ஸ்ரீ பகவத் குண தர்ப்பணம் —697–786 -அருளிச் செயல் சந்தை அமுதம் -சேர்த்தி அனுபவம் -ஸ்ரீ Dr. V. V.ராமானுஜம் ஸ்வாமிகள்

4-கிருஷ்ணாவதார திரு நாமங்கள் -697-786

697-வஸூரேதா
தேஜஸ் ஸே கர்ப்பம் ஆனவன் -வ ஸூ =எம்பெருமான் தேஜஸ்
தேவகி பூர்வ சந்த்யாயாம் ஆவிர்பூதம் மஹாத்மனா
ஜன்ம கர்ம மே திவ்யம்
ஆதி அம் சோதி யுருவை அங்கு வைத்து இங்கு பிறந்த வேத முதல்வன் -3-5-5-
அவதார ரகசியம் அறிந்தால் மோஷம் சித்தம் கீதாசார்யன் திரு வாக்கு

698- வஸூ ப்ரத –
நிதியான தன்னைத் தருபவன் -வ ஸூ =நிதி
வாசுதேவ தேவகிகளுக்கு தானே புத்ரனாக உபகரித்தான்
நந்த கோபன் யசோதை களுக்கும் இந்த நிதியை ஆக்கி வைத்தான்
எடுத்த பேராளன் நந்த கோபன் தன இன்னுயிர் சிறுவனே -8-1-3-
எனக்கு தன்னைத் தந்த கற்பகம் –

699- வஸூ ப்ரத
பெரும் புகழைத் தந்தவன் -வஸூ தேஜஸ்
தன் பிரஜைகளில் ஒருவரை தனக்கு பிதாவாகக் கொண்டு தான் தகப்பன் உடையவன் ஆகிறான்
எல்லையில் சீர்த் தசரதன் தன் மகனாய்த் தோன்றினான் -பெருமாள் திரு-10-11-

700- வாஸூ தேவ
வஸூதேவ புத்திரன் -பிறந்து பெற்ற பெயர் -தாசரதி போலே
எங்கும் உளன் கண்ணன் -வ்யாப்தியை
மல் பொரு தோளுடை வாசுதேவா -பெருமாள் திரு-6-6-
முன்பே 333 பார்த்தோம்

701-வஸூ
வசிப்பவன் -லோக ஹிததுக்காக ஷீராப்தி
பாற்கடலில் பையத் துயின்ற பரமன்
பயில விநிய நம் பாற்கடல் சேர்ந்த பரமன் -3-7-1
ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதன நாக பர்யங்க முத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம் -ஹரி வம்சம் –
முன்பே 105/271 பார்த்தோம்

702-வ ஸூ மநா-
வசுதேவர் இடத்தில் மனம் வைத்தவன்
முன்பே 106 பார்த்தோம்

703-ஹவி –
கொடுக்கப் பட்டவன் -விருந்து -நந்த கோபர் இடம் –
வேண்டித் தேவர் இரக்க வந்து பிறந்து –அன்று அன்னை புலம்பப் போய் அங்கு ஓர் ஆய்க்குலம் புக்கான் -6-4-5
மகா ஹவி -683 பார்த்தோம்

704-சத்கதி
சத்துக்களுக்கு புகல்-இடையர்களுக்கு -தந்தை கால் விலங்கற-
சம்சார பந்தம் முடிக்க
பற்றிலார் பற்ற நின்றான் -7-2-7-நிவாச வ்ருஷஸ் சாதுநாம் ஆபன்னாம் பராகதி

705-சத் க்ருதி –
ஆச்சர்யமான செயல்களை செய்பவன் -ஜன்ம கர்ம மே திவ்யம்
குரவை ஆய்ச்சியரொடு கோத்ததும் குன்றம் ஓன்று ஏந்தியதும் உறவு நீர்ப் பொய்கை நாகம் காய்ந்ததும் உட்பட மற்றும் பல -6-4-1-
மண் மிசை பெரும்பாரம் நீங்க ஓர் பாரத மா பெரும் போர் பண்ணி மாயங்கள் செய்து -6-4-10-
இந்த சேஷ்டிதங்களை- சொல்லியும் நினைந்தும் மோஷம் பெறுவார்

