Archive for April, 2014

ஸ்ரீ பகவத் குண தர்ப்பணம் -1-100-அருளிச் செயல் சந்தை அமுதம் -சேர்த்தி அனுபவம் -ஸ்ரீ Dr. V. V.ராமானுஜம் ஸ்வாமிகள்

April 7, 2014

ஸ்ரீ பராசுர பட்டர் –
1-122-பரத்வம் சொல்லும் திரு நாமங்கள்
1-1- வ்யாப்தி -சர்வேஸ்வரத்வம்-1-4-திரு நாமங்கள்
1-2-சர்வ சேஷித்வம் -சிருஷ்டி ஸ்திதி சம்ஹாரம் நிர்வஹிக்கை -5-9 -ஸ்வாமித்வம் – சொல்லும் திரு நாமங்கள்
1-3–தோஷம் தட்டாத பரமாத்மா -10/11-திருநாமங்கள்
1-4-முக்தர்களுக்கு மேலான கதியாய் உள்ளவன் -12-17 திரு நாமங்கள்-
1-5- முக்திக்கு உபாயமாய் உள்ளவை -18/19 –திரு நாமங்கள்
1-6-நியாமகன்-20-திரு நாமம்
1-7- சமஸ்த இதர விலஷணன் -21-65- திருநாமங்கள் –
1-8-த்ரிவித சேதன வ்யதிரிக்த -நியாமகன் -66-88-திரு நாமங்கள்
1-9-உபாய ஸ்வரூபி -உபேய ஸூக ஸ்வரூபி –89-100 திரு நாமங்கள் –
1-10-ஆஸ்ரித வத்சலன் -101-122-திரு நாமங்கள்

———————————————-

முதல் நான்கு திரு நாமங்கள் – வ்யாப்தி -சர்வேஸ்வரத்வம்

1-விச்வம் –
ஸ்வரூபம் ரூபம் குணம் அனைத்திலும் பூரணன்
உயர்வற உயர் நலம் உடையவன் –1-1-1-
ஒத்தார் மிக்கார் இலையாய மா மாயன்
திட விசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை
படர் பொருள் முழுவதுமாய் அவையவை தொறும் உடன் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் பரந்துளன் -1-1-7-

——————————
2-விஷ்ணு –
எங்கும் வியாபித்து உள்ளவன்
ஸ்வ விபூதி பூதி பூதம் சித் அசிதாத்மகம் சர்வம் விசதி இதி
யாவையும் யாவரும் தானாய்-
விச்வம் -பூர்த்தியில் நோக்கு
விஷ்ணு – வ்யாப்தியில் நோக்கு
பரந்த தண் பரவையுள் நீர் தொறும் பரந்துளன் பரந்த வண்டமிதென -1-1-10-
மீண்டும் 259/663 விஷ்ணு திருநாமம் உண்டு
259-ஐஸ்வர்ய பூர்த்தி -எங்கும் தானாய் -நாங்கள் நாதனே -1-9-9-
663-சர்வ சகதீசன் -என்னைக் கொண்டு என் பாவம் தன்னையும் பாறக் கைத்து-

எமர் எழு எழு பிறப்பும் மேவும் தன்மையன் ஆக்கினான் வல்லன் எம்பிரான் விட்டுவே -2-7-4-

——————————–

3-வஷட்கார –
சர்வச்ய வசீ சர்வச்ய ஈசான –
வ்யாப்தியின் பிரயோஜனம் -நியமித்தல்
கர விசும்பு எரி வளி நீர் நிலம் இவைமிசை
வரனவில் திறல் வழி யளி பொறையாய் நின்ற பரன் -1-1-11

———————————————–
4-பூத பவ்ய பவத் பிரபு –
பதிம் விச்வச்ய -பூத பவ்ய பவன்நாத கேசவ கேசி ஸூ த
ராஜ்யஞ்சா அஹஞ்சா ச ராமஸ்ய –
வருங்காலம் நிகழ்காலம் கழி காலமாய் உலகை ஒருங்கா அளிப்பாய் -3-1-5-
உன் தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது -திருப்பாவை –

————————————————————————-

1-2-சர்வ சேஷித்வம் -சிருஷ்டி ஸ்திதி சம்ஹாரம் நிர்வஹிக்கை -5-9 -ஸ்வாமித்வம் -சொல்லும் திரு நாமங்கள் –
5–பூதக்ருத் –
எல்லாவற்றையும் படைப்பவன் –
யாதேவா இமாநி பூதாநி ஜாயந்தே –தத் ப்ரஹ்ம-
முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணனே -3-2-1-

6-பூதப்ருத்—
எல்லாவற்றையும் தரிப்பவன் -தானுமவன்
விபர்தி அவ்யய ஈஸ்வர -ஸ்ரீ கீதை

7-பாவ –
அனைத்துடன் கூடி -பிரிக்க முடியாத -பிரகாரங்கள் -ஐஸ்வர்யங்கள்
வண் புகழ் நாரணன் -1-2-10-

8-பூதாத்மா –
உலகுக்கு உயிராய் இருப்பவன் –
யஸ்ய ப்ருதிவீ சரீரம் யஸ்ய ஆத்மா சரீரம்
ஏஷ சர்வ பூதாந்தராத்மா –
உலகுக்கே ஓர் உயிருமானாய் -6-9-7-
ஒத்தே எப்பொருட்கும் உயிராய் -2-3-2-

9-பூத பாவன –
வ்ருத்தி அடையும் படி பரிபாலிப்பவன் –
பூத பாவன பூதேச -ஸ்ரீ கீதை
ஓர் ஆயிரமாய் உலகு ஏழ் அளிக்கும் -9-1-1-

நான் உன்னை அன்றி இலேன் நீ என்னை அன்றி இலை -நான் முகன் -7-
ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதுமில்லா வன்று -4-10-1
நான் முகன் தன்னோடு தேவர் உலகோடு உயிர் படைத்தான்

————————————————————————————–

1-3–தோஷம் தட்டாத பரமாத்மா -10/11-திருநாமங்கள்
10-பூதாத்மா -பரிசுத்த ஸ்வாபம் உடையவன் –
8-திரு நாமம் பூதாத்மா -அந்தர்யாமித்வம் சொல்லிற்று
அநச்நன் அந்ய அபிசாகதீதி -கனி புசிக்காமல் பிரகாசித்து கொண்டு இருக்கும் பறவை
ஏஷ சர்வ பூதாந்தராத்மா அபஹதபாப்மா –
அமலன் -ஆதிபிரான் –

