்த இடத்தே வந்து கந்தியா நிற்கும் ஆயிற்று  –

——————————————-

சிலையால் இலங்கை செற்றான் மற்றோர் சினவேழம்
கொலையார் கொம்பு கொண்டான் மேய குறுங்குடி மேல்
கலையார் பனுவல் வல்லான் கலியன் ஒலி மாலை
நிலையார் பாடல் பாடப் பாவம் நில்லாவே —9-6-10-

சிலையால் இலங்கை செற்றான் மற்றோர் சினவேழம் –
தேவதைகள் உடைய வர பலத்தாலே அழியாத ஊரை
அம்பாலே அழியச் செய்தவன் –
அங்கன் ஓர் ஆயுதமும் இன்றிக்கே
வெறும் கை உடனே போய்
மிக்க சினத்தை உடைத்தாய் –

கொலையார் கொம்பு கொண்டான் மேய குறுங்குடி மேல் –
கொன்று கொடு திரிகிற குவலயா பீடத்தின் உடைய கொம்பை
அனாயாசேன முறித்து –
அவ்விரண்டு அவதாரத்திலும் பிற்பட்டாருக்கு இழக்க வேண்டாத படி
நித்ய வாஸம் பண்ணுகிற திருக் குறுங்குடியின் மேலே –

கலையார் பனுவல் வல்லான் கலியன் ஒலி மாலை –
சாஸ்திர உக்தமான லஷணத்தில் ஒன்றும் குறையாத படி
கவி பாட வல்லரான ஆழ்வார்
ஒலியை உடைத்தாக அருளிச் செய்த –

நிலையார் பாடல் பாடப் பாவம் நில்லாவே –
உக்தி ஆபாசங்களால் அழிக்க ஒண்ணாத படியான
திண்மையை உடைய இத்தை
அஹ்ருத்யமாகச் சொல்ல
புத்தி பூர்வகமாகப் பண்ணின பாபங்கள் போம் –

———————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பெரிய திருமொழி-9-5—ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம்-

May 24, 2014

தவள -பிரவேசம் –

அஹம் அஸ்ய அபராத ஆலய –
ஆத்மாவுக்கு ஞாந  ஆனந்தாதிகள் நிரூபகமாய் இருக்கை   தவிர்ந்து
அபராதங்களை இட்டு நிரூபிக்கும்படி யாயிற்று துருப்பற்றுக் கிடந்த படி –
ஜ்ஞாதாஹம் பகவத் சேஷதைக ரசோஹம்-என்று இறே
ஆகை இறே ஸ்வேன  ரூபேண அபி நிஷ்பத்யதே -என்று
ஸ்வரூபாபத்தி மோஷமாக சொல்லுகிறது –
இத்தால் இவனுக்கு பிரகிருதி சம்பந்தம் வந்தேறி என்னும் இடம் சொல்லுகிறது
ரத்நாதிகளை சாணையிலே ஏறிட்ட வாறே புகர் பெறா நின்றது
வந்தேறி யாகி இறே அழுக்கு கழிகிறது
அசித் சம்சர்க்கம் அநாதியாய் இருக்கச் செய்தே அந்தவத்தாகாவும் குறை வற்று இருந்தது
அகிஞ்சன –
இப்படி அபராதங்களுக்கு கொள்கலம் ஆகா நின்றேன்  என்கிற அனுதாபம் இன்றிக்கே இருக்கை –
அநந்ய கதி –
இப்படி ஒரு கை முதலும் இல்லாத பின்பு
இவன் தய நீயன் என்று இரங்கி கைக் கொள்ளுகைக்கு தேவரை ஒழிய வேறு ஒருவர் இல்லை –
புகு வாசல் அற்ற படி –
த்வமேவ உபாய பூதோ மே பவ –
ஆராய்ந்து பார்த்த இடத்தே நானும் எனக்கு இன்றிக்கே இருந்து
பிறரும் எனக்கு இன்றிக்கே இருந்த பின்பு
நீ ஒருவனே உபாயமாக வேணும் –
இது பிரார்தனா மதி –
இது புருஷார்த்தமாக தலைக் கட்டுகைக்கு இந்த புத்தி விசேஷமே வேண்டுவது
ஆத்மா சத்தையோ பாதி இறே ஸ்வீகாரமும் –

மாம் –
என்னை -ஏகம் என்றால் போலே இருக்கிறது
சரணா கதிரித்யுக்தா –
இது சரணா கதி என்று சொல்லப் பட்டது
சா
அந்த சரணா கதி யானது
தேவேசமின் பிரயுஜ்யதாம்
சரண்யனான சர்வேஸ்வரன் பக்கலிலே இது செய்ய அடுப்பது
ஒரோ வ்யக்திகளிலும் இது தானே ஹனன ஹேதுவாகா நின்றது இறே
நீர்மையாலே ரஷிப்பாரும் உண்டோ-

கீழே சில பஷிகளை தூது விட்டு -நெஞ்சை தூது விட்டு –
அவை மீண்டு வருவதற்கு முன்பே பாதக பதார்த்தங்கள் கையிலே நலிவு பட்டு
தாய்மார் தோழிமார் அடைய ஹிதம் சொல்லி மீட்கப் பார்க்க
உங்கள் உடைய ஹித வசனம் கேட்டு மீளாத படி நெஞ்சு அவன் பின்னே போயிற்று
அது வரும் அளவும் அவன் சொன்ன வார்த்தையை விஸ்வசித்து இருக்கும் அத்தனை
என்று துணிந்த இடத்திலும் அவன் வரக் கண்டிலள்
இவ்விடம் ஒருத்தி உடைய ஆற்றாமையை பரிஹரிக்கைக்காக வந்த இடம் ஆகையால் அங்கு ஆறி இருக்க்கவுமாம் –
இது அங்கன் அன்றிக்கே
நம்முடைய துக்க நிவ்ருதிக்காக வந்து இருக்கிற தேசம் இறே
ஆனபின்பு திருக் குறுங்குடியிலே என்னைக் கொடு போய் பொகடுங்கோள்-கால் நடை தருவார் -என்கிறாள் –

————————————————————————-

தவள இளம்பிறை துள்ளும் முந்நீர் தண் மலர்த் தென்றலோடு அன்றில் ஒன்றித்
துவள வென் நெஞ்சகம் சோர வீரும் சூழ் பனி நாள் துயிலாது இருப்பன்
இவளுமோர் பெண் கொடி என்று இரங்கார் என் நலம் ஐந்தும் முன் கொண்டு போன
குவளை மல் நிற வண்ணனர் மன்னு குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின் —9-5-1-

ஒரு விஷயத்தை ஆசைப் பட்டு பெறாதே இருக்கிற நமக்கு நாட்டுப் பகையாக விட்டதே

தவள இளம்பிறை –
அக்நி போலே -ஏஷைவாசம் சதே லங்காம் -என்னுமா போலே
நான் நான் என்று முற்பட்டு கொண்டு வருகிற சிறு திவலையை யுடைத்தான கடல்

அற நிர்மலமாய்
தன் பருவம் நிரம்பாதே
எல்லாருக்கும் ஒக்க வைத்த கண் வாங்காதே
கண்டு கொண்டே இருக்க வேண்டும்படியான சந்தரன்-

துள்ளும் முந்நீர் –
அக்நி போலே -ஏஷைவாசம் சதே லங்காம் -என்னுமா போலே
நான் நான் என்று முற்பட்டு கொண்டு வருகிற சிறு திவலையை யுடைத்தான கடல்   –

தண் மலர்த் தென்றலோடு –
ஸ்ரமஹரமான மலரிலே போய்ப் புக்கு -பத்மகேசர சம்ச்ப்ருஷ்டம் -என்கிறபடியே
அது தன்னிலும் ஆழவிழியில் வெக்கை தட்டும் என்று பார்த்து
தாதையும் சுண்ணத்தையும் ஏறிட்டுக் கொண்டு
பரிமளத்தை கொடு வந்து தோற்றின தென்றலோடு கூட –

அன்றில்-
அவை போலே ஒரு விசேஷணம் இட்டு விசேஷிகக ஒண்ணாதே ஸ்திரீ வதம் பண்ண வல்ல அன்றில் –

ஒன்றித்-
அராஜகமான தேசத்திலே வன்னியர் அடைய தங்களிலே கை செய்து கீழ் ஓலை  விட்டு நாலு வாசலையும் வந்து பற்றுமா போலே –

இவை இப்படி எல்லாம் கூடித் திரண்டு ஒரு முகம் செய்து செய்கிறது தான் என் என்னில் –
துவள வென் நெஞ்சகம் சோர வீரும் –
முன்பே விரஹத்தாலே தரை பற்றி இருக்கிற என்னுடைய ஹிருதயமானது
துவளும்படியாகவும்
சோரும்படியாகவும்
ஈரா நின்றது –
மிருதுவாய் இருப்பதொரு கொழுந்தை நெருப்பிலே இடுவாரைப் போலே ஈரும் –
எதிர்தலையில் எளிமை கண்ட இது தனக்கு இடமாக நலியா நின்றதாயிற்று –

சூழ் பனி நாள் துயிலாது இருப்பன்-
எனக்குத் தான் ஒருவர் தேட்டமாயோ இருக்கிறது –
ஒழுகு நுண் பனிக்கு ஒடுங்கிய பேடையையடைய வஞ்சிறை கோலித் தழுவு நள்ளிருள் -என்கிறபடியே
அணைத்த நாயகன் உடைய கைக்குள்ளே அடங்க வேண்டிய காலத்திலே
அவனைப் பிரிந்து பாதக பதார்த்தங்களின் கையிலே அகப்பட்டு
கண் உறங்காது இருக்கிற என்னை –

இவளுமோர் பெண் கொடி என்று இரங்கார் –
இவள் ஒரு அபலை அன்றோ
இதுக்கு எல்லாம் இவள்  ஆடல் கொடுக்க வல்லளோ -என்று
நம் பக்கலிலே கிருபை பண்ணுகிறிலன்-
அன்றிக்கே
தம்மை பிரிந்து பத்து மாசம் ஜீவித்து இருந்தவளோ பாதியாக நினைத்தி இரா நின்றார் –

என் நலம் ஐந்தும் முன் கொண்டு போன-
என் நலம் ஐந்தும் என்கிற இது ஸ்ரோத்ராதிகளால் வரும் அறிவை -என்னுதல்
அன்றிக்கே
என் நலனும் என் நிறைவும் –திரு நெடும் தாண்டகம் -25-என்கிறத்தை -என்றமுதினார் –

குவளை மல் நிற வண்ணனர் மன்னு குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின் –
இவை கொடு போகைக்கு இட்ட மருந்தாயிற்று
வடிவைக் காட்டி கண்டது அடைய பகையாம்படி பண்ணி பொகட்டுப் போன இவ்விடம் போல அன்றிக்கே
இவை தான் அனுகூலமாம்படி அவன் நித்ய வாஸம் பண்ணுகிற தேசத்திலே கொடு பொய் பொகடுங்கள் –

————————————

தாதவிழ் மல்லிகை புல்லி வந்த தண் மதியின் இளவாடை இன்னே
ஊதை திரி தந்து உழறி உண்ண   ஓர் இரவும் உறங்கேன் உறங்கும்
பேதையர் பேதமையால் இருந்து பேசிலும் பேசுக பெய் வளையார்
கோதை நறு மலர் மங்கை மார்பன் குறுங்குடிக்கே யென்னை யுய்த்திடுமின்–9-5-2-

தாதவிழ் மல்லிகை புல்லி வந்த தண் மதியின் இளவாடை இன்னே –
மல்லிகை யானது தாது அவிழ்கிற அளவிலே போய் அணைந்தது –
அது உஷ்ணிக்குமே-
அந்த வெக்கையை சந்தரனோடே கலசி ஆறி அனுகூலமாய்க் கொண்டு
மந்தமாய் சஞ்சரிக்கிற வாடை யாகிற –

ஊதை திரி தந்து உழறி உண்ண   ஓர் இரவும் உறங்கேன் உறங்கும் –
ஊதை-என்று குளிர்  காற்றுக்கு பெயர் –
ஊதை கூதையும் குளிர் பனிக் காற்று -என்னக் கடவது இறே
வாடை நலிகிற படி எங்கனே என்னில்
இன்னே -என்னும் இத்தனை
வாடை நலிகிற படியைச் சொல்லில் வாய் வேம் –
திரி தந்து உழறி உண்ண  –
ஆளைக் கண்ட மத்த கஜம் போலே
கால் வாங்கின போதே அங்கே இங்கே சஞ்சரித்து துகைத்து முடிக்க –
ஓர் இரவும் உறங்கேன்-
ஒரு போது உறக்கத்தோடு செலுத்தி
மற்றொரு போது கண் உறங்காதே நோவு படுகை அன்றிக்கே
காலம் எல்லாம் உறக்கம் இன்றிக்கே நோவு படுகிறேன் –

உறங்கும் -பேதையர் பேதமையால் இருந்து பேசிலும் பேசுக –
அபிமதரைப் பிரிந்தால் வரும் கிலேசம் அறியாத அறிவு கேடர் ஆனவர்கள்
காற்றுக்கு இறாயாதே-அது வரும் வெளி நிலம் தேடி படுக்கை படுப்பார்கள் ஆயிற்று –
அவர்கள் தாம்தாம் உடைய அறிவு கேட்டால்
இவள் வாடைக்கிடையா நின்றாள்  -கண் உறங்குகிறலள்
அவன் தான் வரும் அளவும் ஆறி இருக்கிறலள் -என்கிற
இது தன்னை குண ஹானியாக நினைத்து பழி சொல்லிலும் சொல்லுவார்கள் –

பெய் வளையார் –
கையில் வளை தங்குவார் சொல்லும் வார்த்தை கொண்டு
நமக்கு கார்யம் என் –

கோதை நறு மலர் மங்கை மார்பன் குறுங்குடிக்கே யென்னை யுய்த்திடுமின்   –
நம்முடைய ப்ராவண்யத்தை குண ஹானியாக
உப பாதிக்கை அன்றிக்கே –
ந கச்சின் ந அபராத்யதி -என்று பொறுப்பித்து அவன் திருவடிகளோடு  சேர்க்குமவள்
இருந்த இடத்தே கொடுபோய் பொகடுங்கள்  –

——————————————————-

காலையும் மாலை யொத்துண்டு கங்குல் நாழிகை யூழியின் நீண்டுலாவும்
போல்வதோர் தன்மை புகுந்து நிற்கும் பொங்கழலே   யொக்கும் வாடை சொல்லில்
மாலவன் மா மணி வண்ணன் மாயம் மற்றுளவை வந்திடா முன்
கோல மயில் பயிலும் புறவில் குறுங்குடிக்கே யென்னை உய்த்திடுமின் —9-5-3-

காலையும் மாலை யொத்துண்டு-
காலையிலும் மாலையில் போலே இருக்க -பாதித்து முடியா நின்றது –
காலையும் மாலை போலே பாதகமாகா நின்றது –
காலையரும்பி –மாலை யரும் -என்கிறபடியே யேயாய்
இருக்கிற படியே இருக்கிறது இல்லை –
ஏக ரூபமாய் நலியா நின்றது –

கங்குல் நாழிகை யூழியின் நீண்டுலாவும் போல்வதோர் தன்மை புகுந்து நிற்கும் –
ராத்ரியில் நாழிகை யானது கல்பத்தில் காட்டிலும்
இருக்கிற ஸ்வ பாவமானது கிட்டி நில்லா நின்றது –

பொங்கழலே   யொக்கும் வாடை சொல்லில் –
வாடை பாதகமாம் படி தானே பேச்சுக்கு நிலம் இல்லை
சொல்லில் படபாமு காக்நி போலே இரா நின்றது –

மாலவன் –
அவன் ஆகிறான் -சாலப் பெரியான் ஒருவன் இறே
அவனுக்கு இவற்றுக்கு இடைய வேண்டாவே –

மா மணி வண்ணன் –
பெரியவன் என்று கை வாங்க ஒண்ணாதே –
மேல் விழுந்து பெற வேண்டும்படியான வடிவைப் பிடித்தவன் –

மாயம் மற்றுள-
அவன் விபூதியில் ஆச்சர்யமான
பாதக பதார்த்தங்களுக்கு எண்ணில்லை –
அன்றில் -தென்றல் -கடலோசை -என்றால் போலே
சொல்லுகிறவற்றுக்கு ஒரு எண்ணில்லை இறே –

அவை வந்திடா முன்
அவை நலிய அபக்ரமித்தது அத்தனை –
அவை வந்துநம்மை முடித்து தலைக் கட்டுவதுக்கு முன்னே –

கோல மயில் பயிலும் புறவில் குறுங்குடிக்கே யென்னை உய்த்திடுமின் –
நம் இனம் உள்ள ஊரிலே கொடு போய் பொகடப் பாருங்கோள் –
தர்ச நீயமான மயில் நெருங்கி வர்த்திக்கிற பர்யந்தத்தை உடைத்தான
திருக்குறுங்குடி யிலே கொடு போய் பொகடப் பாருங்கோள்  –

——————————————————-

கரு மணி பூண்டு  வெண்ணாகணைந்து  காரி இமில்  ஏறு அணர் தாழ்ந்து உலாவும்
ஒரு மணி யோசை என்னுள்ளம் தள்ள ஓர் இரவும் உறங்காது இருப்பேன்
பெரு மணி  வானவருச்சிவைத்த பேரருளாளன் பெருமை பேசி
குரு மணி நீர் கொழிக்கும் புறவில் குறுங்குடிக்கே யென்னை உய்த்திடுமின்—9-5-4-

கரு மணி பூண்டு  –
கரு மணியினுடைய நிறமும் ஸ்ம்ருதி விஷயமாய் பாதகம் ஆகா நின்றது –

வெண்ணாகணைந்து  –
படுபாடு அல்லது அறியாத நாகுகளோடே அணைந்து
தான் தன்னுடைய ஸ்த்ரீத்வாதி களாலே இறாய்க்க
அவன் மேல் விழும்படிக்கு ஸ்மாரமாகா நின்றது –

காரி இமில்  ஏறு அணர் தாழ்ந்து உலாவும் –
கறுத்த ககுத்தை உடைத்தாய் இருக்கிற
ஒரு மணி யாய்த்து –
மற்று உள்ள பாதக பதார்த்தங்களில் இதுக்கு ஒப்பது ஓன்று இல்லை யாயிற்று –

ஒரு மணி யோசை என்னுள்ளம் தள்ள ஓர் இரவும் உறங்காது இருப்பேன் –
அந்த மணி யோசை யாகிறது -அல்லாதவை போல் அன்றிக்கே
செவி வழியே புகுந்து பாதகம் ஆகா நின்றது இறே –
இது ஒழிந்தது அடைய உறங்கிற்று இறே
தொட்டார் மேலே தோஷமாம் படி இருக்கிற ஹிருதயத்தை தள்ள
ராத்ரியாக நித்தரை இன்றிக்கே நோவு படா நின்றேன் –

பெரு மணி  வானவருச்சிவைத்த –
அயர்வறும் அமரர்கள் தங்களுக்கு முடி மேலே மணியாக வைத்த
சிரோ பூஷணமாக வைக்கப் பட்ட –

பேரருளாளன் பெருமை பேசி –
அவனுடைய பெருமை பேசி
ஒரு மணி யோசை என் உள்ளம் தள்ள ஓர் இரவும் உறங்காது இருப்பேன் -என்னுதல்-
பேச -என்றதாகில்
ஒருவனுடைய நீர்மை இருக்கும் படியே
ஒருவனைப் பிரிந்து ஒருத்தி படும் பாடே -என்று இரண்டு இடத்திலும் உள்ளாறும்
நின்று சொல்லும்படியாக -என்றாகிறது –

குரு மணி நீர் கொழிக்கும் புறவில் குறுங்குடிக்கே யென்னை உய்த்திடுமின்  –
பெரு விலையனான ரத்னங்களை நீரானது  கொழித்து  எறடா நிற்பதான
பர்யந்தத்தோடே கூடின திருக் குறுங்குடியிலே கொடு போய் பொகடுங்கோள் –

———————————————–

திண் இமில் ஏற்றின் மணியும் ஆயன் தீங்குழ லோசையும் தென்றலோடு
கொண்டதோர் மாலையும் அந்தி ஈன்ற கோல விளம்பிறையோடு கூடி
பண்டை வல்லவிவை நமக்குப் பாவியேன் ஆவியை வாட்டம் செய்யும்
கொண்டல் மணி நிற வண்ணர் மன்னு குறுங்குடிக்கே யென்னை யுய்த்திடுமின் —9-5-5-

முன்பு  சொன்னவை போல் அன்றிக்கே
தனித் தனியே இவை முடித்து விடுமா போலே இரா நின்றது –
தண் மலர்த் தென்றலோடு அன்றில் ஒன்றி -என்னச் செய்தே பின்னையும் ஜீவித்து இருந்தோம் இறே –

இவை நம்மை வைப்பன வன்றிக்கே இரா நின்றன –

திண் இமில் ஏற்றின் மணியும்
திண்ணியதாய் இருந்துள்ள இமில் உண்டு ககுத்து –
அத்தை உடைத்தான வ்ருஷபத்தின் உடைய கழுத்தில் மணியும்
அவிழ்த்து விடுவார் இல்லாமையாலே மணி தானும் திண்ணியதாகலாம்  இறே –

ஆயன் தீங்குழ லோசையும் –
பிராமணன் உடைய குழல் ஓசைக்கு கேளாள் காணும் இவள் –
இடையன் உடைய இனிதான குழல் ஓசையும் –
அதினுடைய ரஸ்யத்தை எவ்வளவு உண்டு -அவ்வளவும் பாதகமாம் இறே  –

தென்றலோடு கொண்டதோர் மாலையும் –
தென்றலோடு கூட பெரிய கோட்பாட்டை உடைத்தாய்
வருகிற மாலையும் –

அந்தி ஈன்ற கோல விளம்பிறையோடு கூடி-
வழிப் பகையான சந்தரன் ஆயிற்று –
சத்ருவின் வயிற்றிலே பிறந்த சத்ருவாய்-
சந்த்யை தானே  பாதகமாய் இருக்கச் செய்தே
அதிலே சந்த்யை தான் என்னுடைய சத்ரு நிரசனத்துக்கு ஒரு பிள்ளை வேணும் என்று பெற்றால் போலே இருக்கை –
ராவணன் இந்திர ஜித்தை பெற்றால் போலே –

பண்டைய வல்லவிவை நமக்கு –
அவனோடு சம்ஸ்லேஷிப்பதற்கு முன்பு தானே பாதகம் என்னும்  வ்யுத்புத்தி இல்லை –
சம்ஸ்லேஷத்தில் தானே அனுகூலமாய் இருக்கும் –
முன்புத்தை பாதக பதார்த்தங்களின் அளவாய் இருக்கிறது இல்லை -என்னுதல்  –

பாவியேன்-
கலந்த போதோடு பிரிந்த போதோடு வாசி அற ஆறி இருக்கலாம்  விஷயம் அன்றிக்கே
பிரிந்து ஆற்ற ஒண்ணாத குணாதிக விஷயத்தோடே கலக்கும் படியான மகா பாபத்தைப் பண்ணினேன் –

ஆவியை வாட்டம் செய்யும்-
தொட்டார் மேலே தோஷமாய் இருக்கிற
பிராணனை முடிக்கப் பாரா நின்றது –

கொண்டல் மணி நிற வண்ணர் மன்னு குறுங்குடிக்கே யென்னை யுய்த்திடுமின்-
இவை பாதகமாம் படி அவன் நித்ய வாஸம் பண்ணுகிற தேசத்து
ஏறக் கொடு போய் பொகடுங்கோள்  –
கொண்டல் போலேயும் நீல மணியினுடைய நிறம் போலேயும் இருக்கிற
நிறத்தை உடையனானவன் வர்த்திக்கிற தேசத்தில் கொடு போய் பொகடுங்கோள் –

—————————————————-

எல்லியும் நன் பகலும் இருந்தே ஏசிலும் ஏசுக வேந்திழையார்
நல்லரவர் திறம் நாம் அறியோம் நாண் மடம் அச்சம் நமக்கு இங்கு இல்லை
வல்லன சொல்லி மகிழ்வரேலும் மா மணி வண்ணரை நாம் மறவோம்
கொல்லை வளரிள முல்லை புக்கு குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமினே –9-5-6-