706-சத்தா –
உலகின் இருப்புக்கு காரணமாய் உள்ளவன்
நன்றாக நான் உன்னை அன்றி இலேன் கண்டாய் -நாராயணனே நீ என்னை அன்றி இல்லை -நான் முகன் -7-
என் விளக்கு என் ஆவி -1-7-5-

707-சத்பூதி
சாதுக்களின் ஐஸ்வர்யம் -பூதி விபூதி நிதி ஐஸ்வர்யம்
நந்தகோபன் குமரன் -அர்ஜுனன் தோழன் -பாண்டவ தூதன் -குந்திக்கு பந்து -அஹம்வோ பாந்தவவோ ஜாத-
வைத்த மா நிதி -6-7-1-
எய்ப்பினில் வைப்பினை காசினை மணியை -7-10-4-
சேலேய் கண்ணியரும் பெரும் செல்வமும் நன்மக்களும் அவரே இனி ஆவார் -5-1-8-

708-சத் பராயண –
சத்துக்களுக்கு புகலாய்-அயநம் ஆஸ்ரயம்
கிருஷ்ணாஸ்ரய கிருஷ்ண பலா கிருஷ்ண நாதாச்ச –
புகல் ஒன்றில்லா அடியேன் உன்னடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே -6-10-10-
அடிக்கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின் என்று அருள் கொடுக்கும் பெருமான் -6-10-1-
நன்றாக நான் உன்னை அன்றி இலேன் கண்டாய் நாரணனே -நான் முகன் -7-
மம ப்ராணாஹி பாண்டவா –ஜ்க்னானீது ஆத்மைவ மே மதம்
நாரணனே நீ என்னை அன்றி இல்லை -நான் முகன் -7-

709-சூரா சேன –
சூரர்களை சேனையாக உடையவன்
ஒரு பாரத மா பெரும் போர் பண்ணி சேனையைப் பாழ் பட நூற்றிட்ட சோதி நாதன் -6-4-7-

710-யதுஸ்ரேஷ்ட-
ஆயர் குலத்தை வீடுய்யத் தோன்றிய கரு மாணிக்கச் சுடர் -6-2-10-

711-சந்நிவாச –
சத்துக்களுக்கு வாசஸ் ஸ்தானம் -ஆபன்னாம் பராகதி
ஆயர் புத்திரன் அல்லன் அரும் தெய்வம் -பெரியாழ்வார் -1-1-7-
சிவன் அயன் இந்திரன் இவர் முதல் அனைத்தோர் தெய்வக் குழாங்கள் கை தொழக் கிடந்த தாமரை யுந்தியான் -திருவாசிரியம்

712-ஸூயாமுந-
யமுனைத் துறையில் விளையாட்டுகளில் ஈடு பட்டவன் ஸூ -சோபனம் பாவனம்
தூய பெரு நீர் யமுனைத் துறைவன்

713-பூதா வாஸ –
பூ சத்தாயாம் -பூதா நாம் ஆதார
பஸ்யாமி தேவாம் ஸ்தவ தேவ தேஹே சர்வாம்ச்ததா பூத விசேஷ சங்கான் -ஸ்ரீ கீதை 11-15-
மயி சர்வமிதம் ப்ரோதம் ஸூத்ரே மணிகணா இவ -ஸ்ரீ கீதை -7-7-
உயிர் கள் எல்லா உலகும் உடையவன் -3-2-1-

714-வா ஸூ தேவ –
வாசுதேவ புத்திரன் -த்வாதச மந்திர ப்ரவர்த்திப்பிதவன்
கம்சாதிகளுக்கு ம்ருத்யு -மதுரா நகர் பெண்களுக்கு மன்மதன் -வசுதேவாதிகள் குழந்தை யோகிகளுக்கு பரதத்வம்
கூசி நடுங்கி யமுனை யாற்றில் நின்றேன் வாசுதேவா உன் வரவு பார்த்தே -பெருமாள் திரு -6-1-
முன்பே 334-700 பார்த்தோம்

715-சர்வா ஸூ நிலய –
சர்வ வஸ்து தாரகன் -ஐந்தும் ஐந்தும் ஐந்துமாகி நின்ற ஆதி தேவனே -திருச்சந்த -3-
பார் உருவில் நீர் எரி கால் விசும்பாகிப் பல்வேறு சமயமுமாய்ப் பரந்து நின்ற எம்மடிகள் -திருநெடு -2-

716-அநல-
திருப்தி பெறாதவன் -உன் அடியார்க்கு என் செய்வன் என்றே இருத்தி நீ -பெரிய திரு-53-

717-தர்ப்பஹா –
கர்வத்தை அடக்குபவன் -இந்த்ரன் -வாணாசுரன்
கார்திகையானும் –வாணன் ஆயிரம் தோள் துணித்தவன்

718-தர்ப்பத
மதம் தருமவன்
யாதவர்களை த்வாரகையில் வைத்து காத்து ஐஸ்வர்யம் தந்து மதம் ஏற்றி
இதனால் தங்களையே அழித்துக் கொண்டனர்

719-அத்ருப்த –
கர்வம் அற்றவன் -நந்த கோபன் குமரன் -த்ருப்த -யசோதை இளம் சிங்கம் மேனாணிப்பு
நந்த கோபன் தன இன்னுயிர்ச் சிறுவன் அசோதைக்கு அடுத்து பேரின்பக் குல விளம் களிறு -8-1-7-

720-துர்த்தர –
அடக்க முடியாதவன்
யசோதைக்கு இளம் சிங்கம்
கறந்த நல் பாலும் –பெற்று அறியேன்
நின் திறத்தேன் அல்லேன் நம்பி

721-அபராஜித –
வெல்ல முடியாதவன்
பற்ப நாதன் உயர்வற யுயரும் பெரும் திறலோன் -2-7-11-
யத்ர யோகேஸ்வர கிருஷ்ண தத்ர ஸ்ரீர் விஜயோ பூதி -ஸ்ரீ கீதை
அன்று ஐவரை வெல்வித்த மாயப் போர்த் தேர்ப் பாகனார் -4-6-1-

722-விஸ்வ மூர்த்தி –
ஜகத்தை சரீரமாக யுடையவன் –
அஹமாத்மா குடாகேச சர்வ பூதா சயஸ்தித-ஸ்ரீ கீதை -10-19-
உலகமாய் உலகுக்கே ஓர் உயிர் ஆனாய் -6-9-7-
முன்பே 697 வஸூரேதா பார்த்தோம்

723-மஹா மூர்த்தி –
பெரிய திரு வுருவம் படைத்தவன்
வையம் ஏழும் கண்டாள் பிள்ளை வாயுளே -ஆயர் புத்தரன் இல்லை அரும் தெய்வம் –
ஸ்வரூபம் சங்கல்ப ஞானம் திரு மேனி -மூன்றாலும் பெரியவன்
நந்தா விளக்கே அளத்தற்கு அரியாய் -பெரிய திரு மொழி -3-8-1-

724-தீப்த மூர்த்தி –
தேஜோ மயமான வுருவு படைத்தவன்
நந்தாத தொழும் சுடரே எங்கள் நம்பீ -பெரிய திருமொழி -1-10-9-
ஒழி மணி வண்ணன் -3-4-7-

725-அமூர்த்திமான் –
சூஷ்மமான உருவை உடையவன்
திசை பத்தாய் அருவேயோ -6-9-7-
தொல்லை நன்னூலில் சொன்ன உருவும் அருவும் நீ -7-8-10-
ஒன்றலா உருவாய் அறுவாய நின் மாயங்கள் -5-10-6-

726-அநேக மூர்த்தி
பல வுருவங்களை யுடையவன் –பெரும் பல பலவே -பல பலவே சோதி வடிவு -2-5-6-
கோபிகள் ராசக் கிரீடை -அங்கனாம்

727-அவ்யக்த –
காண முடியாதவன் –
காணலும் ஆகான் -கருத்தின் கண் பெரியன் -சிந்தைக்கும் கோசரம் அல்லன் -1-9-6-
பிறர்களுக்கு அரிய வித்தகன் –
யாரும் ஓர் நிலைமையன் என அறி வரிய எம்பெருமான் -1-3-4-

728-சத மூர்த்தி
எண்ணிலா உருவங்களை யுடையவன்
பஸ்யமே பார்த்த ரூபாணி சதசோத சஹச்ரச -ஸ்ரீ கீதை -11-5-
ஏக மூர்த்தி இரு மூர்த்தி மூன்று மூர்த்தி பல மூர்த்தி யாகிய நாராயணன் -4-3-3-

729-சதா நன-
அநேக திரு முகங்கள்
தோள்கள் ஆயிரத்தாய் முடிகள் ஆயிரத்தாய் -துணை மலர்க் கண்கள் ஆயிரத்தாய்
தாள்கள் ஆயிரத்தாய் பேர்கள் ஆயிரத்தாய் தமியனேன் -பெரிய வப்பனே -8-1-10-

730-ஏக –
ஒருவன் -அத்விதீயம் –
அரக்கரை உருக்கேட வாளி பொழிந்த ஒருவனே -8-6-2-
அந் நலனுடை யொருவன் -1-1-3-
எந்தை ஏக மூர்த்தி
ஒண் சங்கதை வாள் ஆழியான் ஒருவன் -8-8-1

731-நைக-
பலவாக -தீயாய் நீராய் நிலனாய் காலாய் நெடு வானாய் சீரார் சுடர்கள் இரண்டாய் சிவனாய் அயனானாய் -6-9-1
நா சந்தோஸ்தி மம திவ்யாநாம் விபூதிநாம் பரந்தப

732-ஸ-
அவன் -ஞானத்தை உண்டு பண்ணுமவன்-
அவனே யவனும் அவனும் அவனும் அவனே மற்று எல்லாமும் அறிந்தனமே -9-3-2-

733-வ
வசிப்பவன் -எங்கும் உளன் கண்ணன் -2-8-9-
ஒளி வரும் இயல்வினன் -1-3-2-
கரந்த சில் இடம் தொறும் இடம் திகழ் பொருள் தொறும் கரந்து எங்கும் பரந்து உளன் -1-1-10-

734-க –
பிரகாசிப்பவன் -அந்தராத்மாவாக இருந்தாலும் தோஷம் தட்டாமல்

735-கிம் –
எது -பரம் பொருள் -விசாரிக்கத் தக்கவன் –
கற்கும் கல்விச் சாரமும் யானே -5-6-2-

736-யத் –
யத்னம் பண்ணுபவன் -அஹம் ஸ்மராமி மத பக்தம் நயாமி பரமாம் கதிம்
இசைவித்து என்னை யுன் தாளிணைக் கீழ் இருத்தும் அம்மானே -5-8-9-

737-தத் –
தூண்டி அதிகப் படுத்துபவன் –ஞான சக்திகளை விஸ்தரிக்க பண்ணுபவன்
ஓம் -தத் -சத் -ப்ரஹ்ம லஷணம்-தத் சவிதுர் வரேண்யம் –
செய்வார்களைச் செய்வேனும் யானே -5-6-4-

738-பதம் அநுத்தமம்-
மேலான ப்ராப்யம்
நின் செம்மா பாத பற்புத் தலை சேர்த்து ஒல்லை அம்மா அடியேன் வேண்டுவது ஈதே -2-9-1-
அளிக்கும் பரமன் கண்ணன் ஆழிப் பிரான் -3-7-6-

739-லோக பந்து
சமோஹம் சர்வ பூதேஷு –
உன் தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
நான் உன்னை அன்றி இலேன் கண்டாய் நாரணனே நீ என்னை அன்றி இல்லை
என்னைப் பெற்ற அத்தாயாய்த் தந்தையாய் அறியாதன அறிவித்த அத்தா -2-3-2-
தாயாய்த் தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய் நீயாய் நீ நின்ற மாயன் -7-8-1-
மாதா பிதா ப்ராதா நிவாஸ சரணம்கதி -ஸூ பால உபநிஷத்

740-லோக நாத
சர்வ ஸ்வாமி -ரஷகன் –
இவ் வேழ் உலகை இன்பம் பயக்க இனிதுடன் வீற்று இருந்து ஆள்கின்ற எங்கள் பிரான் -7-10-1-
ஞாலத்தூடே நடந்தும் நின்றும் கிடந்தும் இருந்தும் சாலப் பல நாள் உகந்து ஓர் உயிர் காப்பான் -6-9-3-
உலகம் மூன்று உடையாய் என்னை ஆள்வானே -6-10-10-

741-மாதவ
லஷ்மி வல்லபன் -மலர்மகளுக்கு அன்பன் -திரு மகளார் தனிக் கேள்வன் -வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை –
அகலகில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பன்
ம் -மௌநம் –த-த்யானம் –வ -யோகம் -இவற்றால் சாஷாத் கரிக்கப் படுமவன்

742-பக்த வத்சல-
நிகரில் புகழாய்-6-10-10-வாத்சல்யம்

743-ஸூ வர்ண வர்ண –
பொன் வண்ணன்
இன்பப் பாவினைப் பச்சைத் தேனைப் பைம் பொன்னை அமரர் சென்னிப் பூவினை -திருக் குறும் -6-
மற்று ஒப்பாரி இல்லா ஆணிப் பொன்னே -திரு விருத்தம் -85-
பொன்னின் வண்ணம் மணியின் வண்ணம் புரையும் திரு மேனி -பெரிய திரு மொழி -4-9-8-

744- ஹேமாங்க-
பொன் மேனியன் -சுத்த சத்வமயம் ஹிரண்மய புருஷ
பொன்னானாய் இமையோர்க்கு என்றும் முதலானாய் -திரு நெடும் -10-

745-வராங்க
விலஷணமான திரு மேனி –
கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண்ணினையும் அரவிந்தம் அடியும் அகத்தே -திரு நெடு -21-
கண் கை கால் தூய செய்ய மலர்களாச் சோதி செவ்வாய் முகிழதா சாயல் திரு மேனி தண பாசடையா தாமரை நீள் வாசத் தடம் -8-5-1-
கொண்டல் வண்ணன் சுடர் முடியன் நான்கு தோளன் -8-8-1-

746-சந்த நாங்கதீ-
அழகிய திவ்ய பூஷணங்கள் அணிந்தவன்
தயரதன் பெற்ற மரகத மணித்தடம் -ஆபரணங்களுக்கு அழகூட்டும் பெருமாள்
பல பலவே ஆபரணம் -2-5-9’கண்கள் சிவந்து –சுடர் இலகு விலகு மகர குண்டலத்தன் -8-8-1-

747-வீரஹா
வீரர்களை மாய்த்த பேறு வீரன்
பேய் முலை உண்டு -=களிறட்ட தூ முறுவல் பிரான் -5-3-8-
வெந்திறல் வீரரின் வீரர் ஒப்பார் -பெரிய திருமொழி -2-8-2-

748-விஷம
வேறுபட்ட செயல்களை செய்பவன்
பவித்ராணாம் இத்யாதி
என் பொல்லாத் திருக் குறளா செய்குந்தா வரும் தீமை உன்னடியார்க்குத் தீர்த்து அசுரர்க்கு தீமைகள் செய்குந்தா -3-6-1-

749-சூன்ய
தோஷம் அற்றவன்
தீதில் சீர் திரு வேங்கடத்தான் -3-3-5-
துயரமில் சீர் கண்ணன் மாயன் -3-10-6-

750-க்ருதாசீ
எல்லாரையும் உகப்பிப்பவன்
க்ருதம்- நெய்
நெய் யுண் வார்த்தையுள் –எண்ணும் தோறும என் நெஞ்சு எரி வாய் மெழுகு ஒக்கும் -5-10-3/5-

751-அசல –
அசைக்க முடியாத ஸ்த்திரமானவன்
நீர்மையில் நூற்றுவர் வீய ஐவர்க்கு அருள் செய்ய நின்று பார் மல்கு சேனையை அவித்த பரஞ்சுடர் -3-5-7-

752-சல
மாறுபவன் -ஆஸ்ரிதர்க்கு தன்னைத் தருபவன் ஆஸ்ரித பஷ பாதி -ஆயுதம் ஏடன்
மாறு சேர் படை நூற்றுவர் மங்க ஓர் எஇவர்க்காய் அன்று மாயப்போர் பண்ணி நீறு செய்த எந்தை -5-7-4-

753-அமாநீ–
மானம் இல்லாதவன் -ஸ்வ அபிமானம் என்ற கர்வம் அற்றவன் —
மாசுடம்பில் நீர் வாரா மானமிலா பன்றியாம் தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார் -நாச் -11-8-
கழுத்தில் ஓலை கட்டித் தூது போனவன் –
அவன் பின்னோர் தூது ஆதி மன்னவர்க்காகி பெரு நிலத்தார் இன்னார் தூதன் என நின்றான் -பெரிய திரு மொழி -2-2-3-
பற்றாளர் வீயக் கொள் கையில் கொண்டு பார்த்தன் தன தேர் முன் நின்றான் -2-3-1-
நாடுடை மன்னர்க்குத் தூது செல் நம்பி -6-6-4-

754-மாநன –
கௌரவம் அளிப்பவன் –
எடுத்த பேராளன் நந்த கோபன் தன இன்னுயிர் சிறுவன் -8-1-3-
ஏன் நெஞ்சு நிறையக் கை கூப்பி நின்றார் -பெரிய திருமொழி -7-5-8-

755-மான்ய –
வெகுமானிக்கத் தக்கவன்
பக்தர்களைக் கை விடாதவன்

756- லோக ஸ்வாமி –
கண்ட வாற்றால் தனதே உலகு என நின்றான் –
மூ உலகாளி-7-2-10-
ஒத்தாரும் மிக்கார்களும் தனக்கின்றி நின்றான் -எல்லா உலகும் உடையான் -4-5-7-

757- த்ரி லோகத்ருத்-
மூ உலகங்களையும் தரிப்பவன்
நீயே உலகு எல்லாம் நின்னருளே நிற்பனவும் -நான் முகன் -29-

758-ஸூ மேதா –
நல் எண்ணம் உடையவன்
அருதித்துப் பல நாள் அழைத்தேற்கு–என் தன் கருத்தை யுற வீற்று இருந்தான் -8-7-1-

759-மேதஜ-
வ்ரதத்தின் பயனாகப் பிறப்பவன்
அதிதி பயோவ்ரதம் அனுஷ்டித்து வாமனன்
தசரதன் புத்திர காமேஷ்டி -பெருமாள்
எல்லையில் சீர் தயரதன் தன் மகனாய்த் தோன்றிற்று -பெருமாள் திரு -11-10-

760-தன்ய
சம்பத்து உள்ளவன் –
செப்பில மென்முலைத் தேவகி நங்கைக்கு சொப்படத் தோன்றிய -பெரியாழ்வார் -2-1-6-

761-சத்ய மேதா –
உண்மையான எண்ணம் உடையவன்
ஆத்மானம் மானுஷம் மன்யே ராமம் தசரதாத்மஜம் –

762-தராதர –
குன்றம் ஏந்தியவன் -6-4-3-
கல்லெடுத்துக் கல்மாரி காத்தான் -திரு நெடும் -13-
திறம்பாமல் மலை எடுத்தேனே -5-6-5
கடுங்கல் மாரி கல்லே பொழிய நெடும் காற்குன்றம் குடை ஓன்று ஏத்தி நிறையைக் காத்தான் -பெரிய திருமொழி -6-10-8-
பெரியாழ்வார் திருமொழி 3-5-

763-தோஜோவ்ருஷ-
தேஜஸ்சை வர்ஷிப்பவன்
வளரொளி ஈசன் கிளரொளி மாயன் கண்ணன் -3-10-10-
புகர் கொள் சோதிப் பிரான் -6-4-3-

764-த்யுதிதர
அதி மானுஷமான திவ்ய சக்தி யுடையவன்
மாயக் கோலப் பிரான் -6-4-1
கண்டவாற்றால் தனதே உலகு என நின்றான்

765-சர்வ சஸ்திர ப்ருதாம் வர –
ஆயுத பாணிகளில் தலை சிறந்தவன்
தடவரைத் தோள் சக்கரபாணி சாரங்க வில் சேவகனே –நேமி நெடியவனெ -பெரியாழ்வார் -5-4-5-
பொங்கேறு நீள் சோதி பொன்னாழி தன்னோடும் சங்கேறு கோலத் தடக்கைப் பெருமான் -பெரிய திருமொழி -6-8-9-
கொடு வினைப் படைகள் வல்லவன் -9-2-10-

766-ப்ரக்ரஹ
அடக்கி நடத்துபவன்
கொல்லா மாக்கோல் கொலை செய்து பாரதப் போர் எல்லாச் சேனையும் இரு நிலத்தவித்த எந்தை -3-2-3-

767-நிக்ரஹ
எதிரிகளை வீயச் செய்தவன்
போர்ப்பாகு தான் செய்து அன்று ஐவரை வெல்வித்த மாயப் போர்த் தேர்ப் பாகனார் -4-6-1-
சித்திரத் தேர் வலவன் -7-8-3-

768-நைகச்ருங்க-
அநேக உபாயங்களால் பகைவரை மாய்த்தவன்
பகலை இரவாக்கி -ஆயுதம் எடேன் –
மாயங்கள் செய்து சேனையைப் பாழ் பட நூற்றிட்டு -உபாயங்கள் செய்து

770-கதாக்ரஜ
கதனுக்கு முன் பிறந்தவன்
கதன் -வாசுதேவன் மனைவி ஸூ நாமை -கண்ணனுக்கு இளையவனாக பிறந்தவன்

771-சதுர்மூர்த்தி –
பலபத்திரன் வாசுதேவன் பிரத்யும்னன் அநிருத்தன்
ராமன் லஷ்மணன் பரதன் சத்ருனன்
ஏக மூர்த்தி இரு மூர்த்தி மூன்று மூர்த்தி பல மூர்த்தி யானவன் -4-3-3-

772-சதுர் பாஹூ-
நான்கு தோளன் -8-8-1-
உபசம்ஹர சர்வாத்மன் ரூபமேதத் சதுர்புஜம் -தேவகி
தமேவ ரூபேண சதுர்புஜேன -அர்ஜுனன்
ஈரிரண்டு மால் வரைத் தோள்
அப்பூச்சி காட்டுகின்றான் ஐதிகம்
மலை இலங்கு தோள் நான்கே மற்று அவனுக்கே எற்றே காண் -பெரிய திருமொழி -8-1-1- எற்றே -ஆச்சர்யம்

773-சதுர் வ்யூஹ
வ்யூஹங்கள் போலே குண பூரணன் இவன்
பல ராமன் பிரத்யும்னன் அநிருத்தன் -இரண்டு இரண்டு குணங்கள் பிரதானம்

774-சதுர் கதி –
நான்கு வித புருஷார்த்தங்கள் -தர்மம் அர்த்தம் காமம் மோஷம்
உபாசகன் -இந்திர ப்ரஹ்ம கைவல்யம் மோஷம்
கதி நடையுமாம்
ரிஷபம் வீர்யம் –மத்த கஜம் -மதிப்பு
புலி சிவிட்குடைமையால் வந்த உறட்டல்
சிம்ஹம் மேணாணிப்பு -பராபிவனம்
இவை எல்லாம் நமக்கு நம் பெருமாள் நடை அழகிலே காணலாம்
கஜ சிம்ஹ கதி வீரௌ சார்த்தூல வ்ருஷ போப மௌ

775-சதுராத்மா –
தன்னை நாலு விதமாக காட்டுபவன்-
ஜாக்ரத -விழிப்பு -ஸ்வப்ன அரைத் தூக்கம் ஸூ ஷுப்தி ஆழ்ந்த நித்ரை துரீயம் இவைகளுக்கு மேலான
முன்பே -139 பார்த்தோம்

777-சதுர்பாவன்
நான்கு செய்கைகள்
லோக சிருஷ்டி ஸ்திதி ரஷணம் சாஸ்திர பிரதானம்

778-சதுர்வேதவித் –
நான்கு வேதங்களையும் அறிந்தவர்கள் -ஞான விஷயம்
மறையாய நாள் வேதத்துள் நின்ற மலர்ச் சுடர் -3-1-10-
வேதைஸ் சர்வை ரஹ மேவ வேத்ய

779-ஏகபாத்-
ஒரு பகுதியாக அவதரித்தவன்

779-சமாவர்த்த –
மீண்டும் மீண்டும் வருமவன்
பிறப்பில் பல் பிறவிப் பெருமான் -2-9-5-
என் நின்ற யோநியுமாய்ப் பிறந்தாய் இமையோர் தலைவா -திரு விருத்தம் -1-

780-நிவ்ருத்தாத்மா
திருப்பப்பட்ட மனதை உடையவன்
அவாகீ அநாதர
வரம்பிலாத மாயை மாய வரம்பிலாத கீர்த்தியாய் -திருச்சந்த

781-துர்ஜய
ஜெயிக்க முடியாதவன்
அபராஜித 716 போலே
அயோத்தி என்னும் அணி நகரத்து உலகு அனைத்தும் விளக்கும் சோதி
விண் முழுதும் உய்யக் கொண்ட வீரன் -பெருமாள் திரு -10-1-

782-துரதிக்ரம
மீற முடியாதவன்
ஆத்தன் தாமரை அடி அன்றி மற்றிலம் அரனே -10-1-6-
காள மேகத்தை அன்றி மற்றிலம் கதியே -10-1-1-

783-துர்லப
அண்ட அரியன் -பிறர்களுக்கு அறிய வித்தகன்

784-துரகம
கிட்ட முடியாதவன்
காணலும் ஆகான்

785-துர்கா
அடைய முடியாதவன்
புகழும் அரியன் பொறு வல்லன் எம்மான்

786-துராவாச
கிட்ட முடியாத வாச ஸ்தானம் உடையவன்
தெய்வம் அல்லால் செல்ல ஒண்ணாச் சிங்க வேள் குன்றமே
சென்று காண்டற்கு அரிய கோயில் -பெரிய திரு மொழி -7-1-4-

————————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பீஷ்மர் திருவடிகளிலே சரணம்
ஸ்ரீ வியாச பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: