ஸ்ரீ பகவத் குண தர்ப்பணம் -301-421 -அருளிச் செயல் சந்தை அமுதம் -சேர்த்தி அனுபவம் -ஸ்ரீ Dr. V. V.ராமானுஜம் ஸ்வாமிகள்

3-13-ஆலிலை மேல் துயின்ற –வட பத்ர சாயி -301-313-திரு நாமங்கள்

301-யுகாதிக்ருத் –
யுக ஆரம்ப சிருஷ்டி கர்த்தா –
பாலன் தனதுருவாய் எழு உலகுண்டு ஆலிலையின் மேல் அன்று நீ வளர்ந்த மெய் என்பர் -ஆல் அன்று
வேலை நீருள்ளதோ விண்ணதோ மண்ணதோ சோலை சூழ் குன்று எடுத்தாய் சொல்லு -முதக்ல் திரு -69

302-யுகாவர்த்த –
யுகங்களை திரும்பச் செய்பவன் -சம்பவாமி யுகே யுகே
சாலப் பல நாள் உகந்து ஓர் உயர் காப்பானே -6-9-3
கிருத த்ரேத துவாபர கலி யுகம் நான்கும் ஆனாய் -பெரிய திருமொழி -7-7-6

303-நைகமாய –
பல மாயங்களை உடையவன் -மாயம் ஆச்சர்யம் ஞானம் சங்கல்பம் -சம்பவாம் யாத்ம மாயயா –

304-மகாசந –
பெரும் வயிற்றன்-உலகம் உண்ட பெரு வாயன்
கார் யெழ் கடல் யெழ் மலை யெழ் உலகுண்டும் ஆரா வயிற்றான் -10-8-2-

305-அத்ருஷ்ய –
காண முடியாதவன்-கட்கிலி உன்னைக் காணுமாறு அருளாய் காகுத்தா கண்ணனே -7-2-3-

306-வ்யக்த ரூப-
தெளிவாகத் தெரியும் திருமேனி உடையவன்
பக்தாநாம் தவம் பிரகாசசே-பூவைப் பூ வண்ணன்-சேவடி என் சென்னிக்கு அணி ஆக்கினான் –

307-சஹச்ரஜித் –
காலங்களை ஜெயிப்பவன் -பாபா பல சதுர யுகங்களை யோகத்தால் ஜெயிப்பவன்

308-அநந்த ஜித்
எல்லை காண முடியாத திருமேனி -மார்கண்டேயர் வசனம்

309-இஷ்ட அவிசிஷ்ட –
வேறுபாடு எதுவும் இன்றி விரும்பப் படுவர்
உககுக்கொர் முந்தை தாய் தந்தையே முழு எழு உலகுண்டாய் -5-7-7-

311-சிகண்டீ-
சிறந்த தலை அணி உடையவன் -நின்றிலங்கு முடியினாய் -6-2-10
முடியானே மூ வுலகும் தொழுது ஏத்தும் சீர் அடியானே -3-8
கிரீட மகுட சூடாவதம்ச –
பாரளந்த பேரரசே எம் விசும்பரசே ஓரரசே -திருவிருத்தம் -50

312-நஹூஷ
கட்டுபவன்
காயமும் சீவனுமாய் களிவாய்ப் பிறப்பாய் -நீ மாயங்கள் செய்து வைத்தி -7-8-7

313-வ்ருஷ
வர்ஷிப்பவன் -நனைப்பதில் நோக்கு
நாதனை அவரவராகி அவர்க்கு அருளும் அம்மான் -8-4-10-

———————————————————————-

ஸ்ரீ பரசுராம -ஆவேச சக்தி -அவதாரம் -314-321-

314-க்ரோதாஹா –
கோபத்தை ஒழித்தவன் –
கோக்குல மன்னரை மூ வெழு கால் ஓர் கூர்ம மழுவால் போக்கிய தேவன்
மழுவினால் அவனியரசை மூ வெழு கால் மணி முடி பொடி படுத்து உதிரக் குலுவார் புனலில் குளித்து
வெம் கோபம் தவிர்ந்தவன் -பெரிய திரு -8-1-6
ஜிதக்ரோத -463-கோபத்தை மறக்கப் பண்ணுபவன்