எல்லியும் நன் பகலும் இருந்தே –
நல்ல இரவும் நல்ல பகலும் ஆயிற்று –
அவனோட்டை கலவிக்கு உறுப்பான காலத்தோடு
அவனை ஸ்மரிக்கைக்கு உறுப்பான காலத்தோடு வாசி அற
இரண்டு போதும் இருந்து –

ஏசிலும் ஏசுக –
பழி சொல்லிலும் சொல்லுக –
அணைத்துப் போக்கும் காலத்தோடு
நினைத்துப் போக்கும் காலத்தோடு வாசி அற
இப் ப்ராவண்யம் தன்னையே பழி யாக்கிச் சொல்லிலும் சொல்லுக –
அல்லாதார் இழவை அனுசந்தித்த வாறே ஸ்மரிக்கைக்கு உறுப்பானது தானே பேறாகத் தோற்றுமே-
பிரிந்த போது தானே  -கங்குலும் பகலும் கண் துயில் அறியாள் -என்று இழவுக்கு உடலாய் இருக்கும் இறே-
வேந்திழையார்–நல்லர் –
அவர்கள் விலஷணைகள் அன்றோ –
ஆபரணங்களை சுமந்து கொண்டு இருக்க வல்லவர்கள்
என சொல்லாதார் –

அவர் திறம் நாம் அறியோம் –
நம் இடையாட்டம் அவர்கள் அறியும் அன்று இறே –
அவர்கள் இடையாட்டம் நாம் அறிவது –

அறியாது ஒழிகிறதுக்கு ஹேது என என்னில் –
நாண் மடம் அச்சம் நமக்கு இங்கு இல்லை –
நம்முடைமை நம் கையதாகில் அன்றோ நமக்கு ஸ்மரிக்கல்  ஆவது –
அவர்களுக்கு ஸ்த்ரீத் வாதிகள் குறி அழியாது இருக்கையாலே சொல்லலாம் –
நம்முடைய ஸ்த்ரீத் வாதிகள் நம் கையில் இல்லை –

இங்கு இல்லை –
அவை போன அங்கே காணில் காணும் இத்தனை –

வல்லன சொல்லி மகிழ்வரேலும் –
வாயால் போந்ததைச் சொல்லி சிரித்தார்கள் ஆகிலும்
ஸ்த்ரீத் வாதிகளை காற்கடைக் கொண்டாள்-அவனை மறந்திலள்-என்றால் போலே
சில வற்றைச் சொல்லி சொல்லி சிரித்தார்களே யாகிலும் –

மா மணி வண்ணரை நாம் மறவோம் –
அவர்கள் நம்முடைய ச்ம்ருதிக்கு உத்போதகர் ஆனார்களாம்   இத்தனை
மறுப்பு நம் கையில் கிடக்கும் படியோ –
அவன் வடிவு படைத்தது –

கொல்லை வளரிள முல்லை புக்கு குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமினே –
மறவாமை தேட்டமாம் தேசத்தை விட்டு
அவனைக் கண் கண்டு அனுபவிக்கலாம் தேசத்திலே
கொடு போய் பொகடுங்கோள் –
கொடிக்கு தரை கிடக்க வேண்டாதே கொள் கொம்பிலே படரலாம் தேசத்திலே –

—————————————————

செங்கண் நெடிய கரிய மேனித் தேவர் ஒருவர் இங்கே புகுந்து என
அங்கம் மெலிய வளை கழல ஆது கொலோ வென்று சொன்ன பின்னை
ஐங்கணை வில்லி தன்னாண்மை என்னோடு ஆடுமதனை யறிய மாட்டேன்
கொங்கலர் தண் பனை சூழ் புறவில் குறுங்குடிக்கே என்னை யுய்த்திடுமின்–9-5-7-

செங்கண் நெடிய –
கண் ஒரு தலையும் வடிவு எல்லாம் ஒரு தலை யானால்
பின்னையும் கண் அழகே
விஞ்சி இருக்கும் யாயிற்று –
அகவாயில் வாத்சல்யம் தோற்றும் –
பார்க்கிற பார்வைக்கு ஒரு அவதி இல்லை –

கரிய மேனித் —
அக்கண்ணில் குளிர்ச்சிக்கு தப்பினாலும்
தப்ப ஒண்ணாதாயிற்று வடிவில் குளிர்ச்சிக்கு –

தேவர் –
கண் அழகும் வடிவு அழகும் பேசித் தலைக் கட்டினாலும்
மேன்மை பேச்சுக்கு நிலம் அல்ல வாயிற்று –

ஒருவர் –
தேவர் என்றால் ஜாதியில்  போகாது
அவ் வ்யக்தி ஒன்றிலே கிடக்கும் இத்தனை –

இங்கே புகுந்து –
வடிவு அழகும் மேன்மையும் கரை புரண்டால்
தாம் இருந்த இடத்தே நாம் செல்ல இருக்கை இறே அடுப்பது –
அவை தம்மதானவோபாதி தாழ்வு செய்கையும் தம்மதாய் இருக்கும் யாயிற்று  –
என்றும் அவ் வஸ்துவைப் பெறுவார் பெறுவது
தாம் தாம் ஓரடி இட்டு அன்றிக்கே அத்தலையாலே வரவு ஆயிற்று –

என-
வந்த பின்பு கலவி உண்டாக நினைத்து இருக்கிறலள்  –
பிரிவுக்கு உறுப்பாக சொன்ன வார்த்தையே யாயிற்று இவள் நெஞ்சிலே கிடப்பது –

அங்கம் மெலிய வளை கழல –
ஓன்று சொன்னார் ஆயிற்று –
பிரிவை பிரசங்கித்தாராக இவை தன்னடையே போய்க் கொடு நின்றது –

ஆது கொலோ வென்று சொன்ன பின்னை –
பிரியேன் என்கிற பாசுரத்தாலே பிரிவை உணர்த்தினான்  ஆயிற்று –
வ்யதிரேகத்தால் அறிந்து கொள்கிறாள் என்று –
இவர் பிரியேன் என்கிற பாசுரத்தாலே யாகிலும் சொன்னார்
அதுவும் வாய் கொண்டு சொல்ல மாட்டாமை -ஆது கொலோ -என்கிறாள் ஆயிற்று -இவள் –

ஐங்கணை வில்லி தன்னாண்மை என்னோடு ஆடுமதனை யறிய மாட்டேன் –
அவன் பிரிவை உணர்த்தினான் –
காமன் சர வர்ஷமாக வர்ஷிக்கத் தொடங்கினான்
வீர பத்னி என்று பாராதே நலியா நின்றான்
அவன் கை விட்டமை அறிந்தான் ஆகுமே  –

கொங்கலர் தண் பனை சூழ் புறவில் குறுங்குடிக்கே என்னை யுய்த்திடுமின்   –
அவன் கையிலே அம்பு தானே தாரகமான தேசத்திலே
கொடு போய் பொகடப் பாருங்கோள் –
அவனோடு கூடின வாறே பூக்கொய்கையும் ஜல க்ரீடை பண்ணுவததுமாய் -தாரகமாம் இறே-

—————————————————–

கேவலம் அன்று கடலின் ஓசை கேண்மின்கள் ஆயன் கை யாம்பல் வந்து என
ஆவி யளவும் அணைந்து நிற்கும் அன்றியும்  ஐந்து கணை தெரிந்து இட்டு
ஏவலம் காட்டி யிவன் ஒருவன் இப்படியே புகுந்து எய்திடா முன்
கோவலர் கூத்தன் குறிப்பறிந்து குறுங்குடிக்கே யென்னை யுய்த்திடுமின்—9-5-8-

பந்துக்களை  நோக்கிச்  சொல்லுகிற  வார்த்தை இறே –
க்ரம ப்ராப்தி பார்த்து ஆறி இருக்கலாம் படி அன்று -இங்கு ஓடுகிற தசை
இனி அங்கே போய்ப் புக்காலும் அவன் தன்னாலே பேறாம்  படி எனக்கு பிரயோஜனம் உள்ளது –
அதில் அவன் கருத்து அறிந்த படியையும் அறிந்து கார்யம் செய்யப் பாருங்கோள் –
உனக்கு க்ரம ப்ராப்தி பார்த்து ஆறி இருக்க ஒண்ணாமைக்கு இப்போது வந்தது என -என்ன –

கேவலம் அன்று கடலின் ஓசை –
இக்கடல் ஓசைக்கு ஓர் அடி உண்டு –
மகா ராஜர் பெருமாளை அண்டை கொண்டு வந்து அறை கூறின போது போலே இரா நின்றது –
பெருமாள் கையும் வில்லுமாய்க் கொண்டு கடக்க நிற்க அவரைப் பற்றிச் சென்று அறை கூறினார் இறே –

தேன நாதேன மஹதா நிர்ஜகாம –
முன்பு பல காலும் நம் வாசலிலே வந்து அறை கூவக் கண்டறிவோம்
இப்போது அங்கன் அன்றிக்கே
இவன் மிடற்று ஓசையிலே தசை பிறந்த படியாலே இதுக்கு ஓர் அடி உண்டாக வேணும் –
பிரபலனாய் இருப்பான் ஒருவனைப் பற்றி வந்தானாக வேணும்
நிர்ஜகாம
முன்பு போலே புறப்பட்டு தரையிலே கை மோதிப் போகாதே
இவனும் இவன் அடியாக வந்தவனும் இலக்கு போருமாகில்
புறப்பட்டு போரப் பார்ப்போம் என்று புறப்பட்டான்
அடி உண்டு என்று அறிந்தான் ஆகில் பின்னை புறப்படிவான் என் என்னில்
ஹரீஸ்வர –
எதிரிகள் ஜீவித்து இருக்க உஜ்ஜீவித்து இருந்தவன் அல்லாமையாலே
அன்றிக்கே
வெறுமிக் கடல் ஓசை யனளவே அன்று –
இன்னமும் பாத வர்க்கத்துக்கு ஒரு அவதி இல்லை -என்னுதல் –

கேண்மின்கள் -ஆயன் கை யாம்பல் வந்து என ஆவி யளவும் அணைந்து நிற்கும் –
பிரிவு என்று ஓன்று உண்டு என்றும் இவர்கள் நெஞ்சிலே பட்டு பிரிந்தால்
பதார்த்தங்களும் எல்லாம் பாதகமாம் என்று அறிவார்கள் -என்று இருக்கிறாள்
இடையன் கையில் குழல் ஆனது வந்து என் மர்மத்தளவும் கிட்டி நில்லா நின்றது –

அன்றியும் ஐங்கணை தெரிந்து இட்டு
அதுக்கு மேலே
இவள் குழல் ஓசைக்கு முடிந்தாளாக  ஒண்ணாது
என் கையில் அம்பாலே முடிந்தாளாக வேணும் என்று பார்த்து
ஸ்திரீ வதம் அன்றோ பண்ணக் கடவது அன்று என்று பார்த்து
பிற்காலிக்குமவை அன்றிக்கே
நிர்தயமாக முடிப்பன சில அம்புகளை தெரிந்து —
ராவணனுக்கு தெரிந்து வந்தன சில அம்புகளை போலே யாயிற்று-

ஏவலம் காட்டி –
தான் எய்ய வல்ல மிடுக்கை என்னோடு காட்டி –

யிவன் ஒருவன்-
ஸ்திரீ வதம் பண்ணும் இடத்தில்
இவனை எண்ணினால் பின்னை எண்ணுகைக்கு ஆள் இல்லாதபடி இருக்குவன் ஆயிற்று –

இப்படியே புகுந்து எய்திடா முன் –
இதுக்கு இட்டுச் சொல்லலாவது ஒரு பாசுரம் இல்லை –
புண்ணறைகளைக்   காட்டும் இத்தனை  –

கோவலர் கூத்தன் –
பும்ஸாம் திருஷ்டி சித்த அபஹாரிணாம்-என்கிற படியே
தன்னோடு ஒத்த பருவத்து பிள்ளைகளை
மநோஹாரி சேஷ்டிதங்களாலே
எழுதிக் கொண்டு  இருக்குமவன் ஆயிற்று –
வன்னெஞ்சர் படுகிற பாடு இதுவானால் அபலைகளுக்கு சொல்ல வேண்டாம் இறே –

குறிப்பறிந்து குறுங்குடிக்கே யென்னை யுய்த்திடுமின்
அவன் திரு உள்ளக் குறிப்பறிந்து யென்னை அங்கே கொடு போய் பொகடப் பாருங்கோள்
அவன் வேணும் என்று இருந்தான் ஆகில் அங்கே கொடு போய்ப் பொகடுவது
வேண்டாம் என்று இருந்தான் ஆகில் இங்கே கிடந்தது முடிந்து போக –

——————————————————

சோத்தென நின்று தொழ விரங்கான் தொன்னலம் கொண்டு எனக்கு இன்று தாறும்
போர்ப்பதோர் பொற்   படம் தந்து போனான் போயின ஊர் அறியேன்     என் கொங்கை
மூத்திடுகின்றன மற்றவன் தன் மொய்யகலம் அணையாது வாளா
கூத்தன் இமையவர் கோன் விரும்பும் குறுங்குடிக்கே   என்னை யுய்த்திடுமின் –9-5-9-

சோத்தென நின்று தொழ விரங்கான்-
அஞ்சலி பண்ணுமவர்கள் அதுக்கு அனுரூபமாக தாழச் சொல்லுவதொரு
சப்த விசேஷம் ஆயிற்று சோத்தோம் -என்று வாயாலே
அனுகூல பாஷணத்தைப் பண்ணி
மாறாதே நின்று
அஞ்சலி பண்ணினால்
அதுக்கு இரங்ககுகை யாகிற ஸ்வாபம் அவனுக்கு வாசனையோடு போயிற்று –

அது அறிந்த படி என் என்னில்
தொன்னலம் கொண்டு எனக்கு இன்று தாறும் போர்ப்பதோர் பொற் படம் தந்து போனான்-
பிறந்தவன்று தொடங்கி உண்டான என்னுடைய ஸ்த்ரீத் வாதிகளைக் கொண்டு
தன்னை நான் பிரிந்த வன்று தொடங்கி  இன்றளவும் வர போர்க்கைக்கு
ஒரு பொன்னின் பிடாரத்தை தருவாரைப் போலே வை வர்ண்யத்தைத் தந்து போனான் –
இத்தலையில் உள்ளதடைய சர்வஸ் வாபாஹாரம் பண்ணி
நமக்கு சர்வஸ் வதானம் பண்ணுவாரைப் போலே
வை வர்ண்யத்தைத் தந்து போனான் –

போயின ஊர் அறியேன்   என் கொங்கை மூத்திடுகின்றன மற்றவன் தன் மொய்யகலம் அணையாது வாளா –
கூத்தன் இமையவர் கோன் விரும்பும் குறுங்குடிக்கே  என்னை யுய்த்திடுமின் –
போனாலும் ஆறி இருக்கலாம் இறே போன ஊரைச் சொல்லிப் போனான் ஆகில் –
அவன் சொல்லிப் போகாமை இல்லை -இவள் குறிக் கொள்ள மாட்டாமை இழந்தாள்-இத்தனை இறே
அறியாய் ஆகில் மேல் இனி செய்ய நினைக்கிறது என் என்ன
இங்கு இருந்த நாள் அவன் வாய் வெருவும்படிஅறிந்து இருப்புதோமே-
அத் தேசத்திலே என்னைக் கொடு போய் பொகடப் பாருங்கோள்   –
இங்கனம் ஆராய்ந்து கொண்டு அவனைத் தேடப் போக வேண்டுகிறது என் –
இங்கேயே தரித்து இருந்தாலோ -என்ன
கொங்கை மூத்திடுகின்றன –
இங்கேயே இருக்கலாம் படியாய்யோ இவைகள் இருக்கின்றன –

கொங்கை மூத்திடுகின்றன -மற்றவன் தன் மொய்யகலம் அணையாது வாளா-
அவனும் வந்து அணையவும் பெற்றாலும் கழிந்த பருவத்தை மீட்க ஒண்ணாதே
காணக் காண செவ்வி அழியா நின்றது ஆயிற்று –
நமே துக்கம் வயோஸ் யாஹ்யாதி வர்த்ததே -என்னுமா போலே
அவனுடைய ஸ்ப்ருஹநீயமான மார்வோடே அணையப் பெறாதே வ்யர்த்தமே இருந்து
செவ்வி அழியா நின்றது ஆயிற்று –
முன்னிருந்து மூக்கின்று -என்னக் கடவது இறே  –
கண்ணுக்கு இலக்காய் இருந்து காணக் காண செவ்வி அழியா நின்றது ஆயிற்று –

கூத்தன் இமையவர் கோன் விரும்பும் குறுங்குடிக்கே  என்னை யுய்த்திடுமின் –
கோவலர் கூத்தன் -என்றபடி இறே
இனவாயர் தலைவன் ஆனவன் விரும்பி வர்த்திக்கிற தேசத்தில்   கொடு போய் பொகடப் பாருங்கோள் –
தன்னுடைய மநோ ஹாரி சேஷ்டிதங்களாலே நித்ய சூரிகளை தோற்ப்பித்துக் கொண்டு இருக்கிறவன் விரும்பி வர்த்திக்கிற திருக் குறுங்குடியிலே –

———————————————————————

செற்றவன் தென்னிலங்கை மலங்கத் தேவபிரான் திரு மா மகளைப்
பெற்றும் என்னெஞ்சகம் கோயில் கொண்ட பேரருளாளன் பெருமை பேசக்
கற்றவன் காமரு சீர்க் கலியன் கண்ணகத்தும் மனத்தும் அகலாக்
கொற்றவன் முற்றுலக ஆளி   நின்ற குறுங்குடிக்கே என்னை யுய்த்திடுமின் —9-5-10-

செற்றவன் தென்னிலங்கை மலங்கத் தேவபிரான் –
தேவதைகள் உடைய வரங்களாலே அழிக்க ஒண்ணாத ஊர் –
ஒருவர் கூறை எழுவர் உடுக்கும் படியாக  மூலையடியே நடக்கும்படி பண்ணினவன் –

திரு மா மகளைப் பெற்றும் என்னெஞ்சகம் கோயில்கொண்ட பேரருளாளன் –
பிரதான மகிஷி   இருக்க ஒரு சண்டாள ஸ்திரீ கால் நடையிலே ஒதுங்கும் செருக்கனாய் இருக்கும்
ராஜபுத்ரனைப் போலே
யச்யஸா ஜனகாத்மஜா -என்கிறபடியே
தன் சம்பந்தம் இட்டு சொல்வது மேன்மைக்கு உடலாம்படியான அவள் இருக்க
என்னுடைய ஹிருதயத்தை விரும்பி ஒரு காலும் போவானாய் இரா நின்றான் –

கோயில்கொண்ட-
இனி அவள் போக்கல் போவானாய் இருக்கிறிலன்

அதுக்கடி என் என்னில் –
பேரருளாளன் –
நம் பக்கல் பண்ணின அருளுக்கு அவதி உண்டாகில் இறே
மற்றோர் இடத்தில் போவது –

பெருமை பேசக் கற்றவன்-
அவ்வருளுக்கு அவனை ஒழிய குடியிருப்பு இல்லாதாப் போலே யாயிற்று
அவனைப் பேசுகை யாகிற இதுவும் இவ் வாஸ்ரயத்தில் ஒதுங்கின படி –
இவள் வாயனகள் -என்றபடி-

காமரு சீர்க் கலியன் கண்ணகத்தும் மனத்தும் அகலாக் கொற்றவன் –
கண்டாருக்கு ஸ்ப்ருஹை பண்ண வேண்டும்படியான
ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யை உடையரான ஆழ்வார் உடைய
சர்வ இந்த்ரியங்களுக்கும் தானே விஷயமாய்
அரை ஷணமும் அவரை விட்டு அகல நில்லாமையாலே
கோவிந்தாபிஷேகம் பண்ணினாப் போலே இருக்கிற மேன்மையை உடையவன் –

முற்றுலக ஆளி   நின்ற குறுங்குடிக்கே என்னை யுய்த்திடுமின் –
காற்கடைக் கொள்ளுகைக்கு உபய விபூதி யோகம் என்று ஓன்று உண்டாயிற்று –
அவன் வர்த்திக்கிற குறுங்குடி யிலே என்னைக் கொடு போய் பொகடுங்கோள் –
இதுக்கு வேறு ஒரு பலம் சொல்லா விட்டது -உகந்து அருளின தேச பிராப்தி தானே பலமாய் இருக்கையாலே –

————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பெரிய திருமொழி-9-4—ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம்-

May 22, 2014

காவார் மடல் பெண்ணை -பிரவேசம் –

திருப் புல்லாணி ஏறப் போக வேணும் என்று கொண்டு
உத்யோகித்து –
கால் நடை தாராமல் தளர்ந்து
உண்ணப் புக்கவன் சோற்றிலே தோஷ தர்சனம் பண்ணினால்
எல்லாம் உண்டு சமைந்தோம் -என்னுமா போலே தொடங்கினது எல்லாம் அழகிதாக தலைக் கட்டினோம் என்று
கண்ணால் கண்ட பஷிகளைத் தூது விடுவது
முன்புள்ளார் நோவுபட உதவினபடி சொல்லுவது
பந்துக்கள் ஹித வசனம் கேளாத படியான
தசையைச் சொல்லுவதாய்  தலைக் கட்டுகிறார் –

———————————————————–

காவார் மடல் பெண்ணை அன்றில் அரி குரலும்
ஏவாயின் ஊடு இயங்கும்  எக்கில்  கொடிதாலோ
பூவார் மணம் கமழும் புல்லாணி கை தொழுதேன்
பாவாய் இது நமக்கோர் பான்மையே யாகாதே —9-4-1-

பிரிந்த நிலத்தில் இருக்க ஒண்ணாது ஒழிவது
போகத் தொடங்கின தேசத்திலே போய்ப் புக ஒண்ணாது ஒழிவது
நம் தசை இருந்த படி -என் -என்கிறாள்  –

காவார் மடல் பெண்ணை அன்றில் அரி குரலும் –
தாய்மார் ஹித வசனத்துக்கு மேலே இதுவும் வேணுமோ –
அன்றில் அரி குரலும் —
அன்றிலின் உடைய ப்ரணய கத்கதமான பேச்சு -என்னுதல்
அரி குரல் -என்னுதல்-
என்னுடைய நெஞ்சுக்கோர் ஈர்வாளாம் என் செய்வேன் -பெரிய திரு மடல் -என்னுமா போலே –
ஒன்றே ஆற்ற ஒண்ணாது இருக்க எங்கும் அதுவே யாவது –
ஒரு மடலே எங்கும் ஒக்க  சோலை செய்து இருக்கிறபடி –
மடல் பெண்ணையை  உடைத்தான காவிலே ஆர்ந்த அன்றில் -என்னவுமாம்
இலங்கை அடைய ராஷசர் என்னுமா போலே
தார்மிகராய் இருப்பார் வைத்த தண்ணீர் பந்தலிலே
வழியடிக்காரர் ஒதுங்குமா போலே
மடல் எடுத்தாகிலும் பிழைக்க நட்ட பனையிலே அன்றில் வந்து குடி புகுந்தது –
பிரபதனமும் பலியாத தசையில் செய்யுமது ஓன்று இறே-
அவன் தன் ஸ்வரூபத்தோடு சேரச் செய்யா விட்டால்
இவன் தன் ஸ்வரூபத்தை
அழித்தாலும் பெறப் பார்க்குமே   –

ஏவாயின் ஊடு இயங்கும்  –
காம சரங்களாலே புண் பட்டு இறே உடம்பு அடையக் கிடக்கிறது
ஸூ ப்ரஹ்மண்யன் கையில் வேல்
ஸ்ரீ பரசுராம ஆழ்வான் கையில் அம்பு
இவற்றாலே துளைப்புண்ட மலை
அம்பு வாய்களை புதுப்  புண் செய்து கொடு காணும் போகிறது –

எக்கில்  கொடிதாலோ –
எக்கில் காட்டில் -என்னுதல்
எக்கு போலே என்னுதல்
இத் த்வனி ஆற்றும் போது வேலிலே வைத்து ஆற்ற வேண்டும்படி இருக்கை
லௌகிக அக்னியில் காட்டில் நரகாக்னி கொடிதாய் இருக்கும் இறே –

பூவார் மணம் கமழும் புல்லாணி கை தொழுதேன்
பரிமளம் அசஹ்யம் ஆகாத தேசம் தேடித் புக அழகிதாக ஆசைப் பட்டேன்
விரோதியான இந்நிலத்தை விட்டு
பிராப்ய தேசத்திலே போய்ப் புக அழகியதாக கோலினேன் -என்கிறாள் –

பாவாய் –
இதுக்குத் தான் இவள் சொல்லுகிறது
இவளுடைய பாரவச்யம் கண்டு
தன் இழந்து இவள் வியாபாரிக்க வேண்டும்படியாய் யாயிற்று அவள் இருக்கிறது
யாமுடைத் துணை என்னும் தோழி மாரும் – திருவாய் மொழி –
நாம மாத்ரமே காணும் உள்ளது
நாயகன் பிரிந்ததுக்கு நோவு படும் இத்தனையே இவளுக்கு உள்ளது
இவள் ஆற்றாமைக்கும் -அவன்  வாராமைக்கும் -இரண்டுக்கும் நோவு பட வேணுமே அவளுக்கு
இது ஒரு பாசுரம் இட்டு சொல்ல ஒண்ணாது காணும் –
பிரிந்த நிலத்திலே இருக்க ஒண்ணாது ஒழிவதே
பிராப்ய தேசத்திலே புக ஒண்ணாது ஒழிவது
உசாத் துணை இன்றிக்கே ஒழிவதான தசை இறே நமக்கு
இழவில் வந்தால் இருவருக்கும் ஒத்து இருக்கும் இறே –

இது நமக்கோர் பான்மையே யாகாதே –
மாறாடி வருமது இன்றிக்கே இது ஸ்வ பாவமாய் விட்டதே
நித்ய சூரிகள் நித்ய அனுபவம் பண்ணா நின்றார்கள்
இவ்வருகு உள்ளார் விஷயங்களில் அந்ய பரராகா நின்றார்கள்
மூன்றாம் விபூதியாக பண்ணி விட்டதாகாதே நோவு படுத்துகைக்கு நம்மை -என்கிறாள்  –

————————————————-

முன்னம் குறளுருவாய் மூவடி மண் கொண்டளந்த
மன்னன் சரிதைக்கே மாலகிப் பொன் பயந்தேன்
பொன்னங்கழிக் கானல் புள்ளினங்காள் புல்லாணி
அன்னமாய் நூல் பயந்தார்க்கு ஆங்கு இதனைச் செப்புமினே –9-4-2-

நோவு படுகை நமக்கே ஸ்வ பாவமாய் விட்டது என்று
ஒரு வார்த்தை சொல்லி பின்பு பேசாதே இருக்கும் பிரகிருதி அன்றே –
தான் இருக்கிற இடத்தே வர்த்திக்கிற சில பஷிகளை தூது விடுகிறாளாயிற்று
சுலபன் அல்லாதவனை  ஆசைப் பட்டு உடம்பு வெளுத்து இருக்கிறேனோ
அது தான் பரத்வம் என்னும் படி இருக்கிற இடத்தே
என் தசையை அறிவுயுங்கள் -என்கிறாள் –

முன்னம் குறளுருவாய் மூவடி மண் கொண்டளந்த
கால விப்ரகர்ஷம் போக்கி
தேச விப்ரகர்ஷம் அல்ல கிடீர் இழைக்கைக்கு –
பாவியேன் -இன்று அன்றே அவ்வடிவு கொள்ள அடுப்பது –
ஒரு நீர்ச் சாவி கிடக்க கடலிலே வர்ஷிப்பதே
ஆறு புகா விட்டாலும்
வர்ஷியா  விட்டாலும்
கடலுக்கு குறை இல்லை இறே-
கால பிரத்யா சத்தியாலே பல்லிலே பட்டுத் தெரித்தது -என்கிறாள்  –

குறளுருவாய்-
அப்ராக்ருத சமஸ்தானத்தை
கண்ணாலே முகக்கலாம் படி -யாக்கின படி –

மூவடி மண் கொண்டளந்த
தரை லோக்யத்துக்கு அவ்வருகும் நித்ய விபூதியும்
தன்னதாய் இருக்கிறவன்
கிடீர் மூவடியை இரந்தான் –
இரந்ததுவும் -மண் அளந்ததுவும் மிகை காணும் –
அவ்வடிவைக் கண்ட போதே ஆத்மாத்மீயங்களை
இவனதாக்கினான் ஆயிற்று -அவன்
தத்த மச்யாபயம் மயா-என்னுமா போலே –
ராகவம் சரணம் கத -என்றதுக்கு உள்ளே பெருமாள் அங்கீகாரமும் உண்டு –
நடுவு கால ஷேபம் மகா ராஜர் அனுமதி பெறுகைக்காக ஆயிற்று –

மூவடி மண் கொண்டளந்த மன்னன்-
அவன் பக்கல் இரந்து பெற்று வளர்ந்து அளந்து கொண்டான் ஆயிற்று
அவனுடைய அபிமானத்தோடு சேர்க்கைக் கொள்ளுகைக்காக இரந்தான் ஆயிற்று
மன்னன் –
ராஜாதி ராஜ சர்வேஷாம்
விஷ்ணுர் ப்ரஹ்ம மயோ மகான்  -ஈஸ்வரம்  தம் விஜா நீமஸ் சப்ரஜாபதி -என்னுமா போலே –

மன்னன்-சரிதைக்கே மாலகிப் பொன் பயந்தேன்-
அன்யார்தமான செயலிலே நிறம் இழந்தேன் –
இந்த்ரனுக்காக செய்த செயல் என்று தோற்றிற்று இல்லை காணும் இவர்க்கு
உன்னைப் பிரமாணித்தார் பெற்றே பேறு-
ஆஸ்ரிதர் எல்லாருக்குமாக செய்த செயல் என்று இருக்கிறார் –
தன் உருக் கெடுத்து  -வேற்று உரு கொள்ளுவது
இரப்பது
அளப்பதான –
செயலிலே யாய்த்து விவரணை யாயிற்று –

பொன்னங்கழிக் கானல் புள்ளினங்காள் –
தான் இருந்த இடத்துக்கு அணித்தாகப்
பொன்னங்கழி என்ற ஒரு   நீர் ஓடுகால் உண்டு போலே
ஏக தேச வாசித்வத்தால் வந்த சம்பந்தம் கொண்டு
தன் கார்யம் அவற்றுக்குச் செய்ய வேணும் என்று இருக்கிறாள் –
அதுக்கு மேலே பிரிந்தாரைச் சேர்க்கும் சிறப்புடையவர் ஆயிற்று
முன்பு போனவனைப் போலே தனி போக வேண்டாம் இறே உங்களுக்கு –

புல்லாணி அன்னமாய் நூல் பயந்தார்க்கு ஆங்கு இதனைச் செப்புமினே   —
இவை தூது  போக சமைந்தால் போலே யாய்த்து
அவன் கிட்ட வந்து இருக்கிறபடியும் –

அன்னமாய் நூல் பயந்தார்க்கு –
பிரிக்க வல்லார்க்கு இழந்த வேத சஷூசை ப்ரஹ்மாவுக்காக
மீட்டுக் கொடுத்த படியைச் சொல்லுகிறது
அதாகிறது –
இங்கு இழந்த நிறம் பழைய படியே தர வல்லவன் -என்கை-

அன்னமாய் –
தூது போகிற உங்களுக்கு அஞ்ச வேண்டா
சஜாதீயராய் இருப்பார் –

ஆங்கு இதனைச் செப்புமினே   —
ஒருத்தி நிறம் மீட்கைக்காக வந்து இருக்கிற இடத்தே அறிவியுங்கோள்-
ஒருத்திக்கே கார்யம் செய்யக் கடவோம் என்னும் நியதி உண்டோ –
இதனை –
தன் தசை தன்னைப் பாசுரம் இட்டுச் சொல்ல ஒண்ணாது போலே காணும்
செப்புமினே –
செப்பிக் கொடு வர வேண்டா –
அறிவித்து விட அமையும் –

——————————————

வவ்வித் துழாயதன் மேல் சென்ற தனி நெஞ்சம்
செவ்வியறியாது நிற்கும் கொல் நித்திலங்கள்
பவ்வத்திரை யுலவு புல்லாணி கை தொழுதேன்
தெய்வச் சிலையார்க்கு என் சிந்தை நோய் செப்புமினே–9-4-3-

கீழே என்னுடைய உடம்பில் நோவை அறிவியுங்கோள் என்றாள்
இங்கு என்னுடைய சிந்தா வ்யதையை  அறிவியுங்கோள் -என்கிறாள் –

வவ்வித் துழாயதன் மேல் சென்ற தனி நெஞ்சம்-
நாயகன் பிரிந்து போகிற போது
தோளில் இட்டதொரு மாலையிலே
ஒரு தலையைப் பிடித்து கொடு போய்த்ததாயிற்று –
நெஞ்சு அவன் பக்கத்தில் அணுக்கத்தைக் கொண்டு
இத்தலையை உதறிப் போன படி –

செவ்வியறியாது நிற்கும் கொல்-
நம்மாள் அங்கே நின்றதாகில்
ஆசை அற்று வந்தால் அன்றோ
நமக்கு முடியல் ஆவது என்று இருக்கிறாள் -என்று இருக்கிறதோ –
நிற்குங் கொல் -நிற்குமோ -என்றபடி –

நித்திலங்கள் பவ்வத்திரை யுலவு புல்லாணி கை தொழுதேன்-
விரவி முத்தம் நெடு வெண் மணல் மேல் கொண்டு வெண் திரை
புரவி என்னப்புதம் செய்து வந்துந்து புல்லானியைத் தொழுதும் எழு –
என்று அழகிதாக ஆசை பட்டேன் –

தெய்வச் சிலையார்க்கு என் சிந்தை நோய் செப்புமினே-
ஒருத்தி உடைய சிந்தா வ்யதையைப் போக்க என்றே வில் பிடித்தவர்க்கு
என்னுடைய் சிந்தாவ்யதையும் அறிவியுங்கோள்-
என் சிந்தை நோய் –
அவள் அத்தனை க்ரம பிராப்தி பொறுத்து இருக்குமவள் அன்று இறே-இவள் –

———————————

பரிய விரணியதாக மணி  யுகிரால்
அரியுருவாய்க் கீண்டான்  அருள் தந்தவா நமக்குப்
பொரு திரைகள் போந்துலவு புல்லாணி கை தொழுதேன்
அரி மலர்க் கண்ணீர் ததும்ப  வந்துகிலும் நில்லாவே —9-4-4-

பரிய விரணியதாகம்
ஸ்வாமி ஒருவன் உண்டு என்னும் பிரதி பத்தி உண்டாய்
அவனைப் பெற வேணும் என்னும் மேன்மையும் தன நெஞ்சிலே கிடந்தது
வளர்ந்த உடல் அன்றே –
எனக்கு மேற்பட்டான் ஒருவன் உளன் -என்று இராமையாலே
அவனைப் பெற வேணும்
என்று இருக்குமதுவும் இல்லையே –
இனி தேஹாதிரிக்தமாய் இருப்பதொரு  வஸ்து உண்டு என்னும் பிரதி பத்தியும் இல்லை –
தேஹாத்மா அபிமாநியுமாய் இருப்பான் ஒருவன் ஆகையாலே
கேவலம் சரீரத்தையே வளர்த்தான் இத்தனை யாயிற்று –
ஆக -சேஷி ஒருவன் உளன் என்றும்
காண்கிற சரீரத்துக்கு அவ்வருகாய் இருப்பதொரு வஸ்து உண்டு என்றும்
இராமையாலே வர பலத்தாலே தடிப்பித்தான்  ஆயிற்று
இது எல்லாம் கூடி
திரு உகிரும் கூட்டியாய்த் தலைக் கட்டிற்று –

அணி  யுகிரால்-
கண்டு கொண்டிருக்கத் தகுமவற்றை கிடீர் இவனுக்கு உடலாக்கிற்று –
நாய்ச்சிமாரோட்டை சம்போகத்திலும் வ்யாபரிக்கப் பெறாத வற்றைக் கிடீர்
முரட்டு உடம்பிலே கொண்டு வ்யாபரித்தது –

அரியுருவாய்க் கீண்டான் –
இவன் எவ்வடிவைச் சொல்லும் என்று அறியாமையாலே
நரத்வ சிம்ஹங்கள் இரண்டையும் சேர்த்துக் கொண்டு
வந்து தோற்றினான் ஆயிற்று –
நரசிம்ஹத்தின்   உடைய சீற்றத்தைக் கண்டவாறே உடல் பதம் செய்தது –
அநாயாசேன கிழித்துப் பொகட்டான்   –

அருள் தந்தவா நமக்குப் –
ஒரு பாலனுக்கு தமப்பன் பகையாக உதவிக் கார்யம் செய்தவன்
அபலைக்குத் தன்னைப் பெறாமையாலே வந்த
வ்யசனத்துக்கு வாசி வைத்து உதவின படி காண் –

பொரு திரைகள் போந்துலவு புல்லாணி கை தொழுதேன் –
பொருது முந்நீர் கரைக்கே மணி யுந்து புல்லாணி தொழுதும் எழு -என்று எல்லாம் செய்து சமைந்தோம் –

அரி மலர்க் கண்ணீர் ததும்ப  வந்துகிலும் நில்லாவே –
கடல் திரைகள் வந்து சஞ்சரியா நிற்க
கடலும் திரையும் கண்டு கூட அனுபவிக்க வேண்டும் என்று ஆசைப் பட்டோம்
இது வாகில் இவளுக்கு தேடித் போக வேணுமோ -என்று
என் உடம்பிலே கண்ண நீரையும் உண்டாம் படி பண்ணினான் –

———————————————–

வில்லாலிலங்கை மலங்கச் சரம் துரந்த
வல்லாளன் பின் போன நெஞ்சம் வருமளவும்
எல்லாரு மென் றன்னை யேசிலும் பேசிடினும்
புல்லாணி யெம்பெருமான் பொய் கேட்டிருந்தேனே  —-9-4-5-

இவளுடைய பந்துக்கள் அடைய திரண்டு நாங்கள் சொன்ன வார்த்தை கேளாதே
அவன் வார்த்தை கேட்டாய் இறே-
நாங்கள் சொன்னதுவே மெய்யாய்
அவன் சொன்ன வார்த்தை பொய்யான படி கண்டாயே –
இனி நாங்கள் சொன்னத்தை கேட்க வல்லையே என்ன
அப்படியே செய்கிறோம் -அவன் பின் போன நெஞ்சை மீட்டால் -என்கிறாள் –

வில்லாலிலங்கை மலங்கச் –
வரம் கொடுத்த தேவதைகள் உடைய
அஸ்த்ரத்துக்கு அழியாத ஊரை-மனுஷ்யத்துவத்துக்கு ஏகாந்தமான வில்லாலே அழித்தான் ஆயிற்று  –
மனுஷ்யரை அவமதி பண்ணி இருக்கையாலே இவர்கள் படாது ஒழிகைக்கு
வரம் கொண்டிலன் ஆயிற்று –
கையிலே வில்லாலே ஒருவர் கூறை எழுவர் உடுக்கப் பண்ணின படி  –

சரம் துரந்த வல்லாளன் –
விடுகிறவன் பலத்துக்கு தக்க படி இறே அம்பு தைப்பது

வல்லாளன் – பின் போன நெஞ்சம் வருமளவும் –
இனி நான் உங்கள் வார்த்தை கேளேன் -என்கிறாள் –
அவன் வார்த்தை பொய் என்றவர்களுக்கு
ஒரு வழியாலே மெய் என்னும் இடத்தை காட்டுகிறாள் –
அவனுடைய வியாபாரங்கள் அனுஷ்டான பர்யந்தமாக கண்டு காணுங்கோள்-
நெஞ்சு போயிற்று என்கிறாள் –
அவன் பின்னே போன ஹிருதயம் வரும் அளவும் –

எல்லாரு மென் றன்னை யேசிலும் பேசிடினும்  புல்லாணி யெம்பெருமான் பொய் கேட்டிருந்தேனே  –
தோழிமார் -இது கார்யகரம் அன்று -என்னவுமாம்
தாய்மார் -இது கார்ய கரம் அன்று -என்னவுமாம் –
இரண்டுக்கும் பலம் ஒன்றே
இவர்கள் வேண்டா என்ற போதாக இவள் விட வேண்டுவதும் இல்லை
இவர்கள் பிரவர்த்தித்த போதாக இவள் புக வேண்டுவதும் இல்லை –

புல்லாணி யெம்பெருமான் பொய் கேட்டிருந்தேனே  —
நாட்டிலே பொய் மெய்கள் கொண்டு கார்யம் உண்டோ
அவன் பொய் ஆகையாலே அன்றோ எனக்கு ஆகர்கஷமுமாய் இருக்கிறது –
ரஷணத்திலே தீஷித்து இருக்கிறவன் உடைய பொய்யே –
அவனுடைய பொய்யைக் கேட்டு அத்தாலே தரித்து இருந்தேன் –

—————————–

சுழன்று இலங்கு வெங்கதிரோன் தேரோடும் போய் மறைந்தான்
அழன்று கொடிதாகி யஞ்சுடரில் தான் அடுமால்
செழுந்தடம் பூஞ்சோலை சூழ் புல்லாணி கை தொழுதேன்
இழந்து இருந்தேன் என்தன் எழில் நிறமும் சங்குமே —9-4-6-

நமக்கு ஆஸ்வாசத்தை பண்ணக் கடவனானவன் போய்க் கொடு நின்றான்
நலிவார் பெருத்திரா   நின்றது
அனுபவிக்கலான நிலத்திலே போய்ப் புகப் பெற்றிலோம்
இங்குள்ளவையும் நம்மை விட்டுப் போகா நின்றது -என்கிறாள் –

சுழன்று இலங்கு வெங்கதிரோன் தேரோடும் போய் மறைந்தான் –
மேருவைச் சுழல வருவானாய்
பிரகாசத்தைப் பண்ணக் கடவனான செவ்வியனான ஆதித்யன் ஆனவன்
தான் ரதத்தோடு மறைந்தான் –
சுழன்று -என்கிறது -ஜ்யோதிஸ் சக்கரத்தின் படி யாலே என்னவுமாம் –
ஒளியவன் விசும்பியங்கும் தேறும் போயிற்று -என்னக் கடவது இறே
நாயகன் கலந்து பிரிந்து போம் போது பார்த்து நிற்குமா போலே
ஆதித்யன் போகிற போது  பார்த்து நின்றாள்  போலே காணும்

அழன்று கொடிதாகி யஞ்சுடரில் தான் அடுமால் –
அழகிய சுடரை  உடையவன் என்று சந்த்ரனை சொல்லுகிறதாயிற்று-
அழற்றியை உடையவனாய்
தன் ஸ்வபாவம் வேறுபட்டு
சீத கிரணன் ஆனவன் முடியா நின்றான் ஆயிற்று  –

செழுந்தடம் பூஞ்சோலை சூழ் புல்லாணி கை தொழுதேன் –
நானும் தானுமாய் நீர் விளையாட்டடவும்
தவாங்கே சமுபாவிசம் -என்று சொல்லுகிறபடியே தன் மடியிலே சாயவும்
பூம் பந்து எரிந்து விளையாடவும்
அழகியதாகப் பாரித்தேன்-
கள்ளவிழும் மலர்க்காவியும் -என்றால் போலே நினைத்ததை எல்லாம் தலைக் கட்டினோமே  –

இழந்து இருந்தேன் என்தன் எழில் நிறமும் சங்குமே  –
தன்னோட்டை சம்ச்லேஷத்தாலே
நிறமும் இரட்டித்து தன் பக்கல் உள்ள ஆபரணங்களும்
என் பக்கலிலே யாக வேணும் என்று ஆசைப் பட்டு
பரிசை ஆசைப் பட்டு முதலை இழப்பாரை போலே
முன்பு உள்ளவற்றையும் இழந்து விட்டேன் –

———————————–

கனை ஆர் இடி குரலின் கார் மணியின் நா வாடல்
தினை யேனும் நில்லாது தீயில் கொடிதாலோ
புனையார் மணி மாடப் புல்லாணி கை தொழுதேன்
வினையேன் மேல் வேலையும் வெந்தழலே வீசுமே —9-4-7-

கனை ஆர் இடி குரலின் கார் மணியின் நா வாடல் –
மிகவும் கர்க்கரமாய் இடி போலே இருந்துள்ள சப்தத்தை உடைய
ருஷபத்தின் உடைய கறுத்த மணியின் உடைய நாவில் உண்டான சஞ்சாரமாவது –
அந்த நாகுகளை சேக்கள் தொடருகிற போது அவை ஓடுகிறது
தலைமகன் மேல் விழத் தான் இறாய்க்கும் படிக்கு
ஸ்மாரகமாய் நலியா நின்றதாயிற்று –
புரச்க்ருத்ய  ரதே சீதாம் ருஷ்போ கோவதூமிவ-என்னக் கடவது இறே  –

தினை யேனும் நில்லாது தீயில் கொடிதாலோ –
ஒரு தினை அளவும் பிற்காலியாதே அக்னியில் காட்டில் கொடிதாகா நின்றது –
அக்னி தண்ணீர் என்னும் படி யாயிற்று இதின் வெம்மை –
அது உடம்பில் சுடும் இத்தனை இறே
இது அகவாயில் புக்கு அழிக்க வற்று இறே  –

புனையார் மணி மாடப் புல்லாணி கை தொழுதேன் –
சௌபரி ஐம்பது வடிவு கொண்டு புஜித்தால் போலே
ரத்னங்களால் பண்ணப் பட்ட மாடங்கள் தோறும்
தானும் அவனுமாய் அனுபவிக்கக் காணும் கோலிற்று –
அது எல்லாம் செய்து  சமைந்தேன் –

வினையேன் மேல் –
அப்ராப்யத்தை ஆசைப் படும்படியான பாபத்தை
பண்ணின என் மேலே –

வேலையும் வெந்தழலே வீசுமே —
இந்த த்வனிக்கு சேஷித்தது உண்டாகா  கொண்டு பிரமியா நின்று
இவள் தன் விரஹ அக்னி தன் மேல் படாத படி
கடக்க நின்று வீசா நின்றதாயிற்று –

—————————————-

தூம்புடைக் கை  வேழம் வெருவ மருப்பொசித்த
பாம்பின் அணையான் அருள் தந்தவா நமக்குப்
பூஞ்செருந்திப்  பொன் சொரியும் புல்லாணிக் கை தொழுதேன்
தேம்பல் இளம் பிறையும் என்தனக்கு ஓர்  வெந்தழலே —9-4-8-

தூம்புடைக் கை  வேழம் வெருவ மருப்பொசித்த –
தூம்பு போலே துளையை உடைத்தான
கையை உடைய ஆனையானது
வெருவும்படிக்கு ஈடாக  அதின் கொம்புகளைப் பறித்தான் ஆயிற்று –

பாம்பின் அணையான் அருள் தந்தவா நமக்குப்
பிரபல விரோதிகளை ஆற்றி
உகந்தாருக்கு தன்னைக் கொடுக்க கடவனாக ஆசைப் பட்ட
நமக்கு நம் விரோதிகளை மாற்றி
நமக்கு தன்னை தந்தபடி காண் –

பூஞ்செருந்திப்  பொன் சொரியும் புல்லாணிக் கை தொழுதேன்-
போக யோக்யமான தேசத்து ஏறப் போய் புக  வரிதாக நின்றது –

தேம்பல் இளம் பிறையும் என் தனக்கு ஓர்  வெந்தழலே  –
அதுக்கு மேலே விரோதிகள் ஆனவை வளர்ந்து செல்லா நின்றது –
சந்தரனும் தன் குறை ஆற்றிக் கொள்ள மாட்டாதே
என்னை நலிய வல்லனாகா நின்றான் –

———————————————

வேதமும் வேள்வியும் விண்ணும் இரு சுடரும்
ஆதியும் ஆனான் அருள் தந்தவா நமக்குப்
போதலரும் புன்னை சூழ் புல்லாணி கை தொழுதேன்
ஒதமும் நானும் உறங்காது இருந்தேனே —-9-4-9-

வேதமும் வேள்வியும் விண்ணும் இரு சுடரும் ஆதியும் ஆனான் –
ஜகத்துக்கு கண் காட்டியாக வேதத்தை உண்டாக்கி
அத்தாலே ப்ரதிபாத்யனான தன்னை கிட்டுகைக்கு சாதனமாக
யாகாத்ய உபகரணங்களை யும் உண்டாக்கி
அதுக்கு பல பூமியான ச்வர்க்கங்களை உண்டாக்கி
ஜகத்துக்கு பிரகாசத்தை பண்ணக் கடவரான சந்திர சூர்யர்களையும் உண்டாக்கி
அவ்வழியாலே ஜகதா காரனாய் இருக்கிறவன் –

அருள் தந்தவா நமக்குப் –
அபேஷியாது இருக்க இவற்றை உண்டாக்கினவன்
அபேஷை உடைய நம் கார்யம் செய்த படி காண் –
சாமான்யத்திலே பண்ணக் கடவது
விசேஷணத்தில் அன்றிக்கே இருப்பதே
நாட்டுக்கு இட்ட அக்கம் -தான்யாதிகள் -அந்தப் புரத்துக்கு அரிதாவதே-

போதலரும் புன்னை சூழ் புல்லாணி கை தொழுதேன் ஒதமும் நானும் உறங்காது இருந்தேனே –
போக யோக்யமான தேசத்திலே
தானும் நானுமாக விடி விளக்கு வைத்து உறங்காதே
அனுபவிக்க கோலினேன் –
இனி இவளுக்கு உறங்காது இருக்க வன்றோ வேண்டுவது
என்று ஓதத்தை ஆளாக விட்டுப் போனேன் –

—————————————

பொன்னலரும் புன்னை சூழ் புல்லாணி யம்மானை
மின்னிடையார் வேட்கை நோய் கூர விருந்ததனைக்
கன்னவிலும் திண தோள் கலியன் ஒலி வல்லார்
மன்னவராய் மண்ணாண்டு வானாளும் உன்னுவரே —9-4-10-

பொன்னலரும் புன்னை சூழ் புல்லாணி யம்மானை –
நித்ய வசந்தமான திருப் புல்லாணியை
வாசஸ் ஸ்தானமாக உடையவனை –

மின்னிடையார் வேட்கை நோய் கூர விருந்ததனைக்-
பெண் பிறந்தார்க்கு நோய் மிகும்படியாய்
தங்கி இருக்கிற இருப்பு தான்

கன்னவிலும் திண தோள் கலியன் ஒலி வல்லார்
வ்யசனங்களுக்கு எல்லாம் ஆடல் கொடுக்க வல்ல
தோள் மிடுக்கை உடையரான ஆழ்வார்
அருளிச் செய்த திரு மொழியை அப்யசிக்க வல்லார் –

மன்னவராய் மண்ணாண்டு வானாளும் உன்னுவரே   –
இங்கும் குறைவற அனுபவித்து
அங்கும் குறைவற அனுபவிக்கப் பெறுவார்கள்  –

———————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பெரிய திருமொழி-9-3—ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம்-

May 22, 2014

சயன திருக்கோலம் -சரணாகத திருக்கோலம் -தர்ப்பை சயனம் -ஆதி ஜெகந்நாத பெருமாள்
சேது அணை –3 யோஜனை அகலம் -10 யோஜனை-100 மைல் நீளம்
திரு உள்ளத்துடன் உள்ளத்துடன் பேசுவது போல் திருப்புல்லாணி அனுபவம் —
எளிமையான -பாசுரம் -ஆழமான வியாக்யானம் –
ஆழ்வார் திரு உள்ளக் கருத்தை அழகாகக் காட்டி அருளுகிறார் –

தன்னை -பிரவேசம் –

நாயகனோடு இயற்கையிலே கலந்து பிரிந்து
அந்த பிரிவோடு அவன் வர அபேஷிதமாய் இருக்க
அவன் வரக் காணாமையாலே ஆற்றாமை கரை புரண்டு
நோவு படுகிறாள் ஒரு பிராட்டி –

இனி அவன் தான் மேல் விழுந்து கலக்கக் கடவன் என்று
முறை பார்த்து இருந்து கண்டது அமையும் –
இனி ஸ்வ லாபத்துக்கு நாமே யாகிலும் பிரவர்த்திப்போம் என்று கொண்டு
தன்னுடைய ஸ்திரீத்வ பிரயுக்தமான நாண் மடம் அச்சம் தொடக்கமான வற்றை  பொகட்டு
நம் ஸ்வ ரூபத்தையும் அழித்து
அவன் தனக்கும் ஸ்வரூப ஹானியை  பண்ணி யாகிலும் முகத்தே விழிப்போம் என்று கொண்டு
அவன் இருந்த இடத்தே ஏறப் போக
ஒருப்பட்ட இத்தை கண்ட தோழி யானவள்

இது உன் தலைமைக்குப் போராது காண்-
என்று ஹிதம் சொல்ல
அவளையும்
அவளுக்கு முன்னே பிற்காலிக்கிற நெஞ்சையும்  பார்த்து
பின்னையும் மீண்டு நின்று அங்கே போக ஒருப்பட்ட படியை
நெஞ்சோடும் –
அந்த நெஞ்சு உதவாத போதும் உதவி கார்யம் செய்யும் தோழி யோடுமாக கூட்டுகிறாள் –

இவள் தான் புறப்பட்டு போகை யாகிறது அதி சாஹாசம் இறே
பிராண ரஷணம் ஒரு தலை யானால்  மரியாதைகளை பார்த்து இருக்கலாம் படி இராது இறே
ஸ்வ ரூபம் நோக்குகைகாக இங்கேயே  இருந்து நோவு படுமதில் காட்டிலும்
அங்கே போவது ஸ்வ ரூப ஹானியே யாகிலும்
பின்னையும் விழுக்காட்டிலே ஸ்வ ரூபத்தோடு சேர்ந்து தலைக் கட்டும்-

(பேறு தப்பாது என்று துணிந்து இருப்பது ஸ்வரூபம்
அத்தைத் தாண்டி
பேற்றுக்குத் த்வரிக்கையும் ஸ்வரூபம் தானே )

ஆன பின்பு அங்கே போய் அனுபவிப்போம் என்று அத்யவசிக்கிறாள் –
அவன் இத்தலையில் பருவம் அறிந்திலன் ஆகிலும்
தன் வை லஷண்யம் அறிந்து இருக்குமே   –

(அரும் பதக்காரர்
திரு நாகை அழகியாரை உருவ வெளிப்பாட்டில் கண்டு தானும் தோழியாய்
தோழி இவள் அந்நிய பரதை யாக்க
உத்யானங்களில் சஞ்சரிக்க -பூ பறிக்கும் வியாஜ்யம்
திருப்புல்லானி பெருமாள் தெய்வ சங்கல்பத்தால் சம்ச்லேஷம் —
பின்பு சாத்மிக்க வேண்டி பிரிந்தான் என்று சங்கதி –
பிரிவோடு-என்றது -பிரிவால் -என்றவாறு
மங்கை நல்லாய் போது மாதே இத்யாதி தோழி பாசுரங்கள்
அத்தலையில் வைலக்ஷண்யம் அடியாக வந்ததாலே ஸ்வரூபத்துடன் சேரும் –
தோற்றோம் மட நெஞ்சே ஜிதந்தே –
இருந்த இடத்தில் இருக்க ஒட்டாமல்
இவள் ஒருப்பட்ட அளவில் அவன் தானே வரும்
இவன் தனது வை லக்ஷண்யம் அறிந்து எல்லை மீறி வருவாள் என்று அறிவான் )
ஏஷ சேது

———————————————-

தன்னை நைவிக்கிலேன் வல்வினையேன் தொழுதும் எழு
பொன்னை நைவிக்கும் அப் பூஞ்செருந்தி  மண நீழல் வாய்
என்னை நைவித்து எழில் கொண்டு அகன்ற பெருமான் இடம்
புன்னை முத்தம் பொழில் சூழ்ந்து அழகாய புல்லாணியே —9-3-1-

தொழுதும் எழு-தொழுது எழு -நம்மாழ்வார் போல் இங்கு இவரும் –
நெஞ்சே -அத்யாகராம் பண்ணிக் கொள்ள வேண்டும் இங்கு
நீழல் வாய்-நிழலிலே
என்னை நைவித்து-சம்ச்லேஷத்தால் சிதிலமாகி –

தன்னை நைவிக்கிலேன்-
நான் தானாக மாட்டேனே
தான் எல்லாம் என்னை நைவித்தானாய் இறே இருக்கிறது –
என்னை நைவித்து எழில் கொண்டமை யுண்டு இறே –

(தான் எல்லாம்-பகவான் எல்லாப் படிகளாலும்
என்னை நான் அழிவித்துக் கொள்ள மாட்டேன்
என்னை சொல்லாமல் தன்னை –நான் தானாக மாட்டேன் ஆகவே இந்தப்பத பிரயோகம் )

தன்னை நைவிக்கிலேன்–
செயலுக்கு செயல் செய்யத் தட்டு இல்லை இறே
நான் அது மாட்டுகிறிலேன்-
(தனக்குத் தானே துன்பம் கொடுத்தால் அவனுக்குத் துன்பம் கொடுப்பது போலாகும்
தான் நிரங்குச ஸ்வா தந்த்ரன் அன்றோ )
தான் கலக்கைக்கும் சம்பாவானை உண்டாம்படி பிரிந்து படுத்தின பாட்டை நான் முடிந்து
தன்னை நிரசனம் படி பண்ண வல்லேன் இறே –
நான் அது செய்கிறிலேன்-

தான் கலந்து இத்தலையை அழித்தான் ஆகில்
நான் பிரிந்து தன்னை அழிவிக்க வல்லேன் இறே
அதுவும் செய்ய மாட்டுகிறிலேன்
அதாகிறது இவள் தன் ஜீவனத்தில் நசை யறுகை இறே –
(என் சினம் தீருவேன் நானே குலசேகரப்பெருமாள் –
கையால் அடிப்பது பாக்கியமாக கொள்பவன் -முகம் திருப்பியே-அபிநயம் -)

தன்னை நைவிக்கிலேன்-
நான் ஜகத் உப சம்ஹாரம் பண்ணுகிறிலேன்
என்னை நைவித்தான் என்று தன்னை நைவித்தால் பின்னை ஆர் உண்டு
இவள் அவனை நைவிக்கை யாகிறது -தான் முடிகை இறே
நீருக்குப் போக குடம் உடைத்தாரைப் (உடைந்தாரைப் ) போலே
அவர் வரக் கொள்ள
இத்தலை வெறும் தரையாக கிடக்கும் அன்று
அவரைக் கிடையாதே –

(நைதல் ஸ்வரூப நாச பரம் -மூன்றாவது -நைவிக்கை கலசிப்பிக்கை -இரண்டு அர்த்தங்கள் –
தனது ஜீவனத்தில் நசை அறுப்பது -தனது ஜீவனமாகிய அவன் முகத்தைப் பாராது இருப்பதே –
பிரிந்த வியசனத்தாலே மேல் விழுந்து அவன் வரும் பொழுது கிட்ட நின்று முகம் மாற வைக்கில்
அவன் நையும் என்று சொல்ல வேண்டாமே
முடிக்க வேண்டும் என்று கலந்தாலும் -முடியாதே இருந்து அவனை நோக்கப் பார்க்க வேணும் -ரஷிக்க வேண்டும் )

வல்வினையேன்-
முடிந்து பிழைக்க வேண்டி இருக்க
ஜீவித்து இருக்க வேண்டும்படியான மகா பாபத்தைப் பண்ணினேன்
துக்க ஹேது-பாபம்
சுக ஹேது -புண்யம்
இப்போது சுகம் ஆவது முடிகை இறே
முடிந்து சுகிக்க ஒண்ணாத படி பரார்த்தமாக ஜீவிக்க வேண்டும்படியான மகா பாபத்தை பண்ணினேன்-

(விட்டுப் பிரிந்து வாழ்வது துக்கம் -முடிந்தால் சுகம் இவளுக்கு -சுகத்துக்கு ஹேது புண்யம்
புண்யம் இருந்தால் முடியலாம் )

வல்வினையேன்-
என்னால் ஆற்ற ஒண்ணாத படியான பாபத்தை பண்ணினேன் –
அதாகிறது –
தொட்டுத் தெல்லாம் அத் தலையிலே சென்று தாக்கும்படியாய் இரா நின்றதே
ஏதேனும் ஒன்றை இட்டு என் ஆற்றாமையை பரிஹரிக்க வல்லேன் இறே
அத்தலைக்கு ஸ்வரூப ஹானியாய் தலைக் கட்டாது ஒழியப் பெற்றேன் ஆகில்
வஸ்து அவனுக்கு இஷ்ட விநியோஹ அர்ஹ்யமாய் அற்ற பின்பு 
இனி நம்மால் செய்யலாவது உண்டோ –

(பரார்த்தமாக ஜீவாத்மா -எல்லாம் அவனது அதீனம் -குழந்தைக்கு என்ன வந்தாலும் தாயைத் தானே பாதிக்கும் )

பாவியேன்
பாரதந்த்ர்யத்தோபாதி பொல்லாதது இல்லை கிடீர்
திகஸ்து பரவஸ்யதாம்–(ஸூந்தர 25)-என்னக் கடவது இறே
(உயர்ந்த பாரதந்தர்யமும் பொல்லாது என்னும் படி அன்றோ இவளது த்வரை இப்பொழுது )

இவள் தான் முன்பு எல்லாம் ஸ்வாதந்த்ர்யம் புருஷார்த்தம் என்று போலே காணும்  நினைத்து இருப்பது
அது புருஷார்த்தம் ஆவது ஒருவனுக்கே
இங்கன் அன்றாகில் ஸ்வரூப அந்யதா பாவம் புருஷார்த்த என்கிறது அன்றே
இப்போது ஒரு ஹேதுவாலே இறே இப் பாரதந்த்ர்யம் பொல்லாதது என்கிறது
ஸ்வ தந்த்ரரான சக்கரவர்த்தி போல்வாருக்கு அன்றோ
நினைத்தால் போலே முடியல் ஆவது –

(இருவருக்கும் ஸ்வா தந்திரம் புருஷார்த்தம் ஆகாதோ என்ன
அவனுக்கு ஸ்வா தந்தர்யமும்
நமக்கு பாரதந்தர்யம் ஸ்வரூபம்
இதில் இருந்து மாறி நமக்கு ஸ்வா தந்தர்யமும் அவனுக்கு பாரதந்தர்யமும் -அந்யதா பாவம் புருஷார்த்தம் ஆகாதே
இப்பொழுது -பாரதந்தர்யம் பொல்லாதது என்பது தசரதர் போல் முடிய முடியாமல் –
முடியவும் யத்னமும் பண்ண முடியாமல் -இருப்பதால் தானே
மாயும் வகை அறியேன் வல் வினையேன் பெண் பிறந்தே நம்மாழ்வார் )

தொழுதும் எழு-
முடிகை ஸ்வ தந்த்ர்ய கிருத்யம் ஆகில்
ஜீவிக்குமது பார்ரதந்த்ர்ய க்ருத்யமாய் இருக்கும் இறே
முடிந்து பிழைக்கப் பெறா விட்டால் அத்தை நோக்குவாருக்கு ஒரு தாரக த்ரவ்யம் வேணுமே –
நித்யாஞ்சலி புடாஹ்ருஷ்டா-நம இத்யேச்வ வாதினா –
முக்தர்களுக்கும் ஸ்வேத த்வீப வாசிகளுக்கும் லக்ஷணம் -சாந்தி பர்வம்

உண்டு பசி கெட்டது -என்னுமா போலே
நம இத்யேவ வாதி ந-
நமோ நம என்னாத போது-தங்கள் மூச்சு அடங்கும் படியாக இருப்பார்கள்
சாதனா புத்தியா சொல்லில் இறே ஒரு கால் அமைவது
அங்கு இது தானே யாத்ரையாய் இருக்குமே –

எழு-
இத்தனை சாஹசத்துக்கு நன் இசையேன் -என்று இருந்ததாயிற்று நெஞ்சு
கெடுவாய் இது சாதனா அம்சத்தில் அந்வயியாது
இது ஆற்றாமைக்கு உடலாம் காண் –
கடுகப் புறப்படு -என்கிறாள்

அதாகிறது
தேக யாத்ரையில் அந்வயிக்கும் படி
தொழுகிற தொழுகை அன்றே
ஜீவிக்கைக்கு தொழுகிற தொழுகையே-

இனி
தன் ஜீவனத்துக்கு தான் தொழுகையும் விநாசத்துக்கு  உடலாக என்றே நெஞ்சு நினைத்து இருப்பது
அத்தை அனுசந்தித்து நெஞ்சு தரைப் பட்டுக் கிடக்க
இங்கன் அன்று காண் வா -என்று கையைப் பிடித்து எடுக்கிறாள் –

(அவன் உன்னைக் கைப்பிடித்துக் கொள்ளில் போகக் காட்டுவோம் நெஞ்சு சொல்ல
அவன் வாரா விட்டால் நாமும் போகாது இருப்பதே கர்தவ்யம்
அதுக்கு பதில்
அவன் ஒரு பெண் கொடியை வதை செய்தான் ஆகில்
நாமும் பதிலுக்கு நிவாஸ வ்ருஷத்தை ஒரு மரத்தை வெட்டுவோமோ
நிவாஸ வ்ருஷ ஸாதூ நாம் ஆபந்னானாம் பராம் கதி -தாரை –
நம்மைப் பிரிந்து வரவும் மாற்றல் அடி அற்ற மரமாகத் தரைக்கிடை கிடந்த -சயன திருக்கோலம் இங்கு -கோலம் பாராய்
நிரதிசய போக்யமாக தேசத்தில் கலந்தால் நீ நைவிக்காமல்
ஏன் இருந்தாய் -தோழிக்கு பதில் மேல்
கப்பல்கள் வரும் தேச ஸ்வ பாவம் அந்நிலம் )

பொன்னை நைவிக்கும் அப்   பூஞ்செருந்தி  மண நீழல் வாய் என்னை நைவித்து –
அந்த நிலத்திலே கலந்து பிரிய வல்லானுக்கு இனி வரத்து உண்டோ
நாம் போம் இத்தனை போக்கி -கெட்டேன்
அந்நிலத்திலேயும் கலப்பார் உண்டோ –
அவன் தான் பழி கொண்டான் என்னலாம் படி யாயிற்று
அந்த தேச ஸ்வ பாவம் தான் இருக்கிற படி –

பொன்னை நைவிக்கும் அப் பூஞ்செருந்தி  மண நீழல் வாய் என்னை நைவித்து –
ஒரு கார்ய புத்தி பண்ணி இருப்பார்க்கு  அன்றோ ஆறி இருக்கலாவது
சுவடு அறிந்து பிரிந்தார்க்கும் தரிக்கப் போமோ

ஒரு ஸ்ரீ ஜனக ராஜன் திரு மகள் போல்வாருக்கு அன்றோ
அவன் தானே வரும் அளவும் ஆறி இருக்கிறோம் என்று தரிக்கல் ஆவது

பழையார் பாடாற்ற வல்லது
புதியார்க்கும் ஆற்றப் போமோ
(25 வருஷம் அனுபவித்த சீதைப்பிராட்டி போல் அல்லவே நாம் )
ஆர் உயிர் பட்டது என் உயிர் பட்டது-( 9-6-திருக்காட்கரை ) -என்னக் கடவது இறே
அசாதாரணரான நித்ய ஸூரிகளிலே திருவடி திரு வநந்த வாழ்வான் போல்வார் தான் பட்டார்களோ
நான் பட்டபடி -என்கிறார் என்று ஆயிற்று –

இதுக்கு ஜீயர் அருளிச் செய்யும் படி –
இது தன்னை ஆழ்வார் பாடா நிற்க
எம்பெருமானார் -அங்கு ஆர் உயிர் பட்டது இங்கே எனது உயிர் பட்டது -என்று அருளிச் செய்தார் –
ஆழ்வார் உடைய  அனுபவத்தை யாகில் ப்ராப்யமாக சொல்லுகிறதும்
ஆசைப் படுகிறதும்
அதுக்கு அவ்வருகே ஒரு ஏற்றம் சொல்லுவாரைப் போலே சொல்லுவான் என் என்று
நான் ( நம்பிள்ளை )ஜீயரைக்  கேட்க
நாவோடையான ஸ்திரீக்கு பர்த்தாவின் உடைய கர ஸ்பர்சம் உண்டானால்
வேர்ப்பது விடுவது ஆமா போலே
அனுபவத்தில் புதுமையால் படுகிற அலமாப்பு காணும் என்று அருளிச் செய்தாராக நம்பிள்ளை அருளிச் செய்வர் –

பொன்னை நைவிக்கும் -ஸ்வ பாவம் காண் –
தலைமையாக பேர் பெற்றவற்றை எல்லாம் அழிக்கை
அவ் ஊரில் பதார்த்தங்களுக்கு பணி

அசேதனமான செருந்தி -கேவல வர்ண சாம்ய மாதரத்தைக் கொண்டு பொன்னை அழித்தால்
துல்ய சீல வயோ வ்ருத்தாம்  – என்று கொண்டு பருவத்துக்கு அபிமானித்து இருப்பாரை
பரம சேதனன் அழிக்கச் சொல்ல வேணுமோ –
சர்வதா சாம்யம் உடையாரை அங்குள்ளார் அழிப்பார்கள் ஆயிற்று
தான் புருஷோத்தமன் ஆன இது கொண்டு -நாரீணாம் உத்தமி யான இவளை அழித்தான் ஆயிற்று –

செருந்தி பொன்னை அழித்தது
இவன் இவளை அழித்தான்
நாயகன் தான் இவள் தன்னை -பொன்னே -என்று போலே காணும் வ்யபதேசிப்பது
உமிழ் பாலை கடந்த பொன்னே -திரு விருத்தம் -என்னக் கடவது இறே  –

அப் பூஞ்செருந்தி –
வ்ருஷே வ்ருஷேச பஸ்யாமி ( ஆரண்ய )-என்னுமா போலே
கலந்த போதை அங்குத்தை போக்யதை இப்போதும் கூட நெஞ்சிலே வடிம்பு இடுகிற படி
அந்த போக்யதை இப்போதும் கூடே வந்து தோற்றா நின்றது காணும் –

பூம் செருந்தி மண நீழல் வாய் –
பரப்பு மாறப் பூத்து இருப்பது –
பரிமளம் மிக்கு இருப்பது –
நிழல் செய்து இருப்பதாய் இருக்கிறபடி
நிறமும் மணமும் நிழலும் -இவை எல்லாம் உண்டாய் இருக்கிறபடி –
ஓர் இந்த்ரியம் கொண்டு ஒதுங்க நிழல் இல்லை கிடீர்
சஷூர் இந்த்ரியத்துக்கு   நிறம் –
க்ராண  இந்த்ரியத்துக்கு மணம்-
ஸ்பர்ச இந்த்ரியத்துக்கு நிழல் –

நீழல் வாய் -என்னை நைவித்து –
ஒருவருக்கு ஒருவர் உண்டான ஏற்றம் கொண்டு கார்யம் இல்லை –
நிழலே அழிக்க வற்றது
நிழல் இடத்து என்னை நைவித்து –
கடலைத் தரை கண்டேன் -என்னுமா போலே என்னுடைய
ஸ்த்ரீத்வ அபிமானத்தை  போக்கி
(பாரதந்த்ரம் அழித்து ஸ்வாதந்தர்யம் கொடுத்து அணைக்கும் படி )
தான் கிட்டினால்
நான் தன்னை நினைத்து இருந்தது எல்லாம் போய்
அத்தலை இத்தலையாம் படி மாறாடப் பண்ணி
(பாரதந்த்ரம் – ஸ்வாதந்தர்யம் மாறாடப் பண்ணி )
கலக்கைக்கு எதிர்தலை இல்லாத படி அழித்து-
கலப்பாருக்கு எதிர் தலை வேண்டாவோ
முன்பு எல்லாம் இவள் கையிலே அவன் தான் அழிந்து இறே போந்தது
யுத்தத்திலே ஜெய அஜயங்கள் வ்யவஸ்திதம் அல்லாதா போலே யாயிற்று சம்போகத்திலும் –

என்னை நைவித்து –
ஒரு மிதுனமாய் பரிமாறா நின்றால்
அதில் இனிமை இரண்டு தலைக்கும் ஒத்து இருக்க வேண்டி இருக்க
தாம் அதில் அந்வயியாதாராய்-இருந்த படி
நைவித்து -என்று தான் சம்ஸ்லேஷத்துக்கு பேர் –