11-பரமாத்மா –
பரம புருஷன் நாராயணன் –
பரோ மா அஸ்ய இதி பரம –
பதிம் விச்வச்ய ஆதமேஸ்வரம்
ஒத்தார் மிக்காரை இலையாய மா மாயன் -2-3-2-
நதத் சமச்ச அப்யதி கச்சத்ருயதே
மத்த பரதரம் நாந்யத் கிஞ்சி தஸ்தி -ஸ்ரீ கீதை
பர பராணாம் பரம பரமாத்மா -ஸ்ரீ விஷ்ணு புராணம்

———————————————————————————————————————————–

1-4-முக்தர்களுக்கு மேலான கதியாய் உள்ளவன் -12-17 திரு நாமங்கள்-
12-
முக்தாநாம் பரமா கதி –
கலக்கமில்லா நல் தவ முனிவர் கரை கண்டோர்
துளக்கமில்லா வாவன வெல்லாம் தொழுவார்கள் -8-3-10-
மத் பக்தா யாந்தி மாம்பி மாமுபேத்ய புனர் ஜன்மது காலயம் அசாஸ்வதம்
நாப் நு வந்தி மஹாத்மான சம்சித்திம் பரமாம் கதா -ஸ்ரீ கீதை -8-15-
புண்ய பாபே விதூய நிரஞ்சன பரமம் சாம்யம் உபைதி

13-
அவ்யய -விலக்காதவன் –
நச புனராவர்த்தததே-நச புனராவர்த்தததே
அநாவ்ருத்திச்சப்தாத் -அநாவ்ருத்திச்சப்தாத் -ப்ரஹ்ம ஸூத்ரம்
திண்ணன் வீடு முதல் முழுதுமாய் –நம் கண்ணன் கண்ணல்லது இல்லையோர் கண்ணே -2-2-1-

14-
புருஷ -மிகுதியாக கொடுப்பவர்
வேண்டிற்று எல்லாம் தரும் என் வள்ளல் -3-9-5-
எனக்கே தன்னைத் தந்த கற்பகம் -2-7-1
தம்மையே ஒக்க அருள் செய்வர்
ஸோஅச்நுதே சர்வான் காமான் சஹ ப்ரஹ்மனா விபச்சிதா
ரசோவை ச ரசக்குஹ்யேவாயம் லப்த்வா ஆனந்தீ பவதி
புருஷ -407- ஸ்ரீ ராம பரமான திருநாமம் –

15-சாஷீ
பார்த்து இருப்பவன் –தனை அனுபவிப்பித்து மகிழும் முக்தர்களை பார்த்து மகிழுமவன்-
சர்வஞ்ஞன் –
அளிக்கின்ற மாயப் பிரான் அடியார் குழாங்களையே -2-3-10-

16-ஷேத்ரஜ்ஞ-
இடத்தை அறிபவன் -நித்ய விபூதியை அறிந்தவன் –
பரமே வ்யோமன் ஸோஅச்நுதே
அயோத்யை-அபராஜிதா ஸ்ரீ வைகுண்டம்

17-அஷர –
குறையாதவன் –
திவ்ய சௌந்தர்யம் கல்யாண குணங்கள் -எல்லை காண முடியாதவை –
கொள்ள மாளா இன்ப வெள்ளம் கோதில தந்திடும் என் வள்ளல் -4-7-2-
அதோஷஜ -416-
சத் அஷரம்-480
இதே அர்த்தங்களில் மேலே வரும்

———————————————————-

1-5- முக்திக்கு உபாயமாய் உள்ளவை -18/19
18-யோக –
மோஷ சாயுஜ்யத்துக்கு தானே உபாயம் -நிருபாதிக
மாம் ஏகம் சரணம் வ்ரஜ
தனியேன் வாழ் முதலே கனிவார் வீட்டின்பமே-2-3-5-
கடுவினை நஞ்சே என்னுடை அமுதே சேர்ந்தார் தீ வினைகட்கு
அரு நஞ்சைத் தண் மதியை தீர்ந்தார் தம் மனத்துப் பிரியாதவர் உயிராய் அடியேன் அடைந்தேன் -2-3-6-
பக்தி உழவன் –

19-யோகவிதாம் நேதா –
மற்ற உபாயங்களை பற்றியவர்களையும் பல பர்யந்தம் -நடத்திச் செல்பவன்
பக்தி யோக நிஷ்டனையும் பலனை அடையச் செல்பவன்
ப்ரீதி பூர்வகம் புத்தி யோகம் ததாமி

———————————————————————————

1-6-நியாமகன்
20-பிரதான புருஷச்வர –
பிரகிருதி ஆத்மா -அனைத்தையும் நியமித்து நடத்துபவன் –
ஈச்வரஸ் சர்வ பூதாநாம் -ஸ்ரீ கீதை
உடல் ஆழிப் பிறப்பு வீடு உயிர் முதலாய் முற்றுமாய் அடல் ஆழி யம்மான் -1-4-10-

———————————————————————————————————————————————-

1-7- சமஸ்த இதர விலஷணன் -21-65- திருநாமங்கள் –
21- நார சிம்ஹ வபு –
தானவன் மார்வகலம் இரு கூறா நகந்தாய் நரசிங்கமதாய உருவே -3-4-7-

22-ஸ்ரீ மான் –
அழகியவன் –
இமையோர் பெருமான் அரி பொங்கிக் காட்டும் அழகு -நான் திரு -21
அழகியான் தானே அரி யுவன் தானே -நான் -திரு 22
180-222 மேலும் இதே திரு நாமம் வரும் –
180-திவ்ய ஆபரண செல்வம்
உள்ளே வெண் பல் இலகு சுடர் இலகு விலகு மகர குண்டலத்தன் கொண்டல் வண்ணன்
சுடர் முடியன் நான்கு தோளன் குனி சாரங்கன் ஒண் சங்கதை வாள் ஆழியான் ஒருவனே -8-8-1-
222-தாமரைக் கண்ணன் -மத்ஸ்ய கமல லோஷண
மீனாய் ஆமையாய் –கார் வண்ணனே –கமலத் தடம் கண்ணன் -5-1-11
மீனாகி மானிடமாம் தேவாதி தேவ பெருமான் என் தீர்த்தன் -2-8-5-