315-குரோதக்ருத்-
கோபம் உள்ளவன்
வற்புடைய வரை நெடும் தோள் மன்னர் மாள வடிவாய மழு ஏந்தியவன் -திரு நெடு -7

316-கர்த்தா –
வெட்டுபவன்
தெழித்திட்டு எழுந்தே எதிர் நின்ற மன்னன் சினத்தோள் அவை ஆயிரம் முன் மழுவால் அழித்திட்டவன்-பெரிய திருமொழி -10-6-6-

317-விஸ்வ பாஹூ
நன்மைக்கான புஜ பலம் உடையவன் –
இருபத்தொரு கால் அசுரர்களைக் கட்ட வென்றி நீண் மழுவா -6-2-10

318-மஹீதர
பூமியைத் தாங்கி நிற்பவன்
வென்றி நீண் மழுவா வியன் ஞாலம் முன் படைத்தாய் -6-2-10-

319-அச்யுத –
நழுவாதவன்
அச்சுதா அமரர் ஏறே ஆயர் தம் கொழுந்தே -திரு மாலை 2
முன்பே 101-பார்த்தோம் -மீண்டும் 557-வரும்

311-பிரதித –
புகழ் பெற்றவன் -பெருமை யுடைய பிரானார் -1-6-9-
அஷய்ய கீர்த்தி -நிகரில் புகழாய் -6-10-10-

312-பிராண
உயிர் ஆனவன் -அடியார்க்கு ஜீவநாடி
உலகுக்கே ஒரு உயிருமானாய் -6-9-7-

——————————————————————–

3-15-ஸ்ரீ கூர்மாவதாரம் -322-332-திரு நாமங்கள்

322-பிராணத
உயிர் அளிப்பான் -பலம் உள்ளவன் -அநந்த பல சக்த்யே -மந்தர பர்வதம் தாங்கி
அமரர்கட்கு அன்று ஆரமுதூட்டிய அப்பன் -3-7-5- -முன்பே 66- பார்த்தோம் -மேலும் -409-956 பார்ப்போம் –

323-வாசவாநுஜ-
இந்த்ரன் பின் பிறந்தவன்

324-அபாம் நிதி –
கடல்களுக்கு ஆதாரம் ஆனவன் –
அப்பனே ஆழ கடலைக் கடைந்த துப்பனே -4-7-5-

325-அதிஷ்டாநம் –
ஆசனமாய் இருந்தவன்
மலை முகடு மேல் வைத்து அன்று கடல் கடைந்தான் -பிண்டமாய் நின்ற பிரான் -மூன்றாம் திரு -46

326-அப்ரமத்த –
ஊக்கம் உடையவன் -விழிப்பு உடையவன் –
மலக்கம் எய்த மா கடல் தன்னைக் கடைந்தான் -8-3-1-

327-ப்ரதிஷ்டித
நிலை பெற்றவன் -ஸ்வே மஹிம்நி ப்ரதிஷ்டித -தனக்கு வேறு ஆதாரம் வேண்டாத படி –

328-ஸ்கந்த –
வற்றச் செய்பவன் -அழிப்பவன் –
கூடி நீரைக் கடைந்தவாறும் அமுதம் தேவர் உண்ண அசுரரை வீடும் வண்ணங்களே செய்து போன வித்தகமும் -5-10-10-

329-
ஸ்கந்தர –
ஸ்கந்தனைத்-தேவ சேனாபதியை – தாங்குபவன்
சேனாநீநாம் அஹம் ஸ்கந்த -ஸ்ரீ கீதை

330-துர்யா
தாங்குபவன் -புனப்ருதே-ப்ப்ரு117 முன்பு பார்த்தோம்

331-வரத-
வரங்களை தருபவன் -தேவர்களுக்கு லோக வியாபார சாமர்த்தியம் வரம் அழிப்பவன்
வரம் தரும் மா மணி வண்ணன்

332-வாயு வாஹந –
வாயுவை நடத்துபவன்
மேதகும் ஐம் பெரும் பூதமும் நீயே -திரு வெழு கூற்று –

————————————————-

3-16- பர வாசுதேவன் குண வாசகம் -333-344-திரு நாமங்கள் –

333-வாஸூ தேவ-
சர்வம் வசதி –சர்வத்ர வசதி -த்வாதச அஷரி
ஆர்ந்த ஞானச் சுடராகி அகலம் கீழ் மேல் அளவிறந்து நேர்ந்த வுருவாய் அருவாகும் இவற்றின் உயிராம் நெடுமாலே -1-5-10
உன் தன பொய் கேட்டு நின்றேன் வாசு தேவா உன் வரவு பார்த்தே -பெருமாள் திரு -6-1
மீண்டும் 701 வரும்

334-ப்ருஹத்பாநு-
அதி பிரகாசம் ஆனவன் -ப்ருஹத் மிகப் பெரிய -பானவ கிரணங்கள்
கண்டவாற்றால் தனதே உலகு என நின்றான் –
பர நன் மலர்ச் சோதி -10-10-10-

335-ஆதி தேவ
ஊழி முதல்வன் -அகில புவன ஜன்ம ச்தேம பங்காதி லீலே –

336-புரந்தர –
பட்டணங்களை பிழைப்பவன் -துஷ்க்ருத் விநாசம் -ஆதி தைவிக தாபம் போக்கி அருளி
புரம் ஒரு மூன்று எரித்து உலகு அழித்து அமைத்துளன் -1-1-8

337-அசோகா –
துன்பங்களை அழிப்பவன் -ஆத்யாத்மிக தாபம் போக்கி அருளி
ஓயும் மூப்புப் பிறப்பு இறப்பு பிணி வீயுமாறு செய்வான் -3-3-9-

338-தாரண
பயங்களைப் போக்கி கரை சேர்ப்பவன் -ஆதி பௌதிக தாபம் போக்கி அருளி

339-தார –
காப்பவன்
நந்தா நரகத்து அழுந்தா வகை நாளும் தொண்டர் ஆனவருக்கு இன்னருள் செய்வான் -பெரிய திரு மொழி -11-8-10-

340-சூர-
சமர்த்தன் -சென்று அங்குத் தென்னிலங்கை செற்றான்
அன்று நேர்ந்த நிசாசரரை வெந்நரகம் சேரா வகையே சிலை குனிந்தான் –
சென்று அங்கு வாணனை ஆயிரம் தோளும் தென்றித் திரை திசை விழச் செற்றாய் -பெரிய திரு மொழி -5-3-4-

341- சௌரி –
சூரனான வாஸு தேவர் பிள்ளை -ஓடாத தோள் வலியன் நந்த கோபன் குமரன் –
மன் உலகத் தேவர் வாழ் முதல் -பெரிய திருமொழி -6-8-10
தயரதற்கு மகனாய் தோன்றி கொல்லியலும் படைத்தான் -பெருமாள் திரு -10-10-

342-ஜநேச்வர-
உயிர்கள் எல்லா யுலகும் உடையான் -3-2-1

343-அநுகூல-
வரம்பினுள் நிற்பவன் கூலம் -கரை
ஆய்ச்சி கண்ணிக் கயிற்றினால் கட்டத்தான் கட்டுண்டு இருந்தான் -மூன்றாம் திரு -91

344-சதாவர்த்த –
பல சூழல்களை உடையவன் -ஐஸ்வர்ய பெருக்கை சௌலப்ய சௌசீல்யங்கள் கட்டுப் படுத்துவதால்

————————————————————–

3-17-பர வாசுதேவன் ரூப குண வாசகம் -345-350 திரு நாமங்கள்

345-பத்மீ-
தாமரையைக் கையில் கொண்டவன்
கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும்

346-பத்ம நிபேஷண –
இனிய பார்வை யுடையவன்
உன் முகம் மையல் ஏற்றி மயக்கும் மாய மந்த்ரம் தான் கொலோ
செய்ய தாமரைக் கண்ணினாய்
உகவையால் நெஞ்சம் உள்ளுருகி உன் தாமரைக் கண் விழிகளின் அகவலைப் படுப்பான் -வலையுள் அகப்படுத்துவான் -6-2-7-
சரமணீ விதுர ரிஷி பத்நிகளைப் பூதராக்கின புண்டரீ காஷன் நெடு நோக்கு

347-பத்ம நாப –
தாமரை உந்தி தனிப் பெரும் நாயகா
அயனைப் படைத்த எழில் உந்தி
கொப்பூழில் எழு கமலப் பூ வழகன்