நைவித்து எழில் கொண்டு
கொன்று கிழிச்சீரை அறுத்துக் கொடு போவாரை போலே
அழித்து யாயிற்று கொண்டு போயிற்று
(அழகு தானே இவள் தனம் )

அகன்ற –
இனி அவஸ்யம் பிரிவு அபேஷிதம் இறே
உத்தேஸ்யம் கை புகுந்தால் கடலோடத் தட்டில்லை –
(பொன் கிடைத்தால் கடலோடி வியாபாரம் செய்வார்களே
பெண்ணைப் பெற்று இவரும் இங்கு கிடக்கிறார் )

பெருமான் இடம் புன்னை முத்தம் பொழில் சூழ்ந்து அழகாய புல்லாணியே-
முத்தரும்பின புன்னை பொழிலாலே
சூழ்ந்து அழகாய திருப் புல்லாணி –

——————————————————-

மார்பே மார்பிலே கை வைத்து உறங்க
கீழே தொழுது எழு என்று கையைப் பிடித்து எழுப்ப
நெஞ்சு தனது ஸ்வ பாவத்தால் உருகுமால் நெஞ்சு என்று உருக
இந்த உருகுதலுக்கு என்ன லாபம்
இங்கு தனியாக இருந்து நினைந்து உருகுதலால் என்ன பலன் தொழுதும் எழு என்கிறாள்

உருகி நெஞ்சே நினைந்து இங்கு இருந்தேன் தொழுதும் எழு
முருகு வண்டுண் மலர்க் கைதையின் நீழலில் முன்னொரு நாள்
பெருகு காதன்மை என்னுள்ளம் எய்தப் பிரிந்தான் இடம்
பொருது முந்நீர்க் கரைக்கே மணி யுந்து புல்லாணியே —-9-3-2-

நெஞ்சே இங்கே இருந்து உருகி என்
நெஞ்சே இங்கே இருந்து நினைந்து என்
அவனை உருக்குதல்
நாம் வலித்து இருத்தல் செய்யலாம் இடத்தில் இருக்க வேண்டாவோ
ஊர்த்த்வம் மாசான் ந ஜீவிஷ்யே -என்று இருப்பார்க்கு
ந ஜீவேயம் ஷணம் அபி -என்று
இருப்பாரைக் கண்டால் தரிக்கலாம் இறே
(சீதாப் பிராட்டியை நினைந்து உருகி இருந்த திருப்புல்லாணிக்குச் செல்ல வேண்டாவோ )

நெஞ்சே இங்கே இருந்து உருகி என் –
இங்கு இருந்து என் –
இது ஆர் அறிய இருந்து அழிகிறோம் –

தொழுதும் எழு-
உருகாமல் நினைக்கும் போதைக்கு இதுவே வேணும் –

(உருகி தரிக்க வேண்டினாலும் தொழ வேண்டும் –
அஞ்சலி பரமாம் முத்ரா
தொழுதால் உருகாமல் இருக்கலாம் என்று அறிவது எப்படி என்பதுக்கு மேல் உதாஹரணம் )

முருகு வண்டுண் மலர்க்கைதையின் நீழலில் –
அங்கு உள்ள திர்யக்குகளும் அகப்பட
அபிமத லாபத்தாலே செருக்கி வர்த்தியா நிற்கும் ஆயிற்று –

தேனை புஜியா நின்றுள்ள வண்டுகளை உடைத்தான
மலரை உடைத்தான தாழை நிழலின் கீழே –
அங்கு உள்ளார்க்கும் சம்போகம் ஆதல்
அதுக்கு அனந்தரமான மதுபானம் ஆதலாய் செல்லா நிற்கும் ஆயிற்று
அனந்தரமான சம்ஸ்லேஷத்துக்கு   பலாதானம் பண்ணுகிற படி –
(பலாதானம் -பலம் ஆதானம் -பின்பு வருவதுக்கு சக்தி கொடுக்க )
அவை முன்பு கலப்பது -பின்பே ஒரு கலவிக்கு உறுப்பாக வாயிற்று –
அவன் கலக்குமது பின்பு பிரிந்து ஆற்றாமையை விளைப்பித்து
கண்டு கொண்டு இருக்கைக்காக வாயிற்று –

முன்னொரு நாள்
பாவியேன் அதுவும் ஒரு நாளே

நாள் –
நாயகன் தன்னைக் கண்டால் போலே இருக்கிறது காணும்
கலந்து பிரிந்த வற்றை நாளை-அந்த நாளை – நினைத்தவாறே –
இன்று போல் அன்று இறே-
(கணையாழி -விரல் -இத்யாதி நினைத்து மகிழ்ந்தது போல் )

பெருகு காதன்மை என்னுள்ளம் எய்தப் பிரிந்தான் இடம்-
என்னுடைய ஹிருதயமானது
மிக்க காதலை உடைத்தாம் படி பண்ணி
தன்னைக் கொண்டு கடக்க நின்றான் ஆயிற்று –

பெருகு காதல் –
அதனில் பெரிய என் அவா -என்னுமா போலே
விபுத்வத்துக்கு -(பரமாத்மாவான -விபு தத்வத்துக்கும் -)அவ்வருகாம் படியாய் இருக்கை-
அணு வஸ்து இறே விபு வஸ்துவை விளாக்குலை   கொள்ளுகிறது –
அப்படியே இருக்கும் இறே-(ஞான) சங்கோசம் அற அவன் பண்ணிக் கொடுத்த வாறே –
(ஞான விகாசம் -ஸ்வேன ரூபேண -ஸ்வரூப ஆவிர்பாவம் )
பிரிகிற தமக்கும்-அது (மிக்க காதலை) உண்டாகில் பிரியான் இறே
இன்னம் காதல் தானே பெருகி தலை மறிந்தது இல்லை –
(முடிய வில்லை -பெருகிக் கொண்டே இருப்பதால் பெருகு காதல் -வர்த்தமானம் –
கூடியும் பிரிந்தும் காதலை வளர்ப்பவன் )

பிரிந்தான் –
இதுக்கு முன்பு திரு நாமங்கள் அறியாள் ஆயிற்று
தான் அறிந்த போதை கண்டதை இறே இவள் சொல்லுவது
அங்கமலக் கண்ணன் -என்னுமா போலே
(அகக் கண்ணன் -பாட பேதம் )
கறுத்து இருக்கும் வெளுத்து இருக்கும் என்னுமா போலே
இதுவும் ஒரு நிரூபகம் –

பொருது முந்நீர்க் கரைக்கே மணி யுந்து புல்லாணியே-
உத்தேஸ்ய சித்திக்கு
இருந்த இடம் விட்டுப் போக வேண்டாத தேசம்
பொருளவையில் பிரிகிறேன் -என்றவனுக்கு கண் அழிவு சொல்ல ஒண்ணாத தேசம் –
(ஆபரணம் சூட்டி அழகு பார்க்க பொருள் ஈட்ட வேண்டும் -பிரிந்து கப்பல் ஏறி போக வேண்டாமே –
கடல் அலைகளே அனைத்தும் உந்தி தள்ளுகின்றனவே )

கீழ்ப் பாட்டில் சொன்ன
ஒளி முத்தமும் தான் இருக்கிறபடி –

(முத்துக்களுக்காகவும் பிரியலாமே என்று சொல்லுமாகில்
கீழே அதுவும் உண்டே -என்னில் -புன்னை முத்தம் -முத்து போல் உள்ள புன்னை பூக்கள்
மொட்டையே முத்தாக கொள்ளலாம்
அன்றிக்கே
கடல் கரை -ஆகையால் -முத்துக்கள் சூழ்ந்த கடல் கரையில் உள்ள புன்னை பொழில்
இலங்கு முத்தும் பவளக் கொழுந்தும் எழில் தாமரைப்
புலங்கள் முற்றும் பொழில் சூழ்ந்து அழகிய புல்லாணி மேல்-9-3-10-
நிகமத்தில் -கீழே சொன்னவற்றை நிகமிக்கையாலே என்றுமாம் )

——————————————————

(நெஞ்சானது நீ என்னை உருகி நினைந்து இங்கு இருந்து என்ன பலன் என்னா நின்றாய்
நீ அவனை மறந்து இருந்தால் நானும் நினைந்து உருக மாட்டேன் என்று சொல்ல
நான் மறக்க வேண்டினாலும் அங்கு போக வேண்டும்
நினைக்கவும் மறக்கவும் அவன் நினைவே காரணம் )

நினைக்க ஒண்ணாமை அன்றிக்கே
மறக்க ஒண்ணாது -என்கிறது –
(நாஸ்திகம் -போல் நினைக்கக் கூடாது -ஆழ்வார் பாவம் நெஞ்சில் பட்டு உணர வேண்டும்
உருகுவதால் நினைக்க மாட்டாது
வை லக்ஷண்யம் மறக்க ஒட்டாது )

ஏது செய்தால் மறக்கேன் மனமே தொழுதும் எழு
தாது மல்கு தடம் சூழ் பொழில் தாழ்வார் தொடர்ந்து பின்
பேதை நின்னைப் பிரியேன் இனி என்று அகன்றான் இடம்
போது நாளும் கமழும்  பொழில் சூழ்ந்த புல்லாணியே –9-3-3-

ஏது செய்தால் மறக்கேன் மனமே –
நாட்டார் தம் தாம் உடைய அபிமதரைப் பிரிந்தால்
கூடின போது மறக்க மாட்டாராய்-
பிரிந்த போது நினைக்க மாட்டாராய் இருப்பர்கள் –
இங்கன் அன்றிக்கே
பிரிவில் மறக்க ஒண்ணாத படியாய் இரா நின்றது –
இனி அவர்கள் படி அன்றிக்கே நம்மது விசஜாதீயமாய் இருந்த பின்பு
கிட்டினால் தான் மறக்கலாமாகில் பார்க்கலாம் –
போந்து காணாய் -என்கிறாள் –
இவள் படி வ்யாவ்ருத்தமாய் இறே இருப்பது  –
(நாட்டார் இயல்பு ஒழிந்து நாரணனை நண்ணுமவள் அன்றோ )

மனமே –
பேறு இழவுகள் இரண்டாலும் வரும்
வியசன உகப்பு உதயங்களுக்கு (அப் உதயங்களுக்கு )உன்னைக் கொண்டு இறே அனுபவிப்பது –

தொழுதும் எழு-
மறைக்கைக்கும் தொழ வேணும் போலே காணும் –
ஏதேனுமாக -அபிமத லாபம் தொழுகையால் அல்லது இல்லையாய் இருந்தது –

தாது மல்கு தடம் சூழ் பொழில் தாழ்வார் –
பூக்கள் உதிர்த்த தாதாகிற படுக்கையிலே யாயிற்று கலந்து பிரிந்தது –
பூக்கள் உதிர்த்த் தாதுக்கள் மிக்கு இருந்துள்ள தடாகங்களாலே சூழப் பட்ட பொழில் பர்யங்கங்களிலே  –
ஒத்த நிலங்களிலே என்ற படி –

தொடர்ந்து –
ராமஸ்து சீதயா ஸார்த்தம் விஜஹார பஹூன் ருதூன் (பால ) -என்னுமா போலே
போக ஸ்ரோதஸ்ஸிலே
இவள் போன போன வகை தோறும் வடிம்பிட்டுக் கொண்டு வந்தான் ஆயிற்று –
இவளுக்கு ஒரு வகையால் ஓர் ஏற்றம் உண்டாம் படி பண்ணிற்று  இலன்
எவ்வளவாக கலந்து பிரிந்தால் இவளை இழக்கலாவது அவ்வளவும் கலந்து விட்டான் ஆயிற்று –

பின் பேதை நின்னைப் பிரியேன் இனி என்று அகன்றான் –
வ்யதிரேகத்தில் இவள் உளள் ஆகாள் என்னலாம் படி கலந்து வைத்து
தன்னைக் கொண்டு பின்னை அகன்றான் ஆயிற்று –
நின்னை கலக்க பொறுப்பாரை அன்றோ பிரிவது –
உன் சௌகுமார்யம் கண்டு வைத்துத் தான் பிரிவானோ –

பிரியேன் இனி என்று அகன்றான் —
கடுக  பிரிந்து கொடு நின்றால் இடி விழுந்தால் போலே இவள் முடிந்து கொடு நிற்கும் என்று பார்த்து
பிரிவு சாத்மிக்கைக்காக வ்யதிரேக முகத்தாலே பிரிவை பிரசங்கித்தான் ஆயிற்று –
(போய் வருகிறேன் என்று சொல்லாமல் பிரியேன் -பிரிவை இவள் உணர வியதிரேகத்தில் சொல்லி தயார் படுத்துகிறான் )
அதாகிறது –
இவன் அந்த சம்ஸ்லேஷ சமயத்தில் சொன்ன வார்த்தை யாகாதே இது -என்று
பிரத்யபிஜ்ஞ்ஞை ( நினைத்து ) பண்ணித் தரிக்கைக்காக –
இங்கன்  அன்றாகில் சம்ஸ்லேஷத்துக்கு உறுப்பான பாசுரம் அன்றே இது –

(சம்ஸ்லேஷ தசையில் பொய் சொன்னான்-கலவியில் ஒரு வகை தானே – என்று உணர்ந்து
பிரிந்த பின்பு சமாதானம் பண்ணிக் கொள்ளலாமே
அகலகில்லேன் இறையும் -என்னுமா போல் பிரியேன் என்பது சம்ஸ்லேஷ தசையில்
உன்மஸ்த்தக தசையில் சொல்லுவது போல் இல்லை
பிராட்டி அகலாமல் சொல்லும் வார்த்தை போல் அல்லவே இவனது )

இயற்கையில் கலவிக்கு முன்பும் உண்டு உடுத்தும் திரிந்தவள் அன்றோ இவள் -என்று இராதே கிடாய்
உன்  சுவடு அறிந்த பின்பு -இனி பிரிந்து ஆற்ற மாட்டேன் காண் -என்றிலள்  ஆயிற்று –
இவள் தான் இங்கனே வருந்திக் கொடு கிடந்தது துக்கப் பட்டாள் இத்தனை யாயிற்று –
இவள் பேதை யாயிற்று –
இவன் தான் முக்த கண்டமாய் பிரியேன் என்றாலும்
அது தான் கலவியில் ஒரு பிரகாரமோ -என்று இருக்குமாயிற்று இவள்
பிரிவு -கலவி -என்கிற இவற்றுக்கு வாசி அறியாள் ஆயிற்று –

பேதை –
வயசால் வந்த இளமை –
போகத்தால் வந்தால் முற்றி இருக்கும் இறே
இனித் தான் விலஷண  விஷயங்கள் எதிர்த் தலை தன்னையும் உண்டாம்படி பண்ணி இறே புஜிப்பது-

பிரியேன் இனி என்று அகன்றான் –
சொலவுக்குச் சேராத செயலைச் செய்தான் –
இப்படி கலந்து வைத்து பிரியுமது ஒரு சைதன்ய க்ருத்யம் அன்று இறே
பாவியேன் என் ஆற்றாமை கண்டால் கூட இருக்க அன்றோ அடுப்பது
இவன் தான் அணைத்த கையை நெகிழ்த்தே வார்த்தை சொல்லுவது –
அப்போது உடம்பில் பிறக்கும் வை வர்ண்யம் காணுமே
இது கண்டால் போகலாமா
இவள் தான் பிரிவு அறியாள் ஆகிலும் -தன் கார்யம் செய்கை தவிராதே
தன்னால் தகையலாவது அன்று இறே –

(எந்நீர்மை கண்டு இரங்கி இது தகாது -கேட்டு இரங்கி இல்லையே கண்டு இரங்கி –
கூட இருக்கும் பொழுதே வை வர்ண்யம் வருமே –
அணைப்பைக் கெட்டிப்பட சற்று நெகிழ்கை வெளுக்கும்
தொடு தொடு –புல்கிக் கிடந்தேன் இத்யாதி பாசுரங்கள் )

என்று அகன்றான் –
பாவியேன் இவற்றில் ஒன்றே அமையாதோ
(பிரியேன் சொல்வதும் அகன்றதும் -இரண்டும் உண்டே இங்கு )
இது தான் இரண்டாயிரம் பிரிவு போலே இருக்கிறது காணும் இவளுக்கு
பிரியேன் என்று சொன்ன போதே பிரிந்தான் இறே
பின்னை  போனதும் மிகை
(பரதன் ராமனை எதிர்த்து வந்தான் என்ற செய்தி கேட்டதுமே
நான் இல்லாமல் போனது போல் என்றார் அன்றோ பெருமாள் )

போது நாளும் கமழும்  பொழில் சூழ்ந்த புல்லாணியே –
பரிமளம் சாத்மிக்கும் படியான தேசம் ஆயிற்று
நித்ய வசந்தமான தேசம் –

(தினப்படி பூக்கள் கமழும் -அன்று அன்று வேண்டிய அளவு –
அப்படிப்பட்ட நித்ய அனுபவம் உள்ள திவ்ய தேசம் )

—————————————————-

(கீழ் மூன்று பாட்டுக்களால் தானும் நெஞ்சும் தொழுவதும் ஒரு ப்பட்டமை
இப்படி ச ஹ்ருதயமாக ஒரு ப்பட்டவாறே
தோழி இது என்ன புதுமை என்னை அறியாமல் கலவி உண்டோ -என்று தடுக்க
அவளை சமாதானம் பண்ணுவது இப்பாசுரம்
வண்டே சாக்ஷி -பொய் சொல்வதற்காகவே கூட்டி வந்தான்
மதுவைக் கொடுத்து இப்படி அவனுக்கு வேண்டிய சாக்ஷி சொல்லவே கூட்டி வந்தான்
மங்கை நல்லாய் தொழுதும்  எழு-தோழியையும் கூட்டிச் செல்கிறாள் இதில் )

கொங்குண் வண்டே கரியாக வந்தான் கொடியேற்கு முன்
நங்கள் ஈசன் நமக்கே பணித்த மொழி செய்திலன்
மங்கை நல்லாய் தொழுதும்  எழு போயவன் மன்னுமூர்
பொங்கு முந்நீர்க்  கரைக்கே  மணி யுந்து புல்லாணியே —-9-3-4-

கொங்குண் வண்டே கரியாக வந்தான்
தானும் யானுமே என்னும் படிக்கு ஈடாக வந்தான் –
(வண்டு -அவன் கோஷ்ட்டி -துளஸீ பீதாம்பரம் போல் அவன் உடனே இதுவும் சேர்த்தி –
பொதுவான சாக்ஷி இல்லையே-கடக சமாஸ்ரயணம் பண்ண வில்லையே – )
தன் வளையத்திலே மது பானம் பண்ணுகிற வண்டே சான்றாம்படி வந்தான்
உபவாச க்ருசர் முகம் பார்த்து வார்த்தை சொல்லார்கள் இறே சுகமே ஜீவித்து இருக்கும் இவர்கள்
அவை உண்டு உடுத்து சுகமே காலம் போக்குகிறன விறே
நக்குண்டார் நாவிழார் -என்று அவன் பக்கலிலே ஜீவித்தவை நமக்காக வார்த்தை சொல்லுமோ –

கொடியேற்கு முன்-
ச சாஷிகமான ஸம்ஸ்லேஷத்துக்கு மன்றாடும்படியான பாபத்தைப் பண்ணினேன்-

(நீ சொன்னதே போதுமே -சாக்ஷி வேண்டாமே -நீ அனுபவித்த இதுக்கு சாக்ஷி வேண்டாம் அதுவே அமையும்
கீழே கலவி நான் இல்லாமல் எப்படி -என்ன -சாக்ஷிக்கு வண்டு -இதுவே சந்தர்ப்பம் )

முன் நங்கள் ஈசன் நமக்கே பணித்த மொழி செய்திலன்-
சம்ஸ்லேஷ சமயத்திலே நம்மை தனக்காக்கி எதிர்த்தலை இல்லை என்னலாம்படி கலந்தவன் –
(நங்கள் ஈசன்-பிரிந்தாலும் -சொல்ல வைக்கும் )
நமக்கு சொன்ன பாசுரத்தின் படி செய்கிறிலன் –
கடவ வர்களே விலங்கி நின்றால்
பின்னை நிவாரகர் இல்லை இறே-

நமக்கே பணித்த –
ஆன்ரு சம்சயம் பரோ தர்மஸ்த்வத்த ஏவ மயா ஸ்ருத  –
கலக்கிற போதை சொல்லிற்று ஒரு வார்த்தை உண்டு
அதாகிறது –
சிலரோடு சிலர் கலந்து பிரிந்தால்
பின்னை அவர்கள் படும் வியசனம்  கண்டால்
நான் பொறுக்க மாட்டேன் காண்-
இது காண் என் பிரகிருதி  இருக்கும்படி -என்று கொண்டு சொல்லி வைத்தான் ஆயிற்று

பிரிந்து இவள் நோவு படுகிற போது-இது வன்றோ இவன் சொன்னது -என்று கொண்டு
பிரத்யபிஜ்ஞ்ஞை பண்ணி தரிக்கைக்காக
இது தான் ஓர் ஆளின் வாயில் இட்டு நீட்டுகை இன்றிக்கே
அவர் தம் வாயாலே சொல்ல
நான் என் செவியாலே கேட்டேன் -என்கிறாள் –

அவன் சொன்னபடி தப்ப நின்றானே யாகிலும்
அவன் இருந்த இடத்தே சென்று கிட்டுவது நம் பருவதுக்கும் போராது காண் -என்று தோழி சொல்ல –

மங்கை நல்லாய் தொழுதும்  எழு –
ஓம் காண்-
உன் பருவம் நோக்கி அழகிதாக உண்டாகை இறே-கடுகப் புறப்படாய்-என்கிறாள் –

தன்னுடைய பருவம் அழியா நின்ற நின்ற பின்பு
நீ பருவம் நோக்குகிறோம் என்று இருக்கிற இத்தால் பிரயோஜனம் என் –
வயோஸ் யாஹ்யதி வர்த்ததே-என்றார் இறே
நமே துக்கம் ப்ரியா தூரே நமே துக்கம் ஹ்ருதே திவா எததேவா நு ஸோசாமி –
மைதிலி நம்மைப் பிரிந்து தூரத்திலே வர்த்தியா நின்றாள் -என்றத்துக்கு வெறுக்கிறேனும் அல்லேன் –
இனி வலிய ரஷசாலே பிரிவும் பிறந்தது –
இனி எங்கனே நாம் சாதிக்கும் படி –என்றத்துக்கு வெறுக்கிறேனும் அல்லேன் –
அதாகிறது கடக்க இருந்தாள் ஆகில் கடலை அணை செய்து நாலு பயணம் உள்ளே எடுத்து விட்டுத் தீருகிறது
இனி பிரிவுக்கு ஹேது பூதனான பையலைக் கிழங்கு கொடுத்து பொகடத் தீருகிறது அக்கார்யம்
நான் இது ஒழிந்த அல்லாத வற்றுக்கும்  வெறேன்
இது ஒன்றுக்குமே நான் மோஹிப்பது
அது ஏது என் என்னில்
வயோஸ்யா ஹ்யதி வர்த்ததே  –
இவை போல காலம் என் அம்பால் மீள விடலாவது ஓன்று அன்று இறே
அணைக்கு கிழக்கு பட்ட நீரை மீட்கப் போகாது இறே –

போயவன் மன்னுமூர் –
போய் தொழுதும்   எழு -என்னுதல் –
அவன் போய் மன்னும் ஊர் -என்னுதல் –
அவ்விடம் ஆர்த்தர் இல்லாத இடம் போலே காணும் –
அவன் நித்ய வாஸம் பண்ணும் இடத்தில் ஆர்த்தர் இல்லை இறே –
(நித்தியமாக அனுபவிப்பார்கள் தானே அங்கு )

பொங்கு முந்நீர்க்  கரைக்கே  மணி யுந்து புல்லாணியே –
ஆர்த்தர்க்கு உத்தேச்யம் சென்று பெற வேண்டாதே
இருந்த இடத்தே கொடு வந்து தள்ளும் தேசம் ஆயிற்று –
பாவியேன் -அத்தேசத்தின் படி அவனுக்கும் உண்டாகப் பெற்றிலோமே –

——————————————-

உணரில் உள்ளம் சுடுமால் வினையேன் தொழுதும் எழு
துணரி நாழல் நறும் போது நம் சூழ் குழல் பெய்து பின்
தணரிலாவி தளரும் என வன்பு தந்தானிடம்
புணரி யோதம் பணில மணி யுந்து  புல்லாணியே —9-3-5-

கீழே மறக்க ஒண்ணாது என்றது இறே
இங்கே நினைக்க ஒண்ணாது என்கிறது –
மறத்தல் நினைத்தால் இரண்டாய் இறே இருப்பது
அவை இரண்டும் அரிதாக நின்றது உணரில் -உள்ளம் சுடுமால்-
என்கிறது வருந்தி நினைக்கில் என்கிறது இல்லை
நினைந்தவாறே நெஞ்சு சுடா நின்றது என்கை –

வினையேன் –
ஜீவன த்வாரம் ஆனவை தானே பாதகமாம் படியான பாபத்தைப் பண்ணினேன்
சமா த்வாதச தத்ராஹம் -என்று கொண்டு
வ்ருத்தமானது தன்னையே ஸ்மரித்து  தரித்தார்கள் கிடீர்
சில பாக்யாதிகர் –

தொழுதும் எழு –
எல்லா அளவிலும் இது வேணும் ஆயிற்று –
போக்கடி அறவற இத்தையே பற்றக் கடவதே இருக்கும் இறே –

துணரி நாழல் நறும் போது நம் சூழ் குழல் பெய்து-
பூம் கொத்துக்களை உடைத்தான நாழலின்  உடைய  செவ்விப் பூக்களை
பறித்து முடித்து இருந்துள்ள குழலிலே சுற்றி
அத்ரோ பவிச்யஸா தே நகாபி புஷ்பை ரலன்க்ருதா -என்னக் கடவது இறே-

பின் தணரிலாவி தளரும் என வன்பு தந்தானிடம்-
இப்படி அவன் பண்ணுகிற விருப்பத்துக்கு
நாம் விஷய பூதர் ஆகாத வன்று இரண்டு ஆஸ்ரயமும்
அழியும் என்னும் படி யாயிற்று பரிமாறின படி –
தணரில் -என்றது -பிரியில் -என்றபடி -தாழ்க்கில் -என்னுதல் –

வன்பு தந்தானிடம்-
இது எல்லாவற்றாலும் கூடச் செய்ததாய் ஆயிற்று –
இத்தலையில் அன்புக்கு கிருஷி பண்ணினவனாய் நின்ற இத்தனை –

புணரி யோதம் பணில மணி யுந்து  புல்லாணியே –
கடலில் திரைகள் ஆனவை சங்குகள் ஈன்ற முத்தைக் கொடு வந்து
தள்ளா நிற்கும் ஆயிற்று –
உத்பத்தி காலத்திலே காணலாய்
பின்பு அறிவார் கையிலே இட்டுப் பரீஷிக்க வேண்டாதே யிருக்கை-
திரைக் கிளர்த்திகளிலே அறை யுண்டு வழிகளிலே  ஈனுமாயிற்று –
அன்றியே
சங்கு களையும் மணிகளையும் தள்ளா நின்று இருந்துள்ள புல்லாணியே -என்னவுமாம் –

——————————————————

எள்கி நெஞ்சே நினைந்து இங்கு இருந்தென் தொழுதும் எழு
வள்ளல் மாயன் மணி வண்ணன் எம்மான் மருவும் இடம்
கள்ளவிழும் மலர்க்காவியும் தூ மடல் கைதையும்
புள்ளும் அள்ளல் பழனங்களும் சூழ்ந்த  புல்லாணியே —9-3-6-

எள்கி நெஞ்சே நினைந்து இங்கு இருந்தென்-
ஈடு பட்டு நினைக்க வேண்டும்படியான
இங்கு இருந்து பிரயோஜனம் என் –
நினைக்க வென்று புக்கால் சாலப் பணிப்பட வேண்டும்படியாய் இருக்கும் யாயிற்று –

தொழுதும் எழு-
நினைக்கையே தொடங்கி பணிப்பட வேண்டும் இடத்தை விட்டு
காயிகமான வியாபாரம் பண்ணலாம் தேசத்து ஏறப் போரு நீ –

வள்ளல் மாயன் மணி வண்ணன் எம்மான் மருவும் இடம் –
அவன் நித்ய வாஸம் பண்ணாத இடத்தில் நினைக்கவும்  அரிது
அவன் நித்ய வாஸம் பண்ணும் இடத்தில் காயிக வியாபாரமும் பண்ணக் குறை இல்லை –
வள்ளல் –
சம்ஸ்லேஷ சமயத்தில் தன்னை எனக்கு சர்வ ஸ்வாதானம்  பண்ணினவன் –
மாயன் –
இப்போது முறை கெட்டுத் தான் இருந்த இடத்தே செல்ல வேண்டும்படி
அப்போது அப்படி பரிமாறினவன்
மணி வண்ணன் –
இவை ஒன்றுமே இல்லை யாகிலும் விட ஒண்ணாத படியான வடிவு அழகை உடையவன்  –
எம்மான் –
அவ் வடிவு அழகை  காட்டி என்னை
அனந்யார்ஹனாக எழுதிக் கொண்டவன் –

கள்ளவிழும் மலர்க்காவியும் –
அவன் நித்ய வாஸம் பண்ணுகிற இடத்திலே சென்றால்
அவனுக்கும் நமக்கும் நினைத்த படி
பரிமாறலாம் படி ஏகாந்தமான ஸ்தலம் கிடீர் –
செவ்வி அழிவதற்கு முன்பே பறிக்க வேணும் மேல் விழுந்து பறித்து
ஒருவருக்கு ஒருவர் ஏறிய அது மேலே பட்டு மதுவானது
பாயா நிற்கக் காணலாய் இருக்கிற
செங்கழு நீரும் –
அதாகிறது -ஸூ நா ஸூ நிக்ரியைக்கு யோக்யமாய் இருக்கை –

தூ மடல் கைதையும் –
வெள்ளை மடலை உடைத்தாய் -இவளுக்கு ஸ்ப்ருஹை பண்ணி
மேல் விழலாம் படி யான தாழையும்
இவன் தோள் கொடுக்க  ஏறிப் படுக்கலாம் படியாய் இருக்கை –

புள்ளும் –
நாநா வர்ணங்களையும்
நாநா வான பேச்சுக்களையும் –
உடையவான பஷிகளைக் கண்டு
இதன் பேர் என்ன இதன் பேர் என்ன -என்று இவள் கேட்க
அவன் அவற்றின் பேர் சொல்லலாம் படியான புள்ளும் –

அள்ளல் பழனங்களும் சூழ்ந்த  புல்லாணியே –
இவள் தன் செல்வாலே வளைவது அறியாதே நீர் நிலங்களிலே புக்கு
அங்கே அளறு பாய்ந்து நின்றால்
அவன் கைக் கொடுத்து ஏற விடும்படியான நிலங்களையும் உடைத்தான
திருப் புல்லாணியைத் தொழுதும் எழு –

—————————————————–

பரவி நெஞ்சே தொழுதும் எழு போயவன் பாலமாய்
இரவு நாளும் இனிக் கண் துயிலாது இருந்து என் பயன்
விரவி முத்தம் நெடு வெண் மணல் மேற்கொண்டு வெண் திரை
புரவி என்னப்  புதம் செய்து வந்து யுந்து புல்லாணியே —-9-3-7-

பரவி நெஞ்சே தொழுதும் எழு –
அக்ரமான பேச்சுக்களைச் சொல்லி
அடைவு பாராமல் தொழலாம் படியான
தேசத்து ஏறப் பாரு –

போயவன் பாலமாய் –
போய்த் தொழுதும் எழு -என்னுதல் –
போயவன் பக்கலிலே நெஞ்சை வைத்து -என்னுதல் –

இரவு நாளும் இனிக் கண் துயிலாது இருந்து என் பயன்-
இரவும் பகலும் இருந்து
இனிக் கண் உறங்காது ஒழிகிற இத்தால் என்ன பிரயோஜனம்  உண்டு –
அநித்ரஸ் சத்தம் ராம  -என்று இவன் இருக்குமது கேட்டு
அதடியாக நாம் -நசமேஸ்தி நித்ரா -என்று இருக்கும் அன்று அன்றோ அபிமத சித்தி உள்ளது –
அவன் ருசி முன்னாக -இத்தலை ருசி பண்ணும் அன்று இ றே பலத்தோடே வ்யாப்தம் ஆவது –
அவனுடைய ருசி இறே பேற்றுக்கு உடலாக தலைக் கட்டுவது –
இவனுடைய ருசி அவனுடைய விரகத்துக்கு உடலாம் இத்தனை இறே –
ஆனால் பின்னை   அவனுக்கு இரக்கம் இல்லை என்கிறதோ -என்னில்
ஓம் -அப்படி சொல்லக் குறை இல்லை இறே -இப்போது அவன் வாராமையாலே –
இல்லையாகில் வருகைக்கு சக்தி இல்லை -என்னுதல்
சிலருக்கு பர தந்த்ரன் -என்னுதல் -சொல்ல ஒண்ணாது இறே
முறை கெட்டுச் சொல்ல வேண்டும்படியான தசை பிறந்தால்
முறை உடைய அவனுக்கு வரக் குறை என்
தொழுதும் எழு -என்று கொண்டு பழி யாகிறதோ –

விரவி முத்தம் நெடு வெண் மணல் மேற்கொண்டு வெண் திரை –
முகத்தோடே கூட
வெளுத்த மண்ற்களைக் கலந்து
கீழ் மண் கொண்டு மேல் மண் எறியும்படி-வெளுத்த திரைகள் ஆனவை  –

புரவி என்னப்  புதம் செய்து வந்து யுந்து புல்லாணியே  –
குதிரை தாவுமா போலே தாவி வந்து
தள்ளா  நின்றுள்ள திருப் புல்லாணியை
தொழுதும் எழு –
இருவருக்கும் ஓன்று கொண்டே போது போக்கலாம் படி யான
தேசத்து ஏறப் போவோம் –

——————————————————

அலமும் ஆழிப் படையும் உடையார் நமக்கு அன்பராய்ச்
சாலமதாகித் தகவொன்றிலர் நாம் தொழுதும் எழு
உலவு கானல் கழி யோங்கு தண் பைம்பொழி லூடிசை
புலவு கானல் கழி வண்டினம் பாடு புல்லாணியே —9-3-8-

நிர பேஷரான இவர் ஓர் அபலை இறே -என்று பாராதே
நமக்கு ஸ்நேஹிப்பாரைப்   போலே சலத்தைப் பண்ணினார் ஆயிற்று –
அலமும் –
ஹலத்தைச் சொன்னபடி
இத்தை திவ்ய ஆயுதமாகச் சொல்லக் கடவது இறே
ஆழிப் படையும் உடையார் நமக்கு அன்பராய்ச் சாலமதாகித்
சர்வருக்கும் பிராப்யரான தாம்
நம்மை தமக்கு பிராப்யராகக் கொள்ளுவாரைப் போலே
ஸ்நேஹத்தைப் பண்ணினார் ஆயிற்று –

தகவொன்றிலர் –
பரி பூரணரான நாம் ஒரு ஸ்திரீ விஷயமாக சலத்தை
பண்ணினோம் என்கிற
இரக்கமும் கூட இன்றிக்கே இருந்தார் ஆயிற்று-

நாம் தொழுதும் எழு-
நாம் நிர்த்தயராக ஒண்ணாதே
சத்ர சாமர பாணிஸ்து லஷ்மணோ ராகவாஅநுஜ-
இளைய பெருமாள் ஒரு கையாலே சத்ரத்தையும்
மற்று ஒரு கையாலே சாமரங்களையும் பிடித்து பரிமாறும் போது
சக்கரவர்த்தி ஆண்ட பரப்பில் அதுக்கு ஓர் ஆள் இல்லாமையால் அன்று இறே
அடிமையில் கலித்தனம் -பசியனாய் – இருக்கிறபடி –
பிரியமாகாத வன்று இவனுக்கு இது பிராப்யம் ஆகாது இறே
இவன்  அவனுக்கு உகப்புச் செய்தால் இறே ஸ்வரூபம் சித்தி யாவது
ப்ரஹர்ஷயிஷ்யாமி-இலே இறே இவன் தனக்கு அந்வயம் –

உலவு கானல் கழி-
சஞ்சரியா நின்றுள்ள தென்றலை உடைத்தான நல்ல கழி -என்னுதல்
அன்றிக்கே
ஓடா நின்றுள்ள கால்கள் உண்டு -நீரோட்டங்கள்
அவற்றை உடைத்தான நல்ல கழி -என்னுதல்

யோங்கு தண் பைம்பொழிலூடிசை-
வை மா நிகரைப் போலே இருக்கை –
ஆகாச அவகாசம் அடையும் படியாக
ஸ்ரமஹரமாய்
பரந்து இருந்துள்ள பொழிலிலே  –

புலவு கானல் கழி வண்டினம் பாடு புல்லாணியே –
அக் கடல்கரையின் நாற்றம் தட்டாத படிக்கு ஈடாக
சோலை மேல் உயர இருக்கும் யாயிற்று வண்டினங்கள்
தேவர்கள் சம்சார வெக்காயம் தட்டாமல் இருக்குமா போலே
மதுபான மத்தமாய்க் கொண்டு
செருக்கி வருகிற வண்டினங்கள் ஆனவை
அதுக்கு போக்கு வீடாக அங்கே இருந்து இசை பாடா நிற்கும் ஆயிற்று  –
இசை கேட்டால் பொறுக்கும் படியான தேசத்து ஏறப் போவோம் -என்றபடி –

—————————————————–

ஓதி நாமம் குளித்து உச்சி தன்னால் ஓளி மா மலர்ப்
பாத நாளும் பணிவோம் நமக்கே நலமாத லில்
ஆது தாரான் எனிலும் தரும் அன்றியும் அன்பராய்ப்
போதுமாதே தொழுதும் அவன் மன்னு புல்லாணியே —-9-3-9-

செய்யக் கடவது அல்லாதன எல்லாம் செய்து பெறக் கடவோம்
புருஷார்த்தம் -ஸ்வ யத்ன சாத்தியம் என்று இருப்பார் படுவது எல்லாம் படக் கடவோம் –

ஓதி நாமம் குளித்து உச்சி தன்னால்
வாயாலே திரு நாமங்களைச் சொல்லக் கடவோம் –
ஆங்கோணைகள் செய்து -என்னக் கடவது இறே –
அதாகிறது
அவன் எதிரே வாரா நின்றால்
நாம்  பிரணயிநி யாய் நிற்கை அன்றிக்கே
கும்பிட்டுக் கொடு நிற்க கடவோம் -என்கிறாள் –

ஓளி மா மலர்ப் பாதம் –
திருவடிகளில் போக்யதை கண்டால் வணங்கத்தான் போகாது போலே காணும்
அதாகிறது
அனுபவிக்க காலம் போரும் அத்தனை அன்றி
முறை உணர்ந்து திருவடிகளிலே விழுகைக்கு அவசரம் இல்லை
பிராப்யம் என்று இருக்கை தவிர்ந்து
ப்ராபகத்வ புத்தி பண்ணுவோம் –

நாளும் பணிவோம் –
சாதன விச்சேதத்தில்
பல விச்சேதம் வரும் என்று இருப்பார்
படுவது எல்லாம் படக் கடவோம் –

இனி அத்தலைக்கு நன்மை பார்க்குமது எல்லாம் தவிர்ந்து
நம்மக்கே நன்மை பார்க்கும் இத்தனை –
நமக்கே நலமாத லில்
இதுக்கு முன்பு நம் இழவுகளும் பாராதே
அவனுக்கே நன்மை பார்த்து போவோம் இறே –

ஆது தாரான் எனிலும் தரும் –
எல்லாம் செய்தாலும் அவனை பக்திலப்பயன் அன்று -என்ன ஒண்ணாதே
ஒன்றும் தாரேன் -என்று இவன் பிரதிஞ்ஞை பண்ணி இருந்தாலும்
பக்திலப்பயன் என்கிற வசனத்தை மாற்ற ஒண்ணாதே –

அன்றியும் அன்பராய்ப்போதும்  –
அவன் பக்தி பண்ண விருக்குமது தவிர்ந்து
இனி நாம் பக்தராய் போவது
பேறு நம்மதானால் அதுக்கு ஈடான சாதனமும் நம் தலையில் ஆக வேண்டாவோ –

மாதே அவன் மன்னு புல்லாணியே –
அவனை ஓரிடத்தே பதி கொண்டு இருக்க பண்ணுகிறது என்
அவன் எதிரே கிளர்ந்து வரும்படி நாம் போகுதும் –
இவள் செய்கிறவை இவளுக்கு ஸவ் பாவம் என்று இருக்கில் அன்றோ
இவனுக்கு ஆறி இருக்கலாவது
சாதனம் என்று புத்தி பண்ணினால் பின்னை அங்கு அவனுக்கு தங்க ஒண்ணாது இறே –

ஓதி நாமம் இத்யாதி
அவன் பண்ணின பக்தி கொண்டு  பெறலாம் என்று இருந்தோம்
அஃது  அல்ல விறே சாஸ்த்ரங்களில் சொல்லுகிறபடி
இனி சாஸ்த்ரோக்தமான பக்த்யாதி உபாயங்களை
கண் அழிவு அற அனுஷ்டித்து
அவனைப் பெறக் கடவோம் -என்கிறாள் –

அவனுடைய அங்கீ காரத்தாலே பெறலாம் என்னும் விஸ்வாசம் கொண்டு இருந்தோம் –
அது கார்யகரம் ஆகாத பின்பு இனி ஏதேனும் ஒரு க்ரியா மாதரத்தை பற்றும் அத்தனை இறே-
ஓதி நாமம் –
எல்லாம் செய்தாலும் -சததம் கீர்த்தய்ந்த -என்கிறதுக்கு ஒரு பலம் இன்றிக்கே இராது இறே
குளித்து –
அவன் விஷயீ காரத்தாலே பெறுமது தப்பிற்று இறே
இனி சாதநானுஷ்டானம் கொண்டே பெற வேண்டி இருந்ததே
அவை அனுஷ்டிக்கும் போது அதிகாரிகள் ஆக வேண்டுமே
அதுக்கு ஈடாக குளிக்கக் கடவோம்
உறாவி இருந்த நம் தலைகளைக் கொண்டு அவனைப் பணியக் கடவோம் –
ஒளி மலர்ப் பாதம் –
பிராப்யமான அதுவே பிராபகம் என்று இருக்குமது தவிர்ந்து
இத்தை நம் தலையிலே ஏறிட்டுக் கொள்ளக் கடவோம்
அதுக்கு ஈடாக இரண்டு ஆகாரம் உண்டெ ஆகிலும் போக்யமான ஆகாரம் ஒன்றுமே
உள்ளது என்று நினைத்து இருக்கக் கடவோம் –

இனி நாளும் பணிவோம் –
தேக யாத்ரையில் அந்வயிக்கும் அன்று இறே -அவ்வடைவு
தப்பின வன்றைக்கு பிரத்யவாயம் அன்றிக்கே ஒழிவது-
கெடுவாய் அரை ஷணம் தாழ்க்கும் காட்டில் குணாதிக வஸ்துவை இங்கனம் அழிக்கலாமோ என்று தோழி சொல்ல
நமக்கே நலமாதல் –
ஓம் காண்-இதுக்கு  முன்பு அடங்க அவ்விஷயத்தை   நோக்கி யுண்டாயிற
இனி உள்ள காலம் எல்லாம் நமக்கே நன்மையை பார்க்கக் கடவோம்
தத் ததச்ய சத்ருசம் பவேத் -என்று இருந்து நாம் ஜீவித்து இருந்தது அமையும்-

ஆது தாரான் எனிலும் –
எல்லாம் செய்தாலும் இவனால்  பக்த்யா த்வன்னன்யா சக்ய-என்கிறதை தவிர்க்க ஒண்ணாதே –
தன்னையே பற்றிப் பெற இருப்பார்க்கு அன்றோ தன்னைக் கொடாது ஒழியல் ஆவது  –
அன்றியும் அன்பராய் –
அது எல்லாம் கிடக்க நமக்குத் தான் பேற்றுக்கு வழி இது காண்
தந்திலன் ஆகில் தவிருகிறான்
நாம் நம் ஸ்வரூபத்தை அழித்துக் கொடு நின்றால் பின்பு அவன் ஜீவிக்கும் படி காண்கிறோம்
இவ்வன்பு தனக்கு உபய ஆகாரத்வம் உண்டு இறே
அதில் இப்போது பிரகரணத்துக்கு சேரும்படியாக சாதனத்தில் கொள்ள அமையும்
இவள் இப்படி பாரிக்கச் செய்தேயும் பிற்காலித்தாள்  போலே காணும் இவள் –

மாதே போது-என்கிறாள்
அவன் மன்னு புல்லாணியே
எல்லாம் செய்தாலும் அவன் ஆசனத்தை கிளப்பும் போது
நம் ஆற்றாமை வேணும் காண் –

—————————————————

இலங்கு முத்தும் பவளக் கொழுந்தும் எழில் தாமரைப்
புலங்கள் முற்றும் பொழில் சூழ்ந்து அழகிய புல்லாணி மேல்
கலங்கல் இல்லாப் புகழான் கலியன் ஒலி மாலை
வலம் கொள் தொண்டர்க்கு இடமாவது பாடல் வைகுந்தமே –9-3-10-

இலங்கு முத்தும் பவளக் கொழுந்தும் எழில் தாமரைப் புலங்கள் முற்றும் பொழில் சூழ்ந்து அழகிய புல்லாணி மேல் –
இந்த தேச வை லஷண்யம் ஆயிற்று இவர் தம்மை இங்கன் கவி பாடுவித்தது –
உஜ்ஜ்வலமாகா நின்றுள்ள முத்தும்
அழகியபவளக் கொழுந்தும்
தன் பரப்பு மாறச் செவ்வி பெற அலர்ந்த தாமரைப் பொய்கை களையும் உடைத்தான
சோலைகளாலே சூழப் பட்ட
திருப்புல்லாணி மேலே யாயிற்று கவி பாடிற்று –

கலங்கல்  இல்லாப் புகழான்-
கவி பாடினவர்  தம்முடைய
கலியன் ஒலி மாலை ஸ்வபாவம் இருக்கிற படி
பர ஹிம்சை பண்ணி திரியும் அதில் காட்டில்
அஹங்கார கர்ப்பமான கிரியா கலாபங்களாலே பெற இருக்குமது நன்றாயிற்று
அது தன்னையும் கழித்து அவன் தன்னாலே அவனை பெருமதே நன்றாக சொல்லி
அத்தையும் கீழில் அவையோடு ஒக்கக் கழித்து
பிராப்யத்தில்  த்வரையால் வந்த அலமாப்பை உடையார் ஆகையாலே வந்த புகழ் ஆயிற்று
புகழுக்கு கலக்கம் இல்லாமை யாகிறது இவ்வளவும் வருகை யாயிற்று –

கலியன் ஒலி மாலை –
முநி ப்ரணீதம் -என்னுமா போலே ஆப்த வசனமாய் இருக்கை-

வலம் கொள் தொண்டர்க்கு இடமாவது பாடல் வைகுந்தமே –
வலம் கொள்ளுகை-வளைய வருகை
இப்பத்து பாட்டையும் அதிகரிக்கவுமாம்
அன்றிக்கே ஒரு பாட்டை அதிகரிக்கவுமாம்
அதில் அர்த்தானுசந்தானம் பண்ணவுமாம்
அதில் இசையை அப்யசிக்கவுமாம் –
இவ்விசை தன்னை ஒருவன் பாடா நின்றால் அதில் அசஹமானனாம் அதன்றிக்கே ஒழியுமுமாம்  –
ஏதேனும் ஒரு ஆகாரத்தில் அந்வயமே வேண்டுவது –
அவர்களுக்கு வாசஸ் ஸ்தான தேசம் -துக்க கந்த ரஹீதமான நித்ய விபூதியே
இத்தை இங்கே அப்யசிக்க
அவர்கள் இங்குத்தை தனிமை தீர
அர்ச்சிராதி மார்க்கமே அங்குள்ளார் கொண்டாடப் போய்
நித்ய விபூதியிலே புக்கு
நித்ய அனுபவம் பண்ணப் பெறுவார்  –

———————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பெரிய திருமொழி-9-2—ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம்-

May 20, 2014

(திரு நாகை 9-2– மகள் பதிகம் –
திருப்புல்லாணி –9-3 /9-4—மகள் பதிகம்
திருக்குறுங்குடி –9-5–மகள் பதிகம்
திருமாலிருஞ்சோலை -9-9-தாய் பதிகம்
இப்படி ஐந்தும் இப் பத்தில் உண்டு
கீழே எட்டாம் பத்தில்
முதல் இரண்டும் தாய் பதிகம் -அடுத்த மூன்றும் மகள் பதிகம் -அனைத்தும் திருக்கண்ண புரம் )

(சவுந்தர்ய ஆரண்யம் -சவுந்தர்ய ராஜன்
லாவண்யம் -சமுதாய அழகும் -ஸுந்தர்யம்-அவயவ அழகும் –
தாள் கண்டார் தாளே கண்டார் போல் – சவுந்தர்யம் நாகை
லாவண்யம் திருக்குறுங்குடி வைஷ்ணவ வாமனத்தில் ருசி ஜனக லாவண்யம் பூர்ணம்
உருவ வெளிப்பாடு –5-5- அங்கு போல் இங்கும் உருவ வெளிப்பாடு -தானும் அனுபவித்து தோழிக்கும் உரைக்கிறாள் –
ஆதி சேஷனால் கைங்கர்யம் கிருத யுகம் -நாக ராஜன் தானே -அடுத்த த்ரேதா யுகத்தில் பூமா தேவி வழி பட –
பின்பு த்வாபர மார்க்கண்டேயர் -கலி யுகம் சாலி ஸூகர் நாக கன்னிகை கல்யாணம் செய்யும் தான ஹஸ்தம்
துருவன் இங்கே தபஸ் செய்தார் -அவர்கள்
பிரார்த்தனைக்காக இங்கு
சோழ மன்னன் சாலி ஸூகர்-சிறந்த கைங்கர்யங்கள் செய்தார் –
அரங்கன் தனி சந்நிதி
அமர்ந்த சந்நிதியும் உண்டே
மூலவர் நீல மேகப்பெருமாள்
உத்சவர் சவுந்தர ராஜா
இடது காதில் கல் வைத்த தோடு
ஆதி சேஷன் சந்ததி இங்கே வளர்ந்தது -சாரபுஷகாரணி
பத்ர கோடி சவுந்தர்ய விமானம்
அழகிய திவ்ய மங்கள விக்ரஹம் -அச்சோ ஒருவர் அழகிய வா -திக் பிரமம் அடைவிக்கும் –
ஆனந்தம் வெளிப்பாடு -உருவ வெளிப்பாடு மட்டும் தானே விஷாத ஸூசகம் ஆகவுமாம் -)

பொன்னிவர் -பிரவேசம் –

மன்னர்கள் மடிய மணி நெடும் திண் தேர் மைத்துனர்க்கு உய்த்த மா மாயன் -என்று
அவனுடைய ஆஸ்ரித பாரதந்த்ர்யத்தை அருளிச் செய்தார்
கீழ்த் திரு மொழியில் –

இங்கே
(இந்த லீலா விபூதியில் என்ற நினைவு இன்றிக்கே )
அவனோடு நினைத்த பரிமாற்றம் எல்லாம் பரிமாறலாம் என்று
திரு நாகையிலே போய்ப் புக்கார் –

அங்கு நிற்கிறவனுடைய
1-பருவத்தையும்-
2-மேன்மையையும்-
3-வடிவு அழகையும்-
4-ஒப்பனையும் –
கண்டார் –

அவன் பக்கலிலே கிட்டி
எல்லா அடிமை செய்ய வேண்டும்   என்னும் அபேக்ஷை பிறந்து
அபேக்ஷைக்கு அனுகுணமாக
கிரியதாம் இவ -குருஷ்மா மாம் அநு சரம் -என்பது போல் ஒரு வார்த்தை அருளிச் செய்யக் கண்டிலர் –

விஷயம் சந்நிஹிதமாய் இருக்க நினைத்த பரிமாற்றம் பெறாமையாலே
அவசந்னராய்
அவ்வழகு  தான்  உருவு வெளிப்பாடாக நலிய
(எங்கனையோ அன்னைமீர்காள் திருக்குறுங்குடி நம்பி திருவாய் மொழி போல் )
அத்தாலே நலிவு  பட்டு
கலந்தவன் பேர நின்ற அநந்தரம்
அவன் அழகு மறக்க ஒண்ணாத படி
உருவ வெளிப்பாட்டாலே நலிய

நோவு படா நின்றேன் காண்-என்று
தோழிக்கு சொல்லுகிறாள் ஒரு பிராட்டி பாசுரத்தாலே
தாம் மநோ ரதித்த  கைங்கர்யம் பெறாதே இருந்து
நோவு படுகிறபடியைச் சொல்லுகிறாளாய் இருக்கிறது –

————————————————-

பொன்னிவர் மேனி மரகதத்தின் பொங்கிளம் சோதி யகலத்தாரம்
மின்னிவர் வாயில் நல் வேதம் ஓதும் வேதியர் வானவராவர் தோழீ
என்னையும் நோக்கி என் அல்குலும் நோக்கி  ஏந்திளம் கொங்கையும் நோக்குகின்றார்
அன்னை என் நோக்கும் என்று அஞ்சுகின்றேன் அச்சோ ஒருவர் அழகிய வா —9-2-1-

பொன்னிவர் மேனி-ஸ்வரூபமும் ரூபமும் ஸ்வர்ணம் -என்று இரண்டு நிர்வாஹங்கள் –
சுட்டுரைத்த நன் பொன்-பொன் -நல் பொன் -உரைத்த நல் பொன் -சுட்டு உரைத்த நல் பொன்-

பொன்னிவர் மேனி
பொன்னிவர் -என்று நிர்வஹிப்பார் பிள்ளை அமுதனார் -(ஸ்வரூபம்)
எண்ணும் பொன்னுருவாய் -என்னுமா போலே ஸ்வரூப பரமாக்கி-

அன்றிக்கே
பொன்னிவர் மேனி –
இவருடைய வடிவைப் பார்த்தவாறே –
சுட்டுரைத்த நன் பொன் உன் திரு மேனி ஒளி ஒவ்வாது  -என்கிறபடியே
நன்றான பொன் என்னலாய் இரா நின்றது –
அத்தை நீக்கி உள்ளே பார்த்தவாறே தோற்றுகிற வடிவு இருக்கிறபடி –

மரகதத்தின் பொங்கிளம் சோதி யகலத்தாரம் -மின்-
மரகதத்தின் உடைய விஸ்த்ருதமாய்
கண்ணாலே முகக்கலாம் படியான புகரை உடைத்தான
திரு மார்விலே சாத்தின ஆரம் -மின் போலே இரா நின்றது –

இவர் வாயில் நல் வேதம் ஓதும் வேதியர் –
இவர் வாயில் உச்சரிக்கதும்
சாம வேதமாய் இரா நின்றது –
(இவர் வாயாலே ஓதுவதால் நல் வேதம்
சாம வேதம் என்றுமாம் )

வானவராவர் தோழீ-
ராஷரிஷி தேவ ப்ரதிமௌ-என்னுமா போலே
(திருவடி ராம லஷ்மணர்களைப் பார்த்ததும் சொன்ன வார்த்தை )
வடிவு அழகைப் பார்த்த வாறே ராஜக்களோடே ஒக்கச் சொல்லலாய்   இரா நின்றார் –
சாம வேதம் ஓதுவதை பார்த்த வாறே பிராமணரோடு ஒக்கச் சொல்லலாய்   இரா நின்றார் –
மேன்மையைப் பார்த்த வாறே தேவர்களோடு ஒக்கச் சொல்லலாய்   இரா நின்றார் –
விஷயம் குறைவற்று இருந்தது –
நீ அப்போது நிற்கப் பெறாதது காண் குறை  –

இப்படி விலஷணமாய் இருப்பான் ஒருவன்
உன்னோடு வந்து கலந்தான் ஆகில்
பிறந்த படி  சொல்லிக் காணாய் –
அவன் உன் பக்கலில் செய்தது என் என்ன –
நீ செய்தது என் என்ன –
என்னையும் நோக்கி என் அல்குலும் நோக்கி  ஏந்திளம் கொங்கையும் நோக்குகின்றார்-
மர்மங்களிலே கடாஷியா நின்றார்
பார்த்த பார்வை ஒரு கால் மாற வைக்கிறிலர் –

நீ பின்னை செய்தது என் என்ன –
அன்னை என் நோக்கும் என்று அஞ்சுகின்றேன் –
இப் பார்வைக்கு நானும் கூட்டு என்று பார்க்கிறாளோ -என்று
அஞ்சுகின்றேன் –

அச்சோ ஒருவர் அழகிய வா –
அவன் பார்வையும்-
அவள் பார்வையும் ஆனதாகிறது –
அப்போதை அழகு இருந்த படி காண் –

(தோழி -சம்பந்த ஞானம் உணர்த்தி -பிரணவ அர்த்தம் – –
தாயார் ஸித்த உபாயத்தில் துணிவு -நமஸ் அர்த்தம் -பேறு தப்பாது என்று துணிந்து இருக்கும் –
தலைமகள் -நாராயணாயா பேற்றுக்குத் தவரிக்கவும் வேண்டுமே -பலத்தில் பதற்றம்
அன்னை என்னை நோக்கும் என்று அஞ்சி-தோழிக்கு சொல்ல -ப்ராப்யத்தில் துடிப்பு என்று நினைக்காமல்
உபாய பாவமாக தப்பாக கொண்டால் அனர்த்தம் விளையுமே
சம்பந்த ஞானம் அறிந்து தோழி இவளுக்குத் துணை
முதல் -ஏழாம் பாசுரங்கள் வரை ஸூய அனுபவம்
8-9- பர உபதேசம்
10-பல சுருதி

தான் அனுபவித்து தோழி இடம் சொல்லி பாசுரம்
இவ் விபூதியில் -சேதனருடைய கிஞ்சித்காரத்தையும் பாரதந்தர்யத்தையும்-தத் அனுகுணமான பக்தி விசேஷத்தையும்
மட்டுமே பார்த்து இருக்கும் அவன் அன்றிக்கே இருக்கச் செய்தேயும் –
தாயார் பயந்தது பெண்ணையும் பாதிக்க -தோழி சொல்லிய சம்பந்தம் கொஞ்சம் மறந்து -அவர் தேவர் நாம் நீசர் –
சம்பந்த ஞானத்தில் உறைப்பு இல்லாமல் -உபாய அத்யாவசயத்துக்கு அஞ்சி —
நம் இடம் அனுபவிக்க வர எதிர் விழி கொடுக்கும் பாரதந்தர்யம் கொடுக்காமல் –
செய்தது எல்லாம் ஸ்வரூப விருத்தமாகப் போகுமோ என்று பீதியால் இருந்தாலும்
ஸுந்தர்யத்தில் ஈடுபட்டு -ஸ்வா பதேசமாக திரு உள்ளம் பற்றி -பின்பு அந் யாபதேசத்தில் தோழீ என்று ஸம்போதானம்
விஷயம் குறை வில்லாமல் இருக்க -நீ அப்பொழுது நில்லாத குறை–வை லக்ஷண்யம் ஆறி இருக்க முடியாதே –
நாராயணாயா -சப்தார்த்தம் -சம்பந்த உறைப்பே மேலோட்டமாக ஆனதே
ஆகவே மடல் எடுத்து வழி அல்லா வழி யாகிலும் அடைந்தே தீருவோம் என்னப் பண்ணுமே
நோக்கும் -என்று அஞ்சி – நானும் கூட்டு என்று பார்க்கிறாளோ -என்று
அஞ்சுகின்றேன்

அவன் பார்வை கடாக்ஷம் -பேற்றுக்கு அவன் நினைவு உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் –
கேவலம் மதீயையா தயையால் -நமது எந்த முயற்சியும் உபாயம் ஆகாதே
இவளும் எதிர் விழி கொடுத்தால் –
என்னையும் நோக்குவதாவது -ஆத்ம ஸ்வரூபம்
கொங்கை நோக்கி -போகம் காண்கிறார்
அல்குல் -நோக்குவது வைராக்யம்
அவர் கடாக்ஷத்துக்கு தகுதிகள் -கிளப்பி விட ஒன்றும் செய்ய வேண்டாம் –
அவரே பார்ப்பார் -அவரே இடையைத் தொடுவார்
கூட்டுப்பார்வை -அழகைப் பருக பார்க்க -உபாய பாவமாகுமோ என்றெனு அன்னைக்கு பயம்
இசைவும் சாதனம் என்று சொல்லுவாளோ என்கிற அச்சம்

அனுமதியும் உபாயம் ஆகாதே
இதுவரை இழவுக்கு காரணம் -அவன் நிக்ரஹம் இல்லை -அவன் அனுமதி காரணம் இல்லை
இன்று பேற்றுக்கும் நமது அனுமதியும் உபாயம் ஆகாதே –
இரண்டும் பெரும் குற்றம்
கர்மமும் கிருபையும் -தானே இழவுக்கும் பேற்றுக்கும் காரணம் –
கூட்டு நினைவால் அல்ல அழகு ஈடுபடுத்தி பார்க்க வைத்தது –
அவன் பார்வையும்
தாயார் பார்வையும் இருந்தபடி ஆகட்டும் -ஆனது ஆகட்டும்
இரண்டையும் பற்றி கவலைப்பட உள்ளம் எனக்கு இல்லையே
நெஞ்சில் அழகு குடி புகுந்ததே
ரஹஸ்ய த்ரயம் அர்த்தங்கள் சேரப் பிடித்து அரும் பத காரர் இவ்வாறு அருளிச் செய்கிறார் )

————————————

(ஒவ் ஒரு பாசுரத்தில் ஒவ் ஒரு திவ்ய தேசம் சேர்ந்தே அனுபவம் இப்பதிகத்தில் –
திருக்குடந்தை -திரு மெய்யம் -திரு உறையூர் -திருக்கூடல் -திருமாலிருஞ்சோலை -திரு நீர்மலை –
ஆறு திவ்ய தேசப்பெருமாள் அழகும் -இங்கேயே சேர்த்து அனுபவிக்கிறார் –
இதில் திருக்குடந்தை ஆராவமுதன் –
இளமை மாறாத திவ்ய மங்கள விக்ரஹம்
தான ஹஸ்தம் -தோடா சாத்திக் கொண்டு இருப்பார்
அழகுக்கு இட்ட தோடா -அன்றோ )

(நீ கண்ட போதே நீர் யாராய் இருந்தீர்
உம்மூர் எது என்று கேட்டிலையோ
அவரை கேட்டதில்லை யாகிலும்
கண்டதும் காதல் –
அடையாளம் சொல்கிறேன்
ஆராவமுத ஆழ்வார் போல் திரு ஆழி திருச்சங்கு ஏந்தி உள்ளார்
சார்ங்க பாணி -சக்கர பாணி இருவரும் சேர்ந்தே உத்சவம் காண்பார்களே
சக்கர பாணி சார்ங்க வில் சேவகனே -சேர்த்தே ஆழ்வார்கள் அனுபவிப்பார்கள் )

தோடவிழ்   நீலம்  மணம் கொடுக்கும் சூழ் புனல் சூழ் குடந்தைக் கிடந்த
சேடர்கோல் என்று தெரிக்க மாட்டேன் செஞ்சுடராழியுஞ் சங்குமேந்தி
பாடக மெல்லடியார் வணங்கப் பன் மணி முததொடிலங்கு சோதி
ஆடகம் பூண்டொரு நான்கு தோளும் அச்சோ ஒருவர் அழகிய வா —9-2-2-

தோடவிழ்   நீலம்  மணம் கொடுக்கும் சூழ் புனல் சூழ் குடந்தைக் கிடந்த சேடர்கோல் என்று தெரிக்க மாட்டேன்-
தோடலரா நின்றுள்ள நீலமானது
பரிமளத்தை புறப்பட விடா நிற்பதாய்
பரந்த புனலாலே சூழப் பட்டு இருந்துள்ள
திருக் குடந்தையிலே கண் வளர்ந்து அருளின
யுவாக்கள் என்னலாய் இரா நின்றார் –

செஞ்சுடராழி யுஞ்சங்குமேந்தி –
ஒப்பித்துக் கொண்டு இரா நின்றார் –
திரு ஆழியையும்
ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தையும்
திருக் கையிலே உடையராய் இரா நின்றார் –

பாடக மெல்லடியார் வணங்கப் –
யுவாக்கள் தங்கள் ஒப்பனை கண்டு காலிலே விழும்படி இருக்குமவர்கள்
(இளம் பெண்களும் இப்பெருமாள் ) காலிலே விழும்படி  இரா நின்றார் –

பன் மணி முததொடிலங்கு சோதி ஆடகம் பூண்டொரு நான்கு தோளும் –
பல ரத்னங்கள்
முத்துக்கள்
இவற்றோடு கூட மிக்க புகரை உடைத்தான
ஆபரணங்களாலே ஒப்பித்தும் இரா நின்றார் –

ஒப்பனை தான் வேண்டாத படி இரா நின்றது
திருத் தோள்களை கண்டவாறே –

அச்சோ ஒருவர் அழகிய வா –
இவ் வழகு நம்மால் பேசப் போகாது
விஸ்மயப்பட்டு விடும் அத்தனை –

———————————————————

(ஆராவமுத ஆழ்வார் போல் -அவர் தானா நிர்ணயமிக்க முடியாதே
மெய்யாக சொல் என்றதும்
மெய்ய மணாளன் நினைவு -சத்ய மூர்த்தி
திருமெய்யம் நின்ற பெருமாள் -சயன திருக்கோலம் இரண்டும் சேவிக்கிறோமே
மெய்யாகச் சொல் என்றதும் மெய்ய மணாளன் என்கிறாயே
இது என் முகம் பார்க்க வில்லையோ
நாணம் மிக்கு கடைக்கண் பார்வையே பார்த்து
தாமரைக்கண் கண்டு அவராகவே வேணும்
திவ்ய ஆயுதங்கள் திருக்குடந்தை -திருக்கண்கள் இங்கு
வாய் பொய் செய்தாலும் தூது செய் கண்கள் பிரதம கடாக்ஷம் பொய் சொல்லாதே
ஆகவே சத்ய மூர்த்தியாக வேண்டும் என்கிறாள்
கீழே நான்கு தோள்கள் -இங்கு ஆயிரம் தோள்கள் -தேனைவ ரூபம் அர்ஜுனன் பிரார்தித்தது –
அங்கு உள்ள இரண்டு திருக்கோலங்களும் இந்த இரண்டு பாசுரங்கள் – )

வேயிரும்   சோலை விலங்கல் சூழ்ந்த மெய்ய மணாளர் இவ் வையம் எல்லாம்
தாயின நாயகராவர் தோழீ தாமரைக் கண்கள் இருந்தவாறு
சேயிரும் குன்றம் திகழ்ந்தது ஒப்பச் செவ்வியவாகி மலர்ந்த சோதி
ஆயிரம் தோளோடு  இலங்கு பூணும் அச்சோ ஒருவர் அழகிய வா —9-2-3-

வேயிரும் சோலை விலங்கல் சூழ்ந்த மெய்ய மணாளர்
மூங்கிலின் உடைய பரந்த சோலையை உடைத்தான
மலைகளாலே சூழப் பட்ட
திரு மெய்யத்திலே வந்து சாய்ந்து அருளின
நிர்வாஹகர் ஆனவர் –

இவ் வையம் எல்லாம் தாயின நாயகராவர் தோழீ –
பூமிப் பரப்பை அடைய அநாயாசேன
அளந்து கொண்ட ஸ்வாமிகள் என்னலாய் இரா நின்றார்
நீர்மை பார்த்த வாறே –

தாமரைக் கண்கள் இருந்தவாறு-
புண்டரீ கஷனாய் இரா நின்றார் என்று சொல்லலாய்
இரா நின்றார் –

சேயிரும் குன்றம் திகழ்ந்தது ஒப்பச் செவ்வியவாகி ஆயிரம் தோளோடு  இலங்கு பூணும்-மலர்ந்த சோதி-
ஓங்கி இருப்பதாய்  பரந்து இருப்பதான
மலை விளங்கினாப் போலே
செவ்வையை உடைத்தாய் -மிக்க புகரை உடைத்தான –
ஆயிரம் தோளையும் உடையராய்
அத் தோள்கள் தோறும் தோள் வந்தியை உடையராய் இரா நின்றார்

கீழே நான்கு தோளும் என்னச் செய்தே
ஆயிரம் தோள்  என்கிறது
ஆயிரம் தோள் ஆனால் கண்டு அனுபவிக்கும் கரணங்கள் அநேகம் கொண்டு
அனுபவிக்க வேண்டும் படி இரா நின்றார் -என்கை –

அச்சோ ஒருவர் அழகிய வா —
ஓர் ஒப்பனை வேணுமோ
அவ் வடிவு அழகு தானே அமையாதோ

—————————————–

(நம்மில்லம்  புகுந்து நின்றார்-அவரே வந்து ஸ்வீ கரித்து அருளுகிறார்
நம்பர்
நாகரீகர் -நாகப்பட்டிணம் -பரம ரசிகர்
தோழியும் தானுமாய் திரு ஆழியைப் பேச
அவளும் பாவனா ப்ரகரஷத்தால் -உருவ வெளிப்பாடு -முன்னிலையாகத் தோற்ற
கண்டது எல்லாம் சொல்லுகிறாள்
பாசுரம் தோறும் திரு ஆழி திருச்சங்கு -இவர் ஏந்தும் அழகு அத்விதீயம் )

வம்பவிழும் துழாய் மாலை தோள் மேல் கையன வாழியும் சங்கும் ஏந்தி
நம்பர் நம்மில்லம்  புகுந்து நின்றார்   நாகரிகர் பெரிது மிளையர்
செம்பவளம்   இவர் வாயின் வண்ணம் தேவர் இவரது உருவம் சொல்லில்
அம்பவளத் திரளேயும் ஒப்பர் அச்சோ ஒருவர் அழகிய வா—9-2-4-

வம்பு -பரிமளம்

வம்பவிழும் துழாய் மாலை தோள் மேல் –
திருமேனியில் ஸ்பர்சத்தாலே பரிமளத்தைப் புறப்பட விடா  நின்றுள்ள
திருத் துழாய் மாலையை தோளிலே உடையராய் இரா நின்றார்
ஐஸ்வர்ய ஸூசகமான மாலை இருந்த படி –

கையன வாழியும் சங்கும் ஏந்தி –
ஈஸ்வர சூசகமான திவ்ய ஆயுதங்களைத்
தரித்துக் கொண்டு இரா நின்றார் –

நம்பர் –
ஒப்பனை அழகைக் கண்டவாறே
நமக்குப் பற்றப் படுமவர் என்று தோற்றும்படி இரா நின்றார்
விஸ்வச நீயர் -என்றபடி —

நம்மில்லம்  புகுந்து நின்றார்   –
நற் சரக்கு அன்றோ -என்று
தேட்டமாய் இருக்கிறது இல்லை –
(நல்ல சரக்கு என்று நாம் தேடிப்போக வேண்டாத படி )

நாகரிகர்-
நாகரிகராய் பரம ரசிகராய் இரா நின்றார் –

பெரிது மிளையர்-
நம் பருவத்தில் விஞ்சி இருப்பதுவும் இல்லை –

செம்பவளம்   இவர் வாயின் வண்ணம் –
இவர் திரு வதரம் இருக்கிற படியை பார்த்தவாறே
சிவந்த  பவளம் என்னலாம் படி இருந்தது –

தேவர் இவர்-
இதர விசஜாதியருமாய் இருந்தார்
மனிச்சரோடு கூட்டலாய் இருக்கிறிலர் –

உருவம் சொல்லில் -அம் பவளத் திரளேயும் ஒப்பர் –
இவர் வடிவு இருந்த படியைச் சொல்லில்
எங்கும் ஒக்க ஸ்ப்ருஹணீயமாய்
இரா நின்றது –

அச்சோ ஒருவர் அழகிய வா  –
உபமானம் இல்லாத விஷயத்தில்
உபமானம் சொல்லி இருப்போமோ –

—————————————-

(இதிலும் திவ்ய ஆயுத அனுபவம் –
நாகரீகர் என்றாயே
இவருடைய நாகரீத்வம் நீ கண்டபடி எங்கனே
கோவலர் -இடையர் ராஜா போல் இருந்தார் –
கோ -பசு -பூமி -வாக்கு பல அர்த்தங்கள் உண்டே –
சோழ பாண்டிய அரசர்களுக்கு கோழியும் கூடலும் கோயில் கொண்ட கோவலரே யொப்பர்-

(திரு உறையூர் -கமல வல்லித் தாயார்
இந்த ஒன்றே இரண்டுக்கும் மங்களா சாசன பாடல்
பங்குனி ப்ரஹ்ம உத்சவத்தில் -ஆறாம் திரு நாள் உத்சவம் சேர்த்தி சேவை
நந்த சோழன் -தர்ம வர்மா வழித் தோன்றல் -இவர் திருக் குமாரியாக கமல வல்லித் தாயார் —
கமல புஷ்கரணி – கல்யாண தீர்த்தம் –
ஆயில்ய நக்ஷத்ரம் -அன்றே திருக் கல்யாணம்
சிபி சக்கரவர்த்திக்கு தலை நகர் உறையூர்
குக்குட புரி- வாரண புரி- கோழி -உறையூர்
ஆதித்ய சோழன் அஹங்கரித்து யானை மேல் வர சிவன் அவனுக்கு புத்தி உரைக்க
கோழி வைத்து யானையை வென்று கோழி திரு நாமம் பெட்ரா திவ்ய தேசம் )

(கூடல் பாண்டிய -மீன் கொடி -மத்ஸ்ய அவதாரம் இங்கே என்பதால் –
முக்கூடல் -க்ருதமாலா வைகை கூடி -தேவர்கள் கூடி வணங்கி -பாகவதம் கிருதமாலா சொல்லுமே
திருப் பல்லாண்டு பிறந்த திவ்ய தேசம் -வல்லப தேவன் -பரத்வ நிர்ணயம்
சங்க தமிழ் அரங்கேற்றம் -நம்மாழ்வார் பாசுர அரங்கேற்றம் மதுர கவி ஆழ்வார் இங்கேயே –
வ்யூஹ சவுந்தர்ய ராஜ அழகர் உத்சவர் வீற்று இருந்து
நடுவில் நின்ற ஸூர்ய நாராயணர்
மேலே ஷீராப்தி சயன திருக்கோலம்
மரகத வல்லித்தாயார் –
அஷ்டாங்க விமானம் )

கோழியும் கூடலும் கோயில் கொண்ட கோவலரே யொப்பர் குன்றமன்ன
பாழி யம் தோளுமோர் நான்குடையர் பண்டிவர் தம்மையும் கண்டறியோம்
வாழியரோ விவர் வண்ணம் எண்ணில் மா கடல் போன்றுளர் கையில் வெய்ய
ஆழி  யொன்றேந்தியோர்   சங்கு பற்றி அச்சோ ஒருவர் அழகிய வா —9-2-5-

கோவலரே-கோ பாலர் பூ பாலர் -இடையர் அரசர் என்றும் உண்டே –
வாழியரோ-அரோ -அசைச்சொல் –

கோழியும் கூடலும் கோயில் கொண்ட கோவலரே யொப்பர்
உறையூரையும் மதுரையையும்
வாசஸ் ஸ்தானமாக உடைய கோவலர் என்று
சொல்லவுமாய் இரா நின்றார் –

கோழி -என்கிறது – உறையூரை
கூடல் -என்கிறது – மதுரையை
இவற்றை வாசஸ் ஸ்தானமாக உடைய
ராஜாக்கள் என்று
சொல்லவுமாய் இரா நின்றார் -என்னவுமாம்-

முற்பட்ட யோஜனைக்கு-அவ்விடங்களில் உகந்து அருளி
நிற்கிறவர்களை சொல்லிற்று ஆகிறது –

குன்றமன்ன பாழியம் தோளுமோர் நான்குடையர்-
மலையோடு ஒத்த திண்ணியதாய் இருக்கிற
திருத் தோள்கள் நாலையும் உடையராய் இருந்தார் –

பண்டிவர் தம்மையும் கண்டறியோம்
இதுக்கு முன்பு கண்டு அறியாதாராய்
இரா நின்றார் –

வாழியரோ விவர் வண்ணம் எண்ணில் மா கடல் போன்றுளர் கையில் வெய்ய ஆழி  யொன்றேந்தி-
பல்லாண்டு பல்லாண்டு என்று சொல்லுவது –
இவர் வடிவு இருக்கும் படியைச் சொல்லப் புக்கால்
கடல் போலே இரா நின்றது –
பிரதி பஷத்தை கனல் எழக் காய்கிற
திரு ஆழியை ஒரு கையிலே ஏந்தி –

யோர்   சங்கு பற்றி –
தமக்கு அடங்காத பாஞ்ச ஜன்யத்தை
மற்றைக் கையிலே உடையராய் இருந்தார் –

அச்சோ ஒருவர் அழகிய வா —
இத்தைச் சொல்லி நம்மால் கரையிலே நிற்கும் அத்தனை அல்லது
நம்மால் உள் இழிந்து பேசப் போகாது –

—————————————————

(பூ பாலரா கோ பாலரா போல்
குவலயாபீடம் நிரசித்த வேந்தரோ
பெண்கள் மனதையே தஞ்சமாக ஆதாரமாக கொண்டவரோ –
இப்படித் தனித் தனியாகக் கொள்ளாமல் -ஒரே கண்ணன் -இரண்டு பண்புகளைக் கொண்டவர் –என்று
ஏக வாக்கியமாகவே கொள்ள வேண்டும்
என் திருமகள் சேர் மார்பனே என்னும் என்னுடைய ஆவியே என்னும் -சேர்ந்து அனுபவிப்பது போல் இங்கும் -)

(கீழே கோவலர் என்று கிருஷ்ணன் பிரஸ்த்துதமான வாறே –
அவனுடைய ஆண் பிள்ளைத் தனத்தை அனுபவித்து ஈடுபடுகிறார்
வீரச் செயலிலும் -பெண்கள் இடம் ஈடுபாட்டையும் அனுபவிக்கிறார் இதில் )

வெஞ்சின வேழம் மருப்பொசித்த வேந்தர் கொல் ஏந்திழையார் மனத்தை
தஞ்சுடையாளர் கொல் யான் அறியேன்  தாமரைக் கண்கள் இருந்தவாறு
கஞ்சனை யஞ்ச முன் கால் விசித்த காளையராவர் கண்டார் வணங்கும்
அஞ்சன மா மலையேயும்  ஒப்பர் அச்சோ ஒருவர் அழகிய வா –9-2-6-

தாமரைக் கண்கள்-சவுந்தர்யமும் -காளை-பருவமும்-அஞ்சன மா மலை- லாவண்யமும் சேர்ந்து அனுபவம் இதில்

வெஞ்சின வேழம் மருப்பொசித்த வேந்தர் கொல் -ஏந்திழையார் மனத்தை தஞ்சுடையாளர் கொல்
வெவ்விய சினத்தை உடையராய் இருக்கிற
குவலயா பீடத்தின் உடைய கொம்பை முறித்து
அச் செயலாலே பெண் பிறந்தாருக்கு தனமான நெஞ்சுகளை
எழுதிக் கொண்ட ராஜாக்கள் என்று
சொல்லலுமாய் இரா நின்றார் –

(தனக்கு ஆதாரம் -நெஞ்சை எழுதிக் கொண்ட ஆயர் சிறுமியர் -இரண்டுமே உண்டே –
வாஸூ தேவ சர்வமாக இருப்பவர் துர்லபம் -அவர்களே எனக்கு ஆத்மா -போல் இங்கும் )

ஏந்திழையார் மனத்தை தஞ்சுடையாளர் கொல்
ஒப்பித்து இருக்கிற பெண்கள் உடைய நெஞ்சை
தமக்கு அபாஸ்ரயமாக
உடையவர் போலே இரா நின்றார் –

(பெண்களே நினைவே தனக்கு கர்தவ்யம் -எழுதிக் கொடுத்து -தன்னை அமைத்துக் கொள்வானே
வேந்தர் கொல் –தஞ்சுடையாளர் கொல்–சங்கைக்கு
பெண்களை ஸ்வாதீனமாகக் கொண்டவனா -அவர்கள் அதீனமாக உள்ளவனா -என்று விவஷிதம் )

யான் அறியேன் —
என்னால் ஒன்றும் சொல்லலாய்
இருக்கிறது இல்லை –
தாமரைக் கண்கள் இருந்தவாறு –
அது தன்னை நோக்காலே தெரிவியா நின்றார் –
நானும் என்னுடைமையும் நீ இட்ட வழக்கு அன்றோ
என்றாப் போலே இரா நின்றது -நோக்கிப் பார்த்த வாறே –
(நயன பாஷை -கண்ணால் பேசியது இது )

கஞ்சனை யஞ்ச முன் கால் விசித்த காளையராவர்
பிரபல பிரதி பந்தகங்களைப் போக்க வல்லர் என்று
தோற்றும் படியாய் இரா நின்றார் –
பருவத்தைப் பார்த்த வாறே

கண்டார் வணங்கும் அஞ்சன மா மலையேயும்  ஒப்பர் –
ஓர் அபிசந்தி இன்றிக்கே இருக்கச் செய்தே
அவசா பிரதிபேத்ரே-என்கிறபடியே
கண்டாரை தம் வசமாக்கி
(வசப்படாதவர்களையும் கை கூப்பும் படி -துரியோதனனும் எழுந்தானே தாமரைக் கண்ணனைப் பார்த்ததும்
கண்டார் -சேவித்தவர் -இன்னார் இனையார் இல்லாமல் கண்ட அனைவர்களையும் )
தன் காலிலே விழ விட்டுக் கொள்ள
அஞ்சன கிரி போலேயுமாய் இரா நின்றார் –

அச்சோ ஒருவர் அழகிய வா –
வாக்குக்கு அவிஷயமான விஷயத்தில்
நான் எத்தைச் சொல்லுவது –

————————————————-

(உனக்கு இது பாவநா பிரகர்ஷமாகவே வேணும்
எனது கண்ணுக்குத் தோற்றவில்லையே
இது உனக்கு வர காரணம் என்ன
சம்பந்த உணர்த்திய தோழி -எனக்குத் தெரியாமல் வந்தபடி என்ன
அவர் பரிபூர்ண கருணையால் -பேர் அருளாளர் –
இவள் முயற்ச்சியும் வேண்டாம் -சேர்த்து வைக்கும் அவளது முயற்சியும் வேண்டாம் –
நிர்ஹேதுகமாக காட்டவே கண்டேன் –
அத்தாலேயே நெஞ்சில் தோற்றி அருளுகிறான் )

பிணியவிழ் தாமரை மொட்டலர்த்தும் பேரருளாளர் கொல் யான் அறியேன்
பணியும் என்னெஞ்சம் இது என் கொல் தோழி  பண்டிவர் தம்மையும் கண்டறியோம்
அணி கெழு தாமரை யன்ன கண்ணும் அங்கையும் பங்கயம் மேனி வானத்து
அணி கெழு மா முகிலேயும் ஒப்பர் அச்சோ ஒருவர் அழகிய வா —9-2-7-

பிணியவிழ் தாமரை மொட்டலர்த்தும் பேரருளாளர் கொல்
ஆதித்யன் தன்னுடைய உஷ்ண கிரணங்களாலே
தாமரைகளில் உண்டான பூவை அலர்த்தக் கடவனாய் இருக்கும் இறே
அங்கன் அன்றிக்கே
ஷீண  பாபரானவர்கள் உடைய ஹிருதய கமலத்துக்கு
விகாசத்தை பண்ணி
பண்ணிக் கொடுக்கும் பெரிய கருணை உடையராய் இரா நின்றார் –

யான் அறியேன் –
என்னால் இவர் படி பரிச்சேதிக்கலாய்   இருக்கிறது இல்லை –

பணியும் என்னெஞ்சம் –
என் பக்கல் ஒரு நினைவு இன்றிக்கே இருக்க செய்தே
என் நெஞ்சானது வணங்கி நில்லா நின்றது

இது என் கொல் தோழி-
உன்னை அறியாமை வருவதொரு நன்மை இல்லை இறே எனக்கு
நாம் இவரிடை யாட்டம் நினைத்து அறிவுதுமோ –

பண்டிவர் தம்மையும் கண்டறியோம் –
பழைமை யாலே செய்கிறது ஒன்றும்
சொல்லவுமாய் இருக்கிறதில்லை –

அணி கெழு தாமரை யன்ன கண்ணும் அங்கையும் பங்கயம்
திரளச் செறியப் பூத்த தாமரை என்னலாய் இருக்கிறது –
திருக் கண்களும்
அணைக்கக் கணிசிக்கிற கைகளும் –
(பக்தர்களாகிய தாமரையை அலர்த்தும் ஸூர்யனைப் போல் மட்டும் இல்லாமல்
பக்தனான ஸூர்யனைக் கண்டு அலரும் தாமரைக் கண்கள் அன்றோ இவையும் )

மேனி வானத்து அணி கெழு மா முகிலேயும் ஒப்பர் –
வடிவைப் பார்த்த வாறே
மேக சகலங்கள் அன்றிக்கே எல்லாம் ஒன்றாகத் திரண்டு
வர்ஷிக்கையிலே ஒருப்பட்ட மேகம் போலே இரா நின்றது –

அச்சோ ஒருவர் அழகிய வா –
விசஜாதீயத்துக்கு சஜாதியங்களில் சில வற்றை சொன்ன இடம்
என் சொன்னோம் ஆனோம் –

(ஒப்பார் மிக்கார் இலையாய மா மாயன் அன்றோ –
சுட்டு உரைத்த நன் பொன் கூட இவன் ஒளிக்கு -ஒவ்வாதே )

—————————————–

(தோழியும் தாணுமாய் பேர் அருளாளன் படியைச் சொல்லா நிற்க
மற்ற தோழிகள் -அன்னைமார் -அசல் அகத்தார் திரண்டு
இது என்ன புதுமை விஸ்மயப்பட்டு இது கூடாது தடுக்க
இவர்கள் வார்த்தை எடுபடாமல் போவதற்காக
பொன் மலை மேல் எழுந்த மா முகில் போன்று-கருடா வாஹனாய் –
திருவடி திருத் தோள்களில் இருக்கும் இருப்பைக் காட்டி அருள –
இவர் திருமாலிருஞ்சோலை திருமலையில் இருந்தோ திரு நீர் மலையில் இருந்தோ பறந்து வந்தார் என்ற சங்கையுடன்
மங்க ஒட்டு உன் மா மாயை -கள்ளத்தனம் உள்ளவரோ –
தோயாத்ரி -நீரைப் போல் உருகி உண்மையாகவே பரிமாறுபவரோ –
அணித்தாக-மா முகில் போன்று- பேர் அருளாளன் தான் காணுங்கோள் என்று எல்லாரையும் அழைக்கிறாள்
நெஞ்சுள்ளும் கண்ணுள்ளும் –இரண்டாலும் மானஸ அனுபவம் -சர்வ கரணங்களையும் விரும்பி-
கீழே ஏழும் ஸூய அனுபவம்
இதுவும் அடுத்ததும் பர உபதேசம் )

மஞ்சுயர் மா மதி தீண்ட நீண்ட மாலிரும் சோலை மணாளர் வந்து என்
நெஞ்சுள்ளும் கண்ணுள்ளும் நின்று நீங்கார் நீர் மலையார் கொல் நினைக்க மாட்டேன்
மஞ்சுயர் பொன் மலை மேல் எழுந்த மா முகில் போன்றுளர் வந்து காணீர்
அஞ்சிறைப் புள்ளும் ஓன்று ஏறி வந்தார் அச்சோ ஒருவர் அழகிய வா –9-2-8-

மஞ்சுயர் மா மதி தீண்ட நீண்ட மாலிரும் சோலை மணாளர் –
மேக பதத் தளவும் செல்ல ஓங்கி
சந்தரன் வந்து தீண்டும்படியான ஒக்கத்தையும் உடைத்தான திருமலையை வாசஸ் ஸ்தானமாகக் கொண்டு
அங்குத்தைக்கு போக்தாவானவர் –

வந்து என் நெஞ்சுள்ளும் கண்ணுள்ளும் நின்று நீங்கார் நீர் மலையார் கொல் நினைக்க மாட்டேன்
அங்குத்தைக்கு கடவராய் இருக்கிறவர்
தாமே வந்து
என்னுடைய சர்வ கரணங்களையும் விரும்பி
ஷண காலமும் விடுமவராய் இருக்கிறிலர் –
திரு நீர் மலையை வாசஸ் ஸ்தானமாக உடையவர் போலே இரா நின்றார்
என்னால் பரிச்சேதிகலாய் இருக்கிறிலர்  –

மஞ்சுயர் பொன் மலை மேல் எழுந்த மா முகில் போன்றுளர் வந்து காணீர்
மேக பதத் தளவும் செல்ல ஓங்கி இருப்பதொரு
பொன் மலையிலே படிந்ததொரு மேகம் போலே
இரா நின்றார் –

இங்கு பொன் மலையாய் இருக்கிறவர் தாம் ஆர் என்னில் –
அஞ்சிறைப் புள்ளும் ஓன்று ஏறி வந்தார் -வந்தது காணீர் –
என்னை விலக்கப் பார்க்கிற நீங்களும் வந்து
காணுங்கோள் -உங்களால் தான் விடலாமாகில் –
(பின்னால் வராதே பெருமாள் சொல்ல நீர் என் பின்னால் வா என்ற சீதாப் பிராட்டி போல் )

அச்சோ ஒருவர் அழகிய வா –
திருவடி திருத் தோளில் இருந்தால்
இருக்கும் அழகு தான் இப்படியேயோ –

———————————————-

(எல்லாரும் ஒரு மிடறாய் இவரை விலக்கப் பார்த்த ஆபத்து –
உபாய கோடியில் வரக்கூடாதே என்பதே இவர்கள் குறிக்கோள்
திருவடி மேல் தோன்றி அத்தை பரிஹரித்து அருளி
ஆபத்சகன் என்பதைக் காட்டி அருள
இந்த ஆபத்சகத்வம் இவனுக்கு ஸ்வா பாவிகம்
ஆ பால்யம் தொடங்கி பண்ணியவன் அன்றோ -என்கிறாள் இதில் )

முகத்திலே விழித்த வாறே
ஆபத் சகர் என்று தோற்றும்படி இரா நின்றார் –
(செயல்களை பார்த்து அறிய வேண்டாம்
திருக் கண்களால் கடாஷிப்பவன்
திரு வாயால் விழுங்கி ரக்ஷிப்பவன் )

எண்டிசையும் எறி நீர்க் கடலும் ஏழுலகும் உடனே விழுங்கி
மண்டியோர்  ஆலிலைப் பள்ளி கொள்ளும் ஆயர் கொல் மாயம் அறிய மாட்டேன்
கொண்டல் நன்மால் வரையேயும் ஒப்பர் கொங்கலர் தாமரைக் கண்ணும் வாயும்
அண்டத்தமரர் பணிய நின்றார் அச்சோ ஒருவர் அழகிய வா —-9-2-9-

எண்டிசையும் எறி நீர்க் கடலும் ஏழுலகும் உடனே விழுங்கி
திக்குகள் எட்டிலும் வந்து அலை எறியா நின்றுள்ள கடலும்
எல்லா லோகங்களையும் ஒரு காலே திரு வயிற்றிலே வைத்து

மண்டியோர்  ஆலிலைப் பள்ளி கொள்ளும் ஆயர் கொல் மாயம் அறிய மாட்டேன்-
மௌக்த்யத்தாலே ஒருவராலும் எழுப்ப ஒண்ணாத படி
ஒரு பவனான ஆலந்தளிரிலே    பள்ளி கொள்கிற
ஆச்சர்ய  பூதன் என்று தோற்றும்படி இரா நின்றார் –
கண்டவாறே இவருடைய அகடிதகட நா சாமர்த்தியம்
எனக்குத் தோற்றா நின்றது –
(நீசனான என்னையும் சேர்ந்ததே மிகப் பெரிய அகடிதகட நா சாமர்த்தியம் )

கொண்டல் நன்மால் வரையேயும் ஒப்பர் –
வடிவைப் பார்த்த வாறே
மேகம் போலேயும்
நின்ற குன்றத்தினை நோக்கி நெடுமாலே வா -திரு வாய் மொழி -4-4-4- என்கிறபடியே
மலை போலேயும்
சொல்லலாய் இரா நின்றார்-

(மேகம் போலேயும்-நாம் இருக்கும் இடம் வந்து வர்ஷிப்பார்
மலை போலேயும் -நம்மை ரஷிப்பதில் ஸ்திரமாக தீக்ஷை கொண்டவர் )

கொங்கலர் தாமரைக் கண்ணும் வாயும்-
பரிமளத்தை புறப்பட விடா நின்றுள்ள
தாமரை போலே இரா நின்றது திருக் கண்களும் திரு அதரமும் –

அண்டத்தமரர் பணிய நின்றார் —
மேன்மையைப் பார்த்த வாறே நித்ய ஸூரிகளும்
வந்து ஆஸ்ரயிக்கும் படி இரா நின்றார்

அச்சோ ஒருவர் அழகிய வா —
மேன்மையை உடையார் கிட்டுகிற விஷயம்  என்று
நமக்கு கை வாங்கலாய் இருக்கிறது இல்லை
வடிவு அழகைப் பார்த்தவாறே –

—————————————-

அன்னமும் கேழலும் மீனுமாய ஆதியை நாகை யழகியாரை
கன்னி நன் மா மதிள் மங்கை வேந்தன் காமரு சீர்க் கலிகன்றி குன்றா
வின்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை ஏழும் இரண்டும் ஓர் ஒன்றும் வல்லார்
மன்னவராய் யுலகாண்டு மீண்டும் வானவராய் மகிழ் எய்துவரே–9-2-10-

அன்னமும் கேழலும் மீனுமாய ஆதியை நாகை யழகியாரை
இழந்த வேத சஷூசை மீட்டுக் கொடுக்கைக்கு ஈடான அன்னமாயும்
ஸ்ரீ வராக புராணத்தை அருளிச் செய்தும்
ஸ்ரீ மத்ஸ்ய புராணத்தை அருளிச் செய்தும்
(ஸ்ருதி ஸ்ம்ருதி -வேதம் ஸ்ரீ வராஹ புராணம் -மத்ஸ்ய புராணம் )

இப்படி தன்னை பிராபிக்கைக்கு வழி இட்டுக் கொடுத்த
ஜகத் காரண பூதனானவன் –
(தான் உண்டாக்கிய ஜகத்தை ரக்ஷணம் தானே தானே பண்ண வேண்டும் )
திரு நாகையிலே தன் அழகாலே
விட ஒண்ணாத படி பண்ணிக் கொண்டு நின்றான் ஆயிற்று –

கன்னி நன் மா மதிள் மங்கை வேந்தன் காமரு சீர்க் கலிகன்றி குன்றாவின்னிசையால் சொன்ன-
அரணாகப் போரும்படியாய்
தர்ச நீயமாய்
பரப்பை உடைத்தான
மதிளை உடைத்தான
திரு மங்கையில் உள்ளாருக்கு பிரதானராய்
எல்லாருக்கும் ஸ்ப்ருஹை பண்ண வேண்டும்படியான
ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ யை உடைய ஆழ்வார்
ஒன்றும் குறையாத படி இனிய இசையாலே அருளிச் செய்த  –

செஞ்சொல் மாலை ஏழும் இரண்டும் ஓர் ஒன்றும் வல்லார் மன்னவராய் யுலகாண்டு மீண்டும் வானவராய் மகிழ் எய்துவரே
தம்மால் அளவிட ஒண்ணாமையால்
பிரித்து அனுபவிக்கிறார்-
(ஸூய அனுபவம் முதல் ஏழும் -பர உபதேசம் அடுத்த இரண்டும் -பலம் அருளி நிகமனம் )

இத்தை அப்யசிக்க வல்லார்கள்
இங்கும் கோலின பலங்களும் பெற்று
இது தன்னின் பலமான நித்ய ஸூரிகளோடு ஒரு கோவையாய்
இனியராகப் பெறுவார்கள் –

உயிர் தோழியும் தானுமாய் அனுபவித்த ஏழு பாடல்கள்
எல்லாரையும் குறித்த இரண்டு பாடல்கள்
பல ஸ்ருதி ஒன்றும்

———————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-