23-கேசவ –
அழகிய கேசாபாசங்களை உடையவன் -இங்கு திரு மேனியின் அழகிலே நோக்கு
கொள்கின்ற கோளிருளைச் சுகிர்ந்திட்ட கொழும் சுருளின் உள் கொண்ட நீல நன்னூல் தழை கொல் அன்று மாயன் குழல் -7-7-9-
பிரமனுக்கும் ஈசனுக்கும் நிர்வாஹகன்
கேசி -அசுரனைக் கொன்றவன்
கேசவ -654- க்லேச நாசன -க்லேசங்களைப் போக்கும் கண்ணன்

23-புருஷோத்தம –
ஷரன் -சம்சாரி அஷரன்-முக்த நித்யர்
மலர்ந்து எழுந்து அணவி மணிவண்ண உருவின் மால் புருடோத்தமன் -பெரியாழ்வார் -4-7-2-

24-சர்வ –
கரந்து எங்கும் பரந்து உளன் -1-1-10
சர்வம் சமாப் நோஷி ததோசி சர்வ -ஸ்ரீ கீதை

25-சர்வ –
அழிப்பவன்-சர்வ சிவ ஸ்தாணு -இவை எல்லாமும் விஷ்ணோர் நாம சஹஸ்ராணி –கௌணாநி –
ச ப்ரஹ்மா சசிவ சேந்தர-
அசுபத்தை நீக்கி சுபத்தை -மங்களத்தை தருமவன் –
வைகுந்தா மணி வண்ணனே செய்குந்தா வரும் தீமைகள் உன்னடியார்க்குத் தீர்த்து -2-6-1-

26-சிவ-
மங்களங்களை அளிப்பவன்-
ஞாலத்து உயிர்க்கு எல்லாம் அருள் செய்யும் -3-6-11
சாஸ்வதம் சிவம் அச்யுதம்
மங்களா நாஞ்ச மங்களம்
607–சிவ -மங்கள பரதன் மீண்டும் வரும் -சரீர சம்பந்தம் போக்கி –
அருளொடு பெரு நிலம் அளிக்கும் நாரணன் -பெரிய திரு மொழி -1-1-9-
செடியார் ஆக்கை அடியாரைச் சேர்த்தல் தீர்க்கும் திருமால் -1-5-7-

27-ஸ்தாணு
நிலையானவன் –அனுக்ரஹம் அளிப்பதில் ஸ்திரமானவன் –
மாதவன் என்று ஓத வல்லீரேல் தீதொன்றும் அடையா –ஏதம் சாராவே -10-5-7-
அடியார்க்கு இன்னும் என் செய்வன் என்றே இருத்தி –
428-ஸ்தாவர ஸ்தாணு -மீண்டும் வரும்
வன்மை யுடைய வரக்கர் அசுரரை மாளப் படை பொருத நன்மை யுடையவன் -3-10-1-

28-பூதாதி –
சர்வ தோஷங்கள் போக்கி -சுபங்களை அளித்து -சிவ -இவற்றை நிலைத்து ஸ்தாணு -இதனால் சர்வராலும் ஆதரிக்கப் படுபவன்
எல்லா யுலகு முடையான் தனை நன்று சூட்டும் விதி எய்தினம் என்ன குறை நமக்கே -4-5-7-

30-நிதிரவ்யய –
அழிவற்ற நிதி -ஆபத் தனம் -அவ்யய -13 திரு நாமம் பார்த்தோம் முன்பு
வைத்த மா நிதியம் மது சூதனன் -4-7-11
தனம் மதியம் தவ பாத பங்கஜம்
நிதியினைப் பவளத் தூணை -திருக் குறு-1

31- சம்பவ –
அவதாரம் செய்பவன் -நிதியாக பொக்கிஷமாக அடியார் காப்பாற்றினாலும்
பவித்ராணாம் –தர்ம சம்ஸ்தாபநார்த்தாய சம்பவாமி யுகே யுகே –
தொழும் காதல் களிறு அளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே -3-1-9-
பஹூநிமே வ்யதீதாநி ஜன்மாநி –
ஒருத்தி மகனாய் பிறந்து –

32-பாவந –
உய்விப்பவன் -பக்தியை உண்டாக்கி வளரச் செய்து பூர்ண பக்தனாக்கி உஜ்ஜீவிப்பவன்
அடியவர் வினை கெடுக்கும் நச்சு மா மருந்தம் நலம் கடல் அமுதம் -3-4-5-

33-பர்த்தா –
பரிப்பவன் -ஆதரிப்பவன் -போஷிப்பவன்
தன்னையே அனுபவிக்கும்படி தந்து போஷிப்பவன் –
எனக்கே தன்னைத் தந்த கற்பகம் -2-7-11

34-ப்ரபவ-
பிரக்ருஷ்டமாக -சிறப்பாக ஜனிப்பவன் –இச்சையால் –
ஜன்மம் சேஷ்டிதம் மே திவ்யம் –
தஸ்ய தீரா பரிஜா நந்தி யோநிம்-
பிறந்தவாறும் -வளர்ந்த வாறும் -இச் சிறந்த வான் சுடரே -5-10-1

35-பிரபு –
சமர்த்தன் –
தோஷம் தீண்டாமல் மேன்மை குறையாமல் -மோஷம் அழிக்க வல்ல சக்தி அவதரித்தும்
ஜடாயு மோஷம் -சிந்தயந்தி -சேட்பால் பழம் பகைவன் சிசுபாலனுக்கும் மோஷம் –
உயிர் அளிப்பான் என் நின்ற யோநியுமாய்ப் பிறந்தாய் இமையோர் தலைவா -திரு விறு -1

36-ஈஸ்வர –
ஆளும் ஈசன் -பரமேஷ்டி -பரம பத நாதன் –
பல்லாண்டு என்று பவித்ரனைப் பரமேட்டியை –
அஜோபிசன் நவ்யயாத்மா பூதாநாம் ஈச்வரோபிசன் -ஸ்ரீ கீதை
தாள் பரப்பி மண் தாவிய ஈசன் -3-4-1- ‘
மீண்டும் 75-சர்வ ஸ்வாமி
எண்ணில் தொல் புகழ் வானவர் ஈசனே -3-3-3-
வானோர் பெருமான் மா மாயன் வைகுந்தன் எம்பெருமான் -1-5-4-

37-ஸ்வயம்பூ –
தானே பிறப்பவன் –
ப்ரக்ருதிம் ஸ்வாம திஷ்டாய சம்பவாமி ஆத்மமாயயா
பிதரம் ரோசயமாச–தசரதம்
தானே தனித் தோன்றல் -பெரிய திரு -24
ஆதி அம் சோதி யுருவை அங்கு வைத்து இங்குப் பிறந்தவன்

38-சம்பு –
இன்பம் உண்டாக்குமவன்
ரூப ஔதார்ய குணை பும்ஸாம் திருஷ்டி சித்த அபஹாரினம்
சந்திர காந்தா நனம் ராமம் அதீவ ப்ரிய தர்சனம் –
புழுதி அளைந்த பொன் மேனி காணப் பெரிதும் உகப்பன் -பெரியாழ்வார் -2-4-9-

39-ஆதித்ய
நீள் சுடர் இரண்டும் எங்கோ -3-4-1-
ய ஏஷோ அந்தராதித்யே ஹிரண்மய புருஷ த்ருச்யதே தஸ்ய யதா கப்யாசம் புண்டரீக மேவ மஷிணீ —
தஸ்ய உதித்தி நாமா -சாந்தோக்யம்
உத் -என்று அவன் திரு நாமம்
த்யேயஸ் சதா சவித்ரு மண்டல மத்ய வர்த்தி நாராயண –
568-ஆதித்ய-மீண்டும் வரும் தேவகி புத்திரன் –
அதிதியே தேவகியாக பிறந்தபடியால் அவல் கர்ப்பத்தில் உண்டானவனை ஆதித்யன்
ஆ- அஷரத்தினால் உபாசிக்கத் தகுந்தவன்
தேவகி தன வயிற்றில் அத்தத்தின் பத்தா நாள் தோன்றிய அச்சுதன் -பெரியாழ்வார் -1-2-6
தேவகி சிங்கமே -பெரியாழ்வார் -1-3-4-

40-புஷ்கராஷ –
தாமரைக் கண்ணன்
புருஷ -புஷ்கரேஷண-ராம கமல பத்ராஷ -மகா வராஹ ஸ்புட பத்ம லோசன –
பெரும் கேழலார் தன பெரும் தண் மலர்ப் புண்டரீகம் -திரு விருத்தம் -45
கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண்ணினையும் அரவிந்தம் அடியும் அக்தே -திருநெடும் தாண்டகம் -21
மீண்டும் -561-வரும் புஷ்டி அளிக்கும் கண்ணை உடையவன்
அனுக்ரகம் வர்ஷிக்கும் கண்களை உடையவன் –
மீன் கண்ணாலே குஞ்சுகளை வளர்ப்பது போலே
அல்லிக் கமலக் கண்ணனை -8-10-11
செய்ய தாமரைக் கண்ணன் -3-6-

41-மகாஸ்வந-
பூஜிக்கத் தக்க ஸ்வந -சப்தம் திரு நாமம் உடையவன்
தஸ்ய உதிதி நாம -உத் –
உயர்வற -உ வில் தொடங்கி–உயர்ந்தே -தே யில் முடியும் திருவாய்மொழி யான மஹா சப்த வாச்யன்
சப்தம் -வேதம் -காயத்ரியால் சொல்லப்படும் பூஜ்யன் –

42- அநாதி நிதந –
ஆதியும் அந்தமும் இல்லாதவன் –
பரமாத்மா ஸ்வரூபம் ரூபம் நித்யம்
அவிகாராய சுத்தாய நித்யாய பரமாத்மனே
சதைக ரூபா ரூபாயா
ஆதி அம் சோதி யுருவை அங்கு வைத்து இங்குப் பிறக்கிறான்
தோற்றக் கேடவை இல்லவன் -3-6-6-

44-தாதா –
சிருஷ்டிப்பவன் –
ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா வன்று நான் முகன் தன்னோடு தேவர் உலகோடு உயிர் படைத்தான் -4-10-1
தஸ்மின் கர்பம் ததாம் யஹம் –
மீண்டும் -951-தாதா -தர்மத்தை உபதேசிப்பவன்
உலகத்து அற நூல் சிங்காமை விரித்தவன் எம்பெருமான் -பெரிய திருமொழி -10-6-1-

44-விதாதா –
கர்ப்பத்தை போஷித்து உற்பத்தி செய்பவன்
யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம்
தஸ்மாத் விராட் அஜாயத
அந்தி போல் நிறத்தாடையும் அதன் மேல் அயனைப் படைத்த தோர் எழில் உந்தி
தாமரை யுந்தி தனிப் பெரு நாயக -திருவாசிரியம் -1
மீண்டும் -485-வரும் விதிப்பவன் -அடக்கி ஆள்பவன்
சாதுவராய்ப் போதுமின்கள் என் தான் நமனும் தந் தூதுவரைக் கூவிச் செவிக்கு -நான் முகன் -68
பரிஹர மது ஸூதன பிரபன்னான் பிரபுர ஹ மன்யன்ருணாம் ந வைஷ்ணவாநாம் –
எம் கோன் அவன் தமர் நமன் தமரால் ஆராயப் பட்டறியார் கண்டீர் –
நமன் தமர் பாசம் விட்டால் அலைப் பூண் உண்ணும் அவ்வவை எல்லாம் அகல கலைப் பல் ஞானத்து என் கண்ணன் -3-2-1-

45-தாதுருத்தம
பிரமனில் சிறந்தவன் –
பிதா தெய்வக் குழாங்கள் கை தொழக் கிடந்த தாமரை யுந்தி தனிப் பெரு நாயகன் -திருவாசிரியம் -1
தத்வம் நாராயண பர பரோ நாராயணோ ததேவ தஸ்மாத் ஜஜ்ஞே சதுர்முக
நான்முகனை நாராயணன் படைத்தான்
நாத்தழும்ப நான்முகனும் ஈசனுமாய் முறையால் ஏத்த -பெரிய திருமொழி -1-7-8-

46-அப்ரமேய-
அறிவுக்கு எட்டாத பெருமைகளை உடையவன் –
அறிவில் சிறந்த பிரமனை
நேரே கடிக் கமலத்து உள்ளிருந்தும் காண்கிலான் கண்ணன் அடிக்கமலம் தன்னை அயன் -முதல் திரு -56
யம் நாயம் பகவான் ப்ரஹ்மா ஜாநாதி புருஷோத்தமம்
அப்ரமேயம் ஹிதத்தேஜ

47-ஹ்ருஷீ கேச
இந்த்ரியங்களுக்கு நியாமகன்
ஹர்ஷம் சந்தோசம் இவற்றுடன் ஈசனாய் இருப்பவன்
உத்சாஹம் ஆனந்தம் ஐஸ்வர்யம் பொருந்தி
இருடீ கேசன் எம்பிரான் -2-7-10

48-பத்ம நாப –
கொப்பூழில் எழு கமலப் பூ வழகன் -நாச் -11-2-
பூவில் நான் முகனைப் படைத்த தேவன் எம்பெருமான் -2-2-4-
மீண்டும் 198-348- வரும்
தாமரை உந்தி தனிப் பெரும் நாயகன் -திருவாசிரியம்
அயனைப் படைத்த எழில் உந்தி -அமலனாதி –

49-அமரப் பிரபு-
தேவர்களுக்கு நிர்வாஹகன்
ப்ரஜாபத்யம் த்வயா கர்ம சர்வம் மயி நிவேசிதம் –
நிறுத்தினான் தெய்வங்களாக அத் தெய்வ நாயகன் தானே -5-2-8-

50-விஸ்வ கர்மா –
ஜகத் வியாபாரங்களை தானே செய்பவன் -பஹூச்யாம் ப்ரஜாயேய
சமஷ்டி சிருஷ்டி இவனது
பின்னது வ்யஷ்டி சிருஷ்டி
பார் உருவில் விசும்பாகிப் பல் வேறு சமயமுமாய் பரந்து நின்ற -திரு நெடு -2-

51- மனு
சங்கல்பிப்பவன் -மனனம் பண்ணுமவன் மனு

52-த்வஷ்டா –
பாகுபாடு செய்பவன் -த்வஷ்டா -செதுக்குமவன்
நாம ரூபாணி வ்யாகரவாணி
தேவ மனுஷ்ய திர்யக் ஜங்கமம்-ரூபம் குணம் செயல் பெயர் வ்யவஸ்தை பண்ணுமவன்
பல்வேறு சமயமுமாய் -இத்தையே சொல்லும்-

53-ஸ்தவிஷ்ட –
மிகவும் ஸ்தூலமானவன் -பெரியவன் பரப்பு உடையவன்
சூஷ்ம சித் அசித் விசிஷ்ட ப்ரஹ்மம் -பஹூச்யாம் -சங்கல்பித்து
ஸ்தூல சித் அசித் விசிஷ்ட ப்ரஹ்மம் -பலவாக விரிந்து சிருஷ்டி
வேர் முதல் வித்தாய்ப் பரந்து தனி நின்ற -2-8-10
மீண்டும் -437-வரும் –
செல்வர் பெரியர் -நாச்சியார் -10-10-

54-ஸ்தவிர
நிலைத்து இருப்பவன்
விஸ்வகர்மா -ஜகத் வியாபாரம் சொல்லி
மனு -சங்கல்ப்பத்தால் சிருஷ்டி சொல்லி
ஸ்தவிர -பெரிதாக பரிணப்பிதால் வரும் பெருமை சொல்லும்
காலமும் அவன் வசத்தில் இருந்தாலும் சிருஷ்டி காலத்தை அனுசரித்து லீலா வியாபாரம்
எக்காலத்து எந்தையாய் -2-9-8-
கால சக்கரத்தாய் -7-2-7-

55- த்ருவ-
மாறாமல் நிலை நிற்பவன் -ஸ்வரூபத்தில் நின்றும் நழுவாமல் –
அசையா சாஸ்வதோ த்ருவ –
அவிகாராய சுத்தாயா நித்யாய பரமாத்மனே
உள்ளூரும் சிந்தை நோய் எனக்கே தந்து -திரு நெடும் -23-பிரிவுத் துயரை எனக்கே தந்தாய்

56-அக்ராஹ்ய –
க்ரஹிக்க முடியாதவன் –
தானே காரணமாயும் கர்த்தாவாகவும்
அதி திஷ்டதி ஏக
வளவேழு உலகின் முதலாய வானோர் இறை -1-5-1-
ஆர்ந்த ஞானச் சுடராகி கீழ் மேல் அளவிறந்து -1-5-10

57-சாஸ்வத
நிரந்தரமாய் இருப்பவன்
சிருஷ்டி ஸ்திதி சம்ஹாரங்கள்-தடை இன்றி லீலையாக
அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே -ஸ்ரீ பாஷ்யம்
என்றுமோர் இயல்வோடு நின்ற என் திடரே -1-1-6-
நிலையான வேத பிரதிபாத்யன்

58- கிருஷ்ண –
ஆனந்தம் அடைபவன் -சிருஷ்டி யாதிகளால்
இன்புறும் இவ்விளையாட்டு உடையானைப் பெற்று -3-10-9
கன்று மேய்த்து இனிது உகக்கும் காளை

59-லோஹிதாஷா –
சிவந்த கண்களை யுடையவன் –
ஸ்வாவாவிக செந்தாமாரைக் கண்ணன் -முன் சொல்லிய ஆனந்தத்தால் மேலும் சிவக்கும்
கண்கள் சிவந்து பெரியவை -8-8-1-
வாத்சல்யத்தாலும் கண்கள் சிவக்கும்

60-ப்ரதர்தந-
சம்ஹரிப்பவன் -பிரளய காலத்தில் எல்லா வற்றையும் அழிப்பவன்-
யாவகை உலகமும் யாவரும் அகப்பட -ஒரு பொருள் புறப்பாடு இன்றி முழுதும் அகப்படக் கரந்து
ஓர் ஆலிலைச் சேர்ந்த எம்பெரு மா மாயன் -திரு வாசிரியம் -7

61-ப்ரபூத –
சம்ருத்தன் -நிரம்பியவன் -போக்ய போக ஸ்தான போக உபகரணங்களால் நிரம்பிய -பரமபதம் உடையவன் –
அழியாத சம்பத்தை உடையவன்
பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் அங்காதும் சோராமே ஆள்கின்ற எம்பெருமான்

62-த்ரிக குததாமா –த்ரிக குப்தாமா –
த்ரிபாத் விபூதியான -பரம பதத்தை இருப்பிடமாக உடையவன்
தனிமாத் தெய்வம் -அமரர்கள் அதிபதி -விண்ணவர் பெருமான் –
த்ரி யுகம் மூன்று இரட்டைகள் ஞான பல -ஐஸ்வர்யா வீர்யம் -சக்தி தேஜஸ் –
க்குத் -கெட்டியான முகப்பு -மூன்று முகப்புகள் உள்ள மஹா வராஹம்
த்ரிக குப்தாம ஒளி உடைய -பெரும் கேழலார் -திருவிருத்தம் -45
கோல வராஹம் ஒன்றாய் -10-10-7-

63-பவித்ரம் –
பரிசுத்த ஸ்வரூபம்
அமலன் விமலன் நிமலன் நின்மலன் -அரங்கத்தம்மான் –
பவித்ரானாம் பவித்ரம் -மங்களா நாஞ்ச மங்களம்
தீர்த்தன் -உலகு அளந்த -2-8-6-
பன்னலார் பயிலும் பரனே பவித்ரனே -2-3-7-
அனுபவ விரோதி போக்கும் சுத்தி
விண்ணவர் பெருமான் படிவானமிறந்த பவித்ரன் -2-3-9-
அமலங்களாக விழிக்கும் -1-9-9-
ச்ரமணீ விதுர ரிஷி பத்நிகளை பூதராக்கின புண்டரீ காஷன்

64-மங்களம் பரம் –
சிறந்த மங்களம் –தோஷங்களுக்கு எதிர் தட்டாய் உள்ளவன் –
ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் –
உயர்வற உயர் நலம் உடையவன்
சத்யம் ஞானம் ஆனந்தம் ப்ரஹ்ம
ஆனந்தோ ப்ரஹ்ம சாந்தி சம்ருத்தம் அம்ருதம்
உணர் முழு நலம் -1-1-2–கட்டடங்க ஞானமும் ஆனந்தமாய் இருக்கும்

65- ஈசாந –
அடக்கி ஆள்பவன்
பதிம் விச்வச்ய ஆத்மெச்வர ஜகத் பத்தி
பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் அங்காதும் சோராமே ஆள்கின்ற எம்பெருமான் -நச் -11-3-
ஆளும் எம்பெருமானுமாய் நம்மை யாட் கொள்பவன் -திருச் சந்த -15
ஈஸ்வர சர்வ பூதாநாம் சர்வ பூத மகேஸ்வர -ஸ்ரீ கீதை
இமையோர் தலைவன் அமரர்கள் அதிபதி விண்ணவர் கோன்
ஈசந சீல நாராயண –
இதை இல்ல செய்பவருக்கு தில தர்ப்பணம் பண்ணுகிறேன் -என்கிறார் பட்டர்

———————————————————————-

1-8-த்ரிவித சேதன வ்யதிரிக்த -நியாமகன் -66-88-திரு நாமங்கள்
66-பிராணத-
பிராணனைக் கொடுப்பவன் –
தன்னை நித்ய அனுபவ சக்தி கொடுப்பவன்
தனியேன் ஆர் உயிரே-10-10-1-உன் சுவட்டை அறிவித்து
சுவட்டை சுவையை பிரித்தாளும் முடியாதபடி
குணாவிஷ்காரத்தாலே -தரிப்பித்தவனே –மேலும் -322-409-956 பார்ப்போம் –

67-பிராண –
உயிராக இருப்பவனே –
ஒத்தே எப்பொருட்கும் உயிராய் -2-3-2-
ததேதத் அஷரம் ப்ரஹ்ம ச பிராண தது வாங்மந -உயிர் வாக் மனம் அனைத்துமாக இருக்கிறான் –

68-ஜ்யேஷ்ட –
முதன்மை யானவன் –
அந்தமில் புகழாய் -5-7-7-
செலக் காண்கிற்பார் காணும் அளவும் செல்லும் கீர்த்தியாய் உலப்பிலானே -5-8-4-
முது வேத முதல்வன் -ஆதி பெரும் மூர்த்தி -ப்ரஹ்மைவ பூதாநாம் ஜ்யேஷ்டம் –

69-ஸ்ரேஷ்ட –
மேன்மை மிக்கவன்
எனக்கு தேனே பாலே கன்னலே அமுதே -10-7-2- என்னப் பண்ணும்
தத் விப்ராசோ விபன்யவ ஜாக்ருவாம்ச சமிந்ததே விஷ்ணோர்யத் பரமம் பதம் –
திசைதொறு அமரர்கள் சென்று இறைஞ்ச நின்றவன் -ப்ரீதி காரித கைங்கர்யம் –

70-பிரஜாபதி –
நித்ய ஸூரிகளுக்கு தலைவன் -அமரர்கள் அதிபதி -முனிவர்க்கு உரிய அப்பன் -8-11-11
அகில ஜகத் ஸ்வாமின் அஸ்மத் ஸ்வாமின் –

71-ஹிரண்ய கர்ப்ப —
மிகவும் விரும்பத் தக்க -பரிசுத்தமான -பரம பதத்தில் இருப்பவன்
தொண்டர் ஆள்வது சூழ் பொன் விசும்பே பொன்னுலகு -10-8-1-
பொன்னுலகு ஆளீரோ புவனி முழுதாளீரோ -9-8-1-

72-பூ கர்ப்ப –
பூமிப் பிராட்டிக்கு ஸ்வாமி –அவளை கர்ப்பத்தில் போல் காப்பவன்
70-71-72-73-பரம பதத்தில் நித்யர் உடன் தன் பெருமைக்கு பொருத்தமாக திவ்ய மகிஷிகள் உடன் வசிப்பதை சொல்பவை
மஹீம் தேவீம் விஷ்ணு பத்நீம் அஜூர்யாம் -மஹீ தேவி பூமி பிராட்டி -நித்ய யௌவனை –
எயிற்றில் மண் கொண்ட வெந்தை -பெரியாழ்வார் -5-2-3-
பார் வண்ண மட மங்கை பத்தர் -திரு நெடு -18

73-மாதவ-
திரு மகளார் தனிக் கேள்வன் -மா -ஸ்ரீ தேவி அவளுக்கு ஸ்வாமி
அஸ்ய ஈசாநா ஜகதோ விஷ்ணு பத்நீ
ஸ்ரத்தையா தேவோ தேவத்வம் அஸ்நுதே –
திருவுக்கும் திருவாகிய செல்வன்
நித்யைவ ஏஷா ஜகன்மாதா விஷ்ணோ ஸ்ரீ அநபாயிநீ
அகலகில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பன்
அமுதில் வரும் பெண்ணமுதம் கொள்ள வங்கக் கடல் கடைந்த மாதவன்
ஸ்ரீ வல்லபன்

74- மது ஸூதந-
மது அரக்கரை முடித்தவன்
மது -இந்த்ரியங்களை சொல்லி நித்யர் சிந்தை எப்போதும் இவன் பால் ஈர்த்து கொள்பவன்
மாயா வாமனனே மது ஸூ தா -7-8-1
வள்ளலே மது சூதனா என் மரகத மலையே -2-6-3-

75-ஈஸ்வர
சர்வ ஸ்வாமி -சர்வேஸ்வரேஸ்வரன்
சத்ய காம சத்ய சங்கல்ப -இச்சிப்பதும் நினைப்பதும் உண்மையாகும் -நடக்கும் –
எண்ணில் தொல் புகழ் வானவர் ஈசனே -3-3-3-
வானோர் பெருமான் மா மாயன் வைகுந்தன் எம்பெருமான் -1-5-4-

76-விக்ரமீ –
பராக்கிரமம் உடையவன் –
நினைவாலே நடக்கும் -சுண்டு விரல் நுனியாலேயே நினைத்தால் முடித்து விடுவேன்
பிறந்தவாறும் வளர்ந்தவாறும் -5-10-திருவாய் மொழி முழுதும் அவன் விக்கிரமம் பேசும்

77-தநவீ –
சாரங்க வில்லை யுடையவனே -மற்ற திவ்ய ஆயுதங்களுக்கும் உப லஷணம்-
சார்ங்கம் என்னும் வில்லாண்டான் தன்னை –
அன்று நேர்ந்த நிசாசரரை வெந்நரகம் சேரா வகையே சிலை குனித்தான்

78-மேதாவீ-
எல்லாம் அறிந்தவன் -ச்வதஸ் சர்வஞ்ஞன்
எல்லையில் ஞானத்தன் -3-10-8

79-விக்ரம-
கருட வாஹனன் –
அஞ்சிறைப் புள் தனிப் பாகன் அமரர் வேந்தன்
தத் புருஷாய வித்மஹே ஸூ வர்ண பஷாய தீ மஹி -தந்நோ கருடக ப்ரசோதயாத் –
வையத்தேவரும் வணங்க அணங்கு எழு மா மலை போல் தெய்வப் புள்ளேறி வருவான் -பெரிய திரு மொழி -3-3-6

80-க்ரம-
செழிப்புற்றவன் -திவ்ய தேசம் திவ்ய மகிஷிகள் திவ்ய ஆயுதம் திவ்ய வாகன செழிப்பு
அண்டத்தகத்தான் புறத்துள்ளான் -பரம்பரன் -ஓடியா வின்பப் பெருமையோன்-8-8-2-

81-அநுத்தம –
மேம்பட்டார் இல்லாதவன்
ந்தத் சமச்ச அப்யதிகச்ச த்ருச்யதே
ஒத்தாரும் மிக்காரும் இல்லாத மா மாயன் -2-3-2-
மத்த பரதரம் நாந்யத் கிஞ்சி தஸ்தி தனஞ்சய -ஸ்ரீ கீதை

82-துராதர்ஷ –
கலக்க முடியாதவன் –
தத் தாம பரமம் மம -தத் விஷ்ணோ பரமம் பதம்
பாரளந்த பேரரசு எம் விசும்பரசு -திரு விருத்தம் -80
வானோர் சோதி மணி வண்ணன் விண்ணோர் தலைவன் -1-5-5-
அஷோப்ய -807-கலக்க முடியாதவன் அர்த்தம்
கலக்கமிலா நல தவ முனிவர் -8-4-1-
அஷோப்ய -999-அசைக்க முடியாதவன் -பிரபன்னாய அபயம் சர்வ பூதேப்யோததாமி ஏதத் வ்ரதம் மம –
உறுதியான வ்ரதம் -அசைக்க முடியாத
தேசுடைய தேவனார் திருவரங்க செல்வனார் பேசி இருப்பனகள் பேர்க்கவும் பேராவே -நாச்சியார் -11-5-
வைகுண்டேது பரே லோகே ச்ரியா ஸார்த்தம் ஜகத்பதி
ஆஸ்தே விஷ்ணு அசிந்த்யாத்மா பக்தி பாகவதை சஹ -சூழ விளங்கி
ஏகமேவ அத்விதீயம் -நித்ய ஸ்வாமித்வம் –

83-க்ருதஜ்ஞ-
செயல்களை அறிபவன்
தர்மஜ்ஞச்ச க்ருதஜ்ஞச்ச –
எண்ணிலும் வரும் -1-10-2-
உன் அடியார்க்கு என் செய்வன் என்றே இருத்தி நீ-பெரிய திருவந்தாதி -53

84-கருதி –
செய்விப்பவன் –
தன்னை பூஜிக்க ஸூக்ருதத்தையும் தானே அழிப்பவன்
உம்பர் ஒருவனை என் உணர்வினுள்ளே இருத்தினேன் அதுவும் அவனது இன்னருளே -8-8-3-
மயர்வற என்னுள்ளே மன்னினான் தன்னை உயர் வினையே தரும் -1-7-4-
என்னைத் தீ மனம் கெடுத்தாய் –மருவித் தொழும் மனமே தந்தாய் -2-7-7-/8
செய்வார்களைச் செய்வேனும் யானே என்னும் -5-6-4-

86-ஆத்மவான் –
ஜீவாத்மாக்களை தனது சொத்தாக உடையவன்
எனதாவி ஆவியும் நீ -2-3-4-
எனதாவியுமுனதே-5-7-10

86- ஸூ ரேச –
ப்ரஹ்மாதி தேவர்களுக்கு ஈஸ்வரன் –
நிறுத்தினான் தெய்வங்களாக அத்தெய்வ நாயகன் தானே -5-2-8-
பிரமன் முதலானவர்க்கு ஐஸ்வர்யங்கள் அதிகாரங்கள் கொடுப்பவன்
அமரர்க்கு அமுதீந்த ஆயர் கொழுந்து -1-7-9-

87-சரணம் –
உபாயமாய் இருப்பவன் –நிரபேஷ -நிருபாதிக ரஷகன் –
நிவாஸ சரணம் ஸூ ஹ்ருத் கதிர் நாராயண –
ஆறெனக்கு நின் பாதமே சரணாகத் தந்து ஒழிந்தாய் -5-8-10-
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் நமக்கு -5-10-8-

88- சர்ம –
உயர்ந்த பலனாய் இருப்பவன் -சுக ரூபமாய் இருப்பவன்
ஆனந்தம் ப்ரஹ்ம
வானவர் தெய்வம் என்கோ வானவர் போகம் என்கோ -3-4-7-
எனக்குத் தேனே பாலே கன்னலே அமுதே -10-7-2-
அமுதாகித் தித்தித்து -ஆராவமுதே
சர்வ கந்த சர்வ ராச
கறந்த பால் நெய்யே நெய்யின் சுவையே கடலினுள் அமுதமே அமுதில் பிறந்த இன் சுவையே -8-1-7-

——————————————————————————

1-9-உபாய ஸ்வரூபி -உபேய ஸூக ஸ்வரூபி –89-100 திரு நாமங்கள் –

89-விச்வரேதோ –
அகில உலகங்களுக்கும் காரணம்
சரணம் சரம -திரு நாமங்களுக்கு தோற்றுவாய் இத் திரு நாமம்
ரேதஸ் -தன்னை அறிய ஞான இந்த்ரியங்களையும்
கைங்கர்யம் பனி உஜ்ஜீவிக்கும் படி கர்மேந்த்ரியங்களையும்
உண்டாக்குகிறான்
விசித்ரா தேக சம்பத்தி ஈச்வராய நிவேதிதம்
கருமமும் கரும பலனுமாகிய காரணன் -3-5-10-
ஆற்ற நால்வகை காட்டும் அம்மான் -4-5-5-

90-பிரஜாபவ –
பிரஜைகளுக்கு இடமாய் -உய்யும் படி அவைகளில் இருப்பவன்
ஆபிமுக்யம் உண்டாகி அவனை அடைய வழி ஏற்பட
பந்தம் அறுப்பதோர் மருந்தும் பான்மையும் பல் உயிர்க்கு எல்லாம் அந்தமும் வாழ்வுமாய எம்பெருமான் -பெரிய திருமொழி -5-7-2

91-அஹ –
பகல் போலே குறைவற்று விளங்குபவன்
பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் -இரண்டாம் திரு -82
அல்லல் இன்பம் அளவிறந்து எங்கும் அழகு அமர் சூழ் ஒளியன்-3-10-8-

92-சம்வத்சர –
சேதனர் இடம் நன்றாக வசிப்பவன்
என்னுடைச் சூழல் உளானே -1-9-1-ஆறுகள் இலானே -ஒழிவிலன் என்னுடன் உடனே -1-9-3
அல்லும் பகலும் இடைவீடு இன்றி மன்னி என்னை விடான் -நம்பி நம்பியே -1-10-8-
ததாமி புத்தி யோகம்
மீண்டும் 423-பொருந்தி வசிப்பவன்
கல்கியாக அவதரிக்கும் காலம் எதிர் நோக்கி திருவநந்த ஆழ்வான் மேலே கண் வளர்ந்து அருளி
அநந்த சயநாரூடம் -சாத்விஹ சம்ஹிதை
அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணன்

93-வ்யால-
தன் வசம் ஆக்குமவன் -அங்கீ கரிப்பவன்
செல்வ விபீடணற்கு வேறாக நல்லானை -பெரிய திருமொழி -6-8-5-
இசைவித்து என்னை யுன் தாளிணைக் கீழ் இருத்தும் அம்மானே -5-8-9-

94-ப்ரத்யய –
நம்பிக்கை உண்டாக்குபவன்
நம்பனை நரசிங்கனை -பெரியாழ்வார் -4-4-9-

95- சர்வ தர்சன –
தன் மகிமைகள் எல்லாம் பூரணமாக காட்டி அருளுபவன்
தச்யைஷ ஆத்மா விவ்ருனுதே தநூம் ஸ்வாம் -முண்டகோப
காட்டவே கண்ட பாதம் –
காட்டித் தன் கணை கழல்கள் கடு நரகம் புகல் ஒழித்த எம்பெருமான் -10-6-1-

96-அஜ –
தடைகளை விலக்குபவன்-
அடியார்கள் வினைத்தொடரை அருள் என்னும் ஒள வாள் உருவி வெட்டிக் களைபவன் –
என் தன மெய் வினை நோய் களைந்து நல ஞானம் அளித்தவன்
ஒ இறப்பிலி -அகாரத்தால் சொல்லப்படுபவன் -206-524- மீண்டும் வரும் –

97-சர்வேஸ்வர –
தானே அடியார் இடம் சென்று ஸ்ருபவன்
வந்து அருளி என் நெஞ்சு இடம் கொண்ட வானவர் கொழுந்தே -உலக்குக்கோர் முந்தை தாய் தந்தையே -5-7-7-

98-சித்த –
சித்த தர்மம் -எப்போதும் உள்ளவன் –
புதையல் போலே எப்போதும் இருப்பவன்
ஆழியான் அருள் தருவான் அமைகின்றான் -10-6-1-

99- சித்தி
பேறாய் இருப்பவன்
அடியை அடைந்து ஈறில் இன்பத்து இரு வெள்ளம் யான் மூழ்கினேன் -2-6-8-
உபாயாந்தரங்களுக்கும் பலன் அளிப்பவன் –

100-சர்வாதி –
எல்லா புருஷார்த்தன்கலுக்கும் மூல காரணம்
சர்வான் காமான் ப்ராப்னுவந்தே –கிருஷ்ண நாமாபிதாநாத்
சகல பல பிரதோ ஹி விஷ்ணு
அற முதல் நான்கவையாய் -திரு வெழு கூற்று இருக்கை-

முதல் சதகம் முடிந்தது-

————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பீஷ்மர் திருவடிகளிலே சரணம்
ஸ்ரீ வியாச பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்