348-அரவிந்தாஷ
செந்தாமரைக் கண்ணன்
அனைத்து உலகும் உடைய அரவிந்த லோசனன்
இழை கொள் சோதிச் செந்தாமரைக் கண்ணபிரான் -6-5-5-
செவ்வரி யோடி நீண்ட வப் பெரியவாய கண்கள்
ராம கமல பத்ராஷ
தஸ்யதா கப்யாசம் புண்டரீக மேவம் அஷி ணீ –முன்பே 112 பார்த்தோம்

349-பத்ம கர்ப்ப –
தாமரையை ஆசனமாக உடையவன் –
ஹிருதய கமலம்
தஹரம் விபாப்மம் பிரவேசமா பூதம் யத் புண்டரீகம்
தண தாமரை சுமக்கும் பாதப் பெருமான் -4-5-8′
அடிச் சோதி நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ -3-1-1-

350-சரீர ப்ருத்
சரீரத்தை தாங்குபவன் –தஹமும் ஆத்மாவும் இவன் சரீரங்கள் -ஞாநி து ஆத்மைவ மே மதம் -ஜகத் சர்வம் சரீரம் தே
திசை மண நீர் எரி முதலா உருவாய் நின்றவன் -பெரிய திரு மொழி -7-6-7

————————————————————

3-18-ஐஸ்வர்ய வாசக திரு நாமங்கள் -351-360

351-மஹர்தி –
உபய விபூதி ஐஸ்வர்யம் -சொல்கிறது
வீற்று இருந்து எழு உலகும் தனிக் கோல் செல்ல ஆளும் அம்மான் -4-5-1-
நாகணை மிசை நம்பறார் செல்வர் பெரியார் -நாச் -10-10

352-ருத்த
வ்ருத்தியை உடையவன்
பெருக்குவார் இன்றியே பெருக்கம் எய்தி –
விஜ்ஜுரக விபீஷணனை அங்கீ கரித்த பின்பு

353-வ்ருத்தாத்மா
நிறைவுற்ற ஆத்ம ஸ்வரூபன் –
அதனில் பெரிய அவா -சநேஹோ மே பரம

354-மஹாஷ-
அசாம் தேர் சக்கரம் தாங்கும் அச்சு -வேதாத்மா விஹகெச்வர -வாஹனம்
நாள் திசை நடுங்க அஞ்சிறைப் பறவை எரி -திரு வெழு கூற்று –
மீளியம் புள்ளைக் கடாய் -7-6-8-
இந்திரன் வானவர் புள்ளூர்த்தி கழல் பணிந்து ஏத்துவர் -2-2-10-

355-கருடத்வஜ –
கருளப் புட்கொடி சக்கரப் படை வான நாட -3-5-7

356-அதுல –
ஒப்பில்லாதவன் -தன ஒப்பார் இல்லப்பன் -6-3-9-
ஒத்தாரும் மிக்காரும் இல்லாத மா மாயன் -3-2-2-

357-சரப
அழிப்பவன்
மாறில் போர் அரக்கர் மதிள் நீர் எழச் செற்று உகந்த ஏறு சேவகனார் -6-1-10
பின்னும் ஆள் உயர் குன்றங்கள் பெய்து அடர்த்தான் -7-6-8

358-பீமா –
பயமூட்டுபவன்
அரி கான் நரியாய் அரக்கர் ஊளை இட்டு அன்று இலங்கை கடந்து பிலம்புக்கு ஒளிப்ப -7-6-8
அத்த எம்பெருமான் எம்மைக் கொள்ளேல் அஞ்சினோம் -பெரிய திருமொழி -10-2-2-
பீஷாச்மாத்வத பவதே பீஷோ தேதி சூர்ய –

359-சமயஜ்ஞ-
காலம் அறிந்தவன்
இரணியன் தூண் புடைப்ப அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய என் சிங்கப் பிரான் -2-8-9-
அபயம் சர்வ பூதேப்யோ ததாமி –ஏதத் வரதம் மம -அளித்த அபயத்தை மறவாதவன் –

360-ஹவிர்ஹரி –
ஹவிஸ் ஹரிப்பவன்
அடியார்களை தான் அனுபவிக்கிறான் -தன்னை அடியார்கள் அனுபவிக்கும் படி கொடுக்கிறான்
மரணமானால் வைகுந்தம் தரும் பிரான் -9-10-5
கொடிய வினை தீர்ப்பேனும் நானே என்னும் -5-6-9-

—————————————

3-19-லஷ்மி சம்பந்தம் திரு நாமங்கள் -361-379-

361-சர்வ லஷண லஷணய –
திருமகள் கேள்வன் -திருவின் மணாளன் -1-9-1

362-லஷ்மி வாந-
ஸ்ரீ மான் -பூ மகளார் தனிக் கேள்வன் -1-9-3-
மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள் -1-3-1-

363-சமித்ஜ்ஞய-
விஷய ஸ்ரீ யை உடையவன் -அகில துக்க ஜெய
என்னைத் தீ மனம் கெடுத்தாய் –மருவித் தொழும் மனமே தந்தாய் –

364-விஷர-
குறைவற்றவன் -நீங்காத அன்பு உள்ளவன்
அருகலிலாய பெரும் சீர் அமரர்கள் ஆதி முதல்வன் -1-9-10-

365-ரோஹித
சிவந்தவன் –
திருச் செய்ய –கமலக் கண்ணும் செவ்வாயும் செவ்வடியும் செய்ய கையும்
திருச் செய்ய கமல வுந்தியும் செய்ய கமல மார்வும் திகழ என் சிந்தை யுளானே -8-4-7

366-மார்க்க
தேடப்படுபவன் –
திரு மோகூர் காள மேகத்தை அன்றி மற்று ஓன்று இளம் கதியே -10-1-1-
தாள் அடைந்தார் தங்கட்கு தானே வழித் துணையாம் காளமேகம்

367-ஹேது
காரணம் -அடியார் ஆசைகள் நிறைவு பெற காரணன்
ஏன்றேன் அடிமை இழிந்தேன் பிறப்பு இடும்பை ஆன்றேன் -நான் திரு -95

368-தாமோதர –
தாமம் -உலகம் கயிறு உலகங்களை வயிற்றில் தாங்குபவன்
வெண்ணெய் விழுங்க வெகுண்டு ஆய்ச்சி கண்ணிக் கயிற்றினால் கட்டத் தான் கட்டுண்டு இருந்தான் -மூன்றாம் திரு
மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள் மத்துறு கடை வெண்ணெய் களவினில்
உரவிடை யாப்புண்டு உரலினோடு இணைந்து இருந்தான் –

369-சஹ
பொறுமை உள்ளவன் -எத்திறம் உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவே -1-3-9-

370-மஹீதர –
பூமியைத் தாங்குபவன்
எயிற்று இடை மண கொண்ட வெந்தை –

371-மகா பாக
மகா பாக்கியம் உடையவன் மலர்மகள் ஆயர் மடமகள் 16000 மகிஷிமார்கள் விரும்பி ஏற்ற சௌபாக்யம்
வடிவினை இல்லா மலர் மகள் மற்றும் மண மகள் பிடிக்கும் மெல்லடியான் -9-2-10

372-வேகவான்
வேகம் உள்ளவன் –
குரவை யாய்ச்சியர் யெழ கொத்தததும் குன்றம் ஓன்று ஏந்தியதும் –இவை போல் வனவும் பிறவும் –என்னப்பன் தன மாயங்கள் –

373-அமிதாசன
பெரும் தீனி உண்பவன்
வயிற்றினொடு ஆற்றா மகன் -மூன்றாம் திரு -91
அட்டுக்குவி சோற்றுப் பருப்பதமும் தயிர் வாவியும் நெய்யளரும் அடங்கப் பொட்டத் துற்று -பெரியாழ்வார் -3-5-1
கார் ஏழ் கடல் ஏழ் மலை ஏழ் உலகுண்டும் ஆரா வயிற்றான் -10-9-2–முன்பே 304 பார்த்தோம்

374-உத்பவ
கட்டை விலக்குமவன்
தாமோதரம் பந்த தரம்

375-ஷோபண-
கலக்குகிறவன் -பிரதி கூலரை

376-தேவ –
விளையாடுபவன்
பல பல மாய மயக்குகளால் இன்புறும் இவ்விளையாட்டு உடையானே -3-10-7
நஹூஷ -312 முன்பு பார்த்தோம் -ஆதிதேவ -335-முன்பு பார்த்தோம்

377-ஸ்ரீ கர்ப்ப –
திரு மகளைப் பெரியாதவன் -கர்ப்ப -வளரும் இடம்
கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய என்னன்பன்-
போக க்ரீடா சாஹித்யேன வர்த்த நீயா அஸ்ய ஸ்ரீ -பட்டர்

378-பரமேஸ்வர –
திருவுக்கும் திருவாகிய செல்வா தெய்வத்துக்கு அரசே -பெரிய திருமொழி -7-7-1

379-கரணம்
உபாயமாய் இருப்பவன்
என் இருடீகேசனே இருடீகேசன் எம்பிரான் -2-7-9

———————————————————————–

3-20-சேதனர்கள் உடன் இணைந்து இருக்கும் ஒட்டின்மை -380-384-

380-காரணம் –
இயக்குபவன் -காரணம் கிரிசை கருமம் இவை முதல்வன் -2-7-2-

381-கர்த்தா
செயல்படுபவன் –அனைத்தும் அவன் அதீனம்
செய்கின்ற கிரியை எல்லாம் நானே என்னும் –செய்வார்களைச் செய்வேனும் யானே என்னும்
செய்கைப் பயன் உண்பேனும் யானே என்னும்

382-விகாரத்தா
மாறுதல் அடைபவன்
பிறர் சுகம் துக்கம் தன்னதாக

383-கஹன –
அறிவுக்கு எட்டாதவன்
விண்ணவர்க்கு எண்ணல் அரியான்-சிந்திக்கும் கோசரம் அல்லன் -1-9-2/6

384-குஹ-
ரஷகன் காக்கும் இயல்வினன் கண்ண பெருமான் -2-2-9-

———————————————————————————-

3-21-த்ருவ-திரு நாமங்கள் -385-389

385-வ்யவஸாய
நஷத்ரங்களுக்கு ஆதாரமாய் இருப்பவன்
விளங்கு தாரகை எங்கோ -3-4-2

386-வ்யவஸ்தான-
காலம் ஜ்யோதிஷ பதார்த்தங்கள் கதி நிர்ணயம்
ஆதியான வானவாணர் அந்த கால நீ யுரைத்தி ஆதியான கால நின்னை யாவர் காண வல்லரே -திருச்சந்த -34

387-சம்ஸ்தான
அந்தம் -அனைத்தையும் ஒரு கால விசேஷத்தில் முடிவு அடையச் செய்கிறான்

388-ஸ்தாநத –
மேலான ஸ்தானம் அளிப்பவன்-
அன்று சராசரங்களை வைகுந்தத்து ஏற்றி -பெருமாள் திரு -10-1

389-த்ருவ
நிலைத்து இருப்பவன்

——————————————————————————-

3-22-ஸ்ரீ ராம அவதார திரு நாமங்கள் -390-421-

ம்ருத சஞ்சீவினி –
கற்பார் ராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ -7-5-1
தயர்தற்கு மகன் தன்னை யன்றி மற்றிலேன் தஞ்சமாகவெ -3-6-8-
தென்னிலங்கை கோமானைச் செற்ற மனத்துக்கு இனியான் -திருப்பாவை
தேவை இடாதார் –
கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர் -9-5-8

390-பரர்த்தி –
மேலான குண பூர்த்தி உள்ளவன்
விபீஷணனை அங்கீ கரித்த பின்பு க்ருதக்ருத்ய ததா ராம

391-பரம ஸ்பஷ்ட
வெளிக் காணும் மேன்மை உடையவன் -பரத்வம் தலை நீட்டிக் காட்டும்
கட்கிலீ உன்னைக் காணுமாறு அருளாய் -காகுத்தா
பும்ஸாம் திருஷ்டி சித்த அபஹாரிணம்

392- துஷ்ட
மகிழ்ச்சி நிறைந்தவர் -பிரமுதோஹா
கௌசலை தன மணி வயிறு வாய்த்தவனே மைதிலி தன் மணவாளா சனகன் திரு மருகா தாசரதி
தயரதன் குல முதலாய் –பெருமாள் திரு -8

393-புஷ்ட
நிரம்பியவன் –மகா குணங்களால்

394-சுபேஷண-
சோபனமான பார்வை யுடையவர்
முன்பு 346 பத்ம நிபேஷன –348-அரவிந்தாஷ
செக்கமலத் தவர் போலும் கண் கை கால் செங்கனி வாய் அக்கமலத் திலை போலும் திருமேனி யடிகளுக்கே -9-7-3

395-ராம –
யாவரும் மகிழும்படி இருப்பவன்
ரம்யதே அஸ்மின் சதா சர்வை குணரூப வசீக்ருதை
மனத்துக்கு இனியான்
தயரதன் பெற்ற மரகத மணித்தடம் -10-1-8
சேண சுடர்க் குன்று அன்ன செஞ்சுடர் மூர்த்தி காண் பெரும் தோற்றத்து என் காகுத்த நம்பி -6-6-9-

396-விராம –
பிறரை ஓயச் செய்பவன்

397-விரத –
ஆசையை ஒழித்து இருப்பவன்
பாராளும் படர் செல்வம் பாரத தம்பிக்கே யருளி அரும் கானம் அடைந்தவன் -பெருமாள் திரு 8-5
இரு நிலத்தை வேண்டாதே விரைந்து வென்றி மைவாய களிறு ஒழிந்து தேர் ஒழிந்து மா ஒழிந்து
வானமே மேவிய யெம்மிராமன் எம்பெருமான் -பெருமாள் திரு -9-2

398-மார்க்க
தேடப்படுபவன் -நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும் உய்த்தனன்

399-நேய
நியாம்யன் -கட்டளை இடப் பெறுபவன்
கூன் உருவில் கொடும் தொழுததை சொல் கேட்ட கொடியவள் தன சொல் கொண்டு கானகமே சென்றவன் -பெருமாள் திரு -9-1-
சிற்றவை பணியால் முடி துறந்தான் -பெரிய திரு மொழி -2-3-1-

400-நய –
நடத்துமவன் நயாமி பரமாம் கதிம்
சராசரங்களை வைகுந்தத்து ஏற்றி –

401-அனைய –
ப்ரதிகூலர் அணுக முடியாதவன்

402-வீர –
எதிரிகளை பயத்தால் நடுங்க செய்பவன்
வீர சூர பராக்கிரமம் -ஜெயா ஜெயா மகா வீர
அன்று இலங்கை நீறு செய்து சென்று கொன்று வென்றி கொண்ட வீரனார் -திருச்சந்த -116
வேந்தர் பகை தடிந்த வீரன் -பெருமாள் திரு -10-3
பொல்லா அரக்கனை கிள்ளிக் களைந்தானை
வெந்நரகம் சேரா வகையே சிலை குனித்தான்
மீண்டும் 664 வரும்

403-சக்தி மதாம் ஸ்ரேஷ்ட
பரசுராமர் -வென்றவன் -மலையால் அரிகுலம் பணி கொண்டு அலை கடல் அடைத்தான் -பெரிய திருமொழி -5-7-7

404 -தர்ம –
தர்மமே வடிவு எடுத்தவன்
கருமமும் கரும பலனுமாகிய காரணன் -3-5-10-
கண்ணன் தர்மம் அறியாக் குறும்பன் -நாச் 11-6

405-தர்ம விதுத்தம –
தர்மம் அறிந்தவரில் முதல்வன் -தர்மஜ்ஞ்ஞஸ் சத்யசந்தச்ச

406-வைகுண்ட –
குடி தடை இத்தை போக்குபவன்
தேவ தேவனை தென்னிலங்கை எரி எழச் செற்ற வில்லியை பாவ நாசனை பங்கயத் தடம் கண்ணனை -3-6-2
வைகுந்தா மணி வண்ணனே செய்குந்தா வரும் தீமை உன் அடியார்க்குத் தீர்த்து அசுரர்க்கு தீமை செய்குந்தா -2-6-1

407-புருஷ –
தூய்மை அளிப்பவன்
சபரி -பாவனா சர்வ லோகானாம் த்வமேவ ரகு நந்தன -அகஸ்தியர்

408-பிராண –
பிராணனாய் இருப்பவன் -என் ஆவியை நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதனை -1-7-5
சராசரம் முற்றவும் நற்பாலுக்கு உய்த்தனன் -7-5-1–முன்பே 57 321 பார்த்தோம்-

409-பிராணத
உயிர் அளிப்பவன் -அகாலபலி நோ வ்ருஷா –
உலகங்கள் உய்ய செருவிலே அரக்கர் கோனைச் செற்ற நம் சேவகனார் -திரு மாலை -11
முன்பே 66-322 பார்த்தோம் -மேலும் 956 பார்ப்போம் –

410-ப்ரணம –
வணக்கத்துக்கு உரியவன்
இலை துணை மற்று என் நெஞ்சே இலங்கையை ஈடழித்த கூரம்பன் அல்லால் குறை -நான்முகன் திரு -8
பிரணவ -957-சேஷி -வணங்கத் தக்கவன்

411-பருத்து
பிரசித்தன் பெரும் புகழான் -நிகரில் புகழாய்
இஷ்வாகு வம்ஸ ப்ரபவோ ராமோ நாம ஜனை ஸ்ருத யசஸ் வீ ஜ்ஞாநாசம் பந்ந –

412-ஹிரண்ய கர்ப்ப –
பொன் புதையல் போன்றவன்
தானே விஷயம்– கற்பார் ராம பிரானை அல்லால் மற்றும் கற்பரோ
சிந்தனைக்கு இனியாய் திருவே என்னார் உயிரே -பெரிய திருமொழி -3-5-1-

413-சத்ருக்ந –
சத்ருக்களை முடிப்பவன் –
வல்லரக்கர் உயிர் உண்ட மைந்தன் -பெருமாள் திரு -10-2
மாறில் போரரக்கன் மதிள் நீறு எழச் செற்று உகந்த ஏறு சேவகனார் -6-1-10-
பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டான் -பெரிய திரு மொழி -2-3-1-

414-வ்யாப்த –
நிரம்பியவன் -ரிபூணாமபி வத்சல-

415–வாயு
செல்பவன் -அடியார் உள்ள இடம் தானே -குகன் பரத்வாஜர் சபரி
சென்று அங்குத் தென்னிலங்கை செற்றாய் திரள் போற்றி
சென்று நின்று ஆழி தொட்டான் –

416-அதோஷஜ-
குறையாதவன் -அமுதக் கடல் போன்று –
யானும் ஏத்தி மூவுலகும் முற்றும் ஏத்தி பின்னையும் தானும் ஏத்திலும் தன்னை ஏத்த ஏத்த எங்கு எய்தும்
தேனும் பாலும் கன்னலும் அமுதுமாகித் தித்திப்பா -4-3-10-

417-ரிது –
அணுகுபவன் -வந்து அருளி என் நெஞ்சு இடம் கொண்ட வானவர் கொழுந்து -5-7-7
வந்தாய் என் மனம் புகுந்தாய் நந்தாத கொழும் சுடரே எங்கள் நம்பீ -பெரிய திருமொழி -1-10-9

418-ஸூ தர்சந –
பார்வைக்கு இனியவன் -சந்திர காந்தா நனம் ராமம் பிரியா தர்சனம் -பும்ஸாம் திருஷ்டி சித்த அபஹாரி
காண் பெரும் கோலத்து என் காகுத்த நம்பி -6-6-9-
கண்டவர் தம் மனம் வழங்கும் கணபுரத்து என் கருமணி -ராகவனே -பெருமாள் திரு -8-2

419-கால
தன்னிடம் ஈர்ப்பவன் -குணங்கள் அழகாலும் சரங்களாலும்
தயரதற்கு மகன் தன்னை அன்றி மற்றிலேன் தஞ்சமாகவே -1-6-8

420-பரமேஷ்டீ-
மிக உன்னதமான பரம பதத்தில் உள்ளவன்
மாயங்கள் செய்து சேனையைப் பாழ்பட விற்றிட்டுப் போய் விண் மிசைத் தனதாமமே புக மேவிய சோதி -6-4-10-
விண் முழுதும் எதிர் வரத் தன தாமமேவி சென்று இனிது வீற்றிருந்த அம்மான் -பெருமாள் திரு -10-10
பல்லாண்டு என்று பவித்ரனைப் பரமேட்டியை சார்ங்கம் என்னும் வில்லாண்டான் தன்னை –

421-பரிக்ரஹ –
சௌசீல்யமே ஸ்ரீ ராமாவதார முக்கிய குணம் –
யாவற்றையும் தன்னுடன் சேர்த்து கொள்பவன்
புற்பா முதலா புல்லெரும்பாதி ஓன்று இன்றியே
நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்
நற்பாலுக்கு உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே -7-5-1-

———————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பீஷ்மர் திருவடிகளிலே சரணம்
ஸ்ரீ வியாச பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: