ஸ்ரீ பகவத் குண தர்ப்பணம் —607-696 -அருளிச் செயல் சந்தை அமுதம் -சேர்த்தி அனுபவம் -ஸ்ரீ Dr. V. V.ராமானுஜம் ஸ்வாமிகள்

3-30-ஸ்ரீ சம்பந்த -பரத்வ-பரமான திவ்ய நாமங்கள் -607-625-

607-சிவ –
மங்கள ப்ரதன்
அருளோடு பெரு நிலம் அளிக்கும் நாரணன் -பெரிய திரு மொழி-1-1-9-
செடியார் ஆக்கை அடியாரைச் சேர்த்தல் தீர்க்கும் திரு மால் -1-5-7-

608-ஸ்ரீ வத்ஸ வஷா-
திரு மறு மார்பன் -திருமாலை -40-
என் திரு மகள் சேர் மார்பன் -7-2-9-
ஸ்ரீ வத்ஸ வஷா நித்ய ஸ்ரீ -யுத்தம் -114-15-

610-ஸ்ரீ வாஸ –
திரு மகளுக்கு உறைவிடம் -நித்யைவைஷா -அகலகில்லேன் இறையும்-என்று அலர் மேல் மங்கை யுறை மார்பன்

611-ஸ்ரீ பதி
திருமகள் கேள்வன் -திருமகள் கொழுநன் -திருவின் மணாளன் -1-9-1-
திருவுக்கும் திருவாகிய செல்வன் -7-7-1-
ராகவோரஹதி வைதேஹீம் தஞ்சேய மஸி தேஷணா –
ஹரீச்சதே லஷ்மீச்ச பத்ன்யௌ
கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய என் அன்பு -10-10-7-

612-ஸ்ரீ மதாம் வர –
செல்வர்களுள் சிறந்தவன்
நாகணை மிசை நம் பரர் செல்வர் பெரியார் -நாச் -10-10-
தாமரை உந்தி தனிப் பெரும் நாயகன் -திரு வாசிரியம் -1

613-ஸ்ரீ த –
ஸ்ரீ யைக் கொடுப்பவன் -ஸ்ரீ யசஸ் சௌந்தர்யம்
நித்ய நூதன நிர்வ்யாஜ ப்ரணய ரசஸ்ரீயம் தஸ்யை ததாதி -பட்டர் ஸ்ரீ பாஷ்யம்
அநந்ய ராகவேணாஹம்-அனந்யா ஹி மயா ஸீதா

614-ஸ்ரீ நிவாஸ –
பிராட்டியை தரிப்பவன் -கொள் கொம்பு போல் –
திரு மங்கை தங்கிய சீர் மார்பன்

615-ஸ்ரீ நிதி –
ஸ்ரீ என்ற நிதியை உடையவன் –
பூவின் மிசை நங்கைக்கு அன்பன் ஞாலத்தவர்க்கும் பெருமான் -4-5-8-

616-ஸ்ரீ விபாவன –
பிராட்டியால் புகழ் பெற்றவன் -ஸீதா ராமன் தேஜஸ் அப்ரமேயம்-நப்பின்னை கண்ணன் புகர் ஆண்டாள் அறிந்து
உண்ணாது உறங்காது ஒலி கடலை யூடறுத்து பெண்ணாக்கை யாப்புண்ட செல்வனார் -நாச்-11-6-

617-ஸ்ரேய ஸ்ரீ மான் –
பிராட்டியை உடையவன்
திரு விளையாடு திண் தோள் நம்பி -நாச் -9-3-செல்வ நாரணன் -1-10-8–செல்வர் பெரியார் -நாச்
ஸ்ரியம் லோகே தேவ ஜூஷ்டா முதாரம் -ஸ்ரீ ஸூ கதம்

620-லோகத்ர யாச்ரய –
மூ உலகத்தாருக்கும் புகலிடம்
உலகம் மூன்று உடையாய் என்னை ஆள்வானே -6-10-10-
த்வம் மாதா சர்வ லோகா நாம் தேவ தேவோ ஹரி பிதா

621-ஸ்வஷ-
அழகிய கண்களை யுடையவன்
செந்தாமாரை கண் கை கமலம் திரு விடமே மார்பம் -2-5-2-

622-ஸ்வங்க-
சோபனமான திரு மேனியை யுடையவன் –
மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள் –திரு உடம்பு வான் சுடர் பிரான் -2-5-2-

623-சதா நந்த –
அபரிமிதமான ஆனந்தம் உடையவன்
நமக்கும் பூவின் மிசை நங்கைக்கும் இன்பன் -4-5-8-

624-நந்தி –
ஆனந்திப்பவன்
இன்பம் பயக்க எழில் மாதரும் தானும் இவ் ஏழ் உலகை இன்பம் பயக்க இனிதுடன் ஆள்கின்ற பிரான் -7-10-1-

625-ஜ்யோதிர் கணேஸ்வர
அயர்வறும் அமரர்கள் அதிபதி –கூட்டமாய் இருந்து -நித்ய சமூஹம் ப்ரஹர்ஷயிஷ்யாமி-என்றபடி -கைங்கர்யம் செய்ய –
திகழ்கின்ற திரு மார்பில் திரு மங்கை தன்னோடும் திகழ்கின்ற திரு மாலார் -10-6-9-

————————————————————————

3-31-ஸ்ரீ சம்பந்தத்தால் வந்த குண யோகம் -626-629

626-விஜிதாத்மா –
பக்தர்களால் ஜெயிக்கப் பட்ட ஆத்ம ஸ்வரூபத்தை உடையவன் –
பத்துடை அடியவர்க்கு எளியவன் -எத்திறம் என்று மோஹிக்க வைக்கும்
சீலாத் ஜடீ பூயதே -பட்டர் -உன் எளிமை கண்டு பக்தர்கள் ஜடப் பொருள்கள் போலே ஆகிறார்கள்
எளிவரும் இயல்வினன்-1-3-2- இது ரகஸ்ய அர்த்தம்
நீர்மையால் நெஞ்சம் புகுந்து என் உயிர் உண்டான் -9-6-3-
ஆய்ச்சி கண்ணிக் கயிற்றினால் கட்டக் கட்டுண்டு இருந்தான் –

627-விதேயாத்மா –
கட்டுப்பட்டவன் -விதேயன் —
ஆய்ச்சியால் மொத்துண்டு கண்ணிக் குறும் கயிற்றால் கட்டுண்டான் -பெரிய திரு மொழி -11-5-5-
வா போ மீண்டும் ஒரு கால் வந்து போ -தசரதன் நியமிக்க நடப்பார் பெருமாள்
பூசூடவா நீராடவா -அம்மம் உண்ண வா -பெரியாழ்வார் அழைக்கும் படி இருப்பான் கண்ணன்
விட்டு சித்தர் தங்கள் தேவரை வல்ல பரிசு வருவிப்பார் -ஆண்டாள்
ப்ரஹ்மாவாய் இழந்து போதல் இடைச்சியாய் பெற்றுப் போதல்-அர்ஜுனன் இரண்டு சேனைகள் நடுவே நிறுத்து என்ன செய்தல்
இந்த்ரன் சிறுவன் தேர் முன் நின்றான் -பெரிய திரு மொழி -2-3-
நந்த கோபன் தன இன்னுயிர்ச் சிறுவன் -8-1-3-

628-சத்கீர்த்தி –
உண்மையான புகழ் படைத்தவன் -யதார்த்தமான புகழ் இது
புகழு நல் ஒருவன் -3-4-1
நிகரில் புகழாய் -6-10-10-

629-சின்ன சம்சய –
சம்சயங்களை ஒழிப்பவன் –
நான் கண்டு கொண்டேன் இனி அறிந்தேன் -என்பர் ஆழ்வார்கள்
பார்த்தம் ரதி நம் ஆத்மாநம் சாரதி நம் சர்வ லோக சாஷிகம் சகார -என்பர் எம்பெருமானார்
மாம் -கையும் உளவு கோலும் பிடித்த சிறுவாய்க் கயிறும் சேனா தூளி தூ சரிதமான திருக் குழலும்
தேருக்குக் கீழே நாட்டின திருவடிகளுமாய் இருக்கும் சாரத்திய வேஷம் -இத்தை காட்டி சம்சயங்களை தீர்த்து அருளுகிறான்

———————————————————————–

3-32-அர்ச்சாவதாரம் பரமான திரு நாமங்கள் -630-660-

630-உதீர்ண-
நன்றாக விளங்குபவன் –
கட்கிலீ உன்னைக் காணும் அருளாய் -என்ன காட்டவே கண்டு வாழும் -என்று –
சீலத்தால் –அவதாரங்களால் -தன் திருமேனியைக் காணும்படி விளங்குபவன் –
காட்டித் தன் கனை கழல்கள் கடு நரகம் புகல் ஒழித்த எம்பெருமான் -10-6-1-

631-சர்வதச்சஷூ –
யாவரும் தம் கண்ணால் காணும்படி–இருப்பவன்
குளிரக் கடாஷிப்பவன் என்னவுமாம்
எங்கும் தானாய நாங்கள் நாதன் -1-8-9-

632-அநீச-
ஈசனாய் இல்லாதவன்
தன்னை பக்த பரதந்த்ரனாய் ஆக்கிக் கொண்டு -ஸ்நானம் செய்விக்கவும் பிறர் கையை எதிர் பார்த்து இருப்பவன் –
ஆய்ச்சியாகிய அன்னையால் அன்று வெண்ணெய் வார்த்தையுள் சீற்றமுண்டு அழு கூத்த வப்பன் -6-2-1-

633-சாஸ்வத ஸ்திர-
நிலையாய் நிற்பவன் -நின்ற ஆதிப்பிரான் -4-10-1-
சம்சாரம் கிழங்கு அறும் வரையில் நிலை பெயராமல் நிற்பவன் -எம்பெருமான் –
தீர்த்தம் பிரசாதிக்காமல் –

634-பூசய –
தல சயனத்து உறைவான் –
கடல் மல்லைத் தல சயனத்தான் -ஆஸ்ரித ரஷண அர்த்தமாக நின்றான் இருந்தான் கிடந்தான் என்னும்படி

635-பூஷண-
அலங்காரமாய் விளங்குபவன் -சௌசீல்யம் பரிமாற்றம் பூஷணம்
எம் அழகனார் அணி யாய்ச்சியர் சிந்தையுள் குழகனார் -நாச் -4-10-
குழைந்து இருப்பான் -குழகன்
பல பலவே ஆபரணம் பேரும் பல பலவே –
கிரீட மகுட சூடாவதம்ச க்ரைவேயக ஹார கேயூர கடக
ஸ்ரீ வத்ஸ கௌச்துப முக்தாதாம உதர பந்தன பீதாம்பர காஞ்சி குண நூபுராதி அபரிமித திவ்ய பூஷண-

636-பூதி –
செல்வமாய் உள்ளவன்
சேலேய் கண்ணியரும் பெரும் செல்வமும் நன் மக்களும் மேலாத் தாய் தந்தையும் அவரே -5-1-8-
தனம் மதீயம் த்வ பாத பங்கஜம் –

637-அசோகா -விசோக
சோகம் அற்றவன்
துயரமில் சீர்க் கண்ணன் மாயன் -துக்கமில் ஞானச் சுடர் ஒளி மூர்த்தி -3-10-6/8

638-சோக நாசன –
சோகத்தை ஒழிப்பவன் -ஒரு நாள் காண வாராயே -ஏங்கினாள்
முத்தனார் முகுந்தனார் புகுந்து நம்முள் மேவினார்
எத்தினால் இடர்க் கடல் கிடத்தி ஏழை நெஞ்சமே -திருச்சந்த -115-
என்னுள் இருள் தான் அற வீற்று இருந்தான் -8-7-3-

639-அர்ச்சிஷ்மான்
பேர் ஒளி உடையவன் -திவ்ய சஷூஸ் கொடுத்து காட்ட கொடுப்பான் -அர்ச்சை தேஜஸ் சொல்லவுமாம்
மாயப்பிரான் என் மாணிக்கச் சோதி
செம்பொனே திகழும் திரு மூர்த்தி உம்பர் வானவர் ஆதி அம் சோதி -1-10-9-

640-அர்ச்சித்த –
அர்ச்சிக்கப் படுபவன் -அர்ச்ச்சா ரூபியாக திவ்ய தேசங்கள் க்ருஹங்களில் சேவை –
தமர் உகந்த எவ்வுருவம் அவ்வுருவம் தானே
நெஞ்சினால் நினைப்பான் யவன் அவனாகும் நீள் கடல் வண்ணனே -3-6-9-
தமர் உகந்து எவ்வண்ணம் சிந்தித்து இமையாது இருப்பரே அவ்வண்ணம் ஆழியான் ஆம் -முதல் திருவந்தாதி -44-
செய்ய பரத்துவமாய் சீரார் வியூகமாய் துய்ய விபவமாய் தோன்றி அவற்றுள்
எய்தும் அவர்க்கு இந்நிலத்தில் அர்ச்சாவதாரம் எளிது -திருவாய் நூற்று -26-

641-கும்ப
திவ்ய தேசங்களில் விளங்குபவன் -விரும்பப் படுகிறவன்
அச்சோ ஒருவர் அழகிய வா -பெரிய திருமொழி -9-2-1-
என் அமுதினைக் கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே
போதரே என்று சொல்லித் தன் பால் ஆதாரம் பெருக வைத்த அழகனூர் அரங்கம் அன்றே -திருமாலை
நின்ற ஆதிப் பிரான் நிற்க –

642-விசுத்தாத்மா
தன்னையே ஒக்க அருள் புரிபவன்
தம்மையே நாளும் வணங்கித் தொழுவார்க்குத் தம்மையே ஒக்க அருள் செய்வர் -பெரிய திரு மொழி -11-3-5-

643-விசோதன –
அமலன் -சுத்தியைத் தருபவன்
என் பாவம் தன்னையும் பாறக் கைத்து தன்னை மேவும் தன்மையும் ஆக்கினான் எம்பிரான் விட்டு -2-7-4-

644- அநிருத்த-
வ்யூஹ மூர்த்தி வாஸூ பாண்டம் என்ற ஷேத்ரத்தில் வ்யூஹ வாசுதேவன் சேவை -முன்பே 187 பார்த்தோம்
விண் மீது இருப்பாய் மலை மேல் நிற்பாய் கடல் சேர்ப்பாய் -6-9-5-
திரு வல்லிக் கேணி -வேங்கட கிருஷ்ணன் தன திருக் குமாரன் அநிருத்தன் உடன் சேவை சாதிக்கிறான் –

645-அப்ரதிரத –
ஒப்பில்லாதவன் -ஜனார்த்தனன் –
ஒத்தார் மிக்காரை இலையாய மாயன் -2-3-2-

646-பிரத்யும்ன –
தன்னை பிரகாசிப்பிக்குமவன் -கிட்டினாரை விளங்கச் செய்பவன் –
உலகனைத்தும் விளங்கும் சோதி-பெருமாள் திரு 10-1-
திரு வல்லிக் கேணி -ஸ்ரீ வேங்கட கிருஷ்ணன் தன் பௌதரன் பிரத்யும்னன் உடன் சேவை சாதிக்கிறான் –

647-அமித விக்கிரம
அளவற்ற அடிகளை உடையவன்
தாள்கள் ஆயிரத்தாய் ..பெரிய அப்பனே -8-1-10-
முன்பே 519 பார்த்தோம் -அளவற்ற தேஜஸ் என்னவுமாம்

648-கால நேமி நிஹா –
அவித்யை அளிக்கும் கலி தோஷம் கால சக்கரம் வட்டம் உருவகம்

649-சௌரி
ஸ்ரீ சௌரி பெருமாள் -உத்பதாவதகத்தில் -திருக் கண்ண புரம் சேவை
உத்பலா வதகே திவே விமானே புஷ்கரேஷணம் -சௌரி ராஜம் அஹம் வந்தே சதா சர்வாங்க ஸூந்தரம்
மாலை நண்ணித் தொழுது எழுமினோ வினை கெட –திருக் கண்ண புரத்து
ஆலின் மேலால் அமர்ந்தான் அடி இணைகளே-9-10-1
திருக் கண்ண புரத் தரசே – பெருமாள் திருமொழி –
முன்பே 342 பார்த்தோம்

650-சூர-
எதிரிகளை அழிப்பவர்-
திருச் சித்திர கூடம் தன்னுள் எவ்வரி வெஞ்சிலைத் தடக்கை பிராமன் -பெருமாள் திரு -10-3-முன்பே 341 பார்த்தோம்

651-சூர ஜநேச்வர-
சூரர்களின் தலைவன்
திரள விளங்கு மாருதியோடு அமர்ந்தான் -பெருமாள் திரு -10-10-

652-த்ரிலோகாத்மா –
மூ உலகங்களிலும் சஞ்சரிப்பவன்
விண் மீது இருப்பாய் எண் மீதியன்ற புற வண்டத்தாய் -6-10-5-
மகத தேசத்தில் மஹா போதம் என்னும் மலையில் தேவ தேவனான ஜனார்தனன் லோக நாதன் என்னும்
திரு நாமம் தாங்கி சேவை சாதிக்கிறான்
மலை மேல் நிற்பாய் –

653-த்ரிலோகேச –
உலகம் மூன்று உடையாய்
ப்ராக் ஜோதிஷ புரம் -என்கிற இடத்தில் விஸ்வேஸ்வரன் திருநாமத்துடன் சேவை

654-கேசவ —
துக்கங்களை அழிப்பவன்
வினையேன் வினை தீர் மருந்தானாய் விண்ணோர் தலைவா கேசவா -1-5-6-
கேசவ கேசிஹா லோக -கேசவ க்லேச நாசன
வடமதுரை -வாரணாசி பிந்து மாதவ -கோயில் கொண்டு இருப்பவன்
கேசியைக் கொன்றவன்
முன்பு -23-பார்த்தோம் –

655-கேசிஹா
கேசியை மாய்த்தவன் -குதிரை வடிவில்
மாவாய் பிளந்தானை -கேசவம் கேசி ஹந்தாரம் வியாசர் திரு வாக்கு
கூந்தல் வாய் கீண்டான் -இரண்டாம் திரு -93 லஷணையாகக் கேசியைச் சொல்லிற்று

666-ஹரி –
பச்சை வண்ணன் –
பச்சை மா மலை போல் மேனி பவள வாய் கமலச் செங்கண் அச்சுதன் -திருமாலை -2-
ஹரி-பச்சை நிறம் -பாபங்களை போக்குபவன் யாகங்களில் ஹைவிர் பாகம் பெற்று கொள்பவன்
கோவர்த்தன மலை மேல் ஹரி திரு நாமம் உடன் சேவை

667-காம தேவ –
விரும்பிய வற்றை எல்லாம் அழிப்பவன்
தேவ -தீவ்யாதி -தானத்தைக் குறிக்கும்
இமய மலையில் -சங்கராலயம் ஷேத்ரத்தில் காம தேவன் -என்ற பெயர் உடன் சேவை -அனைத்தையும் கொடுக்கக வல்லன்
சகல பல ப்ரதோஹி விஷ்ணு
எல்லியும் காலையும் தன்னை நினைந்து எழ நல்ல வருள்கள் நமக்கே தந்து அருள் செய்வான் -8-6-1-
கற்பகம் -2-7-11-

658-காம பால
கொடுத்ததை காப்பவன் -பரிபாலிப்பவன்

659-காமீ-
விரும்பத் தக்கவை யாவையும் நிறைந்தவன் –

660-காந்த
யாவராலும் விரும்பப் படுபவன்
கண்டவர் தம் மனம் வழங்கும் என் கரு மணி -பெருமாள் திரு -8-2-முன்பே 297 பார்த்தோம்-

—————————————————————-

3-33-சக்தீசம் அவதார திரு நாமங்கள் 661-664-
பல மந்த்ரங்கள் வெளி இட்ட அவதாரம்

661-க்ருதாகம
ஆகமங்களை உண்டு பண்ணியவன்
சமய நீது நூல் என்கோ -3-6-6-
மீண்டும் 795 வரும்

662-அநிர்தேச்யவபு –
சொல்லித் தலைக் கட்ட முடியாத அநேக திருமேனிகள் கொண்டவன்
திரு வுருவில் கரு நெடுமால் ரேயன் என்றும்
திரேதைக் கண் வளை யுருவாய் திகழ்ந்தான் என்றும்
பெரு வடிவில் கடல் அமுதம் கொண்ட காலம் பெருமானைக் கரு நீல வண்ணன் தன்னை
ஒரு வடிவத் தொரு உரு என்று உணரலாகா -திரு நெடும் -4-

663-விஷ்ணு –
எங்கும் வியாபித்து இருப்பவன்
சிருஷ்டி -அந்தர் பிரவேசம் -வ்யாப்தி -நியமனம் -நான்கும் உள்ள சகதீசன் -சர்வ சகத் யாத்மனே
என்னைக் கொண்டு என் பாவம் தன்னையும் பாறக் கைத்து —எம்பிரான் விட்டுவே -2-7-4-
முன்பே 2-259-பார்த்தோம் –

664-வீர
வீரன்
வெங்கதிரோன் -குலத்துக்கு ஓர் விளக்காய் தோன்றி
விண் முழுதும் உய்யக் கொண்ட -வீரன் -பெருமாள் திரு -10-9-
சங்கோடு சக்கரம் உலக்கை ஒள் வாள் தண்டு கொண்டு புள்ளூர்ந்து உலகில்
வன்மையுடைய அரக்கர் அசுரரை மாளப் படை பொறுத்த நன்மை உடையவன் -3-10-1-
அன்று இலங்கை நீறு செய்து சென்று கொன்று வென்றி கொண்ட வீரனார் -திருச் -116-

————————————————————————

3-34-எல்லை அற்ற குண விபூதிமான் -பரமான – திரு நாமங்கள் -மனத்தாலும் செயலாலும் ஆராதிக்கப் படுக்கை-665-683

665-அநந்த –
எல்லை அற்றவன் -தேச கால வஸ்து பரிச்சதம் இல்லாமல்
சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம-
இன்பம் அளவிறந்து எங்கும் அழகு அமர் சூழ் ஒளியன்-3-10-8-
அந்தமில் புகல் அநந்த புர நகராதி -10-2-7-
கணக்கறு நலத்தனன் அந்தமில் ஆதி அம் பகவன் -1-3-5-
முன்பே -402-பார்த்தோம்-

666-தனஞ்ஜய –
உலக ஐஸ்வர்யங்களுக்கு மேலானவன் -யாவும் புல் எனத் தோற்றும்
எனக்கு தேனே பாலே கன்னலே அமுதே -சர்வ ரச- சர்வ கந்த
கோலமே தாமரைக் கண்ணது ஓர் அஞ்சன நீலமே நின்று யெனதாவியை ஈர்க்கின்ற சீலமே
உன்னை மெய் கொள்ளக் காண விரும்பும் எண் கண்களே -3-8-4-

667-ப்ரஹ்மண்ய-
பெரியவைகளுக்கு காரணன் -அனுகூலன் -செல்வர் பெரியார்

668-ப்ரஹ்மக்ருத் ப்ரஹ்மா –
பிரமனைப் படைக்கும் பெரியோன்
தேவும் எப்பொருளும் படைக்க பூவில் நான் முகனைப் படைத்த தேவன் எம்பெருமான்-2-2-1-

669-ப்ரஹ்ம
பரமாத்மா –
தானே எங்கும் உளன் -தன குணங்களால் எங்கும் உளன் –
தன் சங்கல்பத்தால் மற்ற பொருள்களை பெருமை உடையவளாக பண்ணும்
ஸ்வரூப ரூப குண விபூதி சேஷ்டிதங்களால் பெரியவன்
எங்கும் உளன் கண்ணன் -ஆற்றல் மிக்கான் பெரிய பரம் சோதி புக்க அரி -7-6-10-

670-ப்ரஹ்ம விவர்த்தன –
தர்மத்தை வளரச் செய்பவன்
சிந்தனையை தவ நெறியை திருமாலை அந்தணனை -பெரிய திருமொழி -5-6-7-

671- ப்ரஹ்ம வித்
வேதங்களை உள்ளபடி அறிந்தவன் -அனந்தாவை வேதா
பண்டைய வேதங்கள் நான்கும் கண்டான் -பெரிய திருமொழி -2-5-9-
பண்டை நான் மறையும் வேள்வியும் கேள்விப் பதங்களும் பதங்களின் பொருளும் தானே நின்ற எம்பெருமான் -பெரிய திரு மொழி -5-7-1-

672-ப்ராஹ்மண-
வேதத்தை கற்ப்பிப்பவன்
கலைகளும் வேதமும் நீதி நூலும் கற்பமும் சொற் பொருள் தானும்
வானவர்க்கும் பிறர்க்கும் நீர்மையினால் அருள் செய்தான் -பெரிய திருமொழி -2-8-5-

673-ப்ரஹ்மீ-
பிரமாண பிரமேயங்களை உடையவன் -சர்வம் ப்ரஹ்மமயே ஹரி –
பொழில் வேங்கட வேதியன் -பெரிய திருமொழி -1-10-10-

674-ப்ரஹ்மஜ்ஞ்-
வேதங்களை அறிந்தவன்
சந்தோகா பௌழியா சாமவேதி
உளன் சுடர் மிகு சுருதியுள்
இவர் வாயில் நல வேதம் ஓதும் வேதியர் வானவர் ஆவர் -பெரிய திருமொழி -9-2-1-

675-ப்ராஹ்மண ப்ரிய
வேதம் வல்லார்கலான பிராமணர்களை நேசிப்பவன்
அந்தணர் தம் சிந்தையான் -திரு நெடு -14-

இது வரை ப்ரஹ்ம சப்த வாக்ய பெருமை பேசப் பட்டது
மேல் மஹதோ மஹீயான் -பராத்பரம் யன் மஹதோ மஹாந்தம் –
மஹத பரமோ மஹான் -சுருதி வாக்யங்களில்-சொல்லும் பெருமை பேசப்படும்
676-மஹாக்ரம –
சேதனரை படிப்படியாக உஜ்ஜீவிப்பவன் –
ஆற்ற நல் வகை காட்டும் அம்மான் -4-5-5-
நெறி வாசல் தானேயாய் நின்றான் -கிருஷி பலமாக அருளுகிறான்

677-மஹா கர்மா –
சிறந்த செயல்களை உடையவன் -மாயன்
சராசரம் முற்றவும் நற்பாளுக்கு உய்த்தனன் -7-5-1-
மேலும் -793 வரும்

678-மஹா தேஜ –
மேலான தேஜஸ் உடையவன் -நாராயண பரஞ்சோதி
வீழ்விலாத போக மிக்க சோதி -சோதியாத சோதி நீ -திருச்சந்த -18/34-

679-மஹோரக –
உட் புகும் பெரியோன்
எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே இமையோர் அதிபதியே -6-10-3-
வந்தாய் எண் மனம் புகுந்தாய் மன்னி நின்றாய் நந்தாத கொழும் சுடரே எங்கள் நம்பி -பெரிய திருமொழி -1-10-9-
முத்தனார் முகுந்தனார் புகுந்து தம்முள் மேவினார் எத்தினால் இடர்க்கடல் கிடத்தி ஏழை நெஞ்சமே -திருச்சந்த -15-
வந்து அருளி என் நெஞ்சு இடம் கொண்ட வானவர் கொழுந்தே -5-7-7-

680-மஹாக்ரது
ஆராதனைக்கு எளியவன்
பத்துடை அடியவர்க்கு எளியவன்
எளிவரும் இயல்வினன் -1-3-1-
ஈசனைப் பாடி நன்னீர் தூய புரிவதும் புகை பூவே -1-6-1-

681-மஹா யஜ்வா
ஆராதிப்பவர்களை சிறப்பூட்டுபவன்
வந்தனை செய்து ஐந்து வளர் வேள்வி நான் மறைகள் மூன்று தீயும் சிந்தனை செய்திரு பொழுதும் ஒன்றும் -பெரிய திருமொழி -2-10-2-

682-மஹா யஜ்ஞ-
உயர்ந்த பூஜைக்கு உரியவன்
செய்த வேள்வியர் வையத் தேவரான சிரீவர மங்கல நகர் கை தொழ விருந்தான் -5-7-5-

683-மஹா ஹவி
சிறந்த ஹவிசை பெறுபவன் -ஆத்ம சமர்ப்பணம்
எனதாவி தந்து ஒழிந்தேன் -எனதாவி ஆர் யானார் தந்த நீ கொண்டாக்கினையெ -2-3-4-
அஹம் அதைவ மயா சமர்ப்பித -ஆளவந்தார்

——————————————

3-35-வாத்சல்ய குண பெருக்கு-வாக்காலே ஆராதிக்கப் படுக்கை -684-696-திரு நாமங்கள்

684-ஸ்தவ்ய –
துதிக்கத் தக்கவன் -குற்றம் அற்றவன் -குண பூரணன்
நித்யம் நிரவதிகம் நிரவத்யம்
சிந்தையினால் சொல்லினால் செய்கையால் நிலத் தேவர் குழு வணங்கும் தீர்த்தன் -7-10-10-

685-ஸ்தவ ப்ரிய –
ஸ்துதியை பிரியத்துடன் ஏற்பவன் -சிசுபாலன் -கண்டா கர்ணன்
எங்கனே சொல்லிலும் இன்பம் பயக்குமே -7-9-11-
கன்றிழந்த தலை நாகு தோற் கன்றுக்கும் இரங்குமா போலே –
கையார் சக்கரத்து என் கரு மாணிக்கமே என்று என்றே பொய்யே கைம்மை சொல்லி மெய்யே பெற்று ஒழிந்தேன் -5-1-1-

686-ஸ்தோத்ரம் –
ஸ்துதி யாய் இருப்பவன் -ஸ்தோத்ரமும் அவன் அருளால்
பண்ணார் பாடலின் கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடினான் -10-7-5-
என் நா முதல் வந்து புகுந்து நலிந்கவி சொன்ன என் வாய் முதல் அப்பன் -7-3-4-

687-ஸ்துத
துதிக்கப் படுபவன்
சோதியாகி எல்லா உலகும் தோலும் ஆதி மூர்த்தி -3-3-5-

688-ஸ்தோதா
தன்னை துதிப்பாரை புகழ்பவன்
நாத்தழும்ப நான் முகனும் ஈசனும் முறையால் ஏத்த
நமோ கண்டாய கரணாய நாம கட படா யச -ஸ்தோத்ரம் பண்ணி அறியாத வாயானவாறே மீன் துடிக்கிற படி பாராய் -ஈடு

689-ரணப்ரிய
ஆஸ்ரித விரோதிகளை யுத்தம் செய்து முடித்து மகிழ்விப்பவன்
கொள்ளா மாக்கோல் கொலை செய்து -பார்த்தன் தன் தேர் முன் நின்றான்

690-பூர்ண
நிறைந்தவன் -அவாப்த சமஸ்த காமன்
கண்டவாற்றால் தனதே உலகு என நின்றான் -4-5-10-
என்றும் ஒன்றாகி ஒத்தாரும் மிக்காரும் தனக்கன்றி நின்றான்
எல்லா உலகும் உடையான் -4-5-7-

691-பூரயிதா
நிறைந்தவன்
எனக்கே தன்னைத் தந்த கற்பகம்

692-புண்ய
புண்ணியன் புனிதம் ஆக்குபவன்
உன் தன்னைப் பிறவி பெரும் தனிப் புண்ணியம் யாம் உடையோம்
யாவர்க்கும் புண்ணியம் -6-3-3-
அநந்தன் மேல் கிடந்த புண்ணியா -திருச்சந்த -45-
மேலும் 925 வரும்

693-புண்ய கீர்த்தி
புண்யமான கீர்த்தனை உடையவன்
மாயனை தாமோதரனை வாயினால் பாட போய பிழையும் புகு தருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்

694-அநாமய
பெரும் பிணியைப் போக்குமவன்
ஆமயம் =வியாதி ரோகம்
நண்ணியும் நண்ண கில்லேன் நாடுவோ யோர் உடம்பிலிட்டு-வினை தீர் மருந்து -7-1-4-

695-மநோ ஜவ
மநோ வேகத்தில் செயல் -பகவத் ஸ்த்வராயை நம
கடிவார் தீய வினைகள் நொடியாரும் அளவைக் கண் –மாதவனாரே-1-6-10-

696-தீர்த்தகர
தூய்மைப் படுத்துமவன்-
கரம் நான்கு உடையான் பேரோதிப் பேதைகாள் தீர்த்த கரராமின் திரிந்து -இரண்டாம் திரு -14-
தீர்த்தங்கள் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார்களை தேவர் வைகல்
தீர்த்தங்களே என்று பூசித்து நல்கி யுரைப்பார் -7-9-11-
தீர்த்தன் உலகு அளந்த சேவடி -2-8-6-

————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பீஷ்மர் திருவடிகளிலே சரணம்
ஸ்ரீ வியாச பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: