ஸ்ரீ பகவத் குண தர்ப்பணம் —503-606 -அருளிச் செயல் சந்தை அமுதம் -சேர்த்தி அனுபவம் -ஸ்ரீ Dr. V. V.ராமானுஜம் ஸ்வாமிகள்

3-29-ஸ்ரீ ராமனாய் தர்ம ரஷகத்வம் -503-513-திரு நாமங்கள்

503-கபீந்த்ர –
குரங்குகளுக்கு ஸ்வாமி
தானும் தர்மம் அனுஷ்டித்து -தேவதைகளாக குரங்குகளாக பிறக்கப் பண்ணி ஸ்வாமியாக-லோக நன்மைக்கு
குரக்கரசாவது அறிந்தோம் -நாச் திரு -3-4-இலங்கை செற்றவனே -2-4-4-

504-பூரி தஷிண –
அதிகமான தஷிணைகளை வழங்குபவன்
நான்மறையாய் வேள்வியாய் தக்கணையாய் தானுமானான் -பெரியாழ்வார் -4-9-2

505-சோமப
சோம ராசா பானம் பண்ணுபவன் –

506-அம்ருதப –
அம்ருததைப் பானம் பண்ணுமவன்
ஆராவமுதே
எனக்கு ஆராவமுதாய் யெனதாவியை இன்னுயிரை மனக்காராமை மன்னி யுண்டிட்டாய் -10-10-6

507-சோம
அமுதிலும் இனியன்-ஆரா வமுதன் -மனத்துக்கு இனியான் –
எனக்கு தேனே பாலே கன்னலே அமுதே திருமால் இரும் சோலை கோனே -10-7-3-
எப்பொழுதும் –அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆரா வமுதமே -2-5-4-

508-புருஜித்
யாவரையும் ஜெயித்து வசப்படுத்துமவன்
கூடாரை வெல்லும் சீர் படைத்தவன் ஸ்ரீ ராமன்
ராவணனை வீரத்தாலும் சூர்பணகையை அழகாலும் விபீஷணனை சீலத்தாலும் வென்றவன்
தீ மனத்தரக்கர் திரள் அளித்தவனே -பெரிய திரு மொழி -4-3-5
இலங்கைப் பதிக்கு அன்று இறையாய் அரக்கர் குலம் கெட்டு அவர் மாள கொடிப் புள் திரித்தாய் -பெரிய திரு மொழி -1-10-2-

509-புருசத்தம
பெரியோர்கள் இடம் நிலைத்து இருப்பவன்
பாவோ நான்யத்ர கச்சதி
சிந்தை தன்னுள் நீங்காது இருந்த திருவே மருவினிய மைந்தா அம் தண் ஆலி மாலே -பெரிய திருமொழி -4-9-2-

510-விநய
சிஷித்து திருத்துபவன் -ராஷசர்களைத் தண்டித்து –
செய்குந்தா வரும் தீமைகள் உன் அடியார்க்குத் தீர்த்து அசுரர்க்குத் தீமைகள் செய்குந்தா -2-6-1-

511-ஜய –
ஜெயிக்கப் பட்டவன் அடியார்கள் இடம்
வசிஷ்டர் விஸ்வாமித்ரர்
விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான் விதி வகையே 10-4-3 ஆழ்வார் சொல்படியே

512-சத்ய சாந்த
ஸ்த்ரிமான பிரதிஞ்ஞை உடையவன் –
நாளும் தன மெய்யர்க்கு மெய்யனே -9-10-6

513-தாசார்ஹ
சமர்ப்பனைக்கு உரியவன்
எனதாவி உள் கலந்த பெரு நல் உதவிக் கைம்மாறா –எனதாவி தந்து ஒழிந்தேன் இனி மீள்வது எனபது உண்டே -2-3-4-

——————————————————————————————–

3-30-பாகவத ரஷகன் திரு நாமங்கள் -514-519

514-சாத்வதாம் பதி –
சாத்விகர்களுக்கு ஸ்வாமி
கண்ட சதிர் கண்டு ஒழிந்தேன் அடைந்தேன் உன் திருவடியே -4-9-10-
பதியே பரவித் தொழும் தொண்டர் தமக்குக் கதியே -7-1-7

515-ஜீவ-வாழ வைப்பவன்
உலகு தன்னை வாழ நின்ற நம்பி -பெரியாள் -5-4-1-
எயிற்றிடை மண் கொண்ட எந்தை இராப்பகல் ஓதுவித்து யென்னைப் பயிற்றி பனி செய்யக் கொண்டான் -பெரியாழ்வார் 5-2-3-
குரங்குகள் மலையை நூக்கக் குளித்துத் தாம் புரண்டிட்டோடித் தரங்க நீர் அடிக்கல் உற்ற சலமிலா வணில் -திருமாலை -27

516-விநயிதா-
ரஷிப்பவன்-
ஞாலத்தூடே நடந்தும் நின்றும் கிடந்தும் இருந்தும் சாலப் பல நாள் உகந்து ஓர் உயிர்கள் காப்பானே -6-9-3-
சுடர் மா மதி போலே உயிர்க்கு எல்லாம் தாயாய் அளிக்கின்ற தண் தாமரை கண்ணா -பெரிய திருமொழி -7-8-9-

517-சாஷி
பார்ப்பவன்
உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறிதி -திருமாலை -34-

518-முகுந்த –
மோஷம் அளிப்பவன்
அன்று சராசரம் முற்றவும் வைகுந்தத்து ஏற்றி -பெருமாள் திருமொழி -10-10-
புல் எரும்பாதி ஓன்று இன்றியே நற் பாலுக்கு உய்த்தனன் -7-5-1-
விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான் -10-6-3-
நம்மை ஆள் கொள்வான் முத்தனார் முகுந்தனார் -திருச்சந்த -115-

519-அமித விக்கிரம
அளவற்ற சக்தியை உடையவன்
வற்றா முது நீரோடு மால் வரை ஏழும் துற்றாக முன் துற்றிய தோள் புகலொன் -பெரிய திருமொழி -7-1-2-

——————————————————————

3-31-ஸ்ரீ கூர்ம ரூபி -520/521 திரு நாமங்கள்

520-அம்போநிதி-
நீருக்குள் உள்ளவன் –அநந்த பல சக்தே புவன ப்ருதே கச்ச பாத்மநே -த்யான மந்த்ரம்
ஆமையான கேசவா -திருச்சந்த -20
ஆமையாய்க் கங்கையாய் ஆழ் கடலாய் ஆனான் -பெரியாழ்வார் -4-9-5-

521-
ஆனந்தாத்மா
ஆனந்தத்தின் ஆத்மாவே உள்ளவன்
நாகமேந்து மண்ணினை –காத்து ஏகமேந்தி நின்றான் -திருச் சந்த -6-

——————————————————————————————-

3-32-ஸ்ரீ அநந்த சாயி -522/523 திரு நாமங்கள்

522-மஹோததிசய
மஹா சமுத்திரத்தின் மேலே சயனித்து இருப்பவன் –
வெள்ளை வெள்ளத்தின் மேல் ஒரு பாம்பை மெத்தையாக விரித்து அதன் மேலே கள்ள நித்திரை கொள்வான் -பெரியாழ்வார் -5-1-7-
அண்ணலை அச்சுதனை அனந்தனை அநந்தன் மேல் நண்ணி நன்கு உறைகின்றானை -3-4-9-

523-அந்தக –
அழிப்பவன்-
யாவரும் யாவையும் எல்லாப் பொருளும் கவர்வின்றித் தன்னுள் ஒடுங்க நின்ற ஆழி அம் பள்ளியார் -2-2-6-
அநந்தன் மேல் கிடந்த எம் புண்ணியன் -திருச்சந்த -45-

——————————————————————————–

3-33-பிரணவ ஸ்வரூபி -524-528-திரு நாமங்கள்

524-அஜ –
அகாரத்தால் பேசப்படும் நாராயணன் -அழிவற்ற -ஜகத் காரணன்
ஆதியாதி யாதி நீ சோதியாக சோதி நீ ஆதியாகி ஆயனாய மாயனே –திருச்சந்த -30-34-
முன்பே 96-206-பார்த்தோம்

525-மஹார்ஹ –
பூஜைக்கு மிக வுரியவன் -ஆத்ம சமர்ப்பணம் செய்யும் படி –
ப்ரஹ்மனேத்வா மஹச ஒமித்யாத்மாதம் யுஞ்ஜீத் –
தேவன் எம்பெருமானுக்கு அல்லால் பூவும் பூசனையும் தகுமே -2-2-4-

526-ஸ்வாபாவய
த்யாநிக்கத் தக்கவன்
இறைவ என்று வெள்ளேறேன் நான்முகன் இந்திரன் வானவர் புள்ளூர்த்தி கழல் பணிந்து ஏத்துவர்-2-2-10-
வானே ஏத்தும் எம் வானவர் ஏறே -2-9-9-

527-ஜிதாமித்ர
பகைவர்களை ஜெயித்தவன்
என் பெருவினையைக் கிட்டிக் கிழங்கோடு தன அருள் என்னும் ஒள் வாள் உருவி வெட்டிக் களைந்தவன்
செய்யேல் தீ வினை என்று அருள் செய்யும் கையார் சக்கரக் கண்ண பிரான் -2-9-3-
எந்தன் மெய் வினை நோய் களைந்து நன் ஞானம் அளித்தவன் –

528-பிரமோதன்
ஆனந்திப்பவன்-ஆனந்தம் அழிப்பவன்
கரும்பே கட்டித் தேனே அக்காரக் கனியே
மைய வண்ணா முத்தமே என தன்பு மாணிக்கமே மரகதமே
மற்று ஒப்பாரை இல்லா ஆணிப் பொன்னே அடியேன் உடை யாவி அடைக்கலமே -திரு விருத்தம் 84-85-

———————————————–

3-34–ஸ்ரீ கபில அவதாரமாய் ரஷணம் -529-538 திருநாமங்கள் –

529-ஆநந்த –
அம்ச அவதாரம் -கபிலர் -பற்று அற்றவர் -என்பதால் ஆனந்தம் உடையவர்
உயர்வற உயர் நலம் உடையவன் –

530-நந்தன –
ஆனந்தம் அழிப்பவன் -தன்னை ஒத்த ஆனந்தம் அழிப்பவன்
இன்பமாம் அதனை வுயர்த்தாய் செல்வத்தினால் வளர் பிள்ளாய் -பெரியாழ்வார் -2-8-8-

531-நந்த –
எல்லாம் நிரம்பி இருப்பவன் -பற்று அற்ற நிலை இருந்தால் எல்லாம் நிறைந்து இருக்கும்

532-சத்ய தர்மா –
தர்மத்தை உண்மை உடன் நடத்துபவன் -தர்ம ஸ்வரூபி
எங்கும் தன புகழாவிருந்து அரசாண்ட எம் புருஷோத்தமன் -பெரியாழ்வார் -4-7-1-

533-த்ரிவிக்ரம –
வேதங்களை வ்யாபித்தவன் -மூ உலகங்களையும் அளந்து கொண்டவன் வேதங்களில் நிறைந்தவன் –
அன்னமாய் முனிவரோடு அமரர் ஏத்த அரு மறையை வெளிப்படுத்த வம்மான் -திரு நெடு -30

534-மஹர்ஷி
பெரிய ஞானி
அங்கம் ஆறும் வேத நான்கும் ஆகி நின்று அவற்றுள்ளே தங்கு கின்ற தன்மையான் -திருச் சந்த -15
ருஷி பிர ஸூதம் கபிலம் மஹாந்தம்
மெய் ஞான வேதியன் -3-1-11-

535-கபிலாசார்ய
கபில நிறம் உடையவன் -brown -கையில் சங்கு ஜெப மணி மாலை
சாங்க்ய தத்வம் வெளி இட்டு அருளி

536-க்ருதஜ்ஞ-
நன்மை அறிந்தவன் -இஷ்வாகு வம்ச சகரன் -அஸ்வ மேத யாகம் -பிள்ளைகள் 60000 பேர் -குதிரையை
கபிலர் ஆஸ்ரமத்தில் கண்டு -எரிக்கப் பட்டனர் –
சாம்பல் ஆனார்கள் அம்சுமான் கபிலரை வணங்கி -அந்த சூக்ருதம் வணக்கத்தையே கண்டு அருள் புரிதார்
தெளிவுற்று வீவின்றி நின்று அவர்க்கு இன்பக் கதி செய்யும் கண்ணன் -7-5-11-

537-மேதிநீபதி –
பூமிக்கு அதிபதி -பெரிய வப்பன் -அமரர் அப்பன் உலகுக்கு ஓர் தனி அப்பன் -8-1-11-

538-த்ரிபத-
மூன்றை பிரகாசப் படுத்துபவன் -பிரணவம் –
போக்தா போக்கியம் ப்ரேரிதாரஞ்ச-மூன்று தத்தவங்களை அறிய –
கபிலர் -பிரஜா பதிக்கும் தேவ ஹூதிக்கும் -தாயாருக்கு உபதேசித்து அருளி
மூன்று எழுத்து அதனை மூன்று எழுத்து அதனால் மூன்று எழுத்தாக்கி
மூன்று அடி நிமிர்த்து மூன்றினில் தோன்றி மூன்றினில் மூன்று உருவானவன் -பெரியாழ்வார் -4-7-10-
மூன்று கொண்டைகள் முசுப்புக்கல் உடைய வராஹரூபி -62-த்ரி ககுத்தாமா -முன்பு பார்த்தோம் –

————————————————————-

3-35-வராஹ அவதார திரு நாமங்கள் -539-543-

539-த்ரிதசாத்யஷ –
த்ரிதசம் முப்பத்து மூவர் -தேவர்களைக் காப்பாற்றியவன்
முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று கப்பம் தவிர்க்கும் கலி -திருப்பாவை
எயிற்றிடை மண் கொண்ட எந்தையாக விளங்கியவன்
முதல் மூவர்க்கும் முதல்வன் -3-6-2-

540-மகாச்ருங்க-
பெரிய கொம்பு உடையவன் -கோரப் பற்களைச் சொல்லும்
கோல வராஹம் ஒன்றாய் நிலம் கோட்டிடை கொண்ட எந்தை -10-10-
கோடு -பெரும் பற்கள்

541- க்ருதாந்தக்ருத் –
ஹிரண்யாக்ஷனைக் கொன்றவன்
ஞானத்தின் ஒளி உருவை நினைவார் என் நாயகரே –பெரிய திரு மொழி -2-6-3-
அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி பரமாங்கதிம்
சிலம்பிடைச் சிறு பரல் போல் பெரிய மேரு திருக் குளம்பில் கணகணப்பப்
திருவாகாரம் குலுங்க நிலமடந்தை தனை இடந்து புல்கிக் கோட்டிடை வைத்து அருளிய எம் கோமான் -பெரிய திரு மொழி -4-4-8-

542-மஹா வராஹ
பெரும் கேழலார்-தன் பெரும் கண் மலர்ப் புண்டரீகம் நம் மேல் ஒருங்கே பிறழ வைத்தார் -திரு விருத்தம் -45-
சிலம்பிடை சிறு பரல் போல் பெரிய மேரு திருக் குளம்பில் கணகணப்ப -பெரிய திரு மொழி -4-4-8-
வளை மருப்பில் ஏரார் உருவத்து ஏனமாய் எடுத்த ஆற்றல் அம்மான் -பெரிய திரு மொழி -8-8-3-

543-கோவிந்த
பூமியை உடையவன் கோ பூமி விந்த அடைபவன்
எம்மான் கோவிந்தனே
கோவிந்தன் குடக்கூத்தன் கோவலன் -2-7-4-

——————————————————————

3-36- சுத்த ஸ்வரூபி -544-568-திரு நாமங்கள் –
குஹ்யமான அர்த்தங்கள் சொல்லும் திரு நாமங்கள் -அஹம் வேத்மி -போலே

544-ஸூஷேண-
சதுரங்க பலம் உடையவன் -பஞ்ச உபநிஷத் மயமான திருமேனியே பெரும் சேனை –
மழுங்காத ஞானமே படையாக -3-1-9-
மாஸூணாச் சுடர் உடம்பன் -3-1-8-

545-கநகாங்கதீ –
தங்கத் திரு ஆபரணம் அறிந்தவன் -அங்கதம் -தோள் வளை -அவனையே ஸ்வர்ண மயனாக சொல்லும்
அந்தராதித்யே ஹிரண்மய புருஷ த்ருச்யதே
மாணிக்கமே என் மரகத மற்று ஒப்பார் இல்லா ஆணிப் பொன்னே -திரு விருத்தம் -65-
பொன் முடி எம் போர் ஏறு நாள் தடம் தோள் எம்மான்

546-குஹ்ய
மறைக்கப் பட்டவன் –
பரமேஷ்டி புமான் விசவா நிவ்ருத்த சர்வ -பஞ்ச -பஞ்ச சக்தி உபநிஷத் மயம்
ஞாலம் உண்டு உமிழ்ந்த மாலை எண்ணுமாறு அறிய மாட்டேன் -3-4-9-
சொல் முடிவு காணேன் நான் சொல்லுவது என் சொல்லீரே

547-கபீர –
கம்பீர ஸ்வபாவன்-சமுத்திர இவ காம்பீர்யே
நீண்டாயை வானவர்கள் நினைத்து ஏத்திக் காண்பது அரிதால் ஆண்டாய -பெரிய திரு மொழி -7-2-5-
காட்டவே கண்ட பாதம்
கண்டவாற்றால் தனதே உலகம் என நின்றான்
த்வம் அப்ரமேயச்ச துராச தச்ச

548-கஹந-
ஆழமானவன் -அளவற்ற பெருமை உடையவன்
தனக்கும் தன் தன்மை அறிவரியான்

549-குப்த –
ரக்ஷிக்கப் பட்டவன் -அவன் பெருமை அறிந்த -அஹம் வேத்மி மஹாத்மானம் -போல்வாரால்
ஆங்கு ஆராவாரம் அது கேட்டு அழல் உமிழும் பூங்காரரவணையான் பொன் மேனி -நான் முகன் -10-

550-சக்ர கதாதர –
திவ்ய ஆயுதங்களை யுடையவன் -தம்ஸ பரமோ தாதா சங்க சக்ர கதாதர
நான்கு தோளன் குனி சாரங்கன் ஒண் சங்கதை வாள் ஆழியான் -8-8-1-

551-வேதா –
மங்கள கரன்
சென்று அடைந்தவர் தமக்கு தாய் மனத்து இரங்கி அருளினைக் கொடுக்கும் காமனைப் பயந்தான் -பெரிய திரு மொழி -4-3-5

552-ஸ்வாங்க –
அரசாங்கம் உடையவன்
வீற்று இருந்து எழு உலகமும் தனிக் கோல் செல்ல வீவில் சீர் ஆற்றல் மிக்கு ஆளும் அம்மான் -4-5-1-

553-அஜித –
ஜெயிக்க முடியாதவன் -அபராஜிதா அயோத்யா பரமபதம் -அப்ராக்ருதமான தேச அதிபதி –
திண்ணன் வீடு முதல் முழுதுமாய் எண்ணின் மீதியான் எம்பெருமான் -2-2-1-

554-கிருஷ்ண –
கண்ணன் என்னும் கரும் தெய்வம்
கரியான் ஒரு காளை-பொதுவான திரு நாமம் –
காராயின காள நன் மேனியினன் நாராயணன் -9-3-1
கருவடிவில் செங்கண்ண வண்ணன்
ஆதி அஞ்சோதி உருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த வேத முதல்வன் -3-5-5-

555-த்ருட-
ஸ்திரமானவர் -ஸ்தூல ரூபி -இதில் இருந்து வ்யூஹ மூர்த்தி சங்கர்ஷணர் பற்றிய திரு நாமங்கள்
திண்ணிய தோர் அரி உரு -3-9-2-

556-சங்கர்ஷண –
வ்யூஹ வாசுதேவன் –சித் அசித் வஸ்துக்களை தன இடம் ஆகர்ஷிப்பவன்-ஈர்ப்பவன் -ஓன்று சேர்ப்பவன்

557-அச்யுத –
நித்ய ஈஸ்வரன்
வீவில் இன்பம் மிக எல்லை நிகழ்ந்த நம் அச்சுதன் -4-5-3-
அச்சுதன் அமலன் -3-4-5
முன்பே 101-320 பார்த்தோம்

558-வருண –
மூடி மறைத்து -எங்கும் உள்ளவன் –
எதிர் சூழல் புக்கு எனக்கே அருள்கள் செய் அம்மான் -2-7-7-

559-வாருண
ஆஸ்ரிதர் இடம் இருப்பவன் –
உன்னைக் கொண்டு என்னுள் வைத்தேன் -பெரியாழ்வார் -5-4-5-
வந்து என் மனம் புகுந்தாய் மன்னி நின்றாய் -பெரிய திரு மொழி -1-10-9-

560 வருஷ –
மரம் போலே இருப்பிடம் -வாசுதேவ தருச் சாயா
தன் ஒப்பாரில் அப்பன் தந்தனன் தன தாள் நிழலாய் மன்னு பிரான் -6-4-10-

561-புஷ்கராஷ
புஷ்டி அளிக்கும் கண் நோக்கு -மீன் கண்களாலே குட்டிகளை வளர்க்குமா போலே
அல்லிக் கமலக் கண்ணன் -8-10-11-
செய்ய தாமரைக் கண்ணன் -3-6-1-

562-மஹாமநா
விசால இதயம் -உன் அடியார்க்கு என் செய்வன் என்றே இருத்தி நீ -பெரிய திரு -53-
அடியான் இவன் என்று எனக்கு ஆர் அருள் செய்யும் நெடியான் -9-4-10-

563-பகவான் –
பூஜைக்கு உரியவன் -உயர்வற உயர்நல உடையவன்
தீதில் சீர் நலம் திகழ நாரணன்
கணக்கறு நலத்தனன் அந்தமிலாதியம் பகவன் -1-3-5-

564-பகஹா
நல்ல குணம் உடையவன் -குண பூரணன்
வண் புகழ் நாரணன் -1-2-10-

565-நந்தீ-
நந்த கோபன் திருக் குமரன்
நந்தனார் களிறு -நந்தன் மதலை-பெரிய திருமொழி -8-5-8-
பலராமன் -வெள்ளிப் பெருமழைக் குட்டன் -பெரியாழ்வார் -1-7-5-
எடுத்த பேராளன் நந்த கோபன் தன இன்னுயிர்ச் செல்வன் -8-1-3-

566-வனமாலீ –
வன மாலை -என்னும் திரு ஆபரணம் பூண்டவன் -வைஜயந்தீ
திரு ஆபரணங்கள் அசித் பதார்த்தம் இல்லை -வாசனைக்கு அபிமானியான தேவதையின் உருவம் வனமாலை
வனமாலீ கதி சார்ங்கி வாசுதேவா அபிரஷது

567-ஹலாயுத
கலப்பையை ஆயுதமாக உடையவன்
பக்தி உழவன் கார் மேகம் அன்ன கருமால் -நான் முகன் -23-

568-ஆதித்ய
தேவகி புத்திரன் -அதிதி தேவகியாக பிறந்ததால் தேவகி கர்ப்பத்தில் உண்டானவன் ஆதித்யன்
ஆ -சங்கர்ஷன பீஜாஷரம்
தேவகி தன் வயிற்றில் அத்தத்தின் பாத்தா நாள் தோன்றிய அச்சுதன் -பெரியாழ்வார் -1-2-6
தேவகி சிங்கமே -பெரியாழ்வார் -1-3-4-

——————————————————————————

3-37-நாராயண அவதார விஷய திரு நாமங்கள் 569-574

569-ஜ்யோதிராதித்ய –
ஜோதி ஸ்வரூபன் -ஸ்ரீ பத்ரியில் அவதாரம்
நந்தாத கொழும் சுடரே -1-10-9-
ஒண் சுடர்க் கற்றை உம்பர் வானவர் ஆதி அம் சோதி -1-10-9-

570-ஸ ஹிஷ்ணு –
பொறுமை உள்ளவன்-அபராத சஹான் -பாணாசுரன் -இந்த்ரன் சிசுபாலன் பிழை பொறுத்து அருளி
கேட்பார் செவி சுடு கீழ்மை வசவுகளையே வையும்
சேட்பால் பழம் பகைவன் சிசுபாலன் தாட்பால் அடைந்த தன்மையன் -7-5-3-
பல பல நாழங்கள் சொல்லிப் பழித்த சிசுபாலன் தன்னை அலவலைமை தவிர்த்த அழகன் -பெரியாழ்வார் -4-3-5-
முன்பே 146-பார்த்தோம்

571-கதி சத்தமா –
நல் வழி காட்டுபவன்
ஆற்ற நல் வகை காட்டும் அம்மான்
தாள் அடைந்தோர் தங்கட்குத் தானே வழித் துணையாம் –
நம்பனே நவின்று ஏத்த வல்லவர்கள் நாதனே -பெரியாழ்வார் -5-1-9-
நெறி வாசல் தானேயாய் நின்றான் -முதல் திரு -4-

572- ஸூ தந்தா
சிறந்த வில்லை உடையவன்
தடவரை தோள் சக்ரபாணி சாரங்க வில் சேவகனே -பெரியாழ்வார் -5-4-4-
பரமேட்டி பவித்ரன் சார்ங்கம் என்னும் வில்லாண்டான்

573-கண்ட பரசு
கோடாலியை ஆயுதமாக யெந்தினவன்
கோக்குல மன்னரை மூ வெழுகால் ஓர் கூர் மழுவால் போக்கிய தேவன்
நின்று இலங்கிய முடியினாய் வென்றி நீள் மழுவா -6-2-10-

574-தாருண
பகைவர்களை பிழைப்பவன்
இகளிடதசுரர்கள் கூற்றம் -9-9-2-
அவட்கு மூத்தோனை வெந்நரகம் சேரா வகையே சிலை குனித்தான்

——————————————————————

3-28-ஸ்ரீ வேத வியாச பகவான் -திரு அவதார திரு நாமங்கள் -575-589-

575-த்ரவிண ப்ரத
செல்வங்களைக் கொடுப்பவன் -சாஸ்திரம் ஆகிய செல்வம் ஹித பிரதனான ஆசார்யன் -சாஸ்திர பாணி
வேதம் பயந்த பரன் -6-6-5-

576-த்விஸ்ப்ருக்
தனது பர வித்யையால் பரம பதத்தை தொட்டவன் -ஞான ப்ரதன்
மழுங்காத ஞானமே படையாக மலருலகில் தொழும்பாயார்க்கு அளித்தான் -3-1-8-

577-சர்வத்ருக்
எல்லாம் நேரில் கண்டவன் -விதுஷே
எங்கும் பரந்த தனி முதல் ஞானம் ஒன்றாம் அருவாகி நிற்கும் கிளர் ஒளி மாயன் கண்ணன் -3-10-10-

578-வ்யாஸ-
ஜைமினி போதாயனர் சிஷ்யர்கள்

579 -வாசஸ்பதி –
வாக்குக்கு ஸ்வாமி -மகா பாரதம் -ப்ரஹ்ம சூத்ரம் -அருளினவர்
சமயங்ந்யாய கலா பேன மஹதா பாரதேனச உப ப்ரும்ஹித வேதாய நமோ வ்யாசாய விஷ்ணவே -வ்யாச ஸ்துதி
உரைக்கின்ற முனிவரும் யானே –உரைக்கின்ற முகில் வண்ணனும் யானே -5-6-8-

580-அயோநிஜ-
கர்ப்பத்தில் பிறவாதவன்
பிறப்போடு மூப்பு ஓன்று இல்லாதவன் -பெரிய திரு மொழி -4-3-2-

581-த்ரிசாமா
சாமங்களினால் பாடப் படுபவன் -ப்ரஹத் ரதந்த்ரம் வாமதேவ்யம் மூன்று வகை சாம வேதம்
சந்தோகா பௌழியா சாம வேதியனே நெடுமாலே -பெரிய திருமொழி -7-7-2-

582-சாமக –
சாமத்தைப் பாடுபவன் -ஏதத் சாம காயன் நாஸ்தே –

583-நிர்வாணம் –
முக்தி ஸ்வரூபன் -முத்தனார் முகுந்தனார் -திருச் சந்த -115-

584-பேஷஜம்
வினையேன் வினை தீர் மருந்தானாய் விண்ணோர் தலைவா -1-5-6-
மருந்தும் பொருளும் அமுதமும் தானாவான் -மூன்றாம் திருவந்தாதி -4
நாங்கள் பிநிக்குப் பேரு மருந்து -பெரிய திரு -62-

586-பிஷக்
மருத்துவனாய் நின்ற மா மணி வண்ணா

587-சன்யாசக்ருத்
தாகம் செய்து வைப்பவன் பிறவி என்னும் வியாதிக்கு சிகித்சை
வல்வினை தீர்க்கும் கண்ணன் -4-4-11-
ந்யாசம் -சந்யாசம் -பிறவிக்கு மருந்தே
பிணி வளர் ஆக்கை நீங்க அருளிய எம்மடிகள் -பெரிய திருமொழி -9-8-3-

588-சம
உபதேசிப்பவன்
உலகத்து அற நூல் சிங்காமை விரித்தான் -பெரிய திரு மொழி -10-6-1-

589-சாந்த –
சாந்தி யுடையவன் -விலங்கினங்களுக்கும் சாந்தி உண்டு பண்ணுபவர் வியாசர்
மேவி நின்று தொழுவார் வினை போக மேவும் பிரான் -4-5-4-

——————————————————————

3-29-தர்மம் படி பலன் அழிப்பவன் -திரு நாமங்கள் -590-606-

590-நிஷ்டா –
த்யானத்துக்கு விஷயமாய் இருப்பவன் -சுபாச்ராயம்
சிந்தை தன்னுள் நீங்காது இருந்த திரு –மருவினிய மைந்தன் -பெரிய திருமொழி 4-9-2-

591-சாந்தி –
அமைதி -அவனை மட்டுமே கண்டு தன்னைப் பார்க்காமல்
இப்பால் கை வளையும் மேகலையும் காணேன் கண்டேன் கனமகரக் குழை இரண்டும் நான்கு தோலும் -திரு நெடு -22-

592-பராயணம்
பரமமான ப்ராபகம் -நல் வினைக்கு இன்னமுதம் -திரு விருத்தம் -81-
மத்பக்திம் ல்பதே பராம் -இசைவித்து என்னையுன் தாளிணைக் கீழ் இருத்தும் அம்மானே -5-8-9-

593-சுபாங்க –
யோகத்தின் எட்டு அங்கங்களையும் நிறைவேற்றித் தரும்
யமம் நியமம் ஆசனம் பிராணாயாமம் ப்ரத்யாஹாரம் தாரணம் த்யானம் சமாதி
மேலும் -788- வரும் -அழகிய அங்கங்களை உடையவன் –

594-சாந்தித –
பூர்ண சாந்தியைத் தருமவன்-மோஷ ப்ரதன்
அடியார்களைக் கொண்டு போய் தன்மை பெறுத்தித் தன் தாளிணைக் கீழ்க் கொள்ளும் அப்பன் -3-7-7-

595-ஸ்ரஷ்டா –
படைப்பவன் -கர்மங்களுக்கு சேர
துயரங்கள் செய்யும் கண்ணா சுடர் நீள் முடியாய் -7-8-7-
தோகை மா மயில் அன்னவர் இன்பம் துற்றிலாமையில் அத்தஇங்கு ஒழிந்து போகம் நீ எய்தி
இன்னம் நம்மிடைக்கே போதுவாய் என்ற பொன்னருள் -பெரிய திரு மொழி -5-8-5-
மேலே தேவகி நந்தன ஸ்ரஷ்டா -989-990-வரும்

596-குமுத –
மகிழ்பவன் -அனஸ் நன்ன்னன்ய அபிசாக சீதி -மரம் இரண்டு பறவைகள்
கு பூ தத்வம் -போகம் விஷய அனுரூபம் -இன்புறும் இவ்விளையாட்டு உடையான் -3-10-7-
மேலும் 813 வரும்

597-குவலேசய-
ஜீவர்களை அடக்கி ஆள்பவன் -அந்தராத்மாவாக
உலகம் மூன்று உடையாய் என்னை ஆள்வானே -6-10-10-

588-கோஹித –
ஹிதத்தை உண்டு பண்ணுவன்
கொள்ள மாளா வின்ப வெள்ளம் கோதில தந்திடும் என் வள்ளல் -4-7-2-

599-கோபதி
போக பூமிக்கு ஸ்வாமி
கன்னாவான் என்றும் மண்ணோர் விண்ணோர்க்கு
முன்பே 497 பார்த்தோம்

600-கோப்தா
ரஷகன் -தேஜஸ் சொல்லும் திரு நாமம் –ஸூ ஷேன -544 போலே
சாலப் பல நாள் உகந்து ஓர் உயிர்கள் காப்பான் -6-9-3-

601-வ்ருஷபாஷ
வருஷப -சப்தங்கள் தர்மம் சொல்லும் -அவற்றுக்கு அச்சாக இருப்பவன் -சம்சார சக்கரத்துக்கு ஆதாரம் என்றுமாம்
தனி முதலாய் மூ வுலகும் காவலோன் -2-8-5-

602-வருஷ ப்ரிய-
தர்மத்தில் அன்புள்ளவன்
தருமவரும் பயனைய திரு மகளார் தனிக் கேள்வன் -1-6-9-

603-அநிவர்த்நீ –
சம்சார நிவ்ருதியைச் செய்யாதவன் -ப்ரவ்ருத்தி தர்ம நிஷ்டன்
ஓவாத் துயர் பிறவி உட்பட மற்று யெவ்வெவையும் மூவாத் தனி முதல் தேவாதி தேவன் -2-8-5-

604-நிவ்ருத்தாத்மா –
நிவ்ருத்தனுக்கு ஈஸ்வரன் ஸ்வாமி
ஆழியான் அருள் தருவான் விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான் -10-6-3-

605-சம்ஷேப்தா
சுருங்கச் செய்பவன் -பிரவ்ருத்தி தர்ம -போய் நின்ற ஞானம் -ஞான சங்கோசம் கர்ம அனுகுணமாக –

606-ஷேமக்ருத்
ஷேமத்தைச் செய்பவன் -நிவ்ருத்தி தர்ம நிஷ்டனுக்கு
ஞான விகாசம்
பெரும் துன்பம் வேரற நீக்கித் தன தாளிணைக் கீழ்ச் சேர்க்கும் அவன் செய்யும் சேமம் -7-5-10-
அனைத்தும் பகவத் ஆராதனமாக செய்பவன் நிவ்ருத்த தர்ம நிஷ்டன் –

———————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பீஷ்மர் திருவடிகளிலே சரணம்
ஸ்ரீ வியாச பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: